திங்கள், 5 நவம்பர், 2012

மின்சாரக் கவிதைகள்...இல்லை, இல்லை..கற்பனைகள்!


கடவுளும் கரண்ட்டும் 1



கடவுளையும் கரண்ட்டையும்
ஒன்றாகப் பார்த்தால்
கரண்ட்டை
நாடித்தான் முதலில்
போவான் தமிழன்!

கடவுளைப் பார்க்கக் கூட
கரண்ட்டின்
வெளிச்சம் வேண்டுமே!

கடவுளும் கரண்ட்டும் 2




கடவுள் இல்லையென்று
கூட வாழ்ந்து
விடமுடிகிறது
கரண்ட் இல்லை என்றால்
முடிவதில்லை.

கடவுளும் கரண்ட்டும் 3

 



பார்க்காத
கடவுளை விட
அவ்வப்போது பார்க்கும்
கரண்ட்டுக்குதான்
மவுசு அதிகம்.

***********************


மின்சாரம்
இப்போதெல்லாம் சம்சாரம்
ஆகிவிட்டது!
தைரியமாகத் தொட முடிகிறது!

**************************************

சேட்டைக்காரன் பக்கத்தில் பார்த்த இன்ஸ்பிரேஷனில் ....

[அருகில் யாருமில்லை என்று உறுதியாகத் தெரிந்து கொண்டு பாடிப் பார்க்கவும்!]




மின்சாரம் இது மின்சாரம்..     மின்சாரம் இது மின்சாரம்...
சுவிட்சு உண்டு லைட்டு இல்லை   ஃபேன் உண்டு காத்து இல்லை மின்சாரம்....

சொல்லி அழ ஆளுமில்லை 'cut 'டு இல்லா ஊருமில்லை மின்சாரம்....

'பில்'லு வந்து பிரிச்சுப் பார்த்தா ஷாக்கடிக்கிற மின்சாரம்....

                                                                                           [மின்சாரம் இது மின்சாரம்..]

 

டிவி என்ன மிக்சி என்ன ஒப்புக்குத்தானடா...
பாவிப் பய கரண்ட்டி ல்லைன்னா கஷ்டம்தானடா...
கரண்டு பில்லு கட்டுற திலும் குறைச்சலில்லடா..
வறண்டு போன இன்வர்ட்டரிலும் சார்ஜ் இல்லடா...

மல்லு கட்டி சேர்த்த பணம் பில்லு கட்டப் போகுதடா..
பில்லு கட்டி வந்த பின்னும் தள்ளித் தள்ளி நிக்குதுடா...

காசிருந்து என்ன பயன் கரண்ட்டி ல்லையே அம்மாடி..
                              

                                                                                           [மின்சாரம் இது மின்சாரம்..]

நாளுக்கொரு சாக்கு ஒண்ணை அரசு சொல்லுது..
கேட்டுக் கேட்டு நமக்குத்தானே நாக்கு தள்ளுது...
சென்னைக்கு மட்டும் நீண்ட நேரம் கரண்டு இருக்குது..
வெண்ணெய்ங்க என்றே மிச்ச ஊரை அரசு நினைக்குது..

கஷ்டகாலம் தீருமப்பா..காலநேரம் கூடுமப்பா...
பாட்டு இங்க முடியுதுப்பா.... பாடு இன்னும் தீரலப்பா...

சூரியனின் ஒளியினிலே வழியிருக்குன்னு சொல்றாங்க....


மின்சாரம்  மின்சாரம் ... மின்சாரம் இது மின்சாரம்....
படங்கள் உதவி   :  நன்றி இணையம்.  
                
 

22 கருத்துகள்:

  1. ரசித்தேன்... சிரித்தேன்...

    ...ம்... இப்படியாவது மனதை தேற்றிக் கொள்ள வேண்டியது தான்...!

    பதிலளிநீக்கு
  2. மின்சாரம் இது மின்சாரம் - பளிச் பளிச்:)!

    இப்படிப் புலம்ப விட்டு விட்டார்களே!

