வியாழன், 5 ஜூலை, 2018

வரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...




சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் 

1980களில், ஒரிசாவில் நான் பார்த்த ஒரு ஊரின் பெயர்ப் பலகை என்னை தடுத்து நிறுத்தியது. அந்த பெயர் ‘தமிழி’. குவி என்கிற திராவிட மொழி பேசும் பழங்குடிகள் வசிக்கும் அந்த ஊருக்குள் என் கால்கள் என்னையும் அறியாமல் சென்றன. அதிலிருந்து ஊர்ப் பெயர்கள் மீது காதல் கொண்டேன். எங்கு மாறுதலாகிச் சென்றாலும் ஊர்ப் பெயர்கள் அடங்கிய மக்கள்தொகை கணக்கெடுப்புப் புத்தகங்களைத் தூக்கிச் சென்றேன்.மானுட வரலாறு என்பது பயணங்களால், இடப் பெயர்வுகளால் ஆனது. மனிதன் ஒரு ஊரை விட்டு இடம்பெயரும்போது, அவனது நினைவுகளைச் சுமந்து செல்கிறான்.

புதிய இடத்தில் குடியேறும்போது, பழைமையுடன் தொடர்புகொள்ளும் விதத்தில் தன் ஊர்ப் பெயரை அங்கே வைக்கிறான். இது ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகிற சமூக உளவியல். அப்படி அவன் விட்டுச் சென்ற ஊர்ப்பெயர்களும், சுமந்து சென்ற ஊர்ப் பெயர்களும் சொல்வது மனித குலத்தின் வரலாறு.ஈரானில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஏராளமான ஊர்ப் பெயர்கள், அப்படியே ஒரிசாவில் கொனார்க்கில் உள்ள சூரியக்கோயிலைச் சுற்றியுள்ள ஊர்களில் இருப்பதைக் கண்டேன்.

இதன் சாத்தியம் என்னை ஆச்சரியப்படுத்தியது.பின்னர், தமிழ்நாடு – கேரள எல்லையில் உள்ள இடுக்கி, பழனி, குமுளி, தேனி, தேக்கடி, கம்பம், போடி போன்ற ஊர்ப் பெயர்கள், மத்தியப்பிரதேசம் மற்றும் வடமாநிலங்களில் இருப்பதைக் கண்டேன்.இன்னொரு ஆச்சரியமான விஷயம் – ஒரிசாவுக்கும் நைஜீரியாவுக்கும் உள்ள ஒற்றுமை. ஒரிசா – ஆந்திர எல்லையில் உள்ள கொராபுட் மாவட்டத்தில் உள்ள சுமார் 463 ஊர்களின் பெயர்கள் அப்படியே நைஜீரியாவில் உள்ளன.

ஆதிமனிதன் முதன்முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றினான் என்றும், பின்னர் அங்கிருந்து பிற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தான் என்றும் இன்றைக்கு நவீன மரபியல் ஆய்வுகள் சொல்வது, இந்த இடப் பெயர்வுடன் பெரிதும் பொருந்துகிறது. இது பற்றிய எனது கட்டுரை உலக அளவில் பலராலும் எடுத்தாளப்படுகிறது. சுமார் 9ஆண்டுகளுக்கு முன், ஒரு நாள் இரவு. சிந்து சமவெளி நாகரிகம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் (தற்போதைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிழக்கு ஈரான் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியில்) உள்ள பல்வேறு ஊர்களின் பெயர்களை கணினியில் சேமித்து, அவற்றில் தமிழகத்தின் பழங்கால ஊர்ப்பெயர்கள் ஏதேனும் இருக்குமா என்று தேடிக்கொண்டிருந்தேன்.

நான் முதலில் தேடிய பெயர் ‘கொற்கை’. ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் ‘கொற்கை’ என்ற பெயரில் ஊர்ப்பெயர் இருக்கிறது என்றது கணினி. முதலில் இதை ஒரு விபத்து என்றே கருதினேன்.அடுத்து ‘வஞ்சி’ என்ற ஊர்ப்பெயரைத் தேடினேன். அதுவும் அங்கே இருந்தது. எனக்குள் சுவாரஸ்யம் பெருகிற்று.தொண்டி, முசிறி, மதிரை(மதுரை), பூம்புகார், கோவலன், கண்ணகி, உறை, நாடு, பஃறுளி… என பழந்தமிழ் இலக்கியத்தில் வரும் பெயர்களை உள்ளிட்டுக் கொண்டே இருந்தேன். நூற்றுக்கும் மேற்பட்ட அத்தகைய பெயர்கள் இப்போதும் பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தானில் இருப்பதை கணினி காட்டிக் கொண்டே இருந்தது…4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக செழித்து விளங்கி, பின் காணாமல் போன சிந்து சமவெளி நாகரிகம், 1924-ல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நாகரிகம் விளங்கிய இடத்தில் வாழ்ந்த மக்கள் யார்? அவர்கள் என்ன மொழி பேசினார்கள்? ஏன் அந்த நாகரிகம் மண்ணோடு மண்ணானது? யாருக்கும் தெரியாது.

ஆனால், அந்த நாகரிகம் விளங்கிய பகுதிகளில் இருக்கும் ஊர்கள் இன்றும் தமிழ்ப் பெயர்களை தாங்கி நிற்கின்றன. எனில், சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும், சங்கத் தமிழ்ப் பண்பாடு தொட்ட இடமும் ஒன்றுதான். சுமார் 4ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சிந்துவெளிப் பண்பாடு அழிந்தது. தமிழகத்தில் கிடைத்துள்ள அகழாராய்வு முடிவில் கி.மு.800 வரையிலான சான்றுகள் கிடைத்துள்ளன. அதற்கு முந்தைய ஒரு 1000 ஆண்டுகள் இடைவெளியை பின்னோக்கி ஆய்வுகள் மூலம் சென்று நிரப்பினால் சிந்துவெளிப் புதிரை அவிழ்த்து விடலாம்.

பழந்தமிழர் வாழ்வுடன் தொடர்புடைய அவர்களின் தொன்மங்களுடன் தொடர்புடைய பெயர்கள் இன்று சிந்துவெளியில் கிடைத்திருப்பது ஏதோ விபத்தால் நிகழ்ந்தது அல்ல என்றே கருதுகிறேன். கிடைத்திருப்பது ஓர் ஊர்ப்பெயர் மட்டுமல்ல; சங்க இலக்கியத்தில் உள்ள அவ்வளவு பெயர்களும் அங்கு இருக்கின்றன. (வரைபடத்தைக் காண்க.) இடப்பெயர்வு நடந்திருக்கலாம். அங்கிருந்து இங்கு மனிதர்கள் புலம்பெயர்ந்து வந்திருக்கலாம். கொஞ்சம் பேர் அங்கிருந்து புலம் பெயர்ந்த பின், மிச்சம் இருந்தவர்கள் அங்கே வந்தவர்களுடன் கலந்து தங்கள் மொழியை, தனி அடையாளங்களைஇழந்திருக்கலாம்.

ஆனாலும் இன்னமும் அந்த ஊர்ப்பெயர்கள் மட்டும் தப்பிப் பிழைத்திருப்பதாக வைத்துக் கொள்ளலாம். அங்கிருந்து கிளம்பி வந்தவர்கள் புதிதாக குடியேறிய இடத்தில் பழைய நினைவுகளை தங்கள் ஊர்ப்பெயர்களாக வைத்திருக்கலாம். கொற்கை, வஞ்சி, தொண்டி, காஞ்சி எல்லாமே இப்படி இருக்கலாம்.சங்ககாலப் புலவர்கள் சமகால நிகழ்வுகளை மட்டும் இலக்கியத்தில் பதிவு செய்யவில்லை. அவர்களது காலத்திற்கு முற்பட்ட காலத்து பழைய நிகழ்வுகளையும் வாய்மொழி மரபுகளையும் தங்களது பாடல்களில் பதிவு செய்துள்ளார்கள். அவை வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம் என்கிற பரப்புக்குள் தமிழர் இருப்பைச் சொல்கிறவை மட்டுமல்ல. அவை சொல்லும் தொன்மங்கள் இந்த எல்லையைக் கடந்தவை.

சங்க இலக்கியத்தில் “வான் தோய் இமயத்து கவரி” என்று வரும். கவரி என்பது இமயத்தின் உச்சியில் திபெத் பக்கமாக வாழும் யாக் என்கிற விலங்கு. இந்த கவரி ஒரு வகை வாசனை மிகுந்த புற்களைத் தேடித்தேடி உண்ணும் என்றும் சங்க இலக்கியம் சொல்கிறது. இன்று இந்த யாக் விலங்கின் பால், ஒரு வகைப் புல்லை உண்பதால் மிகுந்த வாசனையுடன் இருப்பதாகவும், அதை ‘யாக் தேநீர்’ என்று விளம்பரப்படுத்தி திபெத்தில் விற்கிறார்கள் என்றும் அறிகிறோம். எங்கோ குளிர் பிரதேசத்தில் இருக்கும் யாக் விலங்கு பற்றி சங்ககால கவிஞனுக்கு எப்படித் தெரிந்தது? பழைய நினைவுகள், கதைகள், தொன்மங்களின் எச்சங்கள் அவனுக்கு இதை சாத்தியமாக்கி இருக்கலாம். (வள்ளுவர் “மயிர் நீப்பின் உயிர்வாழா கவரிமான்” என எழுதியிருப்பதாக பரவலாக ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் அவர் “கவரிமான்” என்று சொல்லவில்லை. “கவரிமா” என்றுதான் சொல்கிறார். மா என்பது விலங்குகளைக் குறிக்கும் பொதுச் சொல்.

கி.பி.535 வாக்கில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஆசியாவின் பல பகுதிகளில் பயணம் செய்த காஸ்மாஸ் இண்டிகோப்லுஸ்டெஸ் என்ற ஐரோப்பியப் பயணி, “வால்முடியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தனது உயிரையே விடத் தயாராக இருக்கும் விலங்கான கவரி” பற்றி தனது நூலில் குறிப்பிடுகிறார்.) தமிழர்களின் ஐந்திணைகளில் பாலையும் ஒன்று. நம்மிடம் அந்த நிலப்பரப்பு இல்லை. ஆனால் அகநானூற்றில் மருதன் இளநாகனார், “உணவுக்கே வழியில்லாத பாலையில் ஒட்டகம் எலும்பைத் தின்னும்” எனக் குறிப்பிடுகிறார். இது ஒட்டகம் வளர்க்கும் தார் பாலைவனத்தில் உள்ளவர்களுக்கே தெரிந்த செய்தி. தொல்காப்பியர், ஒட்டகத்தின் குட்டியை கன்று என்று சொல்ல வேண்டும் என இலக்கணம் வகுக்கிறார். உறையூர் மணல்மாரியால் மூடியதால் சோழர்கள் இடம் பெயர்ந்ததாக பழந்தமிழ் மரபுகள் சொல்கின்றன. மணல்மழை பாலைவனத்தில் தான் சாத்தியம்.

இன்னொரு உதாரணம் சொல்கிறேன். “பொன்படு கொங்கானம்” என்ற வரி. கொங்கணம் அதாவது கோவா, மகாராஷ்டிரப் பகுதி. இப்போதைய கொங்கண் பகுதியில் உள்ள டைமாபாத் என்ற இடத்தில் சிந்துவெளி நாகரிகக் கூறுகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.ஆக, சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும் தமிழ்ச் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாக இருக்கக் கூடும் என்றே கருதுகிறேன்.தமிழனின் பழைய வரலாறு என்ன என்கிற கேள்வியும், சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் யார் என்கிற கேள்வியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.ஊர்ப் பெயர்கள் சாகா வரம் பெற்றவை. அவை புலம்பெயரும் மனிதனின் நினைவோடு சென்று உயிர் பெறுகின்றன. பிறதுறை ஆய்வுகளின் உதவியுடன் செய்யப்படுகிற அறிவுப்பூர்வமான ஆய்வுகள், இந்திய வரலாற்றை உண்மையின் ஒளி கொண்டு மீட்டெடுக்க வழி செய்யும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.

-######

ஒரிசா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன். கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றவர். இவரது வீடு சென்னை பெருங்குடியில் இருக்கிறது. இடப் பெயர்களின் ஆய்வில் 20 ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கும் இவர், சிந்துவெளி ஆய்வு பற்றிய தன் கட்டுரையை முதலில் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்ப்போலா போன்ற அறிஞர்கள் முன்னிலையில் சமர்பித்தார். 

