கைகாலெல்லாம் உதறுகிறது!
ரொம்ப நாளாச்சு இல்லையா? நம்ம கிச்சன்ல நாம நுழைந்தே நாளாச்சு இல்லையா... அதுதான்! அப்படியே 'டச்' விட்டுப்போயிடுமோ என்கிற பயத்தில், கவலையில், ஒன்றுமில்லாத ஒரு ரெசிப்பியைத் தூக்கிக்கொண்டு வந்திருக்கிறேன்!
ரொம்ப நாளாச்சு இல்லையா? நம்ம கிச்சன்ல நாம நுழைந்தே நாளாச்சு இல்லையா... அதுதான்! அப்படியே 'டச்' விட்டுப்போயிடுமோ என்கிற பயத்தில், கவலையில், ஒன்றுமில்லாத ஒரு ரெசிப்பியைத் தூக்கிக்கொண்டு வந்திருக்கிறேன்!
ப்ளெயின் தோசை, ப்ளெயின் இட்லி, ப்ளெயின் சப்பாத்தி என்றே அனுதினமும் சென்று கொண்டிருந்த ஒரு நன்னாளில் சும்மா மாற்றிச் செய்துபார்க்க எண்ணி, நீங்கள் எல்லாம் அடிக்கடி செய்துபார்க்கக் கூடிய, நாங்கள் எப்போதாவது செய்யும் ஒன்றை ஆரம்பித்தேன்.
மசாலா சப்பாத்தி!
என்ன செய்தேன்னா, தக்காளி ரெண்டு, நாலு வெங்காயம், ரெண்டு பல் பூண்டு, கொஞ்சம் இஞ்சி, கறிவேப்பிலை, கொத்துமல்லி எல்லாம் எடுத்து வதக்கிக் கொண்டேன். ஆறவைத்து கொஞ்சம் மசாலாப்பொடி, உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்துக்கொண்டேன். (படத்தில் ஒரு கண் பார்ப்பது போல இல்லை?!!)
கோதுமை மாவில், உப்பும், தாராளமாக காரப்பொடியும் சேர்த்து கிளறிக்கொண்டேன். பின்னே என்னங்க... எவ்வளவு காரப்பொடி போட்டாலும் சப்பாத்தியில் தெரியவே மாட்டேன் என்கிறது!
அப்புறம் அரைத்து வைத்திருக்கும் அந்தக் கலவையை அப்படியே மாவில் போட்டு பிசைந்து கொண்டேன். நோ தண்ணீர்! ஆனால் ரெண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் உண்டு!
உருண்டை பிடித்து ஓரமாக வைத்து விட்டேன். அந்தக் கலவையை சும்மா சாப்பிட்டாலே சுவையாக இருந்தது. நேரத்தை வீண் செய்யாமல், வழக்கம் போல சப்பாத்தி செய்து இதைத் தொட்டுக்கொண்டு சாப்பிட்டு விடலாம் என்று கூடத் தோன்றியது!
ஆனால்... ஆனால் என்ன செய்ய... மாறுதலாகச் செய்து சாப்பிடும் ஆசை... மகன்களிடம் பேர் வாங்க ஆசை! திங்கக்கிழமைக்கு ஒன்று தயார் செய்ய ஆசை... ஆசை... ஆசை...
காத்திருக்கும் இடைவெளியில் தொட்டுக்கொள்ள செய்யலாம் என்று தோன்றியது. பத்து அல்லது பனிரெண்டு காய்ந்த மிளகாய் எடுத்து... இருங்க... எங்கே ஓடறீங்க... காரம்லாம் ஒண்ணும் செய்யாது, பரவாயில்லை... வாங்க... வாணலியில் புரட்டிக்கொண்டு, ஒரு சிறு தக்காளி எடுத்து அதையும் வதக்கிக் கொண்டு, கொஞ்சூண்டு புளி, கொஞ்சம் வெல்லம் மற்றும் உப்பு சேர்த்து கொத்துமல்லி (இது வேற!) சேர்த்து அரைத்து எடுத்து வைத்துக்கொண்டேன்.
