சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
kalki லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
kalki லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
5.7.18
2.4.12
மணிக்கொடி காலம்
சமீபத்தில் படித்த புத்தகம். 'மணிக்கொடி காலம்' - பி எஸ் ராமையா எழுதியது. அதில் படித்ததிலிருந்து இங்கு கொஞ்சம் பகிர்வு.
மணிக்கொடிக்கு அந்தப் பெயர் வரக் காரணம் பற்றி பி எஸ் ராமையா குறிப்பிட்டுள்ளதாவது ...
"......சென்னைக் கோட்டைக்கு எதிரில் கடற்கரை மணலில் அமர்ந்து சீனிவாசன், வ.ரா, சொக்கலிங்கம் மூவரும் ஆரம்பிக்கப் போகும் பத்திரிகைக்கு என்ன பெயர் வைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது மாலை மணி ஆறு. கோட்டை மதில் மேடை மேல் கம்பத்தில் பறந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஆட்சிக்கொடி தினசரி வழக்கப் படி இறக்கப்பட்டது அவர்கள் கண்ணில் பட்டது. "அந்நிய ஆட்சிக் கொடி விழுந்தது. கம்பத்தின்மேல் நமது கொடி ஏறும் வேளை வந்து விட்டது" என்று ஒருவர் சொன்னார். பத்திரிகைக்குக் கம்பத்தில் ஏறப்போகும் புதிய பாரத சக்திக் கொடிப் பெயராகவே வைக்கவேண்டும் என்ற கருத்து எழுந்தது. சீனிவாசன் கம்பன் கவிதையில் திளைத்தவர். ராமகாதை பாலகாண்டத்தில் கோசிக முனிவனைத் தொடர்ந்து ராமனும் இலக்குவனும் மிதிலை நகருக்குள் நுழைந்தபோது அந்தக் கடிநகரின் கோட்டை மதில்கள் மீதும், மாடங்களின் மீதும் கொடிகள் பறந்து ஆடியது, ஐயனை 'வருக வருக' என்று அழைப்பது போல இருந்தது என்கிறான் கம்பன்.
"மையறு மலரின் நீங்கி
யான் செய்மா தவத்தின் வந்து
செய்யவள் இருந்தாள்....."
என்று சேதி சொல்லி ராமனை அழைத்த அக்கொடிகளைக் கம்பன் 'செழுமணிக் கொடிகள்' என்று குறிப்பிட்டிருப்பது சீனிவாசன் நினைவுக்கு வந்தது. அவர் அதைச் சொன்னவுடன் வ.ரா. "கம்பன் மட்டுமென்ன? பாரதியாரும் 'தாயின் மணிக்கொடி' என்றுதானே பாடியிருக்கிறார்?" என்றார்.
அந்த மாலைப் பொழுதில் கடற்கரை மணலில் புதுப் பத்திரிகைக்கு 'மணிக்கொடி' என்று பெயர் சூட்டப்பட்டது..........".
இந்தச் சம்பவங்கள் நேரில் பார்த்தது போல பி எஸ் ராமையா சொல்லியிருந்தாலும் இதற்குப் பிறகு வெகுநாட்கள் கழித்தே அவர் இவர்களுடன் இணைகிறார். அதுவும் எழுத்தாளராக இல்லாமல், விளம்பரப் பொறுப்பாளராக!
அந்த நாளில் லண்டனில் இருந்து ஞாயிறன்று மட்டும் வெளிவரும் 'சண்டே அப்சர்வர்' என்ற பத்திரிகையின் பாதிப்பில் இதையும் ஞாயிறன்று மட்டும் வெளிவரும்படி, தொடங்கப் பட்ட மணிக்கொடி இதழ் முதன் முதலாக 1933 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி வெளியானது. அதைப் படித்து விட்டு முதன் முதலாகச் சென்று பாராட்டியவர் கல்கி.
