சனி, 25 ஏப்ரல், 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.



1) அரசை எதிர்பார்க்காத மேற்கு வங்க கிராமப் பெண்கள்.
 

 
2) இந்தப் பள்ளியைப் பாராட்டலாம்.  அவ்வூர் எவ்வூர்?  ஊட்டிதான்!
 
 

 
3)  பிரியங்கா செய்திருப்பது மிகவும் பாராட்டப்பட வேண்டிய செயல்.  இன்றைய முக்கியப் பிரச்னையான குப்பையைச் சமாளிக்க இவர் கண்டு பிடித்திருக்கும் எலெக்ட்ரானிக் குப்பைத் தொட்டிக்கு தேசிய விருதும் கிடைத்துள்ளது.
 
 


4) நல்ல செய்திதான்.  ஆனால் வர வர தண்ணீர் கூட கிடைப்பது கஷ்டமாயிடும் போலேருக்கே...  சுஜாதா தனது விஞ்ஞானச் சிறுகதைகளில் தண்ணீரில் ஓடும் கார் பற்றி நகைச்சுவைக் கதை ஒன்று எழுதி இருப்பார்.  அது நினைவுக்கு வருகிறது.  நல்லபடியாக இந்த முயற்சி வெற்றி அடையட்டும்.



15 கருத்துகள்:

  1. வெறும் தண்ணியில் பைக் ஓடினா ,தண்ணியும் பெட்ரோல் விலைக்கு ஏறிடுமே:)

    பதிலளிநீக்கு
  2. மேற்கு வங்காளத்தில் தன்னார்வம் கொண்ட கிராமக் குழுக்கள் ரோடு அமைப்பது நல்ல முன் உதாரணம். ஆனால் செங்கற்கள் விலை அதிகமாக இருக்குமே, எப்படி சமாளித்தார்கள்?

    பதிலளிநீக்கு
  3. வங்கத்து கிராமங்களைப் பார்த்திருக்கிறேன். கதைகளில் பதிவதற்கு ஏற்ற சூழல், முகங்கள், அந்தக் காற்றிலேயே சுழலும் வறுமை...

    .அங்கெல்லாம் சுபிட்சம் பெருகட்டும்.

    தண்ணீரில் ஓடும் பைக் ஒரு அதிசயமா? 'தண்ணி' யிலேயே ஓடும் தமிழர்கள் பலர் வாழ்க்கையைப் பார்க்கலையோ?

    பதிலளிநீக்கு
  4. தண்ணீரில் ஓடும் பைக் கிற்கு பேட்டெண்ட் எடுத்து அதிக அளவில் தயாரித்து சந்தையில்விடவேண்டும். அதை உபயோகம் குறித்து மக்கள் தீர்மானிப்பார்கள். அரசு ஏன் ஊக்கப் படுத்தக் கூடாது. மோடியின் மேக் இன் இந்தியா பற்றிப் பேசுபவர்கள் இதை ஏன் கவனிக்கக் கூடாது.?

    பதிலளிநீக்கு
  5. அனைத்தும் அருமை! பிரியங்காவின் கண்டுபிடிப்பு அசத்தல்! மிகவும் பெருமையளிக்கும் கண்டுபிடிப்பும் கூட!

    பதிலளிநீக்கு

  6. சாதனைக்குறியவர்கள் வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  7. இது எந்தத் தண்ணி????!!!! நல்ல தண்ணீர் கிடைப்பதே அரிதாக இருக்கும் வேளையில் அதுவும் விலை கொடுத்து வாங்கும் வேளையில் தண்ணீரால் ஓடும் வண்டி என்பது.....மட்டுமல்ல இது கொஞ்ச நாள் முன் கூட பேசப்பட்டது கார் ஓடியதாக ஏதோ ஒரு வெளிநாட்டில். அது சரி இந்த ராமர் பிள்ளை என்ன ஆனார்?

    ப்ரியங்காவின் கண்டு பிடிப்பு அசத்தல்....மேற்கு வங்கப் பெண்கள் ரோடு போடுதல்...அதுவும் அரசை எதிர்பார்க்காமல்...நல்ல விஷயம். இப்படி பல முயற்சிகள் அரசை நம்பாமல் குழுக்ககளாகச் செய்தால் நாடு முன்னேறாதோ!?



    பதிலளிநீக்கு
  8. அத்துனை தகவல்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  9. மேற்குவங்கப் பெண்களின் உடல்&மனோபலம் வியக்கவைக்கிறது. ப்ரியங்காவின் கண்டுபிடிப்பு அறிவியல் வளர்ச்சியில் ஒரு சிறப்பான இடத்தைப் பெற இனிய வாழ்த்துகள். பாரம்பரியம் காக்கும் பள்ளிக்கு சிறப்பு பாராட்டுகள். தண்ணீரில் ஓடும் பைக் வெகுஜன புழக்கத்துக்கு வர சாத்தியமானால் பெரும்சாதனைதான். அனைவருக்கும் இனிய பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே.

    மேற்கு வங்க பெண்களின் செய்கைகளும் பிரியங்காவின் அறிவியல் சார்ந்த கண்டு பிடிப்பும் மிக நன்று.பள்ளியில் பழங்கலைகளை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் முயற்சி நல்லது. தண்ணியில் ஓடும் வண்டிகள் தண்ணீர் பற்றாக்குறையை ஏற்படுத்தாமல் இருக்கவேண்டும் அவர்களின் திறமை போற்ற வேண்டியது.சாதனை முயற்சியில் பாராட்டுக்குரியவர்கள். அனைவருக்கும், அனைவரையும் அடையாளம் காண்பித்த தங்களுக்கும் பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. சிறப்பான செய்திகள் பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  12. அரசை எதிர்பார்ககாமல் கிராமத்துக்குச் சாலை போடும் பெண்கள், அழிந்துவரும் தமிழகக் கலைகளான பறை, சிலம்பம் இவற்றைக் கற்றுக்கொடுக்கும் பள்ளி, எலக்ட்ரானிக் குப்பை தொட்டி கண்டுபிடித்திருக்கும் பிரியங்கா என எல்லாமே அருமையான பாசிட்டிவ் செய்திகள்! புதிய செய்திகளை அறியச் செய்த தங்களுக்கு மிகவும் நன்றி!

    பதிலளிநீக்கு
  13. அனைத்துமே அருமையான செய்திகள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!