இந்தப்
பதிவில் 'சரவணபவன் சாம்பார்' என்று நான் எங்கிருந்தோ எடுத்து
வைத்திருக்கும் குறிப்பைத் தருகிறேன். கட்டாயம் இணையத்திலிருந்துதான்
எடுத்திருக்கிறேன். எங்கிருந்து எடுத்தேன் என்றும் குறித்து வைத்திருந்திருக்கலாம். அவர்களுக்கு ஒரு நன்றி சொல்லியிருக்கலாம். யாரென்று தெரியாததால், கொஞ்சம் குற்ற உணர்வுடனேயே பதிவிடுகிறேன்.
சரவணபவன்
சாம்பாரை ரசிப்பவர்களும் இருக்கிறார்கள். பத்தோடு பதினொன்றுதான் அது என்று
சொல்பவர்களும் இருக்கிறார்கள். ரசிப்பவர்கள் முயற்சித்துப் பார்க்கலாம்.
ரசிக்காதவர்களும் முயற்சித்துப் பார்த்து உங்கள் சுவைக்கேற்ப மாற்றங்கள்
செய்து கொள்ளலாம்.
இனி செய்முறை :
தேவையான பொருட்கள் :
துவரம் பருப்பு – 1 கப்
வெங்காயம் – 1
தக்காளி – 1
உப்பு – தேவையான அளவு
அரைக்க வேண்டியவை :
தக்காளி – 1
பொட்டுகடலை – 1 மேஜை கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
தனியா தூள் – 1 தே.கரண்டி
தேங்காய்த் துருவல் – 2 தே.கரண்டி
கடைசியில் தாளித்துச் சேர்க்க :
எண்ணெய் – 2 தே.கரண்டி
கடுகு – 1/4 தே.கரண்டி
வெந்தயம் – 1/4 தே.கரண்டி
சீரகம் – 1/2 தே.கரண்டி *
உளுத்தம் பருப்பு – 1 தே.கரண்டி
வெங்காயம் – 1
கருவேப்பில்லை – 4 இலை
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2
கடைசியில் தூவ : பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 1/4 கப்
செய்முறை :
வெங்காயம், தக்காளியைப் பொடியாக வெட்டி கொள்ளவும். முதலில் கொடுத்துள்ள துவரம் பருப்பு + 3 கப் தண்ணீர் + வெங்காயம் + தக்காளியை பிரஷர் குக்கரில் போட்டு 3 – 4 விசில் விட்டு வேகவைத்து கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
விசில் அடங்கியதும் பிரஷர் குக்கரைத் திறந்து வெந்த பருப்பு +வெங்காயம், தக்காளியை நன்றாக மசித்து கொள்ளவும். அத்துடன் அரைத்த கலவை + உப்பு + தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + வெந்தயம் + சீரகம் +உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து பின் அதில் வெங்காயம் + கருவேப்பிலை + பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.
இப்பொழுது வதக்கிய பொருட்களை, கொதிக்கின்ற சாம்பாரில் சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்கவிடவும். கடைசியில் கொத்தமல்லி தூவி கிளறிவிடவும். இந்த சாம்பாரை இட்லி, தோசை, பொங்கல் போன்ற டிஃபன் ஐட்டம்ஸுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

டிஸ்கி : சாம்பார் ரெஸிப்பி ஒரிஜினலாய்ப் போட்டவர் யாராயிருந்தாலும் அவருக்கு எங்கள் நன்றிகள்.
நன்றி அப்பாதுரைஜி..
படங்கள் : நன்றி இணையம்.