சென்ற வாரத்தில் நான் கேட்ட கேள்வி சிம்பிள்தான். ஆனால் பதில் உரைப்பவர்களின் படைப்பாற்றலை சோதிக்க ஒரு சிறு முயற்சி அது.
" சி என்ற எழுத்துடன் ஆரம்பிக்கும் விலங்குகளின் பெயர்களை எழுதுங்கள். " என்பதுதான் நான் கேட்ட கேள்வி.
தமிழ் சி யா அல்லது ஆங்கில c யா என்று குறிப்பிடவில்லை. அதேபோல் விலங்குகள் என்றுதான் குறிப்பிட்டிருந்தேன். வீட்டு விலங்குகளா அல்லது காட்டு விலங்குகளா என்று குறிப்பிடவில்லை. அனைவருமே தமிழ் சி என்றும், காட்டு விலங்குகள் என்றும் தானாகவே எடுத்துக்கொண்டு பதில்கள் கூறியுள்ளீர்கள். ஒருவராவது Cat, Cow எல்லாவற்றையும் உள்ளே ஓட்டி வருவீர்கள் என்று நினைத்தேன். ஊஹூம். யாரும் Out of box thinking செய்யவில்லை!
திண்டுக்கல் தனபாலன் கேள்விக்கு குஷ்பு, பிரபு தவிர எல்லா பூக்களும் அங்கே பூத்துவிட்டன! நான் புதிதாக என்ன சொல்ல முடியும் என்று ஒரு திகைப்பு, மலைப்பு, பரிதவிப்பு. ஏதேனும் சொல்ல முடிந்தால் வரும் பூரிப்பு (என்று சொன்னால் என்ன தப்பு?)
துளசிதரன்:
இந்தக் கேள்வி கேட்கலாமா என்று தெரியவில்லை. பாகிஸ்தான் மீது நேற்றைய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பற்றி உங்கள் கருத்து என்ன? அதன் பின் வந்த தகவல்கள் அதாவது கமாண்டர் ஒருவரை அவர்கள் பிடித்து வைத்திருப்பதாகவும் அப்புறம் அவர் தான் நன்றாக இருப்பதாக வீடியோ ஃபேஸ்புக்கில் வந்தது எல்லாம் கொஞ்சம் பயத்தைக் கொடுத்ததே. அதனால்தான் இந்தக் கேள்வி.
$ தீவிரவாதத்தை அழிக்க வேண்டும் என்றால் தீவிரவாதிகளை அழித்தால்தான் முடியும். 'நீ சமர்த்தோண்ணோ இப்படிக் கொள்ளிக்கட்டையை வைத்துக் கொண்டு ஓலைக்கூரை அருகே விளையாடக்கூடாது' என்று நயமாக உரைத்துப் பின் மற்ற குழந்தைகளிடம் அசட்டு அசாருடன் சேராதீர்கள் என்று சொன்னால் கேட்பார்களா என்ன?
விமானத்துக்கு சேதம், பைலட் பாரசூட்டுடன் குதித்தார் என்பது சாதாரண நிகழ்வு.
உயிர் பொருள் நஷ்டங்களின்றி போர் இல்லை. கொஞ்ச நாட்களில் காஷ்மீரில் அமைதி வேரூன்றலாம்...
# பரஸ்பரம் நம்பிக்கை இல்லாத இரண்டு நாடுகளுக்கு இடையே இந்த மாதிரி பிரச்சினைகள் எழுவது சகஜம். போனால் போகட்டும் என்று ஒரு நாடு சும்மா இருந்தால் நிலைமை கட்டுக்கடங்காமல் போய் விடுகிறது. எனவே ராணுவ நடவடிக்கை அவசியமாகிறது.
ராணுவ நடவடிக்கை என்றால் நாம் ஒருவரைப் பிடிக்கலாம் அல்லது நம்மில் ஒருவர் பிடிபடலாம் - இதுவும் சகஜம்தான். ராணுவ வீரர்களுக்கு அவர்கள் பிடிபட்டால் எப்படி நடந்துகொள்ள வேண்டும், என்ன சொல்ல வேண்டும், என்ன சொல்லக் கூடாது என்றெல்லாம் மிகவும் விவரமான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அது மாதிரி நடந்துகொள்வார்கள் என்று நாம் நம்பலாம்.
கொஞ்சம் சித்திரவதை என்பது தவிர்க்க முடியாதது. அதை பொறுத்துக் கொள்ளவும் அவர்களுக்குப் பயிற்சி கொடுப்பதாக அறிகிறேன். சில சமயம் வேண்டுமென்றே பொய்யான தகவல்களை உண்மை போல் சொல்லச் சொல்வதும் உண்டு. இதெல்லாம் போர்க் காலங்களில் அல்லது சச்சரவு மிகுந்த இரு நாடுகளுக்கு இடையே எப்போதும் நடைபெறுவதுதான்.
ஒரு வீரர் பிடிபட்டு விட்டார் என்பதற்காக நாம் வாளாவிருந்து விடுவது சரியாகாது. எனவேதான் பிரச்சனையை எப்படித் தீர்ப்பது என்பதில் நாம் கவனம் காட்டி வருகிறோம். பரஸ்பரம் நட்போடு ஒருவருக்கொருவர் இசைவாக இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை - வல்லரசுகள் இரண்டு பக்கமும் போட்டி போடுவதால் இருக்குமோ என்னவோ, ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு பக்கம் சாய்ந்து அண்டை அயலாரை பகைத்துக் கொள்வது சகஜமாகி வருகிறது. இது விரும்பத்தக்கது அல்லதான். ஆனால் என்ன செய்வது? நமது இந்து வழக்கப்படி நம்மில் ஒருவர் பிடிபட்டால் அவர் நலமாக இருக்க வேண்டும் அவர் உயிரோடு திரும்ப வேண்டும் அவர் விரைவில் குடும்பத்தோடு சேர வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறு ஒன்றும் வழி இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இந்த முறை உலகின் எல்லா நாடுகளும் பாகிஸ்தானின் நிலையை ஆதரிக்காததால் பாகிஸ்தான் ஒரு நல்லெண்ண முயற்சியாக பிடிபட்ட வீரரைத் திருப்பி அனுப்பிவிடும் என்று எதிர்பார்க்க இடம் இருக்கிறது. பார்க்கலாம். (இந்த பதிலை, இந்த ஆசிரியர் எழுதிய இரண்டு நாட்களில் அபிநந்தன் இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டார்!)
# பரஸ்பரம் நம்பிக்கை இல்லாத இரண்டு நாடுகளுக்கு இடையே இந்த மாதிரி பிரச்சினைகள் எழுவது சகஜம். போனால் போகட்டும் என்று ஒரு நாடு சும்மா இருந்தால் நிலைமை கட்டுக்கடங்காமல் போய் விடுகிறது. எனவே ராணுவ நடவடிக்கை அவசியமாகிறது.
ராணுவ நடவடிக்கை என்றால் நாம் ஒருவரைப் பிடிக்கலாம் அல்லது நம்மில் ஒருவர் பிடிபடலாம் - இதுவும் சகஜம்தான். ராணுவ வீரர்களுக்கு அவர்கள் பிடிபட்டால் எப்படி நடந்துகொள்ள வேண்டும், என்ன சொல்ல வேண்டும், என்ன சொல்லக் கூடாது என்றெல்லாம் மிகவும் விவரமான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அது மாதிரி நடந்துகொள்வார்கள் என்று நாம் நம்பலாம்.
கொஞ்சம் சித்திரவதை என்பது தவிர்க்க முடியாதது. அதை பொறுத்துக் கொள்ளவும் அவர்களுக்குப் பயிற்சி கொடுப்பதாக அறிகிறேன். சில சமயம் வேண்டுமென்றே பொய்யான தகவல்களை உண்மை போல் சொல்லச் சொல்வதும் உண்டு. இதெல்லாம் போர்க் காலங்களில் அல்லது சச்சரவு மிகுந்த இரு நாடுகளுக்கு இடையே எப்போதும் நடைபெறுவதுதான்.
