திங்கள், 11 மார்ச், 2019

"திங்க"க்கிழமை : பருப்பு பிடி கொழுக்கட்டை - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி

பருப்பு பிடி கொழுக்கட்டை


எங்க அம்மா வீட்டில் நான் உப்புமா கொழுக்கட்டை சாப்பிட்டதே ரொம்ப அபூர்வம்னு நினைக்கறேன். அவங்க அரிசி உப்புமாதான் பண்ணுவாங்க. என் மனைவி, ரெட் கொழுக்கட்டைனு முதல்ல பண்ணுவா. அது என்னவோ எனக்கு உப்புமா கொழுக்கட்டை மாதிரி சாஃப்டா இல்லைனு தோணும். ஆனாலும் நல்லாத்தான் இருக்கும். 

ஓரிரு மாதங்களுக்கு முன்பு (தொடர்ந்து சில நாட்கள்-இப்போ எழுதும்போது எனக்கு சிரிப்பாத்தான் வருது, வெயிட் போடுதுன்னு கோபத்தில் இருந்தபோது… அதாவது காலைல சாப்பிட்டுட்டு அப்புறம் 4 மணிக்குத்தான் அவள் ஏதேனும் கொண்டுவரணும், என்ன பண்ணணும்னு நான் சொல்லமாட்டேன்.. 

இப்படி சில நாட்கள் போனது. என்ன கொடுத்தாலும் சாப்பிட்டுடுவேன், ஆனா கொஞ்சமாத்தான் தரணும். அப்புறம் இரவுக்கு எதுவும் சாப்பிட மாட்டேன்) ஒரு நாள் 4 பருப்பு கொழுக்கட்டைகளும் கொஞ்சம் மல்லி+மிளகாய் காரச் சட்டினியும் தந்தாள். அன்றைக்கு எனக்கு ரொம்பவும் பசி.  ரொம்ப ருசியா வேற இருந்ததா, நல்லா சாப்பிட்டேன்! இன்னும் 4 கொடுத்தாலும் சாப்பிட ஆசைதான். என்ன பண்ண. நான் கோபமா இருக்கேனே…  (ஹா...  ஹா...  ஹா) நான் இன்னும் வேணும்னு கேட்டால், வெயிட் ஏறினது என்னாலதான்னு ஒப்புக்க வேண்டியிருக்குமே… 

அப்புறம் சில நாட்கள் கழித்து, ‘அன்னைக்கு பண்ணின அதே கொழுக்கட்டையும், அதே மாதிரி சட்னியும் பண்ணித்தா. இந்த முறை 6 ஆவது நான் சாப்பிடுவேன் என்றேன். எ.பிக்கு அனுப்பலாம்னு படம் வேற எடுத்தேன். அன்றைக்கு மிகவும் திருப்தியாகச் சாப்பிட்டேன்.

இப்போல்லாம் எனக்கு அரிசி உப்புமா கொழுக்கட்டையோ இல்லை பருப்பு கொழுக்கட்டையோ செய்வது ஜுஜுபி வேலை.. நானே கட கடவெனச் செய்துடுவேன். இருந்தாலும் என் மனைவி செய்துகொடுத்து நான் சாப்பிடும்போது வரும் ருசியே தனிதான். (இப்படிச் சொல்லித்தானே ஆண்கள், சமையல் வேலையிலிருந்து தப்பித்து மனைவியை வேலை வாங்கறாங்க ஹிஹி).

இந்த வாரம், பருப்புப் பிடி கொழுக்கட்டை உங்களுக்காக.

செய்முறை

பச்சரிசி 2 கப்
துவரம் பருப்பு ½ அல்லது ¾  கப்
3 சிவப்பு மிளகாய்
கொஞ்சம் பெருங்காயம்
தேவையான அளவு உப்பு
½ கப் தேங்காய் துருவல்

திருவமாற
கடுகு, கறிவேப்பிலை-சிறிதாக கட் பண்ணினது

சட்னி செய்ய
கொத்தமல்லி தழை கொஞ்சம்
2 பச்சை மிளகாய்
உப்பு

முதல்ல அரிசி, பருப்பை நன்றாக களைந்தபிறகு, ஊற வைங்க. அதன் மேலேயே மிளகாயையும் போட்டுடுங்க. நான் பெருங்காயத்தையும் இப்போவே அரிசியோட ஊறவைத்துவிடுவேன்.



நாலு மணி நேரம் கழித்து ஊறினதை கரகரவென அரைத்துக்கொள்ளவும். தேவையான உப்பு சேர்த்துக்கோங்க.  தோசை மாவு பதத்தில் அரைக்கணும். ரொம்ப கெட்டியா இருக்கக்கூடாது.



அரைத்த மாவில் தேங்காய் துருவலைப் போட்டுக் கலக்கிக்கொள்ளுங்கள்.



கடாய்ல எண்ணெய் கொஞ்சம் ஜாஸ்தியா விட்டு, கடுகு, கருவேப்பிலை திருவமாறினதும், அரைத்த மாவை கடாய்ல விட்டு கிளறுங்க.  நல்லா கிளறும்போது தண்ணீர்ப்பதம் குறைந்துவிடும். மாவும் கொஞ்சம் வெந்துவிடும்.



அடுப்பை அணைத்துவிட்டு மாவை சிறிது ஆறவிடவும். பிறகு ஒரு பாத்திரத்தில், இந்த மாவை, கொழுக்கட்டை போலப் பிடித்து அடுக்கி, குக்கரில் இட்லி வேக வைப்பது போல, 10 நிமிடம் வேகவைக்கவும்.



கொத்தமல்லி தழையைச் சுத்தம் செய்துவிட்டு, அதை, பச்சை மிளகாய், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வழுமூன நைசாக மிக்சியில் அரைத்துக்கொள்ளவும். இந்தச் சட்னி கொஞ்சம் நீர்க்க இருக்கணும். கொழுக்கட்டையோட கொஞ்சமா தொட்டுச் சாப்பிடும்படி இருக்கணும்.



அவ்வளவுதான்… கொழுக்கட்டை ரெடி. சட்னி ரெடி.  நமக்கு உணவைக் கொடுத்த இறைவனுக்குப் படைத்துவிட்டு சாப்பிடவேண்டியதுதான்.



இதுல முக்கியம், எவ்வளவு துவரம்பருப்பு போடறது என்பதுதான். அதிகமாப் போட்டால்  கொழுக்கட்டை சாஃப்ட்டா இருக்காது. கெட்டியாயிடும். அதுபோல அரைத்த மாவு,  தோசை மா பதத்துல இருக்கணும். அப்படி தோசைமாவு பதத்துல இருக்கறதைத்தான் கிளறணும். ரொம்ப கெட்டியா மாவை அரைத்தால் சாஃப்ட்னெஸ் இருக்காது. சாப்பிடும்போது மென்னைப் பிடிக்கும் (இதுக்கு எத்தனை பேருக்கு அர்த்தம் தெரியுமோ) (மென்னியைப் பிடிக்கும் என்றிருந்தால் எல்லோருக்கும் புரியலாம்!)


  இந்தச் செய்முறையையே கொஞ்சம் மாற்றி, நான் குனுக்கு செய்வேன் (நான் தான்). அது ரொம்ப நல்லா இருக்கும். (என் பையனுக்குச் செய்துகொடுத்திருக்கேன்… இப்போ எழுதும்போது மனசு கனமா இருக்கு. நான் வெளிநாட்டுல இருந்தபோது 6 வருஷத்துக்கும் மேல அவங்களோட எல்லாம் இருக்கலை. பையனின் 8வது வகுப்பிலிருந்து. இப்போ இங்க வந்தப்பறமும் அவன் இன்னொரு நகரத்தில் ஹாஸ்டல்ல இருக்கான்).  குனுக்கு செய்முறையை விரைவில் எழுதறேன்.

இந்த உணவுல ஒரு அலர்ஜியும் வராது. அதனால எல்லாரும் செய்துபார்க்கலாம்.

செய்துவிட்டு படம் அனுப்புங்க. (உடனே ‘அதான் நான் எப்போதும் செய்யறதாச்சே”, “இதான் எனக்குத் தெரியுமே” என்று பின்னூட்டங்களில் எழுதுவது தடை செய்யப்படுகிறது. Especially கீதா ரங்கன், கீதா சாம்பசிவம் மேடம்.  நீங்க ரெண்டுபேரும் வேறமாதிரி யோசிச்சுத்தான் பின்னுட்டம் எழுதணும். ஹா ஹா ஹா)

அன்புடன் 
நெல்லைத்தமிழன்

137 கருத்துகள்:

  1. ஆஹா நெல்லையின் ரெசிப்பியா....கலக்குகிறார்...

    காலை வணக்கம்...எல்லோருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம், கீதா அக்கா/ கீதா மற்றும் அன்பினோர் அனைவருக்கும் நல்வரவு....

