ஞாயிறு, 26 மே, 2013

ஞாயிறு 203:: என்ன பொடி?

   
சென்ற மார்ச் இருபத்தேழாம் தேதி. (2013). 
    
காலை மணி நாலரை. 
    
சென்னை பூங்கா இரயில் நிலையம். 
    
இரண்டாவது பிளாட்ஃபார்ம். 
     
(குரோம்பேட்டை செல்ல) இரயிலுக்காகக் காத்திருந்த போது, இரயில் நிலைய சிற்றுண்டி சாலையில், ஒருவர், பாக்கு இடிக்கும் சிறிய கல் உரல் ஒன்றில் எதையோ பொடி செய்து கொண்டிருந்தார். அது என்ன என்று ஆராய அருகில் சென்றேன். கண்டுபிடிக்க முடியவில்லை. அவரிடமே, அது என்ன என்று கேட்க நினைத்த மறுகணம், அவரை காபி, டீ விற்பவர் கூப்பிட, அவர் அவசரமாக அங்கே சென்று விட்டார்! 
    
அதற்குள் நான் செல்லவேண்டிய இரயிலும் வந்துவிட்டது. 
     
வேறு வழியில்லாமல், இந்த மர்மத்தை படம் எடுத்துக்கொண்டு, ஓடிச் சென்று வண்டியில் ஏறி உட்கார்ந்தேன். 
             
எதை பொடி செய்திருப்பார்? 
             
கற்பனைக் குதிரை ஓட்டுபவர்கள் ஓட்டுங்கள். கருத்துரை பதியுங்கள்! 
   
        

27 கருத்துகள்:

  1. டீக்குப் போட இஞ்சி, ஏலக்காய், பொடி செய்திருப்பார். அல்லது அன்றைய சமையலுக்குத் தேவையான மசாலாப் பொருட்களை ஒன்றிரண்டாகப் பொடித்திருப்பார். இந்தச் சின்ன இரும்பு உரலில் அதான் செய்யலாம்.

    பதிலளிநீக்கு
  2. அதுவும் சிற்றுண்டிசாலைனு சொன்னதாலே, இல்லாட்டி வெற்றிலை, பாக்கையே இடிச்சுட்டு இருந்திருக்கலாம். அவருக்குப் பல் இருந்ததா, பார்த்தீங்களா? :))))))

    பதிலளிநீக்கு
  3. தேதி 27 னுபோட்டு இருக்கு. அன்னிக்குப் போய்ப் பர்க்கிறேன்.
    அதுதான் பொடி:)

    பதிலளிநீக்கு
  4. நேரிலே சென்று கேட்டாத்தான் தெரியும்...! அவரைக் காணோமே...?

    பதிலளிநீக்கு
  5. ஓ மார்ச் மாசமா.!!27ஆம்தேதிக்கு என்ன சிறப்பு.
    மசாலாப் பாலுக்கு ஏலக்காய்ப் பொடித்திருப்பாரோ.

    என்னத்தைப் பொடிபண்ணாரோ.
    கொஞ்சம் சுக்குப் பொடி பண்ணிக் கொடுக்கச் சொல்லுங்க. தலைவலிக்கிறது:)

    பதிலளிநீக்கு
  6. தேநீரில் சேர்க்க ஏலக்காயாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  7. இஞ்சியும் ஏலக்காயுமாத்தான் இருக்கும்..

    பதிலளிநீக்கு
  8. அகர்வால் ஸ்வீட்ஸில் இப்படித்தான் இடித்துக்கொண்டிருந்தார்..

    ஆர்வத்தோடு கேட்டேன் ..

    இனிப்பு பாசந்தியில் போட குங்மப்பூ கண்களுக்கு விருந்தளித்தது ..கமகம மணம் ...

