சனி, 1 பிப்ரவரி, 2020

தினேஷ் சரவணன்


1)  இந்த நிலையில், சமூக சேவகரான சத்துவாச்சாரியை அடுத்த ரங்காபுரத்தைச் சேர்ந்த தினேஷ் சரவணன் என்ற இளைஞர், அந்த நாடோடி குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு கற்றல்-கற்பித்தல் திறனை ஊக்குவித்து அரசுப் பள்ளியில் சேர்க்கும் முயற்சியைக் கையில் எடுத்துள்ளார்.  (நன்றி ஏகாந்தன் ஸார்) 





----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


ஜனாதிபதி விருது வாங்கிய அனுபவம் 
ரமா ஸ்ரீநிவாசன் 


“தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று”

- திருவள்ளுவர்


“எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்க வேண்டும்.

இயலாதவர்கள் அந்தத்துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது”
பழம்பெரும் துறவி திருவள்ளுவர் அவர்கள் விரல் சொடுக்கும்
நேரத்தில் இக்குறளை வடித்து விட்டார். இதை மெய்ப்படுத்த எத்தனை
மலை போன்ற உழைப்பு வேண்டும் என்பதை நான் கண்கூடாக தெரிந்து
கொண்டது என் கணவரின் அயரா உழைப்பை கண்டுதான்.

என் கணவர், ஸ்ரீனிவாசன் கிரிஷ்ணமாச்சாரி 2014 ஆண்டு முதல்

மத்திய கலால் மற்றும் சுங்க வரித்துறையின் உதவி மேலாளராக பணி
புரிபவர். அவருடைய 36 வருட அலுவலக வாழ்க்கையில் அவர் பல
பாராட்டுகளையும் பதக்கங்களையும் மத்திய அரசிடமிருந்து
பெற்றிருக்கின்றார். 

GST வரியமைப்பு சட்டம் ஜூலை 1, 2018 கொண்டுவரப்

பட்டது. புதிய வரியானது என்னவென்றே தெரியாத நிலையில்,
ஸ்ரீனிவாசன் அவ் வரியை உட்புகுந்து உன்னிப்பாகப் படித்து புரிந்து
கொண்டு ஓர் முதன்மை பயிற்சியாளருமாகினார்.  

இதுவரை ஸ்ரீனிவாசன் 25,000 மத்திய மற்றும் மாநில அதிகாரிகளுக்கும், CA / ICWA / CS உறுப்பினர்களுக்கும் GST வரிகளின் நெளிவுசுளிவுகளை பற்றி பயிற்சியளித்துள்ளார்.  இவர் நாடு முழுவதும் GST வரியின் முகமாக ஜொலித்தார் என்றால் மிகையாகாது. 


மத்திய அரசிற்கும் மாநில அரசிற்குமிடையே ஓர் பாலமாக செயல் பட்டு GST வரியின் வெற்றியில் ஓர் பெரும் பங்கேற்றார் என்பதை மிகப் பெருமையுடன் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். பேச்சரங்குகள், கருத்தரங்குகள், எண்ணற்ற கணினி மற்றும் நாளேடுகளின் கட்டுரைகள் வாயிலாகவும் GST வரிகளின் நுணுக்கங்களையும் நடைமுறைகளையும் மக்களுக்கும் மாணவர்களுக்கும் புரிதலான வகையில் கொண்டு சேர்த்திருக்கின்றார்.  நாடு முழுவதுமுள்ள பல பள்ளிகளிலும் கல்லூரிகளிளும் விரிவுரைகளாற்றியும் ஆல் இந்தியா

ரேடியோ மற்றும் தொலைக்காட்சியில் உரையாற்றியும் GST வரியின்
முக்கியத்துவத்தை பரப்ப அரும்பாடு பட்டிருக்கின்றார்.






எல்லா கிளைகளிலும் அவருடைய விடா முயற்சியும் அயரா
உழைப்பும், முன்னோடித் தன்மையும், தன்னிடம் வேலை செய்யும்
அலுவலர்களை தட்டி கொடுத்து வேலை செய்ய தூண்டும் பண்புமே
ஸ்ரீனிவாசனை இந்த “சிறப்பு மிகுந்த ஒப்பற்ற சாதனை படைத்த
சேவைக்கு ஜனாதிபதியின் விருது” 2019 பிரிவில் நாடு முழுவதும் உள்ள 
லட்சக் கணக்கான மத்திய அலுவலர்களில் 46 அலுவலர்களில் ஒருவராக
தேர்ந்தெடுக்கப் பட காரணமாக இருந்தது என்றால் மிகையாகது.

