செவ்வாய், 22 டிசம்பர், 2009

வேட்டையாடு விளையாடு...

இரவு பத்தரையை நெருங்கிக் கொண்டிருந்தது.... பாடம் படித்துக் கொண்டிருந்தவன் ஏதோ அசைவை உணர்ந்து 'சட்'டெனத் திரும்பினான்...ஒன்றும் இல்லை என்று தோன்றியது...திரும்பப் புத்தகத்தைப் புரட்டத் திரும்பியவன் மறுபடி உடனே கவனம் கலைந்தான்....

இருக்கிறது...ஏதோ அசைவு தெரிகிறது....வெளிச்சத்திலிருந்து இருட்டைப் பார்ப்பது கஷ்டம்....கண்ணைப் பழக்கப் படுத்திக் கொண்டு பார்க்கும்போது இருட்டில் மின்னிய இரு கண்கள்.....

எழுந்து விட்டான்...

"அப்பா...அப்பா..." அதிக சத்தமில்லாமல் அலறினான்....சின்னவன் பயம் கலந்த ஆர்வத்துடன் பக்கத்தில் வந்து ஒண்டினான்.

அப்பாவும் அருகில் வந்து அதைப் பார்த்து விட, இப்போது அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஒரு மௌனப் புரிதலில் அரங்கேறத் தொடங்கின...

அடுத்திருந்த அறைக் கதவுகள் அடைக்கப் பட்டன. அதற்குள் மின்னிய கண்களைக் காணமல் தேடினால் ...அதோ.....சோஃபா பின்னால்....சட்டென மறைந்தது.

அதிகம் யோசிக்க நேரமில்லை...

அசைவு அதிகம் காட்டாமல் அப்பா மெல்ல அங்கிருந்த தண்ணீர்க் கேன்களை வரிசையாக இடைவெளி இல்லாமல் அமைத்தார். ஓரளவு இருந்த இடைவெளியில் கேஸ் சிலிண்டர் வைக்கப் பட்டது..

இளையவன் அங்கிருந்த கிரிக்கெட் ஸ்டம்பை கொண்டுவந்து கொடுத்தான். அம்மாவும், பெரியவனும் கட்டில் மேல் உட்கார்ந்து கால் கீழே படாமல் உஷாரானார்கள்.

மீண்டும் தேடினால் பழைய இடத்தில் காணோம். சுற்றுமுற்றும் தேடிய போது டிவிக்குப் பின்னே வால்பாகம் தெரிந்தது. அந்த ஏரியாவை ஒரு ஆட்டு ஆட்டிய உடன் அது நகர்ந்த வேகம் கண்டு அம்மா, பாட்டி, இவன் எல்லோரும் அலற...அப்பா ஒரு கடும் பார்வையால் அவர்களை அடக்கினார். "சத்தம் அதுக்கு கேக்குமாப்பா..." இளையவன். அப்பா பேசும் நிலையில் இல்லை.

இரவு இதை இப்படியே விட்டு விட்டுத் தூங்க முடியுமா என்ன? எங்காவது போய் ஒளிந்து கொண்டால் தேடிக் கண்டுபிடிப்பது கஷ்டம்...கொல்ல முடியுமா என்று தெரியவில்லை....

இப்போது குச்சியால் தட்டிய வேகத்தில் அது வெளியே ஓடிவந்தது...புகுவதற்கு இடமில்லாமல் அப்பாவினால் அமைக்கப் பட்ட வழியில் ஓடி, எதிர்பாராத் திருப்பமாக ஹால் கட்டிலின் கீழே உள்ள அடைசலில் காணாமல் போக...திரும்பவும் ஒரு அவசர வியூகம் போர்க்கால அடிப்படையில் அமைக்கப்பட்டது...நேரம் அதிகமில்லை...

