ஞாயிறு, 27 டிசம்பர், 2009

இன்ஸ்டன்ட் பூஜை





நேற்று காலையில் மாமா ஒரு கையில் காபியும் இன்னொரு கையில் பேப்பருமாக கையை ஆட்டி ஆட்டி என்னவோ சொல்லிக் கொண்டிருந்த பொழுது, அவர் கையில் இருந்த பேப்பரைப் படித்தவன் குழப்பத்தில் ஆழ்ந்தேன்.  "கண நேரத்தில் பூஜை"  என்று போட்டிருந்தது.  தினமலர் - ஆன்மிக மலர் தான் சாதாரணமாக சனிக் கிழமைகளில் அவர் விரும்பிப் படிப்பார்.  ஒரு முறை அது நம் வீட்டில் வழக்கமாக வாங்கும் தினசரி தானே என்று பார்த்தேன்.  சரி தான்.  சரி, திடீர் காப்பி, திடீர் டீ, கண நேர இடியாப்பம் வரிசையின் தாக்கம் இப்படி பக்தி மார்கத்திலும் புகுந்ததோ என்று பேப்பரை வாங்கிப் பார்த்தேன் - பார்த்தவன் சிரித்தேன். நீங்களும் தான் பாருங்களேன்:

10 கருத்துகள்:

  1. கிளிக்கிப் பார்த்தேன் ஒன்றும் விளங்கவில்லை.

    பதிலளிநீக்கு
  2. ஒரு கதாகாலஷேபத்தில் கேட்டது. வாயு வேகம் மனோவேக்ம் போல் சந்த்யாவந்தன வேகம் என்று ஒன்று உண்டு . உங்கள் பையனை சந்த்யா வந்தனம் பண்ண சொல்லுங்கள்.எவ்வளவு சீக்கிரத்தில் பண்ணிவிடுகிறான் என்றார் !

    பதிலளிநீக்கு
  3. குறைவான நேரமே இருக்க முடியுற கோவிலா இருக்குமோ?

    புரியல

    பதிலளிநீக்கு
  4. விரலை மூடி விசயத்தை மறைக்கிற வித்தை எங்களுக்குத் தெரிஞ்சு போச்சு.

    பதிலளிநீக்கு
  5. சரியாகச் சொன்னீர்கள் துரை! உங்களுக்கு நூற்றுக்கு நூறு கொடுக்கலாம்

    பதிலளிநீக்கு
  6. துரை,
    ஆரம்பிச்ச நீங்களே புதிரை அவிழ்த்து முடித்து விட்டீர்கள்...
    -------------------

    ranganNGT,
    நல்ல கிண்டல்...
    ---------------------------

    கடைக்குட்டி,
    துரை கீழ பிரிச்சி மேஞ்சிட்டார் பாருங்க...
    --------------------------
    வசந்த்,
    கன'க்கு பின்னாடி சேர்க்காம முன்னாடி கிர சேர்த்தால் தெரியும்...
    -------------------------

    பதிலளிநீக்கு
  7. பூமியால் சந்திரனுக்கு கிரஹணம் - விரலால் கிரகணத்துக்கு கிரகணம்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!