சென்ற வாரம் குழுவினர் பாடும் பாடல்கள் என்று வகைப்படுத்தி இருந்தேன். இன்று அதிலிருந்து சற்றே மாறுபட்டு போதைப் பாடல்கள் என்று வகைப்படுத்தி மூன்று குரல்களைச் சொல்கிறேன்.
முதலாவதாக 'அழகே உன்னை ஆராதிக்கிறேன்' படப் பாடல். வாணி ஜெயராம் குரல்.
1980 வெளியான இந்தப் படத்தில் எல்லாமே நல்ல பாடல்கள்தான். அதில் இன்றைய 'தீமு'க்காக நான் எடுத்து க் கொண்டிருக்கும் பாடல் 'நானே நானா யாரோதானா' என்னும் வாணி ஜெயராம் பாடிய பாடல். வாலியின் பாடல். இளையராஜாவின் இசை.
இந்தப் படத்தில் இன்னொரு பாடல் 'டைட்டில் ஸாங்' எனப்படும் 'அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்' என்னும் ஜெயச்சந்திரன் பாடல். இரண்டே வரிதான் பாடல் வரிகள். மீண்டும் மீண்டும் வரும். இது மாதிரி சிறிய புதிய முயற்சிகள் அப்போது அடிக்கடி செய்தார் இளையயராஜா. 'மூடுபனி'யில் ஒரு சிறிய தாலாட்டுப் பாடல் "ஆசை ராஜா தாலேலோ' என்னும் பாடல் நாலு வரி அல்லது ஐந்து வரிகள்தான். உமா ரமணன் குரல் என்று நினைக்கிறேன்.
இந்தப் பாடல் இடம்பெற்ற படத்தில் லதா நடித்த வாணி கேரக்டர் ஜெய்கணேஷின் காதலை உண்மை என்று நம்பி ஏமாறும் கதை. ஒருநாள் ஒரு பலவீனமான தனிமையில் ஜெய்கணேஷ் மதுவைக் கொடுத்து வாணியை உபயோகித்துக் கொண்டபின் காணாமல் போய்விடுகிறார்.
மது தந்த போதையில் வாணி வாணி ஜெயராம் குரலில் பாடும் பாடல்தான் இது.
பாடலின் வரிகளிலேயே போதையின் இயலாமை, மனம் வெளிப்படுவது, காதல் ஏக்கம் வெளிப்படும் வகையில் வரிகள் என்றால் இளையராஜா.... அவரைப் பற்றி கேட்கவும் வேண்டுமா.... கதை தெரியாமல், காட்சியைப் பார்க்காமல் பாடல் கேட்டாலும் அந்த ஏக்கம், விரகம் சோகம் இயலாமை உங்களுக்குள் இறங்கும். அந்த ஆரம்ப இசையை கேளுங்களேன்.... பாடல் ஆரம்பித்ததும் இணையும் ரிதம்..
நானே நானா யாரோதானா மெல்ல மெல்ல மாறினேனா
நானே நானா யாரோதானா மெல்ல மெல்ல மாறினேனா
தன்னைத்தானே மறந்தேனே என்னை நானே கேட்கிறேன்
நானே நானா யாரோதானா மெல்ல மெல்ல மாறினேனா
ஒருவன் நினைவிலே உருகும் இதயமே
இதோ துடிக்க
உலர்ந்த உதடுகள் தனிமைக் கவிதைகள்
எதோ படிக்க
மதுவின் மயக்கமே உனது மடியில் இனிமேல்
இவள்தான் சரணம் சரணம் - நானே நானா
பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும்
ஒரே நிலவு
உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும்
ஒரே மனது
பருவ வயதிலே இரவும் பகலும் விரகம்
நரகம் சரணம் சரணம்
நானே நானா யாரோதானா மெல்ல மெல்ல மாறினேனா
தன்னைத்தானே மறந்தேனே என்னை நானே கேட்கிறேன்
நானே நானா யாரோதானா மெல்ல மெல்ல மாறினேனா
=====================================================================================================
பிளாஷ்பேக் : 70 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பாடல் சர்ச்சை
இப்போது இளையராஜா பாடல்களை பயன்படுத்துவதில் பல்வேறு சர்ச்சை நடந்து வருகிறது. அடிக்கடி நீதிமன்றம் சென்று இளையராஜா தன் பாடல்களுக்காக வழக்கு தொடர்ந்து வருகிறார்.