அவர் அதில் உடனடியாக இணைய முடியாமல் அப்போதுதான் விகடனில் இணைந்திருந்ததால் (அதுவரை நவசக்தியில் பணியாற்றிக் கொண்டிருந்தாராம்) இதில் அவரால் இணைய முடியாமல் போனதாகக் குறிப்பிடுகிறார் பி எஸ் ராமையா. இரண்டாவதாகச் சென்றவர் இவர்தானாம். கல்கி அப்போது "இந்தத் தமிழ் மாதிரி யாரால் எழுத முடியும்? இந்த மாதிரி வேறு யாரால் மொழி பெயர்க்க முடியும்" என்று தமது உள்ளப் பரபரப்பையும், உவகையையும் கொட்டினாராம். அதற்குக் காரணமாக இருந்த வரி,
அவர் அதில் உடனடியாக இணைய முடியாமல் அப்போதுதான் விகடனில் இணைந்திருந்ததால் (அதுவரை நவசக்தியில் பணியாற்றிக் கொண்டிருந்தாராம்) இதில் அவரால் இணைய முடியாமல் போனதாகக் குறிப்பிடுகிறார் பி எஸ் ராமையா. இரண்டாவதாகச் சென்றவர் இவர்தானாம். கல்கி அப்போது "இந்தத் தமிழ் மாதிரி யாரால் எழுத முடியும்? இந்த மாதிரி வேறு யாரால் மொழி பெயர்க்க முடியும்" என்று தமது உள்ளப் பரபரப்பையும், உவகையையும் கொட்டினாராம். அதற்குக் காரணமாக இருந்த வரி,
"A thing of beauty is a joy for ever" என்ற ஆங்கில வாக்கியத்துக்கு மணிக் கொடி கொடுத்திருந்த "அழகிய ஒரு பொருள் அழியா இன்பம்" என்ற தமிழ் வாக்கியம்தானாம்.
1900 த்தின் ஆரம்பங்களில் சென்னையிலிருந்து வெளி வந்து கொண்டிருந்த விவேக சிந்தாமணி என்ற தமிழ் மாதப் பத்திரிகையில்தான் பி ஆர் ராஜம் ஐயர் தமது கமலாம்பாள் சரித்திரத்தைத் தொடர்கதையாக எழுதினாராம்.
பின்னாளில் தினமணி ஆசிரியரான ஏ என் சிவராமனுடனான தன் அனுபவங்களையும் அங்கங்கே சொல்கிறார் ஆசிரியர்.
அன்றைய ஆட்சியாளர்களுக்குச் சாதகமாகவே செய்திகளைத் திரட்டித் தந்து கொண்டிருந்த ராய்ட்டருக்கும், அசசோசியேட்டட் பிரஸ்சுக்கும் நடுவே உண்மைச் செய்திகளை செய்தி நிறுவனங்களுக்குக் கொடுக்க 'ஃப்ரீ பிரஸ்' என்ற ஒன்றைத் தொடங்கிய வரலாறையும் எழுதி இருக்கிறார். தொடங்கியவர் மணிக்கொடி நிறுவனர்கள், ஆசிரியர்களில் ஒருவரான கு சீனிவாசனின் கல்லூரிப் பருவத் தோழர் சதானந்த்.
நமக்கு எல்லோருக்கும் பாரதிதாசனின் "தமிழுக்கும் அமுதென்று பேர்" பாடல் தெரியும். தெரியாத ஆட்களே இருக்க முடியாது. அந்தப் பாடலை வெளியிட்டது (முதன் முதலில்) மணிக்கொடி. அதுவும் தன் இரண்டாவது இதழிலேயே. அப்போது பாரதிதாசன் என்றால் நிறையப்பேர் யாரென்று அறிந்திருக்கவில்லை என்கிறா பி எஸ் ஆர்.
மணிக்கொடிக் காலம், மணிக்கொடி இலக்கியம் என்றாலே எரிச்சல் அடைந்த எழுபதுகளின் பல எழுத்தாளர்களைப் பற்றியும் சொல்கிறார்!
ஆரம்ப காலங்களில் பி எஸ் ராமையா பக்கெட் ஷாப்பில்தான் வேலை பார்த்தாராம்.
ஆரம்ப காலங்களில் பி எஸ் ராமையா பக்கெட் ஷாப்பில்தான் வேலை பார்த்தாராம்.
ஆமாம், 'பக்கெட் ஷாப்' என்றால் என்னவென்று தெரியுமோ....?
