சனி, 29 பிப்ரவரி, 2020

மூன்று முத்துகளும் ராஜேந்திர சோழனும் 


1)  விபத்து நடந்ததும் போலீசாரும், ஆம்புலன்ஸ் டிரைவர்களும் துரிதமாக செயல்பட்டதை நேருக்கு நேர் பார்த்து கண்கலங்கி விட்டோம். அதிலும், தமிழ் மக்கள் மனிதாபிமானத்துடன் ஓடியோடி வேலை செய்தனர். இரவு நேரத்திலும், அவர்கள் செயல்பட்ட விதம்தான், பல உயிர்களை காப்பாற்றியது......  -  கேரள அரசு பஸ்சுக்கு பின், காரில் வந்து கொண்டிருந்த பாலக்காட்டை சேர்ந்த, முகமது பைசல், அஷ்ரப் ஆகியோர் கூறியது...




2)  ஏழரை சவரன் தங்கச் சங்கிலியை போலீசார் கருப்பாயிடம் ஒப்படைத்தனர். வாடகை வாகனத்தில் தொலைத்த சங்கிலியை மீட்டு, பத்திரமாக போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த ஓட்டுநர் மணிகண்டனை, சார்பு ஆய்வாளர் சாரதா உள்ளிட்ட போலீசார் சால்வை அணிவித்துப் பாராட்டினர்...  (நன்றி ஏகாந்தன் ஸார்)




3)   கிடைத்த நிதி முழுவதையும் அறக்கட்டளைக்கு அன்பளிப்பாக வழங்க உள்ளதாக குவாடனின் தாய் தெரிவித்துள்ளார்.





  ================================================================================================




முதலாம் ராஜேந்திர சோழனும் அவன் தீரமும்
ரமா ஸ்ரீனிவாசன் 




ராஜேந்திர சோழனின் சிற்பம்

முதலாம் ராஜேந்திர சோழன் 1014 CE இல் தன் தந்தை ராஜராஜ சோழனின் மறைவிற்குப் பிறகு தென் நாட்டின் (இதில் தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் இன்றைய தெலுங்கானா அடங்கும்) சோழ சாம்ராஜ்யத்தின் பேரரசரானார். தன் ஆட்சியில் அவர் சோழப் பேரரசை வடக்கில் கங்கை நதிக்கரை வரையிலும், மேற்கில் தென் கிழக்கு ஆசியா மற்றும் இந்திய பெருங்கடலை தாண்டியும் பரப்பி, சோழ சாம்ராஜ்யத்தை கடல் வழி சாம்ராஜ்யங்களில் ஓர் சக்தி வாய்ந்ததாக உருவாக்கினார்.

மேலும் அவர் இலங்கை, மாலத் தீவுகளை வெற்றி கொண்டதோடு அல்லாமல் மலாய் தீபகற்பத்திலுள்ள ஸ்‌ரீவிஜயா, தென் தாய்லாந்து, சுமத்ரா மற்றும் ஜாவாவையும் சோழப் பேரரசில் இணைத்தார்.

தாய்லாந்தும் கம்போடியாவும் அவருக்கு தலை வணங்கின.  மஹிபாலா என்னும் மன்னனை போரில் வெற்றி கொண்ட காரணத்தால் “கங்கை கொண்ட சோழன்” என்ற பட்டத்தை ஏற்றார். இந்த வெற்றியைக் கொண்டாட கங்கை கொண்ட சோழபுரத்தை உருவாக்கி தன் தலைநகரமாக்கினார்.  அங்கு உள்ள கோவிலுக்கு அவர் தூங்கா விளக்கிற்கான காணிக்கை அளித்தது கல்வெட்டில் பொறிக்கப் பட்டிருப்பது இன்று வரை பாதுகாக்கப் பட்டிருக்கின்றது.


