ஞாயிறு, 18 செப்டம்பர், 2022

மன்னார்குடி ஸ்ரீவித்யா இராஜகோபாலஸ்வாமி கோவில் :: நெல்லைத்தமிழன்

 

நான் தரிசனம் செய்த கோவில்கள் :: நெல்லைத்தமிழன் 

இந்தத் தலைப்பில் எங்கள் பிளாக்கிற்கு எழுதி அனுப்பலாம் என்று நினைத்தேன். பயணக் கட்டுரையாகவா அல்லது கோவிலைப்பற்றிய செய்திகளாகவா என்றெல்லாம் யோசித்தேன். 

எந்தக் கோவிலைப் பற்றியும், அதன் புராணங்களைப் பற்றியும் தெரிந்துகொள்ளத்தான் விக்கிபீடியா மற்றும் ஏகப்பட்ட பிளாக்குகள் இருக்கின்றனவே. அதனால் நான் எடுத்த படங்களையும், சில வரிகளுக்கு மிகாத குறிப்புகளையும் கொடுத்து எழுதலாம் என்று நினைக்கிறேன். 

எனக்கு வைணவ கோவில் தரிசனங்களும், முக்கியமான சைவ கோவில்களின் தரிசனமும் மிகவும் பிடித்தமானது. இதைத் தவிர வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களுக்குச் (பள்ளிப்படை போன்றவையும்) செல்லவும் பிடிக்கும். ஒரு வரிசைக்கிரமமாக இதனை எழுதப்போவதில்லை. அந்த வாரம் எந்தக் கோவில் படங்களைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று தோன்றுகிறதோ அதன்படி அமையும். எந்தக் கிழமையில் இதனைச் சொருகுவது என்பது எங்கள் பிளாக் ஆசிரியர்களின் பிரச்சனை. சரிதானே?

ஆசிரியர் கருத்து : " சரிதான்" 

படங்கள் நிறைய இருப்பதால், ஞாயிறு பதிவாகவே போட்டுவிட முடிவு செய்துள்ளோம். வாசகர்கள் தங்கள் கருத்துகளை பதியலாம். 

(001) மன்னார்குடி ஸ்ரீவித்யா இராஜகோபாலஸ்வாமி கோவில்

மன்னார்குடியிலிருந்து 6 கிமீ தொலைவில் உள்ள ஒரு கோவிலின் பவித்ரோத்ஸவத்திற்குச் சென்றிருந்தேன். அப்போது மன்னார்குடியில்தான் 3 நாட்கள் தங்கியிருந்தேன். அதனால் 100 அடி தொலைவில் இருந்த இந்தக் கோவிலுக்கு காலையில் சென்று விஸ்வரூப தரிசனம் என்று சொல்லப்படும், முதல் தரிசனத்தைப் பெறமுடிந்தது. 

இந்தக் கோவில் 20 ஏக்கருக்கும் மேலான இட த்தில் அமைந்திருக்கிறது. கருங்கல் மதிள் சுவரைக் கொண்டது. காலையில் நிறையபேர் கோவிலின் உட்பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர். ஒரு தடவை சுற்றிவந்தால் கிட்டத்தட்ட ஒரு கிமீ. 

கோவில் 10ம் நூற்றாண்டில் குலோத்துங்கச் சோழனால் கட்டப்பட்டது. மன்னார்குடியின் அப்போதைய பெயர் ராஜாதிராஜ சதுர்வேதிமங்கலம். பிறகு பல அரசர்கள் காலத்தில் விரிவுபடுத்தப்பட்டது. 

கோவிலின் மிகப் பெரிய ராஜகோபுரம் நாயக்கர் காலத்தில் 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. நாயக்க மன்னர்கள் ஆயிரங்கால் மண்டபத்தையும் நிர்மாணித்திருக்கிறார்கள்.  நாயக்கர் காலத்தில் இந்த ஊர், அவர்களின் இரண்டாவது தலைநகராக ஆனது. அப்போதுதான் ராஜமன்னார்குடி என்ற பெயர் வந்ததாம். 

இதனை தென்னிந்திய துவாரகை என்று சொல்கிறார்கள் (இன்னொன்று குருவாயூர்). ஆச்சர்யமாக, இந்த இரண்டு கோவில்களுக்குமே வைணவ ஆழ்வார்கள் பாசுரங்கள் பாடவில்லை. அதனால் அவை காலத்தால் பிற்பட்டவை என்றே கருதப்படுகிறது.











நம் முன்னோர்கள் எப்படிப்பட்ட பிரம்மாண்டமான கோவில்களை நிர்மாணித்திருக்கிறார்கள், நால்வீதி, பெரிய கோவில், கோவிலுக்கான தெப்பக்குளம் என்று திட்டமிட்டுக் கட்டியிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள இந்தக் கோவிலுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது போய்வாருங்கள். கோவிலின் ஆன்மீக அதிர்வலைகளைப் பெற்றுவாருங்கள்.

 = = = = = =

105 கருத்துகள்:

  1. கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்..

    வாழ்க குறள் நெறி..

    பதிலளிநீக்கு
  2. இன்று புண்ணிய புரட்டாசி..

    ஸ்ரீமந்
    நாராயணனின்
    நல்லருளால்
    நல்லோர் நலம் பெறுக..

    ஓம் ஹரி ஓம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்று மாதப்பிறப்பு. எங்களுக்கு மஹாளய தர்ப்பணம்.

      நீக்கு
    2. எங்க வீட்டில் நாளைக்குத் தான் நவமி திதியில் ஹிரண்ய ஸ்ராத்தம். நாளைக்காலை வருவது கஷ்டம்.

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமைய வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. செண்பகாரண்யம் எனப்பட்ட திருத்தலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தல வரலாற்றுக்குள் நுழையவில்லை. அந்த ஊரில் சதுர அடி 3000ரூபாயைத் தொட்டுவிட்டது. அங்குள்ளவர்கள் சொன்னது, தஞ்சையில் நில மதிப்பு இதைவிட 150-200 ரூபாய் குறைவு என்று.