அப்புறம் என்ன, சப்பாத்தியை இட்டு, தவாவில் போட்டு எடுத்து ஆளுக்கு நாலு அந்த வரமிளகாய் சாஸைத் தொட்டுக்கொண்டு (உஸ்... உஸ்... ஸ்ஸ்.....) சாப்பிட்டாச்சு! இல்லீங்க... அவ்வளவு காரமாய் எல்லாம் இல்லை!
கான முயல் எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது...
பதிலளிநீக்குவாழ்க நலம்....
வாழ்க நலம்.
நீக்குசிங்கத்துக்கு வாலாக இருப்பதை விட எலிக்குத் தலையாக இருத்தல் நலம் என்பதுதான் குறளின் பொருளா?
நீக்குஆமாம் ...
நீக்குபனீர் + தேங்காய்த் துருவல் சப்பாத்தி அதுக்குக் கூட்டாளி வற மிளகாய் தக்காளிச் சட்னி செய்யப் போய் கடைசியில்
வற மிளகாய் சப்பாத்தி பனீர் தேங்காய் துருவல் + சர்க்கரைச் சட்னியாக ஆகி விட்டதே....
அன்பின் வணக்கம் அனைவருக்கும்....
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜூ ஸார்... வாங்க...
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.
இன்றைய சப்பாத்தி பதிவு நன்றாக உள்ளது. சப்பாத்தி அவரவர் விருப்பபடி எப்படி வேண்டுமாலும் செய்யலாம். நாம் இழுத்த இழுப்புக்கெல்லாம் வம்பு செய்யாது அது வரும் என்பதை தெரிந்து கொண்டேன். ஆனால் செய்தவர் யார் எனத் தெரியவில்லையே? நீங்கள்தானா? அருமையாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கம். இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.
நீக்கு//நாம் இழுத்த இழுப்புக்கெல்லாம் வம்பு செய்யாது அது வரும்//
ஹா... ஹா... ஹா...!
//ஆனால் செய்தவர் யார் எனத் தெரியவில்லையே? நீங்கள்தானா? //
வாங்க கமலா அக்கா... வணக்கம். இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.
நீக்கு//நாம் இழுத்த இழுப்புக்கெல்லாம் வம்பு செய்யாது அது வரும்//
ஹா... ஹா... ஹா...!
//ஆனால் செய்தவர் யார் எனத் தெரியவில்லையே? நீங்கள்தானா? //
நான்... நான்.... நானேதான் செய்தேன்! அதுதான் பெயர் இல்லை!
நீங்கள்தான் என சந்தேகமற ஊகித்து விட்டேன். இருப்பினும் தங்கள் பதில் மாதிரி ஒரு சிறு சந்தேகம்..:)
நீக்குஹா... ஹா...ஹா... என் பதில் பாதியாய் வெளிவந்ததில் அப்படிச் சொல்கிறீர்களா?
நீக்குஆம்.இப்போது சந்தேகம் முற்றிலும், சத்தமின்றி அகன்று விட்டது.
நீக்குநீங்கள் செய்த சப்பாத்தி படங்கள் நன்றாக உள்ளன. சப்பாத்தியும் ருசியாக இருக்குமென தோன்றுகிறது. இந்த மாதிரி புது விதமாய் முயற்சி செய்ததேயில்லை. வெறும் காரச் சுவைக்காக மிளகாய் பொடி, பெருங்காயம் சேர்த்து கார சப்பாத்தியாக செய்திருக்கிறேன். ஒரு தடவை இப்படியும் செய்து பார்க்கிறேன். அருமையாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
அப்பாடி...
நீக்குபார்க்க நன்றாக உள்ளது என்று சொன்னதற்கும்,
இதுவரை இப்படி செய்ததில்லை என்று சொன்னதற்கும்,
ஒருமுறை இப்படி செய்து பார்க்கிறேன் என்று சொல்லி இருப்பதற்கும்...
நன்றி கமலா அக்கா!
