வியாழன், 20 பிப்ரவரி, 2020

நட்பில் விரிசல்

நண்பர்களுக்குள் தவறான புரிதல் ஏற்பட்டு பேசாமல் இருப்பார்கள்.  உறவுகளில் நீண்ட காலம் பேசாமல் இருப்பார்களோ...  என் உறவுகளில் அப்படி ஒரு சம்பவம் உண்டு.  அதைச் சொல்லும் முன்பு முதலில் நண்பர்களைப் பற்றி பேசி விடுகிறேன்.



எனக்கு  நண்பர்களில் மேற்சொன்ன அனுபவம் ஒன்று உண்டு.  பள்ளிக்கால நண்பர்கள் என்று இப்போதும் நெருக்கமான தொடர்பில் இருப்பவர்கள் யாரும் இல்லை!  ஒருவன் தொலை அலைபேசி எண் என்னிடம் இருக்கிறது.  ஆனால் தொடர்பு கொண்டால் எடுக்க மாட்டான்!  வாட்ஸாப்பில் ஏதாவது அனுப்பினாலும் லேசில் பார்க்க மாட்டான்.  இன்னொரு நண்பன் பேசுவதே இல்லை என்றாலும் தஞ்சாவூர் வாட்ஸாப் குழுமத்தில் என்னை சேர்த்திருக்கிறான்.  அங்கு அவனைத் தவிர யாரையும் எனக்குத் தெரியாது என்றாலும் அவனுக்காகவும், தஞ்சை நினைவுகளுக்காகவும் அந்தக் குழுமத்தில் இருக்கிறேன். 

சமீபத்தில் என் dp பார்த்துவிட்டு 'உன் முகம் மாறவே இல்லை' என்று அனுப்பி இருந்தான்.  ஜோக் அடிக்கிறானா என்றும் தெரியவில்லை.  ஏனென்றால் நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது எடுத்த படத்தை வைத்திருந்தேன்.  அந்த முகம் இப்போதும் இருக்கிறது என்கிறானா, இல்லை அது என் லேட்டஸ்ட் ஃபோட்டோ என்று கிண்டல் செய்தானோ!  எப்படியோ எனக்கு மிகவும் பிடித்த என் நண்பன் அவன்...   அவனோடு அலைபேசியில் பேசியே பல வருடங்கள் ஆகின்றன.  அப்படியானால் பார்த்து?  ரொம்ப வருஷங்கள் ஆகின்றன...!

ஓரளவு இந்த அனுபவங்களை முன்னர் இந்த தளத்தில் எழுதி இருக்கிறேன்.

இன்னொரு பள்ளிக்கால நண்பன்...  இவனோடு பத்து வருஷங்கள் முன்பு ஒரு சண்டை வந்தது.  ஏகப்பட்ட கசப்பான அனுபவங்கள்.  அப்போது பிரிந்தோம்.  பேச்சு வார்த்தை நின்று போனது.  பார்த்துக் கொள்வதே இல்லை என்று ஆகி,  அவன் எங்கு இருக்கிறான் என்பதே தெரியாமலும் போனது.   இப்போது சமீபத்தில் ஒருநாள் அலுவலகத்தில் இருந்தபோது பின்னாலிருந்து என்னை யாரோ அழைப்பதாய் என் முன்னால் அமர்ந்திருந்த என்னுடன் பணியாற்றுபவர் சொல்ல, திரும்பிப் பார்த்தால் இவன்!  

கசப்போடு பிரிந்தோம் நாங்கள்.  இத்தனை வருடங்களுக்குப் பிறகு பார்த்ததும் அடையாளம் காண அரை நிமிடம் ஆனது.  அவ்வளவு கசப்பும் நினைவில் இல்லாமல் என்னை அறியாமல் வரவேற்க எழுந்து வந்து விட்டேன்.  "எப்படி இருக்கே?" என்றுதான் முதலில் கேட்டேன்.  அப்புறம்தான் பழைய சம்பவங்கள் நினைவுக்கு வந்தன.   எனினும் நன்றாகவே பேசினோம்.  நான் செய்த உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கவே வந்ததாய்ச் சொன்னான்.  நீண்ட நாட்களாய் யோசித்து, யோசித்து பலமுறை வாசல் அருகே வந்து திரும்பிச் சென்றதாய்ச் சொன்னான். 

அன்று முழுவதும் பேசிக்கொண்டிருந்தோம்..  அன்று மாலை விடைபெற்றுச் சென்றான்.    இதுவும் ஒரு அனுபவம்...

நாம் நண்பர்களை பற்றி நினைப்பதுபோல (இதைப்பற்றி கூட முன்பு ஒரு கவிதை எழுதி இருந்தேன்...   தேடப் பொறுமை இல்லை!)  அவர்களும் நம்மைப்பற்றி ஏதாவது அபிப்ராயம் கொண்டிருக்கக் கூடும் என்றும் தோன்றும்தான்!

பள்ளிக்கால நண்பர்களில் எத்தனைபேர் இன்னமும் உங்கள் தொடர்பில் இருக்கிறார்கள் என்று பானு அக்கா என்று நினைக்கிறேன், கொஞ்ச நாட்கள் முன்பு புதன் கேள்வி பதில்களில் கேட்டிருந்தார்.  என் மகன்கள் இதுவரை பள்ளி, கல்லூரி, அலுவலக நண்பர்கள் என்று மூன்று பகுதிகளாக அழகாக மெயின்டெயின் செய்கிறார்கள்!  அப்புறம் என்னாகுமோ!

