சனி, 27 நவம்பர், 2010

சொல்ல முடியுதா பாருங்க...


பிரபல எழுத்தாளர்கள் எழுதிய எத்தனையோ கதைகளைப் படித்திருப்போம். கதைகள், எழுத்தாளர்களை மறக்க முடியாதது போலவே கதா பாத்திரங்களையும் மறக்க முடியாது. பெர்ரி மேசன், சி ஐ டி சந்துரு துப்பறியும் சாம்பு, சங்கர்லால், இன்ஸ்பெக்டர் வகாப், கணேஷ் - வசந்த், போன்ற கேரக்டர்களை மறக்க முடியாது. படைத்த எழுத்தாளர்களையும் சொல்லி விடுவீர்கள். கீழே உள்ளவற்றைப் படித்து, யார் எழுதியது, எந்தக் கதை என்று நினைவு படுத்த முடிகிறதா என்று பாருங்களேன்....











   
!) அரை ப்ளேடு அருணாசலம், பீமா ராவ், ரசகுண்டு.... இந்த துணைக் கேரக்டர்களும் மிக பிரபலமானவர்களே...உங்களுக்குத் தெரியாததா...!யார் எழுத்தாளர்?

2) "அச்சமே கீழ்களது ஆசாரம்" என்று அடிக்கடி சொல்லும், அதுவும் மாதவியிடம் சொல்லும் கோபக்கார நாடகாசிரியர் - கதா நாயகன் - முத்துக் குமரன்...அவனது பினாங்கு நண்பன் மற்றும் ஸ்பான்சர் கோபால்..எந்தக் கதையில்? யார் எழுதியது?

3)  சுஜாதா கதைகளிலிருந்து ஒன்றிரண்டு கேள்விகள்..

(அ).ஒரு குறிப்பிட்ட வார்த்தையைச் சொல்லும் போது குண்டு வெடித்து குற்றம் நிகழ்வது போல இரண்டு கதைகள் (எனக்குத் தெரிந்து!)... என்னென்ன? 

(ஆ) சென்னையையே கலக்கிய அந்த மாபெரும் குற்றவாளியை, கொலைகாரனை கணேஷ் வசந்த் பிடித்தும் கூட 'நீ ஒன்றுமே செய்யவில்லை' என்று சொல்லி விட்டு விடுகிறார்கள். வசந்த்தே கூட எதிர் பாராத திருப்பம் அது... எந்தக் கதையில்? 

(இ) சுஜாதா சினிமாவுக்காகவே எழுதிய முதல் கதை எது? அவரது எந்தக் கதை படமாக்கப் பட்ட விதத்தின் அதிருப்தியில் 'இவைகளை திரைப் படமாக எடுக்க யாரும் கேட்க முடியாது' என்று என்னென்ன கதைகள் எழுதினர்?!! அதில் ஒரு கதையில் வரும் வசனம் "ஆச்சாரியாருக்கு வடை வாங்கிக் கொடுத்தால் நம்ம கட்சிக்கு வந்துடுவார்"

4) இப்போது பாலகுமாரன் பற்றி சில புதிர்கள்...! தெரு விளக்கு என்று எழுதாமல் மிக அழகான கவித்துவமான தலைப்பு. என்னது?  

(ஆ) தரிசனம் திரைப் படத்தில் டி எம் எஸ் - ஈஸ்வரி பாடிய பாடலின் ஆரம்ப வரிகளில் ஒன்று, என்ன தவம் செய்தேன் படத்தில் எஸ் பி பி சுசீலா பாடிய அழகா...ன பாடலின் ஆரம்ப வரிகளில் ஒன்று என தலைப்பு.  

(இ) தொடர்கதைகளில் எழுத்தாளர்கள் உபயோகப் படுத்தும் வரியில் ஒரு கதைத் தலைப்பு ..!
  
5) மணியனின் கதை. மறக்க முடியாத தலைப்பு. . மாயாவின் அழகிய ஓவியங்களுடன் விகடனில் வந்தது.. உமா, ஆனந்தன் கதா நாயகி, நாயகன். சந்தர்ப்பத்தால் பிரிந்த காதலர்கள், குழந்தை பெற்ற பிறகு இணையும் கதை.  

6) பெயர் இல்லாமல் அல்லது சொல்லாமல் இடையில் புள்ளி வைத்த (!) இரண்டு மூன்று எழுத்துக்கள் மட்டுமே கொண்ட எழுத்தாளர்கள்.  
            
7) பிரபல எழுத்தாளர் ராஜேந்திரகுமார் இந்தக் கதையில் தான் முதன் முதலில் அவரது அடையாள வார்த்தையான "ஙே" உபயோகப் படுத்தினார்.
              
8) ராஜாஜி, மகரிஷி, புஷ்பா தங்கதுரை எழுதிய எந்த நாவல்கள் படமாகி உள்ளன?
            
9) இதயச்சந்திரன், ஹிப்பலாஸ், டைபீரியஸ், பூவழகி, ப்ரம்மானந்தர்...எந்தக் கதை மாந்தர்கள்?
               
10) பல வருடங்களாக தமக்குச் சமையல்காரனாக இருந்தவரையே கைது செய்யச் சொல்லும் சங்கர்லால், வீட்டில் உள்ள கிழவியின் முகத்திரையை அகற்ற.... உள்ளே அழகிய இந்திராவின் முகம்..... எந்தக் கதையில்...யார் எழுதியது?
                         