@ஸ்ரீராம், ஆலு பராந்தா, மூலி, மேதி பராந்தா ஆகியவற்றுக்கெல்லாம் மி.பொடி.கரம் மசாலாப்பொடி சேர்ப்போம். இம்மாதிரித் தனியாகக் காரப்பொடி போடும்போதும் கூடவே தனியாப் பொடி, பெருங்காயப்பொடி, உப்பு (ஹிஹி, நீங்க உப்பே போடலை எதுக்கும், சட்னி உள்பட இஃகி,இஃகி,இஃகி) கரம் மசாலாப் பொடி, ஓமம், ஜீரகம் இரண்டும் ஒரு டீஸ்பூன் போட்டுக் கொண்டு நல்லெண்ணெய் ஊற்றிக் கலந்து விட்டுத் தயிரை விட்டுப் பிசைந்து வைத்துக் கொண்டு சப்பாத்தி (தென்னிந்திய பாணியில் சுற்றிலும் நெய் ஊற்றி)பண்ணிக்கொண்டு சாப்பிட்டால் அதுக்குப் பெயர் "தேப்லா"! இதை நன்கு மொறுமொறுவென்றும் பண்ணி வைத்துக்கொண்டு மத்தியானம் காஃபி, தேநீருடன் சாப்பிடலாம். ஊர்களுக்குச் செல்லும்போது கையில் எடுத்துச் செல்லலாம். எங்களுக்கெல்லாம் ஊறுகாய் இருந்தாலே போதும்.
நீக்குஇந்த மாவுக்கலவையிலேயே வெந்தயக்கீரை, பாலக், புதினா, கொத்துமல்லி ஆகியன போட்டுச் சேர்த்துப் பிசைந்தும் பண்ணலாம். முள்ளங்கியைத் துருவி உப்புப் போட்டு வைத்துவிட்டுப் பிழிந்து மாவுக் கலவையில் போட்டுப் பண்ணலாம்.
நீக்குநல்லவேளை...
பதிலளிநீக்குகில்லர் ஜி மாதிரி நடுராத்திரியில் பதிவைத் தரவில்லை...
மிக்ஸிக்குள் கண்!...
திடுக்கென்றிருந்தது....
ஹா... ஹா... ஹா... இப்போதுதான் ஒரு நாரோயில் பேய்க்கதைப்படித்து விட்டுவருகிறேன்! பயமுறுத்துகிறீர்களே!
நீக்குஇதுதான் மசாலா படம் என்பதோ!?....
பதிலளிநீக்குஹா... ஹா...ஹா... இன்று நல்ல சாரமாயிருக்கிறீர்கள் போல!
நீக்குமிக்ஸி கண் நன்றாக உள்ளது. நல்ல காரசாரமான பதிவு. இவ்வளவு காரத்திறகு "உன் கண்ணில் நீர் வழிகிறதா?" என அது (மிக்ஸி) தன் கண் திறந்து பார்க்கிறதோ ? கற்பனையை ரசித்தேன்.
பதிலளிநீக்குஉங்கள் கற்பனை அபாரம். கண்ணில் என்ன கார்காலம் என்று பாடி விடவா?!!!
நீக்குஇப்போதும் உங்களின் சட்டென்று பொருத்தமான பாடல் தேர்ந்தெடுக்கும் திறன்தான் நன்றாக உள்ளது.ரசித்தேன். பாராட்டுக்கள்.
நீக்குஆனால். குளுமையான இன்றைய "திங்கள்" தீடிரென நெருப்பான "வெள்ளி"யாகி விட்டால், மிக்ஸியுடன் சேர்ந்து, சப்பாத்தியும் சற்றே கோபக்கண் கொண்டு திறந்து விடாதோ?.. ஹா. ஹா. ஹா.
ஹா...ஹா...ஹா... கவிஞி ஆகிவிட்டீர்கள்!
நீக்குகண்(ரம்) மசாலா அழகாக இருக்கிறது ஜி
பதிலளிநீக்குநன்றி ஜி.
நீக்குஎன்னடா எல்லோர்கிட்டேயும் சமையல் குறிப்பு வாங்கி போடுகிறார் ஆனால் ஸ்ரீராம் மட்டும் போட மாட்டேங்கிறார் என்று நேற்றுதான் நினைச்சேன் இன்று பார்த்தால் ஒரு காரசாரமான சப்பாத்தி போட்டு இருக்கிறார். இனிப்பு புடிக்காத ஏஞ்சல் இதை கண்டிப்பாக செய்து பார்த்து சாப்பிடுவார் என நினைக்கிறேன்
பதிலளிநீக்குவாங்க மதுரை... வருடத்தில் ஒரு நாளாவது ஒன்று போடலாமே என்றுதான்! ஏஞ்சல், அதிரா எல்லாம் கா........ணோ..............ம்!