ஒரு வீரர் பிடிபட்டு விட்டார் என்பதற்காக நாம் வாளாவிருந்து விடுவது சரியாகாது. எனவேதான் பிரச்சனையை எப்படித் தீர்ப்பது என்பதில் நாம் கவனம் காட்டி வருகிறோம். பரஸ்பரம் நட்போடு ஒருவருக்கொருவர் இசைவாக இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை - வல்லரசுகள் இரண்டு பக்கமும் போட்டி போடுவதால் இருக்குமோ என்னவோ, ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு பக்கம் சாய்ந்து அண்டை அயலாரை பகைத்துக் கொள்வது சகஜமாகி வருகிறது. இது விரும்பத்தக்கது அல்லதான். ஆனால் என்ன செய்வது? நமது இந்து வழக்கப்படி நம்மில் ஒருவர் பிடிபட்டால் அவர் நலமாக இருக்க வேண்டும் அவர் உயிரோடு திரும்ப வேண்டும் அவர் விரைவில் குடும்பத்தோடு சேர வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறு ஒன்றும் வழி இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இந்த முறை உலகின் எல்லா நாடுகளும் பாகிஸ்தானின் நிலையை ஆதரிக்காததால் பாகிஸ்தான் ஒரு நல்லெண்ண முயற்சியாக பிடிபட்ட வீரரைத் திருப்பி அனுப்பிவிடும் என்று எதிர்பார்க்க இடம் இருக்கிறது. பார்க்கலாம். (இந்த பதிலை, இந்த ஆசிரியர் எழுதிய இரண்டு நாட்களில் அபிநந்தன் இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டார்!)
தமிழ்நாட்டில் ப்ளாஸ்டிக் கவர்கள் தடைசெய்ப்பட்டுள்ளதாக அறிகிறேன். கவர்களை மட்டும் தடைசெய்தால் ப்ளாஸ்டிக்கை முழுவதும் ஒழித்துவிட முடியுமா? பால்கவர் போன்றவை அன்றாட வாழ்வில் வரும் ஒன்று அல்லவா?. (எங்கள் வீட்டில் கறந்த பால் தான் வீட்டிற்குக் கொண்டு தருவார்..) தடையும் இருக்கட்டும் மேலை நாடுகளைப் போல் இவற்றை சரியான முறையில் டிஸ்போஸ் செய்வதை நடைமுறைப்படுத்தினால் இன்னும் நன்றாக இருக்குமில்லையா?
$ பிளாஸ்டிக் தடை என்று மர நாற்காலி கேட்டு கல்யாணமண்டபத்தில் அடம் பிடிப்பவரையும், மர நாற்காலி செய்ய மரம் வெட்டக் கூடாது என்பவரையும் ஒருங்கே கொண்டது தான் நம் தேசம். நீர்நிலைகளுக்கும் கால்நடைகளுக்கும் கேடு விளைவிக்கும் பொருள்களுக்கு மட்டுமே தடை.. சரியானமுறையில் disposal என்பதே நல்ல வழி.
# பிளாஸ்டிக்கில் கூட மீண்டும் பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக் வகைகள் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது ஒரு நல்ல முயற்சி என்று தான் சொல்ல வேண்டும். சாக்கடைகளிலும், நீர்நிலைகளிலும் தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் அடைத்திருப்பதை நிறைய பார்க்கும்போது மிகவும் மனம் சங்கடப்படுகிறது.
பள்ளிகளில் சாக்பீஸ் பயன்படுத்துவதை விட வொயிட் போர்ட் பென் பயன்படுத்தினால் சாக்பீஸ் துகள்களினால் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வரும் மூக்கடைப்பு அலர்ஜி தவிர்க்கலாம் இல்லையா? உங்கள் கருத்து?
$ பெரிய tv யில் ஸ்லைடு போட்டால் திரும்பத்திரும்ப வரைவதையும் எழுதுவதையும் குறைக்கலாம்.
# சாக்பீஸ் தூள் என்று மட்டுமில்லை இன்னும் எவ்வளவோ பொருட்களை மக்களுடைய ஆரோக்கியத்தை கருதி பயன்படுத்துவதை தடை செய்யலாம்தான், ஆனால் சாத்தியம் இல்லை. தடை செய்ய வேண்டாம், நிச்சயமாக குறைத்துக் கொள்ளலாம்.
& எதிர்காலத்தில் ஆசிரியர் தொடங்கி, மாணவர்கள் வரை எல்லோரும், எல்லாவற்றிற்கும் மடிக்கணினி மூலமாகவே பாடம் போதிப்பது, பாடம் கற்றுக்கொள்வது , பரீட்சை, எல்லாம் நடக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
வாட்ஸ் அப் கேள்விகள் :
நெல்லைத்தமிழன் :
1. இப்போவும் பெண் பார்க்கும் படலம், கேசரி பஜ்ஜி இதெல்லாம் நடக்குதா? அதன் அவசியம் இப்போவும் இருக்கா?
$ தேவை இல்லை தான். ஆனால் நடக்குது. குடும்பங்கள் பற்றி அறியவும் முடிகிறது.
# நம் வீட்டுக்கு ஒரு குடும்பம் வருகிறது. ஒரு புது உறவின் தொடக்கமாக அந்த "விஸிட்" இருக்கக் கூடும். சாதாரண விருந்தோம்பல் முறையில் கூட சிற்றுண்டி காபி கொடுக்க வேண்டும் தானே ! பெண்பார்க்கும் படலம் பார்க்கில் வைத்துக் கொண்டால் பஜ்ஜி கேசரி தவிர்த்து விடலாம்.
& இப்போ எல்லாம் மெரீனாவில், சமாதிகளுக்கு இடையே தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் கொரி(றி?)ப்பதோடு பெண் பார்க்கும் படலம், ஆண் பார்க்கும் படலம் எல்லாம் முடிந்துவிடுகிறதே!
$ தேவை இல்லை தான். ஆனால் நடக்குது. குடும்பங்கள் பற்றி அறியவும் முடிகிறது.
# நம் வீட்டுக்கு ஒரு குடும்பம் வருகிறது. ஒரு புது உறவின் தொடக்கமாக அந்த "விஸிட்" இருக்கக் கூடும். சாதாரண விருந்தோம்பல் முறையில் கூட சிற்றுண்டி காபி கொடுக்க வேண்டும் தானே ! பெண்பார்க்கும் படலம் பார்க்கில் வைத்துக் கொண்டால் பஜ்ஜி கேசரி தவிர்த்து விடலாம்.
& இப்போ எல்லாம் மெரீனாவில், சமாதிகளுக்கு இடையே தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் கொரி(றி?)ப்பதோடு பெண் பார்க்கும் படலம், ஆண் பார்க்கும் படலம் எல்லாம் முடிந்துவிடுகிறதே!
2. ஏன் ஆடம்பரக் கல்யாணத்துல பணத்தை வீணடிக்கறாங்க?
$ கல்யாணங்களில் இருவீட்டாருடன் ரெஜிஸ்டரார் பிரதிநிதி காமெராவுடன் வந்து, பதிவு செய்து சர்ட்டிபிகேட் தருவார் என்றிருந்தால் நல்லது. ஆடம்பரம் அகற்ற அவரவர் ஊரில் இருக்கும் கல்யாண கூடங்களைத்தான் நாடவேண்டும். ஒவ்வொரு மண்டபத்துடனும் ஒரு ரெஜிஸ்டரார் பிரதிநிதி இருந்தால் இன்னமும் சிறப்பு!
# சிலசமயம் ஆடம்பரமும் தேவைதான், ஆனால் அளவு மீறாதிருப்பது நன்று.
& அதானே! எல்லா பணத்தையும் என்னிடம் கொடுத்தாக்க, நான் அதை வீணடிக்காம சேர்த்துவைத்துப்பேனே!
$ கல்யாணங்களில் இருவீட்டாருடன் ரெஜிஸ்டரார் பிரதிநிதி காமெராவுடன் வந்து, பதிவு செய்து சர்ட்டிபிகேட் தருவார் என்றிருந்தால் நல்லது. ஆடம்பரம் அகற்ற அவரவர் ஊரில் இருக்கும் கல்யாண கூடங்களைத்தான் நாடவேண்டும். ஒவ்வொரு மண்டபத்துடனும் ஒரு ரெஜிஸ்டரார் பிரதிநிதி இருந்தால் இன்னமும் சிறப்பு!
# சிலசமயம் ஆடம்பரமும் தேவைதான், ஆனால் அளவு மீறாதிருப்பது நன்று.
& அதானே! எல்லா பணத்தையும் என்னிடம் கொடுத்தாக்க, நான் அதை வீணடிக்காம சேர்த்துவைத்துப்பேனே!
3. விமானப்பயணம், பஸ், இரயில் - தூரம் அதிகமுள்ள, 400+ கி மீ இடங்களுக்கு எது சுகம்? எது சவுகரியம்?
$ 7 அல்லது 8 மணி நேரப்பயணம் என்றால், பகலில் பஸ்
$ 7 அல்லது 8 மணி நேரப்பயணம் என்றால், பகலில் பஸ்
10..12 மணி நேர இரவுப்பயணம் என்றால் ரயில்
1000 km+ விமானம்
# ரயில்.
& இப்போ எல்லாம் எனக்கு டாக்ஸி தவிர வேறு கதி இல்லை.