இந்தக் கால எழுத்தாளர்கள் என்று யாரையும் சேர்க்கவில்லை. இப்போது கேட்டிருப்பதும் எப்போதோ படித்ததை நினைவில் வைத்துதான்.. பொழுது போக வேண்டுமில்ல! 
        

20 கருத்துகள்:

  1. நீங்கள் சொல்லி இருப்பவற்றில் எனக்குத் தெரிந்தது முதலாவது மட்டுமே - " பாக்கியம் ராமசாமி " சரியா நண்பரே!

    ஏனையோரை படித்திருந்தாலும், ஒன்றும் ந்னைவுக்கு வரமாட்டேன்கிறது! வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டதோ என்ற அச்சம் இப்போது எனக்கு தோன்றுகின்றது.

    அருமையான பதிவு ! வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. துயரி - அக்கரைப் பற்று, சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். 'இன்னும் சொல்வேன்' என்று முயன்றால் உங்களால் மேலும் சொல்லமுடியும்.

    பதிலளிநீக்கு
  3. நீங்கலாம் ரொம்ப ஓல்டு..
    என்னோட ரேஞ்சே வேற... என்னவா ?
    'விவேக்-ரூபலா'
    'பரத்-சுசீலா'

    பதிலளிநீக்கு
  4. // Madhavan Srinivasagopalan said...
    நீங்கலாம் ரொம்ப ஓல்டு..
    என்னோட ரேஞ்சே வேற... என்னவா ?
    'விவேக்-ரூபலா'
    'பரத்-சுசீலா'//

    மாதவன் சார்,
    'விவேக் - ரூபலா' மற்றும் 'பரத் - சுசீலா'வுக்கும், 'பெர்ரி மேசன் - டெல்லா ஸ்டிரீட்'டுக்கும் இடையே மொத்தத்தில் ஆறு வித்தியாசங்கள் இருந்தால் அதிகம்!

    பதிலளிநீக்கு
  5. முதலாவது மட்டுமே சரியான விடை தெரிந்தது:)! பாக்கியம் ராமசாமி.

    மற்றதெல்லாம்.. சட்டென வர மாட்டேன்கிறதே, ஹி!

    புதிர்கள் சுவாரஸ்யம்.

    விடைகளுக்குக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. 4. மெர்குரி பூக்கள்
    4. இ. என்றென்றும் அன்புடன்

    பதிலளிநீக்கு
  7. 6. பீ.வீ.ஆர். (சரிதானா?)
    8. ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது - புஷ்பா தங்கதுரை
    இன்னும் சிலதெல்லாம் மனசுல இருக்கு, சட்டுன்னு ஞாபகம் வரமாடேங்கறது. வந்த உடனே எழுதறேன்.
    பதிவு ரொம்ப சுவாரசியம். நன்றி!

    பதிலளிநீக்கு
  8. 3. இ. 'கரையெல்லாம் செண்பகப்பூ' இதுதான்னு நினைக்கறேன். ஏன்னா இந்த நாவலை படிச்சுட்டு, படம் பார்த்தபோது எனக்கு ஏண்டா பாத்தோம்னு ஆயிடுத்து.

    பதிலளிநீக்கு
  9. 1. பாக்கியம் ராமசாமி
    2. நா. பார்த்தசாரதி, சமுதாய வீதி

    9. சாண்டியல்னின் யவனராணி (யாருக்கும் தெரியாதது ஆச்சர்யம்)


    10. பதேர் பாஞ்சாலி என நினைக்கிறேன்...கரீட்டா???

    பதிலளிநீக்கு
  10. சுஜாதா.
    இ. ப்ரியா.

    பாலகுமாரன்.
    ஆ. மாலைநேரத்துமயக்கம்.

    மகரிஷி. புவனா ஒரு கேள்விக்குறி.

    புஷ்பா தங்கத்துரை. ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது.

    சங்கர்லால் என்றால் தமிழ்வாணன்.

    பதிலளிநீக்கு
  11. எனக்கு முதல் மட்டும்தான் தெரியுது!

    நான் ரொம்ப ரசிச்ச கதைகள், கேரக்டர்கள்!

    பதிலளிநீக்கு
  12. ச்சே....காலையில் இருந்து இண்டர்நெட் வேலை செய்யலை...கனெக்ஷன் வந்து செக் பண்ணுவதற்குள் எனக்குத் தெரிந்த விடைகளையெல்லாம் மற்றவர்கள் சொல்லிவிட்டார்கள்....இதற்குப் பெயர்தான் ஜஸ்ட்ல மிஸ்ஸோ?

    பதிலளிநீக்கு
  13. \\"சொல்ல முடியுதா பாருங்க..."\\

    முடியலை. ரூம் போட்டு உக்காந்து கொஸ்டின் பேப்பர் ரெடி பண்ணுவீங்க போல:)

    பதிலளிநீக்கு
  14. 10. இருண்ட இரவுகள் ? (தமிழ்வாணன்)
    6. தி.ஜா.ரா.

    பதிலளிநீக்கு
  15. 4.ஆ(2) ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப்போல்
    6.கா.ஸ்ரீ.ஸ்ரீ. (வி.எஸ்.காண்டேகர் அவர்களின் பல கதைகளை தமிழில் மொழிபெயர்த்தவர் ?)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!