திங்கள், 27 ஏப்ரல், 2015

'திங்க'க் கிழமை :: மைசூர் போண்டா.

       
இதற்கு ஏன் மைசூர் போண்டா என்று பெயர் வைத்தார்கள் என்று தெரியவில்லைஉங்களுக்கு இந்தப் பெயர் பிடிக்கவில்லை என்றால்உ மா மி போண்டா என்று பெயர் வைத்துக் கொள்ளுங்கள்
  
தேவையான பொருட்கள்: 
வெள்ளை உளுந்து (Urad Gola) 500 g 
மிளகு (Black pepper) : இரண்டு கரண்டிகள். 
தண்ணீர் : ஒன்றரை லிட்டர். 
பச்சரிசி மாவு : 200 g.
நல்லெண்ணெய் அல்லது சன் டிராப் ஆயில் : அரை கிலோ.
பொடி உப்பு : தேவைக்கேற்ப. 
கறிவேப்பிலை : இரண்டு ஈர்க்குகள். 
பாத்திரம், வாணலி, அடுப்பு, காஸ், லைட்டர். etc 
       
 
 
நயமான வெள்ளை உளுந்து  அரைக் கிலோ எடுத்துக் கொள்ளுங்கள்.
          
சுத்தமான தண்ணீரில் அதைக் கழுவி, தண்ணீரை வடித்து, பிறகு முக்கால் லிட்டர் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற விடுங்கள்.
              
பிறகு தண்ணீரை வடித்துவிட்டு, மிக்சியில் இட்டு, நைசாக அரைத்துக்கொள்ளவும்.
               
உளுத்தம் பேஸ்ட் ரெடியா? ஓ கே .
              
சிறிய கரண்டியால் இரண்டு கரண்டி மிளகு எடுத்துக்கொண்டு, அதை மிக்சியில் போட்டு, விப்பர் செய்து மிளகை உடைத்துக் கொள்ளவும். (மிளகை அரைக்கக் கூடாது)
           
இதை உளுத்தம் பேஸ்டுடன் சேர்த்துக் கலக்கிக்கொள்ளவும்.
            
அப்புறம், இருநூறு கிராம் பச்சரிசி மாவு உளுந்து + மிளகு கலவையுடன் சேர்த்துக் கலக்கவும்.
            
தேவைக்கேற்ப பொடி உப்பு சேத்து, எல்லாவற்றையும் கலக்கவும். போண்டா மாவு தயார்.
           
கறிவேப்பிலை இரண்டு ஈர்க்குகள் எடுத்து, இலைகளை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றைக் கழுவி, கிள்ளி, மாவுக் கலவையில் போடவும். கலக்கி விடவும்.
               
அடுப்பில் வாணலியை வைத்து, வாணலியில் நல்லெண்ணெய் அல்லது சன் டிராப் ஆயில் விட்டு, அடுப்பை ஏற்றவும். எண்ணெய் காய்ந்ததும், மாவுக் கலவையை, எலுமிச்சம்பழ அளவு உருண்டைகளாக உருட்டி, ஒவ்வொன்றாக எண்ணெயில் வேகவைக்க வேண்டும். உருண்டைகள் பொன்னிறம் ஆனதும், எண்ணெயிலிருந்து எடுத்து விடவும்.
                
மைசூர் போண்டா ரெடி.
                
செய்து பாருங்கள், சாப்பிட்டுப் பாருங்கள்.  
           

24 கருத்துகள்:

  1. எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்டு. மைசூர் போண்டாவில மைசூர் எங்க இருக்கு?

    பதிலளிநீக்கு
  2. நல்ல கொப்பரைத் தேங்காய்ப் பருப்பை சில்லுகளாக உடைத்துப் போடுவாங்களே, அதைச் சொல்லல்லியே நீங்க.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    ஐயா.
    செய்முறை விளக்கத்துடன்அசத்தி விட்டீர்கள் காலைச்சாப்பாடு சாப்பி எடுத்துக்கொண்டேன் த.ம 1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. இதைத் தான் மங்களூர் போண்டா என்று கெளதமன் சார் முகப்புத்தகத்தில் சொன்னாரா....:)))

    என்னையே குழப்பி விட்டுட்டார்...:)

    பதிலளிநீக்கு
  5. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இது வேறே மஙகளூர் போண்டா வேறே! இந்த போண்டா நிறையச் செய்திருக்கேன். மைசூர் போண்டாதான் இது! மங்களூர் போண்டா இல்லை!

