வியாழன், 3 டிசம்பர், 2009

நாமிருக்கும் நாடு .. நம'தொன்பது' அறிவோம்!








இதைப்  பெருமை என்றும் எண்ணிக் கொள்ளலாம். ஆனால் இந்தியா போன்ற சாத்வீகமான நாட்டுக்கு இது, நிச்சயம் தொப்பியில் மேலும் ஒரு இறகுதான்.
1) இந்தியா எந்த ஒரு நாட்டையும் ஆக்ரமிக்க முயற்சித்ததே இல்லை என்பது இந்தியாவின் பெருமையாக சொல்லப் பட்டுள்ளது.

ஆனால் இதை பெருமையாக நிச்சயம் சொல்லலாம்.
2) பூஜ்யம்,செஸ், அல்ஜீப்ரா, கால்குலஸ், முதலானவை இந்தியாவிலிருந்தே வந்தன.
                                                             
அப்புறம், இது எல்லோருக்கும் தெரிஞ்சதுதான்! ஆனாலும் இங்க இன்னொருதரம் சொல்றதுல தப்பில்ல!
3) உலகின் முதல் கிரானைட் கோவில் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயம்.கி பி 1004 முதல் கி பி 1009 வரையான ஐந்தே ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட கோவில் இது.

இது எல்லாம் இந்தியா பத்தி பொது விவரங்க தெரிஞ்சதுதான்; எங்க அம்மா ரொம்ப நல்லவங்கன்னு திருப்பித் திருப்பி சொல்றது இல்லையா? இந்தப் பேரைக் காப்பாத்திக்க நம்ம பிரதமர், ஜனாதிபதி எல்லாம் ரொம்பப் பாடு படறாங்க..."ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க.." மாதிரி.
4) உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு. உலகின் ஆறாவது பெரிய நாடு. மிகப் பழமை வாய்ந்த நாகரீகங்களில் ஒன்று.




சரியா வேலை பார்க்கறாங்களா, ரயில்கள் தாமதமின்றி நேரங்களைக் கடைப் பிடிக்கின்றதா'ன்னுல்லாம் 'அ'னா 'பி'னா கேள்விகள் கேட்காம இதைப் படிச்சா பெருமைதான்.
5) உலகின் மிகப்பெரிய Employer Indian Railways. ஒரு மில்லியனுக்கு மேல் வேலை பார்க்கிறார்கள்.

இப்போ இங்க வேற எதுனாச்சும் விக்கலாமான்னு யோசிக்கிறாங்க- மதிப்பிழந்து போச்சே..ஆனாலும்...
6) உலகிலேயே அதிக தபால் நிலையங்கள் உள்ள நாடு.

ம..ஹூம்...பணம் வாங்கி வாங்கி போட்டுக்கறோமே அந்தப் பை இல்லீங்க! இது வேற....,
7) இந்தியாவின் புதாயனா ஆறாம் நூற்றாண்டிலேயே "Pi" யின் மதிப்பீட்டைக் கண்டறிந்தார். ('பை'யின் தொடரும் எண்கள் - இன்றும் தொடர்கின்றன - முடிவில்லாமல்)

ஏதாவது சொன்னா பெருமாள் கோச்சுக்குவார். ஆனா அவர் என்ன பண்ணுவார், மனுஷங்கதானே அங்கயும் நம்மளை 'உச்சு' கொட்ட வைக்கறது...
8) பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட திருப்பதி கோவில் உலகின் மிகப் பெரிய புண்ணியஸ்தலமாக அறியப்படுகிறது. வேறெந்தப் புண்ணிய ஸ்தலங்களையும்  விடப் பெரியது!

நல்லதொரு நாடு - நடமாடாத பல்கலைக்கழகம்! 
9) கி மு 700 இல் தக்ஷிலாவில் கட்டப்பட்டது உலகின் முதல் பல்கலைக் கழகம். 10,500 மாணவர்களுடன் 60 பாட வகைகளில் பாடங்கள் எடுக்கப்பட்டன. உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் மாணவர்கள் கல்வி கற்க வந்தனர்.
நாலாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நாலந்தா பல்கலைக்கழகம் பழங்கால இந்தியாவின் கல்விச் சாதனைகளில் ஒன்று.

24 கருத்துகள்:

  1. நல்லா இருக்கு ஸ்ரீராம்! நல்ல புதிய தஞ்சாவூர் தகவல்.

    பதிலளிநீக்கு
  2. "கொடுத்து வைத்தவர் ஐயா நீங்கள்" இப்பிடித்தான் நான் பொறாமையோட சொல்லுவேன்.

    பதிலளிநீக்கு
  3. எக்ஸாம் எதுவும் எழுதப்போறிங்களா ஸ்ரீராம்!.

    பதிலளிநீக்கு
  4. தஞ்சாவூர் - கிரானைட் புதிய தகவல். இந்தியாவைப் பற்றி நவரத்தினங்களை அள்ளித் தெளித்தமைக்கு நன்றி, பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  5. இதை படித்தவுடன் 'நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது' அப்படின்னு பாட தோன்றது.