    பதிலளிநீக்கு
  9. அருகில் சென்றதும் உங்களுக்கு ஏலக்காய் வாசம் தெரியாததால் (:-)) ) அது அவர் காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய சூரணமாயிருக்கும்!! :-))

    பதிலளிநீக்கு
  10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா27 மே, 2013 அன்று 8:17 AM

    அவர் பொடி செஞ்சா எனக்கென்ன வெடி செஞ்சா எனக்கென்ன..நீங்க ஏன் இப்படி கடி கடியாய் கடிக்கிறீங்க..

    பதிலளிநீக்கு

  12. மார்ச் 26 நடந்ததை மே 26 தேதிவரை காத்திருந்து பார்த்தீங்களா ?
    இந்த இரண்டு மாசமும் அதே குரோம்பெட்டை ஸ்டேசனுலே
    அதெ ப்ளாட்ஃபாரத்திலே அதே இடத்துலே அதே டயத்திலே கன்டினுவஸ்ஸா பாத்திருந்தா
    கண்டிப்பா கண்டுபிடிச்சிருக்கலாம்.

    வாய்ப்பை நழுவ விட்டுவிட்டீர்களே !!
    இருந்தாலும் ஒரு க்ளூ கொடுத்திருக்கிறீர்கள்.

    காபி டீ போடுபவர் அவரை கூப்பிட அவர் போனார் என்று.

    அந்த காலத்துலே, அபின் அப்படின்னு ஒன்னு இருந்தது. நான் சொல்றது 1950 வருச வாக்கிலே
    நாட்டு மருந்து கடையெல்லாம் கிடைக்கும். வசம்பு மாதிரி இருக்கும். கடுக்காய் கொஞ்சம்,
    வசம்பு கொஞ்சம், அபின் கொஞ்சம் எல்லாத்தையும் இடிச்சு, ஒரு சுண்டு விரல்லே ஒட்டுறாப்போல‌
    அளவுக்கு எடுத்துக்கினு,

    காஃபி ஃபில்டர் அடியிலே ( அடியிலே அப்படின்னா ஃபில்டருக்கு கீழே, கீழே வைத்திருக்கும் பாத்திரத்திற்கு மேல்
    இருக்கும் தட்டில்) லேசா தடவிட்டீங்கன்னா,

    காஃபி பவுடர் போட்டுட்டு, கொதிக்கிற தண்ணியை ஊத்தி , கொஞ்சம் கொஞ்சமா டிகாஷனை எடுத்து,
    புது பாலா காச்சி , கலந்து, கொஞ்சமா சக்கரை கலந்து ,

    ரொம்ப ஆத்தாம, சூடு குறையாம, குடிச்சு பாருங்க...

    என்ன கிக் வருதுன்னு... போகப்போகத்தான் தெரியும்....

    ஆனா, இப்ப எல்லாம் அதுக்கு அவசியமே இல்லாம போயிடுத்து.

    இன்ஸ்டன்ட் காஃபிலே கஃபின் கலப்பது சர்வ சாதாரணமா கீது.
    அதுனாலே தான் அடிக் சனும் டெல்வப் ஆகுது.

    அவரு அதத்தான் செஞ்சாரா இல்லயா எனக்கு எப்படிங்க தெரியும் ?

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in

    பதிலளிநீக்கு
  13. //இன்ஸ்டன்ட் காஃபிலே கஃபின் கலப்பது சர்வ சாதாரணமா கீது.
    அதுனாலே தான் அடிக் சனும் டெல்வப் ஆகுது.

    அவரு அதத்தான் செஞ்சாரா இல்லயா எனக்கு எப்படிங்க தெரியும் ?//

    கேட்டதே இல்லை! !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  14. அஃபினைப் பிசினாக எடுத்துக் காய வைப்பாங்கனு கேள்விப் பட்டிருக்கேன். கசகசாவில் இருந்து எடுக்கப்படும் இதனால் அரேபிய நாடுகளுக்குக் கசகசா எடுத்துச் சென்றாலே நேரடியா ஜெயில் வாசம் தான். கேள்வியே கேட்க மாட்டாங்க. :))) ம்ம்ம்ம்ம்??? இது புது விஷயம்!

