வெள்ளி, 8 மார்ச், 2019

வெள்ளி வீடியோ : நித்தம் நித்தம் தித்திக்கும் முத்தம் முத்தம்



மெல்லப் பேசுங்கள்.  


1983 இல் வெளிவந்த திரைப்படம்.



பன்னீர் புஷ்பங்களை இணைந்து இயக்கியது போலவே இந்தப் படத்தையும் இணைந்து இயக்கி இருந்தவர்கள் (சந்தான)பாரதி (P)வாசு.



பானுப்ரியாவின் முதல் தமிழ்ப்படமாம் இது.  



இதில் ஒரு பாடல் நல்ல பாடல்.  புலமைப்பித்தனின் பாடலுக்கு இளையராஜா இசை.



உமாராமணன், தீபன் சக்கரவர்த்தி குரலில் பாடல்.  உமாரமணன் குரலில் அழகிய திருப்பள்ளி எழுச்சிப் பாடலுடன் தொடங்கும் பாடல்...  



தீபன் சக்கரவர்த்தி -  பழம்பெரும் பாடகர் திருச்சி லோகநாதன் அவர்களின்  இளைய மகன்.  இவர் மூத்த சகோதரர் டி எல் மகாராஜனும் பாடகரே.   திருவருட்ச்செல்வர் படத்தில் டி எல் மகாராஜன் சிறுவயதிலேயே பாடி இருக்கிறார்.

நான் படம் பார்க்கவில்லை.  இந்தப் பாடலை மட்டும் ரசித்திருக்கிறேன்.



கூவின பூங்குயில்.. கூவின கோழி குருகுகள் இயம்பின.. 
இயம்பின சங்கம் யாவரும் அறிவறியாய்.. எ
மக்கெளியாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே ...  

செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு 
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு 
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு 
நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகிக் கொஞ்சும் கொஞ்சும் 
நித்தம் நித்தம் தித்திக்கும் முத்தம் முத்தம் 

வானவில்லில் அமைப்போம் தோரணம் 
வண்டு வந்து இசைக்கும் நாயனம் 

தாழம்பூவில் கல்யாண ஓலை தந்து 
தங்கத் தேரில் ஊர்கோலம் நாளை வந்து 

காதல் மணம் காண்போம் 
எண்ணம் போல் இன்பத்தின் வண்ணங்கள்.. 

அந்தி வந்து மலரும் தாமரை 
அங்கம் எங்கும் பொழியும் தேன் மழை 

கைகள் ரெண்டில் தோளோடு ஊஞ்சல் கட்டி 
ஆடச் சொல்லும் கஸ்தூரி மானின் குட்டி 

நாளை வரும் காலம் 
என்றென்றும் எங்களின் கைகளில்


115 கருத்துகள்:

  1. மகிழ்வான வணக்கம்!
    மகளிர் தின வாழ்த்துகள்! என்று சொல்லும் வெறும் வாழ்த்துகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. பெண் குழந்தகள் பாதுகாப்பாகவும் எல்லா பெண்களும் எந்தவிதக் கொடுமைகளும் இல்லாமல் மகிழ்வாக வாழ்ந்திட இச் சமூகம் முனைந்திட வேண்டும்.
    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்காலை வணக்கம். மகளிர் தின வாழ்த்துகள்.

      நீக்கு
    2. பழம்பெரும் பாடகர் திருச்சி லோகநாதன் - நடிகை CT ராஜகாந்தம் மகளின் இளைய மகன்.
      நடிகை CT ராஜகாந்தம்-காளி என் ரத்தினம் couples

      நீக்கு
    3. அப்படியா... ஓ மாற்றி விடுகிறேன்.

      நான் பார்த்த விக்கி தளத்தில் அப்படி இருந்தது!

      நீக்கு
    4. நானும் காலையில் பார்த்தப்போ சி.டி. ராஜகாந்தம் இல்லையேனு நினைத்துப் பின்னர் சொல்லாமல் விட்டிருக்கேன். கவனக்குறைவு!

      நீக்கு
  2. தீபன் சக்கரவர்த்தி பற்றி திருச்சி லோலநாதன் அவர்களின் மகன் என்று மட்டும் தெரியும் மற்ற தகவல்கள் புதுசு. பாட்டு அப்புறமா கேட்டுவிட்டு வருகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் பானு அக்கா. மகளிர்தின நல்வாழ்த்துகள்.​

      நீக்கு
  4. எ.பி. சகோதரிகளுக்கு மகளிர் தின நல்வாழ்த்துக்கள். இந்த நாளில் எங்களுக்கு தந்தையாக முன்னாலும், துணயாகவும், நட்பாகவும் இணைந்தும், மகனாகவும் சகோதரனாகவும் பாதுகாப்பாக எங்களுக்கு பின்னாலும் வரும் அத்தனை ஆண்களுக்கும் நன்றி🙏🙏🙏

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது தான் உண்மையான மகளிர் தின வாழ்த்து. நானும் இணைந்து கொள்கிறேன். என் வாயிலிருந்து வார்த்தைகளைப் பிடுங்கியது போல் இருக்கிறது.

      நீக்கு
    2. இது தான் உண்மையான மகளிர் தின வாழ்த்து. நானும் இணைந்து கொள்கிறேன். என் வாயிலிருந்து வார்த்தைகளைப் பிடுங்கியது போல் இருக்கிறது.

      நீக்கு
    3. பானுக்கா ஹைஃபைவ்! மீயும் அந்த வாழ்த்துகளில்!!! சூப்பர்ப்!

