facts and figures 9 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
facts and figures 9 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

3.12.09

நாமிருக்கும் நாடு .. நம'தொன்பது' அறிவோம்!








இதைப்  பெருமை என்றும் எண்ணிக் கொள்ளலாம். ஆனால் இந்தியா போன்ற சாத்வீகமான நாட்டுக்கு இது, நிச்சயம் தொப்பியில் மேலும் ஒரு இறகுதான்.
1) இந்தியா எந்த ஒரு நாட்டையும் ஆக்ரமிக்க முயற்சித்ததே இல்லை என்பது இந்தியாவின் பெருமையாக சொல்லப் பட்டுள்ளது.

ஆனால் இதை பெருமையாக நிச்சயம் சொல்லலாம்.
2) பூஜ்யம்,செஸ், அல்ஜீப்ரா, கால்குலஸ், முதலானவை இந்தியாவிலிருந்தே வந்தன.
                                                             
அப்புறம், இது எல்லோருக்கும் தெரிஞ்சதுதான்! ஆனாலும் இங்க இன்னொருதரம் சொல்றதுல தப்பில்ல!
3) உலகின் முதல் கிரானைட் கோவில் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயம்.கி பி 1004 முதல் கி பி 1009 வரையான ஐந்தே ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட கோவில் இது.

இது எல்லாம் இந்தியா பத்தி பொது விவரங்க தெரிஞ்சதுதான்; எங்க அம்மா ரொம்ப நல்லவங்கன்னு திருப்பித் திருப்பி சொல்றது இல்லையா? இந்தப் பேரைக் காப்பாத்திக்க நம்ம பிரதமர், ஜனாதிபதி எல்லாம் ரொம்பப் பாடு படறாங்க..."ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க.." மாதிரி.
4) உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு. உலகின் ஆறாவது பெரிய நாடு. மிகப் பழமை வாய்ந்த நாகரீகங்களில் ஒன்று.




சரியா வேலை பார்க்கறாங்களா, ரயில்கள் தாமதமின்றி நேரங்களைக் கடைப் பிடிக்கின்றதா'ன்னுல்லாம் 'அ'னா 'பி'னா கேள்விகள் கேட்காம இதைப் படிச்சா பெருமைதான்.
5) உலகின் மிகப்பெரிய Employer Indian Railways. ஒரு மில்லியனுக்கு மேல் வேலை பார்க்கிறார்கள்.

இப்போ இங்க வேற எதுனாச்சும் விக்கலாமான்னு யோசிக்கிறாங்க- மதிப்பிழந்து போச்சே..ஆனாலும்...
6) உலகிலேயே அதிக தபால் நிலையங்கள் உள்ள நாடு.

ம..ஹூம்...பணம் வாங்கி வாங்கி போட்டுக்கறோமே அந்தப் பை இல்லீங்க! இது வேற....,
7) இந்தியாவின் புதாயனா ஆறாம் நூற்றாண்டிலேயே "Pi" யின் மதிப்பீட்டைக் கண்டறிந்தார். ('பை'யின் தொடரும் எண்கள் - இன்றும் தொடர்கின்றன - முடிவில்லாமல்)

ஏதாவது சொன்னா பெருமாள் கோச்சுக்குவார். ஆனா அவர் என்ன பண்ணுவார், மனுஷங்கதானே அங்கயும் நம்மளை 'உச்சு' கொட்ட வைக்கறது...
8) பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட திருப்பதி கோவில் உலகின் மிகப் பெரிய புண்ணியஸ்தலமாக அறியப்படுகிறது. வேறெந்தப் புண்ணிய ஸ்தலங்களையும்  விடப் பெரியது!

நல்லதொரு நாடு - நடமாடாத பல்கலைக்கழகம்! 
9) கி மு 700 இல் தக்ஷிலாவில் கட்டப்பட்டது உலகின் முதல் பல்கலைக் கழகம். 10,500 மாணவர்களுடன் 60 பாட வகைகளில் பாடங்கள் எடுக்கப்பட்டன. உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் மாணவர்கள் கல்வி கற்க வந்தனர்.
நாலாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நாலந்தா பல்கலைக்கழகம் பழங்கால இந்தியாவின் கல்விச் சாதனைகளில் ஒன்று.