ஏற்கெனவே பரபர அவசரம்.
வீட்டில்
உடம்பு சரியில்லாத அப்பாவைப் பார்த்துக்கொள்ளப் பரீட்சைக்குப் படிக்கும்
பையனை வைத்து விட்டு பெரியவர்கள் மூன்று பெரும் மதுரை டவுன்ஹால் ரோட்
வந்திருந்தோம்.
மகன் வாங்கி வரச்சொன்ன 32 GB SD மெமரி
கார்டும், OTG அடாப்டரும் வாங்கிக் கொண்டு அப்படியே ஒரு 'பவர் பேங்க்'
ட்ராவலிங் சார்ஜரும் வாங்கிக் கொண்டு அரிசி அப்பளம், மெட்ரோ சாம்பார்ப்
பொடி, மதர்ஸ் ரெசிப்பி மிக்சட் வெஜிடபிள் வாங்கிக் கொண்டு, ஹோட்டல் கௌரி
கங்கா அருகில் மெடிகல் ஷாப்பில் இன்டிரால், ஃப்ளுனாரின், சைநோரஸ்ட் வாங்கிக் கொண்டு திரும்புகையில்......
ஏற்கெனவே ஓரிருமுறை ஒட்டுப் போட்டு விட்டதால் புதுசு வாங்கி விடலாம் என்று சுற்றுமுற்றும் பார்த்தால் ஹிந்துஸ்தான் என்ற பெயரில் ஒரு செருப்புக்கடை.
உள்ளே நுழைந்தோம். கண்ணாடியை மேலே தலையில் ஏற்றிக் கொண்டு வெளியிலேயே நின்றிருந்த மத்திய வயதைத் தாண்டிய இளைஞரின் பார்வையில் ஏனோ அவ்வளவு நட்பு இல்லை.
அவர் காட்டிய முதல் செருப்பு 750 ரூபாய். தயங்கி, இது வேண்டாம் என்ற போது, விரலசைப்பால் கீழே காட்டி மிரட்டலான குரலில் ஆங்கிலத்தில் 'கீழே போடுங்க' என்று கூறி, அதே வேகத்தில் பின்னால் நின்றிருந்த ஊழியரிடம் 'எடுத்து வை' என்று கூறி, அடுத்து அவர் காட்டியது 900 ரூபாயில்.
"இதைப் போட்டுகிட்டா நீ நாசமாப் போயிடுவே போலேருக்குடா... அவர் அப்படித்தான் சொல்றார்" என்றார் மாமா, நக்கலாக!
சிரித்துக் கொண்டோம்.
கௌரி கங்காவில் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினோம்.

