சம்பு சாஸ்திரியைத் தெரியுமா உங்களுக்கு. உங்களில் நிறைய பேருக்கு தெரிந்தவர்தான். விவரம் சொன்னால் ஞாபகத்துக்கு வரும்.
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
கல்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
30.3.23
8.11.19
14.12.17
27.1.16
கல்கி
கடையில் தொங்கிய கல்கியை வாங்கிக் கொண்டு ஜபல்பூரில் ரயில் ஏறும்போது மணி இரவு 2.45.
அது பிலாஸ்பூரிலிருந்து இந்தூருக்கு மேற்கு நோக்கிச் செல்லும் வண்டி. சென்னை செல்ல, இடார்சியில் இறங்கி G T யில் ஏற வேண்டும்.
அது பிலாஸ்பூரிலிருந்து இந்தூருக்கு மேற்கு நோக்கிச் செல்லும் வண்டி. சென்னை செல்ல, இடார்சியில் இறங்கி G T யில் ஏற வேண்டும்.
என் இடுப்பில் முழங்கை ஊன்றியிருந்தவர் சற்றே காக்கை போலத் தலை சாய்த்து என்னுடன் கூடவே படிக்க முயற்சித்ததில் அவரும் தமிழர் என்று புரிந்தது. கொஞ்சம் இடைவெளி விட்டு கல்கியைக் கீழே வைத்தால் உடனடியாகக் கடன் கேட்கும் அபாயம் இருந்ததால், மெல்ல நிதானமாகப் படிக்கத் தொடங்கினேன்.
பயணங்களில் நாம் வாங்கும் பத்திரிக்கை, செய்தித் தாள்கள் நமக்குச் சொந்தமானவை அல்ல! நாம் சற்றே கை அயர்ந்து, கொஞ்சம் தாழ்த்தினால் காத்திருந்த கை ஒன்று அதைக் கேட்டு நீளும்.
சமயங்களில் அது கை மாறி, கைமாறி நம் அனுமதிக்குக் காத்திராமல் எங்கெங்கோ செல்லும். இது போன்ற அனுபவங்கள் நிறையவே உண்டு!
கொஞ்ச நேரம் சென்றிருக்கும்.
6.8.14
பொன்னியின் செல்வனில் வந்த பொல்லாத சந்தேகம்!
ஆகஸ்ட்
11 இதழ் கல்கியிலிருந்து மீண்டும் 'பொன்னியின் செல்வன்' வெளியிடத் தொடங்கி
இருக்கிறார்கள். ஏக விளம்பரம் இந்தமுறை. எல்லாப் பத்திரிகைகளிலும் "2400
ரூபாய் சந்தா கட்டினால் நான்கு வருடங்களுக்கு கல்கி உங்கள் வீடுதேடி வரும்.
வந்தியத் தேவன் மூன்று வருடங்களுக்கு உங்கள் வீடு தேடி வருவார்"
என்றெல்லாம் விளம்பரங்கள் தூள் பறந்தன.
நான் ஏற்கெனவே கல்கி வாங்கிக் கொண்டிருப்பதால் பிரச்னை இல்லை. ஆனால் ஆகஸ்ட் 3 இதழிலிருந்து வழக்கம்போல அச்சுக் காகிதம் விலை உயர்வைக் காரணம் காட்டி, கல்கி விலையை 3 ரூபாய் ஏற்றி விட்டார்கள். வாழ்க வந்தியத் தேவன்.
கல்கியில் 'கல்கி சிறுகதைப் போட்டி' யில் வெற்றி
பெற்ற சிறுகதைகளை ஆர்வமுடன் படித்துப் பயின்று வருகிறேன். ஒருமுறை நானும்
ஜெயிப்பேன்! நம்பிக்கைதான் வாழ்க்கை. ஆனால் கதை அனுப்பினால்தானே அவர்களும்
பரிசீலிப்பார்கள்? அடுத்த முறையாவது அனுப்ப முயற்சிக்க வேண்டும்! ஹிஹிஹி...
இந்த
இதழில் பொன்னியின் செல்வன் தொடங்கி இருக்கிறது என்றதும் (மீண்டும்) படிக்கத்
தொடங்கினேன். கதைக்கான வேதா ஓவியங்களை இரா முருகன் உட்பட எல்லோருமே
பாராட்டுகிறார்கள். இது சம்பந்தமாக சமீபத்தில் ஏதோ ஒரு பத்திரிகையில் ஓவியர் வேதா அவர்கள் பேட்டியும் படித்தேன்.