    பதிலளிநீக்கு
  3. அதாவது காலைல சாப்பிட்டுட்டு அப்புறம் 4 மணிக்குத்தான் அவள் ஏதேனும் கொண்டுவரணும், என்ன பண்ணணும்னு நான் சொல்லமாட்டேன்.. //

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் டுஊஊஊஊஊஊஊஊஒ மச்!! ஹா ஹா ஹா ஹா என் அண்ணனா இருந்துட்டு இப்படி கோபப்படலாமோ! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரங்கன் - சமீபத்துல வாட்சப்ல நம்ம பேருன் மூன்றாவது எழுத்தை வைத்து (ஆங்கில) நம் குணத்தைப் போட்டிருந்தார்கள். எனக்கு unpredictable என்று போட்டிருந்தது. என் மனைவி, “ஆமாம் ஆமாம்” என்கிறா. உங்கள் எழுத்து E என்றால் Good But Hurts என்றும் T னா genuine என்றும் இருக்கு. சரியா? ஹாஹா

      நீக்கு
  4. நான் கோபமா இருக்கேனே…//

    சாப்பாட்டுல எல்லாம் கோபத்தைக் காட்டி அதுவும் டேஸ்டி பருப்பு பிடி கொழுக்கட்டை.... நாக்குக்கும் வயித்துக்கும் வஞ்சனை பண்ணுவாங்களோ!!! ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரங்கன்... நான் திருமணத்துக்கு முன்னால, சின்ன வயசிலிருந்தே எங்க அம்மாட்ட திடும்னு கோபப்படுவேன். அப்புறம் அன்றைக்கு சாப்பிடமாட்டேன். எவ்வளவு கெஞ்சினாலும் சாப்பிடமாட்டேன். எவ்வளவு பசி என்றாலும். இந்தக் கோபம்லாம் பிறவிக் குணம் போலிருக்கு. எங்க அம்மாவும் 'வயித்துக்கு வஞ்சனை' பண்ணலாமோன்னுதான் கேட்பா.

      காரணம்லாம் உப்புப் பெறாததாகத்தான் இருக்கும். ஹாஹா.

      நீக்கு
    2. எங்க வீட்டில் கோவித்துக் கொண்டு சாப்பிடாமல் எல்லாம் இருந்துட முடியாது! அதோடு நான் சாப்பாட்டில் கோபத்தைக் காட்டியதும் இல்லை. ஏதோ ஒரு வாயாவது அள்ளிப் போட்டுக் கொண்டு விடுவேன். அன்னலக்ஷ்மியை உதைத்துத் தள்ளக் கூடாது என என் பெரியப்பா சொல்லுவார்!

      நீக்கு
  5. காலை வணக்கம் எல்லோருக்கும். இன்று பிரயாணம். அதனால பதில் ஐபேட்லதான் கொடுப்பேன்னு நினைக்கறேன். இல்லைனா மொபைல்லயும் கொடுக்கலாம். எழுத்துப்பிழை இருக்கும். அதுனால யாரும் 'தமிழ்ல டி' என்று சொல்லிக்கிட்டு என்கிட்ட சண்டைக்கு வராதீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... நெல்லை வேறூர் செல்வதால் பதில்கள் பின்னர் கிடைக்கும் என்று அறிவிப்பு வெளியிடலாம் என்று வந்தால்......!!!

      நீக்கு
    2. ஶ்ரீராம்.. ரெயில் பிரயாணத்தில் மொபைல் மூலம் தட்டச்சுகிறேன். அப்புறம் எப்போ நேரம் கிடைக்கும்னு தெரியலை

      நீக்கு
  6. இதைத் தானே காரக் கொழுக்கட்டை...ன்னு சொல்றது!....

    உன்னோட கைப்பக்குவம் என்னோட அக்காவுக்கும் வராது... ந்னு அளந்து விட்டா - அவ்வப்போது அப்பளக் குழவி அடியில இருந்து தப்பிக்கலாம்..ந்னு இங்கே ஒரு குருவி கத்துது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் எனக்கும் என்ன கவலை துரை செல்வராஜு சார்.. நாமதான் கரண்டி பிடிக்கத் தயங்காதவர்களாச்சே.

      ஆமாம்.. அங்கு வித விதமாகப் பண்ணத் தோன்றுகிறதா இல்லை மோர்சாதம், ஊறுகாய்/துவையல் சாப்பிட்டுட்டு அக்கடான்னு ரெஸ்ட் எடுப்போம்னு தோணுமா?

      நீக்கு
    2. அதையேன் கேக்கறீங்க.... முன்பு இருந்த இடத்தில் ஓரளவுக்கு நல்ல சமையல் அறை... இப்போது ஓட்டை விழுந்த அட்டைப் பெட்டி மாதிரி மிகவும் ஒடுக்கமாகிப் போனது....அடுத்த ஆள் வருவதற்குள் சமையலை முடிக்கத் தோன்றுகிறது....

      நீக்கு
    3. ரொம்ப கஷ்டம்தான் துரை செல்வராஜு சார். நீங்களாவது கொஞ்சமேனும் அட்ஜஸ்ட் பண்ணிப்பீங்க. எனக்கு இன்னும் கஷ்டம். 5 ஸ்டார்ல மத்தவங்க நான் வெஜ் சாப்பிடும்போது முடிந்த அளவு முகம் சுளிக்காமல் இருக்கவே எனக்கு பலப் பல வருடங்கள் ஆனது. புதன், வெள்ளில என் கார் நிறுத்தியிருக்கும் கேரேஜ் பக்கத்துல பிலிப்பினோ, fishஐ எதுலயோ பொறிப்பாங்க (சட்னு ஞாபகம் வரமாட்டேங்குது). நுழையறதிலிருந்து காரை எடுக்கறவரை மூச்சு விடாம கஷ்டப்படுவேன். வாமிட் வராத குறைதான்

      நீக்கு
    4. அந்த மாதிரி கஷ்டங்கள் இங்குள்ள சமையலறையிலும் உண்டு... குறிப்பாக பங்ளாதேஷிகள்...

      அதெல்லாம் அவரவர் வளரியல்பு என்று இருந்து விடுவேன்....

      இங்கே தங்கும் அறைக்குள்ளேயே மூன்று நாளான இறைச்சிக் குழம்பை மீண்டும் கொதிக்க வைத்துக் கொண்டிருக்கிறான் - கூட இருக்கும் புறச்சமயத்தான்...

      அவன் இந்த அறைக்கு வந்தபோது என்னால் உங்களுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது என்று சொல்லி விட்டேன்... அதொன்றுக்காக மேலிடத்தில் முறையிடால் பொறுமை காத்திருக்கிறேன்... மீறி முறையிட்டாலும் அவனை ஒன்றும் செய்ய முடியாது.. ஏன் எனில் அவனிடம் ஒரு ஆயுதம் இருக்கிறது... இவன் காஃபிர்.. அறைக்குள் உருவ வழிபாடு செய்கிறான்.. என்று சொல்லி விட்டால் போதும்...

      இத்தனைக்கும் அவன் தமிழ்நாட்டுக் காரன்... மற்ற அறைகளில் எனது கடமையைச் செய்ய முடியவில்லை.. குடிக்கிறார்கள்.. புகை பிடிக்கிறார்கள்.. என்று சொன்னதனால் இரக்கப்பட்டு எனது அறைக்கு அழைத்து வந்தேன்...

      அதற்குத் தான் அவன் சிறப்பு செய்கிறான்...

      சின்ன வயதாக இருந்தால் ஏதாவது புத்தி சொல்லலாம் .. மூன்று க....தை வயசுக்கு மேல் 50 ஆகிறது....

      என்ன செய்வது...

      நீக்கு
  7. இந்தக் கொழுக்கட்டை நான் ஒரு முறை இன்சிடென்டலா கத்துக் கொண்டது...எல்லாம் திப்பிச வேலைதான். ப அ து ப போட்டு து ப அடைன்னு செய்ய நிறைய அரைத்து விட்டேன். அப்புறம் அதை கொஞ்சம் வதக்கி கொழுக்கட்டை போல செய்ய வீட்டில் நன்றாக சேல் ஆச்சு... அப்புறம் பிடி கொழுக்கட்டை என்றே செஞ்சதுண்டு...முழுவதும் வாசித்துவிட்டு வருகிறேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கொழுக்கட்டை உசிலியாகவும் உருமாறும் எங்க வீட்டுல சில சமயம் ஹா ஹா ஹா ஹா...

      கீதா

      நீக்கு
    2. உங்க வீட்டுக்கு அன்றைக்கு வந்தபோது நீங்கள் எனக்கு சாப்பாட்டில் போட்ட பீன்ஸ் பருப்புசிலி, அடை மாவுலேர்ந்து திப்பிச வேலையா இல்லை பருப்புக் கொழுக்கட்டையிலிருந்தா?

      கீதா என்ற பெயர் வச்சிருக்கறவங்க என்ன செய்து போட்டாலும் எதிலிருந்து இது உருமாறியிருக்கும் என்று யோசிக்க வைப்பீர்கள் போலிருக்கே

      நீக்கு
    3. ஹலோ நெல்லை உங்களை அண்ணேனு சொன்னதுக்காக இப்படியா போட்டுக் கொடுக்கனும் ஹா ஹாஹாஹஹா....தம்பி நீங்க எப்ப எங்க வீட்டுக்கு எனக்குத் தெரியாம வந்தீங்கனு ரொம்ப நேரமா யோசிச்சுட்டு இருக்கேன்...!!!!!! ஹா ஹா ஹா வீட்டுக்கு வராமயே இப்படியா?!!ஆஆஆஅ

      கீதா

      நீக்கு
    4. உடனே ‘அதான் நான் எப்போதும் செய்யறதாச்சே”, “இதான் எனக்குத் தெரியுமே” என்று பின்னூட்டங்களில் எழுதுவது தடை செய்யப்படுகிறது. Especially கீதா ரங்கன், கீதா சாம்பசிவம் மேடம். நீங்க ரெண்டுபேரும் வேறமாதிரி யோசிச்சுத்தான் பின்னுட்டம் எழுதணும். ஹா ஹா ஹா)///

      ஹா ஹா ஹா ஹா ஹா....

      நெல்லை, கிச்சன்லதானே எங்களின் ஒவ்வொரு காலைப் பொழுது விடிவதும் இரவு முடிவதும். அப்படி எக்ஸ்பெரிமென்ட், அப்புறம் வீட்டுல ஏதாவது இப்படிக் கூடிடுச்சுனா இப்படி எல்லாம் நம்ம மூளையைக் கசக்கி ஓசிச்சுச் செய்யனும்...ஹா ஹா

      இது எங்க வீட்டுல பையன் வைச்ச பெயர் பருப்புசிலிக் கொழுக்கட்டை..