இந்த பாடல் சர்ச்சை ஒன்றும் புதிதல்ல. 1955ம் ஆண்டு வெளிவந்த படம் 'கணவனே கண்கண்ட தெய்வம்'. டி.ஆர்.ரகுநாத் இயக்கிய இந்த படத்தில் ஜெமினி கணேசன், அஞ்சலி தேவி நடித்திருந்தனர், பெங்காலி மற்றும் இந்திப் பட இசை அமைப்பாளர் ஹேமந்த் குமார் இசை அமைத்திருந்தார்.
150 படங்களுக்கு மேல் இசை அமைத்து 3 முறை சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருதும் ஒரு முறை சிறந்த பாடகருக்குமான தேசிய விருதையும் பெற்றவர். இவர் இசை அமைத்த ஒரே தமிழ் படம் 'கணவனே கண்கண்ட தெய்வம்'
இந்த படத்தில் முதலில் நாயகியாக நடித்தவர் பானுமதி. தான் நடிக்கும் படத்தின் பாடல்களை தானே பாடும் வழக்கம் கொண்டவர் பானுமதி. இதனால் இந்த படத்திற்காக 'உன்னை கண்தேடுதே..' என்ற பாடலை பாடியிருந்தார்.
ஒரு கட்டத்தில் என்ன காரணத்தாலோ படத்திலிருந்து விலகி விட்டார். இதனால் அவருக்கு பதிலாக அஞ்சலி தேவி நடித்தார். படத்தில் இருந்து விலகி விட்டதால் நான் பாடிய பாடலை அஞ்சலி தேவிக்கு பின்னணி பாடலாக மாற்றக்கூடாது என்று பிரச்னையை கிளப்பினார் பானுமதி, இதனால் அந்த பாடலை மீண்டும் பி.சுசீலா பாடினார்.
என்றாலும் பானுமதி விடவில்லை. பாட்டும், இசையும் இசை அமைப்பாளரின் உரிமை. ஆனால் பாட்டின் இடையே வரும் 'விக்கல்' சத்தம் என்னுடைய சிந்தனையில் வந்தது. அதை பி.சுசீலா பயன்படுத்தியது தவறு என்று அடுத்த சர்ச்சையை கிளப்பினர். பின்னர் ஒரு வழியாக தயாரிப்பு தரப்பு பானுமதியை சமாதானப்படுத்தி, பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தது.
தினமலர் 24/11/25
================================================================================================
குரு - 1980 ல் வெளியாகி 365 நாட்கள் தொடர்ந்தும் 1095 நாட்கள் வெவ்வேரு திரையரங்குகளிலும் மா றி மாறி தொடர்ந்து ஓடிய படம். கமல்-ஸ்ரீதேவி நடிப்பில் ஐ வி சசி இயக்கத்தில் வெளியானது. 1973 ல் தர்மேந்திரா - ஹேமா நடித்த ஜூகுனு ஹிந்திப் படத்தின் தழுவல்.
கண்ணதாசன், பஞ்சு அருணாசலம், கங்கை அமரன் பாடல்களை எழுதி இருந்தார். இளையராஜாதான் இசை. இந்தப் படத்தின் போதைப் பாடலை எஸ் ஜானகி குரலில் கேட்கலாம். காட்சியில் நீரில் நனைந்த ஸ்ரீதேவி! ஒரு பார்ட்டியில் அஷோக்குக்கு அதா வது கமலுக்கு அவர் பெயரைக் கெடுக்க எண்ணி மோகன் பாபுவால் தரப்பட்ட மதுவை ஸ்ரீதேவி குடித்து விட, தன்னை மறந்த போதையில் ஸ்ரீதேவி போடும் ஆட்டம்தான் பாடல்.