மிக சமீபத்தில் என் கல்லூரி நண்பர்கள் ஒரு வாட்ஸாப் குழு ஆரம்பித்து என்னையும் அதில் இணைத்திருக்கிறார்கள்.    ஒரு நாள், ஒரு இடத்தில் சந்திப்போமா...   சந்திப்போமா என்று ஆரம்பத்தில் கேட்டவர்கள், இப்போது வழக்கமான குழுமக் கடமைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்...    அதுதான்...  குட்மார்னிங், குட் ஈவ்னிங்...   தமிழனாய் இருந்தால் ஷேர் பண்ணு என்று பார்வேர்ட் செய்து கொண்டிருக்கிறார்கள்.  குழுமத்தில் இருக்கும் எண்களின் dp யில் தெரியும் பாதி முகங்களை அடையாளமே தெரியவில்லை...



என்ன கேட்கிறீர்கள்?  உறவுகளில் சண்டை என்று ஆரம்பித்தேன் என்றா?  என்றைக்கு சொல்ல வந்த விஷயத்தை உடனே, நேராகச் சொல்லி இருக்கிறேன்?!!   அதை அடுத்த வியாழனுக்கு ரிசர்வ் செய்து கொள்(ல்)கிறேன்!


=======================================================================================================

தினமலரில் படித்த புதிய அறிமுகம் ஒன்று!



காய்கறிகள் கெடாமல் பாதுகாக்கும் குளிர்பதனப் பெட்டிகளை தயாரிக்கும் எல்.ஜி., நிறுவனம், 2020ல் ஒரு புதுமையை அறிமுகப்படுத்தஉள்ளது. அது, காய்கறிகளை வீட்டிலேயே வளர்க்க உதவும் அலமாரி!  வீட்டைச் சுற்றி காலி இடம், பால்கனி அல்லது மொட்டை மாடி இல்லாதவர்கள், வீட்டுக்குள்ளேயே, ஆண்டு முழுவதும் முக்கியமான காய்கறிகளை வளர்க்க, 'எல்.ஜி., காலம் கார்டன்' பெட்டியை தயாரிக்கவுள்ளது.

பார்க்க குளிர்பதனப் பெட்டி போலவே இருக்கும் இதில், சூரிய ஒளிக்கு பதிலாக எல்.இ.டி., விளக்குகள், செடிகளுக்கு ஏற்ற தட்பவெப்பத்தை ஏற்படுத்தும் வசதி, வேர்களுக்கு தேவையான நீரை, தேவையான நேரத்தில் தரும் வசதி, உரம் செறிந்த தேங்காய் நார் படுகை போன்றவை இருக்கும்.



வீட்டுச் சமையலுக்கு தேவையான, 20 வகை கீரைகள் மற்றும் தாவரங்களை இதில் வளர்க்க முடியும் என்கிறது எல்.ஜி., நிறுவனம். ஈரத்தால் பூஞ்சை உண்டாகாமல் தடுக்கவும், தாவரங்கள் அழுகும் வாடை வராமல் தடுக்கவும் இதில் வசதிகள் உண்டு எனவும் எல்.ஜி., தெரிவித்துள்ளது.விரைவில் நம்மூர் கடைகளில், தவணை முறையில் கலம் கார்டன் பெட்டிகளை, எல்.ஜி., விற்கும் என எதிர்பார்க்கலாம். 

=================================================================================================  

இப்படி ஒரு புகைப்படத்தை இணையத்தில் பார்த்ததும் திடுக் என்றது.  நாய், கோழி, பன்றிகள் குப்பை கிளறிப் பார்த்திருப்போம்.   யானைகள்?  ஜீரணிக்க முடியாத காட்சி.  இந்த உலகம் தாக்கு மட்டுமே சொந்தம் என்று நினைத்து மனிதன் பிற உயிரினங்களுக்கு செய்யும் துரோகம் ரொம்பவே பெரியது!




====================================================================================================

பொக்கிஷம் :

நேர்மையான பதில்...




அந்தக் கால இந்த ஜோக்குக்கு சிரிப்பு வருகிறதா அதிரா?



இந்த மாதிரி எவ்வளவு ஜோக்ஸ் பின்னாளில் பார்த்திருக்கிறோம்...! வெவ்வேறு வடிவங்கள் எடுத்த ஜோக்...



==================================================================================================

"ஸார்....  சிவாஜி ஸார்...."


சிவாஜிக்கு கிரிக்கெட் விளையாட்டில், மிகுந்த ஆர்வம் உண்டு. ரேடியோவில் கமென்ட்ரி கேட்பது, பின், நேரம் கிடைக்கும் போது, டெலிவிஷனில் கிரிக்கெட் மாட்சுகள் பார்ப்பது அவருக்கு பிடித்தமான பொழுது போக்கு. இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஜி.ஆர்.விஸ்வநாத்தை அவருக்கு மிகவும் பிடிக்கும்.




மைசூரில் ஒரு முறை, நட்சத்திர கிரிக்கெட் மேட்ச் நடைபெற்றது. சிவாஜியும் அதில் விளையாடினார். இரண்டே பந்துகளில், 'அவுட்' ஆகிவிட்டார். ஆனாலும், பேட்டிங் செய்ய, அவர் நடந்து உள்ளே போகும்போதும், 'அவுட்' ஆகி, வெளியே நடந்து வந்த போதும், அவரது, 'ஸ்டைலிஷ்' நடைக்கு, அதிகமான கை தட்டல் கிடைத்தது.
[தினமலர் வாரமலர்]

104 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். will come afterwards.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா அக்காவுக்கு நல்வரவு, வணக்கம்.  ஷெட்யூல் செய்து வைத்தும் ஏதோ கோளாறு...  நேற்றும் அப்படி ஆனது.   சரி செய்து வெளியிடுகிறேன்.

      நீக்கு
  2. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  3. நட்பு...
    நட்பாகவே இருந்து விட்டால் எவ்வளவு நல்லது...

