எங்கள் B+ செய்திகள்.
விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.
சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....
======================================
திண்டுக்கல் தனபாலன்... (மன்னிக்கவும்!) திண்டுக்கல் மாவட்டம்
நிலக்கோட்டையில் 'கருணை இல்லம்' என்ற பெயரில் ஆதரவற்றோர் இல்லம் நடத்தி
வருகிறார் நியூசிலாந்தைச் சேர்ந்த ஜீன் வாட்சன். 1986ல் கன்னியாகுமரியில்
ஆதரவற்றோர் இல்லம் ஒன்றைப் பார்த்து அங்கு சில காலம் இருந்து, பின்னர் நிலக்கோட்டை வர, அங்கிருந்த மக்கள் இவரை ஒரு மருத்துவர் என்று எண்ணி, மருத்துவ உதவிகள் கேட்க, இவரும் தன்னால் இயன்ற உதவிகள்
செய்திருக்கிறார். அப்புறம் நியூசிலாந்து திரும்பிச் சென்று அங்கிருந்த தன
வீட்டை விற்று, பணம் திரட்டி, மீண்டும் இந்தியா வந்து வந்து இங்கு ஏழு குழந்தைகளை வைத்து ஆரம்பித்து, இன்று பல ஆதரவற்ற குழந்தைகளை நல்ல முறையில் இந்த இல்லத்தில் பராமரித்து, ஏழைக் குழந்தைகளுக்கு உதவி வருகிறார். இல்லத்தில் சேராத குழந்தைகளுக்கும் அவர்களது கல்வி உட்பட, பலவகையிலும் உதவுகிறாராம். தினமலர்.
==============================
===========
மதுரை
மாநகராட்சிப் பள்ளியில் படித்த வீரபாண்டியனின் அப்பா ஊர் ஊராகச்
சென்று சில்வர் பாத்திரம் விற்கும் தொழிலாளி. அம்மா ஆஸ்பத்திரியில்
துப்புரவுத் தொழிலாளி. இவர் கூட படிப்புக்காக துப்புரவுப் பணி முதல்
பரோட்டா மாஸ்டர் வேலை வரை வேலை பார்த்து அதிலேயே படித்திருக்கிறார்.
பின்னர் லயோலாவில் இலவச சீட் கிடைத்து, ஆதி திராவிடர் மாணவர் விடுதியில்
தங்கி ஐ ஏ எஸ் படித்திருக்கிறார். புத்தகங்கள் கூட இலவசமாகக் கிடைத்து வந்த
நிலையில் நடுவில் உதவிகள் நின்று விட, முருகையன் என்பவர் உதவி செய்ய,
தொடர்ந்து படித்து தமிழக அளவில் முதல் மூவரில் ஒருவராக தேர்வாகியுள்ளார்.
தினமலர்.
==============================
எம் காம்
முடித்து விட்டு ஒரு கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த லட்சுமி
விட்டல், குடும்பப் பொறுப்புகள் காரணமாக அந்த வேலையை விட, அப்புறம் 10,000
ரூபாய் முதலீட்டில் தான் வைத்திருந்த கலையை வைத்து வடபழனியில் ஒரு சிறிய
டெய்லரிங் கடையைத் தொடங்கி, சிறிய ஆர்டர்கள் பெற்று செய்து கொண்டிருந்தவர்,
இரண்டு ஆண்டுகளில் இன்னும் இரண்டு மெஷின்கள் வாங்கி சில பெண்களை வேலைக்கு
அமர்த்திக் கொண்டு, ஜீன்சுக்குப் பொருத்தமான குர்த்தித் தயாரிப்பில்
இறங்கி, 50 முதல் 2,000 ரூபாய் வரை மதிப்பில் தயாரித்து வெற்றிகரமாக விற்பனை செய்து வருகிறாராம். தினமலர்.
==============================
=============
விருதுநகரில்
தனியார் நடத்திவரும் முதியோர் இல்லத்துக்கு பல பொருட்கள் உதவி செய்கிறார்
76 வயதான ராஜாமணி அம்மாள். வசதியான குடும்பத்தைச் சேர்ந்த இவர், கணவரின்
மறைவுக்குப் பிறகு ஒருமுறை இவரின் மாமியார் விழுந்து அடிபட்டுக் கொண்டபோது
கிடைத்த அனுபவத்தில், வயதானபின் நமக்கு உதவுவோர் யார் என்ற எண்ணத்தில்
மற்றவர்களுக்கு உதவத் தொடங்கினாராம். மரணத்துக்குப் பின் தன் கண்களைத்
தானம் செய்ய எழுதி வைத்திருக்கும் இவர்,உடலை மதுரை மருத்துவக் கல்லூரி
உடற்கூறியல் துறைக்குத் தர விண்ணப்பித்துள்ளாராம். தினமலர் .