வாணி ஜெயராம் குரலில் போதைப் பாடலைத் தொடர்ந்து ஜானகி அம்மா குரலில் போதைப் பாடல்.. இந்தப் பாடலை எழுதி இருப்பவர் கண்ணதாசன்.
ஸ்ரீதேவிக்கு இந்த நடிப்பெல்லாம் ஜுஜுபி. கமல் அவருக்கு ஈடு கொடுத்து நடிக்க வேண்டும்!
பா பபப பா பா பபப பா பா பா
பப பா பா பாப பா பா பா பா பா
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்
வாராய் கண்ணா வா
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்
வாராய் கண்ணா வா
நான் இன்று நானும் இல்லை
என் நெஞ்சில் நாணம் இல்லை
பபபா எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்
வாராய் கண்ணா வா
ரோஜா மலர்ந்தது துவண்டது
ராஜாவின் கைகள் ஏந்தட்டுமே
ரோஜா மலர்ந்தது துவண்டது
ராஜாவின் கைகள் ஏந்தட்டுமே
இங்கே இவள் சொர்க்கம் எது
இன்பம் தரும் சங்கம் எது நீ
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்
வாராய் கண்ணா வா
நான் இன்று நானும் இல்லை
என் நெஞ்சில் நாணம் இல்லை
வானம் விழுந்தது வளைந்தது
நமக்கென்ன பாவம் போகட்டுமே
வானம் விழுந்தது வளைந்தது
நமக்கென்ன பாவம் போகட்டுமே
சுகமே என்ன சுகமோ இது
தள்ளாடிடும் ரகமோ இது வா
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்
வாராய் கண்ணா வா
எந்தன் கண்ணில் லாலலலல
வாராய் கண்ணா வா
நான் இன்று நானும் இல்லை
என் நெஞ்சில் நாணம் இல்லை
பப பா பா பாப பா பா பா பா பா
========================================================================================
ஜெய்சங்கர் :
எல்லா நடிகர்களுமே நூறு படம் நடிச்சதும் விழா எடுப்பாங்க. பெரும்பாலும் அந்தந்த நடிகர்களே ஏற்பாடு செய்து, பெருமளவு அவர்கள் செலவும், கொஞ்சம் வேறு யாராவதும் செலவு செய்வார்கள். நானும் நூறாவது படம் முடிச்சதும் விழா எடுத்தேன். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக செய்தேன். நான் நூறு படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடிக்கக் காரணமாயிருந்த திரு ஜோசப் தளியத்துக்கு ஒரு பாராட்டு விழாவாக நடத்தி, அதில் அவருக்கு மாலைகள் போட ஏற்பாடு செய்தேன்.
அது மட்டுமல்லாமல் அந்த நாளில் சில அனாதை ஆஸ்ரமங்களுக்கும் மெர்ஸி ஹோம்களுக்கும் உதவி கிடைக்கும்படி ஏற்பாடு செய்தேன். அந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க அப்போதைய ஆளுநரை அழைத்திருந்தேன். ஆளுநர் அப்படி எல்லாம் வெளி விழாக்களில் கலந்து கொள்ளும் வழக்கம் இல்லை என்றாலும் அவர் வர சம்மதித்த நிலையில் ப்ரோட்டோகால் காரணமாக அவர் வரமுடியாமல் போனது.
நான் உடனே திரு ஏ வி எம் செட்டியாரை அழைத்து தலைமை தாங்கச் செய்தேன். எப்பொழுதோ ஒருமுறை அவரை நேரில் பார்த்ததோடு சரி, அவரும் அவர் இடத்திலிருந்தே, தான் எடுக்கும் படங்களின் திருத்தங்களை சொல்லி செய்யச் சொல்லி விடுவார். எனவே அவரும் நான் உட்பட வேறு யாரையும் பார்க்கும் வாய்ப்பு குறைவு. இந்த நிகழ்ச்சியில் நான் உதவி இல்லங்களுக்கு உதவி செய்ததும் அவரும் சில உதவிகள் செய்தார். பின்னர் ஒருநாள் என்னை அழைத்தார். தனக்கு அந்த நிகழ்ச்சி மிகுந்த மனநிறைவு அளித்தது என்றும், தானும் அதில் பங்கு கொண்டது மிகுந்த மனநெகிழ்ச்சியை அளித்தது என்றும் கூறினார். யாரும் இப்படி இதுவரை செய்ததில்லை என்றும் சொன்னார்.
