நம் வாழ்வில் மிகவும் இனிய, சோகமான, மிகவும் கோபப்பட வைத்த தருணங்கள் எவை என்று ஒரு பட்டியல் போட முனைந்தபோதுதான் அது எவ்வளவு கடினம் என்று தெரிந்தது.
கல்யாணம், முதல் குழந்தை பிறந்தது போன்ற ருட்டீன் சம்பவங்கள் யோசித்துப் பார்க்கும்போது இதில் என்ன பெரிய சாதனை இருக்கிறது, யாருக்குத்தான் இதெல்லாம் நடக்கவில்லை என்று எண்ணம் ஓடியது.
சோகமும் அவ்வாறே. காலக்கிரமத்தில் நிகழ்ச்சிகள் தம் தீவிரத்தை இழந்து நீர்ததுக்காணப்படுகின்றன.
கோபத்தைப்பற்றி சொல்லவே வேண்டாம். ஆறுவது சினம் என்று சும்மாவா சொன்னார்கள் ! பத்து நிமிஷம், அதிக பட்சம் ஒரு நாளைக்கு மேல் நீடிக்காத அற்பாயுசு உணர்வு இந்த கோபம்.
பெருமை என்பது மகத்தானதாக இல்லா விட்டாலும் ஒரு பத்து நாளைக்குப் பத்து பேர் குறிப்பிட்டுப் பேசி வியக்கும் விஷயமாக இருக்க வேண்டாமோ ! இந்த அதிர்ஷ்டம் எத்தனை பேருக்கு வாய்க்கும் ? எனக்கு இல்லை.
எல்லாம் யோசிக்கும் வேளையில் "உண்பதும் உறங்குவதுமாகவே முடியும்" என்று சொன்னதின் மகத்துவம் புரிகிறது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

கோபத்தின் ஆயுள் சிலநொடிகள் மட்டுமே நண்பரே ஆனால் அந்தக் கோபத்தின் விளைவு கொடூரமானது ஆகவே கோபத்தை குறைத்து வாழ்வதே நலம் பெறும்
பதிலளிநீக்குஅதேநேரம் சில விடயங்களுக்கு கோபம் அவசியம் என்ற நிலைப்பாடும் மனிதனுக்கு ஏற்படுகின்றது அனைத்தையும் கடந்து வருவதே மனித வாழ்க்கை.
கோபத்தைப்பற்றி சொல்லவே வேண்டாம். ஆறுவது சினம் என்று சும்மாவா சொன்னார்கள் ! பத்து நிமிஷம், அதிக பட்சம் ஒரு நாளைக்கு மேல் நீடிக்காத அற்பாயுசு உணர்வு இந்த கோபம்.//
பதிலளிநீக்குநீடிக்காத கோபம் நல்லது தான். நீடித்தால் தான் ஆபத்து.
என்ன வாழ்க்கை என்று எப்போதாவது எண்ணம் வருவது மனித இயல்பு.
இதுவும் கடந்து போகும்.....!!!!
பதிலளிநீக்குசும்மாவா சொன்னார் அதை பெரியார் "வெறும் வெங்காயம்" னு....!!!
கோபம் மனிதனால் அடக்கிகொள்ளபடவேண்டிய ஒன்று ... கோவம் உள்ளவன் நான் என்று யாராவது என்னிடம் கேட்டால் முதலில் அப்றம் இந்த நாட்டுல ஏன் இருக்குரிங்கனு பட்டுன்னு கேட்டுபுடுவேன் ...
பதிலளிநீக்குகோபமும் சில நேரங்களில் தேவையாகத் தான் இருக்கிறது. சற்று கோபம் காட்டி இருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று நினைக்க வைத்த சம்பவங்கள் உண்டு. ஆனாலும் தீராத கோபம் தீய விளைவுகள்தான் உண்டாக்கும்