      இந்த மாதிரி ஊர்களுக்குச் செல்லும்போது, ஏன் அங்கேயே வாழ்ந்துவிடக்கூடாது என்று தோன்றும்.

      நீக்கு
  5. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். வாழ்த்துகள். பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  6. ஒரே ஒரு முறை தான் இந்தக் கோயிலுக்குப் போகும் வாய்ப்புக் கிடைத்தது. இந்த ராஜகோபாலனின் இன்னொரு பிரதியான வடுவூர்க்காரனையும் தரிசித்தோம். மூன்றாவது பிரதியான ஆறுபாதி/வளநகர் ராஜகோபாலனைத் தான் இன்னமும் தரிசிக்கவில்லை. அந்த வழியாகவே பலமுறை போய் வந்தும் போக முடியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீக்கிரமே வாய்ப்பு கிடைக்கட்டும்.

      நீக்கு
    2. ஓரிரு வருடங்களுக்கு முன்பு யாத்திரைக் குழுவுடன் சென்றிருந்தபோது, காலையில் வயிறு அப்செட். மூலவரைத் தரிசித்தபின், தாயார் மற்றும் எந்த சன்னிதியையும் சேவிக்காமல் பேருந்து கிளம்புவதற்குள் உடலைத் தயார்செய்துகொண்டேன். ஒருவநாளில் 4 தலங்களுக்குமேல் போக வேண்டி இருக்கும். கோவிலைப் பற்றி (அமைப்பு போன்றவை) தெரியாத்தால், திரும்பவும் தாயார் சன்னிதிக்குப் போகலை. மனைவி எல்லாவற்றையும் தரிசனம் செய்தாள். எங்களுக்கு இந்தமுறை நன்கு வாய்த்தது.

      நீக்கு
    3. வடுவூரில் இராமரைத் தரிசித்தேன். நீங்கள் சொல்வது வேணுகோபாலன் சன்னிதியாக இருக்கும். சரியாக தரிசனம் செய்யவில்லை

      நீக்கு
    4. இல்லை நெல்லை. வடுவூரில் ஶ்ரீராமர் வந்தப்புறமா இந்த ராஜகோபாலனின் புகழ் கொஞ்சம் மங்கித்தான் விட்டது. இவரைப் பற்றிக் காஞ்சிப் பெரியவர் சொன்ன கருத்துக்களை "தெய்வத்தின் குரலில்" படிக்கலாம். தமிழ்த்தாத்தா திரு உ.வே.சா. அவர்கள் இந்த மூவரையும் தேடித் தரிசித்ததை ஓர் நினைவுக் கட்டுரையாகத் தன் நினைவு மஞ்சரியில் சொல்லி இருக்கார். அதைத் தேடி எடுத்துப் போடுகிறேன்.

      நீக்கு
    5. கண்டிப்பாகப் பகிருங்கள். நான் படித்த நினைவு இல்லை (உவேசா)

      நீக்கு
    6. ஸ்ரீ உவேசா அவர்கள் தனது சுயசரிதையில் ("என் சரித்திரம்') தான் எப்போதோ ஒரு நூலில் "செண்டால் அடித்ததாக" படித்த போது மலர்/பூ செண்டால் அடிப்பதில் என்ன விசேஷம் என்பது புரியாமல் இருந்ததாகவும் மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலனை சேவிக்க வந்த போது அங்கு அர்ச்சகர் ஸ்ரீராஜகோபாலன் கையில் வைத்திருக்கும் சாட்டையைக் காட்டி "செண்டு" என்று சொன்ன போதுதான் செண்டால் அடிப்பது என்பதற்கு அர்த்தம் சாட்டையால் அடிப்பது என்று புரிந்தது என எழுதியிருப்பார். இங்கு உள்ள போட்டோக்களில் ஒன்பதாவது set ல் உள்ள முதல் போட்டோவில் உள்ள தூண் சிற்பத்தில் வலது கையில் உள்ள நுனியில் இரு வளைவாக உள்ள சாட்டைதான் "செண்டு".

      நீக்கு
    7. உ.வே.சா. அவர்கள் சுயசரிதையில் இதை எழுதவில்லை. நினைவு மஞ்சரி பாகம் ஒன்றில் மூன்றாவதாக வரும் கட்டுரை இந்தச் "செண்டலங்காரர்" என்பது. புத்தகத்தையும் கட்டுரையையும் எடுத்து வைச்சிருக்கேன் நெல்லைக்காகத் தட்டச்சு செய்வதற்கு. மாலைக்குள் தட்டச்சிப் போட முயல்கிறேன். மன்னார்க்குடிக்காரன் கையிலே செண்டில்லாமல் இருப்பதில்லை.

      நீக்கு
    8. வடுவூரானைப் பற்றி உ.வே.சா. எழுதினதாத் தெரியலை. குறைந்த பட்சமாக நினைவு மஞ்சரியில். தெய்வத்தின் குரலில் தான் படிச்சிருப்பேன். தேடிப்பார்க்கிறேன்.

      நீக்கு
  7. தேவையான விபரங்களுடன் சுருக்கமாக எழுதப்பட்ட கட்டுரை. அருமையான படப்பகிர்வு. செண்பகத்தம்மாள் காலங்கார்த்தாலேயே சுறுசுறுப்பாய்க் குளிச்சு முடிச்சுத் தயாராய் இருப்பதைப் பார்த்தாலே சந்தோஷமாக இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்கவும். :( செங்கமலத்தம்மாள்! செண்பகாரண்யத்தைப் பற்றி நினைச்சுட்டே எழுதினதால் செண்பகத்தம்மாள்னு எழுதிட்டேன். :)

      நீக்கு
    2. தண்ணீர் டால்கிலிருந்து பைப்பில் தண்ணீர் பாய்ச்சி யானையைக் குளிக்க வைப்பதும் அழகுதான். வலது காலைத் தூக்கு என்று சொல்லி, அது தூக்கியவுடன் தேய்த்து விடுவதிலும், ம்ம் அசையாதே என்று கட்டளை பிறப்பித்து தலைமுடி வாரிவிடுவதையும் ரசித்துப் பார்த்தேன். ஆனால் இந்தப் பணியாளர்களுக்கெல்லாம் சுமாரான சம்பளம்தான்.

