முன் காலத்தில், ஆனந்தவிகடன் தீபாவளி மலர் வந்தவுடன், நானும் என்னுடைய அண்ணனும் முதலில் படிப்பது, அதில் சிறுவர் கதைப் பகுதியில் வருகின்ற 'காட்டிலே தீபாவளி' அல்லது 'கரடியார் வெடித்த கேப்பு' அல்லது 'கபீஷ் கொளுத்திய கம்பி மத்தாப்பூ' போன்ற கதைகளைத்தான்! (எழுதியவர் வாண்டு மாமா? ராஜி?) இங்கே அசோக் லேலண்டு தீபாவளி! - கதையல்ல நிஜம்!
ஆயுத பூஜை போல - தீபாவளி நாட்களும் அசோக் லேலண்டில் இனிமையானவை, இனிப்பானவை. எழுபதுகளில், கம்பெனி சார்பில் ஒரு ஸ்வீட் பாக்ஸ் இலவசமாக கிடைக்கும். மேலும் குறைக்கப் பட்ட விலையில் ஒரு ஸ்வீட் பாக்ஸ் - வேண்டும் என்று எழுதித் தருபவர்களுக்கு, சம்பளத்தில் இருபது ரூபாய் பிடித்தம் செய்து கொண்டு, தீபாவளிக்கு ஓரிரு நாட்கள் முன்னதாக ஸ்வீட் பாக்ஸ் கொடுப்பார்கள்.
எனது ஆபீசில், அனந்தநாராயணன் என்று பெயர் கொண்ட (காது கேளாதவர், பேச இயலாதவர்) நண்பர் ஒருவர் எங்களுடன் பணிபுரிந்து வந்தார். (இவருக்காகவே நான், காது கேளாதோரின் சைகை மொழியை, வேறு ஒரு நண்பரிடமிருந்து கற்றுக் கொண்டேன்) இவர், தனக்கு வருகின்ற குறைந்த விலை ஸ்வீட் பாக்ஸ் கூப்பனை / விண்ணப்பத்தை எங்கள் அலுவலகத்தில் இருந்த தலைமை வரைவாளர் ஒருவருக்காக விட்டுக் கொடுப்பது உண்டு. தலைமை வரைவாளர், அதற்குரிய தொகையை சம்பளம் வந்தவுடன் அனந்தநாராயணனுக்குக் கொடுத்துவிடுவார். குறைக்கப்பட்ட விலையில் கிடைக்கின்ற தரமான ஸ்வீட் என்பதால், அதற்கு அவ்வளவு டிமாண்ட்!
தீபாவளி மாதத்தில், பெஸ்டிவல் அட்வான்ஸ் தொகையாக ஒரு மாத சம்பளம் வழங்கப்பட்டு, பிறகு பத்து மாதங்களில் அந்தத் தொகை பிடித்தம் செய்யப்படும்.
பெஸ்டிவல் அட்வான்ஸ் கையில் கிடைத்தவுடனேயே பெரும்பாலான டிபார்ட்மெண்ட்களில் இருக்கின்ற நண்பர்கள் செய்யும் ஒரு வேலை (நாங்களும் செய்ததுதான்!) என்ன தெரியுமா? ஆளுக்கு நூறு ரூபாய் போட்டு, தீபாவளி வெடி நிதி (Diwali Crackers Fund) ஒன்றை ஆரம்பிப்பார்கள். இருபது நபர்கள் ஒரு நிதி அமைப்பில் இருந்தார்கள் என்றால், இரண்டாயிரம் ரூபாய் மொத்த வசூல்.இந்த நிதி அமைப்பின் உறுப்பினர்களுக்கு, இந்தத் தொகையிலிருந்து அவசரத் தேவைகளுக்கு கடன் அளிக்கப்படும்.
நூறு ரூபாய் கடன் பெறுபவர்கள், மாதம் ஒன்றுக்கு, ஐந்து ரூபாய் வட்டி செலுத்த வேண்டும். (ஆரம்பத்தில் மாதத்திற்கு மூன்று ரூபாய் வட்டி என்று வைத்திருந்தோம். பிறகு நான்கு ரூபாய் ஆகி, பல வருடங்களுக்கு ஐந்து ரூபாய் வட்டியாகவே இருந்தது என்று ஞாபகம்) நூறு ரூபாய் கடன் கேட்பவர்களுக்கு, தொண்ணூற்றைந்து ரூபாய்தான் கடன் கொடுப்போம். அவர் மறுநாள் தொடங்கி, ஒரு மாதத்திற்குள் எப்பொழுது கடன் திருப்பிக் கொடுத்தாலும் நூறு ரூபாயாகக் கொடுக்கவேண்டும்.