திருமதி பக்கங்களிலிருந்து கீழே உள்ள படம் எடுத்துக் கொண்டிருக்கிறேன் - அனுமதி இல்லாமலேயே! மன்னிக்கவும் கோமதி மேடம்! நன்றிகள்!
திருமதி பக்கங்களிலிருந்து கீழே உள்ள படம் எடுத்துக் கொண்டிருக்கிறேன் - அனுமதி இல்லாமலேயே! மன்னிக்கவும் கோமதி மேடம்! நன்றிகள்!
நாம் இங்கு கற்பனை ஓடம் ஏறி யுகங்களைக் கடக்காமல் ஜஸ்ட் ஒரு ஐந்து பாராக்களைத் தாண்டிச் செல்வோம்! வீரநாராயண ஏரியின் தென்கோடிக்கு வரும் வந்தியத்தேவன் ஏரியைப் பார்க்கிறான். அந்த (வீராணம்) ஏறி பற்றிய வர்ணனை இந்தப் பாராவில் வருகிறது.
"இப்படி
எல்லாம் எண்ணிக்கொண்டு வீர நாராயண ஏரிக் கரையின் தென்கோடிக்கு
வந்தியத்தேவன் வந்து சேர்ந்தான். அங்கே வடகாவேரியிலிருந்து பிரிந்துவந்த
வடவாறு. ஏரியில் வந்து சேரும் காட்சியைக் கண்டான். ஏரிக்கரையிலிருந்து
சிறிது தூரம் வரையில் ஏரியின் உட்புறம் படுகையாக அமைந்திருந்தது. வெள்ளம்
வந்து மோதும்போது கரைக்குச் சேதம் உண்டாகாமலிருக்கும் பொருட்டு அந்தப்
படுகையில் கருவேல மரங்களையும் விளா மரங்களையும் நட்டு வைத்திருந்தார்கள்....."
இங்கேதான்....
இங்கேதான் படித்துக் கொண்டே வரும்போதே அந்தக் கேள்வி மனதுக்குள்
தோன்றியது. கருவேல மரங்களின் கருங்காலித் தனம் பற்றி சமீபத்தில்தானே
படித்து வருகிறோம்... யூகலிப்டஸ் மரங்கள் போல இவையும் இந்தியாவுக்கு வேறு
நோக்கில் கொண்டு வரப்பட்டு தீங்கிழைத்துக் கொண்டிருக்கும் மரங்கள் என்று
படித்தோமே... சோழர்கள் காலத்திலேயே இருந்திருக்கிறதா? என்று சந்தேகம்
தோன்றியது.
இணையத்தின் உதவியை நாடினேன். கீழ்க்கண்ட விவரங்கள் கிடைத்தன. எனவே ஆராய்ச்சி முடிவின் படி சோழர்கள் காலத்தில் கருவேல மரங்கள் இருந்திருக்காது என்று தோன்றுகிறது!
முதலில் இது.
...........53 மீட்டர் வரை வளரும் இதன் வேர், ஆழமாகச் சென்று, நிலத்தடி நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. வறட்சி காலத்தில், பிற தாவரங்களுக்குத் தேவையான நீர் முழுவதையும், இவை உறிஞ்சி விடுவதால், மற்ற தாவரங்கள் வாடி வதங்கி விடுகின்றன.
இனி வரும் காலத்தில், விவசாய நிலங்கள் அனைத்தும், தரிசு நிலங்களாக மாறினாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை.
...........53 மீட்டர் வரை வளரும் இதன் வேர், ஆழமாகச் சென்று, நிலத்தடி நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. வறட்சி காலத்தில், பிற தாவரங்களுக்குத் தேவையான நீர் முழுவதையும், இவை உறிஞ்சி விடுவதால், மற்ற தாவரங்கள் வாடி வதங்கி விடுகின்றன.
இனி வரும் காலத்தில், விவசாய நிலங்கள் அனைத்தும், தரிசு நிலங்களாக மாறினாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை.
இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி இருக்கும் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது.காற்றில் ஈரப்பதம் இருந்தால் கூட உறிஞ்சி விடுகிற இம்மரம், மனிதர்களையும் விட்டு வைப்பதில்லை. தன்னை சுற்றி இருக்கிற மனிதர்களின் உடலில் இருக்கிற ஈரப்பசையையும்,எண்ணெய்ப்பசையையு
அடுத்தது இது.