# ரயில்.
& இப்போ எல்லாம் எனக்கு டாக்ஸி தவிர வேறு கதி இல்லை.
4. உங்களுக்கும் பிடித்த (ஒவ்வொரு ஆசிரியருக்கும்) இனிப்பு என்ன?
$ மைசூர்பாக்.
# அல்வா, காஜு கத்லி
& வேப்பம்பழம் முதல் பாதாம் அல்வா வரை எல்லா இனிப்பும் பிடிக்கும். ரொம்ப சுவைத்துச் சாப்பிடுவது தேங்காய் பர்பி.
$ மைசூர்பாக்.
# அல்வா, காஜு கத்லி
& வேப்பம்பழம் முதல் பாதாம் அல்வா வரை எல்லா இனிப்பும் பிடிக்கும். ரொம்ப சுவைத்துச் சாப்பிடுவது தேங்காய் பர்பி.
5. செல்லுகின்ற வீட்டில் உங்களுக்குப் பிடிக்காததைக் கொடுக்கும்போது (காபி, டீ, உணவு போன்றவை) உங்க ரியாக்ஷன் எப்படி இருக்கும்?
$ அங்கு அதுதான் கிடைக்கும் என்று (மாமிச உணவுகள் தவிர்த்து) சாப்பிட்டுவிடுவேன்.
# என்ன கொடுத்தாலும் முகம் சுளிக்காமல் சாப்பிடுவது என் இயல்பு.
& கேட்காமல் கொடுத்தால் வாங்கி சாப்பிட்டுவிடுவேன். வேண்டுமா என்று கேட்டால் எதாக இருந்தாலும் வேண்டாம் என்று மறுத்துவிடுவேன்.
$ அங்கு அதுதான் கிடைக்கும் என்று (மாமிச உணவுகள் தவிர்த்து) சாப்பிட்டுவிடுவேன்.
# என்ன கொடுத்தாலும் முகம் சுளிக்காமல் சாப்பிடுவது என் இயல்பு.
& கேட்காமல் கொடுத்தால் வாங்கி சாப்பிட்டுவிடுவேன். வேண்டுமா என்று கேட்டால் எதாக இருந்தாலும் வேண்டாம் என்று மறுத்துவிடுவேன்.
6. நீங்க ரொம்ப பயப்படுவது, போபியா எதுக்கு?
$ சம்பிரதாயங்கள்.
# மறு உலகத்தில் என்ன தண்டனையோ என்ற பயம் - அவ்வப்போது.
& யோசித்துப் பார்த்தால், அப்படி எதுவுமே இல்லையோ என்று பயமாக இருக்கு.
பானுமதி வெங்கடேஸ்வரன் :
ஃபேஸ் புக், முக நூல், வதன புத்தகம் - உங்கள் சாய்ஸ் எது?
# சொற்களை தமிழ்ப் படுத்தலாம். பெயர் அல்லது பி(b)ராண்டுகளை அல்ல.
& தமிழில் தட்டச்சு செய்வதற்கு சுலபமாக இருப்பதால், நான் 'முகநூலை' ஆதரிக்கிறேன்.
கலைமாமணி விருது வாங்கும் அளவிற்கு ஶ்ரீகாந்த், பிரசன்னா போன்றவர்கள் என்ன சாதித்திருக்கிறார்கள்?
& வரும் காலத்தில், நாம் நாடார் கடை லிஸ்ட் போடும்பொழுது, பத்மஸ்ரீ ........ 3, கலைமாமணி ........ 5 என்று லிஸ்ட் போடக்கூடும் என்று நினைக்கிறேன்.
மகளிர் தினத்தை ஒட்டி ஒரு கேள்வி: புராணம், சரித்திரம், சமகாலம் இவற்றில் உங்களை கவர்ந்த பெண்கள் யார் யார்?
# புராணகாலத்தில் மண்டனமிஸ்ரரின் மனைவி வித்யாவதி, ஆண்டாள்.
அடுத்து ஃப்ளாரன்ஸ் நைடிங்கேல், ராணி மங்கம்மாள்.
சமீபத்தில் ஏஞ்ஜலினா ஜோலி, ஆர்.சூடாமணி.
& புராணகாலத்தில் தமயந்தி. சரித்திரத்தில் ஜான்சிராணி. சமகாலத்தில் " வெற்றிலையும் எலுமிச்சம்பழமும் " என்ற தலைப்பில் யூ டியூபில் காணொளி பதிவு செய்துள்ள ஒரு பெண்மணி. Effective presentation with clarity and free flow of words.
ரயில் நிலய அறிவிப்புகளில் தவறான இடங்களில் நிறுத்தி தமிழை கொலை செய்கிறவர்களுக்கு தமிழ் தெரியாதா? அல்லது அவர்களின் உச்சரிப்பை ஏன் யாரும் திருத்த முற்படுவதில்லை?
தெளிவான குரல் என்பது மட்டுமே +.
# ரயில் அறிவிப்புகளில் குரல் அறிவிப்புகளில் இடைச்செருகல் சாமர்த்தியக் குறைவாக செய்யப் படுவதால் உண்டாகும் குழப்பத்தை சமீபத்தில் பொள்ளாச்சி நிலையத்தில் அனுபவித்தேன்.
& எல்லாம் சரியாக சுத்தமாக, " சென்னையிலிருந்து பெங்களூர் வரை செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ....... " என்பது வரை சொல்லும் குரல் ஏழு மணி nn நிமிடங்களில் ..... டிங் டாங் நடைமேடையிலிருந்து புறப்படும் என்று எப்பவும் கேட்பது என் காதுகளுக்கு மட்டும்தான் என்று இவ்வளவு நாளும் நினைத்திருந்தேன்.
இந்த வாரக் கேள்வி :
உங்களிடம் நூறு ரூபாயைக் கொடுத்து, அதை ஒரு மணி நேரத்திற்குள் முழுவதும் செலவழிக்கவேண்டும் என்று சொன்னால், என்ன செய்வீர்கள்?
# ரயில் அறிவிப்புகளில் குரல் அறிவிப்புகளில் இடைச்செருகல் சாமர்த்தியக் குறைவாக செய்யப் படுவதால் உண்டாகும் குழப்பத்தை சமீபத்தில் பொள்ளாச்சி நிலையத்தில் அனுபவித்தேன்.
& எல்லாம் சரியாக சுத்தமாக, " சென்னையிலிருந்து பெங்களூர் வரை செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ....... " என்பது வரை சொல்லும் குரல் ஏழு மணி nn நிமிடங்களில் ..... டிங் டாங் நடைமேடையிலிருந்து புறப்படும் என்று எப்பவும் கேட்பது என் காதுகளுக்கு மட்டும்தான் என்று இவ்வளவு நாளும் நினைத்திருந்தேன்.
இந்த வாரக் கேள்வி :
உங்களிடம் நூறு ரூபாயைக் கொடுத்து, அதை ஒரு மணி நேரத்திற்குள் முழுவதும் செலவழிக்கவேண்டும் என்று சொன்னால், என்ன செய்வீர்கள்?
வணக்கம் கௌ அண்ணா, ஸ்ரீராம்.
பதிலளிநீக்கு//திண்டுக்கல் தனபாலன் கேள்விக்கு குஷ்பு, பிரபு தவிர எல்லா பூக்களும் அங்கே பூத்துவிட்டன! நான் புதிதாக என்ன சொல்ல முடியும் என்று ஒரு திகைப்பு, மலைப்பு, பரிதவிப்பு. ஏதேனும் சொல்ல முடிந்தால் வரும் பூரிப்பு (என்று சொன்னால் என்ன தப்பு?)//
ஹா ஹா ஹா ஹா..காலையிலேயே சிரிக்க வைச்சுட்டீங்க.
நிறைய விஷயங்கள் இருக்கின்றன. முழுவதும் வாசிக்கணும்.. ஒவ்வொன்றாக வாசித்து வருகிறேன்.
கீதா.
நன்றி!
நீக்குஇந்த வாரக் கேள்வி :
பதிலளிநீக்குஉங்களிடம் நூறு ரூபாயைக் கொடுத்து, அதை ஒரு மணி நேரத்திற்குள் முழுவதும் செலவழிக்கவேண்டும் என்று சொன்னால், என்ன செய்வீர்கள்?
ரஜனியா என்ன நாம்...ஹா ஹா ஹா செலவழிக்கத்தான் வேண்டுமா இல்லை சும்மாவும் கொடுக்கலாமா?
செலவுக்கு என்ன ? நிறைய இருக்கிறதே வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கவே செலவாகிடும்.
