வியாழன், 24 டிசம்பர், 2009

பெயரிலா...

பழைய எழுத்தாளர் அவர். விகடன், குமுதம், ராணி, தேன்கூடு போன்ற பத்திரிகைகளில் அவர் எழுதி உள்ளவை வெளி வந்துள்ளது. கம்ப்யூட்டர் பழக்கம் இல்லாதவர்.அவரிடம் நெட்டில் எழுதுவது பற்றி பேசிக் கொண்டிருந்த போது ஆர்வமாகக் கேட்டறிந்தார். நீங்களும் எழுதுங்களேன் என்று கேட்டபோது நிறையத் தயங்கியவர் இப்போது சில எழுதி அனுப்பி உள்ளார். அவர் பெயர் சொல்ல வேண்டாம் பெயர் இல்லாமலேயே வெளியாகட்டும் என்று சொல்லிவிட்டதால் பெயர் சொல்லவில்லை. இந்த Intro கூடக் கொடுக்க வேண்டாம் என்று சொல்லி இருந்தார். இனி அவர்....

"நீ சொல்லும் நெட் பிரதாபங்களைப் பார்த்து எனக்கும் அதற்கு எழுதி அனுப்பும் ஆசை வந்து விட்டது. ஆனால் எழுதுவதுதான் மகா அலுப்பான சமாச்சாரம். இதில் ஒரு 'Guilty" மனப்பான்மை கூட. நிறையப் படிக்கிறேன்...என்னிடம் பொழுதுபோக்குக்கான மின் கருவிகள் - ஒரு ரேடியோ கூட - இல்லாததால் வாசிப்பு என்பது தவிர்க்க முடியாத கட்டாயமாக உள்ளது. என்ன Guilty...? படிப்பது பலவற்றை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அது இல்லாமல் நான் மட்டும் படித்தால் போதாது என்பதே..இதைச் சாதிக்க ஒரே வழி எழுதி அங்கே அனுப்பி விடுவதுதான்...உனக்குதான் Typing அதிகமாகும்...நீ மறுக்காதவரை அனுப்புகிறேன்..இதில் நான் அனுசரிக்க முயல்வது குட்டை குட்டையான வாக்கியங்கள்...பப்ளிக் இண்டரெஸ்ட் உள்ளவை மட்டும்...


இவற்றிற்கு வரும் reaction களை எனக்குத் தெரிவி...இதைத் தொடர்ந்து கவனிக்க - படிக்க - அறிய - ஆர்வம் எதிர் முனையில் இருந்தால் விட்டு விட்டு தொடர்கிறேன்... ஆரம்பமாக இத்துடன் எனக்குப் பிடித்த விவேகானந்தர் கவிதையை ஆங்கிலத்தில் அனுப்பி உள்ளேன்...எனக்குப் பிடித்த வகையில் தமிழிலும் எழுதிப் பார்த்துள்ளேன்..."

எனவே அவர் எழுதுபவற்றை அவ்வப்போது இங்கு தர உத்தேசம்

10 கருத்துகள்:

  1. இதோ கீரிக்கும் பாம்புக்கும் சண்டை விடப்போகிறேன், விட்டு விட்டேன் என்று சொல்லிக் கொண்டே இருப்பார் மெரீனாவில் மோடி மஸ்தான் - ஆனால் காத்திருந்து கால் கடுத்து கண் பூத்து நாம் அவ்விடம் விட்டு நகரும் போது "ஐயோ என் பர்ஸ்!" நீங்களும் தான், இதோ என்கிறீர்கள், அதோ என்கிறீர்கள்..... ஆனால்...

    பதிலளிநீக்கு
  2. வரவேற்கிறோம். யாராகவே இருந்தாலும் பெயருடனே எழுதிடுவதில் என்ன சங்கடம்?

    பதிலளிநீக்கு
  3. ரங்கன்ஜி.....
    இதோ போட்டு விட்டோம்...

    நன்றி ராமலக்ஷ்மி,
    ஏனோ அவர் பெயர் சொல்வதை விரும்பவில்லை. சமீபத்தில் அவர் எழுதுவதில்லை என்பது காரணமாக இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  4. பெயர் சொல்ல விரும்பாதது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. சில விஷயங்கள் பெயர் சொல்லி பிரசுரித்தால் சில பலர் மனம் புண் படுவார்கள். அது ஒன்றே போதும் புனை பெயர் அல்லது பெயர் மறைத்து எழுதுவதற்கு.

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துகளும் வணக்கமும்.
    நிறைய எழுதுங்க.

    பதிலளிநீக்கு
  6. எழுதுங்க, எழுதுங்க, எழுதிக்கிட்டே இருங்க!
    அமுத சுரபியாய்,
    ஆனந்தவிகடனாய்,
    இலக்கிய ரசிகனாய்,
    ஈங்கே,
    உங்கள் சிந்தனைகளை,
    ஊக்கமாகப் படிக்கிறோம்.
    எங்கள் பிளாக் ரசிகர் மன்றம்.

    பதிலளிநீக்கு
  7. கேட்டுக் கொண்டதுமே பெயரினை தந்தமைக்கு நன்றிகள். உங்கள் வலைப்பூ மூலமாக அவர் எழுதுவதைத் தொடர்வது மகிழ்வுக்குரிய விஷயம். வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

    பதிலளிநீக்கு
  8. //அவர் பெயர் சொல்ல வேண்டாம் பெயர் இல்லாமலேயே வெளியாகட்டும் என்று சொல்லிவிட்டதால் பெயர் சொல்லவில்லை.//

    நமக்குப் போட்டியா இன்னொருத்தர் கிளம்பிட்டாருப்பா..........

    பதிலளிநீக்கு
  9. தேன்கூடு என்று ஒரு பத்திரிக்கையா? நஞ்சன்கூடு என்று ஒரு பல்பொடி கேள்விப்பட்டிருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  10. தேனீ,
    தேன்கூடு என்பது அந்தக் கால சினிமா பத்திரிகை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!