    பதிலளிநீக்கு
  6. இந்தியாவை பற்றிய அறிய தகவல்களை நாட்டுப்பற்றுடன் தந்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  7. நன்றி ஹேமா,
    எல்லோர் நாட்டிலும் பெருமைப் பட எத்தனையோ விஷயங்கள்...

    பதிலளிநீக்கு
  8. படிச்சது சரியா இருக்கானு செக் பண்ணிப் பார்த்தேன் தமிழுதயம்...சரியா இருக்கா?

    பதிலளிநீக்கு
  9. கொட்டிக் கிடக்கும் ரத்தினங்களில் ஒன்பது மட்டும்....இல்லை பெ.சொ.வி.?

    பதிலளிநீக்கு
  10. நல்லா சத்தமா சந்தோஷமா பாடுங்க மீனாக்ஷி...உங்க சந்தோஷம் எங்களுக்கும் சந்தோஷம்...

    பதிலளிநீக்கு
  11. கவிதைகளில் மூடியுள்ள உங்கள் பக்கங்கள் நன்றாக உள்ளன அன்பின்...
    உங்கள் அன்பு தொடரட்டும்...அங்கும்...இங்கும்...!

    பதிலளிநீக்கு
  12. இந்தியா எந்த ஒரு நாட்டையும் ஆக்ரமிக்க முயற்சித்ததே இல்லை என்பது இந்தியாவின் பெருமையாக சொல்லப் பட்டுள்ளது.
    ---- Ithai thavaira matra unmai yaana thahavalhal ellaam aruamai,,,,,,

    Nallathambi

    பதிலளிநீக்கு
  13. // Nallathambi said...
    இந்தியா எந்த ஒரு நாட்டையும் ஆக்ரமிக்க முயற்சித்ததே இல்லை என்பது இந்தியாவின் பெருமையாக சொல்லப் பட்டுள்ளது.
    ---- Ithai thavaira matra unmai yaana thahavalhal ellaam aruamai,,,,,,
    //
    புரியவில்லை, திரு நல்லதம்பி, இந்தியா இதுவரை எந்த நாட்டையாவது ஆக்கிரமிக்க முயற்சி செய்தது என்று கூறுகிறீர்களா?
    மறுக்கிறேன். வேண்டுமென்றால் (தன் ஆன்மிக உணர்வால்) பிற நாட்டினரின் மனத்தை ஆக்கிரமித்துள்ளது என்று ஒப்புக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. எல்லாத்துக்கும் நாம க்ரெடிட் எடுத்துக்குறதுல தப்பொண்ணுமில்லே - அல் கோர் மாதிரி முழுப் பூசணிக்காய முழுங்குற ஆசாமிங்களா இருந்தா. ஆனா நாம நியாயமானவங்க இல்லையா? அதனால க்ரெடிட் எங்கே கொடுக்கணுமோ அங்கே கொடுத்துடுவோம், என்ன?

    அல்ஜீப்ரா - கொடுத்தது பண்டைய பாக்தாத், பாபிலோன். 'அல்-ஜப்ர்'; அவங்க தான் மொதல்ல ஜபுர் காட்டினது

    பூஜ்ஜியம் - இது கொஞ்சம் தகராறு. பாபிலோன் காரங்க தான் பூஜ்ஜியத்துக்கான concept கொண்டு வந்தது. இருந்தாலும் நம்ம நாட்டுல தான் பூஜ்ஜியத்தை வச்சு ஒண்ணு, பத்து, நூறுன்னு அளக்க ஆரம்பிச்சது. அதனால பூஜ்ஜியத்துக்கு முக்கால் க்ரெடிட் நமக்கு, கால் க்ரெடிட் அவங்களுக்கு. பிங்களர் ஒத்துக்குவாரு, கவலைப்படாதீங்க

    கேல்குலஸ் - வுட்டா சந்திரனுக்குக் கூட இந்தியா தான் மொதல்ல போனாருன்னு சொல்லிடுவீங்க போலிருக்கே? ஆரியபட்டா கொஞ்சம் லேட்டு பட்டாங்க. கிரேக்கத் தொடக்கம். இந்தியாவுக்கு ஏறக்குறைய ஆயிரம் வருசங்களுக்கு முன்னாலயே கிரேக்கருங்க கேல்குலஸ் பாய்குலஸ் எல்லாம் பாத்துட்டாங்க. இன்டெக்ரல் கேல்குலசுக்கு வரீங்களா - சரி, இந்தியாவுக்கு க்ரெடிட் கொடுத்துருவோம்.

    கடைசியில வுட்டு வச்சது செஸ். இது நம்மளுது தான்.

    பதிலளிநீக்கு
  15. கோவிச்சுக்காதெங்க..கி.மு 1500 வாக்கில் எகிப்து காரங்க மதிப்பு கண்டுபிடிச்சுட்டாங்கண்ணே.

    பல்கலைக்கழகத்தை மட்டும் விட்டு வைப்பானேன்? அது சைனாக்காரங்க க்ரெடி. கிமு 2000ல் சங்க்யங்க் 'பலகல்வி' நிலையத்தை நடத்துனாங்க.

