இது முஸ்லீம் நண்பர்களுக்கு நோன்புக் காலம். ரம்ஜான் மாதம்.
இளவயதில் தஞ்சையில் மருத்துவக் கல்லூரிச் சாலையில் இருந்த மசூதிக்கு நானும் என் மூத்த சகோதரர் பாரதியும் சென்று வருவோம். எங்களுக்கு அங்கு ஒரு அருமையான நண்பர் இருந்தார். அப்துல் ஹக்கீம்.
இத்தனை வருடங்கள் கழிந்தும் பெயர் மறக்கவில்லை. அன்பானவர். எங்களை விட வயதில் மூத்தவர், நாங்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தோம். அவர் மருத்துவக் கல்லூரி மாணவர். நாங்கள் தொலைத்த பணத்தைக் கொடுத்து உதவி இருக்கிறார். ரேஷனில் வாங்கி வந்த சர்க்கரை அப்படியே தெருவில் கொட்டிப் போக, அவர் எங்களுக்காக கடையில் வாங்கித் தந்து வீட்டில் அடி வாங்காமல் தப்பிக்க வைத்திருக்கிறார். அண்ணா என்று அழைப்போம். ஓரிரு முறை சும்மா மசூதியை ஆர்வமாய் எட்டிப் பார்த்த எங்களை உள்ளே அழைத்துக் காட்டியவர். அவ்வப்போது சென்றிருக்கிறோம்.
இளவயதில் தஞ்சையில் மருத்துவக் கல்லூரிச் சாலையில் இருந்த மசூதிக்கு நானும் என் மூத்த சகோதரர் பாரதியும் சென்று வருவோம். எங்களுக்கு அங்கு ஒரு அருமையான நண்பர் இருந்தார். அப்துல் ஹக்கீம்.
இத்தனை வருடங்கள் கழிந்தும் பெயர் மறக்கவில்லை. அன்பானவர். எங்களை விட வயதில் மூத்தவர், நாங்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தோம். அவர் மருத்துவக் கல்லூரி மாணவர். நாங்கள் தொலைத்த பணத்தைக் கொடுத்து உதவி இருக்கிறார். ரேஷனில் வாங்கி வந்த சர்க்கரை அப்படியே தெருவில் கொட்டிப் போக, அவர் எங்களுக்காக கடையில் வாங்கித் தந்து வீட்டில் அடி வாங்காமல் தப்பிக்க வைத்திருக்கிறார். அண்ணா என்று அழைப்போம். ஓரிரு முறை சும்மா மசூதியை ஆர்வமாய் எட்டிப் பார்த்த எங்களை உள்ளே அழைத்துக் காட்டியவர். அவ்வப்போது சென்றிருக்கிறோம்.
அலுவலகத்தில் எங்கள் நெருங்கிய முஸ்லீம் நண்பர் எனக்காக ஸ்பெஷலாக இந்த நோன்புக் கஞ்சி செய்து கொண்டு வந்து கொடுப்பார்.
சென்னை பித்தன் ஸார் சமீபத்தில் ஃபேஸ்புக்கில் நோன்புக் கஞ்சியில் சைவம் கிடையாதா என்று கேட்டிருந்தார். நான் ருசி பார்த்திருக்கிறேன் என்பதால் ஆணித்தரமாக உண்டு என்று பதிலளித்திருந்தேன்.
அதன் ரெஸிப்பி கூட அப்போது
சாப்பிட்ட காலத்தில் கேட்டு அறிந்திருந்தேன். ஆயினும் இத்தனை நாட்களில்
அது மறந்து விட்டதால், சென்னை பித்தன் ஸாருக்கு பதிலளித்த கையோடு என்
மதிப்புக்குரிய குழந்தை நல மருத்துவ நண்பரிடம் கேட்டேன். அவர்
தந்திருக்கும் ரெஸிப்பி கீழே..
இந்த நோன்புக் கஞ்சியின் விசேஷம் உண்ணாவிரத நோன்பால் சோர்ந்திருக்கும் வயிற்றுக்கு அதிக வேலை தராமல் எளிதாக ஜீரணம் செய்வதற்கான உணவுதான் இது.
வெந்தயம் ஒரு ஸ்பூன், பச்சரிசி குருணை (மிக்ஸியில் பச்சரிசியை இட்டு ஒன்று
இரண்டாக லேசாக அடித்துக் கொண்டால் போதும்) ஒரு டம்ளர், ஒரு உரித்த பூண்டு
இவற்றை மூன்று டம்ளர் தண்ணீர் விட்டு (1:3) குக்கரில் வைத்து இரண்டு விசில்
வைத்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். அரை வேக்காடு போதும்.