    பதிலளிநீக்கு
  4. யானைகளை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டவன் என்ன கதிக்குப் போவானோ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிர்வைத் தந்த புகைப்படம்!

      நீக்கு
    2. யானைகளின் காட்டை ஆக்கிரமித்துக்கொண்டு, யானை என் வயலை நாசம் செய்துவிட்டது, வாழைக்குலைகளை மிதித்துவிட்டது என்று புலம்புகின்றனர் ஜனங்கள். ரோடில் மாடுகளைப் பத்திவிட்டுவிடுகிறான் அவைகளை வளர்ப்பவன். எங்கேயோ பிச்சை எடுத்து சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்து எனக்குப் பால் கொடு என்று. அதுகள் ரோடில் இருக்கும் போஸ்டர், கண்ட கண்ட பிளாஸ்டிக் சமாச்சாரங்களை சாப்பிடுகிறது. இவைகளைப் பற்றிக் கண்டுகொள்ளாத அரசு. அப்புறம் எப்படி உருப்படும்?

      நீக்கு
    3. ஆமாம். மாடுகளின் நிலை இன்னும் பரிதாபம். அரசு என்ன செய்ய முடியும்? பெருகி வரும் மக்கள் தொகை அதன் வாழ்வாதார இடங்களின் ஆக்ரமிப்புக்குக் காரணமாகிறது.

      நீக்கு
  5. புகைப்பட நிலைமை ஐயோ...

    ஜோக்ஸ் ரசித்தேன்...

    நண்பர்களைப் பற்றி - மென்று முழுங்க தவிப்பது போல்...?!

    எனக்கு இரண்டு நடிப்பு திலகங்கள் தெரிகிறது...
    ஒன்று : ஸ்டைலிஷ்...!
    பக்கத்தில் : கம்பீரமாய்...!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி DD. இரண்டு நடிப்புத் திலகங்கள்... உண்மைதான். நட்பு.. ம்...ஹூம்...

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கமலா அக்கா... வாங்க... ப்ரார்த்தனைபளுக்கு நன்றி.

      நீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  8. நட்பைப்பற்றி அதிரவும் இன்று எழுதி இருக்கிறார்கள். நீங்களும் நட்பைப்பற்றி எழுதி இருக்கிறீர்கள்.
    எத்தனை வருட பகை போய் சகஜமாய் பேசியது ஆறுதல். செய்த உதவிக்கு நன்றி சொன்னாரே அதே பெரிய விஷயம்.
    நீங்களும் பகையை மறந்து "எப்படி இருக்கே" என்று கேட்டீர்களே ! அது உங்கள் நல்ல உள்ளத்தை காட்டுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நானும் பார்த்தேன். அங்கேயும் இன்றைய எங்கள் பதிவு பற்றிச் சொல்லி வந்திருக்கிறேன்.

      காலம் கசப்புகளை நீர்க்கச் செய்து விடுகிறது.

      நீக்கு
  9. //காய்கறிகளை வீட்டிலேயே வளர்க்க உதவும் அலமாரி! வீட்டைச் சுற்றி காலி இடம், பால்கனி அல்லது மொட்டை மாடி இல்லாதவர்கள், வீட்டுக்குள்ளேயே, ஆண்டு முழுவதும் முக்கியமான காய்கறிகளை வளர்க்க, 'எல்.ஜி., காலம் கார்டன்' பெட்டியை தயாரிக்கவுள்ளது.//

    இனி அப்படித்தான் நடக்கும். காலி இடங்களே இல்லாம்ல் எல்லோருக்கும் வீடு திட்டத்தால் விளை நிலங்கள் , குளம், குட்டைகள் வீடாகி வருகிறதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது எங்கள் புதிய இல்லத்தில் சிரமம்தான். நிறைய இடர்பாடுகள்.

      நீக்கு
    2. ஸ்ரீராம்... புதிய இடம் - நிறைய இடர்பாடுகள் என மனதுக்குள் தோன்றத்தான் செய்யும். ஆனால் ஒரு சில மாதங்களில் பழகிவிடும். பிறகு எல்லாவற்றிர்க்கும் தீர்வுகளும் கிடைத்துவிடும். வாழ்த்துகள்.

      நீக்கு
    3. அப்படிதான் சமாதானப் படுத்திக் கொள்கிறேன் நெல்லை.

      நீக்கு
  10. பொக்கிஷங்கள் மிக அருமை.
    சிரிப்பு. துணுக்குகள், பகிர்ந்த சிவாஜி, சாவித்திரி படம் அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
  11. நண்பர்கள் குறித்த விசயங்கள் என்னையும் பழைய நினைவுகளை மீட்டி விட்டது ஜி

    யானைகள் படம் நாம் உலகை எவ்வளவு சீரழித்து வருகிறோம் என்பதை காட்டுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவில் வாசல்களில், பாகன் உதவியோடு (பாகனுக்காக) பிச்சை எடுக்கும் யானைகளையும் பார்த்திருக்கிறோம். பெங்களூரு to சென்னை டாக்சியில் ஒருமுறை பயணித்தபோது, வேலூர் அருகே, சிக்னலில், டாக்சிக்குள் தும்பிக்கையை நீட்டி சில்லறை கேட்ட யானையையும் பார்த்துள்ளேன்.

      நீக்கு
    2. அது மட்டுமா? வேலியில் மின்சாரம்! அது யானையை பலிவாங்கும்.