    பதிலளிநீக்கு
  15. அப்பாதுரை சார் எழுதியதை இப்பதான் பார்த்தேன்.

    அவருக்கு தோணறாபோல வேற யாருக்குமே தோணாது.

    திங்கிங் டிஃபரன்ட்லி. ரியலி எ ரைட் பிரைனி மேன்.

    அ.வி. மட்டும் போதாது சாரே...
    கொஞ்சமா வோட்கா கூட அட் லீஸ்ட் ஒரு பீர் பாதி பாட்டில்.

    கையிலே ஒரு ஓஷோ படமும் வச்சுக்கிட்டா

    அப்படியே ஸ்வர்க்கத்துலே சஞ்சாரம் பண்ணலாம்.

    ஆல் த பெஸ்ட்.

    guruvai minjiya sishyan
    சுப்பு தாத்தா.


    பதிலளிநீக்கு
  16. ஹிஹி.. ரொம்ப நன்றி சூரி சார்.. அவசியமா இந்த கமென்ட்டை என் வொய்ப் கிட்டே காட்டணும், அப்பப்போ என்னை ப்ரெயின் டெட்னு சொல்றாங்க.

    (டிப்ஸ் குடுத்திருகீங்க. வோட்காவுக்கு இப்படி ஒரு உபயோகமா? ஜெனரலா வோட்காவோட வாடையே குமட்டுறாப்புல இருக்கும்.. இதுல எக்ஸ்ட்ற்றாவா சேத்தா எப்படி மணக்குமோ தெரியலியே?)

    பதிலளிநீக்கு
  17. கசகசா பிசின் ஓபியத்தோட ஒண்ணுவிட்ட கசின்.
    உலகமுழுக்க இதை hallucinating drugல் சேர்த்தி. எண்பது தொண்ணூறுகளில் அமெரிக்காவில் வேலைக்கு சேரும் பொழுது drug test எடுப்பார்கள் - டெஸ்ட் எடுக்குறதுக்கு ஒரு வாரம் முழுக்க கசகசா சாப்பிட வேண்டாம்னு சொல்லிடுவாங்க. (இப்பல்லாம் அமெரிக்காவுல யாரையும் வேலைக்கே எடுக்குறதில்லே. drug testஐ வச்சுக்கிட்டு என்னத்த பண்ண?)

    ஷ்.. ஒரு ரகசியம் சொல்றேன்.. அபிராம பட்டருக்கு சந்திரன் தெரிஞ்சது எதனாலனு நினைக்கறீங்க கீதாம்மா?

    பதிலளிநீக்கு
  18. //ஷ்.. ஒரு ரகசியம் சொல்றேன்.. அபிராம பட்டருக்கு சந்திரன் தெரிஞ்சது எதனாலனு நினைக்கறீங்க கீதாம்மா?//

    அப்பாதுரை, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நறநறநறநற :)))))))))

    பதிலளிநீக்கு


  19. // அபிராம பட்டருக்கு சந்திரன் தெரிஞ்சது எதனாலனு நினைக்கறீங்க கீதாம்மா?//

    அப்பாதுரை சார் என்னிக்காவது ஒரு நாளைக்கு

    அதே இன்ஃப்லுவன்ஸ்லே

    அபிராமி அந்தாதிக்கு ஆப்போசிட்டா எதுன்னாச்சும் எழுதினாலும்

    அதே அதே அதே தான்.

    ஏன்னா இப்ப அவர் மட்டுமல்ல, பிரபல கதாசிரியர்கள் எழுதறது எல்லாமே

    ஒரு ஹலூசினேஷன்லே தான். அது தான்

    அந்த ஹலூசினேஷன் தான் . அதுக்கு கற்பனை வளம் பாற்கடல் பொங்கி வழியறாப்போல
    இருக்கணும்.