அவர் பணிமூப்பு பெற்று சென்னையில்தான் இருக்கிறார் என்று தகவல். அவர் இருப்பிடமும் தொலைபேசி எண்ணும் யாரேனும் தந்து உதவ முடியுமா ?




- இது  திரு R V ராஜு சென்ற வருடம் (என்று நினைக்கிறேன்) ஃபேஸ்புக்கில் பகிர்ந்து.  அப்பவே எடுத்து வைத்திருந்தாலும் இதன் நீளம் கருதி ஒத்திப்போட்டுக் கொண்டு வந்தேன். 


=================================================================================



வரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும் எழுதி இருப்பதைக் கீழே பகிர்கிறேன்.  அப்படியே இந்திய வரலாறு பற்றி ஆலிவர் ஹெம்பர் எழுதி இருப்பதையும் பகிர்கிறேன்.   வெவ்வேறு சந்தர்ப்பங்களில் படித்ததைத் தொகுத்து வைத்திருந்தேன்.


கல்கி :  இந்து அவர் பொன்னியின் செல்வன் முடித்தபின் வந்த கடிதங்களுக்கு, அபிப்ராயங்களை பதில் சொல்லும் வகையில் எழுதியது...



பொதுவாக நாவல்கள் எழுதுவதற்கும் முக்கியமாக சரித்திர நவீனங்கள் எழுதுவதற்கும் சட்ட திட்டங்கள் ஏற்பட்டிருக்கவில்லை.  (அப்படி ஏற்பட்டிருந்தால் நான் படித்ததில்லை)  ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தமக்குரிய முறையை வகுத்துக்கொண்டு எழுதுகிறார்கள்.  ஆயினும் முழுவதும் கற்பனையாக எழுதப்படும் சமூக வாழ்க்கை நவீனங்களுக்கும், சரித்திரச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எழுதும் நவீனங்களுக்கும் ஒரு வேற்றுமை அவசியம் இருந்து தீருகிறது. ........


........ சரித்திரக் கதைகளில் வரும் பாத்திரங்களில் இறந்து போனவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் பிற்காலத்தில் பற்பல காரியங்களில் ஈடுபடுவார்கள்.  வெற்றியோ, தோல்வியோ, சுகமோ துக்கமோ அடைவார்கள்.  அவற்றைக்குறித்து முன்னதாகவே சொல்லி விடுவது முறையாகுமா?அல்லது ஆதாரங்களுடன் கூடிய விவரங்கள் இல்லாமல் முடிவான நிகழ்ச்சிகளை பற்றி மட்டும் சொல்லுவதுதான் உசிதமாகுமா?  கதையை இந்தக் காலத்தில் முடிக்கிறோமோ, அந்தக் காலத்தில் பாத்திரங்கள் இருந்த நிலைமையிலேயே விட்டு விடுவதுதான் முறையென்று கருதினேன்.....


சுஜாதா :  இது அவர் கருப்பு சிவப்பு வெளுப்பு கதையின் முன்னுரையில் எழுதி இருப்பது...



........  கரிய கண்களுடைய அழகான ராஜகுமாரிகளை நீண்ட வாக்கியங்களில் வருணிக்க வேண்டும்..அடிக்குறிப்புகள் தாராளம் வேண்டும்.  சோழனாக இருந்தால் நல்லது.  பாண்டியன் பரவாயில்லை.  தமிழ்ச் சாதியின் மேம்பாடு கடல் கடந்த நாகரீகம், இவைகளை சொல்வது உத்தமம்.  குதிரைகள் தங்கித் தேர்கள் முத்துக்கள் உறைந்திருக்கும் வீதிகள், யவன வியாபாரிகள், யாழ் இன்ன பிறவும் வேண்டும்......

சிப்பாய்க் கலகத்தை வீரசவர்க்கார் நம் முதல் சுதந்திரப்போர் என்று சொல்வதை மஜோம்தார் போன்ற இந்திய சரித்திர ஆசிரியர்களே ஒப்புக்கொள்ளவில்லை.  ஆங்கிலேயர்கள் அந்த தினங்களில் நம்ம ஆண்ட சில விசித்திரமான கொள்கைகளால் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் அவர்கள்மேல் ஏற்பட்ட பொது விரோதத்தை எழுச்சி என்றுதான் அதைச் சொல்லவேண்டும்.



பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம் - ஆலிவர் ஹெம்பர்.

சர் லார்டு ஸ்ராஷே என்பவரைத்தான் முஸ்லீம் - இந்துக்களிடையே பகையை ஏற்படுத்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பயன்படுத்தியது.  இவர் முஸ்லீம் - இந்துக்கள் இடையே பகையை ஏற்படுத்த இருதரப்பிலும் இயக்கங்களைத் தொடர்ந்து ஊக்குவித்தார்.  இதன் மூலம் முஸ்லீம் -இந்துக்களிடையே கலவரங்களை ஏற்படுத்தி முஸ்லிம்களை அதிகமாகப் படுகொலை செய்ய இந்துக்களைத் தூண்டி விட்டார்.  இதைத் தொடர்ந்து இவருடைய தூண்டுதலின் அடிப்படையில் கிபி 1750 முதல் கி பி 1870 வரை பல்வேறு கலவரங்கள் அரங்கேற்றப்பட்டன.


'அந்தப்புரம் போகாதே அரிஞ்சயா' நாவலில் காலச்சக்கரம் நரசிம்மா..  

(முதல் முறையாக இவர் எழுதிய கதை ஒன்று சீரியலாக வருகிறதாம்.  சன் டீவியில் ஜூலை ஒன்பது முதல் இரவு ஏழு மணிக்கு -  'மாயா' என்கிற பெயரில்.  சீரியல் பார்க்காத என்னை சீரியல் பார்க்க வைக்கிறார்!)



என்னவோ தெரியவில்லை!  சோழர்களின் சரித்திரத்தைப் புரட்டும்போதெல்லாம் இம்மாதிரியான மர்மமான நிகழ்வுகள்தான் என் கண்களில் படுகின்றன.

என் வருத்தம் எல்லாம், உண்மையான சோழர் சரித்திரத்தை நேர்படுத்த அரசாங்கம் உட்பட யாருமே முயற்சி செய்யவில்லை என்பதுதான்.  சோழர் என்றவுடன் "பொன்னியின் செல்வன் படித்தேன்... நந்தினி ஆழவார்க்கடியான் எல்லாம் சூப்பர் கதாபாத்திரங்கள்.  என்னமா எழுதியிருக்காய்..."என்று சொல்கிறார்கள்.  அவை வரலாற்றுப்பாத்திரங்கள் அல்ல என்பதை புரிந்து கொள்வதில்லை......

.......சோழர்கள் மாபெரும் வீரர்கள், பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர்கள் என்றெல்லாம் பள்ளி நாட்களில் படித்து விட்டு, அவர்கள் மீது பெரும் பற்று கொண்டவனாய் இருந்திருக்கிறேன்.  ஆனால் சோழர் சரித்திரத்தை மீண்டும் மீண்டும் படிக்க, ஒன்று தெளிவாகப் புரிகிறது...

எப்படி தற்காலத்தில் பணம் செலவழிக்காமல் தேர்தலில் நிற்க முடியாதோ, அப்படி சோழர் காலத்தில் சூழ்ச்சி செய்யாமல் அரசியலில் யாரும் நிலை பெறமுடியாது......


=====================================================================================================

இந்தியா என்ன, தமிழ்நாடு என்ன, பொதுவாகக் கூடச் சொல்லலாம்!




================================================================================================

சமீபத்தில் மதுரையில் 'அரசு இராசாசி மருத்துவமனை' என்று எழுதப் பட்டிருப்பதை 'அரசு இராஜாஜி மருத்துவமனை' என்று மாற்றம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு ஜெ(செ)யித்திருக்கிறார் ஒருவர். 





=========================================================================================


ஓகே...  அடுத்த வாரம் சந்திக்கலாமா?  

டாட்டா காட்ட அனுஷ்ஷை கூப்பிட்டேன்.  "எப்படியாவது உங்கள் பதிவுகளில் அனுஷை நுழைப்பதாய் குற்றச்சாட்டு இருக்கிறதே..." என்று தயங்கியவர் ஒரு கட்டத்தில் கட்டத்தை விட்டு வெளியேறி விட்டார்!



141 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா, பானுக்கா எல்லோருக்கும்…..இந்த நாள் நல்லதாக அமையட்டும் எல்லோருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. துரை அண்ணாவிற்கு என்ன ஆயிற்று காங்கலையே!!! அண்ணே எங்கருக்கீங்க...இன்னிக்கு ஆஜர் வைப்பீங்களா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இன்னைக்கு ஆஜர் வைப்பீங்களா?..//

      நேத்திக்கே வெச்சிட்டேன்..

      சகோ.. கவனிக்கலையா!...

      நாம என்ன
      அதிரடி ஞானானந்தினியா!..
      எல்லாத்தையும் ஞானக் கணணால பார்க்கிறதுக்கு?...

      நீக்கு
  3. ஹை அண்ணா வந்துட்டீங்களா...சூப்பர்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அன்பின் ஸ்ரீராம், கீதா/கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு..

    பதிலளிநீக்கு
  5. என்னது இது....அனுஷைக் காணலை...அனுஷ் யார் சொன்னது? உங்களுக்கு ஆதரவு சொல்லி நேத்து ஆசிரியர்களே பச்சைக் கொடி காட்டிட்டாங்களே...நாங்கலாம் எதிர்பார்த்திருந்தா நீங்க இப்படியா ஓடி போறது....அரம வைக் கலைச்சுடுவோம் சொல்லிப்புட்டேன். மரியாதையா இங்கின வந்து போணூம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  6. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். நன்றி. உங்களுக்கும் அதே!!

    பதிலளிநீக்கு
  7. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  8. // .நாங்கலாம் எதிர்பார்த்திருந்தா நீங்க இப்படியா ஓடி போறது....அரம வைக் கலைச்சுடுவோம் சொல்லிப்புட்டேன்.//

    ஹா... ஹா... ஹா... பாருங்களேன்.. கட்டத்தை விட்டு இறங்கிப் போயிட்டார்.

    பதிலளிநீக்கு
  9. கனிசுகர்....ஹா ஹா ஹா ஹா ஹா பெயர்கள் எல்லாம் சிரிக்க வைத்துவிட்டன...

    ரசித்தேன்...

    சரி சரி அப்ப கீதாக்கா சரியாதான் சொல்லிருக்காங்க ...ச்ரிராம்....ஹா ஹா ஹா ஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  10. // நேத்திக்கே வெச்சிட்டேன்..

    சகோ.. கவனிக்கலையா!...//

    நான் கவனிச்சு பதிலும் சொல்லிட்டேன் துரை ஸார்!

    பதிலளிநீக்கு
  11. // சரி சரி அப்ப கீதாக்கா சரியாதான் சொல்லிருக்காங்க ...ச்ரிராம்....ஹா ஹா ஹா ஹாஹா//

    கிர்ர்ர்ர்ர்.....

    பதிலளிநீக்கு
  12. நாம என்ன
    அதிரடி ஞானானந்தினியா!..
    எல்லாத்தையும் ஞானக் கணணால பார்க்கிறதுக்கு?...//

    ஹா ஹா ஹா ஹா ஹா ஹா....

    ஓ அப்படியா அண்ணா நேத்து நான் மாலையில் வரவில்லை அதான் தெரியலை போல....நிறைய தளம் போகாம இருந்ததால கொஞ்சம் அங்கெல்லாம் தலை காட்டிட்டு அப்புறம் வேலை என்று வலை வரவே இல்லை...

    கீதா

    பதிலளிநீக்கு
  13. வரலாறு ரொம்ப முக்கியம் அரசே!!! என்ற வசனம் தான் நினைவுக்கு வந்துச்சு...புலிகேசி நினைத்து சிரித்துவிட்டேன்...இருங்க முழுசும் படிக்கலை...

    கீதா

    பதிலளிநீக்கு
  14. ஊர்களின் பெயர்கள் பற்றி ஸ்வாரஸ்யமாக இருக்கிறது. ராஜி (காணாமல் போன கனவுகள்) கூட ஊர்களின் பெயர்க்காரணத்தைச் சொல்லிப் பதிவு எழுதும் நினைவும் வந்தது.