    பதிலளிநீக்கு
  6. ஆமாம், பழனி கந்தசாமி ஐயா சொல்லி இருக்காப்போல் தேங்காய்ப் பல்லுப் பல்லாகக் கீறி ஏன் போடலை?

    பதிலளிநீக்கு
  7. midillelassmadhavi
    நல்ல உளுந்தாக இருந்தால் கிட்டத்தட்ட 20 பேர் சாப்பிடும் அளவுக்கான போண்டாக்கள் அரை கிலோ உளுந்தில் வரும். நான்கு பேருக்கு என்றால் நூறு கிராம் உளுந்தே போது. நன்கு கழுவி அரை மணி நேரம் ஊற வைத்து மிக்சி ஜாரில் அல்லது கிரைண்டரில் அரையுங்கள். பாதி அரைத்ததும் பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து அரையுங்கள். நல்ல உளுந்தெனில் அதிகம் தண்ணீர் தெளிக்கவும் வேண்டாம். அரைக்க அரைக்க புசுபுசுவென வந்துவிடும். ரொம்பப் பெரிசாக இல்லாமல் நிதானமாக இதில் 15 முதல் 20 போண்டாக்கள் போடலாம்.

    பதிலளிநீக்கு
  8. ஒரு ஆழாக்கு போட்டால் 30 போண்டாக்களுக்கும் மேல் வரும். நான் இட்லிக்கு ஊற வைக்கும்போதே நான்கு ஆழாக்கு புழுங்கல் அரிசி ஒரு ஆழாக்கு பச்சரிசிக்கு ஒரு ஆழாக்கு உளுந்து தான் போடுகிறேன். இட்லியோ, தோசையோ எதுவானாலும் நன்றாகவே வரும். உளுந்து மட்டும் நல்ல உளுந்தாக இருக்க வேண்டும். அதை ஒரு தரம் கடையிலிருந்து கொஞ்சமாக வாங்கி அரைத்துப் பார்த்துவிட்டுப் பின்னர் நிறைய வாங்கிக்கலாம்.

    பதிலளிநீக்கு

  9. கிட்டத்தட்ட குழிப் பணியாரம் மாதிரிதான் இது. செய்து சாப்பிட்டிருக்கோம்

    பதிலளிநீக்கு
  10. போண்டா சூப்பர் ...
    மைசூர் போண்டா ? மைதா மாவில் செய்வாங்க தானே ..மங்களூர் உடுப்பி ஹோட்டல்சில் போண்டா ஆர்டர் கொடுத்து இந்த மைதா ஹாண்ட் கிரெனேட் கிடைச்சு எனக்கு 4 பேருக்கான அளவுக்கு தாங்க்ஸ் கீதா மேடம் ..

    பதிலளிநீக்கு
  11. அப்புறம் நேயர் விருப்பமாக களாக்காய் ஊறுகாய் ரெசிப்பி போடுங்க ...பார்த்தாவது திருப்திபட்டுக்கறேன்

    பதிலளிநீக்கு
  12. ம்ம்ம்ம் செய்வோமே....மங்களூரி போண்டோ மைதாவில் செய்கிறார்கள். தேங்காய் சிறிது சிறிதாய் கீறிச் சேர்ப்பதுண்டு....வடையிலிருந்து கொஞ்சம் மாற்றி வேறு வேறு பெயரில்....அவ்வளவுதானோ....

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோதரரே.