இப்போது என் தம்பிகள், இப்போதைய நாயகர்கள் இதை பினபற்றுவது உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஒரு காணொளியிலிருந்து....
=========================================================================================
இப்போது சென்ற வார தீமின் தொடர்ச்சியாகவும் இந்த வார போதைப்பாடலின் தொடர்ச்சியாகவும் வரும் பாடல் P சுசீலா குரலில்..
இந்தப் பாடல் குழுவினர் வகையில் என்ன புதுமை என்றால் பல்லவி மட்டுமே சுசீலாம்மா. சரணங்கள் குழுவினர் குரலில். போதையை நிதானமாக வெளிப்படுத்துவது மெலடி வகையிலேயே பாடலை அமைத்திருப்பது. 'எனக்கு மூன்று வரிகள்தானா' என்று கேட்காமல் அவரும் வந்து பாடிக் கொடுத்திருக்கிறார். போதாக்குறைக்கு பல்லவியிலும் பாதியில் வந்து இணைந்து விடுகிறது குழு என்னும் கோரஸ்!
இப்படி பல்லவி மட்டும் தனித்துப் பாடும் காட்சியில் தோன்றுபவர் பல்லவி!
படமே போதைக் கடத்தல், போதை பரவல் பற்றியதுதான். சூரசம்ஹாரம். கமல் நிரோஷா நடிப்பில் சித்ரா லக்ஷ்மணன் எழுதி இயக்கி இருக்கும் வெற்றிப்படம். 1985 ல் வெளியான 'விட்னஸ்' என்கிற ஆங்கிலப்படத்தின் தழுவல் கதை என்று சொல்லப்பட்டாலும் சித்ரா அதை மறுத்தாராம். ஆனால் அதி வீர பாண்டியன் என்று கங்கை அமரன் கமலை வைத்து ஒரு படம் இயக்குவதாய் இருந்தது. வெளியில் வரவில்லை. இந்தப் படத்தில் கமல் பெயர் அதிவீரபாண்டியன்.
கமலின் சகபோலீஸ் அதிகாரி நிழல்கள் ரவியின் சகோதரி பல்லவி போதையில் ஆடும் காட்சி இந்தப் பாடல்.
இந்தப் பாடலைக் கேட்கும்போது குழுவினர் மட்டும் பாடும் பாடல் மணிரத்னத்தின் 'அஞ்சலி' படத்தில் கூட இருக்கிறதே என்று நினைவுக்கு வருகிறது.
P. சுசீலா : ஆடும் நேரம்
இதுதான் இதுதான்
வாவா வாவா
பாடும் நேரம்
இதுதான் இதுதான்
வாவா வாவா
P. சுசீலா : போகிற இளமை மீண்டும் வருமா
ஆடிடு பாடிடு இளமையில்
தேடிய இனிமை திரும்ப வருமா
கூடிடு பாடிடு தனிமையில்
குழு : பூவல்ல…..தேனல்ல….
நானின்று நானல்ல ஆஆ…..
P. சுசீலா : ஆடும் நேரம்
குழு : இதுதான் இதுதான்
வாவா வாவா
குழு : மேலோகம் பூலோகம் மாறும்
மாறாது தாகங்கள்தான்
நூலாகும் பூந்தேகம் ஏங்கும்
நாள் தோறும் மோகங்கள்தான்
குழு : ஆடும் போது தேகம் தேயும்
பார்க்கும் போது பார்வை சாயும்
எங்கெங்கும் இன்பம் வந்து கூடாதோ…..
வா…..இங்கே…..இங்கே…….