      நீக்கு
    3. // இந்தப் பணியாளர்களுக்கெல்லாம் சுமாரான சம்பளம்தான்.. //

      இது தெய்வ கைங்கர்யங்களுள் ஒன்று..

      அர்ச்சகர்களும் திருக்கோயில் பணியாளர்களும் நாணல் போல் இருக்க அதி அதி காரங்கள் அரச மரங்களாய் இருக்கின்றன..

      விழுங் காலமும்
      எழுங் காலமும்
      எல்லாவற்றுக்கும் பொது..

      நீக்கு
    4. துரை செல்வராஜு சார்... கருத்தை ரசித்தேன்.

      நீக்கு
  8. நெல்லைக்கு நல்வரவு. ஞாயிறு கோயில்  படக்கதை நெல்லை தொடங்கியது எங்கள்  ப்ளோகிற்கு ஒரு எனர்ஜி டானிக்.

    மன்னார்குடியில் இருந்து தொடங்கியது எனக்கு தற்போது பதிவுலகிலிருந்து விலகி இருக்கும் "மன்னார்குடி டேஸ்" புகழ் ஆர். வேங்கட சுப்பிரமணியன் (RVSM) அவரை நினைவூட்டியது. 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் கோயிலைப் பற்றி அதிகமாக எழுதுவதைவிட படங்களைப் பகிர்ந்துகொள்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என நினைத்திருக்கிறேன். ஆன்மீகப் பயணக் கட்டுரையாகிவிடக் கூடாது, ஞாயிறு படங்கள் என்ற நிலையில் இருக்கணும் என்று எண்ணம்.

      நீக்கு
    2. ஊர்க்கார்ர்கள் திறைய விஷயங்கள் எழுதுவார்கள். நான் பயணி என்ற அளவிலும் படங்கள் என்ற அளவிலும் நிறுத்திக்கொண்டேன்.

      நீக்கு
    3. நான் கோயிலைப் பற்றி அதிகமாக எழுதுவதைவிட படங்களைப் பகிர்ந்துகொள்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என நினைத்திருக்கிறேன். ஆன்மீகப் பயணக் கட்டுரையாகிவிடக் கூடாது, ஞாயிறு படங்கள் என்ற நிலையில் இருக்கணும் என்று எண்ணம்.//

      கைதூக்கி, தம்ப்ஸ் அப்!!!

      கீதா

      நீக்கு
    4. உண்மையைச் சொல்லணும்னா, புராணக் கதைகள் போன்றவைகளை கோயிலுடன் தொடர்புபடுத்துகிறார்கள். ஆனால் அவற்றின் உண்மைத் தன்மை, நம் பார்வையில் (நாம் அதனைக் காலத்துடன் தொடர்புபடுத்திப் பார்ப்போம்) கொஞ்சம் குறைவு

      நீக்கு
  9. அது சரி. எனக்கு ஒரு ஜந்தேகம். கோயிலுக்கு வாங்கும் அல்லது கொடுக்கும் யானைகள் ஏன் பெண் யானைகளாகவே இருக்கின்றன? புதன் கேள்விக்குக் கூட வைச்சுக்கோங்க. :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி அல்ல. வேறு கோவில் பதிவுகள் வரும்போது இவை தெரியும்.

      நீக்கு
    2. தலைவனைச் சுமக்கும் பொறுப்பு என்பதாலும் பொதுவாக பெண் யானைகள் கட்டுக்கு அடங்காமல் போகாது, பொறுப்பு மிக்கவை என்பதாலும் இருக்கலாம். யானைக் கூட்டத்திற்கு எப்போதுமே ஒரு பெண் யானை தலைவி என்பதையும் நினைவில் கொள்ளவும். அங்கு பெண்வழி அரசாட்சிதான். சண்டித்தனம் செய்யும் எந்த ஆண் யானையையும் கூட்டத்திலிருந்து துரத்திவிடுவர். அங்கு ஆண் யானையின் வேலை, இனப்பெருக்கம்,

      நீக்கு
    3. குருவாயூர் கேசவனை மறக்க முடியுமா?

      நீக்கு
    4. கீதாக்கா, முக்கியமான பாயின்ட் என்னன்னா, பருவகாலம் ஆண் யானைக்கும் பெண் யானைக்கும் ஒரே போலத்தான் மஸ்த் என்று சொல்லப்படும் இந்தப் பருவகாலம் 2-3 மாசம் வரைக்கும் இருக்கும். பருவகாலத்தில் ஆண் யானை கட்டுக்கடங்காது. ரொம்ப மூர்க்கமா இருக்கும். அப்ப பொது வெளியான கோயில்களில் மக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் அதைக் கையாளுவது ரொம்பக் கடினம். ஆனா பெண் யானைகள் பொதுவாக அமைதியானவை, பாகனின் சொற்களுக்குக் கட்டுக்கடங்கும். பருவகாலத்தில் பெண் யானைங்களை பாகன் கள் எளிதில் கையாளமுடியும். விழாக்கள் சமயங்களிலும் பெண் யானைகளைக் கொஞ்சம் ஈசியா கையாள முடியும் - பின்ன ஒரே சத்தமா இருக்குமே மேளம் தாளம்னு - அதனாலதான் கோயில்களில் குறிப்பாகத் தமிழ்நாட்டுக் கோயில்களில் பெண் யானைகள் பராமரிக்கப்படுகின்றன.

