திங்கள், 7 டிசம்பர், 2009

கணவன் அலைவதெல்லாம்......!

நண்பி ஜெயகுமாரி சீனாவிலிருந்து அனுப்பிய 'முன்னேற்றப்பட்ட' (அதுதாங்க...Forwarded..!) மின்னஞ்சலில் இருந்தவற்றைக் கீழே தந்திருக்கிறேன். இதெல்லாம் வெளி நாட்டில்தாங்க....நம்ம ஊர்ல எல்லாம் இப்படி யாரும் சொல்ல மாட்டாங்க... ! நீங்களும் படித்திருக்கலாம்...இல்லன்னா இங்கே...இவை நகைச்சுவைக்காக மட்டும்...! (காசு சோபனா)
  • உங்கள் கணவனை ஒருவன் கடத்தி விட்டால் அவரை அவனிடமே விட்டு விடுவதுதான் உங்க சேமிப்புப் பணத்தை பாதுகாக்க சிறந்த வழி!
  • திருமணத்திற்குப் பிறகு கணவனும் மனைவியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகி விடுகின்றனர். ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியாது. நாணயத்தின் இரண்டு பக்கங்கள்: மனைவி பக்கம் பூ; கணவன் பக்கம் (வழுக்கைத்) தலை!
  • திருமணம் செய்துகொள்வதில் தவறில்லை. நல்ல கணவன் கிடைத்தால் நீ சந்தோஷமாக இருக்கலாம். இல்லை என்றால் வேறொருத்தியை சோகத்தில் விழாமல் மீட்டுவிட்டோம் என்று சந்தோஷப்படலாம்!
  • ஆண்கள்..... பெரிய விஷயங்களுக்கு நம்மை ஈர்த்தாலும் சின்ன, அல்ப விஷயங்களில் தடுக்கி விழுபவர்களும் அவர்கள்தான்..!
  • என்னால் பதிலளிக்க முடியாத பெரிய கேள்வி..."ஒரு ஆண், பெண் உதவி இல்லாமல்  எதை சாதித்திருக்கிறான்?"
  • வார்த்தைகளில் கேட்டால், பாராக்களில் பதில் சொல்வான் கணவன், மனைவி தவிர மற்றப் பெண்களுக்கு!
  • நீண்ட வருடங்களாய் பிரியாமல் இருக்கும் ரகசியம் கேட்கிறார்கள்....வாரத்துக்கு இருமுறை நானும் கணவனும், வெளியில் எங்காவது ஹோட்டலில் சென்று சாப்பிடுகிறோம்....மெழுகுவர்த்தி வெளிச்சம், ரம்மியமான இசை, மெல்லிய பேச்சுக்கள்....அவர்   சனிக்கிழமைகளில் போவார் ...நான் ஞாயிறுகளில், என் நண்பர்களுடன்!
  • நம் கணக்கில் உள்ள பணத்தை e banking ஐ விட வேகமாக அவர் கணக்குக்கு Transfer செய்யும் முறைக்குத் திருமணம் என்று பெயர்!
  • திருமணத்தில் இரண்டுமுறையும் தோற்றவள்  நான். காதலரைத் திருமணம் செய்துகொண்டவுடன் கணவனாகிவிட்டதால் காதலனை இழந்தேன். கணவனுக்கு காதலனாக இருந்த நாட்கள் நிரந்தரமாக மறந்துபோய்விட்டது அதனால் என் வாழ்க்கையில் இரண்டாவது தோல்வி!
  • திருமண வாழ்வு வெற்றி பெற இரண்டு யோசனைகள்....1) கணவர் தவறு செய்யும் ஒவ்வொரு முறையும் உங்கள் கடந்த காலத் தவறுகளை ஒவ்வொன்றாக நீங்களே மன்னித்துக்கொள்ளுங்கள்;  2) உங்கள் பக்கம் நியாயம் இருக்கும்போது நிறைய வரம் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்!
  • உங்கள் கணவரின் பிறந்த நாளை நினைவு வைத்துக் கொள்ள ஒரு வழி ....... வழி என்ன! ஒரு காரணம் கூட கிடையாது!
  • திருமணத்திற்கு முன் நான் என்ன செய்து கொண்டிருந்தேன் தெரியுமா? நான் நினைத்ததை எல்லாம்...!, என் கணவர் நினைக்காததை எல்லாம்!
  • நானும் என் கணவரும் இருபத்திரண்டு வருடங்கள் சந்தோஷமாக இருந்தோம்....பிறகு நாங்கள் மணந்துகொண்டோம்! 
  • ஒரு நல்ல கணவன் என்பவர்  எப்போதுமே அவர் மனைவியை மன்னித்து விடவேண்டும் ....அவள் அவரைத் திருத்தி மனிதனாகச் செய்யும்போதும் ....
  • தினசரியில் நல்ல கணவன் வேண்டும் என்பதற்காக விளம்பரம் செய்தவள் மறுநாளே சில நூறு கடிதங்கள் வரப் பெற்றாள் ...எல்லாவற்றிலும் ஒரே வரி..."அப்படி நிஜமாகவே ஏதானும் இருந்தால் எங்களுக்கும் சொல்லு"
  • அவள்: "என் கணவன் பக்கா ஜென்டில்மேன் ...ரொம்ப அடக்கமானவர்" இவள்: "நீ கொடுத்து வைத்தவள் ...என் கணவன் இன்னும் உயிருடன் இருக்கிறார்." 
  • (ஆஹா பழிக்குப் பழி!  ஸ்ரீராம் - இப்ப என்ன செய்வீங்க, இப்ப என்ன செய்வீங்க!)