கீதா
100 ரூபாய் என்பது ஜுஜூபிதான் இக்காலக்கட்டத்தில் என்றாலும் அதற்கும் ஒரு மதிப்பு உண்டே அது பல சமயங்களில் வரும்...
நீக்குநான் 100 ரூபாய்களை (500 ரூ) ஓரிரு பர்ஸ்களில் வைத்துவிடுவதுண்டு.(வீட்டுல பதுக்கல் என்று சொல்லுவதுண்டு!!!!!) நானோ நல்ல மறதி கேஸ். மிக அத்தியாவசியாமன நேரத்தில் வீட்டுல கேப்பாங்க ...ஏதாவது பதுக்கி வைச்சிருப்பியே என்று. உடனே வீட்டில் இருக்கும் எல்லா பர்ஸ் களையும் அலசி ஆராய்ந்தால்...கிடைக்கும்..சில சமயம் 1000 ரூ கூடக் கிடைக்கும்!!!!!...(அதான் நிறைய கல்யாணங்கள், நவராத்திரிகள் என்று வைச்சுக் கொடுத்ததெல்லாம் இருக்குமே வீட்டுல.எந்த பர்ஸ்ல வைச்சுருப்பேன் என்பதும் நினைவுக்கு வராது ஹிஹிஹிஹி..)
நல்ல காலம் ரூ மதிப்பிழந்த சமயத்துல நிறைய பதுக்கலை!!!!!!!
கீதா
//பிளாஸ்டிக் தடை என்று மர நாற்காலி கேட்டு கல்யாண மண்டபத்தில் அடம் பிடிப்பவரையும், மர நாற்காலி செய்ய மரம் வெட்டக் கூடாது என்பவரையும் ஒருங்கே கொண்டது தான் நம் தேசம்//
பதிலளிநீக்குமிகவும் இரசித்தேன் ஜி
நன்றி!
நீக்குதுளசியின் கேள்விக்கான பதில் சூப்பர். ஆமாம் பாகிஸ்தானுக்குப் ப்ரெஷர் பல நாடுகளிலிருந்தும். எனவே அபிநந்தன் விடுவிக்கப்பட்டு நாடு வந்து சேர்ந்தது சந்தோஷமான, பூரிப்பான விஷயம்.
பதிலளிநீக்குகீதா
நன்றி!
நீக்குபிளாஸ்டிக் தடை என்று மர நாற்காலி கேட்டு கல்யாணமண்டபத்தில் அடம் பிடிப்பவரையும், மர நாற்காலி செய்ய மரம் வெட்டக் கூடாது என்பவரையும் ஒருங்கே கொண்டது தான் நம் தேசம். //
பதிலளிநீக்குசூப்பர். நான் அடிக்கடி நினைப்பதுண்டு. பேப்பர் கவர், பை என்று வருகிறது ஆனால் இதற்கு மரம் வெட்டனுமே என்று.
நீங்கள் சொல்லியிருக்கும் சரியான டிஸ்போஸல் அதே என் கருத்தும்...
கீதா
நன்றி!
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம்.
நீக்குஅனைவருமே தமிழ் சி என்றும், காட்டு விலங்குகள் என்றும் தானாகவே எடுத்துக்கொண்டு பதில்கள் கூறியுள்ளீர்கள்.//
பதிலளிநீக்குஆமாம் ல...//யாரும் Out of box thinking செய்யவில்லை! // கரீக்டு. நான் cat, cow சொலல் நினைத்து தமிழில்தான் சொல்லனும் போல என்று நினைத்து சொல்லாமல் சென்றேன்..ஹிஹிஹி
வேர்டில் கருத்துகள் அடித்து வைத்துவிட்டு (இங்கு கரன்ட் அடிக்கடி போய் வரும் அல்லது மினுக் என்று அணைந்து வரும் எனவே தான்) அப்புறம் அதை காப்பி பேஸ்ட் செய்து இங்கு போடுவதால் இது அப்போதே எழுதி வைத்து விட்டேன் இப்பத்தான் போடுறேன்..
கீதா
அப்படியா!
நீக்குஆமாம் எங்கள் ஏரியா புறநகர் எனபதாலோ என்னவோ?!! அதுவும் ஏர்ஃபோர்ஸ் ஷோ நடந்த அன்றெல்லாம் இங்கு காலையில் 10 மணிக்கு போன கரன்ட் மாலைதான் வந்தது...
நீக்குகீதா
எல்லாக்கேள்வி பதில்களும் அசத்தல்! இந்த வாரக் கேள்விகளுக்கான பதில்களில் கௌதமன் அவர்களின் பங்கு குறைவாக உள்ளது. மாறாக $ அதிகம் பங்கேற்றிருக்கிறார். வாட்சப்பில் யாரிடம் கேள்வி கேட்கின்றனர்? வாட்சப் எபி குழுவில் இப்படி எல்லாம் கேள்விகள் வருவதாகத் தெரியவே இல்லையே?
பதிலளிநீக்குமுன்னெல்லாம் மளிகைப் பொருட்கள் பேப்பரில் சுற்றப்பட்டே வரும். அப்போதெல்லாம் பழைய பேப்பருக்கும் கிராக்கி இருந்தது. இப்போது ப்ளாஸ்டிக் யுகம் ஆனதில் அவை மறைந்தே ஒழிந்துவிட்டன. பேப்பர் கவர் போடுவதற்கே யாருக்கும் தெரியவில்லை. கோதுமை மாவு பேப்பர் கவரில் கட்டிக் கொடுத்திருக்கார்கள். இப்போதே பிய்ந்து வருகிறது! :(
வாட்ஸ் அப்பில் என்னுடைய எண்ணுக்கோ அல்லது ஸ்ரீராமின் எண்ணுக்கோ கேள்விகள் அனுப்பினால், நாங்கள் அதை எ பி ஆசிரியர்கள் வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்து, பதில்களை அங்கே பரிமாறிக் கொண்டு, பிறகு இங்கே கொண்டுவந்து தொகுத்து வெளியிடுகிறோம். வாட்ஸ் அப் - எ பி ஆசிரியர்கள் + வாசகர்கள் குழுவில் கேள்விகள் பதிந்தால், பரீட்சைக்கு முன்னர் வினாத்தாள் அவுட் ஆகிவிடுகின்றதே என்ற நிலையால், திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன், நெல்லைத்தமிழன் ஆகியோர் இந்த வழியைப் பின்பற்றுகிறார்கள். Creative way. We appreciate their idea.
நீக்குகல்யாணங்களின் ஆடம்பரச் செலவு குறித்துப் பல முறை எழுதி விட்டேன். எங்க குடும்பத்திலேயே இது அதிகம் இருக்கிறச்சே என்னத்தைச் சொல்ல முடியும்! :(
பதிலளிநீக்குஇந்தக் காலத்தில் நூறு ரூபாய் எல்லாம் ஓர் பெரிய தொகையே அல்ல. ஆகவே அதைச் செலவு செய்வதற்குக் கஷ்டப்பட வேண்டாம். அல்லது அப்படியே பத்திரமாகவும் வைத்திருக்கலாம். என்னிடம் நூறு ரூபாய் யாரானும் கொடுத்தாலோ அல்லது வெற்றிலை, பாக்கில் வைத்துக் கொடுத்தாலோ பத்திரமாக உள்ளே வைத்து விடுவேன். பின்னர் அவசியம் நேரிட்டால் செலவு செய்வேன்.
பதிலளிநீக்குஓ, அரை மணி நேரத்தில் செலவழிக்கணுமா? ஜிம்பிள்! இங்கே உள்ள காடரரிடம் சாம்பார், ரசம், கறி, கூட்டு, சாதம் ஒருத்தருக்குக் கொண்டு வரச் சொல்லிடுவேன். 120 ரூ ஆகும். 20 ரூ கையை விட்டுக் கொடுக்க வேண்டி இருக்கும். இல்லைனா சாதம் மட்டும் வீட்டில் வைத்துக் கொண்டு மற்றவை கொண்டுவரச் சொன்னால் 20 ரூ மிச்சம் ஆகும். இதான் சரி! :))))
பதிலளிநீக்குகேஜிஜி என்ன பப்பாக்களுக்கா கேள்வி கேட்டிருக்கார்? 100 ரூ. முழுமையா ஒரு மணி நேரத்துக்குள் செலவழிக்கணும்.
நீக்குஇப்போ வீட்ல இருந்தபடியே ஊபர் ஈட்ஸ், ஸ்விக்கில ஆர்டர் செய்வதாலும், ஒருவர் கொடுக்கும் பணம் மதிப்பு உடையதாலும், 50% ஆஃபரில் இப்போ ஸ்வீட்ஸ் ஆர்டர் செய்து 20 நிமிடத்துக்குள் வந்ததை காலி செய்துவிட்டு உடனடியாக கேஜிஜிக்கு, இது பத்தலை, 250 கிராம்தான் வாங்க முடிந்தது, ஏன் 300 ரூ ஆஃபர் பண்ணலைனு புதன் கேள்வி எழுதிடுவேன்.