      கீதா

      நீக்கு
    5. ஆமாம் நெல்லை யானைக்கூட்டத்தில் பெண் யானைதான் ஆட்சி!!!! கூட்டம் கூட்டமா....அம்மா அக்கா தங்கச்சி, மகள்னு இருப்பாங்க. ஆண் யானை பருவம் வரும் வரை அம்மாவோடு இருக்கும் அப்புறம் தனியாதான். பெண்ணும் இனப்பெருக்கக் காலத்துல மட்டும் தனியா போகும்.

      கீதா

      நீக்கு
    6. //குருவாயூர் கேசவனை மறக்க முடியுமா?// அதான் எனக்கும் ஆண் யானைகள் குறித்து நினைவு வந்ததுக்குக் காரணம் திரு கௌதமன் சார்.

      நீக்கு
  10. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே.

    தங்களின் கோவில் படங்களுடன் கூடிய இப்பதிவு அருமையான பதிவாக உள்ளது. மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் நன்றாக உள்ளது. கோபுர படங்களும், கோவில் சார்ந்த பிற படங்களும், கோவில் யானை படங்களும் கண்களுக்கு நிறைவாக இருக்கின்றன.மழை மேகத்துடன் தாங்கள் இயற்கையோடு எடுக்கப்பட்ட கோவில் கோபுர படங்களும் மற்றவைகளும் பார்க்க ரம்யமாக உள்ளது. இந்த ஊரின் விளக்கமும், இக்கோவில் தென்னிந்தியாவின் இரண்டாவது துவாரகா என்ற விபரமும் தெரிந்து கொண்டேன்.

    கோவில் நன்கு பெரிதாக உள்ளது. அந்த காலத்தில் கட்டப்பட்ட கருங்கல்லினால் ஆன கோவில்களே ஒரு சிறப்புதான். இந்த கோவிலுக்கு செல்லும் வாய்ப்பை பெருமாள் ஏற்படுத்தி தந்தால் சந்தோஷமடைவேன். புரட்டாசி முதல் நாளன்று பெருமாளையும், பெருமாள் கோவிலையும் தரிசிக்க வைத்தமைக்கு தங்களுக்கு மனமார்ந்த நன்றி. பகிர்ந்த எங்கள் பிளாக் ஆசிரியர்களுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகப் பெரிய கோவில். அமைதியான தரிசனம் கிட்டும். காலையில் விஸ்வரூப தரிசனம் சென்றால் இரண்டு சன்னிதிகளிலும் அருமையான கேசரி பிரசாதமும் கிடைக்கும்.

      நீக்கு
  11. புரட்டாசி மாத்த் தொடக்கத்தில் வெளியிட்டது எதேச்சையாக அமைந்தது. நன்றி எபிக்கும் கௌதமன் சாருக்கும். கோவிலைப் பற்றி நிறைய எழுதினால் ஆன்மீகம் பக்கம் அதிகமாகிவிடும். கோவில்கள் எனக்கு ஆச்சர்யத்தையும் பண்டைக்கால கலாச்சாரம், ஒழுங்குமுறை போன்றவற்றையும் நினைவுபடுத்தும். அரசர்கள் ஆட்சியில் வியாபாரம் செய்பவர்களைத் தவிர வேறு எவரிடமும் செல்வம் சேர்ந்துவிடாமங், அதேசமயம் மகிழ்ச்சியோடு உணவு உடைக்குக் குறைவில்லாமல் பார்த்துக்கொண்டனர் எனத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  13. மன்னார்குடி ஸ்ரீவித்யா இராஜகோபாலஸ்வாமி கோவில் படங்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது.
    நிறைய தடவை போய் இருக்கிறோம் இந்த கோவிலுக்கு.
    புரட்டாசி மாதம் மாலவன் கோவில் தரிசனம் கிடைத்து விட்டது.
    நன்றி .

    இந்த மாதிரி கோயில்களை வலம் வந்தாலே போது தனியாக நடைபயிற்சி வேண்டாம்.

    ஆயிரங்கால் மண்டபம், கோயில் சிற்பங்கள் அருமையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கோவிலில் சிற்பங்கள் வெகு குறைவு. கோவில் பிரம்மாண்டமானது. சிற்பங்களும் ஆஹா ஓஹோ என்று சொல்லும்படி இல்லை.

      நீக்கு
  14. யானை குளிக்க மேலே இருந்து பூமழை பொழிய(ஷவர்) வசதி செய்து இருக்கிறார்கள் போலவே! நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மாதங்களில் ஓகே. ஆனால் ஜூன் ஜூலை வரை (ஃபெப் மார்ச்சிலிருந்து) யானைக்கு நிறைய நீர் வேண்டும். குளிப்பதை யானை எஞ்சாய் செய்ததைப் பார்த்தேன்.

      கோவில் வலம் வருவது என்பது வேறு. நடைப்பயிற்சியில் சிறிது வேகமாக நடக்கவேண்டும். ஆனால் கோவில் உலாவில் பொதுவாக நாம் வேகமாக நடப்பதில்லை

      நீக்கு
    2. //காலையில் நிறையபேர் கோவிலின் உட்பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர். ஒரு தடவை சுற்றிவந்தால் கிட்டத்தட்ட ஒரு கிமீ. //

      கோவில் வலம் என்றது உட்பிரகாரம், வெளி பிரகாரம் என்ற இடங்களும், நீங்கள் சொன்ன உடபகுதியை சேர்த்துதான் நெல்லை தமிழன்.