P. சுசீலா : ஆடும் நேரம்
குழு : இதுதான் இதுதான்
வாவா வாவா
குழு : நானென்று நீயென்று ஏது
பேதங்கள் இங்கே இல்லை
வீடென்று நாடென்று ஏது
போதைக்கு எல்லை இல்லை
காலை ஏது மாலை ஏது
காணும்போது காலம் ஏது
ஆனந்தம் நம்மை விட்டு போகாது……
வா….இங்கே…..இங்கே….
P. சுசீலா : ஆடும் நேரம்
குழு : இதுதான் இதுதான்
வாவா வாவா
P. சுசீலா : மற்றும் குழு :
P. சுசீலா : போகிற இளமை மீண்டும் வருமா
ஆடிடு பாடிடு இளமையில்
தேடிய இனிமை திரும்ப வருமா
கூடிடு பாடிடு தனிமையில்
பூவல்ல…..தேனல்ல….
நானின்று நானல்ல ஆஆ…..
P. சுசீலா : : ஆடும் நேரம்
குழு : இதுதான் இதுதான்
வாவா வாவா
P. சுசீலா : பாடும் நேரம்
குழு : இதுதான் இதுதான்
வாவா வாவா


Sமூன்றாவது பாடல் நினைவுக்கு வராத்தால் காணொளி பார்க்க நேர்ந்தது. ஆடும் நேரம் பாடல் சிலமுறை கேட்ட நினைவு இருக்கிறது.
பதிலளிநீக்குமற்ற இரு பாடல்களும் மனதில் ஒலிக்கும் குரல்கள். மிகவும் பிடித்த பாடல்கள்.
வாங்க நெல்லை.. மூன்றாவது பாடலும் இனிமையாகவே இருக்கும்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் அனைத்துமே நல்ல பாடல்கள்தாம். முதல் இரண்டு பாடல்கள் அடிக்கடி கேட்டுள்ளேன். மூன்றாவது கேட்டதில்லை. கேட்கிறேன்.
நடிகை பானுமதி அவர்கள் அவர் படங்களில் எப்படியும் சில பாடல்களை பாடி விடுவார். அவர்தான் சகலகலாவல்லியாயிற்றே.. இந்தப்பாடலும் போதையுடன் பாடும் பாடல்தான். நல்ல பிரபலமான பாடல்தான். முன்பு ரேடியோவில் கேட்டு நாங்களும் இதனுடன் பாடும் போது. விக்கி, விக்கி தொண்டை வலி வரும். படத்தில் லலிதா பாடுவதாக அமைந்த பாடல்.
நடிகர் ஜெய்சங்கர் அவர்களின் பேட்டி நன்றாக உள்ளது. நல்ல உள்ளத்தோடு விழாவை கொண்டாடி யுள்ளார். இன்று அவர் மகன் பிரபலமான கண் மருத்துவர். அவரும் ஒன்றிரண்டு தொ. கா. தொடர்களில் நடித்துள்ளார். மூன்றாவது பாடலையும் கேட்டு விட்டு வருகிறேன். இன்றைக்கு பல தகவல்களுடன் வெள்ளி பிரகாசிக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.. பானுமதி பாடல் என்றதும் என் நினைவில் முதலில் வருவது பத்து மாத பந்தம் பாடல்..! ஏனோ தெரியாது! பல நல்ல பாடல்கள் இருக்க...
நீக்குஜெய்சங்கர் மகன் தொலைக்காட்சித் தொடரில் நடித்திருக்கிறாரா? அட... இது எனக்கு செய்தி.
மூன்றாவது பாடலும் கேட்டு விட்டு சொல்லுங்கள். இன்றைய தீம்.. அதையும் அலசுங்கள்!
ஜெயசங்கருக்கு இரண்டு மகன், ஒருவர் கண்மருத்துவர், இன்னொரு மகன் தொடர் நாடகங்களில் நடித்து இருக்கிறார்.
நீக்குஓஹோ... இதுவும் எனக்கு செய்திதான்! இதுவரை தெரியாது. கண் மருத்துவர் மட்டும்தான் தெரியும். விஜய்சங்கர். நன்றிக்கா.