சொன்னால் நம்பமாட்டீர்கள் - இருபது உறுப்பினர்களில், மூன்று அல்லது நான்கு நபர்கள் மொத்தத் தொகையையும் கடனாக வாங்கிவிடுவார்கள். மாதா மாதம் வட்டித் தொகை செலுத்திக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு டிபார்ட்மெண்டிலும் குறைந்தது நான்கு தீபாவளி வெடி நிதிக் குழுவாவது இருக்கும்.
ஒரு முறை, நான், என்னுடன் இரயிலில் வந்த குரோம்பேட்டை நண்பர் ஒருவரிடம் கேட்டேன், 'நூறு ரூபாய்க்கு, ஒரு மாதத்திற்கு ஐந்து ரூபாய் வட்டி என்பது அதிகம் இல்லையா?' என்று. அவர் சொன்னார், "நாளை திங்கட்கிழமை, நமக்கு லீவுதானே, காலை நாலரை மணி சுமாருக்கு, ஸ்டேஷன் ஓவர் பிரிட்ஜ் மேலே வந்து கொஞ்சம் நின்று பாருங்கள்."
சென்று பார்த்தேன். அவரும், அவருடைய நண்பர் ஒருவரும், அங்கு நின்றிருந்தனர். அவருடைய நண்பரிடமிருந்து, பத்துப் பதினைந்து பேர் பணம் வாங்கிச் சென்றனர். என்ன விஷயம் என்று பிறகு அவர்கள் சொன்னார்கள். வந்து பணம் வாங்கிச் சென்றவர்கள் எல்லோரும் நடைபாதை காய்கறி வியாபாரிகள். ஒவ்வொருவரும் தொண்ணூற்றைந்து ரூபாய்கள் பெற்றுக் கொண்டு, ரயிலிலோ பஸ்சிலோ கொத்தவால் சாவடி (அப்போ கோயம்பேடு மார்க்கட் கிடையாது) சென்று காய்கறி வாங்கி வருபவர்கள். காய்கறி வாங்கிக் கொண்டு வந்து,கடை வைத்து, விற்பனை செய்து, வீடு திரும்பும்போது, தொண்ணூற்றைந்து ரூபாய் கொடுத்தவருக்கு நூறு ரூபாய் கொடுத்துவிட்டு, மீதிப் பணத்தை தங்கள் குடும்பச் செலவுக்காகக் கொண்டு செல்வார்கள்.
காலைக் கடன் கொடுத்து, மாலை வரவு வைக்கின்ற இவர்கள் கையில் இரண்டாயிரம் ரூபாய் இருந்தால், ஒரு வருடத்தில் அது குறைந்த பட்சம் முப்பத்தாறாயிரத்து நானூறு ரூபாய் ஆகிவிடுமே!
அடுத்த தீபாவளி முன்பணம் பெறும் காலம் வரும்பொழுது, ஒவ்வொரு உறுப்பினர் கணக்கிலும், குறைந்தபட்சம் நூற்று அறுபது ரூபாய் இருக்கும். சிவகாசியிலிருந்து ஒரு லாரி லோடு வெடி வாணம் வாங்குகின்ற ஏஜெண்ட் - சென்னை ஒன்று பகுதியைச் சேர்ந்தவர் (பலர் இருப்பார்கள்), கம்பெனிகளில் இந்த மாதிரி தீபாவளி நிதி நடத்துபவர்களிடம், வெடிகள் வாணங்கள் பட்டியல் கொடுத்து, பட்டியல் நிரப்புகின்ற உறுப்பினர்களின் தேவைகளை ஒன்று சேர்த்து, வரவழைத்துக் கொடுத்துவிடுவார். ஒவ்வொரு நிதிக் குழுவும், உறுப்பினர்களில் யாராவது ஒருவர் வீட்டில் வெடிகளைக் கொண்டு வந்து, பட்டியல் பார்த்து, பிரித்து, கட்டி, மேலே உறுப்பினர் பெயரை எழுதி வைத்துவிடுவார்கள். அந்தந்த குழு உறுப்பினர்கள், அவரவர்களின் வெடி பாக்கிங்கை அங்கிருந்து பெற்றுச் செல்வார்கள்.