ஸ்டீம் போன பிறகு பொடியாக நறுக்கிய கேரட், ஒரு தக்காளி, ஒரு
உருளைக்கிழங்கு, ஒரு பச்சை மிளகாய், பட்டாணி ஆகியவற்றை அதில் சேர்த்து
இன்னும் கொஞ்சம் அடுப்பில் வைத்து ஒரு விசில் வைத்து இறக்க வேண்டும்.
வாணலியில் அல்லது Pan இல் எண்ணெய் விட்டு, பட்டைக்கிராம்பு, பத்து சின்ன
வெங்காயம், கொஞ்சம் இஞ்சி, இரண்டு பல் பூண்டு போட்டுத் தாளித்துக்கொண்டு,
கொஞ்சம் சோம்புப்பொடி போட்டு, அதை இந்த அரிசிக் கஞ்சியில் சேர்த்துக் கொள்ள
வேண்டும். தேங்காய்ப் பால் சேர்த்துக் கொள்ள வேண்டும். தேங்காய்ப்பால்
சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடலாம்.
அவ்வளவுதான். எல்லோருக்கும் எடுத்துக் கொடுக்கலாம் ; குடிக்கலாம்.
ரொம்ப சிம்பிள்... இல்லை?
சென்னை பித்தன் ஸாருக்கு இந்தப் பூண்டு மற்றும் மசாலாக்கள் அலர்ஜி! இல்லையா ஸார்?
பயனுள்ள ரிசிப்பி செய்து பார்த்துவிட வேண்டியதுதான்
பதிலளிநீக்குரமலான் வந்துவிட்டாலே தினமும் மாலையில் நோன்பு கஞ்சிதான்
பதிலளிநீக்குபின் வீட்டில் வசிக்கும் முஸ்லிம் குடும்பத்தினரிடமிருந்து தினம் தினம் நோன்பு க்ஞ்சி வந்துவிடும்
தம +1
இதே கஞ்சியை வெங்காயம், பூண்டு, மசாலா சேர்க்காமல் நம்ம சாப்பிடலாம் வாங்க பக்கத்தில் பார்க்கலாமே. :)
பதிலளிநீக்குஎன்ன ஒண்ணுன்னா வெந்தயத்தை ஊற வைச்சு முளை கட்டிச் சேர்த்தால் இன்னமும் நல்லது. இதோ இங்கே சுட்டி தரேன் பாருங்க.
பதிலளிநீக்குhttp://geetha-sambasivam.blogspot.in/2013/04/blog-post_23.html
மேற்கண்ட சுட்டியில் போய்ப் பாருங்க! ஶ்ரீராமோட கஞ்சியெல்லாம் எங்களுக்கு ஜுஜுபி! :))))
இந்த நோன்புக் கஞ்சி நான் நாகை யில் கிளையில் உதவி கிளை மேலாளராக 1978ல் இருந்த போது சாப்பிட்டு இருக்கிறேன்.
பதிலளிநீக்குலேசா ஒரு நான் வெஜ் வாசனை அடிக்கும்.
இருந்தாலும் சுவையாக இருந்தது.
அன்புடன் ஈந்த அமுதம்.
அப்படியே குடித்துவிட்டேன். ஒரே மடக்கில்,
அதைப் பார்த்த என் நண்பர்
இன்னும் கொஞ்சம் தரவா ? என்றார்.
போதும்
இதில் .....என்று துவங்கு முன்னே
ஒன்றும் நான் வெஜ் இல்லை. பூண்டு சேர்த்து இருக்கிறது என்றார்.
நீங்கள் சொல்லும் கஞ்சி
நித்யபடி யே என் காஞ்சி தான்.
கஞ்சி வரதப்பா !
சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
www.subbuthatha.blogspot.com
நானும் ருசித்திருக்கிறேன்....
பதிலளிநீக்குஎங்க வீட்டுஅ ஆத்து கஞ்சிான் நோன்பு கஞ்சியின்னு கேள்விபட்டுயிருக்கேன்..
பதிலளிநீக்குஎங்க வீட்டுஅ ஆத்து கஞ்சிான் நோன்பு கஞ்சியின்னு கேள்விபட்டுயிருக்கேன்..
பதிலளிநீக்குஎங்க வீட்டுஅ ஆத்து கஞ்சிதான் நோன்பு கஞ்சியின்னு கேள்விபட்டுயிருக்கேன்..
பதிலளிநீக்குஎங்க வீட்டுஅ ஆத்து கஞ்சிதான் நோன்பு கஞ்சியின்னு கேள்விபட்டுயிருக்கேன்..