தன் கங்கை வெற்றி பயணத்தை குறிக்கும்படி ராஜேந்திர சோழன் கட்டிய

கங்கை கொண்ட சோழபுரம்

பிறப்பும் வளர்ப்பும் :   ராஜ ராஜ சோழனுக்கும் திரிபுவன மாதேவியாருக்கும் மகனாய் பிறந்தவர் முதலாம் ராஜேந்திர சோழன். தன் குழந்தை பருவத்தை பழையாறையில் தன் அத்தை குந்தவையின் கண்காணிப்பிலும் தன் கொள்ளுப் பாட்டி செம்பியன் மாதேவியின் அன்பிலும் கழித்தார்.

போர் வெற்றிகள் : முதலாம் ராஜேந்திர சோழனின் போர்வெற்றிகளை பற்றி உரையாடும்போது,  அடிக்கடி கேட்கும் ஒரு ஆங்கில சொற்றொடர் யாதெனில் : “ A king who excelled beyond his father, Raja Rajan” என்பதேயாகும்.


போர்முனையில் ராஜேந்திர சோழன் 

1002 CE முதல் ராஜேந்திர சோழன் போர்ப் பயணங்கள் ஆரம்பித்தன.  இதில் ராஷ்டிரகூடர்களின் தோல்வியும் மேற்கு சாளுக்கியர்களுக்கு எதிரான போரும் அடக்கம். அவர் சாளுக்கியரின் ரெய்சூர், பனவாசி ஆகிய இடங்களை வென்றார். மேலும் 1004 CEஇல் மேற்கு கங்கை ஆள்குடியை வென்று தலகாட்டை கவர்ந்தார்.


தமிழ் கல்வெட்டுடன் ராஜேந்திரனின் கல் சிற்பம். பங்களூரு சொக்கநாத

சுவாமி கோவிலில் காணப் படுகின்றது.


இலங்கை : 1017 CE இல் இலங்கை மேல் படை எடுத்து போரில் வென்றார். இதன் காரணமாக, பாண்டியர்களுடைய ராஜ நகைகளையும் இலங்கை மன்னரின் மகுடத்தையும் கவர்ந்தார்.


1100 CE வடிக்கப் பட்ட போலோனாருவா இலங்கை கல்வெட்டு

பாண்டியர்களும் சேரர்களும் : 1018 CEஇல் தன்னுடைய ஒரு மகனை “ஜடவர்மன் சுந்தர சோழ பாண்டியன்” என்று பெயரிட்டு அவனை அரசுப் பிரதிநிதியாக மதுரையை தலைநகராக்கி அங்கு அமர வைத்தார்.

சாளுக்கிய போர்கள் : 1015 CEஇல் தன் அத்தை மகனான ராஜராஜ நரேந்திரனுக்கு உதவி சாளுக்கிய விஜயாதித்தனையும் ஜெயசிம்ஹனையும் வெல்ல வழி வகுத்தார்.

1019 CE இல் கலிங்க நாட்டின் வழியாக கங்கை நதியை நோக்கி ராஜ ராஜ சோழன் முன்னேறினார்.  கிழக்கு வங்கத்தில் சந்திர குலத்தின் கோவிந்த சந்திரனை தோற்கடித்து பாஸ்டர் நிலப்பரப்பை அடைந்தார்.  அந்நேரத்தில்தான் வரலாற்று சிறப்பு மிக்க கங்கை கொண்ட சோழபுரத்தை உருவாக்கி அங்கு ஒரு புகழ் பெற்ற கோவிலை அமைத்தார்.

1025 CEஇல் ராஜேந்திர சோழன் இந்தியப் பெருங்கடலைத் தாண்டி மலேயா மற்றும் இந்தோனேஷியாவை தாக்கி ஸ்ரீவிஜயாவை கைப்பற்றினார்.  தென் தாய்லாந்தையும் விட்டு வைக்கவில்லை. ஒரு கல்வெட்டுக் குறிப்பின்படி ராஜேந்திர சோழன் வடக்கே சுமத்திரா தீவையும் வென்றார் என்பதற்கு அத்தாட்சி இருக்கின்றது.  இந்த சோழ ஆக்கிரமிப்பின் போதுதான் புத்த பேரறிஞர் அதிசாவும் சுமத்திரா தீவிலிருந்து இந்திய நாட்டிற்கு வருகை தந்தார்.

