மார்க்கெட்டில்
முருங்கைக்காய் ஒன்று பத்து ரூபாய். நம்ம வீட்டுத் தோட்டத்துல இருக்கற
மரமா, காய்க்கற வழியாகவும் தெரியல! என்ன செய்யலாம்?
காய்தானே
இல்லை? இலையைப் பறித்துவிட வேண்டியதுதான்! முருங்கை இலையில் வைட்டமின்
A, இரும்புச்சத்து எல்லாம் இருக்கு என்று யாரோ சொன்னாங்களே..முதலில் இப்படி இருக்கும் மு. கீரையை இப்படி பிரித்துக் கொள்ளவேண்டும்.
அப்புறம் இப்படி...
அப்புறம் நான் இன்னமும் கூட தனித்தனி இலையாகப் பிரித்துக் கொள்வேன்.
கொஞ்ச நேரத்திலேயே அது வெந்து விட, காரப்பொடி போடலாமா, சாம்பார்ப்பொடி போடலாமா என்று யோசித்து, சாம்பார்ப்பொடியே போடலாம் என்று முடிவெடுத்து, போட்டு, திருப்பி விட்டு இறக்கி மூடினேன்.
தேங்காய்த் துருவல் அப்படியேவோ, இல்லை லேசாக அரைத்து விட்டோ சேர்க்கலாமா என்று நினைத்து, பின்னர் அந்த எண்ணத்தைக் கைவிட்டு விட்டேன். செய்திருக்கலாம்.
இன்னும் நிறைய முருங்கைக் கீரை பாக்கி இருந்தது. அதை மறுநாள் பாஸ் பொரிச்ச குழம்பாக வைக்க, முதல்நாள் நான் செய்திருந்ததை விட, இது சுவையாக இருக்க, எல்லோருமே உன்னைப்பிடி, என்னைப்பிடி என்று சாப்பிட்டு விட்டோம்!