    மைசூர் போண்டா செய்முறையுடன் சூப்பர்.அழகான படங்கள் சாப்பிடும் ஆவலைத் தூண்டுகின்றன.
    உ. வடை தட்டினது போக மீதியுள்ள மாவை இந்த மாதிரி மிளகு தட்டி போட்டு போண்டோக்களாக போட்டு சாப்பிடுவோம். வீட்டின் விருப்பத்திற்காக விஷேடமில்லாத தினங்களில் வெங்காயத்தை பொடியாக அரிந்து போட்டும் போடுவோம்.
    இங்கு மைசூர் போண்டாவென்று மைதா மாவு கலந்தவையாக சற்று இனிப்பான சுவையுடன் தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னியுடன் கிடைக்கின்றன. இதே உ.மா.மி போண்டாவுடன் இஞ்சி பச்சை மிளகாய் அரிந்து போட்ட ரசத்துடன் போண்ட்டோ சூப் என்ற பெயரிலும் கிடைக்கிறது..ஒவ்வொன்றும் ஒருசுவை. உங்கள் பதிவின்படியும் செய்து பார்க்கிறேன். உங்கள் பகிர்வுக்கும் நன்றி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. போண்டா சாப்பிட்டு ரொம்ப நாளாகுது! ஆசையை கிளப்பிவிட்டுட்டீங்க!

    பதிலளிநீக்கு

  15. எங்கள் ஊரில் இதை தேவகோட்டை போண்டா என்று சொல்லுவோம்.

    பதிலளிநீக்கு
  16. பாராட்டுகளும், மேலும் விவரமான செய்முறைகளும் கூறிய எல்லோருக்கும் நன்றி. நான் படித்த பழைய சமையல் புத்தகத்தில், இதை மங்களூர் போண்டா என்றுதான் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் முகநூலில் எல்லோரும் நேற்று எனக்கு வைத்த குட்டுகளால் என் மண்டை போண்டா மாதிரி வீங்கிவிட்டதால், மங்களூரை மைசூர் ஆக்கிவிட்டேன். அந்தப் புத்தகத்தில் போட்டிருந்த முதல் வகை மைசூர் போண்டாவில் தேங்காய்த் துண்டுகள் இருந்தன. இந்த இரண்டாம் வகை போண்டாவில் தேங்காய் போடவில்லை.
    மீண்டும் கருத்துரையிட்ட அனைவருக்கும் என் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. இப்பவே சாப்பிடனும் போல இருக்குப்பா... ம்ம்ம்ம் நல்லாருக்கு...செய்து சாப்பிட வேண்டியது தான்.. அப்படியே மங்களூர் போண்டா கூட போடுங்கப்பா...

    பதிலளிநீக்கு
  18. நானும் செய்திருக்கிறேன். தேங்காய்ச் சட்னி சூப்பர் காம்பினேஷன்! உங்கள் புகைப்படம் உடனே சாப்பிட வேண்டும் என்ற ஆவலை அதிகரிக்கிறது!

    பதிலளிநீக்கு
  19. நாங்களும் செய்து இருக்கிறோமில்லே...!

    பதிலளிநீக்கு
  20. மைசூர் போண்டாவுடன் மேலும் டிப்ஸ் கொடுத்த கீதாவுக்கும் ஒரு ஓஹோ! போடலாம்.
    அரைகிலோ உளுந்து என்றால் ரொம்பவும் அதிகமாயிற்றே என்று நினைத்துக் கொண்டேன். சரியாக நாலுபேருக்கு எத்தனை போடவேண்டும் என்று அளவு சொன்ன நமது ஆஸ்தான chef (கோவிச்சுக்காதீங்க! சும்மா ஜோக்!) கீதாவிற்கு chef of the year பட்டத்தைப் பரிந்துரைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  21. ஹாஹாஹா ரஞ்சனி, கௌதமன் சார் வீட்டிலே ஃபங்க்‌ஷனிலே செய்ததைப் பார்த்திருப்பார். அதான் அரை கிலோ உளுந்துனு லிஸ்ட் போட்டுட்டார் :)))) ஆஸ்தான செஃப் பட்டம் எனக்கு ஏற்கெனவே மின் தமிழில் கொடுத்துட்டாங்களே! :))))

    பதிலளிநீக்கு
  22. ஏற்கனவே கொடுத்துட்டாங்களா மின்தமிழில்? சரி Innovative Chef of the year 2015 என்று கொடுத்துடலாம்!

    பதிலளிநீக்கு
  23. மைசூரில் சென்று தான் மைசூர் போண்டா சாப்பிட வேண்டும்!

    நல்ல குறிப்பு. நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!