    பதிலளிநீக்கு
  3. உங்க பாடல் பார்த்ததும், இதோ போகப் போகிற மின்சாரம் என்ற கவலை கூட மறந்துவிட்டது:)00
    அருமையோ அருமை. சேட்டைக்காரன் பாடலுல் புலம்பல்சிரிப்பாக வந்திருக்கிறது.
    இடுக்கண்வந்தால் சிரிக்க வேண்டியதுதான். இன்வர்ட்டர்....ஹாஹ்ஹா.எங்க வீட்லயும் கத்டினதால் நிறுத்திவிட்டோம்.
    அந்த இரண்டு மணிநேரம் புத்தகங்கள் படித்து காற்றில்லா உலகை மறக்கப் போகிறேன்:)

    பதிலளிநீக்கு
  4. //கடவுளைப் பார்க்கக் கூட
    கரண்ட்டின்
    வெளிச்சம் வேண்டுமே! //

    அட! கரண்ட் இருந்தா கடவுளைப் பாக்கலாமா? ரொம்ப சுளுவா இருக்கே!

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள‌ கெளதமன் அவர்களுக்கு!

    வலைச்சரத்தில் என்னுடைய வலைப்பூக்களை நீங்கள் பதிவு செய்திருப்பதைத் தாமதமாகத்தான் [இப்போது தான்] கண்ணுற்றேன்.

    தங்களின் விரிவான அறிமுகத்திற்கு என் மனங்கனிந்த நன்றி!

    பதிலளிநீக்கு
  6. அதானே பார்த்தேன் கடவுளுக்கே ச்செக்கா... சரியான கேள்வி.... கரெண்ட் இல்லாம கடவுளை எப்படி பார்ப்பதாம் பின்ன?

    கரெக்ட் கரெக்டு..... கடவுள் வந்து இருந்து பார்த்தா தானே தெரியும் கரெண்ட் இல்லாம மக்கள் படும் அவஸ்தையை.... அதனால் தான் நச்னு சொல்லி இருக்காங்க... கடவுள் இல்லாம கூட வாழ்ந்துடலாம்னு...

    இல்லாததை தேடி தானே நாம ஓடுவோம் பின்னாடி.. இருப்பதைப்பற்றி என்ன கவலை நமக்கு.. அதான் கடவுள் எப்பவுமே இருக்காரே நம்மக்கூட நம்ம அவஸ்தைகளை பார்த்துக்கிட்டு.... கம்முனு.... அதான் மௌஸ் கரண்ட்டுக்கு தான்...

    ஹாஹா சம்சாரம் அது மின்சாரம் போய்.... மின்சாரம் கட் ஆனதால் நிம்மதியாக தொடமுடிகிறதாம்... எவ்ளோ தைரியம் :-) ரசித்தேன்பா....

    சேட்டைக்காரன் பாடல் வரிகள் செம்ம சொல்லாடல்... ரசித்து வாசித்தேன். ஹுஹும் பாடிப்பார்த்தேன்...

    சாக்கு சொல்லுதாம் அரசு நாக்கு தள்ளுதாம் நமக்கு...

    சென்னைக்கு மட்டும் அதேன் இப்படி அதானே? ஷ்ஷ்ஷ்ஷ் சத்தமா சொல்லாத மஞ்சு சென்னைக்காவது கரெண்ட் கொஞ்சம் கூட கிடைக்குது... சென்னைய விட்டா மீதி எல்லாம் வெண்ணைன்னு நினைக்குதாமா....

    பாட்டு மட்டும் தி எண்ட் போட்டாச்சு...
    ஆனா போராட்டம் சாரி பாடு இன்னும் தீரலை....

    என்னென்னவோ செய்றாங்க...
    கரெண்ட் கட் தவிர்க்க எந்த முயற்சியும் செய்யல...

    அசத்தல் அசத்தல்ப்பா....

    அருமையா இருக்கு....