16 கருத்துகள்:

  1. KGG சார் - மனைவி அமைவதெல்லாம் - போஸ்ட் பின்னூட்டத்தில் உங்க மனைவி எங்கள் பிளாக் படிப்பதில்லை என்று சொல்லியிருந்தீர்களே, நீங்களே இப்போ அந்த போஸ்டையும், இந்த போஸ்டையும் படிச்சுக் காட்டுங்க! அவங்க சந்தோஷப்படுவாங்க!

    பதிலளிநீக்கு
  2. நன்றி நன்றி இதை அனுப்பினவங்களுக்கும் பதிவில போட்டவங்களுக்கும்.அண்ணைக்கு வந்து என்ன சொல்றதுன்னே தெரியாம முழிச்சுக்கிட்டுப் போனேன்.பழிக்குப் பழி.இப்ப சொல்லுங்க பாக்கலாம்.இதுதான் சொல்றது குடுத்து வாங்கிகிறதுன்னு !எப்பிடி !

    பதிலளிநீக்கு
  3. ஹேமா - சோபனா - உங்களுக்கு நன்றி தெரிவிச்சிக்கறதா - ஒரு எஸ் எம் எஸ் அனுப்பியிருக்காங்க

    பதிலளிநீக்கு
  4. ரோஸ்விக் சார்,
    அட - அங்கே ஓடுவது யாரோ?
    அது ஸ்ரீராம் சாரோ? !!

    பதிலளிநீக்கு
  5. ஸ்ரீராம், 'எங்கள்' விட்டு எங்க ஓட முடியும், உங்களால!

    நன்றி ஷோபனா, கலக்கிடீங்க!

    பதிலளிநீக்கு
  6. நன்றி ஷோபனா.

    என்ன ஸ்ரீராம் இதுக்கெல்லாமா ஓடுவாங்க.நின்னு எதிர்த்துத் தாக்கணும்.

    பதிலளிநீக்கு
  7. சோபனா - stand up on the bench - for an hour! எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, முதல் போஸ்டை எழுதியதும் நீதான், இந்த இரண்டாவது போஸ்டுக்காக அதை ஒரு 'பில்ட்அப்' ஆக யூஸ் செய்துகொண்டிருக்கிறாய் என்றும் தெரிகிறது. ஸ்ரீராம் லீவுல போயிருக்கும்போழுது அவர் பெயரை சந்திக்கு இழுத்து, அவர் நற்பெயருக்கு களங்கம் கற்பித்திருக்கிறாய் என்றும் தெரிகிறது. (அடிக்கடி இப்படி ஏதாவது செய் - உனக்கு ஒரு ரசிகர் மன்றம் உருவாகி வருகிறது!!)

    பதிலளிநீக்கு
  8. இப்ப கல்யாணம் பண்ணிக்கவா இல்ல இப்படியே இருந்திரலாமா....இப்பெல்லாம் பொண்ணுகள பாத்தாலே .......நானு எட்டு தள்ளி போகலாமான்னு தான் தோணுது.(தள்ளிட்டு போக நினைச்சதெல்லாம் ஒரு காலம்....)

    பதிலளிநீக்கு
  9. சற்றுமுன் கிடைத்த தகவலின்படி, ஸ்ரீராம், 'பெண்களை நம்பாதே' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை தயாரித்துக் கொண்டிருப்பதாகவும், அதில் மணிக்கொருமுறை காரம் சேர்த்துக் கொண்டிருப்பதாகவும் செய்தி வந்துள்ளது. அவர் அதை எங்கள் பிளாகில் வெளியிடுகிறாரா அல்லது சோபனாவிற்கு மெயிலாக அனுப்பி வைப்பாரா - என்று தெரியவில்லை !! ஓம் நமோ மணிக்குமாராய நமஹா!!

    பதிலளிநீக்கு
  10. Kasbaby!
    Your blog shows your age as 29. This is the right time to get married. Get married soon!

    பதிலளிநீக்கு
  11. ஏனுங்க இந்தியால மனைவிகளை பத்திதானே மெயில் எங்களுக்கெல்லாம் வந்துச்சு? நீங்க உல்டாவா? இல்ல வேற யாராவதா?

    பதிலளிநீக்கு
  12. அண்ணாமலையார் - இந்தப் பதிவிற்கு இரண்டு பதிவுகள் கீழே - 'மனைவி அமைவதெல்லாம்' பதிவைப் படிக்கவும்.

    பதிலளிநீக்கு
  13. குடிப்பதும் புகைப்பதும் சூதாடுவதும் பரத்தையர் நட்பும் ஆண்களுக்கு மட்டும் என்று சமுதாயக் கட்டுப் பாடு உள்ளவரை கணவர்களைக் காட்டிலும் மனைவியர் பக்கமே நியாயங்கள் அதிகம் இருக்கும். பல விஷயங்களில் மகளிர் சரியான ஈடுபாடு காட்டாததால் அவர்கள் பெற வேண்டிய பெருமைகளை இழக்கிறார்கள் என்று நான் எண்ணுகிறேன். மேலும் கவர்ச்சி உடை அதிக அலங்காரம் என்று அவர்கள் செய்துகொள்வது ஒருமாதிரியான தோல்வி மனப்பான்மையின் வெளிப்பாடு என்று எண்ணுகிறேன். வீசப்படும் கற்களிலிருந்து தப்ப அனாமதேயமாக இதைச் சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!