கட்டிலின் திறந்தபக்கம் இளையவனை தைரியப் படுத்தி ஒரு குச்சியுடன் 'சேரி'ல் நிற்கவைத்து இந்தப் பக்கம் அது நகராதிருக்கும்படி 'டர்...டர்..' எனச் சத்தம் ஏற்படுத்தி எதிர் திசையில் தூண்டிவிடச் சொல்லி விட்டு, அவசர அவசரமாக தண்ணீர்க் கேன்களை மறுபடி கட்டிலின் தலை மாட்டில் வரிசையாக அமைத்து கொஞ்சம் இருந்த இடைவெளியை சற்றே தயக்கத்துடன் ப்ரிண்டரினால் மூடி, முதலமைச்சருக்கு ஏற்பாடு செய்யப் பட்ட கான்வாய் பாதை போல வாசல் கதவுக்கு வழி ஏற்படுத்தி விட்டு இளையவனுக்கு சைகை காட்டினார் அப்பா.

"அப்பா.. ஸ்டம்ப் கைல இருக்கு இல்லே..அடிச்சுக் கொல்ல முடியாதா..."பயத்துடன் இளையவன் நழுவ முயற்சி...

"முண்டம்...அடிவாங்கிட்டு சாகாம மேல பாய்ந்துட்டா...உள்ளே ஓடிட்டா...டைம் இல்லே சீக்கிரம்...."அடிக்குரலில் அப்பா உறுமினார். பையன் குச்சியால் கீறி முயசிக்கத் தொடங்கினான்...

அம்மா கட்டிலின் இந்த முனையை எட்டிப் பார்த்துகொண்டிருந்து விட்டு உதட்டைப் பிதுக்கி கொண்டிருந்தவள் திடீர் என மெல்லிய குரலில் கத்தினாள்..."இதோ...இதோ..முகம் தெரியுது....இன்னும் தட்டு..." என்றவள்

"அதோ...அதோ..." என்று கிரீச்சிட்டாள்

இந்த சத்தங்களாலும் தொடர்ந்த குச்சித் தொல்லைகளாலும் பீதியடைந்த அந்த பெரிய எலி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, வெளியேவந்த வேகத்தில் நின்றிருந்த பெரியவன் கால்களைத் தூக்கி நடனமாடுவது போல இங்கும் அங்கும் தாவ, யார் யாரைத் துரத்துகிறார்கள் என்று குழம்பும் அளவு முன்பின்னாக ஓடி, நாங்கள் அமைத்த பாதை வழியே கதவை அடைந்து படியிறங்கி ஓடி மறைந்தது....

அப்பாடா...இனி நிம்மதியாகப் படுக்கலாம்....மணி பதினொன்றரையை நெருங்கிக் கொண்டிருந்தபோது படுக்கப் போனோம்.

30 கருத்துகள்:

  1. புலியைப் பிடிக்கத் தான் முடியவில்லை! எலியையாவது விரட்ட முடிந்ததே!

    நிம்மதியாகத் தூங்க முடிஞ்சதா?

    பதிலளிநீக்கு
  2. பாம்பாக இருந்தால் என்ன எலியாக இருந்தால் என்ன? பயம் பயம்தானே:))?

    பதிலளிநீக்கு
  3. Reminds me of my 2 stories

    Paya-ni and Kannukku Kulamaedhu.

    Should be in poothoorigai.blogspot.com as short stories

    பதிலளிநீக்கு
  4. கிகிகிகி

    இதப்படிச்சதும் எங்க வீட்ல எலியப்பிடிக்க எங்கப்பா நானு எங்கம்மா பண்ணுன அட்டகாசம் சட்டுனு வந்துடுச்சு...

    :))))))

    பதிலளிநீக்கு
  5. அப்போ, என் வீட்டுக்காரரை துரத்தியது நீங்கள்தானா? அவர் மட்டும் நாளை இரவுக்குள் வீடு திரும்பாமலிருக்கட்டும் - அப்புறம் ..

    பதிலளிநீக்கு
  6. நான் கூட பாம்புன்னு நெனைச்சிட்டேன்..

    பதிலளிநீக்கு
  7. கிருஷ் சார்,
    இன்னும் எத்தனை எலிகள் உள்ளே இருக்கோ என்று பயத்துடனேதான் தூங்க முடிஞ்சுது...!