வேலை மற்றும் மரபு :  பதினாறு மைல்கள் நீளமும் மூன்று மைல் அகலமும் கொண்ட ஒரு பிரம்மாண்டமான ஏரியை அமைத்தார்.  ராஜேந்திர சோழனின் தலை நகரின் அழகில் மயங்கிய ஒட்டக்கூத்தர் “கங்காபுரியை கண்டதும், பெருங்கடலால் சூழப்பட்ட பதினான்கு லோகங்களும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடின” என்று பாடினார்.  ஜெயம்கொண்டான் தன் “கலிங்காட்டுப்பரணி” நூலில் ராஜேந்திர சோழனின் படையெடுப்பு வெற்றிகளை மனமுருகிப் பாராட்டினார்.

கங்கை கொண்ட சோழன், கடாரம் கொண்டான் ஆகிய பட்டங்களுக்குத் தன் வீர தீர செயல்களினால் உரிமையாளன் ஆனான்.

திரிகோணமலையின் பத்திர காளி அம்மனின் ஆலயத்தையும் கோணேச்சரம் ஆலயத்தையும் அமைத்த பெருமை கங்கை கொண்ட சோழனுக்கே.  சோழ சேர பாண்டிய இராஜ்ஜியங்களை ஒரு சேர ஆண்டதால் கங்கை கொண்ட சோழன், மும்முடி சோழன் என்றும், முடி சூடப் பட்டான்.  முடிகொண்ட சோழன், இரட்டப்படி கொண்ட சோழன் ஆகியவை அவனுடைய பிற பெயர்களாகும்.

கங்கை கொண்ட சோழனும் அவன் வாழ்க்கையும் :  கங்கை கொண்ட சோழனுக்கு பல அரசிகள் இருந்தனர்.  ராஜேந்திர சோழன் ஒரு அரிய புலவனென்றும் அவன் பல சிவ பூஜை பாடல்கள் எழுதியுள்ளார் என்பதையும் நாம் திரிலோச்சன சிவாச்சாரியரின் சித்தாந்த சரவலியின் மூலம் அறிகின்றோம்.  பல சைவ பக்தர்களை காஞ்சியம்பதியில் குடியேற்றினார் என்றும் கல்வெட்டுகள் மூலம் அறிகின்றோம்.  அவர் தன்னைப் போன்றே மூன்று வீர மகன்களையும் இரண்டு பெருமை மிக்க மகள்களையும் இந்நாட்டிற்கு அளித்த அரும் பெரும் தந்தையாவார்.

மறைவு : கங்கை கொண்ட சோழனான ராஜேந்திர சோழன் இன்றைய வட ஆற்காட்டில் உள்ள பிரம்ம தேசம் என்னும் இடத்தில் 1044ல் மீளாத் துயில் கொண்டார் என்று முதலாம் ராஜராஜ சோழன் கல்வெட்டிலிருந்து அறிகின்றோம்.  அவனுடைய மனையாள் வீரமாதேவியாரும் அவனுடன் உடன்கட்டை ஏறினாள் என்பது குறிப்பிடப் பட்டுள்ளது.

தஞ்சை பெரிய கோவிலை அமைத்து அரும்பெரும் அரசர் ராஜேந்திர சோழன் தந்தை ராஜராஜ சோழன் அவர்கள் நம் நாட்டிற்கே பெருமையையும் கர்வத்தையும் தேடிக் கொடுத்துள்ளார். அக்கோவிலின் முதலாம் கும்பாபிஷேகம் 22.04.1010 அன்று விமரிசையாக நடந்ததாக கல்வெட்டுகள் பறைசாற்றுகின்றன.  இதன்மூலம் அவர் காணக் கிடைக்காத, தேடினாலும் கண்டு பிடிக்க முடியாத ஒரு கலைப் பொக்கிஷத்தை நமக்கு சாட்சியாக விட்டுச் சென்றிருக்கின்றார்.