நீக்குஆமாம் விஜய் சங்கர்...நானும் கீழே கருத்தில் கொடுத்தேன் கண் அறுவைசிகிச்சை மருத்துவர் என்று ஆனால் பெயர் டக்கென்று நினைவுக்கு வரவில்லை ஜெய்சங்கர் போல இருப்பார் கொஞ்சம்...ஜெய்சங்கரால் நிறைய தயாரிப்பாளர்கள் வாழ்ந்ததாகச் சொல்லியிருப்பார் பேட்டியில்.
நீக்குஇரண்டாவது மகன் ஆமாம் நாடகங்களில் நடித்திருக்கிறார். அதிகம் அறிந்ததில்லை
கீதா
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஏன் என்னுடைய இன்றைய புதுப்பதிவு எ. பியின் "உங்கள் பக்கம்" இன்னமும் உதயமாகவில்லை. (இங்குதான் பனி அதிகமாக இருக்கிறது.) மூடுபனியில் மூழ்கி விட்டதா? :)) அது எ. பி பக்கம் பார்வையில் விழுந்தால்தான், என் பக்கமும் கருத்துரைகள் விழும். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பதிவு வந்திருக்கிறதா?
நீக்குஆமாம், சில நாட்களாக இபப்டிதான் ஆகிறது. இன்று கூட வெங்கட் தளத்தின் பதிவு இன்னமும் இங்கு காட்டவில்லை. சந்தேகப்பட்டு நானாக அங்கு சென்று பார்த்து படித்தேன். சமீபத்தில் செல்வாண்ணா பதிவுகள் கூட அப்படித்தான் நடக்கிறது.
பிளாஷ்பேக் : 70 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பாடல் சர்ச்சை
பதிலளிநீக்குபடத்தின் கதாநாயகி அஞ்சலி தேவி பாட மாட்டார், லலிதா(லலிதா, பத்மினி, ராகினி) தான் பாடி நடிப்பார்.
ஜஸ்ட் காபி பேஸ்ட் க்கா... ஸோ குற்றவாளி நானல்ல! நான் படமும் பார்க்கவில்லை!! ஹிஹிஹி...
நீக்குபாடல் பிரபலமான பாடலெ பழைய படம் என்றாலும் . இப்போது தொலைக்காட்சியில் பழைய பாடல் நிகழ்ச்சியில் அடிக்கடி வைப்பார்கள். (ஜெமினிகணேஷன் பாட்டு வைக்கும் போது எல்லாம்.)
நீக்குதொலைக்காட்சி சேனல்கள் பார்பபதே இல்லை... ம்ஹூம்...
நீக்குமுதல் இரண்டு பாடல்களும் அடிக்கடி கேட்டு இருக்கிறேன் வானொலியில்.
பதிலளிநீக்குகடைசி பாடல் கேட்ட நினைவு இல்லை.
ஜெயசங்கர் செய்தி முன்பே படித்து இருக்கிறேன். அவரின் உதவும் உள்ளத்தைப்பற்றி நிறைய செய்திகள் வந்து இருக்கிறது.
நன்றி கோமதி அக்கா. மூன்றாவது பாடல் கேட்பீர்களா? கேட்டுட்டி பார்ப்பீர்களா? ஆம். ஜெய்சங்கரின் உதவும் உள்ளம் பற்றி நானும் படித்திருக்கிறேன். அவரின் கலகலப்பான சுபாவம் பற்றியும்.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குகந்தா சரணம். வாங்க செல்வாண்ணா... வணக்கம்
நீக்குஇன்றைய பாடல்களில் உன்பைக் கண் தேடுதே மற்றும்
பதிலளிநீக்குநானே நானா இரண்டும் பிடித்தமானவை...
குரு பார்த்ததில்லை
'உன்னைக் கண் தேடுதே' பாடல் தகவல்களில் மட்டுமே.. பகிர்வில் இல்லை!!
நீக்குஆம் கவனித்தேன்...
நீக்குதகவலில் மட்டும் தான் உன்னைக் கண் தேடுதே...
//குரு பார்த்ததில்லை// அப்புறம் எப்படி ஜென்ம சாபல்யம் அடைய முடியும்? கமல் ஸ்ரீதேவியின் நல்ல படம் அது.