==============================
=================
பல்வேறு
நோய்களுக்கு தரப்படும் மருந்துகளால் நோயாளிகளுக்கு காய்ச்சல், ஒவ்வாமை
போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன இவை புள்ளி விவரங்கள் நம்மிடம்
இல்லாததால், இவற்றைச் சேகரம் செய்து ஆய்வு செய்ய மத்திய 'அரசு பார்மோகோ
விஜிலென்ஸ் ப்ரோக்ராம் ஆஃப் இந்தியா' எனும் ஐந்தாண்டுத் திட்டததை 2010
முதல் செயல்படுத்தி வருகிறது.பயிலரங்கம் கருத்தரங்கம் ஆகியவை இங்கு
நடத்தப்படுவதோடு மருந்துகளின் பக்க விளைவுகள் குறித்து, தனியார்
மருத்துவர்கள் உள்ளிட்டோர், உடனுக்குடன் தகவல் தர வசதியாக pharmacovigilancemmcggrh.com எனும் இணையதளம் விரைவில் உருவாக்கப் படும் என்று செய்தி சொல்கிறது தினமலர்.
===========================
பியூஸ் மானுஸ் என்ற ராஜஸ்தானைச்
சேர்ந்த வாலிபர். 'எங்கோ பிறந்து இங்கு வந்துன்னு எழுதிடாதீங்க...நான்
இங்கேயே பிறந்தவன், வளர்ந்தவன்' என்னும் இவர் பிறந்தது முதலே சேலம்
மாவட்டத்தில் இருக்கிறார். பள்ளியில் படித்தபோது ஆசிரியர் மாணவர்களை
மலையின் படம் வரையச் சொன்னபோது பிரவுன் நிறத்தில் வரைந்தாராம். ஆசிரியர்
பச்சை நிறத்தில் வரையச் சொன்னபோது இப்போது எங்கே அப்படி இருக்கிறது என்று
கேட்டு திகைக்க வைத்தாராம். கல்லூரி படிக்கும்போது தரமான கல்விக்காகப்
போராட்டம் நடத்தி சிறைக்குச் சென்றுள்ளார். கல்லூரி முடிந்து வந்தபிறகு
மலைப் பகுதிகளில் மரங்கள் நட ஆரம்பித்து ஒரு லட்சத்துக்கும் அதிகமாக
நட்டிருப்பாராம். மேட்டூரில் கெம்ப்ளாஸ்ட் சன்மார் நிறுவனம் வெளியேற்றி
வரும் நச்சுக் கழிவுகளை மக்களைத் திரட்டி எதிர்த்துப் போராடியிருக்கிறார்.
2008ல் ஜிண்டால் குழுமம் கஞ்ச மலையில் இருந்து இரும்புத்தாது வெட்டி எடுக்க
திறந்தவெளிச் சுரங்கத்தில் வெடி வைத்து மலையை உடைத்து, அங்கு வாழ்ந்த
மக்களுக்குக் கொடுத்த தொல்லையை எதிர்த்துப் போராடி அந்நிறுவனத்தை
பின்வாங்கச் செய்திருக்கிறார். மக்களுக்கு அந்த மலையிலிருந்துதான்
காய்கறிகள் கிடைக்கிறதாம்.'மால்கோ' நிறுவனம் 96லிருந்து ஏற்காடு மற்றும்
கொல்லி மலையில் அனுமதியின்றியே தாது வெட்டி எடுத்து கழிவுகளை காவிரி
ஓரத்தில் கொட்டி என்று செய்து கொண்டிருந்த அட்டூழியங்களை, மக்களுடன் போராடி
நிறுத்தினாராம்.
இவரின் முக்கியப் பங்களிப்பு கன்னங்குறிச்சியில் இருக்கும் மூக்கநேரி பறவைகள் சரணாலயம். இந்த
பிரம்மாண்ட ஏரியை இரண்டே வருடங்களில் பறவைகள் சரணாலயமாக மாற்றி
இருக்கிறார். 2009-10 சேலத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்ட காலத்தில் ஏரியைத் தூர் வாரி
அந்த மண்ணைக் கொண்டு ஏரியில் சிறுசிறு மணல் திட்டுகளை உருவாக்கி, அவற்றில்
புங்கன், கருவேலம் அரச மரம் ஆழ மரம், மூங்கில், சீத்தாப்பழம், சிங்கப்பூர்
செர்ரி, கோணப் புளியங்காய் எனப் பல்வேறு விதமான மரக் கன்றுகளை நட்டு, மணல்
திட்டு கரையாமளிருக்க பக்கவாட்டில் அருகம்புல், வெட்டி வேர் மூங்கில்
ஆகியவற்றையும் வைத்ததில், (எல்லா வேலையும் மக்கள் உதவியுடன் 17 ரூபாய்
செலவில் ஒரே நேரத்தில்) அடுத்த சில மாதங்களில் பெய்த நல்ல மழையில் 7 செ.மீ.க்கு நிலத்தடி நீர் ஊறியதாம். ஒவ்வொரு மணல் திட்டும் சிறு தீவு போல
மாற, இப்போது 41 வகையான பறவைகள் அங்கு தங்கியுள்ளனவாம். 45 மணல்
திட்டுகள், 10,000 த்துக்கும் அதிகமான மரங்கள். இதை ஒரு சிறந்த முன் மாதிரியாக தெரிவு செய்திருக்கும் தமிழக அரசு, மாநிலம் முழுக்க உள்ள 500 ஏரிகளில் இதே போலச் செய்யப் போகிறதாம்.
