நடக்கும் நினைவுகள் எழுதி ரொம்ப நாளாச்சு!
அதிகாலைல நடக்கற பழக்கம் இருக்கு பாருங்க, ரொம்ப நல்ல பழக்கம். சுத்தமான காற்று, சந்தடியற்ற அமைதியான சூழல், போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலை..
அதிகாலைல நடக்கற பழக்கம் இருக்கு பாருங்க, ரொம்ப நல்ல பழக்கம். சுத்தமான காற்று, சந்தடியற்ற அமைதியான சூழல், போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலை..
சாலையோரம் இருந்த மரங்கள்
ஒன்றுக்கொன்று சீரான இடைவெளியில் இருளிலேயே ஒரு தனி நிழலைக் கொடுத்துக்
கொண்டிருக்க, மூடியிருந்த கடைகளின் படிகளில், சிறு ஈரம் மினுமினுக்க
வரிசைக் கடைகளின் காலியிடங்கள் தனிக் காட்சியைக் கொடுத்தன.
"பெட்ரோல் இல்லையோ? பங்க் கூட எதுவும் பக்கத்துல இல்லையே'
எதிரே ஒரு
தெருநாய் ஓடிவந்து கொண்டிருந்தது. இவன் பைக்கைத் தள்ளிக் கொண்டு போகும்
வேகத்தைப் பார்த்து, திரும்பி அவன் பின்னாலேயே ஓடி, மோப்பம் பிடித்து
விட்டு, சுவாரஸ்யமின்றி அடுத்திருந்த சந்துக்குள் மறைந்தது!
"எதுக்கு"
"இல்லை, தள்ளிகிட்டே வந்தீங்களே.. பாவம், யாருக்காக வெயிட் பண்றீங்க?"
"என் ஃபிரெண்ட் நைட் டியூட்டி முடிஞ்சி வர்றான். 'பைக்கை எடுத்துட்டு வாடா' ன்னான். அதான் அவனை அழைத்துப் போக வந்தேன். "