ராஜேந்திர சோழனைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான ஒரு கவிதை :


“ குழந்தை ராஜேந்திர சோழன்
அரண்மனை முழுதும் சுற்றுகிறான்
குழந்தை ராஜேந்திர சோழன் பின்னே
காஞ்சுகீயர்கள் ஓடுகிறார்கள் ........................
நீண்ட நேரம் ஓடிய பின்பு
குழந்தை ராஜேந்திர சோழன்
குடிநீர் கேட்டு உட்காருகிறான்.
அரசன் திருவடி நொந்ததா என்று
கேட்கிறான் முறுவலோடு ஓர் அதிகாரி.
இல்லை என்கிறான் சோழன்
காட்டுங்கள் என்கிறான் அதிகாரி
ராஜேந்திர சோழன் காட்டுகிறான்

ராஜேந்திர சோழனின்
திருவடி நீளமே ஓரளவாக
சாம்ராஜ்யம் முழுவதும்
அளக்கப்பட்டது
குறுக்கும் நெடுக்குமாய் ”

தமிழ் நாடு மட்டுமல்லாமல் இந்தியருக்கே தம் புகழை பறைசாற்றிக் கொள்ள தெரியாது என்றால் அது மிகையாகாது.  ஒரு தாஜ் மஹாலை போற்றுவது போல் கூட நம் தஞ்சை பெரிய கோவிலையும் கங்கை கொண்ட சோழபுரத்தையும் நம்மால் உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டத் தெரியவில்லை என்பது மிகவும் வருத்தத்தைத் தருகின்றது.

இந்த ஒரே காரணத்திற்காகத்தான் நான் இந்த கட்டுரையை வரைந்தேன்.  யாவருக்கும் பகிர்ந்து நம் தமிழகத்தின் பெருமையை நீங்கள் வெளிக் கொண்டு வருவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் விடை பெறுகின்றேன்.



34 கருத்துகள்:

  1. மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்...

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

      இன்றைய அருமையான கட்டுரைக்கு ஏற்ற குறள் பகிர்வுக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  2. சோழப்பெருந்தகை ராஜேந்திரனைப் பற்றிய கட்டுரை அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் எவ்வளவோ எழுதலாம் சார். நேரமின்மை, வேலை பலு. யாவும் சேர்ந்து அழுத்தியதால் வெளி வந்தது இவ்வளவுதான். நன்றி.

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் மனப்பூர்வமாக ஆண்டவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கமலா அக்கா... நல்வரவும், நன்றியும்.

      நீக்கு
  4. //ஒரு தாஜ் மஹாலை போற்றுவது போல் கூட நம் தஞ்சை பெரிய கோவிலையும் கங்கை கொண்ட சோழபுரத்தையும் நம்மால் உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டத் தெரியவில்லை என்பது மிகவும் வருத்தத்தைத் தருகின்றது//

    மிகச்சரியான வார்த்தை மேடம் வாழ்த்துகள் இந்த எண்ணம் தமிழர்கள் அனைவருக்கும் வரணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழன் என்று சொல்லடா. தலை நிமிர்ந்து நில்லடா என்று அர்த்தம் இல்லாமலா ஒருவர் சொன்னார் ? என்று அந்த உணர்வு நம்முள் ஊடுருவுகின்றதோ, அன்று தமிழகம் தமிழகமாக விளங்கும்.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. தலைப்பில் சொல்லியதை போல் மூன்றும் முத்தானவைதான். அனைவருக்கும் பாராட்டுக்கள்.

    சகோதரி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்கள் எழுதிய கட்டுரை மிகவும் நன்றாக உள்ளது.
    ரசித்து படித்தேன். எத்தனை முறை படித்தாலும், சலிக்காத காவியம்.


    /தமிழ் நாடு மட்டுமல்லாமல் இந்தியருக்கே தம் புகழை பறைசாற்றிக் கொள்ள தெரியாது என்றால் அது மிகையாகாது. ஒரு தாஜ் மஹாலை போற்றுவது போல் கூட நம் தஞ்சை பெரிய கோவிலையும் கங்கை கொண்ட சோழபுரத்தையும் நம்மால் உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டத் தெரியவில்லை என்பது மிகவும் வருத்தத்தைத் தருகின்றது./

    உண்மை.. சோழ சாம்ராஜிய புகழ் ராஜேந்திர சோழச்சக்கரவர்த்தியின் கீர்த்தி என்றும் நிலைத்திருக்க வேண்டிய ஒன்று.