      பருப்புசிலி செய்யும் போதுகூட க ப அதில் போட்டாலும் அதிகம் எண்ணை வேண்டாம் என்று பருப்பை அரைத்து தாளித்து வதக்கி கொழுக்கட்டை போலச் செய்து ஸ்டீம் செய்துட்டு உதிர்த்து செய்வதுண்டே....அப்பவும் இந்தக் கொழுக்கட்டையை மகன் விரும்பி எடுத்துக் கொள்வான். இதையே குழம்பில் போட்டால் ப உ குழம்பு ....(நான் சில சமயம் ப உ குழம்புக்கு அதில் தேங்காய் சேர்த்தும் செய்வதுண்டு....

      கீதா

      நீக்கு
    5. நெல்லை, க ப சேர்த்துச் செஞ்சாலும் டேஸ்டும் நல்லாருக்கும் (க ப ஒத்துக் கொண்டால்) சாஃப்டா வரும். அப்புறம் நான் வீட்டில் பொதுவா அடைக்குப் பச்சரிசி சேர்ப்பதில்லை (எப்பாவாச்சும் தான்...) ஸோ புழுங்கல் அரிசிலதான்....அப்படி அரைத்த மாவைக் கொழுக்கட்டை செய்தால் நல்லாருக்கும். பு அ சில சமயம் டொப்பி பு அ தனி வாசனையோடு இருக்கும். நல்லாருக்கும்..

      கீதா

      நீக்கு
    6. இதுக்கு நீங்கள்லாம் என்ன தொட்டுக்கொள்வீர்கள்? இல்லை வெறும்ன சாப்பிடுவீர்களா?

      நீக்கு
  8. இனிய காலை வணக்கம்.

    ஆஹா பிடி கொழுக்கட்டை.... நேற்று நான் இங்கே தவலை அடை செய்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட். நீங்க மட்டும் சாப்பிடபண்ணிணீர்களா இல்லை நண்பரை வீட்டுக்கு அரைத்திருந்தீர்களா?

      நீக்கு
    2. நான் மட்டும் தான் நெல்லைத் தமிழன். கொஞ்சமாக தான் அரைத்தேன்.

      நீக்கு
    3. அட வெங்கட்ஜி வாவ் தவலை அடையா....சரி உங்க ரெசிப்பியும் போடுங்க நீங்க என்னவெல்லாம் போட்டுச் செய்யறீங்கனு தெரிஞ்சுக்கத்தான்...

      கீதா

      நீக்கு
  9. அத்தைப் பாட்டி, அம்மா, இல்லத்தரசி என எல்லோர் கைமணத்திலும் சாப்பிட்டு இருக்கிறேன் இந்த பிடிகொழுக்கட்டை.... ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித ருசி! அடுத்த வாரம் செய்து சாப்பிட நினைத்திருந்தேன். இந்த வாரம் தவலை அடை சாப்பிட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசி// - இந்த வரியை எழுதுவதற்கு முன்னால், “எழுதிய வரிசைப்படி எனக்கு அவர்கள் செய்வது பிடிக்கும்” என்று எழுதிய மாதிரி தெரியுதே.

      யார் செய்தாலும், அப்போ பசி இருந்தால் ருசி இன்னும் கூடும்னு நினைக்கறேன்.

      ஆமாம் பங்கலா ஸவீட்ஸ்ல என்ன சாப்பிட்டீங்கன்னு சொல்லலையே. மெனுல ஒரே ஸவீட்ஸா காட்டுது

      நீக்கு
    2. //ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசி// - இந்த வரியை எழுதுவதற்கு முன்னால், “எழுதிய வரிசைப்படி எனக்கு அவர்கள் செய்வது பிடிக்கும்” என்று எழுதிய மாதிரி தெரியுதே.//

      இதான் சிண்டு சிண்டு! நாரதர் வேலை ஹா ஹா ஹா ஹா ஹா..நெல்லைக்கு வர வர இப்படிச் செய்து கலாய்ப்பதில் ஒரே குஷிதான் போல!!!!! ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    3. வெங்கட், கழுவுற தண்ணீல நழுவுற மீன். ஹாஹா ன்னு சொல்லிக்கிட்டே கடந்து போயிடுவார். ஏதேனும் கான்ட்ரவர்ஷியல்னா அந்த சைடே வரமாட்டார், அந்த இடுகைல அதுக்கு அப்புறம் யாருக்குமே மறுமொழி தரமாட்டார் (கான்ட்ரவர்ஷியலை மட்டும் ஒதுக்கினதா இருக்கக்கூடாது என்ற)

      நீக்கு
  10. வெயிட் குறைக்கணும்னா (உண்மையா சாப்பாட்டினால் வெயிட் போட்டால் மட்டும்) சாப்பாடைக் குறைத்து ஒரு வேளை, இரண்டே வேளை, பட்டினி எனக் கிடக்கக் கூடாது. சாப்பிடும் நேரம் கரெக்டா அந்த அந்த நேரத்துக்கு என்ன சாப்பிடுவோமோ அதைச் சாப்பிடணும். குறைந்த அளவில். உதாரணமாகக் காலை ஆறு இட்லி அல்லது நாலு தோசை அல்லது நாலு சப்பாத்தி, பூரி எனச் சாப்பிட்டால் அதை முதலில் ஒன்று குறைத்துப் பின்னர் ஒரு வாரத்தில் இரண்டு குறைக்கணும். காலை 3 இட்லி எடுத்துக் கொண்டால் போதும். அதையும் அவசரமாகச் சாப்பிடக் கூடாது! மெதுவாகச் சாப்பிடணும். காலை உணவுக்குப் பின்னர் பத்து, பத்தரை அளவில் பசிக்கும்போல் தோன்றினால் அல்லது நிஜம்மாவே பசித்தால் அப்போது ஏதேனும் சாலட் எடுத்துக்கலாம். அல்லது காய்கறி ஜூஸ், பழங்கள் என எடுத்துக்கலாம். மதியம் சாப்பாட்டிலும் சாதம் அளவு குறைத்து ஒரு கேரை, ஒரு காய் வேக வைத்தது, சாம்பார், ரசம், மோர் எனச் சாப்பிடவும். மாலை பசித்தால் ஏதேனும் சுண்டல்! இரவு ஃபுல்கா ரொடி அல்லது உப்புமா அல்லது உப்புமா கொழுக்கட்டை, அல்லது கிச்சடி இத்யாதி, இத்யாதி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா சாம்பசிவம் மேடம். 2010லேர்ந்தே ஏகப்பட்ட டயட் அனுபவம் எனக்கு உண்டு. ஒரு வருஷமாவே நடைப்பயிற்சி ரொம்பக் குறைவு.

      எனக்கு எப்போவுமா உணவ வேளையின்இடையில் தொறுக்குத் தீனி, உனிப்பு சாப்பிடும் வழக்கம் உண்டு. அதுதான் வில்லன்

      நீக்கு
    2. எனக்கு டயட் அட்வைஸ் பண்ணறேன்னு நீங்க எழுதினவைகளைப் படிச்சு இப்போவே பூரி கிழங்கு சாப்பிடும் ஆசை வந்துவிட்டது. 80 களுக்கு முன்னால் பூரி மசாலாவில் திருநெவேலியை அடிச்சுக்க ஆளே கிடையாது. எங்கள்டேர்ந்துதான் மதுரைக் காரங்க தெக்கினிக்கு கத்துக்கிட்டிருக்கணும்.

      80க்கு அப்புறம், பட்டாணி போன்றவற்றைச் சேர்த்து சுவையை பலர் கெடுத்துட்டாங்க. இல்லைனா ஓவரா ஆலூ போட்டுடறாங்க.

      கடைசியா தென்காசிலதான் சூப்பரான நெல்லை பூரி மசாலா சாப்பிட்டேன் பல வருடங்களுக்கு முன்

      நீக்கு
    3. நெல்லை அதே அதே திருநெல்வேலி பூரி மசாலா..செம டேஸ்டியா இருக்கும். சில மாதங்களுக்கு முன் கூட நான் சுவைத்தேன் திருநெல்வேலியில் என் அத்தையின் வீட்டுக்குப் போயிருந்தப்ப....அதே ரெசிப்பிதான் நான் வீட்டிலும் செய்வது.

      கீதா

      நீக்கு
    4. கீதா ரங்கன்- நான் சாப்பிட்டுப் பார்க்காம என்னால் ஒத்துக்க முடியாது. எப்ப பூரி கிழங்கு (நெல்லை முறைல) ரெடிபண்ணி வைக்கறீங்க?

      நீக்கு
    5. 80க்கு முன்னாடி தானே! எங்க அம்மா 60 களிலேயே பூரி மசாலா அருமையாப் பண்ணுவா! இப்போ நினைச்சாலும் அந்தநாட்களிலேயே எப்படினு ஆச்சரியமா இருக்கும். பள்ளி நாட்களில் சாயந்திரம் பூரி மசாலானு அம்மா சொல்லி இருந்தா அதே நினைப்பா இருக்கும். ஸ்கூலுக்கு எடுத்துக் கொண்டு போகவும் ஆசை வரும். ஆனால் இதெல்லாம் பள்ளிக்குக் கொடுக்க மாட்டாங்க.இட்லி, தோசையே கிடையாது! வெறும் மோர் சாதம்,மாவடு அல்லது உப்பு மட்டும் போட்ட எலுமிச்சங்காய். இல்லைனா ரசம் சாதம், அன்றைய கறி அல்லது கூட்டு இதான் சாப்பாடு டப்பாவில்! :))))

      நீக்கு
    6. கீசா மேடம்... உங்க அம்மாவின் சமையல் திறமைக்கு ஏதாவது நெல்லை கனெக்‌ஷன் இருக்குமோ? அவங்க அம்மா, அப்பான்னு? இல்லைனா நெல்லையைச் சேர்ந்த டி வி சுந்தரம் ஐயங்கார் ஃபேமிலில யாரேனும் சொல்லித் தந்திருப்பார்கள்.