பதிலளிநீக்குஶ்ரீராம் கஞ்சி ரெசிப்பி சூப்பர்.கீதா பக்கத்துக்கும் போய் பார்க்கிறேன்.
பதிலளிநீக்குநானும் நோன்பு கஞ்சி குடித்து இருக்கிறேன். நீங்கள் சொன்ன முறையில் நோன்பு கஞ்சி செய்து பார்த்து விடுவோம்.
பதிலளிநீக்குமலரும் நினைவுகளில் நேசம் மிகுந்த நட்பு அருமை.
நானும் நோன்பு கஞ்சி குடித்து இருக்கிறேன். நீங்கள் சொன்ன முறையில் நோன்பு கஞ்சி செய்து பார்த்து விடுவோம்.
பதிலளிநீக்குமலரும் நினைவுகளில் நேசம் மிகுந்த நட்பு அருமை.
நோன்பு கஞ்சி குடித்தது இல்லை. செய்து குடித்து விட வேண்டியது தான்:)
பதிலளிநீக்குதம +1
நோன்புக் கஞ்சி எப்படி செய்வது என்று தெரிந்து கொண்டேன். இது வரை சாப்பிட்டதில்லை. செய்து பார்த்து சாப்பிட்டு விடுகிறேன்.
பதிலளிநீக்குகஞ்சி ரெசிபிக்கு நன்றி ஸ்ரீராம் சார்
வணக்கம் நண்பரே நோன்புக்கஞ்சியில் சைவம், அசைவம் இரண்டும் உண்டு என்பதே உண்மை அதில் கறியும் (ஆடு) போடுவார்கள் இது
பதிலளிநீக்குகீழக்கரை பக்கங்களில் அசைவம் அதிகம்
தேவகோட்டை பக்கங்களில் சைவம் அதிகம்
அரபு நாடுகளில் அசைவமே அதிகம்.
சுவையான கஞ்சி சென்னை பித்தன் சாரால் எங்களுக்கும் கிடைத்தது! நன்றி!
பதிலளிநீக்குசுவாரஸ்யமான பகிரவு.நோன்புக்கஞ்சியில் அசைவமும் உண்டு.எங்கள் வீட்டு குட்டீஸுக்கு சைவ கஞ்சிதான் பிடிக்கும்.சொந்த ஊரான கீழக்கரையில் எங்கள் தெருவில் இருக்கும் பள்ளியில் விசேச தினங்களைத்தவிர மற்ற நாட்களில் சைவக்கஞ்சிதான்.
பதிலளிநீக்குகஞ்சி குடித்தது உண்டு ஜுரம் வந்தால் அதுதான் உணவு. சைவமாகத்தான் குடித்திருக்கிறேன்
பதிலளிநீக்குநோன்பிருந்து சூடான வயிற்றைக் குளிர்விக்கத்தான் கஞ்சி. ஆனால் அதையும் இப்போல்லாம் பிரியாணி போல செய்து வருகிறார்கள். ருசிக்கு முக்கியத்துவம்.
பதிலளிநீக்கு”அசல்” கஞ்சிக்கு காய்கறிகள்கூடத் தேவையில்லை. அரிசி, சீரகம், வெந்தயம், சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து வெந்ததும், கொஞ்சம் தேங்காய்ப் பால் (அல்லது அரைத்த தேங்காய்). வயிற்றை குளிர்விக்கும், வாய்வைப் போக்கும். இதமானது. தாளிப்பும் விருப்பப்பட்டால் மட்டுமே.
(இந்த பாணியில் கஞ்சி வைத்தால், எங்க வீட்டில் எல்லாரும் கஷ்டப்பட்டுக் குடிப்பதும், மசாலா அல்லது மட்டன் சேர்த்தால் இஷ்டமாகக் குடிப்பதும்.... சகஜமானது :-) )
பூண்டு சொல்ல மறந்துட்டேன். அதுதான் மெயின் கஞ்சியில். அதேபோல பெருஞ்சீரகமும் சேர்த்துக்கலாம். கொஞ்சம் சுக்குப் பொடியும் சேர்த்துப்பேன் நான்.
பதிலளிநீக்குஅருமை. செய்து பார்க்கிறேன்.
பதிலளிநீக்கு@ ஹுஸைனம்மா, காய்கறி சேர்க்காமல்:).