இந்த விருது வழங்கும் விழாவின் வீச்சையும், சிறப்பையும்,

ஆடம்பரத்தையும் அங்கிருந்து கண்ணால் கண்டாலே மட்டும் நம்ப
முடியும். இந்த விருதின் ஆரம்ப கட்டம் டிசம்பர் 2019ல் மத்திய அரசால்
46 மதிப்பிற்குறிய ஜனாதிபது விருது பெறுனரின் பெயர்களும் வெளியிட
பட்டபோது தொடங்கியது. என் கணவரின் பெயரை அதில் கண்டதும் என்
மகிழ்ச்சியை விவரிக்கவோ எழுதவோ முடியாது.





குடும்பமே திக்குமுக்காடியது. திரு ஸ்ரீனிவாசன் நாட்டின் முதல் குடிமகன்
ஜனாதிபதியின் பெயரிலுள்ள விருதை பெறுகின்றார் என்று
நினைக்கும்போது யாவருமே கிறங்கித்தான் போனோம். கடவுளின்
அருளால் அவர் சரியான நேரத்தில், சரியான இடத்தில், சரியான விடா
முயற்சியின் பாதையில் சென்றதால் அவருக்கு கிடைத்த பரிசு என்று
மகிழ்ச்சியுடன் கூறி கொள்கின்றேன். 

இதில் மேலும் ஓர் விசேஷம் என்னவென்றால் அவர் கடந்த வருடம் மே மாதம் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். எனவே, அவரை ஓய்வு பெறும் வருடத்தில் கௌரவித்து பெருமையுடன் வீட்டிற்கனுப்பிய மத்திய அரசிற்கு நாங்கள் என்றும் கடமை பட்டிருக்கின்றோம்.


இங்கு நான் சென்னையிலிருந்து 24 ஜனவரி 2020 புறப்பட்டு நியு

டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவருடன் கால்
வைத்ததிலிருந்து திரும்பி 27 ஜனவரி 2020 சென்னை திரும்பியது
வரையில் 46 விருது பெற்றவர்களையும் அவர்களது குடும்பத்தையும் நம்
இந்திய அரசு என்ன ஒரு மரியாதையுடனும் மேன்மையுடனும்
அணுகினார்கள் மற்றும் கௌரவித்தார்கள் என்பதை உங்கள் யாவருடனும் பகிர்ந்து கொள்ளவே இக்கட்டுரையை வடிக்கின்றேன். என்னே ஒரு ராஜ மரியாதை தெரியுமோ !!!!!!!!!!!!!

விமான நிலையத்தில் அவருடன் கால் வைத்த நிமிடமே ஒரு

மத்திய அரசு போர்டுடன் ஒருவர் என் கணவரை நெருங்கி இவரது
விவரங்களை குறித்துக் கொண்டு எங்களுக்காக இப்பயணம் முழுவதும்
ஒதுக்கப் பட்டிருந்த காரில் ஏற்றி அமர்த்தி அவரும் கூடவே வந்து
எங்களுக்காக ஒதுக்கப் பட்ட விடுதியில் எங்களை சேர்த்தார். நாங்கள்
அங்கு நன்றாக உண்டு ஓய்வெடுத்த பின்னர், எங்களுடன் பயணம் செய்து
எங்களுக்கு நாட்டின் தலை நகரத்தில் முக்கிய இடங்களை காண்பித்தார்.
இரு நாட்களில் குடியரசு தினம் வருவதால் தலை நகரமே ஜோடிக்கப் 
பட்டு தன்னை அழகு படுத்திக் கொண்டிருந்தது. என்னே ஒரு தேசப் பற்று.
என்னே ஒரு நாட்டு விஸ்வாசம். இந்தியர் இந்தியரே !!!!!!!!!!!!!






ஜனவரி 25ஆம் நாள் சுமார் 3 மணிக்கு பிரம்மாண்டமான அம்பேத்கர்
இன்டர்னேஷனல் சென்டரில் விருது பெறுனர்களுக்கு ஒத்திகை ஏற்பாடு
செய்யப் பட்டிருந்தது. ஒத்திகை முடிய 2 மணி நேரமானதால்,
யாவருக்கும் வயிறு புடைக்க உண்ண சிற்றுண்டியும் தேனீரும் வழங்கப்
பட்டன. பின்னர், யாவரும் மறுபடியும் ஊர் சுற்றி பார்க்க வசதியாய் கார்கள் வழங்கப் பட்டன.





