மன்னிக்கவும்..... நவராத்திரி முடிந்து, நாட்கள் பலவாகி விட்டன! இப்போது
பதிவு போடுவது, நாட்கள் தாண்டி விட்டாலும் படங்கள் ரசிப்பீர்கள் என்ற
நம்பிக்கையுடன்!
சுண்டலுக்காகக் கிளம்பிய முதல் பயணத்தில் ஏமாற்றம்தான் கிடைத்தது வெள்ளிக்
கிழமை என்றால் புட்டுதான் செய்ய வேண்டுமாம்! போனால் போகிறது என்று ஒரு
வீட்டில் சுண்டல் சேர்த்துச் செய்திருந்ததால் சுண்டல் பயணத்தின் நோக்கம்
நிறைவேறியது!!
1) "பெரும்பாலான பொம்மைகள் ஊர்லையே இருக்கு... இன்னும் கொண்டு வரலை! அதனால சிம்பிளாத்தான்...."
2) "நாங்க கும்பகோணம் காரங்க... அந்தக் காலத்திலேருந்து நரசுஸ் காபிதான். கும்பகோணம் போனால் நிறைய வாங்கி வந்து விடுவோம். நிறைய எங்க காலத்து பொம்மைகளே இருக்கு. பையனும் மருமகளும் வருஷா வருஷம் புதுசா வாங்கிடுவாங்க... மருமகள் மைலாப்பூர்க்காரி.... கேக்கணுமா? இந்த வருஷம் புதுசா வாங்கினதா....... அதோ அந்த மீரா..."
"குழந்தை நேற்று கிருஷ்ணன் வேஷம் போட்டாள்... இன்று காலை நாரதர் வேஷம்....
இன்னிக்கி சாயந்திரம் ராதை வேஷம் போட்டு விடப் போறா அவங்கம்மா
அவளுக்கு...."
3) "இங்க பாருங்க.... சைட்ல இருக்கே இது துவாரகா போய் விட்டு வந்தப்போ
அப்படியே செட்டா வாங்கினது....அதை போட்டோ எடுத்துட்டீங்களா..... கொஞ்சம்
இருங்க லைட் போடறேன்......"
4) "அடேடே... இந்த வருஷம் வர்றது கஷ்டம்னு சொன்னே..... ரெண்டு பேரும் வந்துட்டீங்களே... ரொம்....ப சந்தோஷம்... என்ன கேக்கறே... இந்த வருஷம் புதுசாவா.. இதோ இந்த கிரிக்கெட் செட் தான்......
[ஒரு ஞாயிறு படத்தில் இந்த கிரிக்கெட் செட் இடம்பெற்று விட்டது!]... இந்தா
சுண்டலும் இருக்கு...." [ஆம்... சுண்டல் கிடைத்த ஒரே இடம் இதுதான் அன்று!]
5) "ஒரொரு படத்தையும் தனித்தனியா எடேன்.... ரொம்பக் கஷ்டப் பட்டிருக்கோம்.. "
"இங்கே பாரு.. சைட்ல பாரு.... இது பார்க். அதுக்கு இதாலதான் தண்ணீர் ஊற்றணும்..... ஃபேன் போடக் கூடாது இந்த இடத்துல.. அப்பத்தான்
புல் Full effect ல வளரும்...."
"இதோ இது வச்சிக் கொடுக்கறதுக்கு... "
"நோ நோ
இது பொம்மை இல்லே.. என் பொண்ணு... புதுசா தாவணி போட்டிருக்கா....!"
6) வெள்ளிப் பயணம் முடிந்து அடுத்து செவ்வாய் சரஸ்வதி பூஜை அன்று சென்று வந்த இல்லம்.
அன்பே உருவான வல்லிம்மா இல்லம். உள்ளே சென்று அசடு வழிந்த கதை இங்கு
சென்சார் செய்யப் படுகிறது. :)))
'அந்தரத்துக் குழாய்' படம் நான் நினைத்த
அளவு (எடுக்க) வரவில்லை!
'சயன ஆஞ்சநேயர்' நான் இங்குதான் பார்த்தேன். சிங்கம்
என்று வல்லிம்மாவால் அன்புடன் அழைக்கப்படும் திரு நரசிம்மன் செய்த கலை
நயமிக்க ஸ்டூல் படத்தில் காணலாம். இது அவர்கள் வீட்டுத் தென்னை மரம்
விழுந்தபோது அதில் அவரே செய்ததாம். இதைத் தவிர அவர் கைவண்ணத்தில் உருவான ஒரு குதிரை பொம்மையும் சுள்ளி பொறுக்கிச் செல்லும் தொப்பியணிந்த கிழவன் சிலையும் கூட பார்த்தேன். (அதைப் படமெடுக்கவில்லை!). அவர் திறமைக்கு ஒரு சலாம்! இரண்டு படிதானா, மூன்றுதானா என்று கேட்டு வல்லிம்மாவிடம் மாட்டிக் கொண்டேன். சிரித்தபடி பாடம் எடுத்தார்கள்.