---------------------------------------------
மணிக்கொடி காலம் (சாகித்ய அகாடெமி பரிசு பெற்றது)
ஆசிரியர் பி எஸ் ராமையா
மெய்யப்பன் பதிப்பகம்
முதற்பதிப்பு ஜூலை 1980
இரண்டாம் பதிப்பு ஆகஸ்ட் 2004.
விலை : 80.00
விலை : 80.00
5.3.12
படித்ததும் ரசித்ததும் பதைத்ததும் - வெட்டி அரட்டை
சுகா எழுதிய 'மூங்கில் மூச்சு'த் தொடருக்குப் பின் விகடனில் தற்சமயம் ராஜு முருகன் எழுதும் தொடர் வட்டியும் முதலும் என்ற பெயரில் வருகிறது. சுகா அளவு சுகமில்லை. எனினும் ராஜு முருகன் தஞ்சைக்காரர் என்றதும் ஒரு சுவாரஸ்யம் வந்தது. தஞ்சையைப் பற்றிச் சொல்லும்போது சுகமாகப் படிக்கத் தோன்றியது.. தஞ்சையில் பதின்மப் பருவம் கடந்ததால் இந்த ஆர்வம்! கடைசி இதழில் 'ஞானம் வொயின்ஸ் கடையில் நின்று....' என்று படித்த போது அங்கிருந்த ஞானம் தியேட்டர் என்ன ஆனது என்ற கவலை வந்து விட்டது! எத்தனை படம் பார்த்திருக்கிறேன் அங்கு... தஞ்சையை விட்டு வந்த பின் மீண்டும் அங்கு செல்லச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பதால் இப்போது எப்படி இருக்கும் என்று சென்று பார்க்க ஆவல். யாகப்பா திரையரங்கம், மங்களாம்பிகா ஹோட்டல், சாந்தி ஸ்டோர்ஸ், ஆனந்த் பவன்.... எல்லாம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
அதே இதழில் கீழே உள்ள வரிகளையும் எழுதி இருக்கிறார்.
"சிரிப்பு, அழுகை, பிறப்பு, இறப்பு எனப் பாடல்களாலேயே ஆகிவிட்டது இந்த வாழ்க்கை. அதுவும் நாலு தலைமுறைக் கண்ணீரையும் புன்னகையையும் இந்தப் படுபாவி இளையராஜா எடுத்துக் கொண்டார்"
எனக்கும் இளையராஜா பிடிக்கும். என்றாலும் முதல் முறை இந்த வரிகளைத் தாண்டிய உடன் தடுக்கி, மறுபடி படித்தேன். பிடிக்கிறது என்று சொல்லத்தான் அந்த வார்த்தைப் பிரயோகம் என்றாலும்.............. கொஞ்சம் நெருடுகிறது.
சுகாவும் இளையராஜா பற்றி சிலாகித்து எழுதி இருக்கிறார். அவரை அவரின் இரண்டாம் வாத்தியார் என்னும் வகையில் அவரின் வயலின் ஆசான் சொல்வது போல, தூத்துக்குடி விமான நிலையத்தில் அவரைக் கண்டதும் அங்கிருந்த அதிகாரி - ஜி ராமனாதனின் உறவினர் என்று அறிமுகப் படுத்திக் கொண்டு மரியாதை செய்ததோடு காலில் விழுந்து வணங்கியதாக எழுதி இருக்கிறார்.
-------------
சென்ற வாரம் பெங்களூருவில் நடந்த ஒரு சம்பவம் பற்றிப் படித்த போது, செய்திச் சேனல்களில் பார்த்த போது பதைத்தது.
ஒரு தனியார் நிறுவனத்தில் தீயணைப்புத் துறை நடத்திய பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒத்திகையில் நடந்த அசம்பாவிதம். ஆபத்து நேரத்தில் நடந்து கொள்ள வேண்டிய ஒத்திகை என்று சொல்லி அந்த நிறுவனத்தின் ஒரு பெண் அதிகாரியை அவருக்கு விருப்பமில்லாத போதும் வற்புறுத்தி பலவந்தமாக மாடியிலிருந்து கயிறு வழியாக இறங்கச் சொல்லி ஒத்திகை தொடங்க, பலமில்லாத அந்தக் கயிறு அறுந்து விழுந்து தலையில் அடிபட்ட அந்த பெண் அதிகாரி அங்கேயே இறந்து போனார்.