      நீக்கு
  12. //காய்கறிகளை வீட்டிலேயே வளர்க்க உதவும் அலமாரி! // - இதையும் நம்மூர் மக்கள் ப்ரெஸ்டிஜ் என்று வாங்கிவைப்பார்கள். உருப்பட்டமாதிரிதான். ஹா ஹா. ஜப்பான்ல இடம் இல்லை என்று, மொட்டை மாடியில் காய்கறிகள், நெல் போன்றவைகளை விளைவிக்கிறார்கள். நம்மூர்லதான் ஏகப்பட்ட இடம் இருக்கே. அதுவும்தவிர ஏழைகள் தள்ளுவண்டியில் கொண்டுவந்து விற்கிறார்களே. அவற்றை வாங்கி அவர்களுக்கு வாழ்வாதாரத்தைக் காண்பித்தால் என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நம்மூர்லதான் ஏகப்பட்ட இடம் இருக்கே// எங்கே இருக்கு. நம்ம ஊர் அரசியல்வாதிகள் எல்லாவற்றையும் பிளாட் போட்டு விற்றுவிட்டார்களே!

      நீக்கு
    2. இப்போ எங்கள் ஏரியாவில் வாசலிலும் வருவதில்லை, அருகில் கடையும் இல்லை... என்ன செய்ய?

      நீக்கு
    3. உங்களுக்கு மெட்ரோ ரயில் வசதி இருக்கா ஸ்ரீராம்? ரயில்நிலையங்கள் உண்டா? அல்லது பேருந்து நிலையம் தானா? வீட்டுக்கு அருகே கடைத்தெருக்களே இல்லையா? சாமான்கள் எல்லாம் வாங்கக் கஷ்டமாக இருக்கும். ஆனால் ஆறு மாதங்களில் கட்டாயமாய் மாற்றங்கள் தெரியலாம். மக்கள் குடித்தனம் வந்து விட்டால் ஒவ்வொன்றக வந்துவிடும்.

      நீக்கு
    4. மெட்ரோ கிடையாது. இப்போதுதான் மண்சோதனை நடக்கிறது. மக்கள் குடித்தனம் நிறைய்ய்யவே இருக்கிறது கீதா அக்கா. முதல் சிரமம் தூரம். இரண்டாவது, 27 வருட பழக்கம், இடம் மாறியது. கொஞ்ச நாள் போனால் சரியாகி விடும்.

      நீக்கு
  13. சிவாஜி.. கிரிக்கெட் விளையாட நிற்கிறாரா இல்லை ஜோடி சேர்ந்து படத்தில் நடிக்க ஆயத்தமாகிறாரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நட்சத்திர கிரிக்கட்தான். அன்றைய ஆட்டத்தில் ஜெமினிகணேசன் நன்றாக ஆடினார் என்று படித்த ஞாபகம்.

      நீக்கு
    2. நெல்லை... நடிப்பையே ஸ்டைலாகச் செய்யறவர் ஆச்சே..

      நீக்கு
    3. அடடே.. கேஜிஜி... இவ்வளவு ஞாபகம் வைச்சிருக்கீங்களே...

      நீக்கு
    4. இந்தப் படம் குமுதத்தில் வந்ததுனு நினைக்கிறேன். ஜிவாஜி தன் ரசிகர்களுக்கு எனத் தனி நடை, உடை,பாவனை எப்போவுமே கடைப்பிடிப்பார். பாவமாக இருக்கும். இயல்பாக இருக்கவே முடியாமல் போயிருக்கும் இல்லையா? எப்போதும் நடிப்பு நினைப்பிலேயே! கஷ்டம்டா சாமி!

      நீக்கு
    5. ஹா... ஹா... ஹா... வித்தியாசமாக சிந்திக்கிறீர்கள் கீதா அக்கா...

      நீக்கு
  14. ஒளிச்சேர்க்கை, பச்சையம் என்பதெல்லாம் இனி பழங்கதையா?...

    முளைத்தெழும் செடியை இருளான இடத்தில் வைத்து அருகில் சன்னலைத் திறந்து வைத்தால் அதன் கொழுந்துகள் சூரிய ஒளியை நோக்கித் திரும்பும் என்று படித்திருக்கிறோமே...

    சூரிய ஒளியும் காற்றும் தானே மகரந்தச் சேர்க்கைக்குக் காரணம்...

    இலை அழுகாது.. காய் அழுகாது.. பழம் அழுகாது.. கிருமிகளும் அணுகாது.. எனில் அது செடியே அல்ல..

    கார்டன் பெட்டிகளுடன் இன்னும் எதை எல்லாம் விற்று காசாக்கிடக் காத்திருக்கிறார்களோ...

    ஏதோ ஒன்றைச் செய்யப் போய்..
    எதையோ ஒன்றைத் தின்னப் போய்த் தானே இன்று சீனா உயிர் பயத்தில் ஒடுங்கிக் கிடக்கிறது...

    இன்று யானைகளுக்கு ஆன குப்பை
    நாளை மனிதர்களுக்கு....

    வாழ்க மானுடம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //..ஒன்றைத் தின்னப் போய்த் தானே இன்று சீனா உயிர் பயத்தில்..//

      இல்லை. ரகசியமாக ஒன்றைச் செய்யப்போய்.. திருடனுக்குத் தேள்கொட்டிய கதையாகிவிட்டது.

      நீக்கு
    2. அதுதான் தலைவிதி என்றால் என்ன செய்ய துரை செல்வராஜு ஸார்...!

      நீக்கு
    3. ஏகாந்தன் ஸார்... புதிர் போடறீங்களே... என்னன்னு சொல்லுங்களேன்..!!

      நீக்கு
    4. ஏகாந்தன் சார் அவர்கள் சொல்வது உண்மையாக இருக்கட்டும்...

      நகைச்சுவையா என்ன... என்று தெரியவில்லை..

      கட்டு விரியன் கட்லெட்டும்
      கண்ணாடி விரியன் புளிச்ச கறியும் என்று யாரோ கிளப்பி விட்டிருந்தார்கள்....