பதிலளிநீக்குஅறுபது வயதிற்குப்பிறகு அடிக்கடி ஏற்படும் சலிப்பு தான் இது!
பதிலளிநீக்குஉண்பதும் உறங்குவதுமானது தான் வாழ்க்கை! எப்படி உண்கிறோம், எப்படி உறங்குகிறோம் என்பதில் தான் வாழ்க்கையின் மகத்துவம் இருக்கிறது. சலிப்பு வராதிருக்க எதையாவது நல்லதைச் செய்து கொன்டேயிருக்க வேண்டும். சலிப்பு இருந்த இடத்தில் உற்சாகம் வந்து விடும்!!
வாழ்க்கை என்பது, பாலைவனச் சோலை போல், எப்பவாவது இன்பமும், மகிழ்ச்சியும், பெரும்பாலும், கவலையும், வருத்தமும், சலிப்பும் சூழ்ந்த ஒன்று. இது எல்லோருக்கும் ஒரே மாதிரிதான். இதில், பணக்காரன், ஏழை, தலைவர், அதிகாரி, ராஜா (அல்லது ராணி) என்ற வித்தியாசம் கிடையாது.
பதிலளிநீக்குநாம கோபம் என்று சொல்வது ரௌத்திரம் அல்ல. நாம் கோபம் என்று பேணுவது நம் இயலாமை. பெரும்பாலும், கோபம் கொண்டதைப் பற்றிப், பின்னால் எண்ணும்போது, ஏன் கோபப்பட்டோம் என்று தோன்றும். வயது ஆக ஆக, நாம் ஏன் அப்படி நடந்துகொண்டோம் என்று பல சமயம் தோன்றும். நிச்சயம், நாம் கடந்து வந்த பாதையில், நம் முயற்சி சிறிது இருந்திருக்கும். ஆனால் விளைவு எல்லாம், நம் கையை மீறி நடந்தது என்பது நிச்சயம் தெரியும். இது நம் மக்களின் படிப்பு, முன்னேற்றம், வாழ்க்கை உட்பட, நம் பங்களிப்பு மிகவும் குறைவு. இது விதி (அல்லது இயற்கை நியதி) என்பதை அறிந்துகொள்ளலாம். நிறைய எழுதலாம் இதைப் பற்றி.
மற்றவர்கள் எழுதியிருப்பது போன்று, நாம் எதை நினைத்தும் சலிப்படையாமல், இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும்.
உணர்வுகளின் வெளிப்பாடு சில நிமிடங்களே அவற்றின் விளைவுகள் சில நேரத்தில் எதிர்பார்க்காத முடிவைக் கொடுத்துவிடும் நமக்குத்தான் மறதி இருக்கிறதே வரமெனக் கொள்வோம்
பதிலளிநீக்குகோபப்பட்டால் நோக்காடு வந்து சேரும்.. இருக்கும் கொஞ் நஞ்ச அறிவும் காணாமல் போய்விடும் என்பதால்.... கோபப்படுவதில்லை...
பதிலளிநீக்குகோபப்பட்டால் நோக்காடு வந்து சேரும்.. இருக்கும் கொஞ் நஞ்ச அறிவும் காணாமல் போய்விடும் என்பதால். அந்த பயத்தில்... கோபப்படுவதில்லை

பதிலளிநீக்குஎனக்கும் ஒரு காலத்தில் என்னவெல்லாமோ செய்ய வேண்டும் என்ற கனவுகள் இருக்கத்தான் செய்தது. அப்போது அது சாத்தியமாகவில்லை. இப்போதும் அவை பெரிய அளவில் இல்லை என்றாலும் ஏதோ சிறு வகையில் என்னை வெளிப்படுத்திக் கொண்டு எழுத முடிகின்றதே. கீதாவின் உதவியால் என்று சொல்லிக் கொண்டே ஆக வேண்டும். இல்லை என்றால் இப்படிப்பட்ட வலையுலகமோ, உங்களைப் போன்ற நண்பர்களோ கிடைத்திருக்க மாட்டார்கள். நம்மையும் வாசிக்க ஒரு வட்டம் இருக்கின்றதே என்று மகிழ்ந்து என் மனதைத் தேற்றிக் கொண்டு சம நிலையில் வைத்துக் கொள்ள முயற்சி எடுத்துக் கொள்வேன். வேறு வழி? இல்லை என்றால் கோபம் வரத்தான் செய்யும். இரண்டாவது இதுதான் நடக்கும் என்று நமக்கு இருக்கிறது என்று மேலுள்ளவனை நம்புவதாலும் இதுவும் கடந்து போகும் என்றும், நடப்பதெல்லாம் நன்மைக்கே என்றும் கடந்து சென்று விட வேண்டியதுதான்...கோபம் போன்ற உணர்வுகளின் விளைவுகள் அதிகம் என்பதால் கோபப்படுவது என்பது மிக மிகக் குறைவு....என்றாலும் சில இடங்களில் நாம் கோபப்பட வேண்டாம் என்று நினைத்தாலும் கோபப்பட்டால்தான் காரியம் நடக்கின்றது என்பதால் சற்றுக் கோபப்பட வேண்டித்தான் உள்ளது.
பதிலளிநீக்குகீதா: இந்தப் பதிவு ஸ்ரீராமின் பதிவா? கேஜிஜி சாரின் பதிவா? சரி பாசிட்டிவ் செய்திகள் இல்லையா? எங்கள் தளத்திற்கு உங்கள் பாசிட்டிவ் செய்திகளின் பதிவு வரவே இல்லையே...சனிக்கிழமைதானே 28 என்ற சந்தேகம் வந்துவிட்டது மேலே சென்று மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டேன்.
பதிலளிநீக்குஇதற்கான பதில் இங்கு நீளும் என்பதால் நான் ஒரு பதிவாகப் போடுகின்றேன். ஹப்பா ஒரு பதிவிற்கு மேட்டர் கொடுத்தமைக்கு மிக்க நன்றி எங்கள் ப்ளாக்!!!!
கீதா