ஞாயிறு, 27 டிசம்பர், 2009

ஞாயிறு 24 -- வல்லுநர் ரெடி; நீங்க ரெடியா?

ரி விசிட் ஞாயிறு 23 -- உளவியல் வல்லுநர் ரெடி; நீங்க ரெடியா?



 divya said...

I could see the face of JESUS.

 சி. கருணாகரசு said...

கார்டூனில் பேய் தெரியுதுங்க
Tunnelக்குள் போகும் காரின் பின்புறம். இரண்டு hearts on either side. Trunkலிருந்து வெளி வந்து பறந்து கொண்டிருக்கும் white robe? Just married couple?

Blogger ஹேமா said...

இருவர் கை கோர்த்த நடனம் !

அப்பாதுரை said...

ஏசு தாகூர் எல்லாம் எப்படிப் பாத்தாலும் தெரியலிங்களே..
ஏசு தெரியுதா காந்தி தெரியுதானு நானும் தினம் வந்து பார்க்கிறேன் - காரை விட்டா ஒண்ணும் தெரியலியே. இன்னிக்கு என்னவோ உருளைக்கிழங்கு தெரியுது. நாளைக்கு வந்து பார்க்கிறேன். தாகூர் தெரியுதா பாப்போம்.

Blogger அப்பாதுரை said...

பெயிந்ட் உதிர்ந்த ஆணி அடிச்ச சுவர் தெரியுது... இந்த ஏசு தாகூர் காணோமே... எங்கே தெரியுது?
பெயிந்ட் உதிர்ந்த ஆணி அடிச்ச சுவர் தெரியுது... இந்த ஏசு தாகூர் காணோமே... எங்கேயோ தெரியுதுனு சொன்னாங்களே?
(தமிழ் வாத்தியாரா இருந்தா 'மூடிக்க'னுவாரு - எங்க என்ன சொல்லுவாங்களோ?)

 ஹேமா துவாரகநாத் said...

இந்த வகை ஆய்வு உளவியலில் சகஜம் (பெரடொலியா). சித்திரங்கள், படங்கள், வாக்கியங்கள், மையைக் கொட்டிப் பரப்பிய உருக்கள் (ரொர்ஷேக் தேர்வு)... இவற்றைப் பார்த்தோ படித்தோ கருத்து சொன்னவரின் மனநிலை பற்றி அறிந்து கொள்ள முடியும் என்று உளவியல் நம்புகிறது. அப்பாதுரை, ஹேமா, divya, சி. கருணாகரசு, ... நீங்கள் சொல்வதை வைத்து உங்கள் மனநிலையைப் பற்றி சில கருத்துக்களைச் சொல்ல முடியும் - நீங்கள் விரும்பினால் :)

எங்கள் said...

வாங்க டாக்டர் வாங்க! உளவியல் உங்க ஏரியா - எங்களுக்குத் தெரிந்ததுதான்.
வாசகர்கள் படம் பார்த்து சொன்ன 'கதை' களுக்கு, நீங்க பலன் சொல்வது எங்கள் எல்லோருக்கும் மிக மிக விருப்பமானதே; பெரிதும் வரவேற்கிறோம். இந்தப் பதிவு (ஒரு வாரப்) பழைய பதிவாகிவிட்டதால், நீங்க குறிப்பிட்டிருக்கும் வாசகர்கள், இந்தப் பதிவுக்கு ரிவிசிட் செய்வார்களா என்பது சந்தேகமாக உள்ளது. எனவே உங்க கருத்தையும், எங்க வரவேற்பையும், புதிய பதிவாக போட்டுவிடுகிறோம். வாசகர்கள், தங்கள் உளவியல் கருத்துக்களை - இங்கே (வெளிப்படையாக) பெறுவதில் ஆட்சேபணை இருந்தால், தங்கள் மெயில் விலாசம் இங்கே பின்னூட்டத்தில் பதிந்துகொண்டு, உளவியல் நிபுணர் ஹேமா துவாரகாநாத் அவர்களின் உளவியல் கருத்துக்களை - தத்தம் உள்-பெட்டியில் வாங்கிக்கொள்வதாக இருந்தாலும் எங்களுக்கு ஒ கே. ( ஹே.து அவர்கள் இயன்றால் - ஒரு நகலை engalblog@gmail.com க்கு அனுப்பி எங்களையும் படத்தில் வைத்துக் கொள்ளலாம். (we mean, she can keep us also in picture !!)