நீக்கு// வரமிளகாய் சாஸைத் தொட்டுக்கொண்டு (உஸ்... உஸ்... ஸ்ஸ்.....) சாப்பிட்டாச்சு! இல்லீங்க... அவ்வளவு காரமாய் எல்லாம் இல்லை!// ஓஹோ அப்படியா? கண்ணுல ஏன் தண்ணி வருது?
பதிலளிநீக்குஅது ஆனந்தக் கண்ணீருங்க!
நீக்குமசாலா பூரி செய்திருக்கிறேன். மசாலா சப்பாத்தி செய்ததில்லை. ஸ்ரீராமின் கை வண்ணமா? எழுத்து நடை கமலா ஹரிஹரன் போல இருந்தது.
பதிலளிநீக்குஹா.... ஹா...ஹா... அவங்களை படித்து அது போலவே எழுதி விட்டேனோ! அல்லது நான் எழுதிய குறிப்புகளை நீங்கள் முன்னர் படித்ததில்லையோ!
நீக்குமுதலில் இது கேஜிஜி அவர்களின் ரெசிப்பியோ அல்லது பானுமதி மேடமான்னு நினைத்தேன். மிக்சி கண் வரை வந்ததும் இது பேயாரின் வேலையோ எனத் தோன்றியது.
பதிலளிநீக்குபிறகு இது ஶ்ரீராம் ரெசிப்பின்னு புரிந்தது. ரொம்ப வருடங்கள் கழித்து எபி கிச்சனுக்கு வந்திருக்கீங்க. வருக வருக. காணாமல் போனவர்கள் பட்டியலிலிருந்து அடுத்த ரெசிப்பிகள் அலுவலக ஹேமா மேடத்திடமிருந்தா? கடைசியா பீட்ரூட் ரோஸ் மில்க் படித்த நினைவு
வாங்க நெல்லை... ஆரோக்ய சமையல் ஹேமா மகன் திருமணத்தில் பிஸி! ஆனால் அவர்கள் அப்போது தந்த ரெசிப்பியை இப்போதும் நினைவு வைத்துள்ளீர்களே... சபாஷ்!
நீக்குSide dish சூப்பர். வெல்லம் கொத்துமல்லி சேர்க்காமல் செய்து அடை மற்றும் தோசைக்குச் செய்திருக்கிறேன். சூப்பரா இருக்கும். காரத்தைச் சரி செய்ய பெருங்காயம் சேர்க்கலையா?
பதிலளிநீக்குநன்றி. பெருங்காயம் காரத்தை சரி செய்யுமா என்ன! வாசனைதான் தரும் என்று நினைத்திருக்கிறேன்.
நீக்குகாரம் - வாய்வு - அதைச் சரி செய்யும்
நீக்குஅது இருக்கட்டும். காரம் அதிகமாகச் சாப்பிடுபவர்கள் ரொம்ப கோப்ப்படுவார்களாமே.. அவ்விடம் எப்படியோ? (அதை உங்ககிட்ட கேட்காம வீட்டாரிடம் கேட்கணுமோ?)
நீக்குதவறான தகவல். யார் சொன்னது கோபம் வரும் என்று... அழைத்து வாருங்கள் அவரை என்னிடம். ஒரு கை பார்க்கிறேன்... விளையாடிப் பார்க்கிறார்களா என்னிடம்... ஓஹோ...
நீக்குரசித்தேன், ருசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குமசாலா சப்பாத்தியா? வீட்டுல வெறும் சப்பாத்தி சாப்பிட்டே பல மாதங்களாகிவிட்டது. இதுல மசாலா சப்பாத்தியாம்.... ஆனாலும் நல்லா இருக்கு.. காம்பினேஷன் நல்லா இருந்ததா?
பதிலளிநீக்குBy the by எனக்கு சப்பாத்தி செய்ய வராது. எனக்கே பிடிக்காத அளவில்தான் செய்ய வரும். அதனால ஜுஜுபி செய்முறைனு எதுவும் கிடையாது
நன்றாகவே இருந்தது. கண்ணில் நீர் வர சாப்பிட்டாலும் மகன்கள் "அவ்வளவுதானா? இன்னும் இருக்கா?" ன்னு கேட்டது க்ரெடிட்! எனக்கு சப்பாத்தி நன்கு இட வரும்! சிறுவயதில் நான்தான் அம்மாவுக்கு இட்டுக்கொடுப்பேன்!