தீபாவளி முடிந்த மறுநாள், அலுவலகத்திற்கு வருகின்ற, (தீபாவளி கொண்டாடிய) எல்லோருமே அவரவர்களின் புது உடையணிந்து வருவார்கள். குடும்பஸ்தர்கள், தங்கள் இல்லங்களில் செய்த இனிப்பு, கார வகைகளை தாராளமாக எடுத்து வந்து, தங்கள் பகுதிகளில் பணிபுரிகின்ற தீபாவளி கொண்டாடாத மற்ற மதத்துத் தோழர்களுக்கும், குடும்பம் இல்லாத பேச்சிலர் மக்களுக்கும் கொடுப்பது உண்டு. ("வீட்டுல செஞ்ச பட்சணம்! - சாப்பிடுங்க!")
உங்கள் அனுபவம் இனிமை
பதிலளிநீக்குதீபாவளி வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநல்ல அனுபவம்.
பதிலளிநீக்கு60% per anum -- not fair.
பதிலளிநீக்கு# Am I speaking rightly ?
நல்ல அனுபவம்...
பதிலளிநீக்குஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
//காலைக் கடன் கொடுத்து, மாலை வரவு வைக்கின்ற இவர்கள் கையில் இரண்டாயிரம் ரூபாய் இருந்தால், ஒரு வருடத்தில் அது குறைந்த பட்சம் முப்பத்தாறாயிரத்து நானூறு ரூபாய் ஆகிவிடுமே! //
பதிலளிநீக்குCan you please elaborate this ? # I calculated more than 72 K / anum @ the rage of Rs.2k / day. (for an year including all 12 calendar months)
What I wanted to say is,
பதிலளிநீக்கு1900 rupees given as loan in the morning to 20 people becomes 2000 in the evening. Keep or save the interest of 100 alone each day separately. So, 364 days X 100 = 36400 rupees (minimum)in a year.
ஆமாம், கல்லூரியில் தீபாவளி முடிந்த அடுத்த நாள், ஒரே புத்தாடை மயமாய் இருக்கும்!! ஆனா, ஸ்வீட்டெல்லாம் யாரும் கொண்டுவந்தமாதிரி ஞாபகமில்லை. (எல்லாம் தீர்ந்திருக்குமாயிருக்கும்).
பதிலளிநீக்குசிறுவயதில் எங்க வீட்டு உழவர்கள்தான் தீபாவளி, பொங்கலுக்குப் பலகாரமாகக் கொண்டு வந்து தருவார்கள்.
// ஐந்து ரூபாய் வட்டி என்பது அதிகம் இல்லையா?// என்கிற கேள்விக்கும், கிடைத்த பதிலுக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. அவர் அந்த வியாபாரிகளுக்கு அதே ரேட்டில் கொடுப்பதால், அது நியாயம் என்கிறாரா?
அலேக் அனுபவங்களில் தீபாவளி அனுபவங்கள் ருசித்தன. உங்களுக்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு// 1900 rupees given as loan in the morning to 20 people becomes 2000 in the evening. Keep or save the interest of 100 alone each day separately. So, 364 days X 100 = 36400 rupees (minimum)in a year. //
பதிலளிநீக்குஇப்போ புரியுது கந்து வட்டி கண்ணாயிரம் யாருன்னு
//இப்போ புரியுது கந்து வட்டி கண்ணாயிரம் யாருன்னு//
பதிலளிநீக்குநான் இல்லீங்கோ!
//// ஐந்து ரூபாய் வட்டி என்பது அதிகம் இல்லையா?// என்கிற கேள்விக்கும், கிடைத்த பதிலுக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. அவர் அந்த வியாபாரிகளுக்கு அதே ரேட்டில் கொடுப்பதால், அது நியாயம் என்கிறாரா?//
பதிலளிநீக்குஅவர் வியாபாரிகளுக்கு அதே ரேட்டில் தரவில்லை. அவருடைய நண்பர், வியாபாரிகளுக்கு, ஒரு நாளைக்கே ஐந்து சதவிகிதம் வட்டி வசூல் செய்கிறார் என்பதே பாயிண்ட்.