    பகிர்வுக்கும், பகிர்ந்தவருக்கும் மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  7. பழி ஓரிடம் பாவம் ஓரிடம்னு சொல்லுவாங்க! பாட்டு ஓரிடம் பாராட்டு ஓரிடம்னு ஆயிருச்சே! மகாஜனங்களே! இந்த மின்சாரப்பாட்டை நான் எழுதலீங்க! இவங்க தான் எழுதியிருக்காங்க! அதுவும் என்னை விட சூப்பரா, அட்டகாசமா, பொருத்தமா எழுதியிருக்காங்க! தூள் கிளப்பிட்டாங்கய்யா தூள் கிளப்பிட்டாங்கய்யா!

    பதிலளிநீக்கு
  8. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

    http://otti.makkalsanthai.com

    பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

    பதிலளிநீக்கு
  9. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

    http://otti.makkalsanthai.com

    பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

    பதிலளிநீக்கு
  10. ஆந்திரா விலும் இதே நிலைமைதான்..இந்த பட்டை டப்பிங் பண்ணி ரிலீஸ் பண்ணலாமா

    பதிலளிநீக்கு
  11. எங்கள் ப்ளாக்5 நவம்பர், 2012 அன்று 5:11 PM



    வருக DD ... நன்றி.


    வருகைக ராமலக்ஷ்மி... மிக்க நன்றி.


    வருக வல்லிம்மா.... நானும் மின்சாரமில்லா நேரத்தில் பாக்கி வைத்துள்ள புத்தகங்கள்தான். சேட்டை சார் இது மாதிரி நிறைய முயற்சித்துள்ளார் என்பதை மட்டும்தான் சுட்டினோம்!. ....மற்றபடி இது...ஹிஹி... எங்களுது!

    ஜீவி சார்... நன்றி. சும்மா பாமரக் கவிதை!! கரண்ட் கடவுளே வந்தா மாதிரின்னு வச்சுக்குங்களேன்....! மற்றதைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் பி.வா மட்டும் பயன்படுத்தினா எப்படி!

    நன்றி மனோ மேடம்...

    வருக மஞ்சுபாஷிணி... பாரா பாரா வாக, வரி வரியாக ரசித்துக் கருத்திட்டமைக்கு நன்றி.

    நன்றி தொழிற்களம் குழு. முயற்சிக்கிறோம்.

    முதல் வருகைக்கு நன்றி YESRAMESH. தாரளமாக.....! அடிக்'கடி வாங்க'!


    பதிலளிநீக்கு
  12. எங்கள் ப்ளாக்5 நவம்பர், 2012 அன்று 5:15 PM

    நன்றி சேட்டை சார்.....! எடுத்துச் சொன்னதற்கும் அதில் தொக்கி நின்ற பாராட்டுக்கும்!

    பதிலளிநீக்கு
  13. எப்படித் தெரிஞ்சது எங்களுக்கு மின்சாரம் போயிட்டுப்போயிட்டு வருதுனு?? டெலிபதி?

    அது சரி, இந்தப் பதிவு எழுதறதுக்கு மின்சாரம் கிடைச்சதா? பொறாமையா இருக்கே! :))))

    பாட்டு சேட்டையோடது இல்லைனு புரிஞ்சது. ஏன்னா அவரோட நடை தனி நடை. :)))

    இப்போத் தான் பொன்னியின் செல்வனை லக்ஷத்து எட்டாம் முறையாகப் படிச்சு முடிச்சேன். உங்க தயவிலே யவனராணி டவுன் லோட் பண்ணினேன். படிக்கத்தான் முடியலை. மின்சாரம் இல்லை. :P :P:P:P

    மின்சாரம் இல்லாத நேரத்திலே ஜவந்தி, அரளி, பச்சைனு எல்லாப் பூக்களும் வாங்கிட்டு வந்து மாலை கட்டிட்டு இருக்கேன். சனிக்கிழமைனா துளசி மாலை. சுண்டைக்காய், மணத்தக்காளிக்காய்னு வாங்கிட்டு வந்து வத்தலும் போட்டுக் காய வைச்சுட்டு இருக்கேன். இங்கே தான்ன் வெயில் கொளுத்துதே! சீக்கிரமா ஒரு பிசினஸ் ஆரம்பிச்சுடலாமானும் யோசனை!