      கீதா

      நீக்கு
    4. //பாதுகாப்பாக எங்களுக்கு பின்னாலும் // - நல்லவேளை... உங்கள் வாழ்த்தைப் பார்த்து, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சிதான் அடைவாங்க. ஹாஹா

      நீக்கு
  5. மெல்லப் பேசுங்கள் படம் பற்றிக் கேள்விப் பட்டிருக்கேன். மற்றத் தகவல்களும் அறிந்தவையே!

    பதிலளிநீக்கு
  6. எல்லா நாட்களும் மகளிர் தினமே! பெண் இல்லாமல் எதுவும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா நாட்களும் சொல்லமுடியாது என்பதால் ஒரு நாளாவது சொல்ல முடியும் நாள்!! மகளிர்தின வாழ்த்துகள் அக்கா.

      நீக்கு
    2. ஸ்ரீராம் உங்கள் கருத்தை அப்படியே ஏற்கிறேன்.

      ஆனால் இந்த நாளும் கூட என்னால் வாழ்த்த இயலாத மன நிலை! அதன் பாதிப்பே என் முதல் கருத்து

      இன்று காலையில் எனக்கு ஒன் டு ஒன்னில் வாட்சப்பில் வந்த செய்தியின் அதுவும் இன்று காலை நடந்திருக்கும் மிகக் கேவலமான நிகழ்வின் பாதிப்பு..இதற்கு மேல் இங்கு சொல்ல இயலாது...

      கீதா

      நீக்கு
    3. கீதா சாம்பசிவம் மேடம்... இதை நான் பரிபூர்ணமா ஆமோதிக்கிறேன். பெண் இல்லாமல் குடும்பம் இல்லை. மனைவி, மகள் இரண்டும் இல்லாமல் 'குடும்பம்'னு ஒன்றைச் சொல்லமுடியாது. குடும்பத்தில் அவங்க பங்கு அளப்பரியது. அவங்களுக்கு சப்போர்டிவ் ஆக இருந்தாலே அதுவே போதும் ஆண்களுக்கு (சொல்றது ஈசியா இருக்கு. ஆனா அதை ப்ராக்டிஸ் பண்ணுவது ரொம்பக் கடினமா இருக்கு. 'நான்' என்பது ஒவ்வொரு செகண்டிலும் தலை தூக்கிடுது)

      நீக்கு
    4. //(சொல்றது ஈசியா இருக்கு. ஆனா அதை ப்ராக்டிஸ் பண்ணுவது ரொம்பக் கடினமா இருக்கு. 'நான்' என்பது ஒவ்வொரு செகண்டிலும் தலை தூக்கிடுது)//
      இதை ஒப்புக்கொவதே பெரிய விஷயம் நெல்லை. வாழ்த்துகள்!

      நீக்கு
    5. //எல்லா நாட்களும் சொல்லமுடியாது என்பதால் ஒரு நாளாவது சொல்ல முடியும் நாள்// சொல்வதை விட உணர்ந்து நடந்து கொள்வதே பெண்களை மதிப்பது என்பது தானே! பெண் இல்லாமல் எதுவும் இல்லைனு ஒரு பக்கம் சொல்லிக் கொண்டே பெண்களை மதிக்க வேண்டும் என்றும் சொல்லிக்கொண்டே இன்னொரு பக்கம் 68 வயசு மூதாட்டியைப் பாலியல் பலாத்காரம் பதினைந்து வயதுப் பையர்களால்! அதுவும் கூட்டுப் பலாத்காரம்! :(

      நீக்கு
  7. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    ஆமாம் எல்லா நாளும் நம் நாளே கீதா ம.

    இந்தப் பாட்டு மிகப் பிரபலம்.
    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா..

      இனிய காலை வணக்கமும் மகளிர்தின வாழ்த்துகளும்!

      நீக்கு
  8. காலை வணக்கம்.... பாடல் வரிகளைப் படித்ததுமே பாடலைக் கேட்டிருந்த ஞாபகம் வந்துவிட்டது. காணொளி பிறகு கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. தீபன் சக்கரவர்த்தியின் குரல் வித்தியாச மானது. மிகச்சில பாடல்களே பாடி இருந்தாலும் அத்தனையும் நன்றாக இருக்கும். இளையராஜா ட்ராக் பாடுவதற்கு அவரை ப்யன்படுத்தினார். சில பாடல்களை மிக நன்றாகப் பாடியதால் அதனையே வைத்து விட்டதாக படித்திருக்கிறேன். பூங்கதவே தாழ்திறவாய் அவர் பாடிய இன்னொரு ஹிட் பாடல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் டி என் முரளிதரன்... எனக்கும் பூங்கதவே தாழ்திறவாய் பாடல் மிகப்பிடிக்கும்.

      நீக்கு
  10. பாட்டின் சந்தமும் குரல்வளமும் ஈர்க்கிறது வெகுஜனத்துக்கு பாடல் புரியுமா தெரியவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜி எம் பி ஸார்... அவரவர்க்கு பிடித்ததை அவரவர் ரசித்து விடுவார்கள்.

      நீக்கு
  11. தீபன் அவர்கள் பாடிய இன்னொரு அழகான பாடல் - அரும்பாகி மொட்டாகிப் பூவாகி....

    அதிக பாடல்கள் இவருக்குக் கிடைக்காததன் காரணம் என்ன என்று தெரியவில்லை....