15 கருத்துகள்:

  1. தாடி வைத்த பெரியவர், கிண்ணத்துல் ஸ்ட்ரா வைச்சு எதையோ உறிஞ்சுற மாதிரி இருக்கு

    பதிலளிநீக்கு
  2. எந்த ஒரு கருப்பு வெள்ளை நெகடிவ் இமேஜை உற்று பார்த்து விட்டு கண்ணை மூடினால் அதன் பிம்பம் தெரியும்.

    இது இயேசு, இதே போல் ரஜினி கமல் அனைத்தும் இணையத்தில் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  3. உங்களுக்காச்சும் தாடி தெரியுதா பாத்து சொல்லுங்கனு அனுப்பி வச்சா வண்டவாளத்தை எடுத்து விட அனுமதி கேக்கறீங்களே ஹேமா? வம்பா இருக்கும் போல? அது போறாம பிளாகுல தலைப்புச் செய்திகளாட்டம் எடுத்து வேறே போட்டிருக்காங்களே?

    பொருளங்கா உருண்டை மாதிரி ஏதோ பேர் சொன்னீங்களே.. இந்த மாதிரி தேர்வுங்கள்ளாம் சுலபமா ஏமாத்திடலாம்னு படிச்சிருக்கேன்.

    பதிலளிநீக்கு
  4. மூக்கைப் பிடித்துக் கொண்டிருக்கும் நெற்றிக்கு வைத்துக் கொண்டுள்ள நபர். இதைக் கேட்டு என்னைப் பற்றி ஏடா கூடமாக ஏதும் சொல்லக் கூடாதே என்ற கவலை தோய்ந்த முகத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. தேநீர் குடித்து முடித்த பின் கோப்பை அடியில் ஒட்டிக் கொண்டிருக்கும் தேயிலைத் துகள்கள் அமைத்துள்ள வடிவத்தை வைத்துக் கொண்டு பலன் சொல்லும் முட்டாள்தனம் மேலை நாடுகளில் பிரபலம். இந்த வகை விஷயங்களில் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். யாரும் ஏதும் செய்வதற்கில்லை. இன்னும் ஏழு நாட்களுக்கு உனக்கு முன் எச்சரிக்கை ரொம்ப தேவை என்கிற மாதிரி பொத்தாம் பொதுவாக நல்ல அறிவுரைகளை சொல்வதும் பாஸ் ஆகி விடும்.

    என் நண்பர் ஒருவர் இருக்கிறார். உங்கள் ரேகையைப் பார்த்து விட்டு " இள வயசில் யாரையோ தீவிரமா காதலிச்சீங்க. அது கை கூடவில்லை " என்பது போல் ஒரு ஜோசியம் சொல்வார். இதை நான் மறுத்தால் யாரும் நம்பப் போவது இல்லை. ஆம் என்று தலை ஆட்டினால் அவருக்கு புகழ். இது எப்படி இருக்கு!!

    பதிலளிநீக்கு
  6. ரேகை, நாடி, தேயிலை ஜோதிடத்துக்கும் உளவியலுக்கும் வேறுபாடு உண்டு. குற்ற உணர்வு, அவமானம், தீராத கோபம், ஆத்திரம், காமம் போன்ற உணர்ச்சி மீறல் உபாதைகளுக்கு தேயிலை பார்த்து மருத்துவம் சொல்ல முடியாது. உளவியல் தேர்வு பற்றி எழுதிய ஹேமாவின் (ஓசியில் டாக்டர் பட்டம் வேறு கொடுத்திருக்கிறார்கள் எங்கள் பிளாக்) கருத்தை கிளி ஜோசியத்துக்கு கொண்டு வந்துவிட்ட அனானியின் மனநிலையை உடனடியாக ஆய்ந்து சொல்ல வேண்டும் என்று முன்மொழிகிறேன் (குறிப்பாக பாய் சுரண்டப்போகிறாரா என்பதை :)

    பதிலளிநீக்கு
  7. அப்பா சொல்வது எனக்கும் சரி என்றே படுகிறது. ரேகை, தேயிலைத் தூள் ஜோசியம் இவற்றில் பலன் கேட்பவரின் ஆவல் தவிர மன நிலை பற்றி அறிய வாய்ப்பில்லை. ஆனால் ஒரு மைக் கரையோ அல்லது மேகத் திரளின் வடிவமோ, இல்லை சுவரில் காரை/வண்ணம் போனதால் தோன்றும் பிம்பங்களோ அவரவர் மன நிலைக்கு ஏற்ப மாறுபடுவதால் அவர்தம் மன நிலையைக் கணிக்க உதவியாக இருக்கும் என்றே கொள்ள வேண்டும். மொசைக் தரையில் எனக்கு எப்பொழுதும் முகங்களே தெரியும்.