ஹா ஹா !
நீக்குநூறு ரூபாய்க்கும் சில்லறையா மாத்தி அம்மாமண்டபத்தில் உட்கார்ந்திருக்கிறவங்களுக்குப் பகிர்ந்து கொடுத்துடுவேன். ஒருத்தருக்கே கொடுத்தால் நல்லா இருக்காது இல்லையா!
நீக்குஅம்மா தாயே! அன்னபூர்ணேஸ்வரி! மகாலக்ஷ்மி! நல்லா இருப்பீங்க தாயே!
நீக்குகேஜிஜி சார்... கீசா மேடம் - இருவரும் கடந்த சில வருடங்களாக வீட்டை விட்டு வெளியே சென்றதில்லை போலிருக்கு.
நீக்கு100 ரூபாய்க்கு சில்லரையா வேணும்னா, அவங்கள்ட போய்தான் வாங்கணும். அப்போ 100 ரூபாய்க்கு கமிஷனா 10 ரூபாய் எடுத்துக்கிட்டு மீதி தருவாங்க. அதை அங்க உட்கார்ந்திருக்கிற மத்தவங்களுக்குக் கொடுக்கமுடியாது. யாரும் 5-10 ரூபாய்க்கு குறைவா இப்போ வாங்கறதில்லை.
இதுல அன்னபூர்ணி, மஹாலக்ஷ்மி...... ரொம்ப ஜாஸ்தியாத் தெரியுதே... (நான் சொன்னது ஐஸ் சைஸை)
எல்லா வங்கிகளிலும் நேரடியாகப் பணம் எடுத்தாலோ அல்லது சில்லறை தேவை என்றாலோ தேவையான பணத்துக்கு நோட்டாகவும் சில்லறையாகவும் பெற்றுக் கொள்ள முடியும். தருவார்கள்/தருகின்றனர். இல்லைனாலும் எங்க வீட்டில் தம்பியிடம் சொல்லி வாங்கிடுவோம். அவர் வந்தாலோ நாங்க போனாலோ சில்லறை வாங்கிப்போம். ஆகவே நான் சரியாத் தான் எழுதினேன். நீங்க சொன்ன மாதிரி அனுபவம் எல்லாம் எனக்கு/எங்களுக்கு இல்லை நெ.த. :)))))
நீக்குஓ! வீட்டுல கொடுக்கற பணம் இல்லையா இது!! வெளியிலிருந்து வரும் பணமா...அட இந்த ம ம வுக்கு இது கூடப் புரியாம..நான் சரியான ம ம.....பல சமயத்துல...
நீக்குயாராவது கொடுத்தா கண்டிப்பா நான் அதை என் வீட்டுச் செலவுக்கு எடுக்கவே மாட்டேன்....என் தேவைக்கும் எடுக்க மாட்டேன். சாப்பாடு வாங்கி நாலுகால் ஜீவன்கள், இல்லாதவர்களுக்குக் கொடுத்துவிடுவது வழக்கம்.
கீதா
கீதா
நெல்லை ஹா ஹா ஹா ஹா ஹா
நீக்குஇன்னிக்கு செம ஃபார்ம்ல இருக்கீங்க போல....கீதாக்காவை இப்படியா ஓட்டுவது!!!!! ஹா ஹா ஹா
கீதா
கீதா ரங்கன்.... நாலுகால் ஜீவன்கள் யாரு? குழந்தைகளா? மூணுகால்னா கம்பு ஊன்றி நடக்கிற பெரியவங்கன்னு சொல்லலாம். இல்லை 2 X ரெண்டுகால் ஜீவன்களா?
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஇன்றைய பதிவில் உள்ள பதில்கள் ஸ்வாரஸ்யம்.
நன்றி.
நீக்கு& - வில் உள்ள பதில்களை ரொம்பவே ரசித்தேன்...
பதிலளிநீக்குநன்றி!
நீக்குதுளசிதரன் அவர்கள் கேள்விக்கு பதில் மிக அருமை.
பதிலளிநீக்கு//இப்போ எல்லாம் மெரீனாவில், சமாதிகளுக்கு இடையே தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் கொரி(றி?)ப்பதோடு பெண் பார்க்கும் படலம், ஆண் பார்க்கும் படலம் எல்லாம் முடிந்துவிடுகிறதே! //
மதுரையில் 'இன்மையில் நன்மைதருவார் கோவிலில்' பெண் பார்க்கும் படலம் நடந்தது.
பெண் வீட்டார், ஆண் வீட்டார் இருவரும் பேசிக் கொண்டு இருந்தார்கள் பெண் சிரித்தபடி தலை குனிந்து இருந்தாள்.
நாங்கள் சாமி கும்பிட்டு விட்டு திரும்பி வரும் போது சிரித்தபடி கிளம்பி கொண்டு இருந்தார்கள் பேச்சு வார்த்தை நல்லபடி நிறைவு பெற்றது என்று நினைக்கிறேன்.
அடேடே ! அப்படியா!
நீக்குஓட்டல்களிலும் சந்தித்துக் கொள்கின்றனர். பெண் வீட்டார், பிள்ளை வீட்டார் இருவருமே!
நீக்குஅங்கேயும் பஜ்ஜி, ரவா கேசரி ஆர்டர் செய்வார்களோ?
நீக்குஐயையோ... கேஜிஜி சார்... பஜ்ஜி ரவா கேசரிலாம் 1750லயே வழக்கொழிந்துவிட்டது. இப்போல்லாம் பீட்சா, கேக், காபி போன்றவைதான், அதுவும் காஃபி ஷாப்பிலோ இல்லை பிட்சா உணவகத்திலோ... வேற எங்கேயும் கூப்பிட்டால், பெண்ணும் வரப்போகிற மாப்பிள்ளையுமே தலையக் காண்பிக்க மாட்டார்கள்.
நீக்குநான் பெண் பார்க்கச் சென்றபோது கூட சொஜ்ஜி பஜ்ஜி தின்றேன் சார்!
நீக்குநம்ம ரங்க்ஸ் என்னைப் பெண் பார்க்க வந்தப்போக் காலம்பர இட்லி, வடை, கேசரியா> அல்வாவா நினைவில் இல்லை. சட்னி சாம்பாரோடு.மத்தியானம் ஆமவடை, மைசூர்பாகோடு சாப்பாடு! சாயந்திரம் காஃபி! அதுக்கப்புறமா ஊருக்குக் கிளம்பிட்டாங்க! :))))) டிவிஎஸ் நகரில் எங்க மாமா வீட்டில் காஃபி, டிஃபன் சாப்பிட்டிருக்கலாம். தெரியலை! :))))
நீக்குகீசா மேடம்... (1) அவர் உங்க வீட்டுக்கு உற்வினரா (திருமணத்துக்கு முன்னால) (2) முதலிலேயே முடிவு செஞ்சுட்டாங்களா? ஒரு ஃபார்மாலிட்டிக்குத்தான் அவங்க உங்க வீட்டுக்கு வந்தாங்களா? (3) இல்லை... நீங்கள்லாம் நல்ல சமையலைப் பண்ணிப்போட்டு மடக்கிட்டீங்களா?
நீக்குரொம்ப "?" இருப்பதால அடுத்த புதன் கிழமைக்கு எடுத்துக்க மாட்டாங்க. நீங்கதான் பதில் சொல்லணும். ஹாஹா
விரைவில் என்னோட கல்யாணப்பதிவுகள் மின்னூலாக வெளிவர இருக்கிறது. அமேசான் மூலமோ கின்டில் மூலமோ கொடுக்கலாமானு யோசிக்கிறேன். :)))) அதிலே காசு கொடுத்து வாங்கிப் படிச்சுத் தெரிஞ்சுக்குங்க. இலவசமா வேணும்னா என்னோடபதிவுகளிலே தேடிப் பார்க்கவும். எந்த வருஷம், எந்த மாசம் ஆரம்பம்னு எல்லாம் சொல்ல
நீக்குமாட்டேன்.நெல்லைத்தமிழரே! உங்க சாமர்த்தியம்!