      ஐயோ... அதுக்கு ஏன் குழவியைத் தூக்கறீங்க? வன்முறை வேண்டாம். பேச்சுவார்த்தைல பிரச்சனையைத் தீர்த்துக்குவோம்

      நீக்கு
    7. அம்மாவின் பிறந்த ஊர் உல(க்)கை நாயகரின் ஊர். தாத்தாவுக்கு அங்கே உள்ள தென்னவராயன் புதுக்கோட்டையில் நிலங்கள் இருந்தன. சேதுபதி ராஜாவுக்கு நெருக்கம். அதெல்லாம் இப்போப் பழைய கதை! :))))))

      நீக்கு
    8. உலக்கை ஊர்லதான் நான் 1ம் 2,3ம் வகுப்பு படித்தேன். அந்த ஊர் மேநிலைப் பள்ளியில் அப்பா ஹெட்மாஸ்டராக இருந்தார்.

      நீக்கு
  11. கொழுக்கட்டையின் படமே ஆசையை தூண்டுகிறதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கில்லர்ஜி... இயல்பான வாழ்க்கைக்கு திரும்பியாச்சா?

      நீக்கு
  12. அனைவருக்கும் காலை வணக்கம். முக்கியமா நெ.த.வுக்கு. நீங்க சொன்ன மாதிரியே வித்தியாசமான கருத்தைச் சொல்லியாச்சு! வரேன். நீங்க ஏன் இளைக்கலைனு என்னைக் கேட்கக் கூடாது! அலோபதி, சித்தா, ஆயுர்வேத, ஹோமியோபதினு எல்லா மருத்துவர்களும் உங்க உணவினால் உங்களுக்கு வெயிட் போடலைனு சத்தியம் பண்ணிச் சொல்லிட்டாங்க! ஆகவே நோ போட்டி! :P:P:P:P

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீசா மேடம்..நீங்க ஜோக்கா எழுதியிருந்தாலும், உண்மை என்னன்னா வரு குறிப்பிட்ட வயதுக்கு மேல உடம்பு இளைப்பது கடினம். உடல் பயிற்சியை முன்போல் செய்ய முடியாது. இதை அனுபவத்தில் உணர்கிறேன்.

      அதுக்காக நான் வரும்போது தட்டுல ஸ்வீட்ஸ் கம்மியா போட்டுடாதீங்க

      நீக்கு
    2. அப்படி எல்லாம் இல்லை நெல்லை. அறுபது வயதுக்குப் பின்னர் நம்ம ரங்க்ஸ் இளைத்திருக்கிறார். அதே போல் நானும் நடுவில் நன்றாகவே இளைத்தேன். இப்போ மறுபடி வெயிட் கூடி விட்டது! ஸ்டீராயிட் எடுத்துக்காமல் ஆரம்பத்திலேயே ஆயுர்வேதம் அல்லது சித்தா மருந்து எனச் சாப்பிட்டிருந்தால் இவ்வளவு வெயிட் எனக்கும் வந்திருக்காதோனு நினைப்பேன்.

      நீக்கு
    3. கீசா மேடம்... இப்படி எழுதினாலும் நெல்லைத் தமிழன் போன்றவர்கள் நம்பமாட்டாங்கன்னுதானே சமீபத்தில் திருமணமானபின்னான சில படங்களைப் பகிர்ந்துக்கிட்டீங்க. இப்போவும் டக்குனு முடியலைனா ஸ்டீராய்டு எடுக்க வேண்டியிருக்கா? நலமுடன் இருங்க கீசா மேடம். இன்னும் பத்து இருபது வருஷமாவது உங்க இடுகைகளைப் படித்து கலாய்க்கணும்.

      நீக்கு
    4. இப்போ நோ ஸ்டீராயிட்! பையர் கல்யாணத்தின் போது கிட்டத்தட்டப் போயிடுவேன்னு நானும் நினைச்சுட்டு இருந்தேன். அவரும் அப்படித் தான் நினைச்சார். ஆனால் அப்போப் பார்த்த ஒரு மருத்துவரின் சிகிச்சையால் (அலோபதி தான், இருதய நோய் நிபுணர்) மருந்துகளே குறைக்கப்பட்டு உடம்பு ஒரு நிலைக்கு வந்தது.

      நீக்கு
    5. படங்கள் பகிர்ந்தது பழைய நினைவுகளில். ஏற்கெனவே சொன்னேனே! என்னோட திருமணப் பதிவுகளைத் தொகுத்துக் கொண்டிருப்பதை! அதிலே போடுவதற்கென எடுத்தேன். இங்கேயும் பகிர்ந்தேன்.

      நீக்கு
  13. அனைவருக்கும் காலை வணக்கம். வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  14. ஹாஹா, இன்னைக்கு இங்கே இதான் ராத்திரிக்குச் செய்யணும்னு நினைச்சுட்டு இருந்தேன். துபருப்புச் சேர்க்கையில் கொஞ்சம் போல் க.பருப்பும் சேர்த்தால் கொழுக்கட்டை மிருதுவாக வரும். இஃகி,இஃகி, இஃகி, ஓட்டமா ஓடிடறேன் நெல்லை வரதுக்குள்ளே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சொன்னது கரெக்ட் கீசா மேடம். நான் அப்ரூவ் பண்ணறேன். ஆமாம் தொட்டுக்க என்ன பண்ணுவீங்க? மி பொடி எண்ணெய் போர்

      நீக்கு
    2. ஹை கீதாக்கா ஹைஃபைவ் இப்பத்தான் மேல சொல்லிட்டு வந்தேன்...பார்த்தா இங்க...இதுக்குத்தான் கீதாக்கா என்ன சொல்லிருன்னாங்கனு பார்த்துட்டு வரனும்ன்றது...ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    3. கீதா ரங்கன்- இந்த தெக்கினுக்கு பழசு, வேலைக்காகாது. நீங்க என்ன எதிர்பார்க்கறீங்கன்னா, கீசா மேடம் உடனே ஓடி வந்து, Great Women Think Alike என்று சொல்வாங்கன்னு நினைக்கறீங்க. ஆனா அவங்க மட்டும்தான் only great woman.(னு நினைக்றாங்கன்னு நான் சொல்லலை) அப்புறம் பழமொழி, great என்ற adjective ஆண்களுக்கு மட்டும்தான், பெண்கள் great இல்லாத்தால, *Great Men Think Alike* என்றுதான் இருக்கு ஹாஹா

      நீக்கு
    4. தொட்டுக்க சாம்பார், வத்தக்குழம்பு (உண்மையா வற்றல் போட்டுச் செய்யும் குழம்பு) இருந்தால் கூடப் போதும். இல்லைனா கொத்துமல்லிச் சட்னி என்னொடமுறையில் அரைப்பேன். ப.மி. கொத்துமல்லியை நல்லெண்ணெயில் வதக்கிக் கொண்டு கொஞ்சம்போல் ஒரு சுண்டைக்காய் அளவு புளியையும் சேர்த்து வதக்கிட்டுத் தேங்காய் சேர்த்துப்பொரித்த பெருங்காயத்துடன் அரைப்பேன். கடுகு, உபருப்பு தாளித்துடுவேன். தொட்டுக்கக் கொஞ்சம் போல் சட்னியை எடுத்து நீர் விட்டுக் கரைத்துக் கொண்டு வைச்சுக்கலாம். தேவையான போது எடுத்துக் கரைச்சுக்கலாம்.

      நீக்கு
    5. நன்றி கீசா மேடம். குறித்து வைத்துக்கொண்டேன், அதிலும் கொத்தமல்லி தொகையல் மாதிரி

      நீக்கு
    6. நேற்றுக் கொழுக்கட்டை பண்ணிச் சாப்பிட்டாச்சு. காரம் தான் கொஞ்சம் தூக்கல்! :(

      நீக்கு
    7. நான் சாம்பு மாமாட்ட சொல்றேன். தளிகை பண்ணும்போது உங்ககிட்ட வம்பு பண்ணினா உணவுல அது காமிக்கும்னு. ஹாஹா

      நீக்கு
    8. grrrrrrrrrrrrrrrrrrrrrrr சமையல்னா அந்த நேரம் சமையல் மட்டும் தான்! மற்றவைனு பார்த்தாத் துணிகளையும் தோய்த்துக் கொண்டே சமைப்பேன். ஆனாலும் கவனம் எல்லாம் சமையலில் தான் இருக்கும். நேற்று என்னவோ மி.வத்தல் ஜாஸ்தியா ஆகி இருக்கு. அதோடு மாமாவுக்கு நான் என்ன பண்ணப் போறேன்னு சாப்பிடும்போது தான் தெரியும்! இன்னிக்கும் ராத்திரி என்னனு இன்னும் சொல்லலை.:) சஸ்பென்ஸிலே வைச்சிருக்கேன்! :)

      நீக்கு
    9. இதுக்கு பதிலெழுதி உங்க நட்பைக் கெடுத்துப்பாங்களோ யாரும்? 7 1/2 நாட்டுச் சனி என்னை பதிலெழுதச் சொல்லுதே.