அகார அடிசல் சாப்பிட்டு,அன்பில் நனைந்து, ஆசீர்வாதம் பெற்று, கிளம்பினோம்.
சுண்டல் பயணக் கட்டுரை நல்லா இருக்கு.
பதிலளிநீக்குmhum therathu, collection romba kammi. :P:P:P:P
பதிலளிநீக்குசின்ன வயசில் நீடாமங்கலத்தில் நாங்களும் பல வீட்டு கொலுவுக்கு போவோம். என் நண்பர்கள் தீப்பெட்டியில் பூச்சிகளை
பதிலளிநீக்குபிடித்து வைத்திருப்பார்கள். அதை கூட்டத்தின் நடுவே நைசாய் விட்டு விடுவார்கள். மற்றவர்கள் அலறுவதை பார்த்த பின் நைசாய் கம்பி நீட்டுவார்கள்
தம்பு என்கிற நண்பன் தான் இந்த சேட்டையெல்லாம் அதிகம் செய்வான். மலரும் நினைவுகள் !
படங்கள் அழகா இருக்கு. நீங்க உங்க வீட்டு கொலுவுக்கு என்னை கூப்பிடலை (பயப்படாதீங்க. நான் தீபெட்டியோடு வர மாட்டேன்)
பதிலளிநீக்குநவராத்ரி பதிவு.... நான் எழுதுனதே லேட் என்று நினைத்தபோது எனக்கு சொன்னீங்க - நீங்க லேட் இல்லைன்னு! அந்த பதிவு இப்ப படித்தேன்.
பதிலளிநீக்குரசித்தேன். சுண்டல் கலெக்ஷன் கம்மி தான் போல! :)
நல்லா இருக்கு... ரசிக்க வைக்கும் படங்கள்...
பதிலளிநீக்குநல்லா ஒரு ஜாலி ரவுண்டு போனீங்களா. :) படங்கள் எல்லாம் அழகா இருக்கு. கலை நயம் மிக்க ஸ்டூல் மனதை கவர்ந்தது. திரு. நரசிம்மன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அக்கார அடிசல் அதுவும் ஐயங்கார் வீட்ல....ஆஹா! அமிர்தமா இருந்திருக்குமே. :)
பதிலளிநீக்கு//இது என் பொண்ணு!
பதிலளிநீக்குஹாஹாஹிஹிஹீ..
புட்டுக் கொடுமையைப் புட்டு வச்சதுக்கு நன்னி.
தட்டோடு நிற்கும் சிறுமியின் ஸ்மைல்.. தனியாக பொம்மை எதற்கு?!
பதிலளிநீக்குசுண்டல் பயணம் உங்களுக்கு. கொலு பார்த்த திருப்தி எங்களுக்கு:)!
பதிலளிநீக்குபாவாடை தாவணியில் யாரும் பார்க்கக் கிடைப்பதே இப்போ அபூர்வம்:)! ரொம்ப அழகு.
சிங்கம் சார் செய்த ஸ்டூல் டிஸைன் அருமை.
சுண்டல் பயணம் நல்லா தான் இருந்திருக்கு.
பதிலளிநீக்குசிங்கம் சார் செய்த ஸ்டூல் பிரமாதம்.
அக்கார அடிசல் ஆஹா....ஜோரா இருக்குமே.
அழகழகா இருக்கு ஒவ்வொரு கொலுவும்.
பதிலளிநீக்குஎன்ன அசடு வழிந்தீர்கள் எனக்கு ஒன்றும் நினைவே இல்லையே. எங்க கொலுவுக்கு இத்தனை மரியாதை கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி ஸ்ரீராம். அதுவும் அழகான மனைவியையும் அழைத்துவந்து கூடாஇ நிறையப் பழங்கள் கொடுத்து இவ்வளவு படங்களும் எடுத்து,நாந்தான் தான்க்ஸ் சொல்லணும். சுண்டலாவது கொடுத்தேனோ? மறதி ம்குந்த அசடும் நானே!