    பதிலளிநீக்கு
  12. தீபன் சக்ரவர்த்தி நல்ல குரல்வளம் உள்ளவர் அவர் தமிழன் என்பதால் ஓரங்கட்டப்பட்டார் (ஓரங்கட்டியது தமிழன் இளையராஜா)

    இளையராஜா மேலும் உயரத்தில் உயர்த்தி விட்டது
    எஸ்.பி.பி. (தெலுகு)
    கே.ஜே.யேசுதாஸ் (மலையாளி)
    பி.சுசீலா (தெலுகு)
    எஸ்.ஜானகி (மலையாளி)
    இவர்கள் கொடி கட்டி பறந்தது, சாதனை படைத்த பாடல்கள் எல்லாமே கல்லுளி மங்கன் இளையராஜாவால்தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல விஷயங்களை பூகோள கற்பனை கோடுகளுக்குள் அடைக்கக் கூடாது கில்லர்ஜி! கலைகளுக்கும், கலைஞர்களுக்கும் எல்லைகள் கிடையாது என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    2. கில்லர் ஜி சொல்வதைத் தான் நானும் கேள்விப்பட்டுள்ளேன்...

      கேலக்ஸியில் அதிகம் தட்டச்சு செய்ய இயலவில்லை...

      அவரது ஆளுமை ஆனதும் TMS அவர்களை தலையெடுக்க விடாமல் செய்தவர்....

      நான் தான் ராஜா.. எனக்குத் தூக்குங்க கூஜா.. - என்று தனக்குத் தானே பாடிக் கொண்டவர்..

      அதையெல்லாம் கடந்து தான் அவரை ரசித்துக் கொண்டிருக்கிறோம்....

      கலைஞர்களுக்கு எல்லை கிடையாது என்பதும் எம்மதமும் சம்மதம் என்பதும் நம் மீது திணிக்கப்பட்டவை....

      இட்லி சிறந்த உணவு... ந்னு சொல்லிக்கிட்டு ஊரு பூராவும் புரோட்டாக் கடையும் பிர்ர்ர்ர்ரியாணிக் கடையுமாக ஆனதல்லவா!... அதைப் போலத் தான் இதுவும்....

      ஆனாலும் இட்டிலி மாவிலும் கலப்படம் கட்டி அடித்தவன் தமிழன் என்பது வேறு விசயம்!....

      நீக்கு
    3. கில்லர்ஜி, துரை செல்வராஜு சார் - நான் கேள்விப்பட்டது, படித்தது... இளையராஜா ஆரம்பத்தில் கொஞ்சம் கூச்ச சுபாவமும், அவங்கள்லாம் பெரிய ஆளுங்க என்ற நினைப்பும் கொண்டிருந்தார். (புதுசா டீம்ல சேர்ந்தவனுக்கு தோனி, ஷர்மா லாம் மிகப் பெரிய ஆளுமைகள்தானே). அதுனால அவங்களை அப்ரோச் செய்யத் தயங்கினார் (யாரை? சுசீலா மற்றும் டி.எம்.எஸ்.). அப்புறம் இளையராஜாவும் வளரணும் இல்லையா? அதனால் அவருடைய பாடல்களின் சந்தத்தை எம்.எஸ்.வியிடமிருந்து வித்தியாசமாக வைத்து, எஸ்.பி.பி மற்றும் எஸ். ஜானகியை வைத்துப் பாடவைத்தார். அவரும் புதுப் புது குரல்களைத் தேடிப்போனார். (நம்மளே நியாயமா யோசித்தோம்னா, டி.எம்.எஸ், பெரும்பாலான பாடல்களுக்கு சரியா வந்திருக்கமாட்டார், நமக்கும் அந்த சமயத்தில், என்னடா திரும்பியும் பழமைய இருக்குன்னு தோணியிருக்கும்).

      அதே சமயம்... மற்ற மாநிலக் காரங்க, மொழியுணர்வு நம்மைவிட அதிகமாக இருக்கக்கூடியவங்க. அவ்வளவு காலம் (35+ வருடங்கள்) மலையாளத் திரையுலகுக்கு காண்டிரிபியூட் பண்ணின கமலஹாசனுக்கு கேரள அரசு சிறப்பு செய்தபோது, மலையாளத் திரைப்படச் சங்கத்திலிருந்து (மோகன்லால் மம்முட்டி....) யாரும் கலந்துகொள்ளவில்லை. தெலுங்கு நடிகர் சுரேஷ் (தமிழ்லதான் அவரது கேரியரே ஆரம்பம்..இங்கதான் காசு பார்த்தார்), பாஹுபலி மாதிரி பெரிய படத்துல தமிழ் நடிகர்களைப் போட்டிருக்கக்கூடாது, சத்யராஜ்/நாசருக்குப் பதிலா தெலுங்கு நடிகர்களையே போட்டிருக்கணும் என்று சொன்னவர்....

      இப்போகூடப் பாருங்களேன்... கூகிள்ல, அபிநந்தன் என்ன ஜாதின்னு 10 லட்சம் பேர் தேடியிருக்காங்க... அதுதான் 'தமிழர்கள்'

      நீக்கு
    4. @ கில்லர்ஜி: //’’கல்லுளிமங்கன் இளையராஜாவால்தான்..//

      ஏதோ ஒரு பெரிசு கொடுத்த ‘இசைஞானி’ பட்டத்தைவிட இது சுவாரஸ்யமா இருக்கு..!

      @ துரைசெல்வராஜு //..அவரது ஆளுமை ஆனதும் TMS அவர்களை தலையெடுக்க விடாமல் செய்தவர்....//
      டி எம் எஸ், பி.சுசீலா -தமிழைத் தெளிவாக, அழகாக உச்சரித்த இரு தரமான பாடகர்களை தூரத்தில் தள்ளியதில் அல்லது காணாமற்போகச் செய்ததில், கல்லுளிமங்கனின் ஆக்கபூர்வமான இசைப்பணி மெச்சத்தக்கது!