    அருமையான வரலாற்று கட்டுரையை தந்த சகோதரி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனமார்ந்த நன்றிகள் ராஜேந்திர சோழனுக்கே உரித்தாகுக. நான் வெறும் அம்புதான். கங்கை கொண்ட சோழபுரத்து கோவிலை கட்டி இந்த அம்பை அதை பற்றி பாட வைத்த மாமைந்தர் அவர்.



      நீக்கு
  6. போற்றுதலுக்கு உரியவர்கள் போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  7. அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துகள்...

    கட்டுரை சிறப்பு...

    பதிலளிநீக்கு
  8. ராஜராஜசோழனைப் பற்றி பேசும் அளவு ராஜேந்திர சோழனைப் பற்றி பேசப்படுவதில்லை. அக்குறையை நீக்கும் வகையில் அமைந்த பதிவு.

    பதிலளிநீக்கு
  9. எனக்கும் அதே கருத்துதான். எனவேதான் இதை எழுதினேன். பேராசிரியர் தெய்வநாயகம் அவர்களின் சொற்பொழிவை கேட்டவுடன்தான் எனக்கு இந்த வீரம் பிறந்தது.

    பதிலளிநீக்கு
  10. தமிழ் மக்கள் என்றுமே உதவிக்கும் தர்மத்திற்கும் பெயர் போனவர்கள். "கொடுத்து சிவந்த கைகள் நம் கர்ணனுக்குதானே. குவாடனின் தாயின் உள்ளம் இவை யாவையும் மிஞ்சுகின்றது.

    பதிலளிநீக்கு
  11. மூன்றுமே முத்தான செய்திகள் தான்.
    மனிதநேயம் மிக்கவர்கள். எல்லோருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு





  12. //நம் தஞ்சை பெரிய கோவிலையும் கங்கை கொண்ட சோழபுரத்தையும் நம்மால் உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டத் தெரியவில்லை என்பது மிகவும் வருத்தத்தைத் தருகின்றது.//

    அருமையான கட்டுரை.

    கங்கைகொண்டசோழபுரத்திற்கு ஜனவரி 1ம் தேதி போவதை ஒரு வழக்கமாய் வைத்து இருந்தோம் மாயவரத்தில் இருக்கும் போது.
    நிறைய பதிவுகள் கங்கை கொண்ட சோழபுரத்தைப்பற்றி போட்டு இருக்கிறேன்.

    முன்பு கங்கைகொண்ட சோழபுரத்தில் கூட்டம் இருக்காது இப்போது நல்ல கூட்டம் வருகிறது.
    இப்போது .

    தஞ்சை கோவிலும் அடிக்கடி போகும் கோவில் இரண்டும் மிக பிடித்த கோவில்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையை சொன்னால், நான் இதுவரை கங்கை கொண்ட சோழபுரம் கோவிலை பார்த்ததே கிடையாது. கண்டிப்பாக சென்று பார்த்து மீண்டும் கட்டுரை எழுதுவேன்.

      நீக்கு
  13. ராஜேந்திரனைப் பற்றி மிக அருமையான ஆய்வு கட்டுரை.

    பதிலளிநீக்கு
  14. மூன்று முத்துக்களும் ஒளிரும் முத்துக்கள்!