ஜனவரி 26ஆம் நாள் விருது பெறுனர்களுக்கு குடியரசு அணி
வகுப்பை பார்வையிடும் பாஸ்கள் வழங்கப் பட்டன. அந்த வீரமும் அந்த
எழுச்சியும் அங்கு சென்று பார்த்தால்தான் புரிகிறது.  புது டில்லியே
குடியரசு தின விழா கோலாகலத்தில் திளைத்திருந்தது. அந்த
ஆர்ப்பாட்டத்திலும் ஆரவாரத்திலும் நாங்களும் மூழ்கி திளைத்தோம்.
விழாவின் முடிவு வரை இருந்து விட்டு வேறு சில நண்பர்களையும்
இடங்களையும் கண்டு களித்துவிட்டு விடுதி திரும்பினோம்.





ஜனவரி 27ஆம் நாள் காலை 9 மணியளவில் நாங்கள் விடுதியை
விட்டு அம்பேத்கர் இன்டர்னேஷனல் சென்டரை அடைந்தோம்.
வண்ணமயமான விளக்குகளால் அரங்கமே சிறப்பாக ஜோடிக்கப்
பட்டிருந்தது. அரசு விருது பெறுபவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களை
சார்ந்த குடும்பத்தினருக்கும் தனி வரிசைகள் அமைத்து அங்கு அமர
வைக்கப் பட்டோம். அரசு விருது பெறுபவர்கள் ஒவ்வொருவரும்
அவருடைய பெயர் கொண்ட நாற்காலியில் அமர வைக்கப் பட்டனர்.





காலை 10 மணியளவில் மாண்புமிகு நிதித் துறை இணையமைச்சர்
திரு. அனுராக் சிங் தாக்கூர் அவர்கள் விழாவை தலைமை வகிக்க
வருகை தந்தார். விழா மேடையில் அமைச்சர் அவர்கள், கலால் மற்றும்
சுங்க வரித்துறை வருவாய் செயலர், கலால் மற்றும் சுங்க வரித்துறை
சேர்மேன் மற்றும் சுங்கத்துறை முதல்வர் (International Customs Day 2020)
ஆகியோர் வீற்றிருந்தனர்.





வரவேற்புரை முடிந்தபின், இன்டெர்னேஷனல் கஸ்டம்ஸ்
நாளையொட்டி சுங்கத்துறை முதல்வர் உரையாற்றினார். இதைத்
தொடர்ந்து, சுங்க வரித்துறை சேர்மேன் மற்றும் வருவாய் செயலர்
ஆகியோர் இத்துறைகளின் சிறப்புகளை முன்னிலைப் படுத்தி
உரையாற்றினர். பின்னர், சுங்கத்துறையால் “சுங்கமும் பேண்தகைமையும்” என்ற ஓர் குறும்படம் வெளியிடப் பட்டது. இதையொட்டி, மாண்புமிகு நிதித் துறை இணையமச்சர் திரு. அனுராக் சிங் தாக்கூர் அவர்கள் தன் உரையாற்றினார். இத்தனை ஜோலிகளுக்கும் நடுவில் தன் உரையைத் தெளிவாகவும், பொருள் படவும் அதே சமயம் சுருக்கமாகவும் வடித்து வழங்கினார். இவ்விரு துறைகளின் அனைத்து பரிமாணங்களையும் தொட்டுப் பாராட்டினார்.





மாண்புமிகு நிதித் துறை இணையமச்சரின் உரை முடிந்த பின்,
உயிரை துச்சமென மதித்து செயல் பட்டதற்கான மூன்று விருதுகள்
காஷ்மீர் மற்றும் வட கிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்
பட்ட பின்னர், கலால் துறை அதிகாரிகள் ஒவ்வொருவருக்கும் அளிக்கப்
பட்டது. ஒவ்வொரு அதிகாரியின் பெயர் அறிவிக்கப் பட்டவுடன்
அவருடைய சிறப்பம்சங்கள் அவர் பின்னே திரையில் வெளியிட பட்டன.
அவர் அமைச்சரிடமிருந்து விருது மற்றும் வாழ்த்துச் சுருள் பெறும்
வரையில் அவரது சிறப்பம்சங்கள் பின்னே திரையில் ஓடிய வண்ணம்
இருந்தன.