      நீக்கு
    5. >>> டி எம் எஸ், பி.சுசீலா -தமிழைத் தெளிவாக, அழகாக உச்சரித்த இரு தரமான பாடகர்களை தூரத்தில் தள்ளியதில் அல்லது காணாமற்போகச் செய்ததில், கல்லுளிமங்கனின் ஆக்கபூர்வமான இசைப்பணி மெச்சத்தக்கது.. <<<

      அன்பின் ஏகாந்தன் அவர்கள் சிறப்பாக சொல்லி விட்டார்கள் நன்றி...

      நீக்கு
    6. நன்றி கில்லர்ஜி, துரை செல்வராஜூ ஸார், ஏகாந்தன் ஸார்.

      நீக்கு
    7. //கலைகளுக்கும், கலைஞர்களுக்கும் எல்லைகள் கிடையாது என்று நினைக்கிறேன்//

      பானுமதி மேடம் ஒரு தமிழன் கேரளத்தில் கோமாளியாககூட நடிக்க முடியாது தெரியுமா ?

      இந்தியிலும், கன்னடத்திலும், தெலுகிலும், மலையாளத்திலும் கமல்ஹாசன் விரட்டப்பட்டது தமிழன் என்ற ஒரே காரணத்துக்காகத்தான்.

      ஆனால் எல்லோரையும் தூக்கி விடுவதில் தமிழர்களே ஏமாளி.

      நீக்கு
  13. அப்போது மிகவும் பிரபலமான பாடல். பானுப்ரியாவை பற்றி மட்டும் கூறியிருக்கிறீர்கள், கதாநாயகன் வசந்தை விட்டு விட்டீர்களே? இந்தப் படத்தில் ஹீரோவாகவும், சில படங்களில் வில்லனாகவும் நடித்தார், ஆனால், சினிமாவில் சோபிக்க முடியாததால், சின்னத்திரைப் பக்கம் ஒதுங்கி விட்டார்.

    பதிலளிநீக்கு
  14. அருமையான பாடல் பகிர்வு.
    கேட்டு ரசித்தேன், நன்றி.

    மகளிர்தின வாழ்த்துக்கள்.

    //எ.பி. சகோதரிகளுக்கு மகளிர் தின நல்வாழ்த்துக்கள். இந்த நாளில் எங்களுக்கு தந்தையாக முன்னாலும், துணயாகவும், நட்பாகவும் இணைந்தும், மகனாகவும் சகோதரனாகவும் பாதுகாப்பாக எங்களுக்கு பின்னாலும் வரும் அத்தனை ஆண்களுக்கும் நன்றி🙏🙏🙏//
    அருமையான வாழ்த்தும், நன்றியும்.

    நானும் பானுவுடன் இணைந்து வாழ்த்து சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. எனது கல்லூரி நாட்களில் வந்த படம்... பாடல் என்றும் இனிமை...

    பதிலளிநீக்கு
  16. பாடலை மட்டும் கேட்டால், நல்லா இருக்கு. காணொளி எப்பவுமே நல்லா இருக்காது. சரியா எடுத்திருக்க மாட்டாங்க பெரும்பாலான நல்ல பாடல்களை.

    பதிலளிநீக்கு
  17. கூவின பூங்குயில்...அக்காலகட்டத்தில் நான் அதிகம் ரசித்த பாடல்களில் ஒன்று. ஏன்? இப்போதும்கூடத்தான்.

    பதிலளிநீக்கு
  18. இந்தப் பாட்டைக் கேட்டிருக்கேன் ஸ்ரீராம் நல்ல பாடல்...பிடித்த பாடலும் கூட..ராகம் மத்யமாவதி....வழக்கமா நீங்க இங்க ஷேர் பண்ற பாடலை நிறைய தடவை கேட்பேன்...இன்னிக்கு முடியலை..

    உமா ரமணனை நேரில் தினமுமே சந்தித்திருக்கிறேன். ஒரு மாதம் அவர் யோகா கற்றுக் கொள்ள வந்த போது. யோகா வகுப்பில்.2006 கடைசியில் என்று நினைவு...இல்லை 2007 தொடக்கத்திலோ...ரொம்ப சிம்பிள். அப்புறம் கற்றுக் கொண்ட பின் ப்ராக்டீசுக்கு கொஞ்ச நாள் வந்தார் அப்புறம் நானும் பாண்டிச்சேரி போயிட்டேன்...அவருக்கு என்னை இப்போது நினைவிருக்குமா என்று தெரியவில்லை...அடையாரில் தான் இருக்கிறார்....நெல்லை இருக்கும் தெருவில்தான்...அப்போ இருந்தார்....இப்ப தெரியலை....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹையோ கீதா வடிவாக் கவனியுங்கோ இது பூபால ராகம்.

      [அவ்வ்வ்வ்வ்வ் மியூசிக்கே தெரியாமல்தானாம் பாக்கி அங்கிள் மியூசிக் டிரெக்டராக இருக்கிறாராம், அப்போ ராகமே தெரியாமல் அதிரா ஏன் பாட்டின் ராகம் கண்டுபிடிச்சுச் சொல்லக்கூடாஅதென்கிறேன்ன் ஹா ஹா ஹா:)]

      நீக்கு
    2. மத்தியமாவதி என்றாலே எனக்கு ஒரு இளையராஜா பாடல் நினைவுக்கு வரும் கீதா...

