சனி, 13 நவம்பர், 2010

படமும், விளக்கமும்!


ஞாயிறு எழுபது பதிவில் வெளியிடப்பட்ட படம் குருவிக் குஞ்சுகள் என்று பலர் சரியாகக் கண்டுபிடித்துவிட்டனர்.



வலையாபதி அனுப்பியிருந்த விளக்கங்கள் இங்கே கொடுத்திருக்கின்றோம்: 

* முட்டையுடைத்து வெளி வந்து, குட்டை நடை பயிலும் நான்கு குருவிக் குஞ்சுகளைப் படத்தில் பார்க்கின்றீர்கள்.

* ஆச்சரியகரமான விஷயம் என்ன என்றால், இந்த குருவிக் குஞ்சுகளின் கூடு இருந்த இடத்தை சுற்றிலும் (அரைக் கிலோ மீட்டர் ஆரக்கால் கொண்ட வட்டம் வரைந்தால்) அந்த வட்டத்திற்குள் எட்டு அலை பேசி கோபுரங்களாவது இருக்கின்றன. செல் ஃபோன் டவர்களால், ஸ்பாரோக்களின் ப்ரைவசி போய்விட்டது என்று நீங்களும் சாய்ராமும் கொஞ்ச நாள் முன்னாடி கும்மி அடித்தீர்களே, அதனால்தான் இந்த தகவல்! 

* ஆனால், குருவிகள் கூடு கட்ட, குடும்பம் நடத்த நாம் இன்னும் அதிக இடம் கொடுத்தல், வசதி செய்து கொடுத்தல், முக்கியம்தான். 

* எங்கள் வீட்டிற்கு தினமும் வந்து அதன் மொழியில் பல செய்திகளை சொல்லுகின்ற குருவிகளுக்கு, 'காக்கை குருவி எங்கள் ஜாதி' என்று பாடிய 'சுப்பிரமணிய பாரதி' போன்று, தானியமும், தண்ணீரும் அளித்து வருகின்றோம்! 

 (படத்தில் உள்ள குருவிக் குஞ்சுகள், நடை பயிலுவது, எந்த இலையில் என்று யாராவது கண்டு பிடித்து சொல்வீர்களா?)  
            

6 கருத்துகள்:

  1. பரிதாபம்.ஈழத்தில் எங்களின் நிலையும் இதுதான் !

    தேக்கிலையா அது ?

    பதிலளிநீக்கு
  2. விளக்கத்துக்கு நன்றி.

    //குருவிக் குஞ்சுகள், நடை பயிலுவது, எந்த இலையில் என்று யாராவது கண்டு பிடித்து சொல்வீர்களா//

    தவளைக் குஞ்சு என தப்பாகச் சொன்ன நான் ஆட்டத்துக்கு வரலை:))! யாராவது சொல்லுங்க!!

    பதிலளிநீக்கு
  3. * எங்கள் வீட்டிற்கு தினமும் வந்து அதன் மொழியில் பல செய்திகளை சொல்லுகின்ற குருவிகளுக்கு, தானியமும், தண்ணீரும் அளித்து வருகின்றோம்! '////

    நாங்களும் இனி செய்கிறோம்.

    பதிலளிநீக்கு
  4. விளக்கத்திற்கு மகிழ்ச்சி. அது என்ன அரச இலையா?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!