    ராமலஷ்மி மேடம்,

    இருட்டுல சணலையே பாம்பாக எண்ணி கூட பயந்ததுண்டு...நாங்க கொஞ்சம் பயந்த சுபாவம்...!

    சாய் சார்,

    பூத்தூரிகை சென்று பார்க்கிறோம்...

    அனானி எலி அண்ணி,

    மன்னிச்சுக்குங்க....அவர் சின்ன வீட்டுக்கு ஓடிட்டார் போல....

    அப்பாதுரை சார்,

    சரி...!

    தியா,

    இந்த ஒரு வார்த்தை பல இடங்களில் விளையாடி உள்ளது...! ஆகா. அருமை...

    நன்றி வானம்பாடிகள்...

    பதிலளிநீக்கு
  8. Here you go

    அவசர நச்கதை (1) - கண்ணுக்கு குலமேது?

    http://poothoorigai.blogspot.com/2008/03/blog-post.html

    அவசர நச்கதை (2) - பய-ணி

    http://poothoorigai.blogspot.com/2008/04/blog-post.html

    பதிலளிநீக்கு
  9. என்னவோ ஏதோன்னு பயந்தே போய்ட்டேன்.தனியா இருக்கிற என்னை இப்பிடியா பயமுறுத்துறது ஸ்ரீராம்.

    எங்க வீட்ல ஒரு நாள் இப்பிடித்தான் எலி அட்டகாசம்.கலைச்சு களைச்சு முடியாம போய் என் தம்பி சொல்லிட்டான்"அது பிள்ளையார் சாமி.அவரை அடிக்கக் கூடாது"ன்னு !

    பதிலளிநீக்கு
  10. "அது பிள்ளையார் சாமி.அவரை அடிக்கக் கூடாது"
    hilarious!

    பதிலளிநீக்கு
  11. ஹேமா, உங்க தம்பிகிட்ட சொல்லுங்க, எலி அவர்கள் பிள்ளையார் சாமி இல்லை, மூஞ்சூர்தான் பிள்ளையார் சாமின்னு. கஷ்டமே படாம எலியை, சுலபமா எலிபொறி வெச்சு பிடிச்சு, எதாவது மைதானத்துல கொண்டு போய் விட்டுடலாம். எதுக்குங்க அனாவசியமா அதை அடிக்கணும்?

    பதிலளிநீக்கு
  12. நாட்டுக்குள்ளேயும் இந்த மாதிரி எலிகள் நிறைய உள்ளது. அதை எப்படி ஒழிப்பதுனுதான் தெரியல.

    பதிலளிநீக்கு
  13. சாய்,
    பார்த்து விடுகிறோம்..

    ஹேமா,
    பிள்ளையார் எறும்பு, பிள்ளையார் எலி, யானை என்று சேர்த்துக் கொண்டே போனால் என்னாவது...!மீனாக்ஷி மேடம் சொல்றது சரி...

    நன்றி துரை சார்...

    சரியாச் சொன்னீங்க மீனாக்ஷி மேடம்,
    உங்க கருத்துல பாதுகாப்பும் தெரியுது..கருணையும் தெரியுது...

    ஆதி,
    உண்மையான கவலை...எப்பவும் நாட்டைப் பற்றியே நினைக்கறீங்க..

    பதிலளிநீக்கு
  14. என்னங்க இது, திரும்ப மேடம்னு ஆரம்பிச்சுடீங்க!

    பதிலளிநீக்கு
  15. மீனாக்ஷி,
    உங்கள் கருணைக்கு எங்கள் மரியாதை என்று வைத்துக் கொள்ளுங்களேன்....!

    சாய்,
    அண்ணா நகர் காதல் கதை படித்தேன்...கழுத்தில் பிடிபடும் வரி வரை உணர முடியவில்லை. நன்றாக இருந்தது.
    இரண்டாவது சுட்டி திறக்கவில்லை.

    பதிலளிநீக்கு
  16. ஓ... கதையெல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டீங்க! தொடரட்டும், நல்லா இருக்கு...

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  17. Check whether this works from my blog.