& இப்போ எல்லாம் மெரீனாவில், சமாதிகளுக்கு இடையே தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் கொரி(றி?)ப்பதோடு பெண் பார்க்கும் படலம், ஆண் பார்க்கும் படலம் எல்லாம் முடிந்துவிடுகிறதே! //
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா ஹா ஹா....அதுல சிலது வேற விதமாவும் போவுதே!!!!!..இன்னொன்னும் விட்டுட்டீங்களே...அதி முன்னேற்றமா லிவ்விங்க் டுகெதர்
.அப்புறம் நவீனமா காஃபி ஷாப்பில் கூட மீட் பண்ணிக்கறாங்க. சிலர் கோயில் என்று செண்டிமென்டலாவும் வைச்சுக்கறாங்க...பஜ்ஜி சொஜ்ஜி குறைந்துவிட்டது ஒரு சில குடும்பங்களைத் தவிர.
கீதா
காலம் செய்த கோலம். பஜ்ஜிக்கும் சொஜ்ஜிக்கும் பங்கம்.
நீக்குசமகாலத்தில் " வெற்றிலையும் எலுமிச்சம்பழமும் " என்ற தலைப்பில் யூ டியூபில் காணொளி பதிவு செய்துள்ள ஒரு பெண்மணி. Effective presentation with clarity and free flow of words.//
பதிலளிநீக்குஅருமை. பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
வாசகர்களில் முதலில் யார் கண்டுபிடிக்கிறார்கள் என்று பார்த்தேன். வெரி குட். வாழ்த்துகள்!
நீக்குThanks for the honour '&'ji, and thanks for the recognition Gomathy madam.
நீக்குஇப்போத் தான் பார்த்தேன். காலையில் காணொளி எல்லாம் திறந்து பார்க்க முடியாது! :))))) அதோடு இன்னிக்கு அமாவாசை! பானுமதி நிறையக் கொடுத்துட்டாங்க இம்மாதிரிக் காணொளிகள். எல்லாமே இந்தக் கால இளைஞர்கள், இளைஞிகள் அறிய வேண்டியது. இந்த வெற்றிலை, எலுமிச்சம்பழம் பற்றி ஏற்கெனவே தெரிந்திருந்தாலும் இதை எல்லாம் யூ ட்யூபிலோ, பதிவிலோ சொன்னதும் இல்லை/ எழுதினதும் இல்லை. புதுமையான முயற்சிகளைச் செய்யும் பானுமதிக்குப் பாராட்டுகள்.
நீக்கு//அதோடு இன்னிக்கு அமாவாசை! // - அமாவாசைக்கும் காணொளி திறக்கறதுக்கும் என்ன சம்பந்தம்? இதெல்லாம் கணிணி கத்துக்கொடுத்தவங்க சொல்லித் தரலையா கீசா மேடம்.....
நீக்கு//அதோடு இன்னிக்கு அமாவாசை! // ஹையோ, ஹையோ, இப்படி ஒரு ம.ம.வாக இருப்பீங்கனு நினைக்கவே இல்லை! :))))) அமாவாசை அன்று காலை வேலை இருக்கும்! அதனால் கணினியில் உட்கார நேரம் இருக்காது என்பது மறை பொருள்!
நீக்குபானுக்கா இன்னிக்கு க்ளவுட் 9!!!ல்
நீக்குகீதா
கீசா மேடம்.... தர்ப்பணம் பண்ணறவங்களுக்கு வேலை இருக்கும். ஆமாம்.... உங்களுக்கு என்ன வேலை ஜாஸ்தின்னு சொல்லிக்கிறீங்க? மாமாவுக்கு எல்லாம் எடுத்துத் தரணும், வடை பாயசம் கூடுதலாகப் பண்ணணும் என்பதை வேலைனு சொல்றீங்களா?
நீக்குநெல்லைத் தமிழரே, தர்ப்பணம் பண்ணறவங்க அதோடு சரி. அதுக்கு முன்னாலும், பின்னாலும் பேப்பர் படித்துக் கொண்டோ, டிவி பார்த்துக்கொண்டோ (இப்போ ஐ பாட்) பார்த்துக் கொண்டோ இருப்பாங்க! இஃகி, இஃகி, தர்ப்பணம் செய்யும் பித்தளைப்பாத்திரங்கள், தர்ப்பணத்தட்டு, எல்லாம் தேய்ச்சு வைச்சு, வீடு பெருக்கித் துடைச்சுத் தர்ப்பணம் பண்ணும் இடத்தையும் சுத்தம் செய்து, உம்மாச்சி அலமாரியைச் சுத்தம்செய்துனு வேலை எல்லாம் யார் செய்வாங்க? :)))))) பத்து மணிக்குள்ளாகச் சமைக்கவும் செய்யணும்.:)))))
நீக்குஆடம்பரக் கல்யாணச் செலவுகள் கண்டிப்பாகக் குறைய வேண்டும். $ ஆசிரியர் அவர்களின் கருத்திற்கு ஹைஃபைவ்...
பதிலளிநீக்கு//& பதில்...கௌ அண்ணா பதிலுக்கு சிரிச்சு முடில....
உறவினர் கல்யாணம் ஒன்று..பெண் கல்யாணம்.... 21 லட்சம்...மீக்கு மயக்கம். என் கருத்து வேறாக இருந்தாலும் நான் ஒன்றும் சொல்ல முடியாது. எதிர்க்கேள்வி வரும்....அப்ப நினைச்சுப்பேன் நாம் பதில் சொல்லிப் பேச வேண்டாம்...செயலில் நம் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று...
கீதா
பசங்களோட அம்மா, அப்பா சொல்லும்போதுதான் க்ரெடிபிலிடி வருது. அதுக்காக உங்க வூட்டுத் திருமணத்துக்கு வந்தால் ஸ்வீட்ஸ் எனக்குக் கொடுக்க மறந்துடாதீங்க(க்கா)
நீக்குசமூபத்துல ஒருத்தர் (ஜாதி அதேதான்..ஏன்னா அதுவும் செலவழிக்கும் பாணியில் ஒரு அங்கம்), மொத்தமா 80-85 ல செலவழித்தாராம் (மனசுக்குள்ள கர்ர்ர்ர்ர்ர்ர்ர்)
நீக்குஎங்க வீட்டிலும் நெருங்கிய உறவினர் கல்யாணம், பெண் கல்யாணம், பிள்ளை கல்யாணம் எல்லாவற்றிலும் ஸ்டால் எல்லாம் போட்டு வளையல் கடை, மெஹந்தி போட்டுவிடுதல், சாட் கடை, பாப்கார்ன், பஞ்சு மிட்டாய் ஸ்டால், ஜூஸ் ஸ்டால், காஃபி, தேநீர் ஸ்டால், சமோசா, வடை போன்றவற்றிற்குத் தனியாக ஸ்டால், இனிப்பு வகைகளுக்குத் தனியாக! இத்தனைக்கும் அவங்க நம்மைப் போல் நடுத்தரவர்க்கம். மத்யமர்! :(
நீக்குகீசா மேடம்... பணத்தின் அருமை தெரியாதவர்கள் செய்யும் வேலை இது. நானும் இப்படிப்பட்ட திருமணங்களுக்கெல்லாம் போயிருக்கேன். இப்படி டாம்பீகமாச் செய்யறதுல என்ன ஆனந்தமோ..... இதைப்போல வேஸ்ட் உலகத்துல வேற எதுவும் கிடையாது. வந்தவங்களுக்கு இனிப்பு/காரம், எளிமையான ஆனால் நல்ல உணவு, நல்ல உபசரிப்பு, என்ன செலவழிக்கணும்னு நினைக்கறோமோ அதை பெண்ணுக்குக் கொடுத்துவிடுவது, அவங்க நல்ல வாழ்க்கை தொடங்க உபயோகப்படுத்திக்கொள்ளலாம்....
நீக்குஇதெல்லாம் நாம சொன்னா, ஏதோ ஒண்ணும் தெரியாமச் சொல்றாங்கன்னு நினைப்பாங்க.
அதுக்காக உங்க வூட்டுத் திருமணத்துக்கு வந்தால் ஸ்வீட்ஸ் எனக்குக் கொடுக்க மறந்துடாதீங்க(க்கா)//
நீக்குஹா ஹா ஹா ஹா ஹூக்கும் இந்த க்கா சேராம வராதே!! தம்பிக்கு!!!
ஸ்வீட் எல்லாம் உண்டு!! பெட்டி பெட்டியா நல்ல ஸ்வீட் தந்துவிடுகிறேன்...
கீதா
வந்தவங்களுக்கு இனிப்பு/காரம், எளிமையான ஆனால் நல்ல உணவு, நல்ல உபசரிப்பு, என்ன செலவழிக்கணும்னு நினைக்கறோமோ அதை பெண்ணுக்குக் கொடுத்துவிடுவது, அவங்க நல்ல வாழ்க்கை தொடங்க உபயோகப்படுத்திக்கொள்ளலாம்....