      //மாமாவுக்கு நான் என்ன பண்ணியிருக்கேன்னு அவர் சாப்பிட்டு நான் சொன்ன பிறகுதான் தெரியும்//

      நீக்கு
  15. அப்புறமா இன்னொரு விஷயம், நான் புழுங்கலரிசியில் பருப்பெல்லாம் சேர்த்து அரைச்சுச் செய்வேன். அது தான் வாசனை நல்லா இருக்கும் என்பது என்னோட தனிப்பட்ட கருத்து! :))))) அடை கூடத் தனி பச்சரிசியில் பண்ண மாட்டேன். புழுங்கலரிசி+பச்சரிசி சேர்த்துத் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா? புழுங்கலரிசிக்குத்தான் ஒரு வாசனை உண்டு. சின்ன வயதில் வீடுகளில் புழுங்கவைக்கும்போது (நெல்லை), ஒரு மணம் வரும். அந்த அரிசி மணத்தை அனுபவித்திருக்கிறீர்களா?

      நீக்கு
    2. ஹையோ இதென்ன இன்று....இதுவும் கொஞ்சமா அங்கிட்டு நான் நெல்லைக்குச் சொல்லிட்டு இங்கிட்டு வந்தா கீதாக்காவும்!!! ஹைஃபைவ்!

      கீதா

      நீக்கு
    3. நெல்லை, சின்னமனூரில் என் சித்தி வீட்டில், அப்புறம் கல்யாணம் ஆன பின்னாடி மாமனார் வீட்டில் நெல்லைப் புழுக்குவார்கள். அவல் கூட என் மாமியார் வீட்டில் தான் இடித்துத் தயார் செய்வார். ரொம்பப் பாடு படணும். பயறு, உளுந்து எல்லாம் கல்லால் ஆன இயந்திரத்தில் உடைப்போம். பின்னர் தோலி பிரிக்கப் புடைப்பார்கள்.அப்போவே எனக்கு அந்தத் தூசி, காற்று ஒத்துக்காது! ஆனால் அதெல்லாம் காட்டிக்க முடியாது! பருத்திக்கொட்டை ஊற வைச்சு ராத்திரி மாட்டுக்கு அரைச்சு வைக்கணும்.காலம்பர மாடு கறக்க இது. சாயந்திரம் மாடு கறக்க மத்தியானமா அரைச்சு வைக்கணும்.

      நீக்கு
    4. இவ்வளவு வேலை பெண்களைப் பண்ணச் சொன்னால், அவங்க வீட்டுக்கு விளக்கேற்ற வந்தாங்களா இல்லை அடிமையாவா? பாவம் அந்தக் காலத்துப் பெண்கள்.

      நீக்கு
    5. ஹாஹாஹா, அப்பளம் இடறதை விட்டுட்டேன். என் அம்மாவும் வீட்டில் தான் அப்பளம் இடுவார். மாமியார் வீட்டிலும் வீட்டில் இடும் அப்பளங்கள் தான்! :)))) பள்ளிக்குப் போகும் நாட்களில் கூட சாயந்திரமா வந்து வட்டு இட்டுக் கொடுக்கணும்! இல்லைனா நோ அப்பளம் என்பாங்க! :))))

      நீக்கு
    6. அப்பளம் இடுகிற கஷ்டத்தை நான் 3-4ம் வகுப்பு படிக்கும்போது பார்த்திருக்கேன். சிறு பிள்ளை விளையாட்டைப்போல், வெளியில் விளையாடிவிட்டு வரும்போது, அப்பளம் இட்டுக்கொண்டிருந்தால் அப்பளத்தைத் தொட்டு நல்லா திட்டு வாங்கிக்குவேன். சின்ன வயசுல அவ்வளவு வம்பு...

      நீக்கு
  16. அழகான படங்களுடன் செய்முறை அருமை.


    நாங்கள் இந்த முறையில் அரைத்த மாவை ஆவியில் வேக வைத்து ஆறிய பின் உதிர்த்து 'உக்காறை' என்ற உப்புமா செய்வோம்.
    நேரடியாகவும் ஆவியில் வேக வைக்காமல் செய்யலாம், ஆனால் எண்ணெய் நிறைய ஆகும், கிண்டவும் வேலை அதிகம்.

    //அன்னைக்கு பண்ணின அதே கொழுக்கட்டையும், அதே மாதிரி சட்னியும் பண்ணித்தா. இந்த முறை 6 ஆவது நான் சாப்பிடுவேன் என்றேன்.//

    கொழுக்கட்டை கதை நினைவுக்கு வருது.


    //இருந்தாலும் என் மனைவி செய்துகொடுத்து நான் சாப்பிடும்போது வரும் ருசியே தனிதான். (இப்படிச் சொல்லித்தானே ஆண்கள், சமையல் வேலையிலிருந்து தப்பித்து மனைவியை வேலை வாங்கறாங்க ஹிஹி).//

    உண்மை.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு மேடம்.. என் மனைவிட்ட மூன்று முறை சொல்லிட்டேன்.. ஒக்கோரை பண்ணித்தா என்று. நாங்க தீபாவளி அன்றுதான் பண்ணுவோம். எனக்கு ரொம்பப் பிடித்தது

      நீக்கு
  17. //நான் வெளிநாட்டுல இருந்தபோது 6 வருஷத்துக்கும் மேல அவங்களோட எல்லாம் இருக்கலை. பையனின் 8வது வகுப்பிலிருந்து. இப்போ இங்க வந்தப்பறமும் அவன் இன்னொரு நகரத்தில் ஹாஸ்டல்ல இருக்கான்). குனுக்கு செய்முறையை விரைவில் எழுதறேன்.//

    அன்பான தந்தையின் வார்த்தை நெகிழ வைத்து விட்டது.
    மகனுக்கு பிடித்த உணவு சாப்பிடும் போது மகனின் நினைவு வந்துவிடும்தானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதைப்பத்தி ரொம்பவும் பொதுவெளில எழுத முடியலை. என் பெண், அன்பு, கோபம், எரிச்சல் எல்லாத்தையும் முகத்துக்கு நேர சொல்லிடுவா. நம்ம குற்றத்தை bluntஆ அவ சொல்லும்போது கொஞ்சம் கஷ்டமா இருக்கும். ஆனா அவ உண்மையைத்தான் சொல்லுவா. என் பையன் ரொம்ப சென்சிடிவ், நினைப்பதை சரியா சொல்லமாட்டான். மத்தவங்கள் தப்பா நினைக்கக்கூடாதுன்னு சொல்லமாட்டான் (என்னை மாதிரி) ஹாஹா

      நீக்கு
    2. எல்லாப் பெற்றோர்களுக்கும் உள்ள உணர்வு இது நெல்லைத் தமிழரே! எனக்குக் குழந்தைகளுக்குப் பிடித்த உணவைச்செய்யக் கூடப் பல நாட்கள் மனம்வந்ததில்லை. அவர் கேட்டால் கூடப் பண்ணமாட்டேன்னு சொல்லிடுவேன். அப்புறம் அப்புறம் நாளாக ஆக, கொஞ்சம்கொஞ்சமா மனம் தெளிந்தது. இருந்தாலும் அவங்களுக்கு உடம்பு சரியில்லை எனில் அன்னிக்குச் சமையலே ஓடாது!

      நீக்கு
    3. உங்க பெண் என்னை மாதிரியோனு நினைக்கிறேன். நானும்மனதில் நினைப்பதை முகத்துக்கு எதிரே சொல்லும் ரகம் தான். பிறந்த வீட்டில் இருந்தவரை தெரியலை. ஆனால் எல்லோரும் கவலைப்படுவாங்க. இந்தப் பொண்ணு புக்ககம் போய் எப்படிக் குப்பை கொட்டப் போகிறதோ என! அதன் பொருள் எனக்குப் பின்னர் தான் தெரிந்தது. இங்கே பின்னாடி எவ்வளவு வேணா கேலி பேசலாம். முகத்துக்கு நேரே குழைந்து தான் பேசணும். இது தப்புனு சொல்லக் கூடாது! நீயெல்லாம் தப்பே செய்ய மாட்டே! இன்னிக்கு என்னமோ இப்படி ஆயிடுத்து எனச் சொல்லணும். ஆனால் எனக்கு இதெல்லாம் இன்னமும் வரலைனே சொல்லணும்! :(((((

      நீக்கு
    4. முகத்துக்கு நேர பேசறவங்களை நம்பலாம். அவளுக்கு ஏகப்பட்ட ஃப்ரெண்ட்ஸ். நல்ல குணத்தை வச்சிக்கிட்டு அதுல தவறோன்னு நினைக்கறீங்களே.

      எனக்கு அராபிய மேனேஜிங் டைரக்டர் இருந்தார். அரபிக்காரங்களுக்கு, முடியாதுன்னு சொல்றதே பிடிக்காது. ஆனா நான் எது கரெக்டோ அதைத்தான் சொல்வேன். சிலர் வழவழ கொழகொழன்னு பேசுவாங்க. நான் கட் அன்ட் ரைட்டா உண்மையைச் சொல்வேன் (விளைவை அனுபவிப்பேன்... ஹாஹா)

      நீக்கு
    5. நான் இப்படி இருப்பதைத் தவறுனு நினைப்பதில்லை. அதானே பிரச்னையே நெல்லைத் தமிழரே! அவங்களுக்கெல்லாம் நான் செய்யறது தப்புனு சொல்லி என்னைத் திருத்த முயல்வாங்க! நான் இப்படி இருப்பது தான் சரினு சொல்லுவதோடு அவங்க சொல்வதை ஒத்துக்கவும் மாட்டேன். அதோடு எனக்கும் கல்யாணத்துக்கு முன்னாடியும் கல்யாணத்துக்குப் பின்னரும் நண்பு வட்டம் பெரிது தான். இங்கேயும் பரவாயில்லை என்றாலும் அம்பத்தூர் மாதிரி இல்லை. :) ஏனெனில் அநேகமாகச் சின்னவங்க நிறைய!