விநாயகர் சதுர்த்திக்கு விநாயகரை இங்கு கரைக்க முற்பட்ட மக்களைத் தடுக்க முயன்று தோற்றிருக்கிறார். 'நானும் இதற்குப் பொறுப்பு என்னைக் கைது
செய்யுங்கள்' என்று கோர்ட்டில் நின்றிருக்கிறார். பயனேதுமில்லை என்றாலும்
பரவலான கவனத்தைப் பெற்றிருப்பதில் வரும் வருடங்களில் மக்கள் இந்தச் செயலைக்
கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கக் கூடும்.
சேலம் தருமபுரிக்கு இடையில் 1500 ஏக்கர் பரப்பளவில் ஒரு பண்ணையை உருவாக்கி
இருக்கிறாராம் பியூஸ் மானுஸ். பலருடைய முதலீட்டில் இவருடைய நிர்வாகத்தில்
மரங்கள் வளர்க்கப் படுகின்றனவாம். இளைஞர்களுக்கு கிரீன் பிசினஸ் கற்றுத்
தருகிறார்களாம். சில மாதங்கள் இவருடனேயே தங்கி (உணவு, தங்குமிடம் இலவசம்) படிக்க முன்வருபவர்களுக்கு, இயற்கையுடன் இணைந்து வாழ கற்றுக் கொடுத்து, அத்துடன் இணைந்து மக்களுக்கான அரசியலையும் போதிக்கி
றா
ராம்.
விகடனில் பாரதி தம்பி எழுதியுள்ள கட்டுரை இது.
பரோட்டா மாஸ்டர் கலக்டர் ஆனது குமுதத்தில் வாசித்தேன்
பதிலளிநீக்குவயதான காலத்தில் பிறருக்கு உதவும் ராஜாமணி அம்மாள் பற்றிய செய்தி நெகிழ்ச்சி
அனைத்துமே அருமையான பாசிட்டிவ் செய்திகள்.
பதிலளிநீக்குகடைசி செய்தி - நிச்சயம் பாராட்டப் படவேண்டியவர் தான்....
முதலும் கடைசியும் சூப்பரோ சூப்பர், மற்றவை சூப்பரோ சூப்பர். :)))))
பதிலளிநீக்குசிறந்த தகவல் பரிமாற்றம் தொடருங்கள்.
பதிலளிநீக்குபாஸிடிவ் செய்திகள் அருமை.
அனைத்தும் அருமையான செய்திகள்... நன்றி...
பதிலளிநீக்குhttp://pharmacovigilancemmcggrh.com/ கவனிக்க வேண்டிய ஒன்று...
அனைத்தும் அருமையான செய்திகள்! வாழ்த்துக்கள்!நன்றி!
பதிலளிநீக்குஎல்லா தகவல்களும் மிக அருமை
பதிலளிநீக்குஅனைத்துமே அருமையான செய்திகள்.
பதிலளிநீக்குநீங்க மேயற லிஸ்டில் 'பூவனம்' அப்டேட் ஆகலை, பாருங்கள்!
பதிலளிநீக்குநம்பிக்கை தரும் நல்ல செய்திகள். பகிர்வது தொடரட்டும்.
பதிலளிநீக்குசெய்திகளை முந்தித்தரும் தினத்தந்தியில் எதுவும் +ve வருகிறதா?
பதிலளிநீக்குஅனைத்துமே அருமையான செய்திகள். தொடருங்கள்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குமோகன் குமார்,
வெங்கட் நாகராஜ்,
கீதா சாம்பசிவம்,
சசிகலா,
திண்டுக்கல் தனபாலன்,
'தளிர்' சுரேஷ்,
ஜலீலா கமால்,
கோவை2தில்லி,
ஜீவி ஸார், ஏன் அப்டேட் ஆகவில்லையென்று தெரியவில்லை.
ராமலக்ஷ்மி,
அப்பாதுரை, தினத்தந்தியில் என்ன ஸ்பெஷல்?
அமைதிச்சாரல்,
பின்னூட்டங்களுக்கு நன்றி.
வார வாரம் திண்டுக்கல் (தனபாலன்) செய்திகளே வருகிறது என்ன மாயமோ :-)
பதிலளிநீக்குபாசிடிவ் செய்திகள் படிக்கப் படிக்க மனதிற்குள் பாசிடிவ் அலைகள் பரவுகிறது சார்... அருமையான பணி தொடர்ந்து உற்சாகமாக செய்யுங்கள்