      நீக்கு
    5. Bio war ப்கு என்று ஆராய்ச்சி செய்து தயார் செய்தது, labஐ விட்டு வெளியில் பரவி, சுளுந்தை வைத்து தலையைச் சொறிந்துகொண்டது போலாயிற்று.

      இப்போ சைனா இந்தியாவை நோக்கி புன்னகை புரியக் காரணம் வைரஸ் காரணமாக இறக்குமதித் தடை வருமோ என்று

      நீக்கு
    6. இந்தியா மட்டும்தான் பாதிக்கப் படுமா? நூற்று ஸோலார்க் காரர் சொல்கிறார், மூலப்பொருள் பற்றாக்குறையால் ஸோலார் பேனல் கிடைப்பதில் தட்டுப்பாடாம். அதுமட்டுமா, பேரஸிட்டமால், அமாக்ஸ்ஸிலின் உட்பட நிறைய மருந்து வகைகளுக்கான மூலப் பொருட்களுக்கு நாம் சீனாவையே நம்பி இருப்பதால் அதற்கெல்லாமும் மிக விரைவில் தட்டுப்பாடு வரும் என்று வரும் தகவல்கள் சொல்கின்றன.

      நீக்கு
    7. நெல்லை சொல்வது சரி. இது சம்பந்தமாக ஒரு சிறு கட்டுரை தரத் தயார் செய்துகொண்டிருந்தேன். அதை முடித்து வெளியிடுகிறேன் விரைவில்.
      இந்தியா சீனாவை அவ்வளவு நம்பியிருக்கவில்லை. சீனாவின் big business இந்தியாவின் மற்றும் அமெரிக்க தயவில்தான் பெரும்பாலும் நிகழவேண்டியிருக்கிறது. சர்வதேச பொருளாதார சமன்பாடுகள் அப்படி வளர்ந்திருக்கின்றன. சீனாவுக்கு இந்த நெருக்கடி நேரத்தில், நம்மிடம் குழைய வேண்டிய நிலை. குழைகிறது. அதன் சுயநலத்திற்காக..

      இரண்டு நாள் முன் நாம் சீனக்கப்பலை குஜராத் கடற்கரை அருகி தடுத்து நிறுத்தினோம். Indian Coast Guards-ன் பணி. அது மேற்கொண்டு நம் உத்தரவிற்காகக் காத்து அங்கேயே நிற்கவேண்டும். ஆனால் நம் கண்ணில் விளக்கெண்ணெய்யை விட்டுவிட்டு லேசாக நழுவப் பார்த்திருக்கிறது, பாகிஸ்தான் துறைமுகம் பக்கமாக!

      இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷமம் கடல்வெளியிலும் செய்கிறது சீனா. ட்ரம்ப் தன் இந்திய வருகையின்போது, மோதியிடம் பேசும் பேச்சில் சீனா ப்ரதானமானது. கொஞ்சம்தான் வெளியே3 வரும். எல்லாம் வெளியே வரவிடாது வெளியுறவுத்துறை. In diplomacy, everything is not for the public or the press. நமது தமிழ்ப்பத்திர்க்கை/மீடியா ஞானசூனியங்கள்; அல்லது அவர்களது அஜெண்டாபடி. எதிரிக்கட்சி மனப்பான்மையுடன் ஏதாவது உளறும்கள்.

      நீக்கு
    8. உங்கள் கட்டுரைக்காகக் காத்திருக்கிறேன் ஏகாந்தன் ஸார்.

      நீக்கு
    9. ஏகாந்தன் சொல்வது தான் சரி என நாங்கள் கேள்விப்பட்ட விஷயங்களும் உறுதி செய்கிறது. அவருடைய விரிவான கட்டுரைக்குக் காத்திருப்போம். இந்த விஷயங்களில் நல்ல அனுபவம் உள்ளவர். அவர் சொல்வது நூற்றுக்கு இருநூறு சதம் சரியாகவே இருக்கும்.

      நீக்கு
  15. நட்பு என்பதே தனி உலகம். எல்லோரும் பிரிந்து எங்கெங்கிருக்கிறோமோ...... என் நண்பர்களில் முதன்மையானவன் இப்போது இல்லை. நாங்கள் இருவரும் கணிணி கற்றுக்கொள்ள ஆரம்பித்ததிலிருந்து, வெளிநாட்டில் 20 வருடங்கள் பணியாற்றிக்கொண்டிருந்தபோதும், அவன் மறைவு வரை நட்பு தொடர்ந்தது. (என் மனைவியிக்கு பொறாமையாக இருக்கும் அப்போல்லாம்... எனக்கு அவன் பிறந்த நாள் மட்டும்தான் நினைவில் இருக்கும்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றும் அவர் உங்கள் நினைவில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார். வாழ்க நட்பு.

      நீக்கு
    2. இந்த நண்பர் பற்றி முன்பும் சொல்லி இருக்கிறீர்களோ நெல்லை...?

      நீக்கு
  16. ஆஆஆ இங்கும் பீலிங்ஸ் ஆஆ ஹா ஹா ஹா , ஓட்டோகிராப் வாரம் என அறிமுகப் படுத்தியிருக்கலால் போல இருக்கு.

    நட்பில் சரி உறவில் சரி கோபம் பிரச்சனை வந்தாலும், கொஞ்சக்காலம் எந்தத் தொடர்பும் இன்றி இருந்தால் பின்பு கோபம் குறைந்துவிடும் ஆனா துரோகம் செய்தவர்கள் எனில் பின்னர் மன்னிச்சு பழகுவதென்பது முடியாத விஷயம் அதிலும் திரும்பவும் செய்ய மாட்டார்களென எப்படி நம்பிக்கை வரும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா... அதுதான் காலையிலேயே உங்கள் தளத்தில் சொல்லியிருந்தேன்...