என்ன அநியாயம்.... என்ன பொறுப்பின்மை... இது பச்சைக் கொலை இல்லை...? இதை நடத்தியவர்களுக்கு தண்டனை ஏதும் உண்டா?
-------------------
விகடன் பற்றி இன்னொரு தகவல். சென்னையில் மட்டும் வெளியாகும் விகடனின் இனிப்பான 'என் விகடன்' புத்தகத்தில் சென்னைப் பதிவர்களை (மட்டும்) அறிமுகப் படுத்தத் தொடங்கி உள்ளார்கள். கேபிள் சங்கர், ஆதிஷா, சென்ற வாரங்களில் அறிமுகப் படுத்தப் பட்டிருந்தனர். இந்த வாரம் லக்கிலுக் யுவகிருஷ்ணா.
நீங்கள் சென்னைப் பதிவராக் இருக்கும்பட்சத்தில் "வாரம் ஒரு வலைப் பதிவர்" நீங்களும் உங்கள் ப்ளாக்கும் இடம்பெற உங்களைப் பற்றிய சுய குறிப்பு, உங்கள் வலைப் பதிவின் முகவரி, உங்கள் மொபைல் நம்பர் ஆகியவற்றை chennai@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மெயில் தட்டச் சொல்கிறது விகடன்.
ரெடி...ஜூட்...
====================
அரசியலிலேயே குளிக்கும் துக்ளக் பத்திரிகையில், சமீபத்தில் இரண்டு தொடர்கள் ஆரம்பம். ஆன்மீகப் பிரியர்களுக்கு வேளுக்குடி கிருஷ்ணனின் 'ஸ்ரீமத் பாகவதம்', வாலி எழுதும், எம் ஜி ஆருடனான தன் அனுபவங்களைச் சொல்லும் தொடர் ஒன்று.
துக்ளக்கில் வந்த கேள்வி பதிலில் ஒரு சுவாரஸ்யம்.
பெங்களூர் மல்லேஸ்வரம் மர்கொசா சாலையில் ராஜ்போக் என்ற ஹோட்டலில் தங்கம் கலந்த தோசை 1011 ரூபாய்க்கும் வெள்ளி கலந்த தோசை 151 ரூபாஈகும் விற்கப் படுவது குறித்து ஒருவர் கேள்வி கேட்டிருந்தார்.
எம் ஜி ஆர் தங்கபஸ்பம் சாப்பிடுவார் என்றெல்லாம் கேள்விப் பட்டிருக்கிறேன். தங்கத்தை அப்படியே தோசையில் போட முடியுமா, அதையும் சாப்பிடுவார்களா, இவ்வளவு விலை கொடுத்து, என்ன பயன் என்றெல்லாம் தோன்றியது.
தகவல் உண்மையா பொய்யா என்று கே ஜி கௌதமன், ராமலக்ஷ்மி, ராம்வி போன்ற பெங்களூரு வாசிகள்தான் சொல்லவேண்டும்! (R. கோபியைக் கேட்கலாம். அவரும் பெங்களுருதான். ஆனால் அவர் இதையெல்லாம் படிப்பதில்லையே...!!)
============================== ============
கல்கியில் ஆறு வாரங்களாக நாகூர் ரூமி எழுதும் தியானம் பற்றிய தொடர் ஆரம்பித்திருக்கிறது. சுவையாகச் செல்கிறது. நாகூர் ரூமி எழுதிய 'அடுத்த வினாடி' யும், 'செலவைக் குறைங்க சார்' புத்தகமும் படித்திருக்கிறீர்களோ...
==========================================
மார்ச் இரண்டாம் வாரத்தில் வெளியிடப் பட இருக்கும் 'டிஜிடல்' கர்ணனுக்கு ட்ரெயிலர் எல்லாம் வெளியிட்டு விளம்பரப் படுத்தப் படுவதை இட்லி வடை பதிவுகளில் பகிர்ந்திருந்தார்கள். அதன் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் சிவாஜியின் நண்பர் திரு வி என் சிதம்பரம் பேசியதாக 'ஜூவி'யில் படித்ததன் பகிர்வு.
