கேள்வி - பதில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேள்வி - பதில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12.5.15

விதியை வெல்ல இயலவில்லை என்றால் என்ன பயன்?


விதி வழியே வாழ்க்கை அமைகிறது என்றால் பூஜைகளும், பரிகாரங்களும் எதற்கு?  விதியை வெல்ல இயலவில்லை என்றால் அவற்றால் என்ன பயன்?
          

                                                                                                                                                                          
                                                                                   Image result for ramanar images
 
நாம் விதி வழியே அனுபவிக்க வேண்டியவற்றை பிராரப்த கர்மா ஒட்டியே, இறைவன் நமது வாழ்க்கையை  நிர்ணயிக்கிறான்.  இது அமைவது நமது முந்தைய பிறவியில் செய்த நன்மை - தீமைகளைப் பொறுத்தது.  இதை மீறி எதுவும் நடப்பதில்லை.

ஏனென்றால் இது ஒரு திட்டமிட்ட கணக்கு.  இந்த 'பாலன்ஸ் ஷீட்' டை மாற்றினால் கணக்கு சரிப்பட்டு வராது! எது நடக்க முடியாதோ, அதற்கு நாம் பிரயாசை எடுத்துக் கொண்டாலும் நடைபெறாது.  எது நடக்க வேண்டுமோ, அது நாம் எவ்வளவு தூரம் தடுத்தாலும் நடந்தே தீரும்.

ஓர் இயந்திரத்தை நிறுவும்போதே அது இன்னின்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து அமைத்து விடுகிறோம்.  அதை மாற்றிச் செய்ய இயந்திரத்துக்கு அதிகாரம் இல்லை.  அதைப்போல நாம் வந்து பிறக்கும்போதே நம்மால் இன்னின்ன நடக்கவேண்டும் என்பதை ஆண்டவன் தீர்மானித்து விடுகிறான்.  அதிலிருந்து நாம் மாறுபட முடியாது.

மனிதன் பக்தியினால் இன்ன செய்கை பிராரப்தம், இன்ன செய்கை அப்படி அல்ல என்பதை உணரும் பக்குவம் பெறுகிறான்.  அதன் மூலம் அவன் மேலும் தீயனவற்றில் ஈடுபட்டு, அடுத்த பிறவிக்கும் சுமைகளைச் சேர்த்துக் கொள்ளாமல் தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறான்.  அப்படி மனப்பக்குவம் பெற, இது உதவும்.  விளைவுகளின் சுகமும் துக்கமும் அப்படிப்பட்டவனைப் பாதிப்பதும் இல்லை. 
 
                                                                                                              (Teachings of Ramana என்ற புத்தகத்திலிருந்து)
 
 
 
நைவேத்தியம் செய்தால் பகவான் சாப்பிடுகிறாரா?  பின் உணவையும் உண்பனவற்றையும் நைவேத்தியம் செய்வது எதற்கு?


                                                                                    Image result for swami ramakrishna images
 
நிவேதனம் என்றால் சுவாமியைச் சாப்பிடச் செய்வது என்பது பொருளல்ல.  'நிவேதயாமி' என்றால், 'அறிவிக்கிறேன்' என்று பொருள். 

"பகவானே, இந்த வேளைக்கு உன் கருணையால் எனக்கு இந்த உணவு கிடைத்திருக்கிறது.  அதற்கு என்னுடைய நன்றி!" என்று அறிவித்து விட்டு, கடவுளின் நினைவுடன், நன்றி உணர்வுடன் உண்ண வேண்டும்.  நமக்குக் கிடைப்பது எல்லாமே பகவான் கொடுத்தது.  அதை அவரிடமே காட்டி, நன்றி சொல்லி அனுபவிப்பதில் தவறு என்ன?
 
 
                                                                                                                                              (பகவான் ராமகிருஷ்ணர்)