      நீக்கு
  17. இப்போதைய பத்திரிகைகளில் நகைச்சுவை துணுக்குகள் வருகிறதா? எல்லாம்தான் வாட்ஸாப்பில் வந்து விடுகிறதே. பழைய நகைச்சுவை துணுக்கு ஜோர். மேடம் கழுதையானாரா? கழுதை மேடம் ஆனாங்களா? 

    பதிலளிநீக்கு
  18. யானைகளின் நிலை மனதை வாட்டுகிறது. மனிதனைப் போல் சுயநலமிக்க மிருகம் வேறு இல்லை.எல்.ஜியின் காலம் கார்டன் பெட்டி சந்தோஷப்படுத்தவில்லை. பெர்னார்ட் ஷாவை இங்கிலாந்தின் சோ எனலாமா?

    பதிலளிநீக்கு
  19. அனைவருக்கும் இனிய மதிய வணக்கம்.
    நட்பு நீடித்திருப்பத்ற்கு அதிர்ஷ்டம் வேண்டும் அம்மா.

    பள்ளி நட்புகள் ,பல வருடங்கள் கழித்துத் தேடி வந்தவளும் இருக்கிறாள்.
    நேரில் பார்த்து ஒதுங்கியவளும் இருக்கிறாள்.

    உங்கள் நண்பர் வந்தது மிக சந்தோஷம்.
    நட்பின் துரோகங்களை மறப்பது கடினமே.
    ஒதுக்கிவிட வேண்டும். நான் ஆரோக்கியமாக
    இருக்கலாம்.
    யானைகளைக் கண்டு மனம் கலங்குகிறது.
    அவர்களின் இடத்தை மனிதர்கள் அடைத்துவிட்டு ஆட்டம் வேறு போடுகிறார்கள்.

    கலம் கார்டன் .எப்படி நடக்கிறது என்று பார்க்கலாம்.
    கழுதையை மேடம் என்று அழைத்தவன்
    சுவை அறிந்தவன்.

    சீனாவின் நோய்க்கு நீங்கள் சொன்ன ஊர்வனதான் காரணம் என்றே
    சொல்கிறார்கள்.

    அந்த நகைச்சுவை துணுக்கு ஜோர்.
    மிக மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா... சில நட்புகள் நீடிக்கதான் வேண்டுமா என்றும் யோசிக்க வைத்து விடுவார்கள்!

      நீக்கு
  20. பெர்னார்ட் ஷா சொல்வதும் உண்மைதானே.

    பதிலளிநீக்கு
  21. / உறவுகளில் நீண்ட காலம் பேசாமல் இருப்பார்களோ...  என் உறவுகளில் அப்படி ஒரு சம்பவம் உண்டு//
    ம்ம்ம் எனக்கும் இருக்கு பேசாமல் இருந்தேன் பிறகு அவ்வப்போது ஹாய் நலமா நான் நலம் .இவ்ளோதான் .
    என்னுடைய கல்லூரி பள்ளி நட்புக்கள் தூரப்போய்ட்டாங்க :(  //என் மகன்கள் இதுவரை பள்ளி, கல்லூரி, அலுவலக நண்பர்கள் என்று மூன்று பகுதிகளாக அழகாக மெயின்டெயின் செய்கிறார்கள்!ம்//
    பிள்ளைகளுக்கு எப்படி நட்பை மெயின்டைன் பண்ணனும்னு தெரியும் ஸ்ரீராம் .நமக்கு காலம் தராத அனுபவம் அவர்களுக்கு சின்ன வயசில் வந்திருக்கு .என் மகளும் நட்புக்களை அழகா மெயின்டெயின் செய்றா 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏஞ்சல். ஆமாம்.. மகன்கள் சரியாய் மெயின்டெயின் செய்கிறார்கள்தான்.... - இப்போதைக்கு! பார்ப்போம். நான் எந்த உறவுடனும் டூ விட்டதில்லை.... - இதுவரை!

      நீக்கு
  22. சிவாஜி தாத்தா ஆல்வேஸ் ஸ்டைலிஷ் :) யானைகள் :( ரத்தக்கண்ணீர் விடாத குறை .மனுஷன் திருந்தவே மாட்டான் அவனே கடைசி உயிர் இவ்வுலகில் 
    அந்த ப்ரிட்ஜ் இப்போதான் கேள்விப்படறேன் 
    யானை பற்றி எழுதும்போது பட்டாபி சார் நினைவு வந்ததது .அவர் நலம்தானே .பதிவேதும் வரலை ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிவாஜி தாத்தா...! ஹா... ஹா... ஹா... ஆமாம்.. நான் கூட சில நாட்களுக்கு முன்பு பட்டாபி ஸாரை நினைத்துக் கொண்டேன்.

      நீக்கு
  23. நேற்று இரவு/உங்கள் காலை பதிவு வந்ததும் உடனே படிக்க முடியலை. கணினி தானாக மூடிக் கொண்டது சார்ஜ் இல்லாமல். இஃகி,இஃகி! இப்போத் தான் படிச்சேன்.

