1) தன்னுடைய துறையில், தெற்கே நடந்த ஒரு விபத்திற்குப் பொறுப்பேற்று ராஜினாமா செய்துவிட்டு, வீட்டுக்கு நடந்தே வந்தவர்.
2) கட்சிப் பணி ஆற்றுவதற்காக சிலர் பதவி விலகவேண்டும் என்று கூறி, முன் உதாரணமாக, தான் வகித்து வந்த பதவியைத் துறந்தவர்.
3) பதவியில் இருந்த நாட்களில், தன் வீட்டிற்கு அளிக்கப் பட்ட மேசை நாற்காலி இன்னபிற பொருட்கள் தேவையில்லை என்று நிராகரித்தவர்.
4) ஏழை மாணவர்கள் படிப்பிற்காக, தன் சொத்து முழுவதையும் எழுதி வைத்தவர்.
5) தன் பெயரிலோ, உற்றார், உறவினர், சந்ததியினர் பெயரிலோ, எந்த சொத்தும் இல்லாதவராக இருந்து, மறைந்தவர்.
லால் பகதூர் சாஸ்திரி
பதிலளிநீக்குலால் பகதூர் சாஸ்திரி
பதிலளிநீக்குஇவரும் ஒரு காங்கிரஸ் காரர்தான் அப்படிங்கறது பெரிய ஆச்சர்யம். இப்படியும் அரசியல்வாதிகள் இருந்திருக்கிறார்கள்.
second person Kamaraj?
பதிலளிநீக்குராசா ராஜினாமா சமயத்துல, இத ஏன் ஞாபகப்படுத்துறிங்க.
பதிலளிநீக்குஇரண்டாவது , காமராஜ்
பதிலளிநீக்குஐந்தாவது கக்கன்
தலைப்பை பார்த்தவுடன், பைரவி ராகம் நினைவில் வந்தது.. ஆவலோடு ஓடோடி வந்தேன்.. கடைசியில் இன்றைய தலைமுறைக்கு தெரியாத ஒரு விஷயத்தை பற்றி சொல்லியதை காண முடிந்தது.... இன்றைய சூழ்நினையில் அன்னாரைப் போன்றோரை நினைவில் கொள்வது கண்டிப்பாகத் தேவையான ஒன்று தான்.
பதிலளிநீக்கு1. லால் பகதூர் சாஸ்திரி (அரியலூர் ரயில் விபத்து)
பதிலளிநீக்கு2. காமராஜர் (K Plan)
3. காமராஜர்(?)
4. பச்சையப்பர் (பச்சையப்பன் கல்லூரி)
5. கக்கன்.
இன்றைய தேதியில் அவர்களுக்கு ஒரே பெயர் தான் "பிழைக்கத் தெரியாதவர்"
பதிலளிநீக்கு:(
//Madhavan Srinivasagopalan said...
பதிலளிநீக்குகடைசியில் இன்றைய தலைமுறைக்கு தெரியாத ஒரு விஷயத்தை பற்றி சொல்லியதை //
Class Madhavan
//பெயர் சொல்ல விருப்பமில்லை said... இன்றைய தேதியில் அவர்களுக்கு ஒரே பெயர் தான் "பிழைக்கத் தெரியாதவர்" //
பதிலளிநீக்குஅதுனால தாங்க நான் அரசியில் வரவேண்டாம் என்று முடிவு எடுத்துவிட்டேன். நிறைய செய்ய ஆசை, விடுவார்களா !!
இங்கே ஒரு கோவிலில் சுப்ரமணிய சாமி அவர்களை சந்தித்து அவரின் தில் பற்றி பேசி, எனக்கு அரசியலில் நுழைந்து எதாவது செய்ய ஆசை என்றேன். அவர், "அது சாக்கடை சாய்" வேண்டாம் என்றார் !!
சில வருடங்களுக்கு முன், என் பழைய பாஸின் அண்ணன் ஆந்திராவில் ராஜசேகர ரெட்டியுடன் போட்டியிட்டு தோற்றார். அவர் ஆர்.இ.சி. திருச்சி மற்றும் இங்கே சான்பிரான்சிஸ்கோ ஸ்டான்போர்ட் பல்கலைகழகம் இரண்டிலும் படித்து அமெரிக்காவில் சில பல டெக்னாலஜி கம்பெனிகளை உருவாக்கியவர். அரசியலில் மாறுதலை கொண்டு வரவேண்டும் என்று பண பலம், ஆள் பலம், பொறுக்கிகளின் பலம் இல்லாமல் இருந்த பணத்தையும் விட்டு இருக்கின்றார் !
- சாய்
//5) தன் பெயரிலோ, உற்றார், உறவினர், சந்ததியினர் பெயரிலோ, எந்த சொத்தும் இல்லாதவராக இருந்து, மறைந்தவர். //
பதிலளிநீக்குAnna Durai or Kamaraj ?
//ஏழை மாணவர்கள் படிப்பிற்காக, தன் சொத்து முழுவதையும் எழுதி வைத்தவர் //
பதிலளிநீக்குஇன்னும் இருபது வருடங்களில் - சாய்ராம் கோபாலன் !!!
ஹாஹாஹா குட்.. சாய்ராம்..:))
பதிலளிநீக்குலால் பகதூர் சாஸ்திரி.
பதிலளிநீக்குஇதையெல்லாம் ஏங்க ஞாபகப் படுத்துறீங்க:(?
இப்போதுதான் தமிழ் உதயம் கருத்தைக் கவனிக்கிறேன். பாருங்க, எத்தனை பேருக்கு இப்படித் தோணுது என:)?
பதிலளிநீக்கு///
பதிலளிநீக்கு@பெயர் சொல்ல விருப்பமில்லை said...
இன்றைய தேதியில் அவர்களுக்கு ஒரே பெயர் தான் "பிழைக்கத் தெரியாதவர்"
/////
ஹிஹி
பக்தவத்சலம்?
பதிலளிநீக்கு/
பதிலளிநீக்குஇன்னும் இருபது வருடங்களில் - சாய்ராம் கோபாலன் !!! ///
பாரட்டுக்கள்
//
பதிலளிநீக்குஇன்னும் இருபது வருடங்களில் - சாய்ராம் கோபாலன் !!! //
Classic of all classics
'கும்மி' சொல்லியிருக்கும் பதில்களில், மூன்றாவது பதிலைத் தவிர மீதி எல்லாம் சரி. மூன்றாவது கேள்விக்கான பதில், திரு அண்ணாதுரை.
பதிலளிநீக்குஹூம்...னு ஒரு பெரிய பெருமூச்சுதான் வருது போங்க. :-(
பதிலளிநீக்கு