சனி, 17 நவம்பர், 2012

பாசிட்டிவ் செய்திகள் இந்த வாரம் 11/11/2012 முதல் 17/11/2012 வரை.


எங்கள் B+ செய்திகள்.
- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.
- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....   
 =================================================================


1) மதுரை நாகமலைப் புதுக்கோட்டை ஜெயக்குமார் : தன்னுடைய ஊரைச் சேர்ந்த மக்கள் குடிநீருக்குக் கஷ்டப்படுவதைப் பார்த்தும், நிலத்தடி நீரை அளவுக்கதிகமாக உறிஞ்சுவதைப் பார்த்தும் கவலை கொண்டு, கடம்படி என்ற இடத்தில் 200 அடி போர் அமைத்துத் தண்ணீர் எடுத்து, தன் ஊரில் தெருவுக்குத் தெரு குழாய் அமைத்து விநியோகம் தொடங்கியவர், பின்னர் ஊரில் இருந்த 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டியில் நீர் சேமித்து, அதைச் சுத்தப்படுத்திக் குடிநீராக்கி, அதில் வரும் 2000 லிட்டர் சுத்தமான குடிநீரை, கம்பியூட்டருடன் இணைக்கப்பட்ட நவீன சாதனம் மூலமாக மக்கள் பெற வழிவகைகள் செய்துள்ளார். பொதுத் தொலைபேசி போல காய்ன் பாக்ஸ் மற்றும் குழாய் உள்ள இந்த இயந்திரத்தில் இரண்டு ஒரு ரூபாய் நாணயம் போட்டு ஒரு குடம் நல்ல குடி தண்ணீரும், கைரேகை வைத்து 100 ரூபாய் செலுத்தி 50 குடம் தண்ணீரும் பிடித்துக் கொள்ளும் வசதி உள்ள இந்தத் திட்டத்திற்கு 6 லட்ச ரூபாய் செலவாம். 80 ஆயிரம் ரூபாய்  செலவில் இரண்டு வருடத்துக்கு ஒருமுறை வடிகட்டி  மாற்ற வேண்டியதிருக்குமாம். தினமலரிலிருந்து....

2) திண்டுக்கல்: சூரிய ஒளி, காற்று, மின் ஆற்றல்களை கொண்டு இயங்க கூடிய வகையில் ஆட்டோ ஒன்றை திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., கல்லூரி பேராசிரியர் மோசேதயான், மின்னணுவியல் துறை மாணவர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளார்.
இந்த ஆட்டோ இயங்கும் போது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது. ஆட்டோவை ஒரு முறை முழு அளவில் சார்ஜ் செய்தால், 96 கி.மீ., தூரத்திற்கு தற்போதைய ஆட்டோக்கள் இயங்கும் வேகத்தில் இயக்க முடியும் என்கின்றனர். 
    
நமது நாட்டில், ஆண்டுக்கு 300 நாட்கள் சூரிய ஒளி கிடைக்கும். காற்றலை சக்தியும் கிடைக்கும். சோலார் மின்தகடுகள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட காற்றாலைகள் மற்றும் மின்சக்சதியின் மூலம் சேகரிக்கப்படும். இச்சக்தி, ஆட்டோவில் இணைக்கப்பட்டுள்ள மின்கலத்தில் சேமிக்கப்படும். ""எஸ்ஆர்எம்'' மோட்டார் மூலம் ஆட்டோ இயங்குகிறது. இந்த ஆட்டோவில் ஆற்றல் குறைந்து விட்டால் பெட்ரோல் மூலமாகவும் இயக்க முடியும்.பேராசிரியர், மாணவர்கள் கூறியதாவது: எதிர்காலத்தில் மேலைநாடுகளை போல நம் நாட்டிலும் மின் சார்ஜர் நிலையங்கள் உருவாகிவிடும். இதை சிறு திட்டமாக துவங்கினோம். நாட்டுக்கு பயன்படும் வகையில் உருவாக்கி முடித்துள்ளதில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆரம்ப நிலையில் வடிவமைத்து இருக்கிறோம். மேலும் சில மாற்றங்கள் செய்து வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்யும்போது, அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள், என்றனர்.