புட்டபர்த்தி பாபா ஒரு முறை திரு வி என் சிதம்பரத்திடம் சிவாஜி கணேசனை தான் பார்க்க விரும்புவதாகக் கூறினாராம். இவரும் சிவாஜியிடம் அதைச் சொல்ல அவரும் சந்தோஷமாகச் சம்மதித்து, இருவரும் சந்திக்க ஏற்பாடானதாம். பாபாவைச் சந்திக்க வருபவர்கள் வர இரண்டு வழி உண்டாம்., முக்கியமானவர்களுக்கு குறுகிய நடைவழி. மற்றவர்களுக்கு நீண்ட நடை வழி. வி என் சி யுடன் சென்ற சிவாஜியை பாபா நீண்ட நடை வழியில் வரச் சொன்னாராம். ஒரு மாதிரி உறுத்தினாலும் காட்டிக் கொள்ளாமல் அந்த வழியிலேயே நடந்து போய் பாபாவைச் சந்திக்க, அவர் சிவாஜியைத் தழுவிக் கொண்டு விட்டுச் சொன்னாராம்..."உங்கள் நடையைப் பார்த்து ரசிப்பதற்காகத்தான் நீண்ட வழியில் வரச் சொன்னேன்..!"
=========================================
14.12.11
படித்ததைப் பகிர ஒரு வெட்டி அரட்டை....
அந்தக் காலத்தில் விரும்பிப் படித்த பல நாவல்களை புத்தக வடிவில் வாங்கும்போது 'ஆனாலும்...' என்ற ஒரு சின்ன ஏக்கம் இருக்கும்! அதாவது அப்போது தொடர்கதையாக வந்த போது வாராவாரம் கதைகளுக்கு ஜீவன் சேர்த்த ஓவியங்கள் இல்லாமல் புத்தகம் படிப்பது ஏதோ இழந்தது போலத்தான் இருக்கும். பைண்ட் செய்து வைத்திருக்கும் புத்தகங்கள் வசதியானவை. படங்களுடன் படித்து ரசிக்கலாம். ஆனால் எங்கள் வீட்டு விசிறி வாழை, வாஷிங்டனில் திருமணம் பொன்னியின் செல்வன், யவனராணி போன்ற பல புத்தகங்கள் பூச்சி அரித்து வீணாய்ப் போனது கஷ்டமாக இருந்தது.
புத்தகமாகப் போடுகிறவர்கள் வாராவாரம் வந்த அந்தப் படங்களையும் சேர்த்து போடக் கூடாதோ என்று தோன்றும். யவனராணி போன்ற கதைகளில் டைபீரியசையும் யவனராணியையும் அட்டையில் மட்டுமே காண முடியும். உள்ளே வரிகள், வரிகள், வரிகள்.....
விகடன் முதல்முறையாக அந்தக் குறையைப் போக்க வருகிறது. அதைப் படித்த நாள் முதலே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. நிறையப் பேருக்கு ஏற்கெனவே தெரிந்தும் இருக்கும். படித்திருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள். ஆனாலும் சும்மா பகிர்ந்து கொள்கிறேன்!
2216 பக்கங்களில் 5 பாகங்களாக கெட்டி அட்டையுடன் 1,350 ரூபாய், ஆனால் 31-12-2011 க்குள் முன்பதிவு செய்தால் பொன்னியின் செல்வன் புத்தகம் 999 ரூபாய்க்குத் தருவதாக விளம்பரம். ஓவியர் மணியம் தீட்டிய ஒரிஜினல் வண்ண ஓவியங்களுடன் என்பதுதான் விசேஷம். (புத்தகத்தில் கருப்பு வெள்ளைதான் வந்தது - முதல் முறை) "இது வரை நீங்கள் பார்த்திருக்கவே முடியாத பிரமிப்பான வடிவில்" என்று ஆசை காட்டுகிறது.
ரூபாய் அதிகம் என்று தோன்றினாலும் நிச்சயம் நிறைய பேர் விரும்புவார்கள் என்றுதான் தோன்றுகிறது. (ஓவியங்கள் இல்லாத பதிப்புகள் 250 ரூபாயிலிருந்து 300 ரூபாய்க்குள் கிடைக்கிறது - ஐந்து பாகங்களும். ஐந்து பாகங்களும் ஒரே புத்தகமாய்க் கூட கிடைக்கிறது. டைரி சைஸில் என்ற விளம்பரத்துடன்)
****************************************************
பத்து நாட்களுக்குமுன் படித்த இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். கடத்தப் பட்ட 22 டைனோசர் முட்டைப் படிமங்களை சீனாவிடம் அமெரிக்கா தந்ததாகப் படித்த செய்தி.
