சனி, 25 அக்டோபர், 2014

பாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்




1) விடமாட்டோம்ல...?  இந்தத் துணிச்சல்தான் வேண்டும்! அமித்தின் மனைவி!
 


 
2) பிரச்னையை எதிர்கொள்வதேவாழ்க்கை! கவுசல்யா.
 

 
3)  யோகா பயிற்சியால் மதுவைத் துரத்திய துவரங்காடு 
 



 
4) ‘பெத்சான்’ சிறப்புப் பள்ளி.
 

 
5) தன்னம்பிக்கைக்கு ஆட்டோ ஆண்டாள்.
 


 
6) ஆலமரத்தில் வசிக்கும் வவ்வால்களுக்காக 10 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் திருச்சி மணப்பறை அருகே உள்ள சாம்பட்டி கிராம மக்கள்.
 


 
 


 
8) நாமக்கல் ஆயுதப்படைப் பிரிவைச் சேர்ந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் ப.ஆனந்தலட்சுமி.
 

 
9) 9 வயதில் சாதனை. ஷாலினி குமாரி . முதியோருக்கு வரம் இவளது கண்டுபிடிப்பு.
 



 
10) ஏற்கெனவே இதுபோன்ற ஒரு செய்தி பகிர்ந்த நினைவு. அதனாலென்ன?  நினைவூட்டல் போல இது மாதிரி செய்திகள் மறுபடி பகிரப் படும்போது யாராவது ஒருவருக்காவது உதவாதா என்ன? வேடந்தாங்கல் - கருண்  பக்கத்தில் பார்த்த ரத்த தானச் சேவை செய்யும் நண்பர்கள் பற்றிய பதிவு.
 


 
11) மாற்றுத் திறனாளியானால் என்ன? கணவன் ஏமாற்றினால் என்ன? தன்னம்பிக்கை இருந்தால் எதுவும் சாத்தியம். சீலநாயக்கன்பட்டி சுமதி.
 

 
12) யாரை நம்பி நான் பொறந்தேன்? வாழ்ந்தாலும், மரணமடைந்தாலும் உன்னோடுதான். வயதான தம்பதிகள் சுந்தரம் (65), தங்கமணி (55)
 

 
13) வனங்களைக் காக்க காகிதப் பென்சில் தயாரித்திருக்கும் மதுரை நரிமேடு கேந்திரிய வித்யாலயா 12ம் வகுப்பு மாணவர்கள்.
 


 
14) பவேஷ் பாட்டியா.   20 வயதில் பார்வையை இழந்தாலும் தன்நம்பிக்கையை விடாமல் மெழுகுவர்த்தி தயார் செய்யும் தொழில் தொடங்கி நூற்றுக்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு தந்திருப்பவர்.
 



15) ஆறாவது செய்தியைப் போலவே... கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வன விலங்குகளுக்காக இருளர் இன கிராம மக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதைத் தவிர்த்து வருகின்றனர். 

 

9 கருத்துகள்:

  1. தன்னம்பிக்கை வளர்க்கும்
    பாஸிட்டிவ் செய்திகள்.பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. தன்னை ஏமாற்றிய கணவனை செல்போன் மூலம் பிடித்து கம்பி எண்ண வைத்த அமித்தின் மனைவியை பாராட்டியே ஆகவேண்டும்.

    உலக சமுதாய சேவா சங்கத்தின் சேவை பாராட்டுதலுக்கு உரியவை.
    நானும் அதன் உறுப்பினராகி, ஆசிரியர் பயிற்சி எடுத்துக் கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
    துவரங்காடு கிராமம் போல் பல கிராமங்கள் பயன்பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். தலைவர் மயிலானந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    மனவளர்ச்சி குறைவாய் இருக்கும் குழந்தைகளை கடவுளின் குழந்தைகள் என்று அழைக்க வேண்டும் என்று புத்தகத்தில் படித்து இருக்கிறேன். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு பள்ளி நடத்தி குழந்தைகளைசுயசார்புடையவர்களாக மாற்றுவது தான் எங்களது அடுத்த இலக்கு என்று தீர்க்கமாக சொல்லும் ஜெயபால் அவர்கள் பாராட்டுக்கும் வணக்கத்துக்கும் உரியவர்.


    சாம்பட்டி கிராம மக்கள் வவ்வாலைவேட்டையாடாமல் இருப்பது மகிழ்ச்சி. நல்ல மழை பெய்து விவசாயம் செழித்து ஊரை வளமாக்கியதற்கு வவவால்தான் காரணம் நினைப்பதும் அதனால் வெடி வெடிக்காமல் இருக்கும் கிராம மக்கள் வாழ்க!