பதிலளிநீக்கு//"நாங்க கும்பகோணம் காரங்க... அந்தக் காலத்திலேருந்து நரசுஸ் காபிதான்.//
பதிலளிநீக்குகும்மோணத்துக்காரர்களுக்கு லோகல் பிராண்டுகள் நிறைய, அவர்களின் டிக்ரி காஃப்பிக்கு வாகா. நரசுஸ்,
கும்பகோண த்தை விட சேலத்துக்குத் தான் நெருங்கிய சொந்தம். சேலத்தில் தான் நரசுஸ்ஸின் தலைமையகம் இருக்கிறது.
//"ஒரொரு படத்தையும் தனித்தனியா எடேன்.... ரொம்பக் கஷ்டப் பட்டிருக்கோம்.. "//
எடுக்கறத்துக்கென்ன?.. ஒரொரு படத்தையும் தனித்தனியா எடேன்..
நாங்க வைக்கறதுக்கு பட்ட கஷ்டத்தைப் பாத்தா, எடுக்கறது எவ்வளவு ஈஸி தெரியுமா?"
//அப்பத்தான் புல் Full effect ல வளரும்...."//
Full effect-ல Full-லா வளரும்!
//அகார அடிசல் சாப்பிட்டு,அன்பில் நனைந்து.. //
You mean அக்கார அடிசல் or அக்கார வடிசல்?..
// வெங்கட் நாகராஜ் said...
பதிலளிநீக்குநவராத்ரி பதிவு.... நான் எழுதுனதே லேட் என்று நினைத்தபோது எனக்கு சொன்னீங்க - நீங்க லேட் இல்லைன்னு! அந்த பதிவு இப்ப படித்தேன். //
எங்களிடம் : ச்சே ச்சே.. இதுக்குலாம் அழப்டாது அடுத்த வாராம் நா, நவராத்திரி பதிவு போட்டா (!).. இந்த பதிவு, அந்தளுவுக்கு லேட்டுன்னு சொல்ல மாட்டாங்க.
நன்றாக இருக்கின்றது.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குநன்றி TNM
நன்றி கீதா மேடம்.
நன்றி மோகன் குமார். ரொம்பக் குறும்பு செய்திருப்பீங்க போல சின்ன வயசுல.... நாங்கள் கொலு வைக்கவில்லை. சென்று வந்த கொலுதான் எல்லாம்!
நன்றி வெங்கட்.... ஒருவழியா போட்டுட்டோம்ல....!!!
நன்றி DD.
நன்றி மீனாக்ஷி.
நன்றி அப்பாதுரை.
நன்றி ராமலக்ஷ்மி. பாவாடை தாவணிப் படங்களை இளையராஜா ஓவியங்களில் ரசிக்கக் கிடைப்பதோடு சரி!
நன்றி கோவை2தில்லி.
நன்றி அமைதிச்சாரல்.
நன்றி வல்லிம்மா.... சுண்டல் கொடுத்தீர்கள். பதிவு எழுதும் போது அந்த வார்த்தை விடுபட்டுப் போயிருக்கிறது. வளையல் பரிசை இன்னும் என் பாஸ் சொல்லி மாளலை.
நன்றி ஜீவி சார். நீங்கள் சொன்னதும்தான் சந்தேகம் வருகிறது. அவர்கள் சேலம் என்றுதான் சொன்னார்கள். கும்பகோணம் என்று எழுதியது பிசகு. மன்னிக்கவும்! அக்கார வடிசல் என்றுதான் நானும் சொல்லிக் கொண்டிருந்தேன். அப்புறம் சில பேர் 'அடிசல்' என்று திருத்தினார்கள். சமீபத்தில் மங்கையர் மலர் சமையல் குறிப்பிலும் அடிசல் என்றே போட்டிருந்தார்கள்.... அதுதான்.....!
நன்றி மாதவன். அடிக்கடி வாங்க!!
நன்றி மாதேவி.
நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
பதிலளிநீக்குநூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ? //
ஆண்டாளம்மா சொல்லி இருக்கிறதைப் பாருங்க. அக்கார அடிசில் தான் சரியான உச்சரிப்போடு கூடிய வார்த்தை. மதுரைக்காரியை இல்லை கேட்டிருக்கணும். இல்லைனா சாப்பிட வந்திருந்தீங்கன்னா அங்கே பார்த்திருக்கலாம். செய்முறையைப் பார்க்க மரபு விக்கிக்கும் போகலாம். :))))))) எல்லாம் ஒரு விளம்பரந்தேன். :)))))))
வடிசல், அடிசல் எழுத்து பேதத்திற்காக நான் சொல்ல வில்லை. அகார அடிசல் என்று குறிப்பிட்டிருந்தீர்கள், அல்லவா?
பதிலளிநீக்குஅகார= காரமில்லாத ஏதோ ஒன்றாக்கும் என்கிற எண்ணத்தில் கேட்டேன்.