வயது 6.5 கோடி ஆண்டுகளுக்கும் மேல் இருக்கலாம் என்றும் ஏலம் விடப் படுவதற்கு இவை கடத்தப் பட்டதாகவும் தெரிகிறது.
சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த முட்டைகளில் 19 முட்டைகளில் உயிர் பெறக் கூடிய முதிர்வுறாக் கருவுரு உயிர் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்ற செய்திதான்.
மூன்றாவது முறை அமெரிக்கா இப்படி திருப்பி தந்திருக்கிறதாம்.
ஒவிராப்டர் வகையைச் சேர்ந்த முட்டைகளாம். சீனாவின் தெற்குப் பகுதியில் இருக்கும் குவாங்க்டன் மாகாணத்தில் கிடைக்கப் பெற்றதாம்.
***********************************************************
மறைந்த தேவ் ஆனந்த் பற்றிய சுவாரஸ்ய தகவல் ஒன்றும் படித்தேன். தேவ் ஆனந்துக்கு முஹம்மது ரஃபி பல பாடல்கள் பாடியிருக்கிறார்.
ஆனால் முஹம்மது ரஃபிக்காக தேவ் ஆனந்த் ஒரு பாடல் பாடியிருக்கிறாராம். 1966 ஆம் வருடம் பியார் மொஹப்பத் என்ற படத்தில் ஒரு பாடலின் இடையே வரும் வரிகளை தேவ் ஆனந்த் பாடினாராம்.
************************************************************
கடிதங்கள் எழுதும் காலத்தில் போஸ்ட் கார்டாக இருந்தாலும் சரி, இன்லேன்ட் லெட்டராக இருந்தாலும் சரி எங்கள் குடும்பத்துக்கே ஒரு வழக்கம் உண்டு. சுருக்கமாக எழுதிப் பழக்கமே இல்லை! பொடிப் பொடியாக எழுதுவது முதல் மார்ஜினில் கோணம் மாற்றி எழுதுவது, ஸ்கெட்ச் பேனாவில் - ஏற்கெனவே எழுதியிருக்கும் இடையே பெரிய எழுத்துகளில் ஒரு செய்தி என்றெல்லாம் எழுதி ஒட்டிய பின்னும் அனுப்புனர் முகவரியின் மேலும் கீழும் கூட சில வரிகள் எழுதி அனுப்புவோம்!
இது எதற்கு நினைவுக்கு வந்தது என்றால், பொன்னியின் செல்வன் செய்தியை மட்டுமே பகிரும் எண்ணம் இருந்தாலும் ஒரு பதிவில் நிறைய இடம் கீழே வேஸ்ட் ஆகிறதே (!!!) என்று இன்னும் இரண்டு செய்திகளை இதோடு இணைத்து விட்டேன்.
கொசுறு தகவல். இன்று எவர்க்ரீன் படம் மிஸ்ஸியம்மா மறுபடி பார்க்கப் பட்டது. மிக அழகிய சாவித்திரி, மிக அழகிய ஜெமினி கணேசன் இனிமையான பாடல்கள் என்று அலுக்காத, அருமையான படம்.
கொசுறு 2 : தினமணியில் மதியின் கார்ட்டூன்..."ஐயோ அடுத்த வருடம் 12-12-12 என்ற ஒரு சிறப்பான நாளில் வரும் ரஜினியின் பிறந்த நாளை - இன்ப அதிர்ச்சியை -அவர்தம் ரசிகர்கள் எப்படி தாங்கப் போகிறார்களோ..." !!!!!!!
9.9.09
பேராசிரியர் கல்கி.
இன்று பேராசிரியர், நகைச்சுவையாளர், நாவலாசிரியர், கல்கி அவர்களின் பிறந்த நாள். (09-09-99) - 1899! கல்கியின் தமிழ் படித்து - தமிழ்ப் பற்றுக் கொண்டோரில் நானும் ஒருவன். வாழ்க அவர் புகழ்.!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)