    அமெரிக்காவில் மகன் இருக்கும் பகுதிக்கு அருகில் சேலம் எனும் ஊர் இருக்கு. அதே போல மெட்ராஸ் எனும் ஊரும் அமெரிக்காவில் இருக்கு. இன்னும் இருக்கு நினைவுக்கு வந்ததும் சொல்லுகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  15. //ஹா... ஹா... ஹா... பாருங்களேன்.. கட்டத்தை விட்டு இறங்கிப் போயிட்டார்.//
    டாட்டா காட்ட அனுஷ்ஷை கூப்பிட்டேன். "எப்படியாவது உங்கள் பதிவுகளில் அனுஷை நுழைப்பதாய் குற்றச்சாட்டு இருக்கிறதே..." என்று தயங்கியவர் ஒரு கட்டத்தில் கட்டத்தை விட்டு வெளியேறி விட்டார்!//


    ஹா ஹா ஹா ரசித்தேன் இதையும்....(இந்தக் கமென்டை முதலில் போட்டேன் ஆனா பாருங்க இது போகாம உக்காந்துருக்கு கவனிக்காம அடுத்த கமெண்டை போட்டுருக்கேன்...அது வந்துருக்கு....ப்ளாகர் என்னவோ மாயம் செய்யுது அது போல உங்களின் இந்த கமென்ட் இப்பத்தான் கண்ணுல பட்டுச்சு...

    கீதா

    பதிலளிநீக்கு
  16. சரி அப்பால வாரேன் கண்ணி வெயிட்டிங்க்...

    கீதா

    பதிலளிநீக்கு
  17. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  18. இனிய காலை வணக்கம் பானு அக்கா.

    பதிலளிநீக்கு
  19. தமிழகம் அமைதிப் பூங்கானு சொல்வதே பொய் தானே! :( தினம் ஒரு போராட்டம்!

    பதிலளிநீக்கு
  20. முதலில் சொல்லி இருக்கும் அந்த அதிகாரியின் புத்தகம் படித்த நினைவு. அல்லது முகநூலில் பகிர்ந்ததா? தெரியலை! ஆனால் இந்தச் செய்திகள் எல்லாம் அறிந்தவையே! அதே போல் சுஜாதா சொல்வதும் கல்கி பொன்னியின் செல்வன் பின்னுரையில் "கல்கி" அவர்கள் சொல்லி இருப்பதும் பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகத்திலேயே இணைத்துப் போட்டிருப்பார்கள்! அருமையானதொரு தொகுப்பு. பல விஷயங்களையும் பொறுமையாகத் தொகுத்து எடுத்துப் போடும் ஶ்ரீராமுக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  21. ஆகா, "மாயா"வுக்குக் கொடுக்கப்படும் விளம்பரமே ஆவலைத் தூண்டியது. காலச்சக்கரம் நரசிம்மாவுடையதா அது? நேரம் தான் கொஞ்சம் தகராறு! ஏழு மணிக்கு இரவு உணவு தயாரிப்பு வேலை இருக்கும். பார்ப்போம்!

    பதிலளிநீக்கு
  22. இந்தக் கமென்டை மூணு தரம் கொடுத்தும் இப்போத் தான் சாவகாசமாப் போயிருக்கு! :(

    பதிலளிநீக்கு
  23. வெளியில் மிகுந்த சத்தம். ஜூலை 4த் வெடிகளும்,
    மழையின் இடி மின்னலும். மீண்டும் வருகிறேன். காலை வணக்கம் நண்பர்களே. Ahn. this fear of thunder and lightening is called Astrophobia.

    பதிலளிநீக்கு
  24. இலங்கையில் இருக்கும் கதிர்காமம் என்ற ஊர் பாண்டிச்சேரியில் வழுதாவூர் ரோட்டில் உள்ள சிறிய ஏரியாவுக்குப் பெயர்.

    இப்ப கூட அமெரிக்கா அரிசோனா மானிலத்தில் க்ரான்ட் கன்யோன் போய்வந்த நம்ம துளசிக்கா, கோமதிக்கா அந்த மலையில் இருந்த இயற்கைச் செதுக்கல்களுக்கு வைக்கப்பட்டிருந்த பெயர்கள் அப்படியே நம்ம இறை பெயர்கள் அதை சொல்லியிருந்தப்ப அதிரா கூடச் சொல்லிருந்தாங்க நம்ம ஊர் மக்கள் வைத்திருப்பார்கள் என்று. ஆனால் கோமதிக்கா சொல்லிருந்தாங்க இல்லை அந்த ஊர்ப்பெயர்கள்தான் என்று.

    நம் இந்தியத்தலைனகரமே அமெரிக்காவில் இருக்கு ஹா ஹா ஹா

    ஜப்பானில் கொச்சி இருக்கு....(இருக்க வாய்ப்புண்டு அவர்கள் பெயரே ஏதேனும் குச்சி, கொச்சி என்றுதானே முடிகிறது!!!)

    அதிரா சொல்லக் கூடும்....அவர்கள் ஊரில் பாட்னா உள்ளது...அதன் பெயரே நம் பீகாரின் பாட்னா வினால் ஈர்க்கப்பட்டு என்று சொல்லபப்டுகிறது. அங்கு பெயர் வைத்தவர் வில்லியம் ஃப்ளுர்ட்டனின் தந்தை இங்கு இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பெனியில் வேலை செய்தவராம்...

    கல்கட்டா அமெரிக்காவிலும் இருக்கிறது. அதனால்தான் இங்கு கொல்கட்டா என்று மாற்றிவிட்டார்களோ ஹா ஹா ஹா

    அதே போன்று லக்னோ அமெரிக்காவிலும் இருக்கிறது.

    பாகிஸ்தான் பற்றிச் சொல்லத் தேவையில்லை. பல பெயர்கள் அங்கும் இங்கும் ஸேம். அதனாலேயே பாகிஸ்தான் ராவல்பிண்டி, இந்தியா ராவல்பின்ண்டி என்றும்...அதில் ஹைதராபாத்தும் அடக்கம்.

    பரோடா அமெரிக்காவிலும் இருக்கு,,,ஆஸ்திரேலியாவில் "தானே" இருக்கு...

    டாக்கா பங்களதேஷ் இதிலும் சொல்லத் தேவையில்லை பிரிந்த நாடு என்பதால்...

    இது எப்போதோ ஒரு பதிவு போடலாம் என்று எடுத்து வைத்தவை....பதிவு போடவே இல்லை ஹிஹிஹிஹிஹி இன்னும் இருக்கு...

    குஜராத்தில் டைனோசரின் சில எலும்புத் துண்டுகள் கிடைத்ததாம் அதை ஆராய்ந்தால் ஆப்பிரிக்காவுடன் லிங்க் ஆகுதாம்....இப்படி நிறைய...

    அவரது புத்தகம் வாசிக்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது....

    கீதா



    பதிலளிநீக்கு
  25. நான் முதலில் தேடிய பெயர் ‘கொற்கை’. ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் ‘கொற்கை’ என்ற பெயரில் ஊர்ப்பெயர் இருக்கிறது என்றது கணினி. முதலில் இதை ஒரு விபத்து என்றே கருதினேன்.அடுத்து ‘வஞ்சி’ என்ற ஊர்ப்பெயரைத் தேடினேன். அதுவும் அங்கே இருந்தது. எனக்குள் சுவாரஸ்யம் பெருகிற்று.தொண்டி, முசிறி, மதிரை(மதுரை), பூம்புகார், கோவலன், கண்ணகி, உறை, நாடு, பஃறுளி… என பழந்தமிழ் இலக்கியத்தில் வரும் பெயர்களை உள்ளிட்டுக் கொண்டே இருந்தேன். நூற்றுக்கும் மேற்பட்ட அத்தகைய பெயர்கள் இப்போதும் பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தானில் இருப்பதை கணினி காட்டிக் கொண்டே இருந்தது…//

    ரொம்பவே ஸ்வாரஸ்யமாகவும் ஆவலைத் தூண்டுவதாகவும் இருக்கிறது......

    கீதா

    பதிலளிநீக்கு
  26. @ வல்லிசிம்ஹன்:// Ah. this fear of thunder and lightening is called Astrophobia.//

    We all are, basically, a bundle of phobias !

    பதிலளிநீக்கு
  27. ஆயினும் முழுவதும் கற்பனையாக எழுதப்படும் சமூக வாழ்க்கை நவீனங்களுக்கும், சரித்திரச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எழுதும் நவீனங்களுக்கும் ஒரு வேற்றுமை அவசியம் இருந்து தீருகிறது. ........//

    இது மிக மிகச் சரியே. நாம் கற்பனையாக எழுதுவதற்கும், உண்மைச் சம்பவங்கள் (அதுவும் வரலாறுதானே....ராஜா ராணி, அரண்மனை கோட்டை என்றுதான் வரணும் என்றில்லைதானே?!!! சாதாரண மனிதர்களின் நிகழ்வுகளும் வரலாறு என்று சொல்லப்படலாம் இல்லையா?!!) அடிப்படையில் எழுதுவதற்கும் நிச்சயமாக வித்தியாசம் இருக்கிறது அது தெரியவும் செய்கிறது....

    கீதா

    பதிலளிநீக்கு
  28. We all are, basically, a bundle of phobias !//

    எஸ்ஸூ....ஏகாந்தன் அண்ணா....நிறையவற்றிற்குப் பொருந்துமோ...என்ன ஒவ்வொன்றிற்கும் பெயர்தான் வித்தியாசமாகிறது....

    கீதா

    பதிலளிநீக்கு
  29. காலச்சக்கராவின் சீரியலா!!! ஸ்ரீராம் நானும் சீரியல் பக்கமே போனதில்லை..உறவினர் வீட்டிற்குச் செல்லும் போது விடாது கறுப்பு....ருத்ரவீணை இந்த இரண்டும் மற்றும் ஓரிரண்டு பார்த்ததுண்டு. அதுவும் ருத்ரவீணையில் முன்னுரையில் பல புதிய ரேர் ராகங்கள் சொல்லப்பட்டது. ஒரு சில குறித்து வைத்துக் கொண்டேன்.....

    .இப்ப நீங்க சொல்லியிருக்கும் சீரியல் வந்தாலும் பாக்க முடியாது....ஹிஹிஹிஹிஹி...திருப்பதி தவிர வேறு எதுவும் பார்க்க மாட்டோம்ல!!!!! ஹா ஹா ஹா ஹா....பரவால்ல சீரியல் பத்தி எப்படியும் இங்கு கதம்பத்தில் வந்துவிடும்....இல்லையோ?!!!!

    ஆனா பொதுவாகக் கதைகள் சீரியலாகவோ படமாகவோ வந்தால் பல குளறுபடிகள் இருக்குமே. சுஜாதாவே தன் அனுபவத்தைச் சொல்லியிருக்கிறார். இப்ப காலச்சக்காராவின் கதை எப்படி இருக்குமோ?! சீரியலாக...

    கீதா

    பதிலளிநீக்கு
  30. வல்லிம்மா - //ளே. Ahn. this fear of thunder and lightening is called Astrophobia.// - எனக்கு இப்போதான் இது தெரியும். எனக்கு இது ரொம்ப உண்டு. மின்னல் இடி கண்டு ரொம்ப பயப்படுவேன்

    பதிலளிநீக்கு
  31. மாயா -விளம்பரம் எலிச்சலூட்டுகிறது. நம் காலச்சக்கராவினதா? அப்படீன்னா இன்டெரெஸ்டிங்காக இருக்குமே

    பதிலளிநீக்கு
  32. நாகரீகம் பற்றி எழுதும்போது கோவில்கள், சன்னிதிகள் தொடர்பான செய்தி ஞாபகம் வருது. பிறகு எழுதறேன்

    பதிலளிநீக்கு
  33. //தமிழகம் அமைதிப் பூங்கானு சொல்வதே பொய் தானே! :( தினம் ஒரு போராட்டம்!//

    ஆமாம் கீதா அக்கா.. பொதுப் பொய்! ஸ்பெஷல் பொய்களும் உண்டு!

    பதிலளிநீக்கு
  34. கீதாக்கா..

    //முதலில் சொல்லி இருக்கும் அந்த அதிகாரியின் புத்தகம் படித்த நினைவு. அல்லது முகநூலில் பகிர்ந்ததா?//

    இங்கு ஐராவதம் மஹாதேவன் அவர்கள் எழுதியதை முன்னர் பகிர்ந்திருந்தேன். அதைச் சொல்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
  35. //பல விஷயங்களையும் பொறுமையாகத் தொகுத்து எடுத்துப் போடும் ஶ்ரீராமுக்குப் பாராட்டுகள்.//

    நன்றி அக்கா.. இப்படி ரசிப்பவர்களால் உற்சாகம் வருகிறது. இன்னொன்று நினைவுக்கு வருகிறது. இந்த வாரம் இந்த நிமிடம் வரை எனக்கு ஒரு பாஸிட்டிவ் விஷயம் கூடக் கிடைக்கவில்லை!!!