நீக்குஆஹா நல்ல சப்பாத்தி வாசனை இங்கயே வரதே. இன்னிக்கு செய்துட வேண்டியதுதான். சூப்பரா வந்திருக்கு. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். ஶ்ரீராம்.
நீக்குகாலை வணக்கம் அம்மா... வாங்க... நன்றி தட்டிக் கொடுத்திருப்பதற்கு!
நீக்குவீட்ல பாஸ் தான் செய்திருப்பார்னு நினைத்தேன்! வண்ண வண்ண சப்பாத்தியும் ,மிளகாய்ச் சட்டினியும் கண்ணை விட்டகலா நிற்கிறதே! சுலப செய்முறை. அந்த மாவுக்கு 15 சப்பாத்தி வந்ததா? மிக மிக நன்றி மா. இந்த நாள் இனிய நாளாகட்டும்.!
பதிலளிநீக்குஅம்மா... நான் நிறையவே புதிய முயற்சிகள் செய்வேனே.... நன்றிம்மா.
நீக்குஉண்மைதான் ராஜா. இந்தப் பதிவு இன்னும் சூப்பரா இருக்கா.
நீக்குஅதுதான் கேட்டேன்.மனீங்க நல்ல சமத்துப் பிள்ளைதான்.
ஆரம்ப வரிகளிலேயே ஸ்ரீராம் தான் என்பது புரிந்தது.
நீக்குநன்றி கீதா அக்கா.
நீக்குஓ.18 இருக்கு. கலக்கறே சந்தரூ!மீண்டும் வாழ்ததுகள்.
பதிலளிநீக்குஹா... ஹா... ஹா... நன்றி அம்மா.
பதிலளிநீக்குமிக்சியின் கண் பிரமாத கற்பனை. வாழ்க. மிக்சி,அடுப்பு எல்லாம் பேசினால் எப்படி இருக்கும் அனு யோசிக்கிறேன்.!
பதிலளிநீக்கு"இவ்வளவு மிளகாய் போட்டிருக்கியே... கண் எரியுதே..." என்று சொல்லியிருக்குமோ! ஹா... ஹா... ஹா...
நீக்குரொம்ப நாள் ஆச்சு பதிவு போட்டு, அப்புறம் இந்த காரம், பூண்டு, மகன்களிடம் பேர் வாங்க எல்லாம் நீங்கள் தான் என்று சொல்லி விட்டது ஸ்ரீராம்
பதிலளிநீக்குசெய்முறை படங்களும் அருமை. மிக்ஸியில் கண் ! என்ன சொல்கிறது? இவ்வளவு காரத்தை சாப்பிட்டு கண்ணீர் வடிக்க போகிறார்கள், அல்லது இத்தனை நாளைக்கு அப்புறம் அப்பா செய்து கொடுத்த கார சப்பாத்தி நன்றாக இருக்கிறது என்று மகன்கள் ஆனந்த கண்ணீர் வடிக்க போகிறார்கள் என்று நினைத்தேன். உங்கள் பதில் மூலம் ஆனந்த கண்ணீர் வடித்தார்கள் என்று தெரிந்து கொண்டேன்.
கற்பனை அருமை.
அடிக்கடி மகன்களுக்கு ஏதாவது வித விதமாய் செய்து கொடுங்கள், பாஸுக்கும் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும்.
வாங்க கோமதி அக்கா... நன்றி. புது வீட்டில் பாசுக்குகொஞ்ச நாள் போனால் நல்ல ஒய்வு கிடைக்கும்!
நீக்கு///கைகாலெல்லாம் உதறுகிறது! ///
பதிலளிநீக்குஆஆஆஆ எனக்கும்தேன்ன்ன் இன்றைய செவ் ஶ்ரீராமோ?... 2020 இல் என்னமோ எல்லாம் நடக்குதே:)...