      நீக்கு
  18. //சின்ன வயசிலிருந்தே எங்க அம்மாட்ட திடும்னு கோபப்படுவேன். அப்புறம் அன்றைக்கு சாப்பிடமாட்டேன். //

    நானும் அப்படித்தான், ஆனால் அப்பா கெஞ்சி கொஞ்சினால் சாப்பிட போய்விடுவேன். அம்மாவுக்கு இன்னும் கோபம் அதிகமாகும்.
    இங்கு செல்லுபடியாகவில்லை, பசித்தால் சாப்பிடு. அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு இதைப் படித்தவுடன் அப்பா நினைவு வந்துவிட்டது. தின்பண்டங்கள் இல்லை அல்வா போன்றவைகள் இருக்கும்போது நான் கோபத்தில் இருந்தா, என் அம்மா என்னைச் சாப்பிடக் கெஞ்சுவா.. நான் இன்னும் வீம்பு பிடிப்பேன். ஆனா அப்பா, மூணு தடவை, சாப்பிடு சாப்பிடு என்பார் (ஒரு தரம், ரெண்டு தரம் என்று சொல்லிக்கொண்டே). மூணாவது முறை கேட்டபின், அவர் சாப்பிட்டு முடித்துவிடுவார். ஹாஹா (ஆனா எனக்கு இப்போவும் அப்பாதான் ரொம்பப் பிடிக்கும். அவரை மிஸ் செய்கிறேன். என் டிசிப்ளின், மேல் சாவனிசம் அவரிடமிருந்து வந்தது)

      நீக்கு
  19. நெல்லைத்தமிழன் உங்க கொழக்கட்டையை பார்த்ததும் என் உடம்பை கொஞ்சம் பார்த்தேன் எங்க வூட்டு மாமி பூரிக்கட்டையால் அடித்த போது இப்படித்தான் கொழுக்கட்டை மாதிரி இருக்கும்.

    அரிசி மாவு கொழுக்கட்டை எனக்கு பிடிக்கும் ஆனால் செய்வதில்லை ஆனால் அதற்கு பதிலாக கேப்பை மாவை சுடுதண்ணிரில் பிசைந்து அதில் மிளகாய் வத்தல் கடுகு உளுந்தம் பருப்பு கடலைபருப்பு போட்டு தாளித்து மாவில் கலந்து அதை கொழக்கட்டையாக செய்து சாப்பிடுவது வழக்கம் சில சம்யம் தேங்காய் துண்டுகளை அதில் போடுவதும் உண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் (செங்கோட்டையை மறந்த) துரை. உங்களுக்கு ஷுகரா? அதுனாலத்தான் கேப்பை மீதான காதலா?

      நேற்று பொம்மை மாதிரி விஜயகாந்தை பிரஸ் மீட்டில் பொத் என்று உட்காரவைத்த போதும், இரண்டு நாள் முன்னதான தேதிமுகவின் நாடகத்தை (ரெண்டு கட்சிட்டயும் ஒரே சமயத்துல பேரம் பேசறது பாமக மாதிரி) பார்த்தபோதும் உங்களைத்தான் நினைத்துக்கொண்டேன், எப்படித் தோய்த்து காயப்போடப் போகிறீர்களோ என

      நீக்கு
  20. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இதென்னடா இது உண்மையைக் கூடச் சொல்லக் கூடாதுன்னு நெ த சொல்றாரே.
    சரி இன்னிக்குத்தான் இந்தக் கொழுக்கட்டையைப் பார்க்கிறேன்.

    சொல்லிட்டேன்.
    வெகு அழகான முறையில் அருமையாகப் படம் பிடித்து
    இங்கே வாசனை வருகிற மாதிரி செய்திருக்கிறீர்கள்.

    கொஞ்சம் பருப்புசிலிக் கலர். இருந்தும் மென்னியப் பிடிக்காமல் தான் வந்திருக்குன்னு நினைக்கிறேன்.
    அருமை அருமை.
    பிள்ளை ஹாஸ்டலில் இருக்கானா.
    லீவு நாட்களில் கொழுக்கட்டை செய்து கொடுங்கோ.
    எங்கள் வீட்டிலும் சாப்பாட்டு மேல் கோபம் காட்டுகிற புதல்வன் உண்டு.

    என்ன செய்வது நான் எங்கம்மாவைப் படுத்தி இருக்கிறேன்.
    கோமதியின் அப்பா செய்த மாதிரி
    அப்பா சமாதானப் படுத்துவார்.
    பிள்ளையை ஒண்ணும் சொல்ல முடியாது.

    இனி வயிற்றுக்கு வஞ்சனை செய்யாதீர்கள்.
    பாதிக் கோபம் சாப்பிட்டால் போய்விடும்.
    இப்போதெல்லாம் பட்டினி என்று எழுதுவது கூடக் கிடையாது.
    முறையாக ஆனால் குறைவாக சாப்பாடு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா.. இரண்டுநாள்்முன்பு சேவைக்கு அரைத்தோம், அவன் ரெண்டுநாள் வருவேன்னு சொன்னதால. கடைசி நிமிஷத்தில் டிரிப்பைக் கேன்சல் பண்ணிட்டான்

      நானும் உணவில் எனக்கு டிசிப்ளின் கொண்டு வரணும்னு முயல்கிறேன். முடியலை

      நீக்கு
  21. உடம்பு குறைய காலையில் 2 சிறிய தோசை அல்லது பிரெட் பட்டர் டோஸ்ட் 2 மதியம் ஒரு கப் ரைஸ் வித் கறி மாலையில் லிட்டில் ஸ்னாக்ஸ் இரவில் ஒரு நாள் சாதம் ஒரு நாள் சப்பாத்தி ஒரு நாள் இட்லி ஒரு நாள் ரவை என்று சாப்பிட்டு வரவும் இரவில் சாப்பாட்டில் ரைஸ்யை குறைத்து சாப்பிட்டு நிறை காயகறிகள் சாப்பிடவும் நான் நிறைய குழம்பை தட்டில் விட்டு ரசித்து சாப்பிடுவேன் காரணம் குழம்பு சுவையினால்... அப்புறம் படுக்க போகும் முன் ஒரு சிறிய லட்டு அல்லது ஸ்வீட் இதுதான் என் டையட்

    என் எடை கடந்த 20 வருடங்களாக ஒரே மாதிரியாக இருக்கிறது இப்போது உடல் வேலை சற்று அதிகமாகவும் வாக்கிங்க் அதிகமாகவும் ஆகிவிட்டதால் ஈந்து A1 சுகர் 7.5 ல் இருந்து 6.2வாக குறைந்து ப்ரி டையப்டிக் நிலைக்கு வந்துவிட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சொன்னவற்றை சாப்பாட்டுக்கு முன்னால் சாப்பிடணுமா இல்லை சாப்பிட்ட பிறகா?

      20வருடமா ஒரே எடையா? அப்பா.. பெரிய அச்சீவ்மென்ட். பாராட்டுகிறேன், உணவில் ஒழுக்கம் கொண்டு வந்ததுக்கு

      நீக்கு
    2. நான் மாமிகிட்டே அடிவாங்கிய பிந்தான் சாப்பிடுவேன்

      நீக்கு
    3. மதுரைத் தமிழன்... எங்கிட்டயாவது உண்மையைச் சொல்லியிருக்கலாமே.

      நீங்க ஒவ்வொரு வேளை சாப்பிட்டபின்பு, ஏதேனும் வம்பு பண்ணி, வீட்டம்மா குழவியைத் தூக்கிட்டு உங்களை அடிக்க வருவாங்க. தப்பிக்க நீங்க ஓடறதாலயும், துரத்திக்கிட்டே அவங்க ஓடி வருவதாலேயும் ரெண்டு பேரும் எடையை மெயின்டெயின் பண்ண முடியுதுன்னு பக்‌ஷி சொல்லுதே. உண்மையா? (இதைக் கண்டுபிடிக்க எனக்கு தீர்க்கதரிசி பட்டம் தேவையில்லை)

      நீக்கு
  22. அருமையான குறிப்பு! சீக்கிரம் செய்து பார்க்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மனோ சாமிநாதன் மேடம். விரைவில் செய்துபாருங்க

      நீக்கு
  23. உப்புமா பிடிக்காதவர்களுக்கு கூட உப்புமா கொழுக்கட்டை பிடிக்கும். நநான் பருப்பு இவ்வளவு சேர்க்க மாட்டேன். அதே போல ஊறவைத்து அரைத்தும் செய்வதில்லை. உப்புமாவிற்கு உடைப்பது போல உடைத்துக் கொண்டு, பருப்பையும் தனியாக மிக்ஸியில் பொடித்து சேர்த்து செய்வேன். நீங்கள் தடையுத்தரவு போட்டிருப்பது கீதா அக்காவிற்கும், கீதா ரங்கனுக்கும் மட்டும்தானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானுமதி வெங்கடேச்வரன். இந்தமாதிரி செஞ்சு பாருங்க. சேஃ்ப்டிக்கு கொஞ்சம் க பருப்பு சேர்த்துக்கோங்க. மென்னியைப் பிடிக்காது

      நீக்கு
  24. என் கோபத்தை நான் சாப்பாட்டின் மீது காட்ட மாட்டேன். என்னால் பட்டினி கிடக்க முடியாது. பட்டினி கிடக்க கூடாது என்று ஷீர்டி பாபா கூறியுள்ளார் என்று அவரை சப்போர்ட்டுக்கு அழைத்துக் கொள்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னவோ பா.வெ மேடம். கோபம் வந்தால் அல்லது எமெர்ஜென்சில என்னால் பசி போன்றவற்றைக் கட்டுப்படுத்த முடியும்.