      நீக்கு
    3. நீங்கள் சொல்வது புரிந்தது. சிலர் சில கோவில்களைப் பற்றி எழுதும்போது அது மனதில் தங்கிவிடும். அந்தக் கோவிலுக்குச் செல்லும்போது அவர் நினைவு வரும். ஒத்தக்கடை நரசிம்ஹர் கோவிலுக்குச் செல்லும்போது உங்கள் நினைவும், திருச்சேறை சாரநாதன் கோவிலுக்குச் செல்லும்போது துளசி டீச்சர் நினைவும், திருவண்பரிசாரம் செல்லும்போது கீதா ரங்கன் நினைவும், சிதம்பரம் கோவில் செல்லும்போது கீதா சாம்பசிவம் மேடமும் நினைவுக்கு வரும்

      நீக்கு
  15. நெல்லை, முதலில் அட்டகாசமான படங்களுக்குப் பாராட்டுகள்!

    நாங்க பெரும்பாலான எபி விசிட்டர்ஸ் இங்கு சொல்லியதுண்டு என்று நினைக்கிறேன் ஞாயிறு படங்கள் விளக்கங்களுடன் ஊர்ப் பெயருடன் பதிவாக வந்தால் நன்றாக இருக்கும் என்று. ஹப்பா அது நெல்லையினால் நிறைவேறியது. அதற்கும் பாராட்டுகள், வாழ்த்துகள்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. உண்மை. படத்துடன் ஏதாவது விளக்கம் இருக்கணும். கௌதமன் சார் முயற்சியையும் பாராட்டணும்.

      நீக்கு
  16. நெல்லை செங்கமலம் மனதை கொள்ளை கொண்டுவிட்டாள்!!!! என்ன அழகு! ஹூம் அவளை மட்டுமாவது கொஞ்சம் பெரிசா போட்டிருக்கலாம்ல! அது ஒன்னுதான் குறை.

    நீங்கள் சொல்லியிருப்பது போல் தல வரலாறு கோயில் பத்திய செய்திகள் எல்லாம் நெட்டில் கொட்டிக் கிடக்கின்றன. அதனால் நானும் அதை எழுதுவதைத் தவிர்ப்பதுண்டு. நீங்கள் சொல்லிருக்காப்ல படங்கள், நம் நம் அனுபவங்கள், ரசனைகள் சொன்னால் நல்லது. எனவே அதுக்கு ஹைஃபைவ்!

    ஆயிரங்கால் மண்டபம் சிற்பங்கள் அட்டகாசம் போங்க!! ரசித்துப் பார்த்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேறு ஒரு பதிவில் சேர்த்துவிடுகிறேன். (அல்லது கோவில் யானைகள் என்று ஒரு பதிவு எழுதினால் அதற்கு 8 யானைகள் படமாவது வேண்டாமோ?) யானை மிக அழகு. அதைத் தொட்டும் பார்த்தேன் (திருப்பதியில் இரண்டு யானைகள்.) தோல் மிகவும் தடிமனாகவும் சொரசொரவெனவும் இருந்தது.

      நீக்கு
  17. இந்த மன்னார்குடிக் கோயில் போயிருக்கிறேன் ஆனால் நினைவே இல்லை. படங்கள் பார்த்தும் நினைவுக்கு வரவில்லை.

    கடைசிப் படத்தில் ஓரத்தில் வடுவூர் ராமர் போல இருக்கிறதே...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை. வடுவூர் ராமர் சிலை கொள்ளையழகு. நம்மைப்பார்த்துச் சிரித்துகொண்டிருக்கும் சிலை அது. சிலை அமைவதும் பல்வேறு காரணிகளுக்கு உட்பட்டது.

      நீக்கு
    2. வடுவூர் ஶ்ரீராமர் பல வருடங்கள் மறைந்திருந்து பின்னர் அகப்பட்ட கதையையும் தெய்வத்தின் குரலில் படிக்கலாம்.

      நீக்கு
  18. இந்தக் கோவில் 20 ஏக்கருக்கும் மேலான இட த்தில் அமைந்திருக்கிறது. கருங்கல் மதிள் சுவரைக் கொண்டது. காலையில் நிறையபேர் கோவிலின் உட்பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர். ஒரு தடவை சுற்றிவந்தால் கிட்டத்தட்ட ஒரு கிமீ. //

    5 முறை சுத்தி வந்தா ஒரு நாள் நடைப்பயிற்சி ஆகிவிடும்/////
    10 ஆயிரம் அடிகள் வந்துடுமோ?!!!!

    அதோடு கூடவே கோயில் கேசரியுமா!!! ஹாஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுத்தமான காற்று. கோவிலைச் சுற்றி பிரதட்சணமாக நடப்பது. தென்னை மரங்கள், கோவில் கோபுரங்கள்.... வேறு என்ன வேண்டும்? 9 தடவை பிரதட்சணம் செய்தால் இரட்டைப் பலன்கள்.

      நீக்கு
  19. பெரிய கோயில். கற்சுவர்கள், தரைகள், சிற்பங்கள். இப்படியான கோயில்கள் ரொம்பப் பிடிக்கும். கோபுரங்கள். கற் தூண்கள் இல்லாமல் மொசைக், டைல்ஸ் போட்டு இப்போது கட்டப்படும் கோயில்கள், புதுப்பித்தல் என்று அதில் டைல்ஸ் மொசைக் போடுதல் ஏனோ அவ்வளவு ஈர்ப்பதில்லை...இறைவனைச் சொல்லவில்லை...கோயில் அமைப்பு. . கருங்கல் கிடைப்பது அரிதாகி இருப்பதால் இருக்கலாம்.

    அந்தந்தக்காலச் சூழலில் கிடைக்கும் பொருட்கள் கொண்டுதானே எல்லா வடிவமைப்புகளும் நிர்மாணிக்கப்படுகின்றன! இப்போது டைல்ஸ், மொசைக் காலகட்டம் எனவே அதையும் சொல்ல முடியாதோ?!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய காலம்போல இப்போது சுத்தம் குறைவு. ஆட்கள் வசதியும் குறைவு. அதனால்தான் கருவறையில்கூட டைல்ஸ் பதிக்கிறார்கள், சட் என்று சுத்தம் செய்துவிட முடியும்.