    பதிலளிநீக்கு
  36. கீதாக்கா..

    காலச்சக்கரம் நரசிம்மா எழுதியிருக்கும் கதைகள் சுவாரஸ்யமானவை. மர்மங்களும், புதிர்களும் நிறைந்தவை. இந்த சீரியல் கூட அந்த வகையில் இருக்கும் என்று முகநூலில் சொல்லி இருக்கிறார். பல்லைக் கடித்துக்கொண்டு அவருக்காக அந்த சீரியலைப் பார்க்க வேண்டும். கதையின் சுவாரஸ்யத்துக்காகக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  37. வாங்க வல்லிம்மா... பொறுமையா வாங்க...

    பதிலளிநீக்கு
  38. வாங்க கீதா ரெங்கன்...

    உங்க பதிவுக்காக எடுத்து வைத்திருந்ததால் பெருமளவு இங்கு போட்டு விட்டீர்கள் நன்றி சொல்ல உமக்கு வார்த்தை இல்லை எனக்கு...!!!

    பதிலளிநீக்கு
  39. கீதா ரெங்கன்..

    இந்தப் பதிவுக்காக திரு ஆர் வி ராஜுவிடமும், திரு நரசிம்மாவிடமும் அனுமதி வாங்கிக்கொண்டேன். அவர்களும் வாசித்தார்கள்.வாசித்திருப்பார்கள். நரசிம்மா அவர்கள் ஒரு திருத்தமே சொன்னார். ஆழ்வார்க்கடியான், நந்தினி போன்றோர் வரலாற்றுப் பாத்திரங்கள் அல்ல என்கிற வரியில் "அல்ல" விடுபட்டிருந்தது. அதைச் சுட்டிக் காட்டியிருந்தார். மன்னிப்புக் கேட்டு திருத்தினேன்.

    பதிலளிநீக்கு
  40. நெல்லை. இதுவரை ஓரிரண்டு சீரியல்கள் பார்த்திருப்பேன். சோவின் தொடர்கள், தரையில் இறங்கும் விமானங்கள், சுஜாதா கதைத் தொடர் போன்றவை. அதில் சுஜாதா தொடரை ஓரிரண்டு வாரங்களிலேயே பார்ப்பதை நிறுத்தி விட்டேன்.

    பதிலளிநீக்கு
  41. நெல்லை...
    .
    //நாகரீகம் பற்றி எழுதும்போது கோவில்கள், சன்னிதிகள் தொடர்பான செய்தி ஞாபகம் வருது. பிறகு எழுதறேன்//

    காத்திருக்கிறேன் ஆவலாக. நிறைய விஷயங்கள் இருந்தால் ஒரு வியாழனில் பதிவாகவே கதம்பத்தில் இணைத்தும் விடலாம்!

    பதிலளிநீக்கு
  42. ஒரிசா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களின் ஆய்வு நன்றாக இருக்கிறது.

    வரலாற்று கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும் எழுதி இருப்பதைபகிர்ந்ததும் நன்றாக இருக்கிறது.

    பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம் - ஆலிவர் ஹெம்பர். படிக்கும் போது வருத்தம் ஏற்படுகிறது. எப்படி எல்லாம் அந்தக் காலத்தில் இரு தரப்புக்கும் கலவரத்தை தூண்டி விட்டு இருக்கிறார்கள்.


    டாட்டா காட்ட அனுஷ்ஷை கூப்பிட்டேன். "எப்படியாவது உங்கள் பதிவுகளில் அனுஷை நுழைப்பதாய் குற்றச்சாட்டு இருக்கிறதே..." என்று தயங்கியவர் ஒரு கட்டத்தில் கட்டத்தை விட்டு வெளியேறி விட்டார்!

    கட்டத்தை விட்டு வெளியேறி விட்டாலும் பதிவில் இருக்கார்.தளத்தை விட்டு வெளியேறினாலும் மனதில் கட்டம் கட்டி உட்கார்ந்து விட்டாரே!






    பதிலளிநீக்கு
  43. தமிழ் மொழி சிறப்பு நன்று உள்ளது பாராட்டுக்குரியது

    பதிலளிநீக்கு
  44. அவர் உடல் மெலிந்து, சோர்ந்துபோய்க் காணப்படும் புகைப்படம் தவிர, ஒரு நல்ல புகைப்படம்-சுஜாதாவினுடையது- கிடைக்கவில்லையா? அவர் இயக்குனர் மகேந்திரன், நடிகை லக்ஷ்மி, மய்யம் இவர்களோடெல்லாம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் படங்கள் கிடைக்குமே!

    தனுஷ்கா, அமன்னா படத் தேர்வில் காட்டும் ஆர்வத்தில் ஒரு 10% இதிலும் காட்டியிருந்தால் நன்றாயிருக்குமே என்பதற்காகச் சொன்னேன்..

    பதிலளிநீக்கு
  45. //பல விஷயங்களையும் பொறுமையாகத் தொகுத்து எடுத்துப் போடும் ஶ்ரீராமுக்குப் பாராட்டுகள்.//

    கீதாக்காவின் இதை நான் அப்படியே வழி மொழிகிறேன். அதான் நேத்தே சொல்லிருந்தேன் எபியின் தூண்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  46. ///புதிய இடத்தில் குடியேறும்போது, பழைமையுடன் தொடர்புகொள்ளும் விதத்தில் தன் ஊர்ப் பெயரை அங்கே வைக்கிறான். //
    இதேதான், இதை நான் கண்கூடாகக்[கர்க்ட்தானே?:)] கண்டது கனடாவில்தான்.

    அதாவது பிரித்தானியா தோன்றி 3000 வருடங்களுக்கு ஆகிறது அல்லது மேல், ஆனா கனடா தோன்றி 300-400 க்குள்பட்ட வருடங்களே ஆகிறது.

    அப்போ கனடாவில் இருக்கும் ஆரம்பகால மக்களின் பெரும்பான்மையினர் ஸ்கொட்லாந்துக்காரர்களே.. கனடாவில் இருக்கும் வெள்ளையர்களின் பேரன் பேத்தியைக் கேட்டால் ஃபுரொம் ஸ்கொட்லாண்ட் என்பினம். அதனால அங்கிருக்கும் பல பெயர்கள் இங்கத்தைய பெயர்களே.. எனக்கு ஆரம்பம் ஆச்சரியம் என்னடா இது நம் நாட்டில்தான் இருக்கிறோமா என.. பின்பு பார்த்தால் கணவர் விளக்கம் சொன்னார் எனக்கு.

    அங்கு லண்டன் எனக்கூட ஒரு இடம் இருக்கு.

    ஒரு தம்பியைக் கேட்டேன் எந்த யுனியில் படிச்சீங்க என.. லண்டன் என்றார்.. ந்..ஙேஙேஙே.. ஊக்கேயிலயா படிச்சீங்க என்றேன் இல்ல இல்ல ரொரொண்டோ லண்டன் என்றார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    இன்னொன்று மக்களே திரும்பத்திரும்பச் சொல்லுவேன்... புத்திக் கூர்மை அதிகம் உள்ள:), அதிக விஞானங்களைக் கண்டுபிடித்த மக்கள் ஸ்கொட்டிஸ் மக்களே:))[இந்தாங்கோ மோர் குடிச்சிட்டுத் தொடருங்கோ:)].. நீங்க ஹல்ல்லோ சொல்லும் உபகரணத்தைக் கண்டுபிடிச்சவர் இருந்த இடம்தான் கனேஏஏஏஏடா பட் அவரின் பூர்வீகம் ஸ்கொட்லாந்தாக்கும்:))...

    இனி எல்லாரும் ஃபோனை எடுத்ததும் அல்லோ எனச் சொல்ல வேண்டாம்.. “மியாவ்” எனச் சொலுங்கோ ஊக்கே?:)

    பதிலளிநீக்கு
  47. இந்தப் பதிவுக்காக திரு ஆர் வி ராஜுவிடமும், திரு நரசிம்மாவிடமும் அனுமதி வாங்கிக்கொண்டேன். அவர்களும் வாசித்தார்கள்.வாசித்திருப்பார்கள். நரசிம்மா அவர்கள் ஒரு திருத்தமே சொன்னார். ஆழ்வார்க்கடியான், நந்தினி போன்றோர் வரலாற்றுப் பாத்திரங்கள் அல்ல என்கிற வரியில் "அல்ல" விடுபட்டிருந்தது. அதைச் சுட்டிக் காட்டியிருந்தார். மன்னிப்புக் கேட்டு திருத்தினேன்.//

    சூப்பர்!! சூப்பர்! ஸ்ரீராம்!! அவர்களிடம் இப்படிக் கேட்டு எங்களுக்குத் தொகுத்துப் போடுவது.....நாங்களும் தெரிந்து கொள்ள உதவுவது....அதற்கும் உங்களுக்குப் பாராட்டுகள்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  48. இன்று எனக்குப் பிடிக்காத சப்ஜக்டைப்பற்றியே ஸ்ரீராம் பேசியிருக்கிறார் கர்ர்ர்:)).. வரலாறு:).

    //கரிய கண்களுடைய அழகான ராஜகுமாரிகளை நீண்ட வாக்கியங்களில் வருணிக்க வேண்டும்..அடிக்குறிப்புகள் தாராளம் வேண்டும்.//

    ஹா ஹா ஹா எங்கே ஆராவது வர்ணியுங்கோ பார்ப்போம் அது எப்படி என:)).

    //சன் டீவியில் ஜூலை ஒன்பது முதல் இரவு ஏழு மணிக்கு - 'மாயா' என்கிற பெயரில். சீரியல் பார்க்காத என்னை சீரியல் பார்க்க வைக்கிறார்!)///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் *கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

    இதனாலதான் இதனாலதான்.. அதாவது காலம் எப்படியும் மாறலாம் என்பதால்தான்..

    நான் சினிமா பார்ப்பதில்லை,
    சீரியலா ம்ஹூம் பிடிக்கவே பிடிக்காது,
    சினிமாப் பாட்டோ அது ரைம் வேஸ்ட்...

    இப்படிச் சொல்லித்திரிவோரை எனக்குப் பிடிக்காது...:)

    பதிலளிநீக்கு
  49. ஆச்சர்யமான தகவல் களஞ்சியம்.

    பதிலளிநீக்கு
  50. முடிவில் தமனா அழகாக இருக்கிறா:), எப்படி ஸ்ரீராமுக்கு மனம் வந்துது இவ்ளோ அழகான தமனாக்கா படம் போட?:)..

    // என்று தயங்கியவர் ஒரு கட்டத்தில் கட்டத்தை விட்டு வெளியேறி விட்டார்!// ஆமா ஆமாஆஆஆஆஆஆஆஆ பின்ன குண்டு அனுஸ்க்கு:))[ஹா ஹா ஹா] குட்டிப் பெட்டியை வச்சு உள்ளே இரு எண்டால் அவோக்கு மூச்சடைக்காது:) அதனால போயிட்டா பட் தமனாக்கா வெயிட் குறைவாமே:).. நேக்கு ஜத்தியமா தெரியாது நேற்று நெ.தமிழந்தான் சொன்னார்:)..

    அதனால அப்பெட்டி அவோக்கு ஃபிட் ஆகிட்டுது போலும்.. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நான் சீனிச்சம்பல் சாப்பிடப்போறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:).