      ஷீரடி பாபா, நான் வேண்டிக் கேட்டுக் கொண்டதை நிறைவேற்றலை. :-(

      நீக்கு
    2. உங்களுக்கு அது தேவை இருந்திருக்காது நெல்லைத் தமிழரே! ஆசையாக இருந்திருக்கும். ஆகவே பாபாவைக் குற்றம் சொல்வதில் பயன் இல்லை. நமக்கு எது தேவையோ, எது வேணுமோ அது நமக்குக் கிடைக்காமல் போகாது! நமக்குக் கிடைக்கக் கூடாது என்றிருப்பவை நாம் என்ன முயற்சி செய்தாலும் கிட்டது. சொந்த அனுபவம்!

      நீக்கு
    3. நீங்க எழுதினதைப் படித்ததும் என் மனசு ரொம்பவும் வருத்தமடைகிறது. நடையாக நடந்தும் ஆலோசனை சொன்ன எல்லாவற்றையும் செய்தும் வெளிச்சத்தை அவன் காட்டவில்லை.

      இதில் இன்டெரெஸ்டிங் விஷயம் நான் ஒரு ஜோசியரைப் பார்த்தேன். ஒண்ணும் சொல்லலை. என் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு டக்குனு, “கடவுளை டிஸ்டர்ப் பண்ணாதீங்க. நடப்பதை ஏற்றுக்கொண்டு கர்ம வினையைக் கழியுங்க”னு சொன்னார். எனக்கு அவ்வளவு ஆச்சர்யம். என் மனைவியைக் கூட்டிச் செல்லாமல் நான் பார்த்த முதல் ஜோசியர் இவர்.

      ஷீரடி மற்றும் புட்டபர்த்தி பற்றி வேளை வரும்போது எழுதறேன்.

      நீக்கு
    4. //“கடவுளை டிஸ்டர்ப் பண்ணாதீங்க. நடப்பதை ஏற்றுக்கொண்டு கர்ம வினையைக் கழியுங்க”னு //கிட்டத்தட்டநான் சொல்வதைத் தான் அந்த ஜோசியர் சொல்லி இருக்கார். எனக்கு இப்படித் தான் வங்கித் தேர்வு ஆகி நேரடிப் பேட்டியன்று கல்யாணம். இன்னொரு நாள் பேட்டியை வைச்சுக்க முடியாது என்பதால் கல்யாணத்தைத் தள்ளிப் போடச்சொன்னேன் அப்பாவை.முடியாதுனுட்டார். அப்புறமா எங்க ஜோசியர்(ஏற்கெனவே இவரைக்குறித்து நிறையச் சொல்லி இருக்கேன்.) நீ வேலைக்குப் போவே.ஆனால் வங்கி வேலை இல்லை. மின்சாரம் சம்பந்தப்பட்ட வேலை கிடைக்கும். ஆனால் ரொம்ப நாள் போக மாட்டே.இன்னும் சொல்லப்போனால் ஓரிரு வருடங்களில் நீ தமிழ்நாட்டை விட்டே போயிடுவே! வேலை தொடர்ந்து பார்க்கும்ஜாதகம் இல்லை உனக்கு என்றார்.ஆனால் நான் அப்போ நம்பலை! ஏனெனில் புக்ககத்தில் என் வேலையைத் தான் மிகவும் மதித்தார்கள். சொல்லப் போனால் நான் சென்னையிலேயோ, அல்லது கும்பகோணத்துக்கோ வேலையை மாற்றிக்கொண்டு அவர்களோடு இருக்கணும் என்றே எதிர்பார்த்தாங்க! ஆனால் என் விதி! என்னை எங்கேயோ தொலைதூரத்தில் கொண்டு சேர்த்தது! நாங்க அப்போ ராஜஸ்தான் போவதை யாருமே ஆதரிக்கலை. அதிலும் நான் கையில் ஒன்றரை வயதுக் குழந்தையுடன் 22 வயதில் தொலைதூரம் தனியாப் போகிறதை என் அப்பா,அம்மாயாருமே ஆதரிக்கலை! ரங்க்ஸ் பிடிவாதமாகக் கூடகூட்டிச்சென்றார். ஊரிலேயே விட்டுவிட்டு அங்கே போய் வீடெல்லாம் பார்த்துட்டு தீபாவளிக்கு வந்துட்டு அழைச்சுட்டுப் போனு மாமனார் சொன்னார்.ஆனால் நாங்க மே மாதக் கடைசியிலேயே கிளம்பிட்டோம்!அதன் பிறகு நடந்ததெல்லாம் தனிக்கதை!

      நீக்கு
    5. நாம நினைக்கறது, விருப்பப்படறது நடக்காதபோது வருகின்ற கோபம், எரிச்சல், இயலாமை... என்ன பண்ணறது கீசா மேடம்... நமக்கு மீறின சக்தி விளையாடறபோது ஏற்பதைத் தவிர வேறு வழி!

      நீக்கு
  25. படங்களுடன் செய்முறை விளக்கத்திற்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  26. எனக்கு எல்லா கொழுக்கட்டையும் பிடிக்கும். சின்ன வயதில் 3 நேரமும் கொழுக்கட்டை சாப்பிட்டதும் உண்டு. பருப்பை கொஞ்சம் குறைத்து வற்றல் மிளகாய் போட்டு அரைப்பதற்கு பதில் மிளகாய் கடுகு உளுந்து தாளித்து கொட்டி செய்திருந்தீர்களானால் கலர் மாறாமல் கிடைத்திருக்கும். இங்கே உள்ளது அடை மாவை கொழுக்கட்டை செய்தது போல் உள்ளது.
    ​​Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெயகுமார் சார்.. நீங்க சொல்றது அரிசி உப்புமா கொழுக்கட்டை. எபிலயே செஞ்சு எழுதியிருக்கேன். அதுல தேங்காய் துருவலும் சேர்க்கணும். நிறைய தடவை பண்ணுவேன். அரிசி உப்புமாவை விட இது பசங்களுக்குப் பிடிக்கும். அதை ஏற்கனவே இங்க எழுதிட்டதுனால, அந்தப் படம் இங்க எப்படியாவது போடறேன்.

      ஆனா இது வித்தியாசமா இருக்கும். நல்லாவே இருக்கும்

      நீக்கு
  27. ஆஆவ்வ்வ்வ் ஜூப்பர் கொழுக்கட்டை விரைவில செய்யப்போறேன்ன்ன்... அதாவது அஞ்சு செய்ய முன்:) ஹா ஹா ஹா.
    முன்பு அம்மா செய்து சாப்பிட்டதுண்டு அது அரிசிமாவில்தான் பயத்தம் பருப்பு தேங்காய்ப்பூ சக்கரை போட்டு பிடிக்கொழுக்கட்டை... அப்பாவுக்கும் இனிப்புத்தான் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா.. வாங்க. ஏற்கனவே இனிப்புப் போட்டு புட்டிங் செய்து நீங்க மட்டும் (இடுகையைப் படிச்சவங்ககூட தான் ஒரு ஸ்பூன் எடுத்துக்கறேன் என்று ஃபார்மாலிடிக்காக்க்கூடச் சொல்லலை) சாப்பிடும்படியா ஆயிடுச்சு. அதுனால இனிப்பு போடாம இதே மாதிரி செஞ்சு சாப்பிடுங்க. புரோட்டீன் நல்லாச் சேரும்.

      நீக்கு
  28. என்னாதூஊ நெ டமிலன் டயட்டில் இருக்கிறாரோ?:) டயட் பண்ண நினைப்போர் முதல்ல எரிஞ்சு எரிஞ்சு விழுவதைத் தூக்கி காவேரில போடோணும்:)... ஏனெனில் டயட் பண்ணோனும் என நினைச்சாலே கோபம்தான் வருது:)

    டயட்டுக்கு இப்படி கஸ்டப்படாமல் உணவின் ஸ்டைலை மாத்துவதுதான் பெட்டர்... பசிக்கப் பசிக்க இருக்க முடியாது. இனிப்பு காபோகைரேட் இரண்டையும் விடோணும்:)...

    இன்று கும்மி அடிக்க முடியல்லியே கர்ர்ர்ர்ர்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டயட் பண்ணணும்னு நினைத்தால் கோபம் வராதூதூதூ. அப்போப் பார்த்து மைசூர்பாக் படம் காண்பிச்சாத்தான் கோபம் வரும்.

      டயட் சொல்றது ரொம்ப ஈசி. கடைபிடிக்கறது கஷ்டம். விஎல்சிசில சொன்னாங்கன்னு, 2 மணி நேரத்துக்கு ஒரு தடவை 2 பிஸ்கட்டோ இல்லை ஒரு யோகர்ட்டோ சாப்பிடலாம்னு எங்க ஆபீஸ்ல முன்பு 6 பாக்கெட் யோகர்ட், 6 பாக்கெட் பிஸ்கட் வாங்கி இரண்டே நாளில் காலி பண்ணிட்டேன்.

      நீக்கு
    2. நீங்க எங்கட அப்ப மாதிரி கர்ர்ர்ர்ர்ர்:) தனக்கு மரவள்ளிக்கிழங்கு கறி, உ கிழங்கு கறி தரவேண்டாம் என்பார், ஆனா நாங்க சாப்பிட்டால் தக்கும் தரோணும் என நினைப்பார்:) குடுக்காமல் விட்டாலும் கோபிப்பார் குடுத்தாலும் கோபிப்பார் ஹா ஹா ஹா:)..
      பொதுவா பல ஆண்கள் எதிர்பார்ப்பது, தாம் சாப்பிடாட்டில் வீட்டிலும் செய்யக்கூடாதென, ஆனா அசைவ விசயத்தில் மட்டும் அவர் அப்படி இல்லை, தான் சாப்பிட மாட்டார் ஆனா எங்களுக்கு வாங்கித் தருவார்:)..
      நான் நினைக்கிறேன் தமக்குப் பிடிக்காததை சமைத்தால் ஒக் போலும் கர்ர்ர்ர்ர்:)

      நீக்கு
    3. பெண்களுக்கு அவங்க அப்பாவைப் பிடித்த மாதிரி அவங்க அம்மாவைப் பிடிக்குமா? எதனால் அப்படி? இத்தனைக்கும் அம்மாதான் எல்லாம் பண்ணறாங்க.