    ஃபார் அவே ஃப்ரம் பர்பெசுவல் ப்ராக்டிகல் ரியாலிடி


    எல்லாவிதமான செல்ஃப் டிஸ்பஷனுக்கும் இந்த ஹலூசினேஷன் தான் மூலவர்.

    யூ நோ ஒன் திங். திஸ் ஹலூசினேஷன் ப்ரமோட்ஸ் ரைட் ப்ரைன்
    அட் த சேம் டயம் பாரலைஸிங் லஃப்ட் ப்ரைன்.

    இது பொதுவா சொன்னது. ஆனா ஒன்னு சொல்றேன்.

    அப்பாதுரை கதையை படிச்சாலே எனக்கு
    அ.வி சாப்பிட்ட மாதிரி ஒரு ஹலுசினேஷன் டெவலப் ஆகிடரது.

    என் தம்பி ஹி இஸ் அனதர் ஜீனியஸ். டாக்டரேட். ப்ரொஃஃபசர் . ரிடையர் ஆனப்பரம் எங்கேயோ சுத்திண்ண்டு இருக்கான்.
    அப்பாதுரை சாரோட மோதவிட்டு வேடிக்க பாக்கணும்.

    ஒருவேளை இரண்டு பேருமே ,

    அதே சின்ன உரல்லே இடிச்சுதான் சாப்பிடுவாகளோ என்னமோ ??

    யதா சௌகர்யம் துஷத்வம்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  20. குரோம்பேட்டை ஸ்டேஷன் இல்லீங்கோ. பார்க் ஸ்டேஷன். (சமீப காலமா குரோம்பேட்டை இரயில் நிலையத்தில் சிற்றுண்டி சாலையைக் காணோம். யாரோ திருடிக்கிட்டுப் போயிட்டாங்க!காந்தி புக் ஸ்டால் மட்டுமே எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இன்றும் உள்ளது). அநேகமாக அவர் பொடித்தது, ஏலக்காய் என்றுதான் நினைக்கின்றேன். தேநீர்க்குப் பால் சூடாக்கும் பொழுது,பால் அதிக சூடாகி (அதில் கலப்படம் செய்யப்பட்டுள்ள பொருட்களால்) அடிப் பிடித்து,தீய்ந்த வாடை வந்தால், அந்த வாடையைப் போக்க ஏலக்காய்ப் பொடி சேர்ப்பார்கள் என்று கேள்விப் பட்டிருக்கின்றேன். அப்படிப்பட்ட தேநீரை அசோக் லேலண்டு காண்டீனுலும் அடிக்கடி சுவைத்த அனுபவமும் உண்டு.

    பதிலளிநீக்கு
  21. அரளி விதை அரைத்துச் சாப்பிட்டவர்கள் ஐந்தே நிமிடங்களில் டிக்கெட் வாங்கிக் கொண்டு விடுவார்கள் என்று கேள்விப் பட்டிருக்கின்றேன்! அப்புவும் சுப்புவும் அடாவடியா சொல்லிக்கிட்டு இருக்கீங்களே!

    பதிலளிநீக்கு
  22. பவழமல்லியை ரொம்ப நேரம் முகர்ந்தாலும் hallucination effect கிடைக்கும் சூரி சார். ட்ரை பண்ணிப் பாருங்கோ :)

    அரளி விதையை அரைக்காமல் விழுங்கினால் டிகெட் வாங்கச் சாத்தியமுண்டு kgg.

    பதிலளிநீக்கு
  23. அபிராமி அந்தாதியைப் படிச்சு ரசிக்கிறதே பெரிய ஹெலூசினேசன் தான் சூரி சார். தமிழ் இறையிலக்கிய உச்சப் படைப்புகளில் ஒன்று.

