தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை : ஏழு அல்லது எட்டு ஈர்க்குகள். இலைகளை மட்டும் உருவி எடுத்துக்கொள்ளவும். ஒரு கைப்பிடி அளவு இருந்தால் உத்தமம். கறிவேப்பிலையை சுத்தமான நீரில் கழுவி, தயாராக வைத்துக்கொள்ளவும்.
உளுத்தம் பருப்பு : ஒரு மேஜைக்கரண்டி.
மிளகாய் வற்றல் : நான்கு.
பெருங்காயம் : அரை பட்டாணி அளவு.
புளி: ஒரு (சிறு) எலுமிச்சம் பழ அளவு.
உப்பு: தேவைக்கேற்ப.
நல்லெண்ணெய் : நான்கு டீஸ்பூன்.
ஒரு வாணலியில், எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும், உளுத்தம்பருப்பு, மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டு, சிவக்க வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பிறகு, வாணலியில் மீண்டும் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு, கறிவேப்பிலையைப் போட்டு வதக்கிக்கொள்ளவேண்டும்.
புளி, உப்பு இரண்டையும் வதக்கிய கறிவேப்பிலையுடன் சேர்த்து, மிக்சியில் போட்டு, கொஞ்சமாக தண்ணீர் விட்டு, அரைத்துக்கொள்ளவும்.
இலைகள் நன்றாக அரைக்கப்பட்டதும், முதலில் வறுத்து எடுத்துக்கொண்ட உ.ப, மி, பெ கூட்டணியை கறிவேப்பிலைக் கூட்டணியுடன் சேர்த்து, லேசாக அரைத்துக்கொள்ளவும்.
செய்முறை விளக்கம் அருமை நண்பரே
பதிலளிநீக்குவீட்டில் செய்து பார்க்கிறேன்
இதே முறைதான் எங்கள்வீட்டிலும் கடை பிடிக்கிறோம் கொத்தமல்லி சட்னியும் இதே முறைதான் தயிர் சாத்திற்கும் இட்லி தோசைக்கும் மிகவும் பொருத்தமாக இருக்கும்
பதிலளிநீக்குஇப்படியும் பண்ணலாம். மி.வத்தல் குறைச்சுட்டு மிளகு உபருப்பு வறுத்து அரைத்தும் பண்ணலாம். வெறும் இஞ்சியோடு புளி, உப்பு வைத்தும் அரைக்கலாம். :)
பதிலளிநீக்குஆரோக்கியத்திற்கு.. குறிப்பாகத் தலைமுடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது இது.
பதிலளிநீக்குபடிக்கும்போதே கருவேப்பிலைத் துவையல் வாசனை வந்துவிட்டது. ஸ்ரீராம் இன்னும் செய்துபார்க்கவில்லை என்று நினைக்கிறேன். அதான் நெட்ல இருந்து படங்களைச் சுட்டுட்டார். கீதா அவர்கள் சொன்ன, மிளகு சேர்த்து அரைப்பது இன்னும் நன்றாக இருக்கும். அடுத்தவாரம் அனேகமாக தோசை அல்லது இட்லி வகைதான்.
பதிலளிநீக்குசூப்பர்,, எனக்கு மிகவும் பிடித்த துவையர்,,, அடிக்கடி எங்கள் இல்லத்தில் உண்டு,,,
பதிலளிநீக்குவறுத்த எள் சிறிது இஞ்சி சேர்த்து உங்கள் முறையிலேயே அறையுங்கள். கறிவேப்பிலையை வதக்குவதில்லை. நல்ல வாஸனையுடன் இருக்கும். எல்லாவற்றுடனும் சேர்த்துச் சாப்பிட ருசியோ ருசிதான். அன்புடன்
பதிலளிநீக்குசுவையான துவையல்! சொல்லிக் கொடுத்தமைக்கு நன்றி! நேற்றுதான் ரவா தோசை செய்து சாப்பிட்டேன்! இதையும் முயற்சிக்கிறேன்!
பதிலளிநீக்குஇது எனக்கும் பிடித்தமானது
பதிலளிநீக்குநாங்கள் இதே முறையில் தான் செய்வோம். ஆனால் கறுப்பு உளுந்து போட்டு செய்வோம். உடம்புக்கு நல்லது என்று. அது இல்லையென்றால் வெள்ளை உளுந்து போடுவோம்.
பதிலளிநீக்குகருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா சேர்த்தும் செய்வேன்.
கொழம்பில் விழுந்ததும் தூக்கி எறியும் கறி வேப்பிலை துவையலா...???
பதிலளிநீக்குகொழம்பில் விழுந்ததும் தூக்கி எறியும் கறி வேப்பிலை துவையலா...???
பதிலளிநீக்குகருவேப்பிலையைப் பார்த்தவுடன் நம் ஊர் வாசனை வருகிறது.
பதிலளிநீக்குகறிவேப்பிலையும் ,சிவப்பு மிளகாயும்,பெருங்காயம்,புளி ,உப்பு சேர்த்து
அரைத்தும் செய்வதுண்டு.அதில் உடைத்த உளுத்தம் பருப்பு,கடுகு தாளிப்பதும் ஒருவகை.
கருவேப்பிலைத் துவையல்..... பிடித்த ஒன்று.
பதிலளிநீக்குஆஹா நாவூறும் படங்கள் ..எனக்கு ரொம்ப பிடிக்கும் ..எல்லா பொருளும் கிடைக்குது இங்கே கறிவேப்பிலை தவிர ..இம்போர்ட்ஸ் தடை என்று நினைக்கிறேன் ..தடை நீங்கினால் செய்து விடுவேன் ..அதில் எதோ செயற்கை மருந்து தெளித்து இருந்ததால் தடையாம் கேள்விபட்டேன் இங்கே
பதிலளிநீக்குஇதே முறைதான்...என்ன நான் கொஞ்சம் இன்னும் கூடுதலாக கறிவேப்பிலை வைத்துக் கொள்வேன். எனக்கு அது ஒன்றுதான் சற்று மணம் அறிய முடிகின்ற ஒன்று என்பதால். அது கூட சில சமயங்களில் காலை வாரிவிடும். மிளகும் வைத்து அரைப்பதுண்டு. மிகவும் பிடித்த ஒன்று..
பதிலளிநீக்குகீதா