    தீபாவளி சமயம் தொலைக்காட்சியில்
    இந்த கிராமமக்கள் போல இன்னொரு கிராமம் பல தலைமுறையாக தீபாவளிக்கு வெடிப்பதில்லை என்றார்கள். ஏனென்றால் தீபாவளி சமயம் வெளி நாட்டிலிருந்து எல்லாம் அரிய பறவைகள் இந்த கிராமத்திற்கு வருமாம்.அவைகளுக்கு வெடிசத்தம் இடைஞ்சலாக இருக்கும் என்று வெடிக்க மாட்டார்களாம். பொங்கல் சமயம் பறவைகள் அதன் அதன் ஊருகளுக்கு போய் விடுமாம், அப்போது வெடி வெடிப்பார்களாம்.
    கிராம மக்களின் கட்டுப்பாடு வியக்க வைக்கிறது.


    இருவரும் முதுமை வரை, ஒன்றாகவும், ஒருவருக்கு, மற்றவர் குழந்தையாக வாழ்ந்ததுபோல், இறுதியிலும் ஒன்றாக இறக்க வேண்டும் என்பதே, எங்கள் ஆசை.
    இவ்வாறு, கூறும் தங்கமணி, சுந்தரம் தம்பதிகள் மனதை நெகிழ வைத்தார்கள்.

    அனைத்து பாஸிடிவ் செய்திகளுக்கும் நன்றி.


    பதிலளிநீக்கு
  3. சிறந்த அறிமுகங்கள்
    தொடருங்கள்

    தமிழ்ப் பதிவர் சந்திப்புக்கு வாழ்த்து!
    http://eluththugal.blogspot.com/2014/10/blog-post_97.html

    பதிலளிநீக்கு
  4. அமீத்தின் மனைவிக்கு ஒரு ஷொட்டு.

    துவரங்காடு கிராமங்கள் போல நம் கிராமங்கள் மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும்?!!

    விலங்குகளுக்காகவும், வொவ்வாலுக்காகவும் காசைக் கரியாக்காத கிராம மக்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். பறவைகளுக்காகவும் வெடிக்காத கிராம மக்கள் இருக்கின்'ரார்கள்.

    எய்ட்ஸ் போராடும் கவுசல்யா பற்றி வாசித்த நினைவு.

    ஆஹா லீமாரோஸ் எங்க ஊரு எம் எல்ஏ அப்படி எல்லா அரசியல்வாதிகளும் இருந்துட்டா நாடு உருப்பட்டுடுமெ!...வாழ்க லீமா!

    சாதனை படைக்கும் ஷாலினிக்கும், மாணவர்களுக்கும் குடோஸ்!

    தன்நம்பிக்கையுடன் வாழ்க்கையை நடத்தும் பெண்மணிகளுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்!

    மனம் நெகிழ வைத்த வயதான தம்பதிகள்! அனைத்தும் அருமையான பாசிட்டிவ் செய்திகள்!

    பதிலளிநீக்கு
  5. அனைத்து செய்திகளும் அருமை ! காகித பென்சிலால் மரங்களைக் காக்கும் மாணவர்களின் கண்டு பிடிப்பு அருமையிலும் அருமை !

    பதிலளிநீக்கு
  6. சிறப்பான செய்திகளை படிப்பதோடு மட்டுமில்லாமல் பகிர்ந்து பலரை அடைய செய்யும் உங்கள் பணி மகத்தானது. இந்தவாரச்செய்திகள் அனைத்தும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. பாசிசிடிவ் செய்திகளைப் பகிர்ந்து , எல்லோர் மனதிலும், தன்னம்பிக்கை வளர்ப்பதற்கு பாராட்டுக்கள் ஸ்ரீராம் சார்.

    பதிலளிநீக்கு
  8. அனைத்து செய்திகளுமே தன்னம்பிக்கை தரும் செய்திகள். வாரா வாரம் பாசிட்டிவ் செய்திகளைப் பகிர்ந்து படிப்பவர்களுக்குப் புத்துணர்வு ஊட்டும் உங்கள் சேவை தொடரட்டும்....

    பதிலளிநீக்கு
  9. அனைத்துச் செய்திகளும் அருமை. பெண்கள் வர வர ரொம்பவே தைரியமானவர்களாக ஆகிக் கொண்டு வருகிறார்கள். நல்ல விஷயங்களுக்குப் பயன்படுவதும் மகிழ்ச்சியே.

    தீபாவளி கொண்டாடாத கிராமங்கள் குறித்த செய்தி ஏற்கெனவே படிச்சது தான். :)))

    மதுரை நரிமேடு கே.வி. ஸ்கூலில் தான் நான் சேர்ந்திருக்கணும். ஆனால் அங்கே அப்போ பத்தாம் கிளாஸ் வரை தான் இருந்தது. அதனால் அப்பா சேர்க்கவில்லை. :))) அந்த வருத்தம் எனக்கு இப்போவும் உண்டு. :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!