      "பூங்கொடியே கைவீசு... புதுமலர் வாய்பேசு"

      ஆனால் அது கிடைக்காத வீடியோ! அப்புறம் துள்ளித்துள்ளி நீ பாடம்மா, அப்புறம் என்ன சமையலோ பாடலில் "இலையைப்போடடி பெண்ணே வரிகள்!

      நீக்கு
    3. ஹலோவ் ஸ்ரீராம் அது ஜெய் அங்கிள் பாட்டு லிங்க் அனுப்பிட்டேன் :) ஹையா ஜாலி ஒன்லி ஆடியோ ஹாஹாஆ

      நீக்கு
    4. பார்த்தேன். நன்றி ஏஞ்சல். ஒருகாலத்தில் என்னிடம் கேசட்டில் இருந்தது அந்தப் பாடல். நீங்கள் கேட்டீர்களா?

      நீக்கு
  19. 90 களில் நமது நடிகர் திலகம் அவர்கள் செவாலியே பட்டம் பெற்ற பிறகு - கல்கத்தாவில் உலக திரைப்பட விழா ஆரம்பமானது... அந்த விழாவை நடிகர் திலகம் அவர்களைக் கொண்டு தொடங்குவதற்கு விழாக்குழுவினர் விரும்பிய போது வங்காளிகள் குறுக்கே விழுந்து தடுத்தார்கள்.. மீறினால் விழாவினையே புறக்கணிப்போம் என்று கூச்சலிட்டார்கள்...

    அதனால் கடுப்பாகிய தமித் திரையுலகம் அந்த விழாவினைப் புறக்கணித்த நிலையில் அந்த விழாவில் இங்கேயிருந்து இந்தக் காமாலு காசனும் ரேவதியும் சென்று வந்ததாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியிருந்தன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலாபானி என்ற திரைப்படத்தைக் கேரளம் கொண்டாடியபோது அதில் நடித்த மோகன்லால், பிரபு ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.. பிரபுவுக்கு சிறப்பு விருது கொடுக்கப்பட்டபோது அதைக் கொடுக்க விடாமல் தடுத்தனர்... அவருக்கு வழங்கப்பட இருந்த விருது அதே படத்தில் முரட்டு ஜெயில் வார்டனுக்கு அடிப்பொடியாக கடைசியில் கிறுக்கனாகிப் போவதாக நடித்திருந்த கேரள நடிகருக்கு வழங்கப்பட்டது நினைவில் உள்ளது..

      நீ அவல் கொண்டு வா... நான் உமி கொண்டு வர்றேன்.. ரெண்டையும் சேர்த்து ஊதி ஊதித் தின்போம்!... - என்பது தான் மதம் மற்றும் கலை இவற்றுக்கான நல்லிணக்கம்...

      நீக்கு
    2. ஹா... ஹா... கமல் கலைஞானி அல்லவா! அதுதான் சிவாஜியை மதிக்காமல் சென்று விட்டார்!

      நீக்கு
  20. பாட்டு ஆரம்ப வசனம் பார்த்து ஒருகணம் ஆடிப்போயிட்டேன்ன்ன் ஹையோ நான் போட நினைச்சிருக்கும் பாட்டோ என... ஆவ்வ்வ்வ் நல்லவேளை அதுவல்ல இது.

    இதுவும் அடிக்கடி ரேடியோவில் கேட்டு உருகிய பாடல் .. மிக அழகிய பாடல்.. ஆனா இன்றுதான் வீடியோப் பார்த்தேன்.. ஒரு ஆற்றங்கரையில கொஞ்ச செவ்வந்தி மாலைகளைக் கட்டி அதிலேயே குழந்தையும் பிறந்து வளர்ந்துவிட்டது... ஹா ஹா ஹா.. செலவே இல்லாமல் ஒரு பாட்டை எடுத்திருக்கிறார்கள் அந்நாளில்.. இப்போ எனில் இப்படி எடுத்தால் யாரும் படம் பார்ப்பினமோ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் நினைத்த பாடல் என்ன என்று ஜெஸ்பண்ணிப் பார்த்தால்...

      ஆனந்தக்கும்மி பாடலோ!

      நீக்கு
    2. உங்கட “ஜெஸ்” சிங் டப்பூஊஊஊஊ:) அப்பாடா இப்போதான் நேக்கு நிம்மதி:).

      ஆனந்தக்கும்மியில் “ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது...” பாட்டு கேட்டாலே மீ உருகிடுவேன்ன்.. அவ்ளோ விருப்பம் அப்பாடல்... சூப்பரா இருக்கும், ஆனா வீடியோவாகப் பார்த்தால் பெரிதாக எழுப்பமில்லை.

      நீக்கு
    3. நான் செய்த 'ஜெஸ்' ஆன்ந்தக் கும்மியடி கும்மியடி பெண்ணே வானமெல்லாம் கேட்கட்டும் பாடல்!

      நீக்கு
  21. எனகுப் பானுப்பிரியாவின் அழகு ரொம்பப் பிடிக்கும், ஆனா இது முதல்ப்படம் என்கிறீங்க, இதில் அவவின் அழகு பெரிதாக தெரியவில்லை, பின்னைய படங்களிலேயே ஜொலிப்பா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், நானே பதிவில் சொல்ல நினைத்தேன். இதில் பானுப்ரியாவைப் பார்த்தால் வடிவுக்கரசி வாசனை அடிக்கிறது! மேக்கப் கம்மி போல! அதிரா, பானுப்ரியா நடித்த டப்பிங் படம் 'சலங்கையில் ஒரு சங்கீதம்' அதன் பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?