வங்கிகள் தந்தது - அந்தக் காலத்தில், சேமிப்புக் கணக்கில், ஆண்டு ஒன்றுக்கு நூறு ரூபாய்களுக்கு ஐந்து ரூபாய் வட்டி.
நண்பர்கள் நடத்திய தீபாவளி ஃபண்டில் நூறு ரூபாய்களுக்கு மாதம் ஐந்து ரூபாய் வட்டி.
இரயில்வே ஸ்டேஷன் ஆள் வசூலித்தது நூறு ரூபாய்களுக்கு நாள் ஒன்றுக்கு ஐந்து ரூபாய் வட்டி.
ஒரு வருட கணக்காகப் பார்த்தால்,
ஒரு வருட காலம் வங்கியில் சேமிப்புக் கணக்கில் நாம் நூறு ரூபாய் வைத்திருந்தால், நமக்கு நூற்று ஐந்து ரூபாய் கிடைக்கும்.
ஒரு வருடகாலம் தீபாவளி ஃபண்டில் நூறு ரூபாய் சுழன்றுகொண்டிருந்தால், ஒரு வருட முடிவில் குறைந்த பட்சம் நூற்று அறுபது ரூபாய் நமக்குக் கிடைக்கும்.
நூறு ரூபாய்கள் முதலாக வைத்துக் கொண்டு, ஸ்டேஷன் ஆள், ஒரு வருடத்தில், 365 X 5 = 1825 ரூபாய் சம்பாதிப்பார்.
இந்தக் கணக்கைப் பார்த்துப் புரிந்துகொண்டால், தீபாவளி நிதிக் கணக்கில், நாங்கள் விதித்த அறுபது சதவிகித (ஆண்டு)வட்டி அதிகம் இல்லை என்று தெரிந்துகொள்ளலாம்.
இப்பொழுது நிதி நிறுவனங்கள், குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய் டெபாசிட் என்றும், ஆண்டு ஒன்றுக்கு பன்னிரண்டு சதவிகிதம் (அதிக பட்சம்) வட்டி என்றும் அளிக்கிறார்கள்.
ஆனாலும் ஏழை மக்கள், (மாதம் ஒன்றுக்கு) நூற்றுக்கு அஞ்சு வட்டி என்ற கணக்கில், தனி நபர்களிடம் கடன் வாங்குகிறார்கள்.
//ஒரு வருடகாலம் தீபாவளி ஃபண்டில் நூறு ரூபாய் சுழன்றுகொண்டிருந்தால், ஒரு வருட முடிவில் குறைந்த பட்சம் நூற்று அறுபது ரூபாய் நமக்குக் கிடைக்கும். //
பதிலளிநீக்குOh!.. u mean, depositor will earn 5 % / month. That's huge... (compared to scheduled bank interest rate).
Previously, I thought you lend this money @ 5 % interest per month.
Btw... how do you make your fund to yield 5 % interest / month. U must be lending this for higher rate of Interest ..?
//Btw... how do you make your fund to yield 5 % interest / month. U must be lending this for higher rate of Interest ..?//
பதிலளிநீக்குQuestion not clear. Rs 100 borrower from the fund pays interest of Rs 5 every month to the treasurer of the fund.
நினைவுகள் அருமை! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅடாடா, தீபாவளி ஃபன்ட் என்பது எங்க ஆப்பீச்சிலும் இருந்ததே. ஆயுத பூஜை சிட்பன்ட் என்ற பெயரில். அதிலேயே பணம் வசூல் செய்து, வருட முடிவில் ஏதேனும் பரிசு கொடுப்பார்கள். கடனே வாங்காதவங்களுக்கு இன்சென்டிவ் உண்டு. மத்தவங்களுக்காக நான் என்னோட ஃபன்டிலே இருந்து வாங்கிக் கொடுப்பேன். :)))))
பதிலளிநீக்குஇன்னிக்கு இதோட மூணாம் முறையா இந்தப் பதிவுக்கு வரேன். ஒவ்வொரு முறையும் பாதி படிக்கையிலேயே மின்சாரம் போயிடும். :)))))
பதிலளிநீக்குமாதவன் ஸ்ரீநிவாச கோபாலனைப் போல எனக்குக் கணக்கு டீச்சர் அமையலை. (நல்லவேளையா) ஹிஹிஹி, மண்டைக் குடைச்சல் தாங்கலை போலிருக்கு. :P :P :P :P
மலரும் இனிய தீபாவளி நினைவலைகள் !