    பதிலளிநீக்கு
  51. அங்கு லண்டன் எனக்கூட ஒரு இடம் இருக்கு.//

    அதிரா ஆமாம் அங்கும் லண்டன் இருக்கு முதலின் என் மகன் சொன்ன போது குழம்பினேன் நானும். இன்னொன்று அங்கு ஒரு ப்ராவின்ஸ் ஃப்ரென்ச் பேசும் ப்ராவின்ஸ், க்யூபெக், ந்யூ பர்ன்ஸ்விக்....என்று அங்கெல்லாம் பெயர்கள் ஒன்று போல் இருக்குமாம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  52. @ கீதா/

    ஓம் கீத்ஸ்ஸ் உங்களுக்கு வரலாறு தெரிஞ்சிருக்கு:)

    பதிலளிநீக்கு
  53. ஹலோ ஞானி அதென்ன அனுஷ் குண்டு என்று...ஸ்ரீராம் பெரிய பெட்டியாத்தான் போட்டுருக்கார்....ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  54. ஊரும் பேரும் சுவாரஸ்யமான ஆராய்ச்சி!
    சமீபத்தில் தான் திரு கௌதம நீலாம்பரனின் 'சோழ வேங்கை' படித்தேன். வரலாற்று நாவல்களுக்கே உள்ள இயல்புப்படி இரு கதாநாயகியர் - கதையின் முடிவில் ஆசிரியர் "அந்த இரண்டு பெண்களுமே அவன் வாழ்வில் மிகவும் முக்கியமானவர்கள் - அவர்களில் அவன் யாரை மணந்து கொள்ளப் போகிறான் என்பதை நான் எப்படி யூகிக்க முடியும்?" என்று விட்டு விடுகிறார்!! அது அவன் வாழ்க்கைப் பிரச்னையாம்! அப்போது அது பற்றி ஏன் எழுதினாரோ? :-))
    அனுஷ்காவை கட்டம் கட்டப் பார்த்தீர்களா?! :-))

    பதிலளிநீக்கு
  55. ஓம் கீத்ஸ்ஸ் உங்களுக்கு வரலாறு தெரிஞ்சிருக்கு:)//

    ஹா அஹ ஹா ஹா ஹா பூஸார் இதுக்கு நான் பயங்கரமா சிரித்துவிட்டேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  56. அனுஷ்காவை கட்டம் கட்டப் பார்த்தீர்களா?! :-)/

    அட! மிகிமா!!! ஹா ஹா ஹா ஹா ஹா ஹையோ சிரிச்சுட்டேன்!! ஸ்ரீராம் பாருங்க இங்க மிகிமா என்ன சொல்லிருக்காங்கனு!!! ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  57. இனி எல்லாரும் ஃபோனை எடுத்ததும் அல்லோ எனச் சொல்ல வேண்டாம்.. “மியாவ்” எனச் சொலுங்கோ ஊக்கே?:)//

    கண்டுபிடிச்சவரும் மியாவா அல்லது ஸ்காட்லாந்தே மியாவ் தானா!!! அப்போ நாங்க உங்களைக் கூப்பிட்டா லொள் லொள் அப்படிம்போம்...!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  58. கட்டத்தை விட்டு வெளியேறி விட்டாலும் பதிவில் இருக்கார்.தளத்தை விட்டு வெளியேறினாலும் மனதில் கட்டம் கட்டி உட்கார்ந்து விட்டாரே!//

    கோமதிக்கா ஆஆஆஆ ஆஹா ஆஹா....செம செம...ஸ்ரீராம்க்கு ஒரே சந்தோஷம் ஃபௌன்டெய்ன்....ஹா ஹா ஹா....நாம வெறும் கட்டம் போட்டு அனுஷ் என்று சொன்னாலே நம்ம மக்கள் இப்படி ரசிக்கறாங்களேனு!!!! அதுவும் கோமதிக்கா எல்லாரும்....ஹா ஹா ஹா ஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
  59. ஸ்ரீராம் இன்று கதம்பம் செம....ரசித்தேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
  60. ஊர்ப்பெயர்கள் பற்றிய ஆராய்ச்சி வெகு ஸ்வாரஸ்யம். கேரளம் என்பதே எப்படி வந்தது என்பதற்கு மூன்று நான்கு உண்டு. சேரர்கள் ஆண்டதால் சேரளம் என்பது கேரளம் என்றாயிற்று என்று ஒரு காரணம். மற்றொன்று கேரளத்தில் தென்னை அதிகம் எல்லாவற்றிற்கும் தென்னையின் பயன்பாடுதான் என்பதால் கேர என்பது கேரளம் ஆனது என்றும் உண்டு. தமிழர்களும் தமிழ் மொழியும் இருந்ததன் அடையாளமும் கேரளத்தில் உண்டு. நல்ல தொகுப்பு.

    வரலாறு பற்றி இரு பெரிய எழுத்தாளர்கள் சொல்லியிருப்பதும் அறிய முடிந்தது.

    ப்ரிட்டிஷ் காலத்தில் இந்து முஸ்லின் சண்டைக்கு அவர்கள்தான் காரணம் என்று தெரியும் என்றாலும் எப்படி ஏற்பட்டது என்பதற்கான ஆதாரப் பூர்வமான தகவல் புதிது. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    அனைத்தும் நன்றாக இருக்கிறது. எப்படி இப்படி இத்தனையும் டைப் செய்கிறீர்கள்? ஆச்சரியம்.

    உங்கள் கவிதையைக் காணவில்லையே ஸ்ரீராம்ஜி

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  61. தமிழ்நாட்டில்கூட ஒரு இடத்திற்கு Little England என்ற பெயர் இருந்திருக்கிறது. ஒருவேளை, இந்த இங்கிலாந்துக்காரனுங்க வாண்டுகளாக இருக்கும்போது இங்கேதான் நடைபழகியிருப்பானுங்களோ? வளர்ந்து பெரிசானவுடன் யூரோப்புக்கு ஓடி செட்டிலாகிட்டானுங்க போலருக்கு..

    ஸ்கொட்டிஷ் சரித்திரப் பேராசிரியர் இதுக்கு என்ன சொல்றாரு?

    பதிலளிநீக்கு
  62. பொய்கள் மூன்று தானா
    எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா
    எதைச் சொல்ல எதை விட
    எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா
    தமிழரசே உன்னிடம் கேட்கிறோம்
    விடியல் உண்டா இல்லை இதுவே தானா

    (சும்மா சட்டென தோன்றியது ஒன்றா ரெண்டா ஆசைகள் எனும் பாட்டில் பொய்கள் போட்டால் சரியாகுமே என்று அப்படி சும்மா ....ஹிஹிஹிஹி)

    கீதா


    பதிலளிநீக்கு
  63. ஸ்கொட்டிஷ் சரித்திரப் பேராசிரியர் இதுக்கு என்ன சொல்றாரு?//

    ஹா ஹா ஹா ஹா ஏகாந்தன் அண்ணா நீங்களே சொல்லிருக்கீங்களே ஸ்காட்டிஷ் சரித்திரப் பேராசிரியர்னு ....இந்திய சரித்திரத்தை ஆராய்ந்திருப்பாரோ!?!!? ஓ ஞானியாச்சே!! அவர் காசிக்கு மட்டும் தான் அடிக்கடி போவார்.அதுவும் பாய்ச்கலில் போவார்..ஞானியாக்கும்!!!! ஆஆஆ மீ ஆன் த ரன்வே....பறந்துட்டேன்...!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  64. காலச்சக்கரம் நரசிம்மா ஹிந்துவில் இவர் கட்டுரை என்னருமை தோழி வாசிச்சிட்டு வந்தேன் . .இவரின் அம்மாவும் ஒரு எழுத்தாளர் தானே
    இவர் வெற்றிவேலின் வானவல்லி புக்கை வெளியிட்டார் நான் fb யில் இந்தப்போ .
    மாயா !! கட்டாயம் பார்க்கணும் .எந்த சேனல் ? யூ டியூபில் தேடினா கிடைக்குமமா ? .

    பதிலளிநீக்கு
  65. ஏஞ்சல், சன் தொலைக்காட்சி! விளம்பரங்கள் பார்த்தால் கொஞ்சம் ஒரு மாதிரியா இருக்கு! ஆனால் நரசிம்மானு இப்போ ஶ்ரீராம் சொல்லித் தான் தெரியும். இந்திய நேரப்படி மாலை ஏழு மணிக்கு.

    பதிலளிநீக்கு
  66. ஊர் பேர் மட்டுமா இங்கே nathan என்ற பேர் நிறைய பெருகும் இருக்கு நாம் நாதன் அப்படினு கூப்பிடுவோம் இவங்க நேத்தன் என்கிறாங்க
    அப்படித்தான் அனிதா ஆனிட்டா :)

    பதிலளிநீக்கு
  67. //அந்தப்புரம் போகாதே அரிஞ்சயா' நாவலில் காலச்சக்கரம் நரசிம்மா..// இப்படி ஒண்ணு வந்திருக்குனு தெரியாது. தேடிப் பிடிச்சுப் படிக்கணும். இவர் அம்மா கமலா சடகோபன். எழுத்தாளர். இவர் தந்தை கோபுவும் எழுத்தாளர் தான். ஆனால் டைரக்டர் ஶ்ரீதரிடம் உதவி இயக்குநராக இருந்தவர். கதை, வசனம் கோபுனு வரும். அந்த கோபு இவர் தான். ஶ்ரீதரும் இவரும் நெடுநாள் நண்பர்கள்.

    பதிலளிநீக்கு
  68. நகைச்சுவை நடிகர் வெ.ஆ.மூர்த்தி சமீபத்தில் தன் சதாபிஷேகம் (80-ஆவது பிறந்தநாள்) கொண்டாடியிருக்கிறார். சச்சு விழாவில் ஆஜரானதாக மீடியா நியூஸ். சும்மா உள்ளேபோட்டு உப்புமா கிண்டலாமென்று..!

    உத்தரவின்றி உள்ளே வா.. உன்னிடம் ஆசை கொண்டேன் வா..!
    -பாடல் நினைவில் (SPB,TMS,LRE)

    பதிலளிநீக்கு
  69. சில வருடங்கள் முன்னர் நடிகர் ஶ்ரீகாந்தின் சதாபிஷேக ஃபோட்டோ ஃபேஸ்புக்கில் வலம் வந்தது. இனி இது வரும். "உத்தரவின்றி உள்ளே வா! படம் நகைச்சுவை நடிகையாக அந்த மேகலா என்னும் நடிகை அல்லவோ? உத்தரவின்றி உள்ளே வா பாடலைச் சொல்றீங்களா? மன நலம் கெட்டுப் போன பெண்! பழங்கால நினைவுகளில் மூழ்கிச் சரித்திர காலக் கதாநாயகியாகக் கலக்குவார்! "நாதா! நாதா!" என விரட்டுவார்.:))))))

    பதிலளிநீக்கு
  70. நகைச்சுவை சுவையாக இருந்த கால கட்டம் அது!

    பதிலளிநீக்கு
  71. @ கீதாக்கா சித்ராலயா கோபு அவர்கள் தானே .எனக்கு இந்த விவரம் கணேஷ் அண்ணா ஒருமுறை சொன்னார் முகப்புத்தகத்தில்
    என்னருமை தோழி தொடரின் நடையை நான் சிலாகித்தபோது அண்ணா சொன்னார் நரசிம்மா அவர்களைப்பற்றி

    பதிலளிநீக்கு
  72. Geetha Sambasivam said...
    ஏஞ்சல், சன் தொலைக்காட்சி! விளம்பரங்கள் பார்த்தால் கொஞ்சம் ஒரு மாதிரியா இருக்கு! ஆனால் நரசிம்மானு இப்போ ஶ்ரீராம் சொல்லித் தான் தெரியும். இந்திய நேரப்படி மாலை ஏழு மணிக்கு.//



    கீதாக்கா எங்க வீட்ல தமிழ் கனெக்க்ஷன் இல்லை :) எங்க பொண்ணு குஷ்பூ நமி ஏ;ல்லாம் பார்த்து தமிழை பிச்சி பிச்சி பேசினா :) அதனால் 2010 லேயே கனெக்ஷன் தூக்கி எடுத்திட்டோம் ,..கணினியில் தான் இப்போல்லாம் ஏதாச்சும் வேணும்னா பார்க்கிறேன் .


    சன் டிவியா ஓகே தேங்க்ஸ் தேடிப்பார்க்கிறேன்

    பதிலளிநீக்கு
  73. ஆமாம், சித்ராலயா கோபு தான். கமலா சடகோபனின் "கதவு" கலைமகள் பத்திரிகையின் நாராயணசாமி ஐயர் பரிசு வாங்கிய நாவல். நரசிம்மாவின் சமீபத்திய பல நாவல்கள் படிச்சேன். கடைசியாப் பஞ்ச நாராயணக் கோட்டம்.விமரிசனம் கூட எழுதினேன். :))))

    பதிலளிநீக்கு
  74. கீதாக்கா அந்த கதவு //இங்கே லைப்ரரியில் பார்த்தேன் 8 வருஷமுன்னே அப்போ தெரியாது .இங்கே 6 மாசத்துக்கொருமுறை வேற லைப்ரரிக்கு புக்ஸை மாற்றுவாங்க .திரும்பி தேடணும் அங்கேயே .