நீக்குபோதையின் பிடியில் பேதையர்...
பதிலளிநீக்குகாலக் கொடுமை..
ஆம். அதைதான் அந்தப் படங்களின் கதையும் சொல்கின்றன.
நீக்குதிரு ஜெய் சங்கர் அவர்கள் நல்ல மனம் படைத்தவர்...
பதிலளிநீக்குஅப்போதே தெரிந்த விஷயம் தானே..
ஆமாம். இப்போதும் சொன்னால் இளையதலைமுறைக்கும் தெரியுமே...
நீக்குஸ்ரீராம், இந்தப் பாடல்கள் நான் நிறைய கேட்டிருக்கிறேன் படம் பெயர் தெரிந்தாலும் பார்த்தது இல்லை , பேருந்து நிலையத்தில் இப்பாடல்கள் அப்ப ஒலிக்கும் அடிக்கடி. அவ்வளவு ஃபேமஸ்...
பதிலளிநீக்குநானே நானா பாடல் எனக்கு ரொம்பப் பிடித்த பாடல். எம் ஏ முடிச்சப்ப, இந்தப் பாட்டை கடைசி நாளில் அப்பலாம் சோசியல்டேன்னு கொண்டாடுவாங்களே அப்ப நான் பாடினேன் அதுக்குன்னு ஃப்ரென்ட் கிட்ட பாடல் வரிகள் கேட்டு வாங்கி.... பாடினேன். அப்பலாம் வாணியின் ஹைபிச் எடுக்க முடிந்தது. இப்ப சுத்தம்!
இப்பவும் கேட்டு ரசித்தேன்....எவ்வளவு நாளாச்சு கேட்டு!
அழகான இசை....வாணியின் குரல்...வாலியின் பாடல் வரிகள் சூப்பரான வரிகள்...
கீதா
வாங்க கீதா... எல்லாம் சொன்னீங்க.. ராகம் சொல்லவில்லையே...!!! ஹா.. ஹா.. ஹா...
நீக்குபானுமதி இப்படி பிரச்சனைகள் அவ்வப்போது கிளப்புவார் என்று எங்கேயோ வாசித்ததுண்டு அவருக்கு எல்லோருமே பயப்படுவாங்கன்னும்.
பதிலளிநீக்குஎன்னவெல்லாம் சர்ச்சை பாருங்க....எப்படியோ தீர்த்திருக்காங்களே!
கீதா
நாடோடி மன்னன்ல முதல்ல இவங்கதான் நடிச்சாங்க... எம் ஜி ஆருக்கும் இவருக்கும் லடாய் ஆகி, பாதில வெளில போயிட்டாங்க.. அதுவரைக்கும் எடுத்த படம் ரோல் எல்லாம் வேஸ்ட்!
நீக்குகுரு பாடல் கேட்டிருக்கிறேன் ஆனால் அதிகம் கேட்டதில்லை, ஸ்ரீராம்.
பதிலளிநீக்குரொம்ப மனதில் பதியவில்லை...
கீதா
ஜானகியம்மாவின் குரல் வீச்சு.. இளையராஜா.
நீக்குஜெய்சங்கரைப் பற்றி வாசித்திருக்கிறேன். நல்ல மனம் படைத்தவர். இப்போது அவரது மகன் கண் அறுவைசிகிச்சை மருத்துவராக இருப்பவரும் அப்பாவைப் போன்று பல உதவிகள் செய்துவருவதாக ஒரு பேட்டியில் அறிந்தேன்.
பதிலளிநீக்குகீதா
ஆமாம். உண்மை.