    பதிலளிநீக்கு
  8. ராமலக்ஷ்மி,
    பார்க்கும் பார்வை, மனதில் தோன்றும் பிம்பம்...
    --------------------------------

    tamiludhayam,
    அடுத்த புதிய கோணம்...
    ------------------------------------

    சிங்கக்குட்டி,
    நீங்கள் சொன்ன படங்கள் கிடைக்கும் சுட்டி தர முடியுமா?
    ---------------------------------

    துரை, ராமன், அனானி, k_ ரங்கன்,
    சபாஷ்..சரியான போட்டி...
    -----------------------------------

    பதிலளிநீக்கு
  9. //ஹேமா துவாரகநாத் said...

    நீங்கள் சொல்வதை வைத்து உங்கள் மனநிலையைப் பற்றி சில கருத்துக்களைச் சொல்ல முடியும் - நீங்கள் விரும்பினால் :)
    //

    Hema, I am game.

    I consistently (and have in the past as well) see a bearded man.

    Assuming that we have pictured Jesus Christ like that in our mind over the years, I guess I see somebody like that.

    Please feel free to write to me at sai dot gopalan at gmail.com on your findings

    பதிலளிநீக்கு
  10. ஆரூடத்துக்கும் அறிவியலுக்கும் முடிச்சு போடுவது ஒன்றும் புதிதல்ல. நூறு வருடங்களுக்கு முன்னால் astrology was synomous with astronomy. அந்த வகையில் உளவியல் துறைக்கு இன்னும் நூறு வயதுகூட ஆகவில்லை. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இன்றைய உளவியலில் ஆரூடமும் கலந்திருக்கிறது என்று சொல்லலாம் - மனநிலையை வைத்து இன்னார் இன்ன செய்யக் கூடும் என்று logical extrapolation செய்தாலும், அதை தேயிலை ஜோசியம் என்று குப்பையில் தள்ளுபவருக்கும் ஒரு உரிமை உண்டு. சொல்பவர்கள் சொல்லிவிட்டு போகட்டுமே? இருந்தாலும், கொடுத்த supportக்கு நன்றி, அப்பாதுரை.

    பதிலளிநீக்கு
  11. ஹேமா துவாரகநாத்31 டிசம்பர், 2009 அன்று 9:05 PM

    திருந்தச் சொல்லியிருக்க வேண்டும். என்னுடைய தவறு தான். மனநிலை பற்றிக் கருத்து சொல்ல more data வேண்டும் சாய்ராம். எப்போதும் தாடி தெரிகிறது என்பதை வைத்து அதிகமாகச் சொல்ல முடியாது, மன்னியுங்கள். அதே போல் தாடியே தெரியவில்லை என்பதை வைத்தும் ஒரு கருத்தும் தெரிவிக்க முடியாது. we need a range of interpretations to interpret even!

    ஹேமாவின் கருத்து அதிசய insight. ஆழ்ந்த உள்நோக்கு (கற்பனை) இருப்பவர்களுக்குத் தான் இரண்டு பேர் நடனம் செய்வது தோன்றும் என்று நினைக்கிறேன்; அவர் கருத்தில் பிரமித்துப் போனேன். அவருடைய blog சென்று பார்த்தபோது மேலும் அறிந்து கொண்டேன்.

    அப்பாதுரை பலவித உருக்கள் தெரிவதாகச் சொல்லியிருந்தார். பெலுகா திமிங்கலம் சராசரிப் பார்வைக்குத் தெரியாது. ஒரு வேளை இணையத்தில் எங்கேயாவது படித்து விட்டு சொன்னாரா? அவர் சொன்ன காரை பெயர்ந்த சுவர், புது மணத்தம்பதிகள்... இவற்றையெல்லாம் வைத்து கருத்து சொல்ல நினைத்தேன். அவ்வளவு தான்.