நீக்குஇதெல்லாம் நாம சொன்னா, ஏதோ ஒண்ணும் தெரியாமச் சொல்றாங்கன்னு நினைப்பாங்க.//
அதே நெல்லை. நான் சொல்வது பெண்ணுக்குக் கொடுத்துவிடுவது...
பெண்ணின் அலங்காரத்திற்கு மட்டுமே 30 லிருந்து 50 ஆயிரம் வரை செலவழிக்கிறார்கள்!!!!
கீதா
கீதா ரங்கன் - //பெட்டி பெட்டியா நல்ல ஸ்வீட் தந்துவிடுகிறேன்...// - பையனைப் பெத்தவங்க, அவங்களேதான் தரணும். பொண்ணுவீட்டுல இதையும் டிமாண்டுல ஒண்ணாச் சேர்த்துடாதீங்க ஹா ஹா ஹா. (சமீபத்துல ஒரு திருமணத்துல-பெங்களூர்ல, ஒரு பெரிய பிளாஸ்டிக் பாக்ஸ்ல நிறைய வகை வகையா ஸ்வீட்ஸ் காரம் தந்தாங்க. இது மாதிரி நான் எங்கயுமே பார்த்ததில்லை. நடுத்தர ஃபேமிலிதான்)
நீக்கு100 ரூபாயை குழந்தைகளின் உண்டியலில் போட்டு விடுவேன். என்னைப் பொறுத்தவரையிலும் செலவு. அவர்களுக்கு வரவு.
பதிலளிநீக்குநல்ல யோசனை!
நீக்குஜோதிஜி கலக்கல்!
நீக்குசூப்பர் ஜோதிஜி!!
நீக்குகீதா
//பிளாஸ்டிக் தடை என்று மர நாற்காலி கேட்டு கல்யாணமண்டபத்தில் அடம் பிடிப்பவரையும், மர நாற்காலி செய்ய மரம் வெட்டக் கூடாது என்பவரையும் ஒருங்கே கொண்டது தான் நம் தேசம்.//
பதிலளிநீக்குஅதேதான்! இந்த அளவு கருத்து சுதந்திரம் தேவையா?என்று கூட நமக்கு தோன்றும். எல்லா விஷயத்திற்கும் வேணும், வேண்டாம் என்று பலர் அடித்துக் கொள்ள சந்தர்ப்பவாதிகள் சந்தில் சிந்து பாடி விடுகிறார்கள்.
கரெக்ட்.
நீக்குசென்ற வாரம் எல்லோரும் தமிழ் 'சி'யில் துவங்கும் பெயர்களை சொல்லி விட்டார்கள் நான் C யில் துவங்கும் விலங்குகளின் பெயரை சொல்கிறேன் அன்று, cow,cat,camel,chicken என்று மெயில் பாக்ஸில் தட்டச்சி விட்டேன், ஏன் அனுப்பவில்லை என்று தெரியவில்லை. சென்ற வாரம் சென்னையை இருந்ததால், செல் போனில்தான் பின்னூட்டங்கள் போட்டுக்கொண்டிருந்தேன். செல் போனில் வெட்டி, ஓட்டுவது கொஞ்சம் கஷ்டமாக இருப்பது காரணமாக இருந்திருக்கலாம்.
பதிலளிநீக்குஅட! அப்படியா ! வாழ்த்துகள். வாட்ஸ் அப் மூலமாக எனக்கு அனுப்பியிருக்கலாமே!
நீக்குமுகநூல், வதன புத்தகம் என்றெல்லாம் எழுதுகிறார்களே என்பதால் கேட்டேன். எனக்கு என்னவோ வதன புத்தகம் என்பது comman gender ஆக இல்லாமல், feminine gender ஆக தோன்றுகிறது. முகநூல் ஓ.கே.! மற்றபடி தமிழ் வெறியெல்லாம் இல்லை.
பதிலளிநீக்குஇங்கே பானுமதி வெங்கடேஸ்வரன் என்பதை சூர்ய சந்திர வெங்கடேஸ்வரன் என்று மொழிபெயர்த்துள்ளீர்கள். அது தவறு. பானுமதி என்பதற்கு ஒளி உடையவள், அல்லது ஒளி பொருந்தியவள் என்றுதான் பொருள்.
சூரியனுடைய ஒளிக்கு பானு என்று பெயர். அதுவும் எப்படிப்பட்ட ஒளி தெரியுமா? தான் மாறாமல் அது எதன் மீது படுகிறதோ அதை மாற்றும் ஒளி.
ஸ்ரீமதி என்றால் செல்வம் உடையவள், வசுமதி என்றால் வளம் உடையவள்(பூமா தேவியின் பெயர்) என்பதைப் போல பானுமதி என்றால் ஒளி உடையவள் என்று பொருள்.
சம்பந்தப்பட்ட ஆசிரியர் உங்கள் கருத்தைப் பார்ப்பார் என்று நம்புகிறேன். வசுமதி என்பது எங்கள் சகோதரியின் பெயர்.
நீக்குபானுக்க்காஆஆஆஆஆஆஆஆஆ அதான் உங்களை சுத்தி ஒரு ஒளிவட்டம் தெரியுதோ!!!!!! ஹா ஹா ஹா ஹா ஹா....
நீக்குகீதா
பானு மதி என்றால், சந்திரனைப் போல குளிர்ச்சியான ஒளி என்று அர்த்தம். மத்தபடி, கொஞ்சம் மசாலா சேர்த்து கொஞ்சம் என்ன நிறையவே அதிகமாக புகழ்ச்சியாக பா.வெ.மேடம் எழுதியிருப்பதற்கு என்னிடம் பதில் இல்லை. ஹாஹா.
நீக்கு@Nelai Tamizhan: மதி என்பதை madhy என்று எழுதினால் சந்திரன் என்று பொருள். ஆனால் பானுமதி என்று எழுதும் பொழுது mathy என்றுதான் எழுதுகிறோம். அதனால்தான் ஸ்ரீமதி, வசுமதி உதாரணங்களை கொடுத்தேன். மற்றபடி பானு என்பதற்கு ஒளி என்று பொருள் என்பதை நீங்களும் ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள். நான் எழுதியிருக்கும் பொருள் (உங்கள் கருத்தில் மசாலா)வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் கூறியது.
நீக்குஅடேயப்பா! தமயந்தியோடும்(எனக்கும் தமயந்தியை பிடிக்கும்), ஜான்சி ராணியோடும் நானா?? யார் தருவார் இந்த சரியாசனம்? மிக மிக நன்றி! தலை வணங்கி உங்கள் பாராட்டை ஏற்றுக்கொள்கிறேன்.
பதிலளிநீக்குஉங்களிடம் உடைவாள் எதுவும் கிடையாதுதானே! ஆனாலும் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருந்துகொள்கிறோம்! :)))
நீக்குகலைமாமணி விருது பற்றிய கேள்விக்கான பதிலை ரொம்பவும் ரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி!
நீக்குசரி, இந்த வாரத்திற்கான கேள்விக்கு வருகிறேன். ரூபாய் 100 ஐ, அரை மணி நேரத்திற்குள் செலவழிக்க வேண்டுமா?
பதிலளிநீக்கு1. பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு செல்வேன். ஐம்பது ரூபாய்க்கு அர்ச்சனை தட்டு, ஐந்து ரூபாய்க்கு அர்ச்சனை டிக்கெட் வாங்கி அர்ச்சனை செய்து விட்டு குருக்களின் தட்டில் இருவது ரூபாய் போடுவேன். கோவில் வாசலில் செருப்பை பார்த்துக் கொண்டவருக்கு இரண்டு ரூபாய், மிச்சமிருக்கும் ரூபாய்க்கு பூ வாங்கி கொண்டு வீட்டிற்கு வருவேன்.
2. செல்போன் ரீசார்ஜ் செய்வேன்.
3. சாக்லேட் வாங்கி கண்ணில் படும் குழந்தைகளுக்கு கொடுப்பேன்.
4. நூறு ரூபாய்க்கு புத்தகம் வாங்குவேன், அல்லது புஸ்தகாவில் வாடகைக்கு எடுப்பேன்.
செலவழிப்பதா கஷ்டம்? கற்பகம் படத்தில் எம்.ஆர்.ராதா சொல்வது போல, டெலிபோனிலேயே செலவிக்கலாமே.
நல்ல செலவாளிதான் போலிருக்கு!
நீக்கு& வரும் காலத்தில், நாம் நாடார் கடை லிஸ்ட் போடும்பொழுது, பத்மஸ்ரீ ........ 3, கலைமாமணி ........ 5 என்று லிஸ்ட் போடக்கூடும் என்று நினைக்கிறேன்.//
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா ஹா...