பதிலளிநீக்குமனம் நிறைந்த இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்..
எங்கள் ப்ளாக் ஆசிரியர்களுக்கும் வாசகர்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் . என்ன இப்படி வட்டிக் கணக்குப் போட்டு மண்டை காய வைக்கிறீங்களே நியாயமா .
பதிலளிநீக்குஇந்தப் பதிவில் எல்லோரும் வட்டிக் கணக்கை பற்றி சொன்னாலும் எனக்குப் பிடித்தது ஆனந்த விகடன் தீபாவளி மலரைப் பற்றிய மலரும் நினைவுகள் தான்!
பதிலளிநீக்குஆ.வி. தவிர கல்கி, கலைமகள், அமுதசுரபி தீபாவளி மலர்கள்! ஒவ்வொன்றும் குண்டுகுண்டாக.....
பரீட்சைக்குப் படிப்பதைபோல படித்த நாட்கள் நினைவுக்கு வந்தன.
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
பதிலளிநீக்குஉங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
எல்லாம் கைகூடி வந்து
என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்
அனுபவங்கள் மிகுந்த சுவாரஸ்யம்!
பதிலளிநீக்குஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
சுவாரசியமான பழைய நினைவுகளை மீட்டி பார்ப்பது ஒரு சுகம்தான். இனிமையான அனுபவங்கள்.
பதிலளிநீக்குகுட்டி குட்டியா அழகான படங்கள். கோலம் ரொம்ப அழகா இருக்கு. வெடி வெடிச்சு பன்னிரண்டு வருஷம் ஆச்சு. படத்துல இருக்கற சரத்தை கொளுத்தி விடனும் போல இருக்கு. :) சங்குசக்கரம் ஜோரா இருக்கு. எனக்கு விஷ்ணு சக்கரம் விடறதுக்கு ரொம்ப பிடிக்கும். கொஞ்சம் பயமா இருக்கும். ஆனாலும் பிடிக்கும்.
ஒரு முறை புஸ்வானம் வைக்கும்போதே கைல வெடிச்சிடுத்து. உடனே டாக்டர்கிட்ட போய் கட்டு போட்டுண்டு வந்து எல்லாம் ஆச்சு. வீட்டுக்கு வந்து மீதி வெடியை வெடிச்சே தீருவேன்னு பிடிவாதம் பிடிச்சு, அப்பா வேற வழி இல்லாம, மறுக்க முடியாம அம்மா, அப்பா, அண்ணா, அத்தை புடை சூழ வெற்றிகரமா இடது கையால மீதி எல்லாத்தையும் வெடிச்சேன். :)
எல்லோருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
அருமையான அலேக் அனுபவங்கள்...
பதிலளிநீக்குஇனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
ஆயுத பூஜைக்கு ஸ்வீட்.. தீபாவளிக்கு ஸ்வீட்.. அப்புறம் புது வருசத்துக்கு.. பொங்கலுக்கு ஸ்வீட்.. இப்படியே அலேக் அனுபவங்களை ஓட்டிடுவீங்களா? நியாயமா?
பதிலளிநீக்குஇந்த வட்டி ரொம்ப சாதாரண practice Madhavan.. எத்தனையோ வருசமா நடக்குறது. கடன் வாங்குறவங்களுக்கு bank போய் வாங்க முடியாது.. உண்டான சட்டம் லொட்டு லொசுக்குன்னுவாங்க.. இது போல 'அசுர வட்டி' ரொம்ப சகஜம்.. அதுவும் காய்கறி, பூ பிசினஸ்ல இது தேவையானதும் கூட!
பதிலளிநீக்குaka loan sharking madhavan.
பதிலளிநீக்குin reality, the interest is not monthly, but daily. if i want to borrow Rs.100 bucks, the interest is deducted first and i only get Rs.95 - i am expected to repay it at the end of the day.
most people who borrow so, repay the same day. most likely a day or two delay is tolerated.. after that it is mafiaso recovery.. and no more loans ever by any for the defaulter.
this practice extends to movie field as well.
one of the main reasons for blackmoney proliferation.
and பலான business.
பதிலளிநீக்கு