      சன்னிதியின் சான்னித்யம், நம் மனதைப் பொருத்தது. அதுவும் தவிர, செயற்கை அலங்கார விளக்குகள் இல்லாமல், தீப ஒளியிலேயே கடவுளைச் சேவிக்கும்போது (திருப்பதியில் சாற்றுமுறை சேவையின்போது இதனை உணர்ந்திருக்கிறேன்) அது தரும் அனுபவம் தனி.

      நீக்கு
  20. பதிவு அருமை!
    இது என்னுடைய ஊர். என் தாத்தாக்கள், பாட்டிகள், மாமியார், பெரியம்மாக்கள் எல்லோரும் வாழ்ந்த ஊர். நான் படித்த ஊர். அதனால் இந்தப்பதிவு எனக்கு ஸ்பெஷல். பள்ளி சென்று படித்தது, கோவிலுக்கு அவ்வப்போது தோழியரோடு செல்வது, கோவிலைச்சுற்றியிருக்கும் வீதிகளில் [ கோபாலசமுத்திரம் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று பெயர்கள்] வலம் வருவது, தெப்பக்குளத்தில் நீந்துவது என்று இளமையின் பசுமை நினைவுகள் உங்கள் பதிவைப்படித்ததும் குபீரென்று எல்லாமே மேலெழுந்து மனம் முழுவதும் நிறைந்தன. அந்த வகையில் உங்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.
    தெப்பக்குளம் தெப்பம் மிகவும் புகழ் வாய்ந்தது. எங்கள் வீடு தெப்பக்குளம் மேலக்கரையில் இருந்ததால் இரவு முழுவதும் மாடியில் அமர்ந்தவாறே தெப்பம் பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எடுத்த படங்களில் வெகு சிலவற்றையே பகிர்ந்துகொண்டிருக்கிறேன். எதற்காக இப்படிப்பட்ட ஊர்களை விட்டுவிட்டு வெளியூர் வருகிறோம், பிறகு நம் பழக்கவழக்கங்கள் மாறி, நகரத்திற்குக் குடிபெயர்கிறோம், அப்படி என்னதான் வாழ்க்கையில் அச்சீவ் பண்ணுகிறோம் என்று தோன்றும். மன்னார்குடி போன்ற தலங்களில் காலத்தைக் கழிக்க முடிந்தால் (குறைந்தபட்சம் ரிடையர்ட் லைஃப்), அதற்கு ஈடு வேறு என்ன இருக்கமுடியும்?

      நீக்கு
  21. தொல்காப்பியத்துக்கு மறுப்புரை எழுதிய என் பாட்டனார் புலவர் சோமசுந்தரம் பிள்ள அவர்கள் வாழ்ந்ததும் இந்த ஊர் தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவரைப்பற்றி நான் அதிகமாக அறிந்ததில்லை. உங்கள் தளத்தில் நினைவாக எழுதுங்கள்.

      நீக்கு
    2. புலவரைப் பற்றி மேலதிக விவரங்களை எழுதுங்கள்.

      நீக்கு
  22. படங்களும், விடய விளக்கங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  23. படங்களைப் பார்க்க மிகவும் சந்தோஷமாகவும் அருமையாகவும் இருக்கிறது அன்புடன்

    பதிலளிநீக்கு
  24. அன்பின் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.
    எல்லா நாட்களும் ஆரோக்கியம் ,ஆனந்தம் நிறைந்திருக்க இறைவன் அருள் வேண்டுகிறேன்.
    அன்பின் நெல்லைத்தமிழனின் மன்னை ராஜகோபாலனின்
    படங்கள், செங்கமம் யானையின் அழகு எல்லாமே
    சிறப்பு. இந்தப் புதுவிதமான முயற்சிக்கு வாழ்த்துகள்.

    புனித பயணங்களோ வெறும் பயணமோ
    உடல் நிலை சரியாக இல்லாவிட்டால்
    மிக சிரமத்தில் கொண்டுபோய் விடும். முக்கியமாக ஜீரணக்
    கோளாறுகள்.

    நம் கீதாசாம்பசிவம் முன் சிலக் கட்டுரைகளில் அவர்
    அனுபவித்த அசந்தர்ப்பளைச் சொல்லி இருப்பார்.
    நம் துளசி கோபாலும்
    பயணத்தின் போது
    பருப்பு நெய் சாதம் மட்டுமே சாப்பிடுவார்.

    கண்ணன் அழகைக் கண்டு களிக்க மனம் லயிக்க வேண்டும் என்றால்
    உடலும் சரியாக இருக்க வேண்டுமே.
    உங்களுக்கு இந்த நல்ல தரிசனம் கிடைத்தது பூர்வ ஜன்ம
    புண்ணியம் தான் முரளிமா.

    படங்கள் தெளிவாக மிக அருமையாக இருக்கின்றன.
    நானும் அங்கு போய் வந்த உணர்வு.வாழ்த்துகளும் நன்றியும் அப்பா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வல்லிம்மா... இதை ஒரு தொடராக (படங்களுக்குத்தான் முக்கியத்துவம்) எழுத நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்...எவ்வளவு வாரம் எழுதமுடிகிறது என்று. ஆனால் படங்கள் அனேகமாக எல்லாமே நான் எடுத்தவைதாம்.

      நீக்கு
  25. மன்னார்குடி அபிமானஸ்தலம். ஆழ்வார்களின் பாசுரம் இல்லையென்றாலும் பின்னால் வந்த கடைசி ஆச்சார்யரான மணவாள மாமுனிகள், ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழி 4 ஆம் பத்து 6 ஆம் திருவாய் மொழி 10 பாசுரங்களையும் மன்னார்குடி ராஜகோபாலனுக்கு சமர்ப்பித்துள்ளார். குறிப்பாக 10 ஆம் பாசுரமாகிய
    உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள் என்ற பாசுரத்தில் வரும் வண்துவராபதி மன்னார்குடியைக் குறிக்கிறது என்றே நம் பூர்வாசார்யர்கள் கூறுவர்கள்.
    கோஸகன் என்ற அழகான பெயரும் இந்தப் பெருமாளுக்கு உண்டு.