      நீக்கு
    4. என் மாமியார் வீட்டில் பெண்களுக்கெல்லாம் அம்மா என்றால் தெய்வம்! என்ன சொன்னாலும் மறு பேச்சுப் பேச மாட்டாங்க! அம்மாவைப் பார்த்ததுமே இரண்டு கையையும் விரித்துக் கொண்டு ஓடி வந்து கட்டிக்கொண்டு அழுவாங்க! எனக்கெல்லாம் அதைப் பார்க்கையில் ஆச்சரியமா இருக்கும்!

      நீக்கு
  29. இந்தக் கொழுக்கட்டைக்கு நிWஐய வெங்காயம் மிளகாய் திருவமாறி(அய்ய்ய்ய் எனக்கும் வருதூஊ) போட்டாலே போதும் சட்னி தேவைப்படாது என நினைக்கிறேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னாதூ... வெங்காயமா? நிச்சயம் பசங்க சாப்பிட மாட்டாங்க. நோ என்று சொல்லிடுவாங்க. மனைவி- வழக்கத்தில் இல்லாத்தைச் செய்தால், பண்ணக் கஷ்டமும் பட்டு அவள் கோபத்தையும் யார் தாங்கறது?

      நீக்கு
    2. ஓ நீங்க உள்ளி வெங்காயம் சேர்க்க மாட்டீங்க, நான் சொன்னது நிறைய தாளிச்சுப் போட்டால் நல்லாயிருக்கும் என...

      கோபத்தையும் நீங்கதான் தாங்கோணும்:) பின்ன அதை மட்டும் பக்கத்து வீட்டாரோ வந்து தாங்குவினம் கர்ர்ர்ர்ர் ஹாஆஆஆஆஆ:) புவஹா புவஹா... அதிரா ஜோக் ஜொன்னேன் ஜிரிங்கோ:)...

      நீக்கு
  30. எனக்கு சாமியில் செய்யும் கொழுக்கட்டை ரொம்ப பிடிக்கும், என் பக்கம் ரெசிப்பி இருக்கோணும்... நேரமில்லை இப்போ தேட:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதான் மனக் கண்ணில் இருக்கே. கலர் மட்டும் கொஞ்சம் கருப்பா வந்ததோ? இல்லை நான் மாவிளக்கை ஞாபகத்தில் வச்சிருக்கேனா?

      நீக்கு
    2. கர்ர்ர்ர்ர்ர் அது இல்லையாக்கும் அது மாஆஆஆஆஆஆஆலைட்:)

      நீக்கு
  31. வணக்கம் சகோதரரே

    அருமையாக படங்கள் செய்முறை விளக்கங்கள் என பருப்பு பிடி கொழுக்கட்டை சுவையாக இருக்கிறது. நான் இதுபோல் அரைத்து மாவை கிளறிச் செய்ததில்லை. இரண்டையும் தனியாக உ. கொ. மாதிரி மிக்ஸியில் உடைத்துக் கொண்டு அதை உப்புமா மாதிரி கிளறிச் உருண்டை பிடித்து செய்திருக்கிறேன். தங்களுடைய செய்முறையும் நன்றாக உள்ளது. கொழுக்கட்டைகள் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது. இது போல் நானும் ஒருநாள் செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். நீங்ககூட இதுமாதிரி ஒரு கொழுக்கட்டை பகிர்ந்தமாதிரி ஞாபகம். செஞ்சு பார்த்துவிட்டுச் சொல்லுங்க

      நீக்கு
  32. // மென்னைப் பிடிக்கும் (இதுக்கு எத்தனை பேருக்கு அர்த்தம் தெரியுமோ) (மென்னியைப் பிடிக்கும் என்றிருந்தால் எல்லோருக்கும் புரியலாம்!)//

    ஹாஹா நாங்க இன்டர்நெஷனல் தமிழ் அகரத்தாகி படிச்சிருக்கோம் .பூஸ் மொழி நெல்லைத்தமிழனின் மொழி எல்லாம் தெரியுமே புரியுமே :)
    பருப்பு கொழுக்கட்டைனு ஹெட்டிங் பார்த்ததும் இனிப்போனு தயக்கமா நுழைஞ்சேன் .இது நல்ல யிருக்கு ந.இப்போல்லாம் அடிக்கடி அரிசி உப்புமாவும் தக்காளி சட்னியும் செய்றேன:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரிசி உப்புமா எந்தக்காலத்திலும் அலர்ஜி வரச் செய்யாது.

      ஸ்விக்கில ஒரு கடைல பேல்பூரி ஆர்டர் பண்ணினப்போ அன்றைக்கு கொஞ்சம் அலர்ஜி வரமாதிரி இருந்தது. அதுனால கண்ட கடைகள்ல நான் மசாலா சேர்த்த உணவை ஆர்டர் பண்றதில்லை

      நீக்கு
  33. //இந்த உணவுல ஒரு அலர்ஜியும் வராது. அதனால எல்லாரும் செய்துபார்க்கலாம்.//

    இதுதான் இதேதான் நான் எதிர்பார்ப்பது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு நார்த் இன்டியன் உணவுலதான் சில இடங்கள்ல ஒத்துக்கறதில்லை. தென்னிந்திய உணவுல பிரச்சனை இல்லை. மசாலால ஏதோ காம்பினேஷன் ஒத்துக்காது. சென்னைல அந்தப் பிரச்சனை இதுவரைல வரலை

      நீக்கு
  34. / (ஹா... ஹா... ஹா) நான் இன்னும் வேணும்னு கேட்டால், வெயிட் ஏறினது என்னாலதான்னு ஒப்புக்க வேண்டியிருக்குமே… //

    கர்ர்ர்ர் என்ன ஒரு வில்லத்தனம் :) ஆக மொத்தம் எல்லாரும் இப்படித்தான் :) சாப்பிடும்போது ரசிச்சி சாப்பிடறது
    அப்புறமா நீங்கதான் கொடுத்தீங்கன்னு ப்ளேம் செய்றது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேற என்ன செய்யறது ஏஞ்சல்? எங்களையே நாங்க பிளேம் பண்ணிக்க முடியுமா?

      நீக்கு
  35. எடை குறைப்புப்பத்தி சொல்லணும் :) சர்ச் போயிட்டு வந்து சொல்றேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏஞ்சலின். இன்னைக்கு கோட்டா 10,000 ஸ்டெப்ஸ் நடந்துட்டு வந்த பிறகுதான் சொல்லுவீங்க போலிருக்கு. போயிட்டு வாங்க

      நீக்கு
  36. இது புதுசா இருக்கு. இனிப்பு கொழுக்கட்டை தெரியும், உப்பு கொழுக்கட்டை தெரியும், பருப்பு கொழுக்கட்டை புதுசா இருக்கு. ஐ வில் ட்ரை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ராஜி. கண்டிப்பா செஞ்சு பாருங்க. இந்த வாரம் அனேகமா நான் இனிப்பு கொழுக்கட்டை பண்ணப்போறேன்

      நீக்கு
  37. வெயிட் ஏறுவது கட்டுப்படுத்த உணவைக் குறைக்கத்தேவையில்லை உட்கொள்ளும்காலரியின் அளவும் செலவு செய்யும்காலரியின் அளவும் ஒன்றாயிருந்தால் வெயிட்டும் ஒரே மாதிரி இருக்கும் உடற் பயிற்சி செய்யச் சொல்லுவதே காலரியை செலவழிக்கவே எந்த உணவு எவ்வளவு காலரி என்பது தெரிந்துகொள்ளுங்கள் கொழுக்கட்டையில் துறுவிய காரட் முந்திரிப்பருப்புச் சேர்த்துப் பாருங்கள் சுவை கூடும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜிஎம்பி சார்... காரட், முந்திரி நிச்சயம் அட்டஹாசமா இருக்கும். நீங்க சொல்ற கலோரி பர்ன் எனக்குத் தெரியும். ஆனா பொதுவா ஜாஸ்தி இன்டேக் ஆகிடுது.

      நீக்கு
  38. ////செய்துவிட்டு படம் அனுப்புங்க. (உடனே ‘அதான் நான் எப்போதும் செய்யறதாச்சே”, “இதான் எனக்குத் தெரியுமே” என்று பின்னூட்டங்களில் எழுதுவது தடை செய்யப்படுகிறது////

    ஹாஅ ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

    பதிலளிநீக்கு
  39. ரொம்ப நல்லா இருக்கு ...

    இதுவும் நான் செஞ்சது இல்ல ....நல்ல குறிப்பு படங்களுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரிசி,பருப்பு ஊறவைச்சு அறைத்த கொழுக்கட்டையா? வயணமா எழுதி இருக்கிங்கோ. படங்களும் சாப்பிடு என்கிறது.அன்புடன்

      நீக்கு
    2. வருகைக்கு நன்றி அனுராதா ப்ரேம்குமார். செய்துபார்த்துவிட்டுச் சொல்லுங்கள்

      நீக்கு
    3. வாங்க காமாட்சிம்மா. படங்கள் நல்லா வந்திருக்கா? சாப்பிடத் தூண்டுகிறது என்று நீங்க எழுதினதுல என் மனசு நிறைந்துவிட்டது

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!