    பதிலளிநீக்கு


  24. //அபிராமி அந்தாதியைப் படிச்சு ரசிக்கிறதே பெரிய ஹெலூசினேசன் தான் சூரி சார்//

    பாவமா இருக்கு அந்த சின்ன உரல்லே யாரோ ஒத்தரு எதையோ இடிக்க இங்க அப்புவும் சுப்புவும்
    அடாவடி பண்றாங்க அப்படின்னு கௌதமன் சார் ஆதங்கப்படறது நியாயமாத்தான் தோண்றது.

    அ.வி. சமாசாரம் ஸ்வர்க்கத்துக்கு கொண்டு போயிடும் என்று பளிச்சுன்னு நான் முதல்லேயே சொல்லிவிட்டேன்.
    ட்ரான்ஸ்பெரன்ஸி இன் டாக்கிங். அதனாலே யாருக்காச்சும் எதுனாச்சும் நடந்தா இந்த சுப்பு தாத்தா சொன்னா
    அப்படின்னு நாக்கிலே பல்லைப்போட்டு யாரும் சொல்லிடக்கூடாது.

    அடுத்த சமாசாரம் ஹலுசினேஷன். உண்மையில்லாததை உண்மை போல உண்மையாகவே ஏற்றுக்கொண்டுள்ள‌
    நிலைக்குபெயர் தான் ஹலுசினேஷன் . அது வரைக்கும் அப்பு இஸ் ஆல் ரைட்.

    ஆனா, உண்மை அப்படிங்கறதே எது அப்படின்னு ஒரு சர்ச்சை கிளம்பித்துன்னு வச்சுக்கங்க..
    எது உண்மையில்லையோ அது ஆனந்தமும் இல்லை. நித்யமும் இல்லை.

    சத் சித் ஆனந்தம். உண்மையான ஆனந்தம் எது இல்லயோ எது நிரந்தரமான ஆனந்தம் இல்லையோ அதை
    ஆனந்தம் அப்படின்னு நினைக்கறது கூட ஹலுசினேஷன் தான்.

    தேர் இஸ் நோ லாஜிகல் ஃபாலசி இன் வாட் ஐ ஸே.

    ஆக, அபிராமி பட்டர் சந்திரனைப் பார்த்தது அல்லது பார்த்ததாக கொண்டது ஹலுசினேஷன் அப்படின்னா,
    அவருடைய உள்ளத்தில் இருக்கற அவர் அனுபவிச்ச ஆனந்தத்தை , அந்த அந்தாதியை படிக்கும் எவருமே புரிஞ்சுக்க முடியாது. ஆனா அவர் அந்த ஆனந்தத்திலே இயற்றிய சாகித்யம் ப்ரதர்சனமாய் சத்யமாய் இருக்கிறது. ஒன் கான்ட்
    டிஸ்ப்யூட் த எக்ஸிஸ்டன்ஸ் ஆஃப் தட் மாஸ்டர்பீஸ்.

    அபிராமி பட்டருக்கு அது ஒரு டிவைன் எக்ஸ்பீரியன்ஸ். அந்த எக்ஸ்பீரியன்ஸ் இல்லாதவங்க, அந்த எக்ஸ்பீரியன்ஸ் சும்மா
    உடான்சு. வொளவொளாக்கட்டிக்கு அப்படின்னு சொல்லக்கூடாது என்பது தான் இந்த சுப்பு தாத்தா உடைய‌
    தாழ்மையான அபிப்ராயம்.

    இல்ல.. அந்த ஆனந்தத்தை நான் புரிஞ்சுட்டாத்தான் நான் அவர் சந்திரனைப்பார்த்தார் என்பதையும் ஒத்துப்பேன்
    என்று சொன்னால் எப்படி இருக்குன்னா,
    \
    ஒரு லோகாயதமா ஒரு உதாரணம்தான் சொல்ல முடியும்.

    நான் மட்டுமல்ல, இந்த லோகத்திலே இருக்கிற எல்லா ஜீவராசிகளுமே ஒரு சின்ன ஆனந்தத்துளிலே தான்
    ஜனிக்கிறது.