    நல்ல நல்ல படங்கள் கண்ணுக்கு விருந்தாக இருக்கிறது. தலபுராணங்கள் யாரோ இட்டுக்கட்டியவை. படிக்காமல் இருப்பது மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

    .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரஞ்சனி நாராயணன் மேடத்தை வெகுகாலத்துக்கு, முதல் முறையாக ஒரு பின்னூட்டத்தில் பார்க்கிறேன். நீங்கள் சொல்லியிருப்பது உண்மை. அந்தக் கோவிலிலும் இந்தப் பத்துப் பாசுரங்கள் கல்வெட்டில் பதித்திருக்கிறார்கள்.

      நீக்கு
  26. இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டுச் சொல்லத் தோன்றியது:

    1. மன்னார்குடி கோயில்
    பற்றிய பதிவில் யாருமே
    ராஜமன்னார் -- ரங்க மன்னார் திருப்பெயர்களை உச்சரிக்காதது.

    2. இந்த ஊர் உயர் நிலைப் பள்ளியில் தான் கரிச்சான் குஞ்சு (நாராயணசாமி) என்ற பெயர் கொண்ட பழம் பெரும் எழுத்தாளர் ஆசிரியராக இருந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரங்கமன்னார் ஸ்ரீவில்லிபுத்தூர் என்று நினைவு. கோவில் படங்கள் தவிர, அதிகமாகக் கோவிலைப்பற்றி எழுதவில்லை. அது வரவேற்பைப் பெறாது. படங்கள் மூலம் அங்கு போனவர்கள் நினைவை மீட்டுக்கொள்ளவும், போகாதவர்கள் போகணும் என்ற ஆவலைத் தூண்டுவதும்தான் என் எண்ணம்.

      அந்த ஊரின் மற்ற விசேஷங்களைப் பற்றி நான் எழுதவில்லை (தெரியாது என்பதுதான் உண்மை)

      நீக்கு
    2. ரங்க மன்னார் ஶ்ரீவில்லிபுத்தூர் தான். :)

      நீக்கு
    3. தெரியும். ராஜமன்னாரும் -- ரங்க்மன்னாரும் இரட்டைக் குழந்தைகள் மாதிரி.
      மன்னார்குடி போகும் பொழுதெல்லாம் ரங்க மன்னாரும், ஸ்ரீவில்லிப்புத்தூர் செல்லும் பொழுதெல்லாம் ராஜமன்னாரும் பிரித்துப் பார்க்க முடியாதபடி மனசில் நிலைகொள்வார்கள்.

      நீக்கு
    4. மன்னார்குடியில் "ராஜமன்னார்" ஶ்ரீவில்லிபுத்தூரில் "ரங்கமன்னார்"

      நீக்கு
  27. கட்டுரையை பிரசுரித்த பாங்கு ஏமாற்றம் தந்தது.

    1. குவியலாக கோயில் காட்சிகளைப் படங்களாக ஏனோ தானோ என்று எடுத்து இறைக்காமல்
    ஒன்றன்பின் ஒன்றாக
    பெரிசு பண்ணி பார்க்கிற மாதிரி போட்டிருக்கலாம்.

    2. கட்டுரையின் ஆரம்பத்தில் மத்தியில்
    பெரிய வண்ண எழுத்துக்களில் தனித்து எடுப்பாகத் தெரிகிற மாதிரி மன்னார்குடி
    இராஜகோபால சைவம் கோயில் என்று இரட்டை வரிகளில் வருகிற மாதிரி போட்டிருக்கலாம்.

    3. ஒரு திருக்கோயில் தரிசனத்தை இவ்வளவு சாதாரணமாக நெல்லை எழுதுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
    விவரிப்பில் ஜீவன் இருந்திருக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1. ஒரு கோவிலில் (சாத்தியமுள்ளவற்றில்) குறைந்தபட்சம் 60 படங்களாவது எடுத்துவிடுவேன். எனக்கு நிறைய படங்களைப் பகிர்ந்துகொள்ளணும் என்று ஆவல். 10 படங்களுக்கு மேல் இருந்தால் அயர்வாகிடும். அதனால் 10 படங்கள், ஆனால் ஒவ்வொரு வரியிலும் 2-4 படங்களைக் கோர்த்துவிடுகிறேன்.

      3. ஜீவன்லாம் என் எழுத்தில் எதிர்பார்ப்பது நியாயமா? இன்னொன்று கோவில், அதன் ஆன்மீகம், பாசுரங்கள் இன்னும் பலவற்றை விவரித்து எழுத எனக்கு ஆசைதான். ஆனால் அதற்கான தளம் இதுவல்ல என்பது என் அபிப்ராயம்.

      நீக்கு
    2. கோவில், அதன் ஆன்மீகம், பாசுரங்கள் இன்னும் பலவற்றை விவரித்து எழுத எனக்கு ஆசைதான்.....

      அவ்வாறு தாங்கள் எழுதினால் கண்டிப்பாக பல உயர்ந்த கருத்துக்களை எங்களாலும் அறிந்துக் கொள்ள முடியும் ....

      எத்துணை முறை வாசித்தாலும் ...ஒவ்வொரு முறையும் ஒரு புது அனுபவமே கிட்டும் அல்லவா ...

      நீக்கு
    3. நன்றி அனுப்ரேம். ஆனால் அதற்கான தளம் இதுவல்ல என்பது என் அபிப்ராயம். எந்தக் கோவிலுக்குச் சென்றாலும், எத்தனைமுறை சென்றாலும் புதுப்புது அனுபவம் கிட்டும். மன்னார்குடியில் மூன்று நாட்கள் தங்கியிருந்து 3 நாளும் விஸ்வரூபம் சேவித்தாலும், ஒரு நாள் யானை வரவில்லை (உடம்பு சரியில்லையோ என்னவோ).