கருவேல மரம் வந்த கதை.
வேலிகாத்தான் என அழைக்கப்படும் "கருவேல மரங்கள்', மண்ணின் வில்லன்கள். இதன் தாவரவியல் பெயர் "ப்ரோசோபிஸ் சூலிப்ளோரா'. (Prosopis juliflora) இது வேளாண் நிலங்கள், வாழ்வாதாரங்களை நாசப்படுத்தும் தாவரம். மெக்சிகோ, கரீபியன் தீவுகள் மற்றும் தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட இவை, பயிர்களுக்கு வேலியாகவும், விறகாகவும் பயன்படும் எனக் கருதி, 1950ல் ஆஸ்திரேலியாவிலிருந்து, இந்தியாவுக்கு விதையாக கொண்டுவரப்பட்டது. நலம் பயக்கும் என கருதி, விதைக்கப்பட்ட இவை, நிலத்திற்கு எதிரியாகி, இன்று இந்தியா முழுவதும் ஆக்கிரமித்து விட்டது.
இது வேறு கருவேல மரம், கதையில் வருவது வேறு கருவேல மரமோ!
23.4.11
படித்ததும், பார்த்ததும் நினைத்ததும் .. வெட்டி அரட்டை!
நீண்ட நாட்களுக்குப் பிறகு குமுதம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பு என்ன வாய்ப்பு...எப்படி இருக்கிறது என்று பார்க்க காசு கொடுத்து வாங்கியதுதான்! பழைய குமுதம் நினைவுக்கு வந்தது. புகழ் பெற்ற எழுத்தாளர்களின் கதைகள், (சுஜாதா, ரா கி ர, பி வி ஆர், போன்றோரின் சமூக நாவல் தொடர் ஒன்று, சாண்டில்யனின் சரித்திரக் கதையொன்று) ராஜேந்திரகுமார், எஸ் ஏ பி போன்றோரின் சிறுகதைகள், (சுந்தர பாகவதர் சிறுகதைகள்..!) ப்ளான் பட்டாபி போன்ற படக் கதைகள், அஞ்சு பைசா அம்மு, போன்ற தொடர் சிரிப்பு துணுக்குகள் என்று ஒரு பல்வேறு சுவைகளைக் கொண்ட புத்தகமாய் வெளி வந்த காலம் அது. இப்போது ஒன்றுதான் பிரதானம்...சினிமா...பக்கத்துக்குப் பக்கம்...வேறு ஒன்றும் பெரிதாக இல்லை. பாவமாக இருந்தது...நான் (வாங்கிய) என்னைச் சொன்னேன்!
*************************************************************************

****************************************************
ஆனந்த விகடனில் சுகா எழுதும் தொடர் (மூங்கில் மூச்சு?) தொடர் சுவாரஸ்யமாக இருக்கிறது. ராமலக்ஷ்மி கூட இதைப் பற்றி அவர் பதிவில் குறிப்பிட்டிருந்ததாக ஞாபகம். வாலி எழுதும் தொடர் படிக்க வாங்கத் தொடங்கியது. விகடன் பரவாயில்லை. சில பல சுவாரஸ்ய பகுதிகள். படிக்கத் தூண்டுவதால் வாங்கவும் தோன்றுகிறது. பொக்கிஷம் என்று பழைய நினைவுகளை போடுகிறார்கள்.
*************************************************
சினிமா, கவர்ச்சிப் படங்கள் என்று வியாபாரத்துக்காக தன்னை இறக்கிக் கொள்ளாத கல்கியிலும் பல்வேறு சுவாரஸ்ய பகுதிகள் உண்டு. பிரபலங்களை வாசகர்கள் சந்த்தித்திருந்தால் அல்லது அவர்கள் மறக்க முடியாத புகைப் படங்களைக் கேட்டு வாங்கிப் போடுகிறது. அவர்களுடைய முதல் பட்டுப் புடைவை நினைவை கேட்கிறது. பல்வேறு பத்திரிகைகளுக்கும் பயணப் பட்ட ஞானியின் 'ஓ பக்கங்கள்' உண்டு. நினைவுத் திறன் பற்றி லதானந்த் எழுதும் கட்டுரை உண்டு. இவர் ஒரு வலைப் பதிவரும் கூட. கல்கி சிறுகதைப் போட்டி அறிவித்திருக்கிறது தெரியுமோ... ஜூன் பதினைந்து கடைசி நாளாம்.