என் கணவர் திரு ஸ்ரீனிவாசனின் பெயர் அறிவிக்கப் பட்டவுடன்

மகிழ்ச்சியில் என் மகள் எழுந்து உற்சாகக் குரல் கொடுக்கவும்
பார்வையாளர்கள் யாவரும் மகிழ்ச்சியுடன் ஆரவாரத்தில் பங்கேற்றனர்.
அமைச்சர் அவர்கள் புன்னகைத்தபடி பொறுமையுடன் காத்திருந்து, பின்னர் என் கணவருக்கு விருது வழங்கியது எங்களுக்கு பெருமையையும் இறுமாப்பையும் அளித்தது. இங்கு இதை ஏன் கூறுகின்றேன் என்றால், இத்தனை மதிப்பை நான் என்றுமே கண்டதில்லை. நீங்கள் நாட்டிற்கு உழைப்பதை அரசு அவ்வளவு பெரியதாகக் கருதுகின்றது என்பதற்கு இது ஓர் சிறிய உதாரணமாகும்.







யாவருக்கும் விருதுகளை வழங்கிய பின்னர், வி.ஐ.பிக்களும் விருது
பெற்றவர்களும் அவர்களது குடும்பங்களும் ஒன்றாக சிற்றுண்டி அறைக்கு சென்றனர். அமைச்சர் யாவருடனும் சகஜமாக புன்னகையுடன்
கலந்துரையாடுவதையும் புகைப்படம் எடுத்துக் கொள்வதையும் பார்ப்பதற்கே சுகமாக இருந்தது.

இதில் இன்னும் ஒரு சுவையான தகவல் என்னவென்றால், என்

கணவர் திரு ஸ்ரீனிவாசனும் அவருடைய அலுவலக நண்பர் திரு
ஸ்ரீவத்சன் அவர்களும் நம் குடியரசு தினத்தன்று மாலை புகழ் பெற்ற
“டில்லி தமிழ் சங்கத்தினரால்” கௌரவிக்கப் பட்டதேயாகும். இவர்கள்
இருவரும் தமிழ் நாட்டிலிருந்து விருது பெற்றதால் அவர்களை அச்சங்கம்
மதித்து மரியாதை செய்தது.





இந்த “சிறப்பு மிகுந்த ஒப்பற்ற சாதனை படைத்த சேவைக்கு
ஜனாதிபதியின் விருது” 2019 விழாவிற்காக வந்த அத்தனை (46)
அலுவலர்களுக்கும் போக்கு வரத்து செலவுகள் (விமான டிக்கெட் மற்றும்
கார் செலவு), விடுதி செலவுகள் மற்றும் உணவு ஏற்பாடுகள் யாவுமே
அரசால் ஏற்று கொள்ளப் பட்டன.



அனைத்து விழாக்களும் நிறைவு பெற்று நாங்கள் விமான நிலையம்
செல்லும் வரை எங்களுடன் இருந்து எங்களை மரியாதை செய்த
அலுவலக நண்பர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டு
புறப்படும்போது மனதில் மகிழ்ச்சியும், ஆனந்தமும், மிதப்பும் போட்டி
போட்டுக் கொண்டிருந்தன.



“எந்த நாடென்றாலுமே அது நம் நாட்டை போலாகுமா” என்று மிதப்புடன் பாட்டை முனகியபடியே எங்கள் இல்லத்தை நோக்கி பீடுநடை போட்டோம்.  ஜனவரி 28, 2020 சென்னை பதிப்பான தினமணி நாளிதழில் இந்த விழாவை பற்றியும் தமிழகத்திலிருந்து விருது பெற்ற ஆறு ஆபீசர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு கௌரவித்தது ஒரு முத்தாய்பாய் திகழ்ந்தது.



