வியாழன், 22 நவம்பர், 2012

இந்த மாத PiT போட்டி - மரங்கள் - படங்கள்!

             
இந்த மாத PiT போட்டிக்கு தலைப்பு மரங்கள். என்னிடம் என்னென்ன மரங்கள் படங்கள் இருக்கின்றன என்று பார்த்தபோது கிடைத்தவற்றில் சில..!
                      
சாலை தெரிந்திருக்கக் கூடாது!

வீட்டின் மொட்டை மாடியிலிருந்து ஒரு க்ளிக்!


திருக்கடவூர் நந்தவனம்...!


கடந்து சென்றபோது க்ளிக்கியது.... பாதையும் பெரிய இடைவெளியும் இருந்திருக்கக் கூடாது!



செல் க்ளிக்! பறவை தெரிகிறதா? அதற்காக எடுத்தது!



க்ளோசப் கொய்யா!

புயல் காற்றில் சாய்ந்தாடும் மரம்!

விழுந்த மரம்! நீலத்தினால் நீளமான உயரம்!


அலைந்து திரிந்து எடுக்காதாதாலேயே  எதுவும் சிறப்பாக இருக்காது. இதற்காக, அதாவது இந்தப் போட்டிக்காக என்று  தனியாக எடுக்காமல் எல்லாமே சேமிப்பிலிருந்து!  PiT தளத்தின்,  ஆல்பத்தில் போட்டிக்கு வந்திருக்கும் படங்களைப் பார்க்காமல் என் படத்தை இணைத்து விடுவேன். அப்புறம்தான் மற்ற படங்களைப் பார்ப்பேன்! முதலிலேயே பார்த்தால் என் படத்தை இணைக்கத் தோன்றாதே!!!

12 கருத்துகள்:

  1. அருமையான தொகுப்பு.

    திருக்கடவூர் நந்தவனம் ‘தூறல்கள்’ நூலின் பின் அட்டைப்படம்.

    புயலில் ஆடும் கிளைகள்; கொய்யா, மொட்டை மாடி க்ளிக் எல்லாம் பசுமை.

    வீழ்ந்த மரம் வேதனை.

    தொடரட்டும் இனி ஒவ்வொரு மாதமும் PiT போட்டிக்காக ஒரு பதிவு:)!

    பதிலளிநீக்கு
  2. நான் கமெண்ட் போட்டது எங்கே?
    வெற்றியோ தோல்வியோ நம் கையில் இல்லை. இந்தத் தடவை எடுத்த படங்கள் அத்தனையும் சூப்பர்.
    இனிமே வெளியே வந்து எடுக்கலாம் ஸ்ரீராம். நன்றாக வரும். வாழ்த்துகள் மா.

    பதிலளிநீக்கு
  3. //இந்த மாத PiT போட்டி - மரங்கள் // புதுமையான வலைபூ ஒருநாள் முழுவதும் மேய வேண்டும் சார்....

    மொபைல் போட்டோக்கள் - உங்க நேர்மை எனக்குப் புடிச்சிருக்கு..... :-)

    பதிலளிநீக்கு
  4. பறவையை லென்ஸ் வச்சி கண்டுபிடிச்சுட்டேன்! நல்ல புகைப்படபகிர்வு நன்றி!

    பதிலளிநீக்கு
  5. மரங்கள்
    எப்படி இருந்தாலும் அழகு தான்.....
    அழகை அழகாக எடுப்பதில் போட்டி.......
    பங்கேற்பதே பெருமை தான்.....
    (எப்படி சந்தோசப்பட்டுக்கொள்ளலாம் பார்த்தீர்களா...)

    பதிலளிநீக்கு
  6. எபடிப்பார்த்தாலும் இயற்கை அழகுதான்.2ம் 3ம் மிக அழகாய் இருக்கே !

    பதிலளிநீக்கு
  7. திருக்கடவூர் பலமுறை போயிருக்கிறேன். இந்த நந்தவனம் தவறவிட்டிருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி அனைத்தும் அழகு.

    பதிலளிநீக்கு
  8. மரங்களை நானும் நிறைய எடுத்திருக்கேன். நேரம் இருக்கையில் பகிர்ந்து கொள்கிறேன். :))))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!