    பொதுவாக இந்தப் படத்தில் தாடி தெரிவது தான் இயற்கை. popular opinion. அதனால் உங்களுக்குத் தாடி ஆசாமி தெரிந்ததை இயல்பு என்று தான் சொல்வேன். You are normal, Sairam :)

    தாடி ஆசாமிக்கு வருகிறேன். We are conditioned and predisposed to certain insights and imagery. தாடி என்றாலே ஏசு, தாகூர், பின்லேடன் என்று நினைப்பது இயற்கையாகி விட்டது. என் கணவர் வீட்டில் எல்லோரும் குழந்தை ஏசுவைத் தான் வணங்குகிறார்கள். இன்னொரு மதத்திலிருந்து வந்த எனக்கு முதலில் இது வியப்பாக இருந்தாலும் இப்போது பழகி விட்டது. கடவுள் மேல் வெறுப்புடன் எப்போதாவது என் கணவர் ஏதாவது சொல்லும் போது, என் கணவரின் பாட்டி சொல்வது வேடிக்கையாக இருக்கும் "குழந்தையை ஏனய்யா திட்டுறே? அது என்ன செய்யும் பாவம்". கடவுளைக் குழந்தையாகப் பாவித்து விட்டால் எதிர்பார்ப்பும் அதிகமில்லை, ஏமாற்றமும் அதிகமில்லை. இவர்களுக்கு நிச்சயம் தாடி தெரிந்தாலும் ஏசு தெரிய மாட்டார்.

    பதிலளிநீக்கு
  12. ஹேமா துவாரகநாத்31 டிசம்பர், 2009 அன்று 9:07 PM

    ஓசியில் கிடைத்த டாக்டர் பட்டத்தைத் திருப்பி விடலாமா என்று நினைத்தேன். குற்ற உண்ர்வே தோன்றவில்லை. அவனவன்/ள் மூச்சு விட்ட சாதனையை வைத்து டாக்டர் பட்டம் பெறுகிறார்கள்; நானும் தான் மூச்சு விடுகிறேன், எனக்கும் கிடைக்கட்டுமே? அதில் பாருங்கள். இன்னொரு blogல் ஏதோ எழுதப்போய் ஒரு மாதமாகப் பிடுங்கல். இதை மாற்று, அதை மாற்று, இப்படி எழுதினால் என் வாசகர்கள் ஏற்க மாட்டார்கள் (நாலு பேர்.. நாலு பேர்!) அப்படி எழுதினால் இமேஜ் போய் விடும் என்று நூறு editorial critique. கோவில் மாடு போல் தலையை ஆட்டி எல்லாவற்றையும் ஏற்று எழுதிக் கொடுத்தால் ஒரு கம்பவுன்டர் பட்டம் கூடக் கொடுக்கவில்லை. நர்சு? அட, ஒரு ஆர்டர்லி பட்டம்? ஒன்றைக்காணோம். நீங்கள் இயல்பாக ஏதோ சொன்னதை வைத்து பெரிய மனதுடன் பட்டம் கொடுத்திருக்கிறீர்கள். அது ஓசியில் கிடைத்தால் என்ன, எப்படிக் கிடைத்தால் என்ன? வைத்துக் கொள்ளப்போகிறேன். யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டு போகட்டும். எங்கள் பிளாக் வாழ்க! எங்கள் பிளாக் வாழ்க!

    அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. //Hema said:

    You are normal, Sairam :) //

    அந்த கடைசி கேரக்டர் :௦) - டென்ஷன் பண்ணுதுங்களே !!

    ஏற்கனவே பெண்டாட்டி, பிள்ளைகள் சுவத்தை விசிறு பிடித்தவன் போல் பார்க்கிறேன் என்று கொஞ்ச தள்ளியே வைத்து என்னை பார்கிறார்கள் !

    பதிலளிநீக்கு
  14. டாக்டர் (ஆமாம் - ஆமாம் - எங்களுக்கு நீங்க டாக்டர்தான்) - நான் இந்த உருவத்தைப் பார்த்துக் கொண்டேயிருந்துவிட்டு - சுவற்றைப் பார்த்தேன் - அங்கே கார்ட்டூன் கேரக்டர் டின் டின் - மோனா லிசா கெட் அப்பில் இருப்பதுபோல இருந்தது. இதற்கு பலன் எதுவும் உண்டா?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!