இதுவா அதுவா இல்லை; அடிசல், வடிசல் இரண்டும் ஒன்றே. ஒவ்வொரு பகுதியிலும் உச்சரிப்பு ஒவ்வொரு மாதிரி.
இன்னொரு வேடிக்கை என்னன்னா,
ரொம்ப சகஜமா நாம் சொல்கிற, சாப்பிடுகிற 'இது' தான் அக்கார அடிசல் என்று சொன்னால், 'ப்பூ; இவ்வளவு தானா, இதுக்குத் தான் இந்த பில்டப்பா'ன்னு ஆயிடும்.
அந்த 'இது' என்னதுன்னு கீதாம்மா சொல்லப் போறாங்க, பாருங்க.
ஹாஹா, ஜீவி சார், நான் சொல்ல மாட்டேனே. வந்து பார்த்துக்கட்டும். :)))))
பதிலளிநீக்கு//வந்து பார்த்துக்கட்டும். :))))) //
பதிலளிநீக்குஇந்தப் பின்னூட்டத்தைக் கூடப் பார்த்ததாத் தெரிலே!
என்னது 'இது?' ஒரே புதிரா இருக்குதே? சகஜமா சாப்பிடுறதா? இதென்ன சாதமா? சாம்பார் ரசமா? அக்கார அடிசலுங்க. அக்கார அடிசல். அது சாதாரணமா? ஆமா, அப்படின்னா என்னங்க?
பதிலளிநீக்குhttp://tinyurl.com/bj3fskd
பதிலளிநீக்குஅப்பாதுரை மேலே கொடுத்துள்ள சுட்டியில் பார்க்கவும். நன்றி. :))))
சிங்கத்தின் உழைப்பைப் பாராட்டிப் பின்னூட்டம் இட்ட எல்லொருக்கும் சிங்கத்தின் சார்பில் மிக மிக நன்றி.
பதிலளிநீக்குமன்னிக்கவும்..... நவராத்திரி பதிவு போட்டு, நாட்கள் பலவாகி விட்டன! நாட்கள் தாண்டி விட்டாலும் இப்போதாவது பின்னூட்டம் எழுதுகிறேன், ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்!
பதிலளிநீக்குஹி.. ஹி..
//என் பொண்ணு//
ஸ்ரீராம் சாரின் மகளா அல்லது கொலு வீட்டினரின் மகளா?
//"ரொம்பக் கஷ்டப் பட்டிருக்கோம்.. "//
மகனுக்கு பள்ளியில் ஒரு மாடல் செய்து கொண்டுவரச் சொல்லிருக்காங்க. எரிச்சலும், கோவமுமாக இருக்கிறேன்... “கலை” எனக்கு அவ்வளவாக கை வராது என்பதால்!! ஒவ்வொரு கொலுவையும் பார்க்கும்போது, எவ்வளவு பொறுமை என்று வியப்பு வருகீறது. பொம்மைகள் வாங்கியவை என்றாலும், மற்ற வேலைகள்...!!
தென்னை மர ஸ்டூல் - அது தென்னை மரம் போலவே தெரியவில்லை. அழகாய் இருக்கு.
//குதிரை பொம்மையும் சுள்ளி பொறுக்கிச் செல்லும் தொப்பியணிந்த கிழவன் சிலை//
தேடினேன், காணவில்லையே? தனி படம் போட்டிருக்கலாம்.
உங்கள் பயணக் கட்டுரை என்றால் கட்டாயம் படிக்க வேண்டும். :)
பதிலளிநீக்குகொலு எல்லாமே அழகாக இருக்கின்றன. அங்கங்கே கருத்துக்களும்... :)
குழந்தை அழ..கு.
பார்க் //இதாலதான் தண்ணீர் ஊற்றணும்..... ஃபேன் போடக் கூடாது// //புல் Full effect ல வளரும்...."// :) ரொம்ப யோசிச்சிருக்கிறாங்க. :)
அந்தரத்துக் குளாய் அருகே உள்ள நாற்காலி, பின்னால் !! இரண்டுக்கும் ஏதாவது கதை இருக்கிறதா? தென்னையில் செய்த ஸ்டூல் அருமை. படமெடுக்காத இரண்டையும் சமயம் கிடைக்கும் போது படமெடுத்துப் பகிருங்கள். பார்க்க ஆவல்.
ஆஹா வல்லிம்மா கையால அக்கார அடிசிலா!!!! யோகம்தான் உங்களுக்கு! எனக்கும் & எங்க அண்ணனுக்கும் வல்லிம்மா பேசர்தே அக்கார அடிசில் மாதிரி தித்திப்பா இருக்கும்! :))
பதிலளிநீக்கு