கீதா
பதில்கள் ரசிக்கும்படி இருக்கு. ஆனா என் பொதுவான கருத்து, ஒரு கேள்விக்கு ஒரு பதில்தான் இருக்கணும். பலர் பதில் சொன்னால் யார் எதைச் சொல்லியது என்று சொல்லணும். குமுதம் கேள்வி பதில்ல, ஒரு பதில்தான் இருக்கும், கேள்வி பதில் பகுதிக்கு பலர் காண்டிரிபியூட் பண்ணியிருந்தாலும்.
பதிலளிநீக்குசரி சார் - இனிமேல உங்கள் கேள்விகளுக்கு மட்டும் ஒரு பதில் மட்டும் வெளியாகும். சரியா?
நீக்குஅப்படி இல்லை கேஜிஜி சார்... பாருங்க.. ஸ்வீட்ஸ் யாருக்கு என்ன பிடிக்கும் என்று கண்டுபிடிக்க முடியாமல் உங்க வீட்டுக்கு மைசூர்பாக் எடுத்துக்கொண்டுவந்தால், அதை நீங்க இன்னொரு ஆசிரியருக்கு கொரியர் பண்ணணும். எங்கிட்ட, 'அடடா எனக்கு இது பிடிக்காதே'ன்னு சொல்வீங்க. இந்த வம்பு தேவையா?
நீக்குஎதற்கு ரிஸ்க்? எல்லாவற்றிலும் அரைக் கிலோ வாங்கிக்கொண்டு வாருங்கள். நாங்கள் பிரித்துக்கொள்கிறோம்!
நீக்குகுமுதம் மட்டுமல்ல பெரும்பான்மையான பத்திரிகைகளில் ஒருவர்தான் பதிலளிப்பார். ஆனால் க்ரியேட்டிவிட்டிக்கு ரிஜிட் ரூல்ஸ் எதுவும் கிடையாது நெ.த.
பதிலளிநீக்குபத்திரிகையுலகில் பல புதுமைகளை செய்த சாவி அவர்கள் தன்னுடைய 'சாவி' பத்திரிகையில் பால குமாரன், சுப்பிரமணிய ராஜு இருவரையும் ஒரே கேள்விக்கு பதில் சொல்ல சொல்லி, இரட்டையர் பதில்கள் என்று வெளியிட்டார்.
ஒரே விஷயத்தை வெவ்வேறு நபர்கள் எப்படி அணுகுகிறார்கள் என்பது புரியுமே.
மிகவும் சரி. நாங்கள் ஒரே கேள்வியை பல கோணங்களில் சிந்தித்து பதில் தருகிறோம்.
நீக்குஅது சரி பா.வெ. மேடம். யார் என்ன சொன்னாங்கங்கறதையாவது சொல்லலாமே?
நீக்குயார் சொல்கிறார்கள் என்பதைவிட, என்ன சொல்லப்படுகிறது என்பதே முக்கியம் சார்!மேலும் $ # & எல்லாம் யார் யார் என்று இங்கே ரொம்பப்பேருங்களுக்குத் தெரியும். அந்த தெரிந்தும் தெரியாத நிலையில் பதில் தருவது ஒரு த்ரில்.
நீக்குகேள்வி பதிலை விட பின்னூட்டங்களில் கும்மி அடிப்பது சுவாரசியம் போல இருக்கிறது
பதிலளிநீக்குஆமாம், ஐயா, எல்லோருக்கும் மன இறுக்கம் தளரவும்,கொஞ்சமானும் மனதை ஒரு நிலைப்படுத்திக்கொள்ள உதவுகிறது அல்லவா!
நீக்குகேள்வி பதில் பகுதி ஒரு spark. பின்னூட்டங்களும், விவாதங்களும்தான் அதன் after effects. வாசகர்கள் பங்கேற்பு இல்லாமல் இந்தப் பகுதிக்கு சுவாரஸ்யம் சேராது.
நீக்குகேள்விகள் பதில்கள் எல்லாமே மிக ஸ்வாரஸ்யமாக, நகைச்சுவையாகவும் இருக்கிறது.
பதிலளிநீக்குஎனது கேள்விகளுக்கு வந்த பதில்கள் அருமை. நல்ல விளக்கங்கள். மிகவும் ரசித்தேன். மிக்க நன்றி.
மற்ற கேள்விகளும், பதில்களும் கூட யதார்த்தமாக இருக்கின்றன.
கேரளத்துக் கல்யாணங்கள் பொதுவாகச் செலவு குறைவுதான். ஆனால் பெண்களுக்குச் சில சொத்துகள் என்று கொடுப்பதுண்டு. பெரும்பாலும் இங்கு கல்யாணச் செலவுகளை விட சொத்துகள் பரிமாற்றம் உண்டு. சொத்துகள் சேர்ப்பதும் உண்டு. தங்கம், தோட்டம், நிலம், வீடு என்று. ஒரு சிலரைத் தவிர பொதுவாகக் கல்யாணங்களில் ஆடம்பரச் செலவுகள் கிடையாது.
கோயிலில் கல்யாணம் . இல்லை என்றால் கோயிலுக்குச் சென்று வழிபாடு முடித்து மண்டபத்திற்கு வந்து கல்யாணம் நடக்கும். மிகச் சில மணிநேரமே. ஒரே ஒரு நேரச் சாப்பாட்டுடன் முடிந்துவிடும் பெரும்பாலான கல்யாணங்கள்.
ப்ளாஸ்டிக் பயன்பாட்டில் கேரளமும் விதிவிலக்கல்ல. நிறையவே பயன்பாடு இங்கும். விழிப்புணர்வு இங்கும் செய்யப்படுகிறது. ப்ளாஸ்டிக்கை அகற்றவும் செய்கிறார்கள். முயற்சிகளும் எடுத்துவருகிறார்கள்தான்.
க்ளீன் கேரளா கம்பெனி இந்த ப்ராஜெக்டை செய்தும் வருகிறது.
துளசிதரன்
தகவலுக்கு நன்றி சார்!
நீக்கு100 ரூபாய் எனக்குக் கிடைத்தால் எனக்குச் செலவுகள் கிடையாது என்பதால் என் குழந்தைகள் மூவரிடமும் கொடுத்துவிடுவேன். அவர்களுக்கு இந்த 100 ரூபாய் என்பது வெகு எளிதாகச் செலவாகிவிடும். அவர்கள் பாடு. என்னிடம் பஞ்சாயத்துக்கு வராமல் இருந்தால் சரி!!
பதிலளிநீக்குதுளசிதரன்
Easy disposal!
நீக்குஅருமையான கேள்விகள் பதில்கள். கௌதமன் சார்
பதிலளிநீக்கு100 ரூபாய் கிடைத்தால்,லஸ் வினாயகர், பாங்க் ஆஞ்சனேயர் கோவில் வாசலில் இருக்கும்
வழக்கமானவர்களுக்குப் பத்து பத்தாக க் கொடுத்துவிடுவேன்.
பிள்ளையாருக்கு ஒரு தேங்காய்.
180 இல் ஒன்று குறைந்துவிடும் . வேண்டுதலைச் சொல்கிறேன்.
இதை நீங்கள் படிக்கும் போது உங்களுக்கு வியாழன் வந்து விடும்.
நன்றி! செலவா அது?
நீக்கு// யாரும் Out of box thinking செய்யவில்லை //
பதிலளிநீக்குஅது உங்களுடைய பிரச்சனை...
முன்பே பல தடவை சொல்லி உள்ளேன்... கேள்வி கேட்பதில் தான் திறமை வேண்டும்...
இதை ஏன் இப்போது இங்கு சொல்கிறேன் என்றால், உங்களுக்கு மனம் வருத்தப்படக் கூடாது என்பதற்காகவே... நன்றி...
// இந்த வாரக் கேள்வி :
பதிலளிநீக்குஉங்களிடம் நூறு ரூபாயைக் கொடுத்து, அதை ஒரு மணி நேரத்திற்குள் முழுவதும் செலவழிக்கவேண்டும் என்று சொன்னால், என்ன செய்வீர்கள்? //
இந்த கேள்விற்கு பல கேள்விகள் கேட்கலாம்... அடுத்த வாரம் என்ன சமாளிப்பு வரும் என்பது என்பது எனக்கு தெரியும்...
ஸ்ரீராம் சார் : தயவு செய்து பதிவை சரி பார்த்து பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...
//ஸ்ரீராம் சார் : தயவு செய்து பதிவை சரி பார்த்து பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.//
நீக்குபுரியவில்லை.
முதலாவது இது நான் பகிர்ந்ததில்லை. அடுத்து, என்ன சரிபார்க்க வேண்டும்?
எதற்கு நன்றி?