      நீக்கு
    2. படப்பெயரே இப்போதான் அறிகிறேன், தேடிப் பார்த்தேன் மோகன் அங்கிள் ஜோடி..
      1.கனவே இது உண்மையா.. :- அழகிய பாடல் முன்பு கேட்டதில்லை.
      2. யாரோடு யாரோ...:- சூப்பர்.. முன்பும் கேட்டிருக்கிறேன்.
      3. நடராஜன் குடி கொண்ட...:- நல்லாயிருக்கு
      4. யாஆஅர் அழைத்தது- நல்லாயிருக்கு

      மொத்தத்தில் பாடல்கள் அனைத்தும் அருமை.. படம் பார்க்கும் ஆவல் வருதே:).

      நீக்கு
    3. இரண்டாவது பாடல் எனக்கு மிக...வும் பிடிக்கும்! அப்படியே தெலுங்கு சிதாரா பாடல்களும் கேளுங்கள்.

      நீக்கு
  22. தமிழ் திரையுலகின் முதல் பின்னணிப் பாடகராகிய திருச்சி லோகநாதன் அவர்களின் மகனாகிய தீபன் சக்ரவர்த்தியின் இயற்பெயர் - ராஜரத்தினம்.. திரையுலகிற்குப் பாடுவதற்கு வந்தபோது இயற்பெயரை மாற்றியவர் - இசைஞானி இளையராஜா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜரத்தினமா? தியாகராஜனா?

      நீக்கு
    2. ராஜ ரத்தினம்...மாபெரும் நாகஸ்வரக் கலைஞரான திருவாவடுதுறை ராஜரத்னம் பிள்ளை அவர்களின் நினைவாக சூட்டப்பட்டது என்றார்கள்..

      நீக்கு
    3. திருச்சி லோகநாதனின் (சில ஸ்டன்னிங் பாடல்களைப் பாடிய அருமையான பாடகர்) மகன் தான் தீபன் சக்ரவர்த்தி என இப்போதுதான் அறிகிறேன். நன்றி

      நீக்கு
  23. பாருங்கோ இன்று பெண்கள் தினத்தில பாடல் தினமும் வந்திருக்கு, ஆனா எங்களுக்காக ஒரு பாடல் போடாமல் விட்டிட்டார் ஸ்ரீராம்:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. அதுக்குப் போராடாமல்.. எல்லோரும் சிரிச்சுக்கொண்டிருக்கிறீங்க கர்ர்ர்ர்:)).. அதிராவைப் போல இப்பூடி யாரும் துணிஞ்சு களம் குதிச்சுப் போடார மாட்டேங்கிறீங்க..:)).. நான் தேம்ஸ் கரையில் ஆரம்பிக்கிறேன் உண்ணாவிரதம்.. காலை 9 மணிக்குத்தான் ஆரம்பிப்பேன்:)) எல்லோரும் வந்து ஜொயின் ஆகுங்கோ.

    பாருங்கோ நெ.தமிழன் கூட அண்ணியையும் மகளையும் பற்றி மட்டும்தேன் மகளிர் தினத்தில பேசுறார்ர் நாங்க பற்றிப் பேசல்ல:)).. அவரின் வலையுலக அன்புச் சகோதரிகள் ..மற்றும் முக்கியமாக அன்பு அக்கா “கீதா”.., அன்பு ஆன்ரி “அஞ்சு”, அன்புத் தங்கச்சி “அதிரா”:) ஹா ஹா ஹா வுக்கெல்லாம் வாழ்த்துச் சொல்லவே இல்லையே:))..

    ஆங்ங்ங்ங் அஞ்சூஊஊ குழைஜாதம் ரெடியா?.. உண்ணாவிரத மேடைக்குக் கீழ ஒளிச்சு வையுங்கோ:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்கள் தினம் என்பதால்தான் முதலில் பெண்குரல் ஒலிக்கும் பாடலைப் பகிர்ந்தேன் அதிரா!

      நீக்கு
    2. ஆவ்வ்வ்வ்வ்வ்வ் என்னா ஒரு ஜமாளிப்புக்கேஷன்.. நோஓஓஓஓஓஒ நாங்க உண்ணாவிரதம் ஆரம்பிக்கப் போறோம்ம்.. எங்களை ஆரும் தடுக்காதீங்கோ.. இங்கின அதிகம் கொமெண்ட்ஸ் போட்டுக் கும்மி அடிப்பது நம்பாலார்தான்:).. அப்பூடி இருக்கும்போது நமக்கு ஒரு பாட்டு போடாமல் சே..சே.. என்னால முடியல்ல.. ஹையோ பாருங்கோ.. ஒரு பெண்ணினம்கூட மீக்கு ஜப்போர்ட்டுக்கு இங்கில்லை:)) ஹா ஹா ஹா இப்பூடி ஏதும் எனில் என் செக்கும்:) வர மாட்டா ஒளிச்சிடுவா.. கர்ர்ர்ர்ர்ர்:))..

      சரி விடுங்கோ.. நடந்தவை யாவும் நடந்தவைதானே:)... போனாப்போகுது அடுத்த வருடமும் வெள்ளியில வருதா எனப் பார்ப்போம்:).