    ஜனிக்கவச்ச ஆனந்தம் அந்த ஆனந்தத்தை அனுபவிக்கற வாளுக்கு அந்தக்கணம் தான் புரிஞ்சது. அதுக்கப்பறம்
    அது என்ன அப்படின்னு அவ்ரகளே ஒரு ஈக்வேஷனா சொல்லமுடியாது.

    எக்ஸ் ஆக்சிஸ் ஒய் ஆக்ஸிஸ் வரைஞ்சு ஒரு க்ராபிக் காட்ட முடியாது.

    ஆனா, அந்த ஆனந்தம் இருந்தது என்பதற்கு ஜனிச்ச நாம் எல்லோருமே சாட்சி. நமக்கு அந்த ஆனந்தம் அதே அனந்தம் புரியுமா ?

    அது மாதிரி அபிராமி பட்டர் எழுதியதைப் பார்த்தா அவர் அனுபவித்த ஆனந்தம் இறைவியின் சாக்ஷாத்காரம் என்ன அப்படின்னு ஓரளவுக்கு உணர முடிகிரது.
    .
    அதை ஒரு ஹலுசினேஷன் அப்படின்னு கொச்சைப்படுத்தறது ( அந்த வார்த்தைய பயன்படுத்துவது சரியில்லதான். ஆனா வேற வார்த்தை உடனே கிடைக்கல்ல. ) சரியில்ல அப்படின்னு விக்ஞாபனம்.

    கீதா அம்மாதான் ஜட்ஜ்மென்ட் சொல்லணும்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  25. சுப்பு சார் ஒரு மேட்டரா சொல்றாரு..

    //எது உண்மையில்லையோ அது நித்யமில்லை..
    எதுவுமே நித்யமில்லை என்பது தானே உண்மைனு சொல்றாங்க சார்? அப்ப எதுவுமே உண்மையில்லையா?

    அவி சமாசாரம் சொர்க்கத்துக்கெல்லாம் கொண்டுபோகாதுனு நான் நாக்குல பல்லப் போட்டு சொல்ல அனுமதி கொடுங்க சார்.. யாருனா போயிட்டு வந்து விடியோவோட சொன்னாலொழிய.. (ஆ.. நாக்கைக் கடிச்சுக்கிட்டேனே). ஆஸ்பத்திரிக்கு வேணும்னா கொண்டுபோகலாம்.

    கசகசா மசமசாவுல மங்காமதி பார்த்தாருன்னா, பட்டர் அதனால் கொஞ்சம் கூட குறைஞ்சு போயிடலியே? அப்படிப் பாத்ததால தான் - பாக்க முடிஞ்சதால தான் - பாக்கத் துணிஞ்சதால தான் - மின்னாயிரம் ஒரு மெய்வடிவாகினு எழுத முடிஞ்சுதுனு நிச்சயமா நம்புறேன். குளக்கரைல ஏழுவயசுல தாய்ப்பால் குடிச்சு தேவாரம் பாடினாருனா நம்புறோம், மாடு மேய்ச்ச பாமரன் காளி நாக்குல எழுதினவுடனே 'வாகர்தாவிவ'னு ரொம்ப காம்ப்லெக்சா அவரோ (இல்லை அதையே சொல்லும் பொருளும் என நடமாடும்னு இவரோ) எழுதினாருனா நம்புறோம்.. அதையே நல்லா படிச்சவங்க நாலு விதையை தூவிப் பாலைச் சாப்பிட்டு எழுதியிருப்பாங்கன்னா அபசாரம்னு சொல்றோமே ஏன்? சுரக்கூட்டம் அத்தனையுமே காரணப் பெயர் தானே?

    (நல்ல வேளை அவங்க திருச்சில இருக்காங்க)

    பதிலளிநீக்கு
  26. நான் ஊரிலேயே இல்லை. மீ த எஸ்கேப்பு! :)))))))))

    பதிலளிநீக்கு
  27. இஞ்சியும், ஏலக்காயும் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!