    பதிலளிநீக்கு
  14. உங்க போஸ்டே எனக்கு அப்டேட் ஆகறதில்லை. அப்டேட் ஆனா மட்டும் என்ன வாழுது? படிக்க மின்சாரம் வேணும். :))))

    பதிலளிநீக்கு
  15. இப்படி எங்க மக்களை பொலம்ப விட்டுட்டாங்களே காப்பாத்த யாருமே இல்லையா....

    பதிலளிநீக்கு
  16. பாடல் ஆசிரியர் ஆயிட்டீங்க வாழ்த்துக்கள். மேட்டுக்கு பாடல் சரியா பொருந்தி வருது.

    பதிலளிநீக்கு
  17. எங்கள் ப்ளாக்5 நவம்பர், 2012 அன்று 9:18 PM


    நன்றி கீதா மேடம்.... இங்கயும் வருவதும் போவதுமாகவே இருக்கிறது. யவன ராணி முழுவதும் இறக்கி விட்டீர்களா? அங்கு மற்ற புத்தகங்கள் எழுத்தாளர்கள் லிஸ்ட் பார்த்தீர்களா?

    முதல் வருகைக்கு நன்றி எழில்....

    நன்றி TN MURALIDHARAN

    பதிலளிநீக்கு
  18. மின்சார கவிதைகள் கலக்கல்.
    //மின்சாரம்
    இப்போதெல்லாம் சம்சாரம்
    ஆகிவிட்டது!
    தைரியமாகத் தொட முடிகிறது!//

    மின்சாரத்துக்கு அப்பப்போ பவர் போகும். ஆனா சம்சாரம் எப்பவுமே powerful -ங்க. கவனமா இருக்கணும். :))

    இந்த பாடலை படிக்கும்போதே அப்படியே எஸ்.பீ.பீ. அதே 'சம்சாரம் அது மின்சாரம்' மெட்டுல என் காதுக்கு மட்டும் பாடினா மாதிரி இருந்துது. :) வரிகள் சூப்பர்! :))

    பதிலளிநீக்கு
  19. ஹா ஹா ஹா மின்சாரக் கவிதைகள் அருமை

    இன்று எனக்கு வந்த ஒரு குறுந் தகவல்

    உலகத்துலையே ரொம்ப மகிழ்சிய இருக்க மக்கள் யாரு

    தமிழர்கள் தான், அவங்க தான் அடிகடி
    ஹையா கரண்ட் வந்த்ருச்சு அப்படின்னு சொல்றாங்க

    பதிலளிநீக்கு
  20. மின்சாரக் கவிதைகள் அருமை. அதைவிட அதிகமாக மின்சாரப் பாடலை ரசித்தேன். மீனாக்ஷி சொன்ன மாதிரி காதில் பாடல் ஒலித்தது, கை குடுங்க ஸார். தம்பி சீனு...! தமிழக மக்கள் இப்படியாவது சந்தோஷப்படுறாங்களேன்னு ஆறுதல் பட்டுக்க வேண்டியதுதான் போல...

    பதிலளிநீக்கு
  21. ஏன் புலம்பல்? பாருங்க, மின்சாரம் இல்லாததால்தான், கவிதை எழுதிக் குவிக்குமளவுக்கு நேரம் இருக்கு!! புத்தகங்கள் படிக்க சமயம் இருக்கு. கரண்ட் இல்லாததால்தான், ஏஸியைவிட்டு வெளியே வந்து இயற்கைக் காற்றில் இருக்கிறோம். பாருங்க, அதனாலத்தான் சில பாரம்பரிய உணவுகள் - வற்றல் போன்றவற்றை - செய்யமுடிகிறது.

    முக்கியமாக, ஆம்மி, ஆட்டு உரல் பயன்படுத்தி உடல் உரம் பெறுகீறோம். கம்ப்யூட்டர், டிவி பார்க்காததால் கண்கள் கெடுவதில்லை. நேரம் வீணாவதில்லை.

    B + !!

    :-))))))

    பதிலளிநீக்கு
  22. சரியான நேரத்தில் சரியான பதிவு! பாட்டு மிகமிக அருமை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!