3) மின்வெட்டை சமாளிக்க, தேவகோட்டை மாணவர்கள், "சூரிய ஒளி அடுப்பை' கண்டுபிடித்து சாதனை படைத்து உள்ளனர்.தினமும், 16 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. காஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய் தட்டுப்பாடும் பெண்களை அச்சுறுத்துகிறது.இதற்குத் தீர்வுகாண, தேவகோட்டை லோட்டஸ் பள்ளி மாணவர்கள், "சூரிய ஒளி சமைப்பான்' என்ற பெயரில், சூரிய ஒளி அடுப்பை கண்டறிந்து உள்ளனர்.
மாணவர்கள் ரஞ்சனி, மணிமாறன், அபினேஷ், அட்சயா, பார்கவி ஆகியோர் ஆசிரியைகள் சண்முகவள்ளி, ஜாஸ்மின் வழிகாட்டுதல்படி, அடுப்பு தயாரித்து உள்ளனர். மரப் பெட்டிக்குள் கறுப்பு வண்ணமிட்ட துத்தநாகத் தகட்டை வைத்துள்ளனர். அதில், ஒளி ஊடுருவும் வகையில் கண்ணாடி தட்டும், ஒளியை பிரதிபலிக்கும் வகையில், முகம் பார்க்கும் கண்ணாடியை மேலேயும் இணைத்துள்ளனர். சமைக்கத் தேவையான பொருளை பாத்திரத்தில் போட்டு, கண்ணாடியால் மூடினர். 
சூரிய ஒளி அடுப்பு' கண்டறிந்து சாதனை

மின்வெட்டை சமாளிக்க, தேவகோட்டை மாணவர்கள், "சூரிய ஒளி அடுப்பை' கண்டுபிடித்து சாதனை படைத்து உள்ளனர்.தினமும், 16 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. காஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய் தட்டுப்பாடும் பெண்களை அச்சுறுத்துகிறது.இதற்குத் தீர்வுகாண, தேவகோட்டை லோட்டஸ் பள்ளி மாணவர்கள், "சூரிய ஒளி சமைப்பான்' என்ற பெயரில், சூரிய ஒளி அடுப்பை கண்டறிந்து உள்ளனர்.

மாணவர்கள் ரஞ்சனி, மணிமாறன், அபினேஷ், அட்சயா, பார்கவி ஆகியோர் ஆசிரியைகள் சண்முகவள்ளி, ஜாஸ்மின் வழிகாட்டுதல்படி, அடுப்பு தயாரித்து உள்ளனர். மரப் பெட்டிக்குள் கறுப்பு வண்ணமிட்ட துத்தநாகத் தகட்டை வைத்துள்ளனர். அதில், ஒளி ஊடுருவும் வகையில் கண்ணாடி தட்டும், ஒளியை பிரதிபலிக்கும் வகையில், முகம் பார்க்கும் கண்ணாடியை மேலேயும் இணைத்துள்ளனர். சமைக்கத் தேவையான பொருளை பாத்திரத்தில் போட்டு, கண்ணாடியால் மூடினர். 