என் ஒரே மன வருத்தம் என்னவென்றால், உயிரை துச்சமென

மதித்து செயல் பட்டதற்கான மூன்று விருதுகள் மற்றும் மத்திய அரசால்
46 மதிப்பிற்குறிய ஜனாதிபது விருது பெறுனரின் விருதுகள் யாவும் 
நியாயமாக ஜனாதிபதியவர்களால் வழங்கப் பட்டிருக்க வேண்டும்.
குறைந்த பட்சம் நம் நிதியமைச்சர் கரங்களிலிருந்தாவது அவர்கள்
விருதுகளை பெற்றிருக்க வேண்டும். அந்த செய்கை விருதிற்கு
மட்டுமல்லாது அரசிற்கும் மதிப்பையும் மரியாதையையும்
உயர்த்தியிருக்கும் என்பது என் கருத்து..

எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத ஓர் குதூகலமான நிகழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொண்ட மகிழ்ச்சியுடன் விடை பெறுகின்றேன் நண்பர்களே.

28 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  2. முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை என்று வைக்கப்படும்....

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  3. மனமார்ந்த நல் வாழ்த்துகள். இது பற்றி ஏற்கெனவே வல்லி மூலம் அறிந்திருந்தேன். அதனால் தான் உங்களுக்கு முன் கூட்டிய வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தேன். இப்போதும் எங்கள் வாழ்த்துகள். மிக உயரிய விருது ஜனாதிபதி கைகளால் குடியரசு தினத்தன்று மட்டுமே கொடுக்கப்படுகிறது என நினைக்கிறேன். இது பற்றி சரியாகத் தெரியவில்லை. ஆனால் நீங்கள் சொல்வது போல் ஜனாதிபதி கொடுத்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  4. தினேஷ் சரவணன் பற்றிச் சில நாட்கள் முன்னர் படித்த நினைவு. இன்றைக்கு அவர் மட்டும் தானா?

    பதிலளிநீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.

    பாஸிடிவ் செய்தி அருமை. நாடோடி இன மக்கள் கல்வியறிவு பெற முயற்சி செய்த தினேஷ் சரவணன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

    சகோதரி திருமதி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்களின் கட்டுரையை படிக்கும் போது நம்மிடையும் மகிழ்ச்சி அலைகள் எழுகிறது. படங்கள் அருமை. அவருக்கும், அவர் குடும்பத்தினருக்கும் பாராட்டுகளுடன், வாழ்த்துகளும்.. பெருமை பொங்கும் நிகழ்ச்சிகளை பகிர்ந்த அவருக்கு பணிவான நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலா அவர்களே, நான் திரும்பவும் கூறுகின்றேன். இந்த blogதான் எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றது. அதற்கு நான் ஸ்ரீராமிற்கு மிகவும் கடமை ப்ட்டிருக்கின்றேன்.

      நீக்கு
  6. திருமதி ரமா ஸ்ரீ நிவாசன் அவர்களது கட்டுரையைப் படிக்கும்போது நமக்கும் மகிழ்ச்சி ஏற்படுகின்றது...

    அழகான பதிவு... வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  7. விழாவை நேரில் கண்டதுபோல் உணர்வு.
    தங்களது கணவருக்கு வாழ்த்துக்கள்.
    தங்களது ஆதங்கம் சரியே...

    பதிலளிநீக்கு
  8. திரு தினேஷ் சரவணன் அவர்களுக்கும், திரு ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  9. தினேஷ் சரவணன் மற்றும் அவர் நண்பர்கள் செய்வது நல்ல சேவை. திரு.ஶ்ரீனிவாசன் ஒரு நிறைகுடம். அவருக்கு உளம் கனிந்த வாழ்த்துகள். ரமா அவர்களின் மகிழ்ச்சி புரிகிறது. நிதியமைச்சர் விருது வழங்கியிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் யாவரும் இவ்வாறு புகழ்ந்த பின், நிதியமைச்சர் என்ன, ஜனாதிபதியை தாண்டி இறைவனே வழங்கியது போல் இருக்கின்றது. நன்றி

      நீக்கு
  10. அனைவருக்கும் இன்னாள் இனிய நாளாக வாழ்த்துகள்.
    சத்துவாச்சாரி வேலூர் தினேஷ் சரவணன் பற்றி அறிய
    மிக மிக மகிழ்ச்சி. நற்செயல் என்றும் பரிமளிக்கும்
    என்பதை எடுத்துக் காட்டுவது போல்
    இவர் செயல்கள் மேலும் அறியப்படட்டும்.
    திரு ஸ்ரீனிவாசன் விருது பெற்றது தமிழகத்துக்கே கிடைத்தது போல.
    சிறந்த உழைப்பை நல்கும் கலால் வரித்துறையினர் சிறப்பாகக்'
    கவனிக்கப் பட வேண்டும் என்பதில் ஐயம் இல்லை.