    கலைமகள் பத்திரிகைலாம் இன்னும் வெளிவருதா ? அம்மாவுக்கு பிடிச்ச பத்திரிகை

    பதிலளிநீக்கு
  75. பஞ்ச நாராயண கோட்டத்தில் இருக்கேன் :)இப்போ

    பதிலளிநீக்கு
  76. கலைமகள், மஞ்சரி, அமுதசுரபி மூணும் வருது. இதிலேயும் சில மாற்றங்கள் என்றாலும் மற்றப் பத்திரிகைகளைப் பார்க்கையில் இவை பரவாயில்லை ரகம். அமுதசுரபிக்குத் திருப்பூர் கிருஷ்ணன் ஆசிரியரா இருக்கார். கலைமகளுக்கும், மஞ்சரிக்கும் யார்னு தெரியலை!

    பதிலளிநீக்கு
  77. நான் எடுத்தா முடிக்காம வைக்க மாட்டேன், அதுக்காகவே ஓய்வாக இருக்கும் சமயம் மட்டும் புத்தகம் படிப்பேன். :)

    பதிலளிநீக்கு
  78. @ கீதாக்கா :) இன்னும் தலையணை அளவுக்கு இருக்கும் 1200 பக்க தி ஜாவை வச்சிக்கிட்டு முழிக்கிறேன் :)
    அதுக்குள்ள மாங்கா ராசம்மா ஜெசி அப்டேட்டா என்ன செய்ய நிறைய விஷயங்கள் :) ஆனா படிச்சே தீரணும்

    பதிலளிநீக்கு
  79. மாங்கா ரசமா//மாங்கா ரசமா :)))

    பதிலளிநீக்கு
  80. //அப்படி சோழர் காலத்தில் சூழ்ச்சி செய்யாமல் அரசியலில் யாரும் நிலை பெறமுடியாது......//
    இது பொதுவான ஸ்டேட்மெண்ட். சோழர் காலத்தில் இல்லை, எந்தக் காலத்திலும் அரசியலில் சூழ்ச்சி இல்லாமல் நிலைபெற முடியாது. இப்போதுபோல் கம்யூனிகேஷன் இல்லாத காலம். எப்படி உறவினர்கள் ஒவ்வொருவரும் என்ன என்ன நினைக்கிறார்கள், யார் கவுக்கத் திட்டம் போடுகிறார்கள், அவர்கள் செய்வது என்ன, மந்திரிகளில் யார் யார் எந்த எந்தக் கட்சி என்பதெல்லாம் அறிந்துகொள்வது சுலபமா என்ன?

    ஏன் அருண்மொழி, தனக்குக் கிடைக்கவேண்டிய பட்டத்தை மதுராந்தகனுக்கு விட்டுத் தரணும், பத்து வருடங்களுக்குமேல் காத்திருக்கணும், எப்படிப்பட்ட நெருக்கடியை அப்போது அவன் சந்திச்சிருப்பான், எப்படி பழி வாங்குவது போன்றவற்றிலிருந்து தப்பித்து ஆட்சியைக் கைப்பற்றினான், ஏன் ராஜேந்திர சோழன், சிறப்பாக ஆட்சி தந்த ராஜராஜ சோழனுடன் கருத்து வேறுபாடு கொள்கிறான், அவனைவிட பெரும் செயல்களைச் செய்துகாண்பிக்கிறான், ஆயினும் சரித்திரம் ராஜராஜ சோழனை நினைவுகொள்ளும் அளவு ராஜேந்திர சோழனை நினைவுகூர்வதில்லை. அதன் காரணம் என்னவாயிருக்கும்? சரித்திரச் சான்றுகளிலேயே பிரகதீஸ்வரர் ஆலயம் பெற்ற புகழை கங்கை கொண்ட சோழபுரம் பெறவில்லையே. ராஜேந்திரன் வெற்றி பெற்றாலும், ராஜராஜன் குணநலன்களில் இன்னும் சிறப்பாக இருந்திருப்பார் (சமகால எம், கே இருவரையும் நினைவுகூறுங்கள்)

    கோல்கொண்டா கோட்டையில் அரசன் உறங்கும் அறையின் மேற்பகுதி, பக்கப் பகுதிகளில் அவரது உறவினர்கள் (பெண்கள், அதாவது மனைவியர் அல்ல) படுத்துறங்கும், தங்கும் அறைகள் இரு (மூன்று?) பகுதிகளிலும் மேற்பகுதியிலும் உள்ளது. சுவரின் கற்கள் ஸ்பெஷல். மற்ற அறைகளில் என்ன பேசினாலும், சுவர்களில் காதுவைத்தால் கேட்டுவிடும் (அதே சமயம் அவர்கள் கேட்கமுடியாது). இதைப் பார்த்து பிரமித்தேன். (கோல்கொண்டா கோட்டையை அவுரங்கசீப் முற்றுகை இட்டுத் தோல்வியடைந்தார். எவ்வளவு மாதம்தான் காத்திருப்பது. கடைசியில் அவருக்கு ஒரு வழி தென்பட்டது. எப்படியோ கோட்டையின் ஒரு தளபதி அவரது வலையில் வீழ்ந்தார். பயத்தில் அல்லது ஒரு வேளை அவுரங்கசீப் வெற்றிபெறும்போது தனக்கு சகாயம் கிடைக்கும் என்று நினைத்து பல மாதங்கள் கழித்து ஒரு வாசலைத் திறந்துவிட்டார் (இல்லையென்றால் அவுரங்கசீப் தோல்வி நிச்சயம்). அந்தத் துரோகத்தால் அவுரங்கசீப் படை வெற்றிபெற்றது. வெற்றியின் முடிவில் அவுரங்கசீப்பின் முதல் 'முடிவு', அந்தத் தளபதியை சிரச்சேதம் செய்ததுதான். இது 400-450 வருடங்களுக்கு முந்தைய வரலாறு). சமகால வரலாறு டயானாவின் மரணம் போன்ற பலவற்றை எழுதலாம். இவற்றை கூட இருப்பவர்கள் டைஜஸ்ட் செய்துதான் ஆகவேண்டும். வேறு வழியில்லை. அப்படி ஒரு சூழ்ச்சி நடக்கவில்லை, நடந்தாலும் தன் மனதில் இல்லை என்பதுபோல்தான் அரச அதிகாரம் உள்ளவர்களிடம் பழகவேண்டும்.

    அரசியலில் 'கவிழ்க்காமல்', 'கள்ளத்தனம் இல்லாமல்' வெற்றி இல்லை. ஒருவரை புரொஜக்ட் செய்து மேலே கொண்டுவருவதற்கு, அவரும் சூழ்ச்சியில் ஈடுபடணும், தனக்கான ஜால்ரா கோஷ்டிகளையும் வளர்க்கணும். இதுக்கு சமகால நிகழ்வுகளை உதாரணமாகச் சொன்னால் ஸ்ரீராம் அதை சென்சார் செய்யும் வாய்ப்பு இருக்கு.

    பதிலளிநீக்கு
  81. ஸ்ரீராம் - கோவில் விஷயங்கள் அவ்வளவாக உங்கள் வாசகர்கள் ரசிப்பது கடினம். சுருக்கமாகச் சொல்கிறேன்.

    ஸ்ரீரங்கத்தில் இருந்து அரங்கனையே வணங்கினவர்கள் உண்டு. காஞ்சியில் இருந்து கச்சி வரதராஜனையே தெய்வமாக வணங்கிய வைணவர்கள் உண்டு. அதுபோல் அஹோபிலம் அல்லது அதுபோன்ற க்‌ஷேத்திரத்தில் இருந்து அவனையே தெய்வமாக வணங்கிய வைணவர்கள் உண்டு. இவர்கள் இன்னொரு ஊருக்கு புலம் பெயரும்போது, தாங்கள் இருக்கும் கோவிலில் (சேவை செய்யும்), தான் மிஸ் செய்யும் தன் தெய்வ உருவை சன்னதி வடிவில் ஸ்தாபித்திருக்கிறார்கள். அப்போதுதான் அவர்களால், தான் சேவை செய்யும் கோவிலில் வாழ்க்கை கழிந்தாலும், தன் பெருமாளை விடவில்லை அவனையும் ஆராதிக்கிறேன் என்ற திருப்தி கிடைத்திருக்கும்.

    திருவல்லிக்கேணியில், அரங்கன், இராமர் சன்னிதி உண்டு. திருப்பதியில் வரதராஜர், யோக நரசிம்மர் சன்னிதி உண்டு. இவையெல்லாம், மைக்ரேட் ஆன வைணவர்களால் ஏற்பட்டது. இதுபோல் பல ஷேத்திரங்கள் உண்டு. இது என் அனுமானம்.

    இதுபோன்று பல கோவில்கள், புலம் பெயர்ந்தவர்களால் ஏற்பட்டிருக்கும். இப்போதும் அப்படி நடந்துகொண்டிருக்கிறது. காலக்கிரமத்தில் அதற்கு ஏற்றபடி புராணங்களும் உதித்துவிடுகின்றன.

    பதிலளிநீக்கு
  82. @ ஏகாந்தன் - // நடிகர் வெ.ஆ.மூர்த்தி// - எனக்கு அவரின் நம்பர் வேணும். எப்படி கண்டுபிடிப்பது? யாராவது யோசனை சொல்லுங்களேன்.

    பதிலளிநீக்கு
  83. காலச்சக்கரம் நரசிம்மாவைப் பற்றிப் படித்தபோது, சமீபத்தில் ஸ்ரீதரைப் பற்றி ஒரு புத்தகத்தில் எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது. ஸ்ரீதர் படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றது, விநியோகஸ்தர்கள் வரிசையில் நின்று படம் வாங்கிச் செல்வர், ஸ்ரீதரின் புகழ் அப்படிப்பட்டது எல்லாம் நமக்குத் தெரியும். விக்ரமை வைத்து அவர் இயக்கிய 'தந்துவிட்டேன் என்னை' படம், யாரும் விரும்பவில்லை, அவருக்கே ஏதோ தவறு என்று தெரியும், இருந்தாலும் வேறு வழியில்லாமல் தன் சொந்தப் பொறுப்பில் வெளியிட்டு கடுமையான நஷ்டமடைந்தார். அதைவிட, ரசிகர்கள், 'என்ன படமெடுத்திருக்கான் காசை வீணடித்து' என்று தியேட்டரில் சொல்வதைக் கேட்டு மனமுடைந்தார். எப்படி இருந்த நான், இப்படி ஆகிவிட்டேனே என்றுதான் (இன்னொரு விஷயம், அவரது மரணத்துக்கு எல்லோரும் வந்தார்கள், நடிகர் விக்ரமைத் தவிர)

    பதிலளிநீக்கு
  84. "ஆசிரியர் அதிகாரம் இருந்தும்
    வாசகரின் அன்புக்காக
    கொடி இடையாள் தமன்னாவின் படத்தை வெளியிட்டு
    என் சமீபத்தைய உருவத்தை ஏளனப்படுத்த
    பெரிய கட்டமாக வெளியிட்டால்
    எனக்கு ரோஷம் பொங்காதா
    நானே வெளியேறிவிட்டேன்..
    இப்படிக்கு - அனுஷ்கா"

    என்று கட்டத்துக்குள் எழுத்துக்கள் எனக்கு மட்டும்தான் தோன்றுகிறதா?

