விதி வழியே வாழ்க்கை அமைகிறது என்றால் பூஜைகளும், பரிகாரங்களும் எதற்கு? விதியை வெல்ல இயலவில்லை என்றால் அவற்றால் என்ன பயன்?
நாம்
விதி வழியே அனுபவிக்க வேண்டியவற்றை பிராரப்த கர்மா ஒட்டியே, இறைவன் நமது
வாழ்க்கையை நிர்ணயிக்கிறான். இது அமைவது நமது முந்தைய பிறவியில் செய்த
நன்மை - தீமைகளைப் பொறுத்தது. இதை மீறி எதுவும் நடப்பதில்லை.
நைவேத்தியம் செய்தால் பகவான் சாப்பிடுகிறாரா? பின் உணவையும் உண்பனவற்றையும் நைவேத்தியம் செய்வது எதற்கு?
நிவேதனம் என்றால் சுவாமியைச் சாப்பிடச் செய்வது என்பது பொருளல்ல. 'நிவேதயாமி' என்றால், 'அறிவிக்கிறேன்' என்று பொருள்.