நீக்குஇந்தப் படத்தில் இன்னொரு பாடல் 'டைட்டில் ஸாங்' எனப்படும் 'அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்' என்னும் ஜெயச்சந்திரன் பாடல். இரண்டே வரிதான் பாடல் வரிகள். மீண்டும் மீண்டும் வரும். இது மாதிரி சிறிய புதிய முயற்சிகள் அப்போது அடிக்கடி செய்தார் இளையயராஜா. 'மூடுபனி'யில் ஒரு சிறிய தாலாட்டுப் பாடல் "ஆசை ராஜா தாலேலோ' என்னும் பாடல் நாலு வரி அல்லது ஐந்து வரிகள்தான். உமா ரமணன் குரல் என்று நினைக்கிறேன். //
பதிலளிநீக்குஆமாம்...ஜெ ச வின் அந்த வரிகள் அப்படியே ஒவ்வொரு ஸ்தாயியில் வந்துகொண்டே இருக்கும்....அது போல எம் எஸ் வி, நினைத்தாலே இனிக்கும் படத்தில் தீம் பாடல் நினைத்தாலே இன்னிக்கும் இப்பாடலை அமைத்திருக்கும் விதம் பிரமாதமாக இருக்கும்.
கீதா
அது வேறு மாதிரி.. வார்த்தைகள் இல்லாமல் படத்தின் பெயர் மட்டும் வரும். சந்தங்களிலேயே பாடல் ஓடும்.
நீக்குஇப்படி பல்லவி மட்டும் தனித்துப் பாடும் காட்சியில் தோன்றுபவர் பல்லவி!//
பதிலளிநீக்குஅட! உன்னிப்பான அவதானிப்பு!!! சூப்பர் ஸ்ரீராம்.
நெப்போலியன் என்கிற இயற்பெயரை உடைய அருண்மொழி பாடகராக அறிமுகமானார். ஆனால் அவர், தனக்கு பாடுவதைவிட Flute வாசிப்பதே இன்பம் என்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். //
ஆமாம் ஸ்ரீராம் நல்ல குரல் வளம். பேட்டி பார்த்திருக்கிறேன்.
கீதா
பல்லவி மட்டும் பாடும் பல்லவி என்று தலைப்பு கொடுத்திருக்கலாமோ!
நீக்குபல்லவி என்று டைப் அடித்தால் கூட பல்வலி என்றே வருகிறதே... என்ன உலகமடா...!
நீக்குஇங்கு நாட்டில் காலநிலை ஆடுகிறது. சிரமப்படும் மக்களை இறைவன் காக்க வேண்டுவோம்.
பதிலளிநீக்குஎமக்கு இடையிடை மின்சாரமும் இல்லாமல் போகிறது. எமக்கு தண்ணீர் மோட்டாரும் தண்ணீரை இழுக்கமுடியாமல் இயங்குகிறது. தண்ணீர் பிடித்து வைத்துள்ளோம்.
பாடல்கள் பற்றிய பகிர்வு அறிந்தோம். மூன்றுபாடல்களும் கேட்டு இருக்கிறேன்.
அடக்கடவுளே... நிலைமை சீக்கிரம் சரியாக அனைவரும் பிராத்திப்போம் சகோதரி...
நீக்குஉங்கள் வேண்டுதலுக்கு நன்றி.
நீக்குதலை நகரில் தணிந்துள்ளது. மலையகம் கிழக்கு மாகாணம் மழையால் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளது. வடக்கு மழையுடன் சூறாவளிகாற்றின் அபாயத்தில் இருக்கிறது.
மூன்றாவது பாடல் கேட்டதில்லை, ஸ்ரீராம்
பதிலளிநீக்குஅட! போட வைத்தது சுசீலாவின் குரல்! போதயில் பாடுவதற்காக மாடுலேஷன்...நல்லாருக்கு இந்தப் பாட்டு. நடுவில் வரும் பாடலை விட இப்பாடல் நன்றாக இருக்கு இசை.
கீதா
என் விருப்பத்தின் முதல் இடம் என்று நான் நினைப்பது எப்போதுமே பதிவின் இறுதியில்தான் இடம்பெறும் என்பதை அறிக...!
நீக்குமூன்று பாடல்களும் கேட்ட பாடல்கள்...... பாடல்கள் குறித்த தகவல்களை இப்படித் தேடித் தரும் உங்களுக்கு பாராட்டுகள்.
பதிலளிநீக்குவாங்க வெங்கட். நன்றி.
நீக்கு