    பதிலளிநீக்கு
  85. அனைவருக்கும் வணக்கங்கள். நாவல்களில் சீறிய சிங்கமாக திகழ்ந்த நான் சீரியல் சிங்கமாக மாறுவதை குறித்து பலர் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள். சீரியல் எனக்கு புதிதல்ல. ஜெயா டிவியில் கிருஷ்ணா காட்டேஜ், கலைஞர் டிவியில் கௌதமி நடித்த அபிராமி, தூர்தர்ஷனில் பல சீரியல்கள் எழுதியிருந்தாலும், நாவல்கள்தான் எனக்கு கண்ணகி. சீரியல் மாதவியிடம் அவ்வப்போதுதான் போகிறேன். குஷ்பு சுந்தர் தயாரிப்பில் சன் டிவியில் வரும் மாய, எனது நாவல்கள் போலவே ஆன்மிகம், அமானுஷ்யம், விஞ்ஞானம், நகைச்சுவை, காதல், குடும்ப கதை, திகில் மர்மம், புதிர் என்கிற காக்டைல் தான். முயற்சி செய்து பாருங்கள். சீரியல் சிங்கம் வேண்டாம் என்று தோன்றினால். சீறிய சிங்கமாகவே இருந்துவிடுகிறேன். கருத்துகளுக்கு நன்றி.
    காலச்சக்கரம் நரசிம்மா

    பதிலளிநீக்கு
  86. பல்லவ மர்ம புதினம் அத்திமலைத்தேவன் ஆகஸ்ட் மாதத்தில் துவங்கி, அடுத்த ஜூலை மாதம் வரையில் ஐந்து பாகங்களாக வெளிவர இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  87. ஸ்ரீராம் - //இதுவரை ஓரிரண்டு சீரியல்கள் பார்த்திருப்பேன். சோவின் தொடர்கள்// - நான் சீரியல்கள் எப்போதும் பார்த்ததில்லை. 'சித்தி' ஆரம்ப 4-5 வாரங்களும், முடிவு 5 வாரங்களும் தொடர்ந்து பார்த்தேன். என் ஹஸ்பண்ட், சீரியல் பார்க்கக்கூடாது என்று எப்போதோ எனக்குச் சொன்னார். அதை ரொம்ப சீரியசா நான் கடைபிடிக்கிறேன். எப்போதும் சீரியல் பார்க்கமாட்டேன். (பஹ்ரைன்ல 95கள்ல, வாரா வாரம் சீரியல்களை, கையளவு மனசு, ரமணன் நிகழ்ச்சி போன்றவை, ரெகார்ட் செய்து, கேசட் கடைகளே, ரெகுலர் கஸ்டமருக்கு டேப் தருவாங்க. அதாவது 10 தினார்-1200 ரூ கொடுத்தால், 30-35 கேசட் எடுத்துக்கலாம் over a period of time, mostly in a month. அப்படி வார இறுதியில் வாங்கிப் பார்ப்போம்)

    இன்னொன்று, என் நண்பன், உறவினர் சிலர், எப்படி சீரியல்களுக்கு ஓரளவு அடிமையாகிவிட்டார்கள் என்பதையும் கண்டிருக்கிறேன். (நண்பனை துபாயில் சந்தித்தபோது, தினமும் அவன் ஆபீசிலிருந்து 6.30க்குத்தான் வருவான் என்பதால், 4 மணியிலிருந்து சீரியல்களை ரெகார்ட் செய்து, அவன் வந்ததும் பார்க்க ஆரம்பிப்பான். இதுபோல்தான் மற்றவர்களும். அதனால் எனக்கு இன்னும் ஸ்டிராங் ஒபினியன் சீரியல்கள் பார்ப்பதைப் பற்றி). இது ஒன்றுதான் ஹஸ்பண்ட் சொல்லி நான் கடைபிடிக்கும் ஒரே விஷயம்.. ஹா ஹா ஹா.

    இப்பவுமோ சில நிகழ்ச்சியைப் பார்த்தால் அவள் 'ஏன் இந்த வேண்டாத வேலை' என்பாள் (பிக் பாஸ் சில நாட்கள் பார்த்தால்). அதனாலேயே அதன் பக்கம் போவதில்லை. சில சேனல் நிகழ்ச்சியைப் பார்க்க ஆரம்பித்தால், (அமெரிக்காவின் அடுத்த மாடல்), என் பையன், ஏன் ரெபுடேஷனைக் கெடுத்துக்கறீங்க, சேனலை மாத்துங்க என்று சொல்வதால் அதையும் ஓரிரண்டு நாட்களிலேயே விட்டுவிட்டேன். மாஸ்டர் செஃப் மட்டும்தான் அவங்க யாரும் ஒண்ணும் சொல்றதில்லை.

    பதிலளிநீக்கு
  88. காலச்சக்கரம் நரசிம்மாவை இங்கு பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.

    'சீறிய சிங்கம்' இல்லை. 'சீரிய சிங்கம்' -

    "மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு"

    சீறுவது பாம்பு மட்டுமே (மனிதனுக்கு எல்லா விலங்குகளின் குணமும் உண்டு. ஹா ஹா ஹா).

    நீங்கள் சீரியலிலும், அதுவும் சன் தொலைக்காட்சியில் வருவதால் நிச்சயம் வெற்றி பெருவீர்கள், மென்மேலும் வெற்றி பெற வேண்டும். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  89. இந்த மாயா ஏற்கனவே புத்தகமாக வந்து பிறகு தொலைக்காட்சிக்கு போனதா ?
    தொடரை பார்த்துவிட்டு கருத்துக்களை இங்கே ஸ்ரீராமிடம் பகிர்கிறோம் ..

    பதிலளிநீக்கு
  90. இவர் வெற்றிவேலின் வானவல்லி புக்கை வெளியிட்டார்//

    ஆமாம் ஏஞ்சல்....
    கீதா

    பதிலளிநீக்கு
  91. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  92. காலச்சக்கரம் நரசிம்மன் அவர்களுக்கு வணக்கம். இங்கு எங்கள் ப்ளாகில் வந்ததது மகிழ்ச்சி. முகநூலில் இல்லாத எங்களைப் போன்றோர் காண முடிகிறதே! உங்கள் கதை நல்ல வடிவில் சீரியலாக வர வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  93. "ஆசிரியர் அதிகாரம் இருந்தும்
    வாசகரின் அன்புக்காக
    கொடி இடையாள் தமன்னாவின் படத்தை வெளியிட்டு
    என் சமீபத்தைய உருவத்தை ஏளனப்படுத்த
    பெரிய கட்டமாக வெளியிட்டால்
    எனக்கு ரோஷம் பொங்காதா
    நானே வெளியேறிவிட்டேன்..
    இப்படிக்கு - அனுஷ்கா"

    என்று கட்டத்துக்குள் எழுத்துக்கள் எனக்கு மட்டும்தான் தோன்றுகிறதா?//

    ஹா ஹா ஹா ஹா ஹா ஹையோ நெல்லை சிரிச்சுட்டேன் இதை வாசித்து. ரசிக்கவும் செய்தேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
  94. ஆனா நெல்லை அதுவல்ல காரணம்.....அவருக்கு நல்ல மனது. நெல்லை இப்படி எல்லாம் சொல்லுவார்....தமனாவுக்கு ஒரு சான்ஸ் கொடுப்போமே என்று தான் கட்டத்தை விட்டு வெளியே போயிட்டாராக்கும்!!!!!! (இது ரகசிய ந்யூஸ் ஃப்ரம் அனுஷ் டு அரம!!!!ஹிஹிஹி)

    கீதா

    பதிலளிநீக்கு
  95. //Thulasidharan V Thillaiakathu said...
    ஓம் கீத்ஸ்ஸ் உங்களுக்கு வரலாறு தெரிஞ்சிருக்கு:)//

    ஹா அஹ ஹா ஹா ஹா பூஸார் இதுக்கு நான் பயங்கரமா சிரித்துவிட்டேன்...

    கீதா//

    அனுக்காவை.. அனுஸ்.. அனுஸ்.. எனச் சொல்வோர் இருக்கும் இந்த உலகில்:)).. நான் ஏன் கிதாவை, கீத்ஸ்.. கீத்ஸ்ஸ் என ஜொள்ளக்கூடாதூஊஊஊஊ?:)

    பதிலளிநீக்கு
  96. முதன்முதலாக எனது நாவல் சங்கதாராவை விமர்சித்தது, எங்கள் பிளாக் ஸ்ரீராம் அவர்கள்தான். எனவே இந்த பிளாக்கிற்கு நான் அவ்வப்போது பிறந்த வீட்டுக்கு வருவது போல் வருவேன். என்னை வாழ்த்திய நெ. த அவர்களுக்கு நன்றி. நான் திருப்பாவையை அறிவேன். இங்கு சீரிய என்று குறிப்பிடாமல் சீறிய என்று குறிப்பிட்டதற்கு காரணம் எனது சங்கதாரா நாவல் பலரை சீற வைத்ததை குறிப்பிடவே சீறிய சிங்கம் என்றேன். மற்றபடி உங்கள் அனைவரையும் இந்த பிளாக்கில் சந்தித்தது குறித்து மகிழ்ச்சி. மாயா மூலக்கதை சுந்தர் சி அவர்களுடையது. எனது நாவல்களை படித்த அவர், இதன் திரைக்கதை வசனத்தை நான் கையாண்டால் நன்றாக இருக்கும் என்று கூறவே ஒப்புக்கொண்டேன். மற்றபடி, எனது நாவல்களை விரைவில் வெளியிடுவேன்.

    பதிலளிநீக்கு
  97. திரு.பாலகிருஷ்ணன் அவர்களின் ஊர் பெயர்கள் பற்றிய ஆய்வு சுவாரஸ்யம். பகிந்தமைக்கு நன்றி.

    சரித்திர நாவல்கள் குறித்து கல்கி அவர்கள் கூறியிருப்பது மிகவும் சரி.

    பொன்னியின் செல்வனுக்குப் பிறகு நான் மிகவும் ரசித்துப் படித்த புதினம், ரா.கி.ரெங்கராஜன் எழுதிய,'நான் கிருஷ்ணதேவராயன்'.
    'திருவரங்கன் உலாவையும் சொல்லலாம்.

    சுஜாதாவின் 'ரத்தம் ஒரே நிறம்' தனி ரகம்.

    பாலகுமாரனின் உடையாரும், கங்கை கொண்ட சோழனும் படிப்பதற்கு நிறைய பொறுமை வேண்டும். சரித்திர தகவல்கள் நிறைய உண்டு.

    பதிலளிநீக்கு
  98. ச் ரீராமைக் காணல்ல இன்னும்:).. ஓஓஓஓஓஓஓஓஓ நேகுப் புரிஞ்சுபோச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்.. சீரியல் பார்க்க இடம் பிடிச்சிட்டார் முன் வரிசையில்:)).. ஹையோ ராமா ராமா:))

    பதிலளிநீக்கு
  99. //ஏகாந்தன் Aekaanthan ! said...
    தமிழ்நாட்டில்கூட ஒரு இடத்திற்கு Little England என்ற பெயர் இருந்திருக்கிறது. ஒருவேளை, இந்த இங்கிலாந்துக்காரனுங்க வாண்டுகளாக இருக்கும்போது இங்கேதான் நடைபழகியிருப்பானுங்களோ? வளர்ந்து பெரிசானவுடன் யூரோப்புக்கு ஓடி செட்டிலாகிட்டானுங்க போலருக்கு..

    ஸ்கொட்டிஷ் சரித்திரப் பேராசிரியர் இதுக்கு என்ன சொல்றாரு?//

    ஹா ஹா ஹா அரசியல்ல இதெல்லாம் சகஜம்தானே ஏ அண்ணன்:)).

    பதிலளிநீக்கு
  100. பயனுள்ள தொகுப்பிற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  101. ப்ரிட்டிஷ் காலத்தில் இந்து முஸ்லின் சண்டைக்கு அவர்கள்தான் காரணம் என்று தெரியும் என்றாலும் எப்படி ஏற்பட்டது என்பதற்கான ஆதாரப் பூர்வமான தகவல் புதிது. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  102. காலச்சக்கிரம் இரண்டாம் முறை படிக்கிறேன். விறுவிறுப்பு குறையவில்லை.
    நரசிம்மா வாவர்களுக்கு வணக்கங்களும் வாழ்த்துகளு,.
    அthiகாரி பாலகிருஷ்ணனை மீண்டும் சந்திக்க நேர்ந்தால் எவ்வளவு விஷயம் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  103. @ ஏகாந்தன்
    நீங்கள் சொல்வது உண்மையே ஒரே வீட்டில்
    பலவித தீவிரங்களைப் பார்க்கிறேன் சுத்த ஃபோபியா
    சத்த ஃபோபியா,கிஎனென் ஃபோபியா இப்படி ஹாஹா.

    @ நெ.த. உங்களுக்கும் இடி பிடிக்காதா.
    இனி சென்னையில் வீடு கட்டினால் பேஸ்மெண்ட் வைத்துக் கட்டப் போகிறேன். அட்லீஸ்ட் சவுண்ட் ப்ரூஃப் அறையாவது வேண்டும்.

    பதிலளிநீக்கு
  104. அன்பு ஸ்ரீராமுக்கு மனம் நிறை வாழ்த்துகள் தகவல் களஞ்சிய வியாழன் ஆகிவிட்டது இந்தப் பதிவு

    பதிலளிநீக்கு
  105. @ நெ.த.:

    // நடிகர் வெ.ஆ.மூர்த்தி - எனக்கு அவரின் நம்பர் வேணும்.//
    தெரியவில்லையே. எங்கு கிடைக்குமோ?

    //..அவரது மரணத்துக்கு எல்லோரும் வந்தார்கள், நடிகர் விக்ரமைத் தவிர)//
    விக்ரம், உள்ளே ஆள் எப்படி என்பது கண்கூடாகத் தெரிகிறது..