முகம் பார்க்கும் கண்ணாடி மூலம் சூரியஒளி பிரதிபலித்து, அடுப்புக்குள் செல்லும்போது, துத்தநாகத் தகட்டில் வெப்பம் அதிகரிக்கும். இதன் மூலம் சமையல், "ரெடி'. முதற்கட்டமாக, மாணவர்கள் அடுப்பில் வெந்நீர், காய்கறி, பருப்பை வேகவைத்து காண்பித்தனர்.நவ., 18ல் மானாமதுரையில், தேசிய இளம் விஞ்ஞானிகள் மாநாடு நடக்கிறது. அதில், இத்தயாரிப்பு வைக்கப்படும் என, கூறப்பட்டது.
முகம் பார்க்கும் கண்ணாடி மூலம் சூரியஒளி பிரதிபலித்து, அடுப்புக்குள் செல்லும்போது, துத்தநாகத் தகட்டில் வெப்பம் அதிகரிக்கும். இதன் மூலம் சமையல், "ரெடி'. முதற்கட்டமாக, மாணவர்கள் அடுப்பில் வெந்நீர், காய்கறி, பருப்பை வேகவைத்து காண்பித்தனர்.நவ., 18ல் மானாமதுரையில், தேசிய இளம் விஞ்ஞானிகள் மாநாடு நடக்கிறது. அதில், இத்தயாரிப்பு வைக்கப்படும் என, கூறப்பட்டது. 
4) 2001 இல் UPSC முடித்து 2002 இல் கிடைத்திருக்க வேண்டிய ஐ பி எஸ் பதவி ஓ பி சி  பிரிவில் இல்லை என்று சொல்லி மறுக்கப்பட்ட திரு லோகநாதன் பொதுப்பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டு, புதுச்சேரியில் டெபுடி கலெக்டர் பணி வழங்கப்பட, அதை எதிர்த்து கோர்ட்டில் 10 ஆண்டுகள் போராடி,  வெற்றி பெற்று, மீண்டும் பயிற்சிக்குச் சென்று, தன்னை விட 7,8 வயது குறைந்தவர்களுடன் எல்லாம் போட்டியிட்டு வென்று, ஐ பி எஸ் பதவி பெற்று, சர்தார் படேல் விருதும் பெற்றுள்ளார். சோர்ந்து போன தருணங்களில் தன்னுடைய மனைவியும் பெண்ணும் அளித்த ஊக்கத்தையும் குறிப்பிடுகிறார்.
5) செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும் அதில் தன் முத்திரையைப் பதிப்பது சிறப்புதானே.....  அந்த வகையில் திருப்பூர் டீ மாஸ்டர் ஒருவரின் திறமை பற்றிய  பாசிட்டிவ் செய்தி இது. மக்கள் கடைக்குச் சென்றால் ப்ளாக் டீ, ஸ்ட்ராங் டீ, லைட் டீ என்றெல்லாம் கேட்பார்கள் அல்லவா? இவர் ஒரே கோப்பையிலேயே ப்ளாக் டீ, பால் டீ, ஸ்ட்ராங் டீ மூன்றையும் ஒன்றோடொன்று கலக்காமல் போட்டு அசத்துகிறாராம் திருப்பூர் பேக்கரி ஒன்றில் பணியாற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த டீ மாஸ்டர் பாலு. படத்துடன்  தினமலரில் வந்திருந்த இந்த செய்தியில் உள்ள படத்தை தனியாக எடுத்து இங்கு சேர்க்க முடியவில்லை!
                  
6) மகளிர் சுய உதவிக் குழுக்கள் பற்றிய நிறைய பாசிட்டிவ் செய்திகளில் இதுவும் ஒன்று.  சென்று குடும்பம் நடத்தப் பணம் போதாமல் இருந்தபோது  தஞ்சாவூர்க் கலைத் தட்டுகள் தயாரிப்பைக் கற்று, அந்தத் தொழிலில் இறங்கி, இப்போது 500 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை விற்பனை செய்யத்தக்க வகையில் தட்டுகள் தயார் செய்து விற்று, முன்பு கந்து வட்டிக்கு கடன் வாங்கும் நிலையில் இருந்து இப்போது மீண்டு வந்திருப்பதையும், தங்கள் ஓய்வு நேரங்கள் உபயோகமாகச் செலவாவதையும் பெருமையாக தினமலரில் பகிர்ந்திருக்கிறார் அந்தக் குழுவின் தலைவி லலிதா. வீட்டை அழகுபடுத்த நினைப்போர் மற்றும் சிலரே இந்தவகைத் தட்டுகள் வாங்குவார்கள்  இந்தத் தொழிலின் சிக்கல் என்றும் சொல்கிறார்.
              