இன்னிக்கே செஞ்சு பாத்துட்டா போச்சு ... அருமையான பதிவு http://ethilumpudhumai.blogspot.in
பதிலளிநீக்குஹை நானும் செய்வேனே ..நம்ம ஜலீ ஆசியா ரெசிப்பிஸ் தந்தாங்க வெஜ் கஞ்சி ...காரட் இல்லனா எதாச்சும் கீரை குட்டியா வெட்டி போடுவேன் ..தொட்டுக்க ஒரு டேபிள் ஸ்பூன் பீர்கங்காய் தோல் துவையல் :) ..
பதிலளிநீக்குஇந்த கஞ்சியில் அரிசிக்கு பதில் வரகரிசி சேர்த்தும் செய்யலாம் .
பதிலளிநீக்குநன்றி மதுரைத் தமிழன்.
பதிலளிநீக்குஅடடே... தினமும் கிடைக்கிறதா? நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.
பதிலளிநீக்குஆமாம், வெங்காயம், பூண்டு கலக்காமலும் செய்யலாம். நிறைய பேர் நோன்புக் காஞ்சியில் அசைவம் இட்டே சமைப்பார்கள். சைவக் காஞ்சி உண்டா என்று கேட்டபோது நான் சாப்பிட்டிருந்ததால், உண்டு என்று கூறி மருத்துவர் அவர்களிடம் கேட்டு எழுதினேன். நான் தினமும் சாப்பிடும் கஞ்சி பூண்டு, வெங்காயம் இல்லாதது. இது வித்தியாசமாக நன்றாக இருக்கும்! நன்றி கீதா மேடம்.
பதிலளிநீக்குநன்றி கீதா மேடம். சுட்டியில் போய்ப் பார்க்கிறேன். இந்தப் பதிவு ஒரு நேய விருப்பம். அவ்வளவே. மேலே படித்திருப்பீர்கள்! சென்று பார்த்ததில் நன் ஏற்கெனவே படித்துப் பின்னூட்டமும் இட்டிருக்கிறேன் என்பதும் தெரிகிறது!
பதிலளிநீக்குஅதே.... அதே... நன்றி சுப்பு தாத்தா.
பதிலளிநீக்குநன்றி நண்பர் வெங்கட்.
பதிலளிநீக்குநன்றி நண்பர் வலிப்போக்கன்.
பதிலளிநீக்குநன்றி வல்லிம்மா. கீதா மேடம் பக்கத்தில் உங்கள் கமென்ட் இல்லை. ஸோ நீங்க இன்னும் படிக்கவில்லை!!
பதிலளிநீக்குநன்றி கோமதி அரசு மேடம்.
பதிலளிநீக்குநன்றி சகோதரி உமையாள் காயத்ரி.
பதிலளிநீக்குநன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் மேடம். இந்நேரம் செய்து சாப்பிட்டிருப்பீர்கள்!
பதிலளிநீக்குநன்றி கில்லர்ஜி. அசைவம் உண்டு என்பது நன்றாகத் தெரியுமே.. சைவமும் உண்டு என்று சொல்லித்தானே நண்பரைக் கேட்டுப் பதிவிட்டிருக்கிறேன்!
பதிலளிநீக்குநன்றி 'தளிர்' சுரேஷ்.
பதிலளிநீக்குநன்றி ஸாதிகா மேடம். நோன்புக்கஞ்சி இழுத்து வந்திருக்கிறது உங்களை எங்கள் பக்கம்!
பதிலளிநீக்குநன்றி ஜி எம் பி ஸார்.
பதிலளிநீக்குநன்றி ஹுஸைனம்மா.
பதிலளிநீக்குநன்றி ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
பதிலளிநீக்குநன்றி ஏஞ்சலின்.
பதிலளிநீக்குஎங்கள் வீட்டில் கேரளத்துக் கஞ்சி தினமுமே இரவு அதுதான் உணவு.
பதிலளிநீக்குஇந்த நோன்புக் கஞ்சி முஸ்லீம் நண்பர்கள் தருவார்கள். நான்வெஜ் என்பதால் எங்கள் வீட்டில் நோன்புக் கஞ்சி நான் வெஜ் சேர்த்துச் செய்வதுண்டு எப்போதாவது.
கீதா: அருமையான கஞ்சி உணவு. அடிக்கடி செய்வது கேரளத்து சம்பா அரிசி/மட்டஅரிக் கஞ்சி. நோன்புக் கஞ்சி தேங்காய்ப்பால் சேர்ப்பதால் அவ்வப்போது.
இப்போது இதே கஞ்சியை சம்பா கோதுமை உடைத்தது, வரகரிசி, சாமை அரிசி, சிவப்பு அவல் சேர்த்தும் செய்வதுண்டு...