    //மாஸ்டர் செஃப் மட்டும்தான் அவங்க யாரும் ஒண்ணும் சொல்றதில்லை.//
    உங்கள் விஷயத்தில் இதுதான் ஸேஃப் என அவர்கள் முடிவுகட்டியிருப்பார்கள்!

    //சீறுவது பாம்பு மட்டுமே ..//
    யார் சொன்னது? அவ்வப்போது பூஸார் செய்வது என்னவாம்? தூரத்தில் இருந்து ஃபோட்டோ எடுத்துக்கொண்டிருந்தால் என்ன புரியும்? சீண்டிப் பார்த்தால்தானே தெரியும்!

    பதிலளிநீக்கு
  106. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  107. /
    (முதல் முறையாக இவர் எழுதிய கதை ஒன்று சீரியலாக வருகிறதாம். சன் டீவியில் ஜூலை ஒன்பது முதல் இரவு ஏழு மணிக்கு - 'மாயா' என்கிற பெயரில். சீரியல் பார்க்காத என்னை சீரியல் பார்க்க வைக்கிறார்!) உங்களைக் கவர்ந்தவரா

    பதிலளிநீக்கு
  108. வாங்க கோமதி அக்கா..

    //எப்படி எல்லாம் அந்தக் காலத்தில் இரு தரப்புக்கும் கலவரத்தை தூண்டி விட்டு இருக்கிறார்கள்.//

    ஆம். அடிப்படையையே கலைத்து விட்டார்கள்.

    //தளத்தை விட்டு வெளியேறினாலும் மனதில் கட்டம் கட்டி உட்கார்ந்து விட்டாரே!//

    ஹா.... ஹா... ஹா... செம... செம... செமக்கா...

    பதிலளிநீக்கு
  109. நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.

    பதிலளிநீக்கு
  110. வாங்க ஏகாந்தன் ஸார்.. நீங்கள் சொல்வது போல படங்கள் இருக்கிறதுதான். ஆனால் தனித்திருக்கும் படத்தைப் போடவே ஆசை!

    //தனுஷ்கா, அமன்னா படத் தேர்வில் //

    ஹா... ஹா... ஹா... அடுத்தமுறை கவனத்தில் கொள்கிறேன்!

    பதிலளிநீக்கு
  111. வாங்க அதிரா...

    முகநூலில் இந்தக் கட்டுரையைப் படித்தபோது ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது. எனவே டுத்து வைத்திருந்தேன். இப்பதான் நேரம் கிடைத்தது!

    //இனி எல்லாரும் ஃபோனை எடுத்ததும் அல்லோ எனச் சொல்ல வேண்டாம்.. “மியாவ்” எனச் சொலுங்கோ ஊக்கே?:)//

    இன்று நான் என் உறவினர் ஒருவருக்கு அப்படிச் சொன்னதும் இப்போது ஒரு பூனைக்குட்டி வீட்டில் வந்து அட்டகாசம் பண்ணுவதால் நான் அப்படிச் சொல்வதாக எண்ணிக்கொண்டார்!

    பதிலளிநீக்கு
  112. கீதா..

    //அவர்களிடம் இப்படிக் கேட்டு எங்களுக்குத் தொகுத்துப் போடுவது.....நாங்களும் தெரிந்து கொள்ள உதவுவது....அதற்கும் உங்களுக்குப் பாராட்டுகள்!!!! //

    நன்றி. நன்றி நன்றி!

    பதிலளிநீக்கு
  113. அதிரா..

    //இன்று எனக்குப் பிடிக்காத சப்ஜக்டைப்பற்றியே ஸ்ரீராம் பேசியிருக்கிறார் கர்ர்ர்:)).. வரலாறு:).//

    எப்பவாவது அதையும் போடவேண்டுமல்லவா!

    //ஹா ஹா ஹா எங்கே ஆராவது வர்ணியுங்கோ பார்ப்போம் அது எப்படி என:)).//

    ஹோ... இதை யாரும் கவனிக்கவில்லை போல - கில்லர்ஜியைத் தவிர! அவர் ஏற்கெனவே எழுதி வருகிறார்!

    பதிலளிநீக்கு
  114. அதிரா...

    //சினிமாப் பாட்டோ அது ரைம் வேஸ்ட்... இப்படிச் சொல்லித்திரிவோரை எனக்குப் பிடிக்காது...:)//

    சினிமாப பாட்டு பற்றி நான் அப்படிச் சொல்ல மாட்டேன் என்பது உங்களுக்கே தெரியும்!

    பதிலளிநீக்கு
  115. அதிரா..

    //அதனால அப்பெட்டி அவோக்கு ஃபிட் ஆகிட்டுது போலும்.//

    அனுஷ் இறங்கிப் போனதும் காற்றில் கட்டம் பெரிதாகிவிட்டது!

    பதிலளிநீக்கு
  116. //ஸ்ரீராம் இன்று கதம்பம் செம....ரசித்தேன்....//

    நன்றி கீதா.

    பதிலளிநீக்கு
  117. வாங்க துளஸிஜி..

    //எப்படி இப்படி இத்தனையும் டைப் செய்கிறீர்கள்? ஆச்சரியம். //

    இதில் ஆர் வி ராஜு வின் பதிவு காபி, பேஸ்ட். எனவே கஷ்டமில்லை. ஆயினும் அவ்வப்போது படிக்கும்போதோ, தோன்றும்போதோ டைப் செய்து சேமித்து வைத்து விடுவேன்!

    //உங்கள் கவிதையைக் காணவில்லையே ஸ்ரீராம்ஜி//

    ஆ... இதோ ஒரு ரசிகரின் ஏக்கம்.. அடுத்த வாரம் கவனித்து விடுவோம். ஜூலை ஆறாம் தேதியான இன்று என் மகனின் பிறந்த நாள் மட்டுமல்ல, உலக முத்த நாளாம்! இந்நாளில் முன்னர் முகநூலில் பகிர்ந்ததை அடுத்த வாரம் போட்டு விடுகிறேன்!!!

    பதிலளிநீக்கு
  118. பொய்கள் பற்றிய சட்டுபுட்டு கவிதைக்கு நன்றி கீதா.

    பதிலளிநீக்கு
  119. வாங்க ஏஞ்சல்... உங்கள் கேள்விகளுக்கு கீதாக்கா கீழே பதில் சொல்லியிருக்கார்

    பதிலளிநீக்கு
  120. ஏகாந்தன் ஸார்..

    //சும்மா உள்ளேபோட்டு உப்புமா கிண்டலாமென்று..!//

    உப்புமாவை யாரும் கவனிக்கவில்லையோ!

    பதிலளிநீக்கு
  121. ஏஞ்சல்..

    //என்னருமை தோழி தொடரின் நடையை நான் சிலாகித்தபோது அண்ணா சொன்னார் நரசிம்மா அவர்களைப்பற்றி//

    இபபவும் அவர் தனது அப்பா கோபு பற்றியும் ஸ்ரீதர் பற்றியும் சுவையான கட்டுரை ஒன்றை பிரதி வெள்ளி ஹிந்து தமிழில் எழுதி வருகிறார்.

    பதிலளிநீக்கு
  122. கீதாக்கா.. நிறைய மீள்வருகைகள், நிறைய குட்டிக் கூட்டிப் பின்னூட்டங்களில் சுவையான உரையாடல்கள் நிகழ்த்தி இருக்கிறீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  123. வாங்க நெல்லைத்தமிழன்.. நீங்கள் எல்லாவற்றையும் ஒரு வித்தியாசமான பார்வையில் அணுகுகிறீர்கள். அழமாகப் படித்து ஆழமாக யோசிக்கிறீர்கள். உங்கள் நீண்ட பின்னூட்டம் ஒரு உதாரணம்.

    பதிலளிநீக்கு
  124. நெல்லை...

    //இதுக்கு சமகால நிகழ்வுகளை உதாரணமாகச் சொன்னால் ஸ்ரீராம் அதை சென்சார் செய்யும் வாய்ப்பு இருக்கு.//

    புரிகிறது. ஆனால் நான் சென்ஸார் செய்பவன் அல்ல என்று நீங்கள் அறிவீர்கள்!

    பதிலளிநீக்கு
  125. நெல்லை...

    //கோவில் விஷயங்கள் அவ்வளவாக உங்கள் வாசகர்கள் ரசிப்பது கடினம். சுருக்கமாகச் சொல்கிறேன்.//

    இதில் "உங்கள் வாசகர்கள்" என்பதில் ஒரு இடைவெளி விழுகிறது ; தெரிகிறதே... ஏன்?

    நடிகர்களின் தொலைபேசி எண்கள் மணிமேகலைப் பிரசுரம் ஒரு புத்தகம் வெளியிட்டிருந்தது. அது முன்னால்... இப்போது என்ன நிலையோ? நிஜமாகக் கேட்கிறீர்களா? ஏன்?

    பதிலளிநீக்கு
  126. நெ.த....

    //என்று கட்டத்துக்குள் எழுத்துக்கள் எனக்கு மட்டும்தான் தோன்றுகிறதா?//

    ஆமாம் நெல்லை... உங்களுக்கு மட்டும்தான் தோன்றுகிறது. உங்களுக்கே தெரிகிறதா என்று கேட்கத் தோன்றவில்லை பாருங்கள்!

    பதிலளிநீக்கு
  127. வாங்க காலச்சக்கரம் நரசிம்மா ஸார்... உங்கள் வருகையால் மகிழ்ச்சி அடைகிறது எங்கள் தளம். உங்கள் வார்த்தைகள் மேலும் மகிழ்ச்சிக்குள்ளாக்குகின்றன. மிக்க நன்றி.

    மாயா கதை உங்கள் கதை இல்லை, சுந்தர் சி அவர்களுடையது என்பதில் எனக்கு சற்றே ஏமாற்றம்.

    //பல்லவ மர்ம புதினம் அத்திமலைத்தேவன் ஆகஸ்ட் மாதத்தில் துவங்கி, அடுத்த ஜூலை மாதம் வரையில் ஐந்து பாகங்களாக வெளிவர இருக்கின்றன.//

    குறித்துக்கொண்டேன் ஸார்.

    பதிலளிநீக்கு
  128. நெல்லைத்தமிழன்... நிறைய சீரியல்கள் பார்த்திருக்கிறீர்கள்! எனக்குப் பொறுமை இல்லை.

    //மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு"//

    திரு நரசிம்மாவுக்கு நீங்கள் கொடுத்திருக்கும் இந்த வரிகளை முகநூலில் அவர் பதிவில் அவருடைய நெருங்கிய நண்பர் / உறவினர் ஒருவரும் கொடுத்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  129. வாங்க ஏஞ்சல்... மாயா நரசிம்மா கதை இல்லை என்று அவரே சொல்லி இருக்கிறார். சுந்தர் சி கதையாம். மாயா என்று ஒரு சுஜாதா கதை இருக்கிறது (என்று நினைக்கிறேன்)

    பதிலளிநீக்கு
  130. வாங்க பானு அக்கா...

    விவரங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  131. வாங்க அதிரா..

    //ச் ரீராமைக் காணல்ல இன்னும்:)..//

    அதற்குள்ளாக சீரியலுக்கு இடம் பிடிப்பதா! இரண்டு மூன்று நாட்களாக மனா உளைச்சல் தரும் வேலைகளில் பிஸி. சாதாரணமாக உடனே கண்டுபிடித்துவிடும் நீங்கள் இம்முறை அதைக் கண்டுபிடிக்க முடியாமல் ஜாக்கிரதையாக இருந்துவிட்டேன்!!!

    பதிலளிநீக்கு
  132. நன்றி முத்துசாமி ஸார்... உங்கள் கட்டுரைகள் சுவாரஸ்யமான வரலாற்றுத் தொன்மங்களை அலசி எழுதப்படுகிறது. படித்து வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  133. நன்றி வல்லிம்மா... இந்த ஜனவரியில் வாங்கிப் படித்த புத்தகம் அது.

    //அன்பு ஸ்ரீராமுக்கு மனம் நிறை வாழ்த்துகள் தகவல் களஞ்சிய வியாழன் ஆகிவிட்டது இந்தப் பதிவு//

    நன்றி. நன்றி அம்மா.

    பதிலளிநீக்கு
  134. வாங்க ஜி எம் பி ஸார்..

    //சீரியல் பார்க்காத என்னை சீரியல் பார்க்க வைக்கிறார்!) உங்களைக் கவர்ந்தவரா //

    ஆமாம் ஸார்.. இவர் எழுதி இருக்கும் நாவல்களை முடிந்தவரை விடாது படித்து வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  135. @ஸ்ரீராம் ,மகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!