14 கருத்துகள்:

  1. பாசிட்டிவ் செய்திகளில் மனம் மகிழ்ந்த்து.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  2. செய்திகள் வாசிப்பது எங்கள் ப்ளாக் - நல்லா இருக்கே இது. அதுவும் நல்ல செய்திகள் கேக்க ரெம்பவே நல்லா இருக்கு. நன்றி

    பதிலளிநீக்கு
  3. திண்டுக்கல் உங்களுக்கு ரொம்ப பிடிச்ச ஊரோ?

    பதிலளிநீக்கு
  4. எங்கள் ப்ளாக்17 நவம்பர், 2012 அன்று 12:51 PM


    நன்றி ராஜராஜேஸ்வரி மேடம்,

    நன்றி அப்பாவித்தங்கமணி.

    திண்டுக்கல்தான் நிறைய நியூஸ் தருகிறது இல்லையா மோகன் குமார்? நன்றி தங்கள் வருகைக்கு.

    பதிலளிநீக்கு
  5. அனைத்தும் அருமை... (ஐ... எங்க ஊர் செய்தியும்)

    பதிலளிநீக்கு
  6. மின்சாரம் வாழ்க்கைக்கு மிக அத்தியாவசியமாய் ஆகிவிட்டது.இல்லாவிட்டால் எவ்வளவு கஸ்டம் !

    பதிலளிநீக்கு
  7. எங்கள் ப்ளாக் வாராவார நற்செய்தி மன்றமாகிவிட்டது.
    திண்டுக்கல்லில் இருப்பவர்கள் அறிவாளிகள். பணமும் சேர்ப்பார்கள். பூட்டும் தயாரிப்பார்கள்.
    தேவைகள் கண்டுபிடிப்புகள் அன்னை. அதனால்தான் கண்டுபிடிப்புகள் அதிகரிக்கின்றன. அனைத்து நற்செய்திகளுக்கு மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. திறமைசாலிகள்! பகிர்வுக்கு நன்றி.

    டீ மாஸ்டர் தனித்தனியாக நிற்க ஒவ்வொரு லேயருக்கும் நடுவே எதையாவது ஊற்றுவாரோ? எதற்கும் மக்கள் கேட்டுத் தெரிந்து கொண்டு குடிப்பது நல்லது:).

    பதிலளிநீக்கு
  9. பாஸிட்டிவ் செய்திகள் அத்தனையும் அருமை.

    டீ மாஸ்டர் என்ன வித்தை செய்கிறார்ன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கு.

    பதிலளிநீக்கு
  10. உண்மையில் இன்றைக்கு தேவை
    பாசிடிவான செய்திகளே........
    நன்றி
    வாழ்த்துகள்.......

    பதிலளிநீக்கு
  11. இப்படிப்பட்ட செய்திகளை படிப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  12. செய்தித் தாள்கள் எல்லாம் நெகடிவ்
    செய்திகளாகவே கொடுத்து நம்பிக்கையை
    குலைக்கிற பணியை செவ்வனவே செய்துவரும் வேளையில்
    தங்கள் பாஸிடிவ் செய்திகள் நம்பிக்கையைக்
    கூட்டிப் போகின்றன.
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. அப்பாடான்னு கொஞ்சம் உக்காந்து நாட்ல என்னதான் நடக்கிறது தெரிஞ்சுக்கலாமேன்னு புதிய தலைமுறை பாத்தா, எப்பவுமே வயத்த கலக்கற, பயமுறுத்தற, வேதனை தர செய்திகள்தான். இங்க வந்ததான் நம்பிக்கை தர நாலு நல்ல செய்தியை படிக்க முடியறது. சந்தோஷம்! தொடருங்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!