**************************************************
கணையாழி மீண்டும் வரத் தொடங்கியுள்ளது. எப்படி இருக்கிறது என்று வாங்கிப் பார்க்க வேண்டும்.
****************************************************
பாலிமெர் தொலைக் காட்சியில் தலைப்புச் செய்திகள் போடும்போது ஒரு வித்தியாசம் + சுவாரஸ்யம். தலைப்புச் செய்திக்குக் கீழே பெரிய எழுத்துகளில் அந்தச் செய்திக்கு ஒரு கமெண்ட் போடுகிறார்கள்! அறிவிப்பாளர் அதை வாசிக்க மாட்டார். பின்னர் விரிவான செய்தியிலும் அது வராது. உதாரணமாக ஜெயலலிதா ராஜபக்ஷே போர்க் குற்றங்களுக்காக உலக நீதிமன்றத்தில் தண்டிக்கப் பட வேண்டும் என்பதற்கு இந்தியா முயற்சிக்க வேண்டும் என்று செய்தி. கீழே கமெண்ட் "சோனியா விடுவாரா?"
******************************************
புட்டபர்த்தி சாய்பாபா உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. பக்தர்கள் ஏதாவது அவர் இதில் அற்புதம் நிகழ்த்தக் கூடுமா என்று பிரார்த்தனையுடன் இருக்கிறார்கள். கண்ணீர் மல்க பக்தர்கள் கூடுகிறார்கள். பேட்டியளிக்கிறார்கள் . உள்ளே அனுமதிக்காத அரசாங்கத்தை வசை பாடுகிறார்கள். அங்கு 144 தடை உத்தரவு போடப் பட்டுள்ளது. ஹெட்லைன்ஸ் டுடே சாய்பாபா பற்றி விரிவாக அலசுகிறது.
******************************************************
மக்கள் தொலைக் காட்சியில் இரவு ஒன்பது முதல் பத்து வரை கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை என்று ஒரு நிகழ்ச்சி. அரட்டை என்பது தொலைபேசியில் பேசி மக்களைக் கொல்லும் நிகழ்ச்சிதான். ஆனால் இந்த சேட்டை கொஞ்சம் வித்தியாசம். தொலைபேசி அரட்டைக்கு நடுவில் நான்கைந்து முறை வருகிறது. ஏரல் இமான் அண்ணாச்சி என்பவர் நடத்துகிறார். மைக்கும் கையுமாக நல்ல வெள்ளை பேண்ட், ஷர்ட்டில் மக்களை கலாய்க்கிறார். ஷோ ரூம், ஸ்டம்ப், விக்கெட், ரன் அவுட் போன்ற வார்த்தைகளுக்கு தமிழில் என்ன என்று கேட்கிறார். வரும் பதில்கள் சுவாரஸ்யம். வ உ சி யார் என்றால் மக்களில் சில பேர் காந்தி வரை இழுத்தார்கள்! சரியாகச் சொல்ல முயன்ற ஓரிருவர் வ உ சி சிதம்பரம் பிள்ளை என்றார்கள். உங்கள் தொலை பேசி எண்ணை வேகமாக சொல்லச் சொல்வார். பெருமையாக வேகமாக சொல்லும் மக்களைப் பாராட்டி விட்டு "அண்ணே அதை அப்படியே தமிழ்ல சொல்லுங்கண்ணே" என்பார். அந்தத் திருநெல்வேலி ஸ்லேங்கும் இமான் அண்ணாச்சியின் உடனடி reaction களும் சுவாரஸ்யம். சில முறை பார்க்கலாம்.
************************************************************
CNN IBN னில் ஒரு செய்தி. கேரளாவில் புனித வெள்ளியை தொடர்ந்து வரும் விடுமுறையை அனுபவிக்க மருத்துவர்கள் முன்யோசனையுடன் செயல்பட்டார்களாம்! புதன் வியாழன் இரண்டு நாட்களில் 21 சிசேரியன் ஆபரேஷன்கள். இன்னும் நாட்கள் இருக்கின்றன என்ற பிரசவ கேஸ்களைக் கூட அழைத்து அறுத்து விட்டதாக பரபரப்பு. நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறதாம்!
******************************************************

**********************************************************
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)