    Though Arasan and Appadurai gave an apt name in பய-ணி in Poothorigai Blog.

    http://tamizhkirukkan.blogspot.com/2008/03/blog-post_9575.html

    பதிலளிநீக்கு
  18. சரவணன் ! இது என்ன - எழுபத்தைந்து நாட்கள் பழைய பதிவுக்கு எல்லாம் வந்து கமெண்ட் போட்டு - எங்களைக் குழப்புகிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  19. Hi there, I public in the air your blog via Google while searching in the performance of earliest prod since a callousness catch in fracas and your execution looks plumb intriguing after me

    பதிலளிநீக்கு
  20. // Anonymous said...
    Hi there, I public in the air your blog via Google while searching in the performance of earliest prod since a callousness catch in fracas and your execution looks plumb intriguing after me//

    சுருக்கமா சொல்லுங்க எங்களைப் புகழ்ந்திருக்கின்றீர்களா அல்லது ஆங்கிலத்தில் திட்டி இருக்கின்றீர்களா? அது தெரிகின்றவரையிலும் நாங்க ஒன்னும் சொல்வதற்கில்லை!

    பதிலளிநீக்கு
  21. எழுபத்தைந்து நாட்கள் பழைய பதிவுக்குப் போட்டதுக்கே குழப்பமா? ஹிஹிஹி, நாங்க 3 வருஷத்துப் பழசுக்குப் போடறோமே!

    எங்க வீட்டிலே எலி அடிச்ச லூட்டியெல்லாம் சொன்னால் அசந்துடுவீங்க. மூஞ்சுறு கடிச்ச அனுபவம் உண்டா? எனக்கு உண்டு! :)))))

    எலி ஒண்ணை மூணு நாள் முன்னாடித் தான் பிடிச்சுப் பத்திரமாக் கொண்டு விட்டோம். இன்னொண்ணு நானும் இருக்கேனேனு என்னைக் கேலி செய்துட்டு இருக்கு! கூடவே சமைப்பேன்னு பிடிவாதம். அதை எப்படியாவது இன்னிக்கு விரட்டணும்.

    தூக்கம்?? அதெல்லாம் நல்லாவே தூங்குவோம். பொறியை வைச்சுட்டு வந்தா நாம பாட்டுக்குத் தூங்கலாம். எலியும் பொறிக்குள்ளே நிம்மதியாத் தூங்கும். :)))))))

    பதிலளிநீக்கு
  22. ஓஹோ, முன்னாடி கமெண்ட் மாடரேஷன் இருந்ததா? இதுக்குப் பதில் கொடுத்தீங்கன்னா எப்படித் தெரிஞ்சுக்கப் போறேனோ தெரியலை. கூகிளில் எலினு போட்டதிலே இது வந்தது படிச்சேன். :)))) நாளைக்கும் வருமா தெரியலை!

    பதிலளிநீக்கு
  23. எங்கள் ப்ளாக்26 மார்ச், 2012 அன்று 7:10 PM

    பதிவு தேதிக்கு, பதினான்கு நாட்கள் கழித்து இடப்படும் கருத்துரைகள், மாடரேட் செய்யப்படும் வகையில், ப்ளோகர் செட்டிங் வைத்துள்ளோம்.

    பதிலளிநீக்கு
  24. எங்கள் ப்ளாக்26 மார்ச், 2012 அன்று 8:37 PM

    கீதா மாமி எலிப்பொறி பற்றி நீங்க எழுதியதும், எங்களுக்கு நினைவுக்கு வந்த மற்றொரு எலிப்பதிவு இது. (எச்சரிக்கை: இளகிய மனம் படைத்தவர்கள் இதைப் படிக்காதீர்கள்.

    பதிலளிநீக்கு
  25. ம்ம்ம்ம்ம் ஒருவழியா எலி தயவிலே தேடிக் கண்டு பிடிச்சு வந்துட்டேன். இன்னிக்கும் ஒரு எலியைப் பிடிச்சிருக்கோம். முடிஞ்சா படம் எடுக்கறேன். :D

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!