    பதிலளிநீக்கு
  24. எனக்கும் சில நட்புகள் இம்மாதிரி மனவேற்றுமையால் பிரிந்தவர்கள் உண்டு. அவர்களில் ஓரிருவரைப் பார்த்திருக்கேன் மீண்டும் என்றாலும் தொடர்பில் இல்லை. இப்போச் சுத்தமாய்த் தொடர்புகள் இல்லை.அவங்களும் மறந்திருப்பாங்க. உறவுகளில் பலர் எவ்விதமான காரணங்களும் இல்லாமல் கோவித்துக்கொண்டு ஒதுங்கியவர்கள், பேசாமல் இருந்தவர்கள்னு உண்டு. காரணம்னு பார்த்தால் சொல்லவே சிரிப்பு வரும். :( எழுதப் போனால் சுயசரிதையாக ஆகிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நட்புகள் எனக்கும் அப்படி வாய்க்கவில.லை கீதாக்கா... உங்கள் பிறந்த தேதியிலேயே (வருஷம் வேறு!) பிறந்த என் கேஜி மாமா ஒருத்தர் அவர் பள்ளிக்கால நண்பர்களுடன் இன்னமும் நெருக்கமான தொடர்பில் இருக்கிறார்.

      நீக்கு
  25. பள்ளிக்கால நண்பர்களை தேடிக்கொண்டிருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே... நானும் தஞ்சையில் படித்தவன்தான். தூய அந்தோணியார்!

      நீக்கு
  26. வணக்கம் சகோதரரே

    நட்பின் இறுக்கங்கள் படித்து தெரிந்து கொண்டேன். நட்பானாலும் நம் நல்ல கருத்தை கொஞ்சம் முன் வைத்தால் பிரச்சனைதான். எங்கள் உறவிலும் சௌஜன்யமாக பழகி வந்தவர்கள் தீடிரென அமைதியாகி விட்டனர். இன்று வரை எங்காவது பார்த்தால்தான் பேச்சு. போகட்டும்...என்ன செய்வது? தங்கள் நட்பு தாங்கள செய்த உதவியை மறக்காமல் இருந்தது மனசாட்சியின் மகத்துவத்தை நிருபித்தது.

    காய்கறிகள் வளர்க்கும் அலமாரி இப்போதுதான் கேள்விபடுகிறேன். குளிர்சாதன பெட்டி போல் இதுவும் இனி அனைத்து இல்லங்களையும் அலங்கரிக்குமோ ? வெளிச்சம் இல்லாத காய்கறிகளையும் இனி உற்பத்தி பண்ணி உண்ணலாம் என்ற அந்த படைத்தவனுக்கே வெளிச்சம்.

    யானைகளின் நிலை கண்டதும் உண்மையிலேயே பரிதாபமாக இருந்தது. அவைகள் ஆகாரம் தேடி இங்கு வருவதென்றால், காட்டிலும் மனிதன் காலடி பதித்து விட்டானா? மனதுக்கு வேதனையாக உள்ளது.

    ஜோக்ஸ் இரண்டும் அருமை. அந்த காலத்தில் இந்த மாதிரி வார்த்தை விளையாடல், சாதுர்யமான பேச்சு ஒரு நல்ல நகைச்சுவைக்கு ஒரு முக்கிய அங்கமாக திகழ்ந்திருக்கிறது. ரசித்தேன்.

    சிவாஜி பற்றி செய்தி அறிந்தேன். இந்த படமும் ஏதோ ஒரு பத்திரிக்கையில் முன்பு நான் பார்த்ததாக நினைவு. கதம்பம் வழக்கம் போல் நன்றாக உள்ளது. நானும் வழக்கம் போல் தாமதம்.
    வருந்துகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... உங்கள் உறவாவது நேரில் பார்த்தால் பேசுகிறார்களே... நான் சொல்பவர்களிடம் அது கிடையாது.

      அனைத்தையும் ரசித்ததற்கு நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  27. உங்கள் பிள்ளைகளிப்போலத்தான் ஸ்ரீராம் நம் வீட்டிலும், இங்கு ஸ்கூலிலேயே குரூப் குரூப்பாக நண்பர்களாக இருப்பார்கள், ஒரு குரூப்பினர் அடுத்த குரூப்போடு சேர மாட்டினம், ஆனா எங்கள் பிள்ளைகள் இருவரும் அனைத்துக் குரூப்பிலும் நட்பாக இருக்கிறார்கள் ஹா ஹா ஹா அதுதான் எப்படி எனத் தெரியவில்லை... மாறி மாறி கெட்டுகெதர் நடக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் மகன்களுக்கு என ஒரு செட் இருக்கிறது அதிரா.   அதோடு குறிப்பிட்ட இடைவெளியில் சந்தித்து, அளவளாவி, உண்டு மகிழ்ந்து, திரைப்படம் பார்த்து என்று இருப்பார்கள்.  அதற்கு அலுவலகம் செல்லாத வாரஇறுதிகள் அவர்களுக்கு உதவுகின்றன,  என் பாஸ்தான் பாவம், சனி ஞாயிறு கூட விழித்திருந்து கதவு திறக்கவேண்டும்!

      நீக்கு
  28. //என்ன கேட்கிறீர்கள்? உறவுகளில் சண்டை என்று ஆரம்பித்தேன் என்றா? என்றைக்கு சொல்ல வந்த விஷயத்தை உடனே, நேராகச் சொல்லி இருக்கிறேன்?!! //

    அடுத்த முறையாவது “நேராகச்” சொல்லுவீங்கதானே?:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாதை மாறாமலிருந்தால் சொல்கிறேன் அதிரா...  ஹா...   ஹா..   ஹா...

      நீக்கு
  29. //பார்க்க குளிர்பதனப் பெட்டி போலவே இருக்கும் இதில், சூரிய ஒளிக்கு பதிலாக எல்.இ.டி., விளக்குகள், செடிகளுக்கு ஏற்ற தட்பவெப்பத்தை ஏற்படுத்தும் வசதி, வேர்களுக்கு தேவையான நீரை, தேவையான நேரத்தில் தரும் வசதி, உரம் செறிந்த தேங்காய் நார் படுகை போன்றவை இருக்கும்.//

    வீடு நாற்றமெடுக்காமல் இருந்தால் சரிதான்:)) இருப்பினும் இது இயற்கைபோல இருக்காதென்றே எண்ணுகிறேன்... இயற்கை காற்று, இயற்கை ஒளி பட்டால்தானே நல்லது இல்லை எனில் ரசாயன கலப்பு போலாகிடும். மைக்குறோவேவை நம் ஈசிக்காக பாவிக்கிறோம் ஆனா அதை பாவிக்கக்கூடாது என்றே சொல்கின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்...  காலப்போக்கில் எல்லாம் செயற்கையாகி வருகிறது.