    விடுங்க... யாரும் கண்டுக்க மாட்டாங்க. நாம பாட்டுக்கு க்ரெடிட் எடுத்துக்குவோம். யாருனா கேட்டா அல் கோர் தான் நம்மள க்ரெடிட் எடுத்துக்க சொன்னாருன்னுடுவோம்.

    பதிலளிநீக்கு
  16. தக்சசீலா பாகிஸ்தானுக்கு சொந்தம்னு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. /இந்தியா எந்த ஒரு நாட்டையும் ஆக்ரமிக்க முயற்சித்ததே இல்லை/

    உண்மைதான்! தங்களுக்குள்ளேயே அடிச்சுக்கவே நேரம் பத்தலைன்ற போது எங்கே வெளியே பொய் ஆக்கிரமிக்கிறது, ஜெயிக்கிறது?

    இவ்வளவு பரந்த தேசம் 56000 ராஜாக்கள் ஆண்டதாகக் கூடச் சொல்லப் படுகிறது. சோழியனுக்கும், பாண்டியனுக்கும் ஆகவே ஆகாது! இவங்க ரெண்டு பேருக்குமே சேரனைக் கண்டால் ஆகாது! இதே மாதிரித் தான், ஆண்டுகொண்டிருந்தவர்கள் அடித்துக் கொண்டிருந்தார்கள்!

    மரபும், ஆன்மீகமும் மட்டுமே இந்த தேசத்தை ஒன்றாகச் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறது. அதையுமே கூட போலியான மதச் சார்பின்மை அலங்காரம் என்ற வடிவத்தில் சிதைத்துக் கொண்டிருக்கிறோம்!

    அப்புறம் இந்த வெளிநாட்டுக்குப் போய்ப் படையெடுப்பு...?

    கங்கையும் கடாரமும் வென்ற..அப்படீன்னு சோழர்கள் கடிதில் போட்டுக் கொண்டு கல்வெட்டெல்லாம் படிச்சதில்லையா என்ன? சாண்டில்யனுடைய கடல் புறாவைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்! பொன்னியின் செல்வன் கதை கூட, கொஞ்சம் விவரம் சொல்லுமே!

    ஆக்கிரமிப்பு, படையெடுப்பு எல்லாம் இருந்தது! மற்றவர்களோடு ஒப்பிடும்போது, கணக்கில் எடுத்துக் கொள்ளவே வேண்டாம் என்ற அளவுக்குச் சின்னதாய் இருந்தது!

    அப்புறம் எங்க அம்மா ரொம்ப நல்லவங்கன்னெல்லாம் திருப்பித் திருப்பிச் சொல்லாதீங்க!
    தமிழ் ஓவியா ஐயா, அப்பா மத்த அம்மாக்கள் எல்லாம் கெட்டவங்களான்னுட்டு பெரிசா கட் அண்ட் பேஸ்ட் கமென்ட் போட்டுடப் போறார்!

    பதிலளிநீக்கு
  18. நாமிருக்கும் நாடு நமதொன்பதறியோம் எனத் தகுமோ?

    பதிலளிநீக்கு
  19. //சாண்டில்யனுடைய கடல் புறாவைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்! பொன்னியின் செல்வன் கதை கூட, கொஞ்சம் விவரம் சொல்லுமே!//

    என்ன அநியாயம் கிருஷ்ணமூர்த்தி சார், சரித்திரத்தை மேற்கோள் காட்டி சாண்டில்யனும் கல்கியும் கதை எழுதப் போக அவர்களின் கதைகளை உதாரணம் காட்டி சரித்திரம் படைக்கப் பார்க்கிறீர்களே!

    இப்படி circular reference - னால் சென்னை மாநகரத்தின் ஒரு பாலத்தின் பெயர் Barber's Bridge என்று திரிந்து விட்டது தெரியுமா?

    பதிலளிநீக்கு
  20. /கிருஷ்ணமூர்த்தி said.. உண்மைதான்! தங்களுக்குள்ளேயே அடிச்சுக்கவே நேரம் பத்தலைன்ற போது எங்கே வெளியே பொய் ஆக்கிரமிக்கிறது, ஜெயிக்கிறது?/

    funny.

    பதிலளிநீக்கு
  21. கிருஷ், அப்பாதுரை!
    எவ்வளவுதான் சிற்றரசர்களும் பேரரசர்களும், சக்ரவர்த்திகளும், வர்த்தினிகளும் கோலோச்சினாலும், எல்லாரையும் 'படேல்' என அடிச்சி உலையில போட்டு - ஊரை ஒன்று சேர்த்துவிட்டாரே சுதந்திரத்திற்குப்பின் ஒருவர்!

    பதிலளிநீக்கு
  22. எல்லாம் சரிதான்.அ நா பி நா கேள்விகள் நா என்ன பாஸ்?

    பதிலளிநீக்கு
  23. அனா பினா ன்னா 'அ'திகப் 'பி'ரசங்கித்தனம் பாஸ்!

    :)))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!