      நீக்கு
    3. ஹலோ உங்களுக்கெல்லாம் பூனைகள் தினம் மட்டுமே

      நீக்கு
    4. ஷ்ஹ்ஹ் டோன்ட் டிஸ்டர்ப் மீ :) நான் தயிர்சாதமும் lololikka ஊறுகாயும் ஈட்டிங் :)

      நீக்கு
    5. //ஹலோ உங்களுக்கெல்லாம் பூனைகள் தினம் மட்டுமே//

      ஹா... ஹா... ஹா...

      நீக்கு
    6. ஆம் அதிரா... எபி வாட்சப்பில் பகிர்ந்தேன். இங்கு சொல்ல விட்டுப்போய்விட்டது. அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள். ஆண்களைவிட உங்களுக்கு அடுத்த தலைமுறையை நல்லா கொண்டுவருவதில் நிறைய பங்கு இருக்கிறது. அதனைச் செவ்வனவே செய்ய உங்களுக்கு (அனைத்து மாதர்குலத்திற்கும்) இறையருள் கிட்டட்டும்.

      நீக்கு
    7. @நெல்லைத் தமிழன் thanks /this is for you :))


      https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSt9CngZQ8wQXnRAnLp9_QQJeMicVv-FXH6tFRiuNIWfo0L7sYP

      நீக்கு
    8. https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSt9CngZQ8wQXnRAnLp9_QQJeMicVv-FXH6tFRiuNIWfo0L7sYP

      //

      நோஓ மீ நெல்லைத்தமிழனுக்காக “பி பப்பா புடிங்” செய்திருக்கிறேன் ஹா ஹா ஹா எல்லோரும் வாங்கோ ஆப்புட:))

      நீக்கு
    9. நெல்லைத்தமிழன் பாவம் நீங்க :) ஒளிஞ்சிக்கோங்க அது உங்களை நோக்கி கமிங் :)

      நீக்கு
    10. ஏஞ்சலின் - படத்தைப் பார்க்க விட்டுப்போயிடுச்சு. மைசூர்பாக்-பார்க்கவே சூப்பரா இருக்கு. (ஆனா நீங்க பண்ணினதுன்னு சொன்னீங்கன்னா, அது என் மேல் ஆயிரம் ஹிரோஷிமா அணுகுண்டு விழுந்த எஃபெக்ட் தந்துடும்)

      கண்ட்ரோல் இல்லாமல் ஸ்வீட்ஸ் நிறைய சாப்பிடுகிறேன். என்ன பிரச்சனைல கொண்டுபோய் விடப்போகுதோ...

      அதிரா - ஏஞ்சலின் நல்ல சுவையா இருக்கறதை எனக்குக் கொடுத்திருக்காங்க. நீங்க பண்ணின புட்டிங் பற்றி, நீங்களே நல்லா இல்லைனு சொல்லும்போது (நல்லா இருக்குன்னு சொன்னாலே, இது 'காக்கைக்கு தன் குஞ்சு' போலவா என்று மனசுல தோணும்)....... எங்களை 'சாப்பிடக்' கூப்பிடறீங்களோன்னு பார்த்தா, நாங்க சின்னக் குழந்தைல சொல்றமாதிரி 'ஆப்புட' என்று சொல்றீங்க. அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? 'அகப்பட' என்பதைத்தான் நாங்கள் சின்னவயதில் (இப்போவும் குழந்தைகள்) 'ஆப்பட' என்று சொல்லும். சரிதான்.... நாங்கதான் உங்களுக்கு அகப்பட்டோமா?

      நீக்கு
    11. @ நெல்லைத்தமிழன் நான் நட்புக்களுக்கு ((ட்ரோகம் :) இது பூஸ் மொழி ))..துரோகம் செய்ய மாட்டேன் :) அதாவது நானே செஞ்சதை கொடுத்து எதுக்க்க்கு :))))))) அதான் ஸ்ரீகிருஷ்ணாஸ் லருந்து எடுத்துவந்தேன் .

      ஆப்பிட =சாப்பிட ,ஆம்பார் =சாம்பார் ,சுசி =ருசி பயமொயி =பழமொழி டெல்லுங்க =சொல்லுங்க இதெல்லாம் பூஸ் மொழிகள் பூஸ் டிக்ஷ்னரில இருக்கு :))))))))))))))

      நீக்கு
    12. நானே அப்பப்போ என்னை refresh செஞ்சுக்கறேன் இல்லின்னா என் கொஞ்சூண்டு தமிழும் மறந்திடும் :))

      நீக்கு
  24. இந்த பாட்டு விவித்பாரதியில் ஸ்கூல் கிளம்பும் நேரம் போடுவாங்க கேட்டுட்டே போவோம் :)
    பானுப்ரியானாலே பரதம்தான் எனக்கு நினைவுக்கு வரும் .இந்த பாட்டு ரொம்ப பரிச்சயம் அடிக்கடி கேட்டதால் .
    இப்போ சமீபத்தில் ஒரு தொகா நிகழ்வில் பார்த்தேன் பயங்கர வித்யாசமா இருக்காங்க

    பதிலளிநீக்கு
  25. நல்ல பாடல். இதே படத்தில் வரும் கேளாயோ என்ற பாடலும் கேட்க சிறப்பாக இருக்கும்.