      நேரம் கிடைக்கும்போது, திருவாய்மொழி 8ம் பத்து 8ம் திருவாய்மொழி, 'உளருமில்லையல்லராய் உளராய் இல்லையாகியே' பாசுரத்தின் விளக்கத்தைப் படித்துப் பாருங்கள். நம் முன்னோர் எப்படிப்பட்ட சிந்தனாவாதிகள் என்பது தெரியும். ஏன் 'திருமாலால் அருளப்பட்ட சடகோபன்' என்று தன்னைச் சொல்லிக்கொள்கிறார் என்பதும் புரியும்

      நீக்கு
    4. 'உளருமில்லையல்லராய் உளராய் இல்லையாகியே' பாசுரத்தின் விளக்கத்தைப் படித்துப் பாருங்கள்.....கண்டிப்பாக வாசித்து பார்க்கிறேன் ...

      நீக்கு
  28. 2.
    * மன்னார்குடி இராஜ கோபால சுவாமி கோயில் என்று திருத்தி வாசிக்க வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  29. பதில்கள்
    1. நன்றி கரந்தை ஜெயக்குமார் சார். உங்கள் ஊர் அருகில். இந்தத் தடவை உங்கள் ஊர் வழியாக இருமுறை சென்றேன்.

      நீக்கு
  30. படங்கள் அருமை. தகவல்களுக்கு நன்றி. யானை செங்கமலம் அழகு.

    பதிலளிநீக்கு
  31. படங்கள் அருமை. மன்னார்குடியிலிருந்து 6 km என்றால் சேரன்குளம் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் திருபவித்ர உத்ஸவமா?

    இதில் உள்ள ஒவ்வொரு போட்டோவையும் அந்த போட்டோ எங்கள் மன்னார்குடி செங்கமலத்தாயார் ஆடிப்பூர உத்சவத்தில் தேரோடும் பிரகாரத்தில் எந்த இடத்திலிருந்து எடுத்த போட்டோ என்பதையும் ரசித்தேன்.

    நான் பிறந்து +2 படித்தது வரை மன்னார்குடி வாசம்தான். இப்போதும் என் தம்பியும் சித்தப்பா மகன்களும் மன்னார்குடியில்தான் வாசம். மன்னார்குடி RVSM ன் Mannargudi Days ல் வரும் கோபாலும் ஸ்ரீராமும் என் சித்தப்பா மகன்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கும் தகவல்களுக்கும் நன்றி.

      நீக்கு
    2. ஆம். உண்மைதான். ஒவ்வொரு கோவிலிலும் முக்கியச் சிற்பங்கள் எல்லாமே ஒரு காரணத்தோடும், புராண இதிஹாசங்களின் தொடர்போடும் உடையவை. அவற்றைப் பொறுமையாகப் பார்க்கவும் அர்த்தம் புரிந்துகொள்ளவும் நாம் முயல்வதில்லை. போனோமா, டக் டக் என்று பெருமாள் தாயார் சன்னிதிகளைச் ஸேவித்தோமா, வந்தோமா என்பதில்தான் நம் பெரும்பாலானவர்கள் கவனம். இடையில் திரை போட்டிருந்தால், கொஞ்சம் நேரம் கழித்து பகவானுக்கு பிரசாதம் கண்டருளப்பண்ணக்கூடாதா, இப்பவா திரை போடணும், நான் அவசரமாப் போகணுமே என்ற மனநிலைதான் நிறையபேருக்கு. நன்றி வரதராஜன்.

      நீக்கு
    3. உங்கள் முந்தைய கருத்துக்கு மறுமொழி சொன்னால், பிளாகார், மறுமொழியில் தவறு இருக்கிறது என்று சொன்னார். அதனால் இங்கேயே பதிவுசெய்துவிட்டேன்.

      இந்தத் தடவை மூன்று நாட்கள் மன்னார்குடியில் தங்கியது எனக்குக் கிடைத்த பாக்கியம். தாமதமாக பதிலெழுதுவதற்கு மன்னிக்கவும்

      நீக்கு
  32. மன்னார்குடி ஸ்ரீவித்யா இராஜகோபாலஸ்வாமி கோவில் .... சிறு வயதில் சென்று இருந்தாலும் ...மீண்டும் செல்ல ஆசைப்படும் ஸ்தலம் ...


    இனிய தரிசனம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து எழுதலாம் (படங்கள் பகிரலாம்) என்று நினைத்திருக்கிறேன் அனுப்ரேம். உங்களுடைய அயரா முயற்சியில் வரும் பதிவுகளை நான் மிகவும் ஆவலுடன் படிப்பேன்.

      உங்களுக்கும் அந்தக் கோவில் தரிசனம் விரைவில் வாய்க்கும். வாய்க்கவேண்டும். கூடவே புன்னகை மன்னன் வடுவூர் இராமனுடையதும்.

      நீக்கு
    2. தொடர்ந்து எழுதலாம் (படங்கள் பகிரலாம்)... பகிருங்கள் அப்படி காணும் பொழுது தான் அங்கு செல்ல வேண்டும் என்னும் எண்ணம் மேலும் மேலும் வலுபெறும் ....


      உங்களுடைய அயரா முயற்சியில் வரும் பதிவுகளை நான் மிகவும் ஆவலுடன் படிப்பேன்..... மிகவும் நன்றி , இப்படி பதிவுகளுக்காக தேடும் பொழுது பல பல உன்னத செய்திகளையும் தகவல்களையும் அறிந்துக் கொள்ள முடிகிறது ...இது வரை தெரியவில்லை என்றால் என்ன இனி அறிந்து கொள்வோம் என்னும் ஆசை தான்


      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!