நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
திங்கள், 8 நவம்பர், 2010
ஜல், ஜல் , ஜல் என்னும் ....
சென்னை எப்படி இருக்கின்றது?
'ஜில்'லுனு இருக்கா? அல்லது 'ஜல்'லுனு இருக்கா?
சரி, மழை சம்பந்தப்பட்ட சில 'ஜாலி' கேள்விகள்:
(குறிப்பு: பதில்கள் பெரும்பாலும் ஈரெழுத்து வார்த்தையாக இருக்கும்.)
# ஒன்று: மழை நாளில், குடை பிடித்துக் கொண்டு பார்க்குக்கு வாக்கிங் செல்பவரை எப்படி அழைக்கலாம்?
# இரண்டு: அடாது மழை பெய்தாலும், விடாது குடை பிடித்துக் கொண்டு, செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுபவரை என்ன சொல்லலாம்?
# மூன்று: கொட்டுகின்ற மழையில், ரயில் பஸ் ஓடவில்லை என்றாலும் சைக்கிளிலாவது அலுவலகம் செல்லும் நபரை என்ன சொல்லலாம்?
# நான்கு: காசு கொடுத்து நாம் வாங்கிய பொருள்தான்; ஆனால் இது மழையில் நனைந்தால், நாம் கவலைப்பட மாட்டோம். அது, எது?
# ஐந்து How beautiful is the rain ! என்னும் அழகிய ஆங்கிலப் பாடலை இயற்றிய கவிஞர் யார்?
பதில் தெரிஞ்சவங்க, உடனே கருத்துரையுங்கள்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
4. Umbrella
பதிலளிநீக்கு5.Henry Wadsworth Longfellow
terinjathu onnuthan athuku irshad sollitar
பதிலளிநீக்குமுதல் மூன்று கேள்விக்கு விடை : லூசு
பதிலளிநீக்கு:)
ஓன்று,இரண்டு,மூன்றுக்கு விடை லூசு.நாலாவது குடை
பதிலளிநீக்குகேனை, லூசு,சடை, குடை, ??
பதிலளிநீக்குபதில் எல்லோரும் சொல்லியாச்சா..
பதிலளிநீக்குகடன்காரன் கண்ணில் படவேண்டாம் என்று குடையைப் பிடித்துக் கொண்டு போனால் இப்படி சென்னை டிராபிக் போலீஸ் காரர் மாதிரி என்னைக் கூப்பிட்டு இப்படி மானத்தை [மிச்சம் மீதி இருப்பதை] வாங்குகிறீர்களே அப்பா இது ஞாயமா?
பதிலளிநீக்கு௨. பேதை
௩ [ மீனாக்ஷி புருஷன்] மீபு
மழை பெய்யும் போது, அதை ரசிக்காமல் - அல்லது திட்டாமல் - இப்படி உட்கார்ந்து போட்டி ஒன்றை யோசித்த உங்களை எப்படி "பாராட்டலாம்"? ஹா,ஹா,ஹா,ஹா....
பதிலளிநீக்குஅப்பா சொன்னதுதான் சரியாயிருக்கும்.
பதிலளிநீக்குமீனு...சுகம் விசாரிச்சிருந்தீங்க.நான் நல்ல சுகம்...நீங்களும்தானே.
பதிலளிநீக்குபிந்தின அன்பான தீபாவளி வாழ்த்துகளும் கூட !
முதல் மூன்று பேரை நான் கேட்க விரும்புவது, " உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?"
பதிலளிநீக்குநான்கு: நம்மளைக் கால் கடுக்க நிக்க வெச்சுத் தங்கமணி வாங்குன பட்டுப் புடவை
ஐந்து: கூகிளில் இருக்கும்
எனக்கு எல்லாத்துக்கும் விடை தெரியும் ஆனா சொல்ல மாட்டேன்.. சொன்னா மட்டும் நீங்க சரி / தப்புனு சொல்லி சரியான விடைய சொல்ல மாட்டீங்களே .. அதான்..
பதிலளிநீக்கு