பாவம் மேடம் அதிரா.. புதிதா டைட்டில் வைக்க யோசிக்கக்கூட நேரமில்லை போலிருக்கு. பழைய டிரஸையே திரும்பப் போட்டுக்கொள்வதுபோல குயின் பேத்தி டைட்டில் ரொம்பப் பழசு. ஹா ஹா
நீக்கு//2020 இல் என்னமோ எல்லாம் நடக்குதே:)...//
நீக்கு2020 இல் நீங்கள் பிளாக்கே பிடிக்கவில்லை என்கிறீர்களே அதிரா...
நல்ல காரசாரமாக இருக்கு... எனக்கும் இப்படிக் காரம்தான் பிடிக்கும், ஆனா நீங்கள் தக்காளி சேர்ப்பதால் அது காரத்தைக் குறைச்சுப்போடுமே...
பதிலளிநீக்குஉண்மைதான் மா வகையில் எப்படி மிளகாய்த்தூள் சேர்த்தாலும் காரம் கிடைக்குதில்லை இப்போ. போடும்போது இறம்பப் போடுகிறோமோ எனப் பயமாக இருக்கும் ஆனால் சாப்பிடும்போது, இன்னும் கொஞ்சம் போட்டிருக்கலாமோ என இருக்கும்.
அழகிய கலரில் சப்பாத்தியும் சட்னியும்... கலக்கிட்டீங்க ஶ்ரீராம்.
நன்றி அதிரா... தக்காளி காரத்தைக் குறைத்து விடுகிறதுதான்!
நீக்குஆசை பெருக எனது அன்பான நல்வாழ்த்துகள்... ஆ...!
பதிலளிநீக்குநன்றி DD.
நீக்குஇவ்வளவு காரமான சப்பாத்தியும், சட்னியும் சாப்பிட்டுக் கண்களில் மட்டுமல்ல, மூக்கு, வாய் எல்லாத்திலேருந்தும் தண்ணீர் கொட்டுது! காரம் கொஞ்சம் குறைக்கக் கூடாதோ?
பதிலளிநீக்குகொஞ்சம் குறைச்சுக்கறேன் கீதா அக்கா.
நீக்குகாரம் அதிகம் என்பதைப் பார்த்தே சொல்ல முடிகிறது! இருந்தாலும் சில சமயங்களில் இப்படி கார சாரமாகச் சாப்பிடத் தோன்றுவது இயல்புதானே...
பதிலளிநீக்குமிளகாய் சட்னி! நான் வரல இந்த விளையாட்டுக்கு! :)
நல்ல முயற்சி! முயற்சிகள் மேலும் தொடரட்டும்.
காரம் எங்களுக்கு அல்லது எனக்கு பழகி விட்டது. நன்றி வெங்கட்.
நீக்குபார்க்க செமையா இருக்கு. கொத்துமல்லி வரமல்லியா இல்லை தழையா
பதிலளிநீக்குநன்றி தேனம்மை. கேள்வி அபுரி!
நீக்குஆஆவ் இன்னிக்கு ஸ்ரீராம் கிச்சனுக்குள்ள என்ட்ரி கொடுத்துட்டாரா :) வெரி குட் :)
பதிலளிநீக்குமுதல் மசாலா மட்டும் படிச்சிட்டு சப்பாத்தியை பார்த்து அப்டியே நழுவிட்டேன் :) அந்த சட்னிக்கு சாஸூக்கு
//(படத்தில் ஒரு கண் பார்ப்பது போல இல்லை?!!)//
யெஸ்ஸ்ஸ் :) விருமாண்டி கமல் அங்கிள் கண் அங்கே தெரியுதே :)
விருமாண்டி கண் அப்படிதான் இருக்குமா?!!
நீக்குஅந்த ஸாஸ் ரெசிபியை எடுத்துக்கறேன் நாளைக்கு தோசைக்கு :)
பதிலளிநீக்குஆஹா... நன்றி ஏஞ்சல்!
நீக்குஅவ்வப்போது ஏதாவது புது ரெசிப்பி செய்ய ஆசை என்னால் முடியாததை மனைவியிடம் சொன்னல் வீட்டோ தான்
பதிலளிநீக்குஇப்போதைக்கு இங்கு இப்படி... அப்புறம் எப்படியோ!
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி நண்பரே...
நீக்குகாரசாரமான சப்பாத்தி....அருமையா இருக்கு ஸ்ரீராம் சார்
பதிலளிநீக்குநன்றி அனுபிரேம்.
நீக்கு