    ராஜேந்திர சோழனைப்பற்றிய கட்டுரை மிகவும் சிறப்பாக உள்ளது.
    ராஜேந்திர சோழரின் வீரம் பற்றியும் சிறப்புகள் பற்றியும் எழுத்தாளர் அகிலன் எழுதிய‌ ' வேங்கையின் மைந்தன்' என்ற நூலிலும் எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய ' கடல் புறா 'விலும் நிறைய தெரிந்து கொள்ளலாம்.
    கம்போடியாவின் மன்னன் முதலாம் சூர்யவர்மனுக்கு கடாரத்திற்கெதிரான போருக்கு உதவி செய்ததற்காக ராஜேந்திர சோழனுக்கு மன்னன் சூர்யவர்மன் தங்கத்தேர் வழங்கி கெளரவித்தது வரலாறு. இதே ராஜேந்திரனுக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது கம்போடியாவில். அதன் திறப்பு விழா இந்த வருடம் மே மாதம் நடக்கவுள்ளது. முதல்வர் எடப்படி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
    2. மனோ ஸ்வமினாதன் அவர்களே பல தெரியாத விஷயங்களை பகிர்ந்திருக்கின்றீர்கள். நன்றி. ஒரு வழியாக நம் நாட்டு மன்னருக்கு சிலை வைத்து கௌரவிக்கின்றார்கள் என்பதை கேட்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கின்றது. மிக்க நன்றி

      நீக்கு
  15. மூன்று நற்செய்திகளும் சிறப்பு. நல்லுள்ளம் கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    ரமா ஸ்ரீனிவாசன் அவர்களின் கட்டுரையும் வெகு சிறப்பு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட் நாகராஜ் அவர்களே மிக நன்றி. உங்களைப் போல் பாராட்டுபவர்களின் துணையோடுதான் நான் மேலும் மேலும் படிக்கற்களை ஏறி தாண்டுகின்றேன்.

      நீக்கு
  16. இனிய மாலை வணக்கம் அனைவருக்கும். அருமையான. முத்துக்களைத தான் அறிமுகப் படுத்தி இருக்கிறீரகள் ஶ்ரீராம். அவரகள் செழிக்க வாழ்த்துவோம். ரமா அவர்களின் ராஜேந்திர சோழன் மிக அருமை. அழகாக எடுத்து விளக்கி இருக்கிறார். நம் பெருமையை உலகுக்கு. தெரிய
    வைக்கும் எழுத்து. வாழ்த்துகள் ரமா!

    பதிலளிநீக்கு
  17. பின்னர் வந்த ஜடாவர்மன் சுந்தர பாண்டியன், பாண்டியர்களில் நேர் வாரிசு காலத்தில் தான் சோழர்களும் அவர்கள் சாம்ராஜ்யமும் ஒடுக்கப்பட்டுப் பிற்காலப் பாண்டியர்கள் தலை எடுத்தார்கள். ஆனால் இவர்களில் சிலருக்கு நேரடி வாரிசு இல்லாததால் வாரிசுக் குழப்பங்கள் ஏற்பட்டுப் பின்னர் பாண்டிய வம்சம் நசித்து வாரிசுப் போரில் தூத்துக்குடியில் போர்ச்சுக்கீசியர்கள் நுழைவும், மதுரையில் சுல்தான்களின் ஆட்சியும் ஏற்படக் காரணகர்த்தர்கள் ஆனார்கள். தமிழ்நாட்டுச் சரித்திரத்திலேயே இது ஓர் மாபெரும் தவறாகவும் ஆகி விட்டது.

    பதிலளிநீக்கு
  18. நல்ல மனிதர்கள் இப்போவும் இருப்பதில் மகிழ்ச்சி. குவாடனின் தாயைப் போல் இன்னொரு பாரத ஸ்டேட் வங்கியின் ஊழியரான ஒரு பெண்மணி பணி ஓய்வு பெற்றதில் கிடைத்த ஒரு கோடியை ராணுவ வீரர்களுக்கு அளித்துள்ளார்.

    பதிலளிநீக்கு
  19. திருமதி ரமா ஸ்ரீநிவாசனின் வரலாற்றுக்கட்டுரை அருமை. பொதுவாகப் பல்லவர்களைப் பற்றி ஆங்காங்கேயும் பெரிதும் பேசப்படுபவர்களாகச் சோழர்களும் இருக்கின்றனர். பாண்டிய வரலாற்றை முழுதும் ஆய்ந்து எழுதியவர்கள் மிகக் குறைவு. இத்தனைக்கும் சோழர்கள் வடக்கே இருந்து வந்தவர்கள். பாண்டியர்களோ தென்னாட்டை வெகு காலம் ஆட்சிபுரிந்தவர்கள். பழமை வாய்ந்த சந்திர குலம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!