      நீக்கு
  30. நம்ப முடியவில்லையே.. இலை குழைதானே யானைப்பிள்ளைகள் உண்பினம், இது குப்பையை எப்படி, அதுவும் அருகில் எல்லாம் பச்சைப்பசேலென மரங்கள் இருக்கும்போது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.   குப்பை கிளற பழகி விட்ட யானைகள் போலும்!

      நீக்கு
  31. ///பொக்கிஷம் :

    நேர்மையான பதில்...//

    ஹா ஹா ஹா உண்மைதானே..
    நானும், நல்லவருக்கு நல்லவர் கெட்டவருக்கு கெட்டவர் ஆக்கும் ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
  32. //அந்தக் கால இந்த ஜோக்குக்கு சிரிப்பு வருகிறதா அதிரா?//

    லை...ட்டாஆஆஆ:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை... ஏன் கேட்டேன்னா முன்னால் ஒருதரம் இதற்கெல்லாம் சிரிப்பு வரவில்லை என்று சொல்லியிருந்தீர்கள்.   அதுதான்!

      நீக்கு
    2. ஹா ஹா ஹா என்ன இருந்தாலும் இப்போ அதிகமான ஜோக்குகள் வந்து விட்டமையால, முந்தின இப்படியான ஜோக்குகளைப் பார்க்க.. இதெல்லாம் ஜோக்கோ என்பதைப்போலத்தான் வரும்..

      நீக்கு
  33. ///இந்த மாதிரி எவ்வளவு ஜோக்ஸ் பின்னாளில் பார்த்திருக்கிறோம்...! வெவ்வேறு வடிவங்கள் எடுத்த ஜோக்...

    //

    ஆஆஆஆஅ எனக்கிது புரிஞ்சுபோச்ச்:)) வஞ்சம் தீர்த்துக் கொண்டார்ர்ர்... இப்படியும் சிலர் இருக்கிறார்கள், போனால்போகுது என விடாமல், பழிவாங்கியே தீருவினம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமீபத்தில் ஏதோ விஜய் படத்தில் கூட இந்த பாணி ஜோக் வந்ததது என்று ஞாபகம்!

      நீக்கு
  34. ///"ஸார்.... சிவாஜி ஸார்...."//

    இது எதுக்காகவோ? இப்போ திடீரென?:)).. ஹா ஹா ஹா சரி சரி இன்று நான் ரொம்பவும் லேட்ட்ட்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ நடிகையைப் பார்த்து ஆர்யாவோ சந்தானமோ சொல்லும் வசனம் அது!  அதுபோல சொல்லிப்பார்த்தேன்.   நன்றி அதிரா.  லேட்டானால் என்ன, வந்தால் போதுமே!

      நீக்கு
  35. யானைகளைப் பார்த்தால் வயிறு எரிகிறது. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் யானைகள் உயிர்வாழவே கஷ்டப்படும் போல! மனிதன் அவ்வளவு மோசமாகத் தன்னலம் படைத்தவனாக ஆகிவிட்டான்.

    பதிலளிநீக்கு
  36. யானைகள் படம் - மனதில் வேதனையும் வலியும்... எத்தனை கொடுமை... :(

    நட்பு - நல்ல விஷயம். எனக்கும் இப்படி சில அனுபவங்கள் உண்டு. பள்ளிகால நட்பும், கல்லூரி நட்பும் இன்னமும் சிலரிடம் தொடர்கிறது. எங்கள் கல்லூரி வாட்ஸப் குழு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

    அனைத்துமே சிறப்பு. தொடரட்டும் கதம்பம்.

    பதிலளிநீக்கு
  37. 'உன் முகம் மாறவே இல்லை' :))!

    நீண்ட நாள் கழித்துப் பேசும் போது எதையாவது சொல்லி பேச்சை ஆரம்பிக்க அப்படிச் சொல்லியிருப்பாராய் இருக்கும்:).

    எனக்குப் பள்ளி, கல்லூரி தோழமைகளுடன் (வாட்ஸ் அப் குழுமங்களை தவிர்த்து விட்டேன்) நட்பு தொடர்ந்தபடி உள்ளது. உறவுகளுக்குள் வருடக் கணக்காகப் பேசாமல் இருப்பவர்கள் அந்த நாட்களில் அதிகம் கேள்விப்பட்டதுண்டு. ஆனால் இன்று மெத்தப் படித்தவர்களும் கூட ஈகோவினால் சொந்த சகோதர சகோதரிகளுடம் ஆண்டுக் கணக்கில் பேசாமல் இருப்பதைப் பார்க்கையில் ஆச்சரியமும் வருத்தமும் மேலிடுகிறது.

    யானைகள் படம்.. வேதனை. துணுக்குகள் அருமை.

    நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நீண்ட நாள் கழித்துப் பேசும் போது எதையாவது சொல்லி பேச்சை ஆரம்பிக்க அப்படிச் சொல்லியிருப்பாராய் இருக்கும்:).//

      இல்லையே...   dp  மாற்றியதும் மெசேஜாய் வந்தது!  அலைபேசியில் பேசி, நேரில் பார்த்துதான் வருடங்கள் ஆகின்றன என்று சொல்லி இருக்கிறேனே...!

      நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!