    கில்லர்ஜீ மற்றும் துரை செல்வராஜூ இருவரும் இளையராஜா பற்றிய கூறிய கருத்துக்கள் உண்மையே. இரா சிலரை மட்டுமே வேண்டுமென்றே புகழை நோக்கித் தள்ளினார். உதாரணம் ஜென்சி, ஷைலஜா, இருவருமே திறமையான பாடகர்கள் இல்லை. இதுபோல நிறையவே இருக்கிறது சொல்ல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேளாயோ பாடல் கேட்ட நினைவில்லை. கேட்டுப்பார்க்கிறேன் காரிகன் ஸார். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
    2. @காரிகன் வாணி ஜெயராமை இளையராஜா புறக்கணித்ததற்கும் டி எம் எஸ்சை அவமானப்படுத்தியதற்கும் என்றேனும் வருந்துவார்

      நீக்கு
  26. என் கருத்திற்கு நிச்சயமாக கிலர்ஜியிடமிருந்து மறுப்பு வரும் என்று தெரியும். யூ டூ ஏகாந்தன் சார் அண்ட் துரை சார்?
    டி.எம்.எஸ். தமிழை நன்றாக உச்சரிப்பார் சரி, ஆனால் அவரும் தமிழர் கிடையாது, சௌராஷ்டிரர்! மேலும் 70களின் இறுதியிலிருந்தே அவரால் பாட முடியவில்லை. தொண்டையால் பாடியதை விட மூக்கால்தான் அதிகம் பாடினார். மேலும், சிவாஜி, எம்.ஜி.ஆருக்கு அவர் குரல் பொருந்தியதைப் போல மற்ற ஹீரோக்களுக்கு பொருந்தவில்லை. அந்த காலத்திலேயே ஜெமினி, முத்துராமன் போன்றவர்களுக்கு பி.பி.எஸ்., அல்லது ஏ.எல்.ராகவன் போன்றவர்கள்தான் பாடுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பானு அக்கா.

      நீக்கு
    2. பானுமதி மேடம் நான் சொல்ல வருவது கல்லுளி மங்கன் கடைசிவரை புதிய பாடகர்களை உருவாக்கி விடவில்லை என்பதே...

      ஏ.ஆர்.ரகுமான் குறுகிய காலத்தில் பலரையும் வாழவைத்தார் என்பதே உண்மை.

      அதேநேரம் இவரது இசை தற்காலிகமானது ஆனால் கல்லுளி மங்கன் மறைந்தும் வாழ்வார் இதுவும் உண்மையே...

      நீக்கு
    3. @ பானுமதி வெங்கடேஸ்வரன் : //..அவரும் தமிழர் கிடையாது, சௌராஷ்டிரர்!//

      கலைஞர்களுக்கு ரிஷிமூலம் நதிமூலம் பார்க்கவேண்டாம் என்பது சரிதான்! இருப்பினும், டிஎம்எஸ், பி.சுசீலா ஆகியோரை அவர்கள் தமிழர் என்று நினைத்து நான் புகழவிவில்லை.

      மேலும், தமிழின் இலக்கிய எழுத்தாளர்களில் விமலாதித்த மாமல்லன் ஒரு சௌராஷ்டிரர். திலீப் குமார் ஒரு குஜராத்தி! (தாத்தா காலத்திலிருந்து சென்னையிலே செட்டிலாகி, தமிழை ஆர்வத்தோடு படித்து, எழுத்துலகில் புகுந்தவர்.) அதனால் இருவரும் தமிழுக்கு ஒன்றும் செய்யவில்லை எனலாமா? இல்லை இருவரும் தமிழரில்லை எனப் புறக்கணிப்போமா!

      இளையராஜாவின் இசை மேதமையை நான் குறை சொல்லவில்லை. அவர் செய்த வேறுவித இசைப்பணி பற்றியே குறிப்பிட்டேன்!

      நீக்கு
    4. அன்பின் திரு கில்லர் ஜி அவர்களும் அன்பின் திரு ஏகாந்தன் அவர்களும் சொல்லியதை விட நான் என்ன சொல்லிவிட முடியும்...இசையால் இளையராஜா ந்ரம்பியிருந்தாலும் நல்ல பாடகர்களை அவர் புறக்கணித்தார் எனபதே உண்மை... 80 க்கு முன்பாக திரு சீர்காழி கோவிந்தராஜன் அவர்களைப் பற்றி அவர் சொல்லிய ஏதோ ஒன்று பெரும் பிரச்னைக்குள்ளானது.... சீர்காழியார் எளிதாகக் கடந்து சென்று விட்டார்... திரு ஏகாந்தன் அவர்களுக்கு இது நினைவிருக்கும் என எண்ணுகிறேன்....

      நீக்கு
    5. இந்த சீர்காழி சம்பவம் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். விபரம் தெரியவில்லை. சீர்காழி இந்த மாதிரி அலம்பல்களை எளிதாகக் கடந்து சென்றுவிடக்கூடியவர்தான். ஒரு தனிமனிதர் என்கிற நிலையில் அவர் பக்குவமானவர் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். வாரியாரே புகழ்ந்திருக்கிறார் என்றால் வேறு சாட்சி தேவையில்லை.

      நீக்கு
  27. படமும் பார்த்திருக்கிறேன். பாட்டும் கேட்டிருக்கிறேன். நல்ல பாடல் ஸ்ரீராம்ஜி.

    கொடுத்திருக்கும் தகவல்கள் குறிப்பாக டைரக்டர், நடிகர்கள் பார்த்ததும் நினைவுக்கு வந்தது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  28. மகளிர் தின வாழ்த்துகள் அனைத்து சகோதரிகளுக்கும்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  29. https://tenor.com/view/tom-and-jerry-dancing-happy-cheerful-gif-11693236

    பதிலளிநீக்கு
  30. காலை வணக்கம் ஸ்ரீராம்.

    இனிய பாடல். எனக்கும் பிடித்த பாடல். பலமுறை கேட்டு ரசித்திருக்கிறேன்.

    இப்போதும் கேட்டேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!