    திருமதி ரமா ஸ்ரீனிவாசனும் அதே துறையில் இருந்து
    சேவை செய்பவர்.அவருக்கும் நல் விருது கிடைக்க வேண்டும்.

    இருவரும் குடும்பத்தையும் சிறப்பாக நடத்தி,
    அரசு வேலைகளையும் செவ்வனே செய்வது
    மிகவும் பாராட்டுக்குரியது.
    திருமதி ரமா அவர்களின் வர்ணனை அவர் மொழியில்
    சொல்ல வேண்டுமானால் Just Superb. மனம் நிறை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாமி (இவர்கள் எனக்கு மாமி உறவே ஆவார்). உங்களின் வாழ்த்துக்கள் எங்கள் இருவருக்கும் சந்தோஷத்தை தருகின்றது.
      //திருமதி ரமா ஸ்ரீனிவாசனும் அதே துறையில் இருந்து
      சேவை செய்பவர்.அவருக்கும் நல் விருது கிடைக்க வேண்டும்.

      இருவரும் குடும்பத்தையும் சிறப்பாக நடத்தி,
      அரசு வேலைகளையும் செவ்வனே செய்வது
      மிகவும் பாராட்டுக்குரியது. //

      இந்த உங்கள் உள்ளம்தான் உங்களை தனித்து மேலோங்கி உயர்த்துகிரது. வாழ்த்துக்களுக்கு நன்றி மாமி.

      நீக்கு
    2. என்றும் சந்தோஷம் நிலைக்க, என் ஆசிகள் ரமா.
      ஸ்ரீனிவாசனுக்கும் மனம் நிறை வாழ்த்துகள்.

      நீக்கு
  11. திரு . தினேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    அவர்களது நற்பணிக்கு துணை இருப்பவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. திரு ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    திருமதி ரமாஸ்ரீனிவாசன் அவர்கள் மகிழ்ச்சியும் , பெருமிதமும் இந்த கட்டுரையிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

    ரமா அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
    கட்டுரையும், படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  13. திரு. தினேஸ் திரு.ஸ்ரீனிவாசன் இருவருக்கும் வாழ்த்துகள். மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  14. தினேஷ் சரவ‌ணன் மற்றும் திருமதி ரமா ஸ்ரீனிவாசன் இருவருக்கும் இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  15. பாராட்டுகள் தினேஷ்

    பாராட்டுகள் ரமா ஶ்ரீநிவாசன் அவர்கள்

    பதிலளிநீக்கு
  16. என் சித்தியின்கணவர் என் சித்தப்பா தமிழ்நடு ஃபையர் செர்வீஸ் உயர் பதவியிலிருந்தச்ர் கருணா நிதி முதலமைச்சர் சிற்ந்த சேவைக்காக அரசின் விருது பெற்றவர் அவர் சொல்லி மகிழந்தசம்பவம் ஒரு பிராம்மண எதிரியின் கையால் அரசு விருதைநான் பெற்றதுதான் என்பார்

    பதிலளிநீக்கு
  17. சீரிய அரசுப்பணிக்காக, துறைசார்ந்த ஜனாதிபதி விருது பெற்றமைக்கு திரு ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  18. பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  19. திரு தினேஷ் சரவணன் அவர்களுக்கும், திரு ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  20. பாசிட்டிவ் செய்தி மிகவும் சிறப்பு. தினேஷ் சரவணன் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ஜனாதிபதி விருது பெற்ற திரு ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். ஜனாதிபதி கையாலேயே விருது கிடைத்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாகவே இருந்திருக்கும். சில சமயங்களில் அதிக நிகழ்ச்சிகள் காரணமாக அவரால் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடிவதில்லை - அவர் வந்து தான் தரவேண்டும் என நினைத்து, பல நிகழ்ச்சிகள் நடத்தப்படாமலே போனதும் உண்டு. மூன்று வருடங்களுக்குச் சேர்த்து நடந்த சில பரிசளிப்பு விழாக்களும் உண்டு. போலவே நிதியமைச்சர் வந்திருக்கலாம் - ஆனால் விழா நடந்த இரண்டு மூன்று நாட்களில் வருடாந்திர பட்ஜெட் என்பதால் அவர் வந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!