வெள்ளி, 2 செப்டம்பர், 2022

வெள்ளி வீடியோ : சின்ன கண்ணன் பிறந்தான் இல்லம் வளர நெஞ்சில் வைத்து வளர்த்தேன் ஊர் புகழ

அப்பாவின் நண்பர் மா வரதராஜன் ஒரு கவிஞர். 

அடிக்கடி திருவையாற்றிலிருந்து அப்பாவைப் பார்க்க தஞ்சை வருவார்.  கே டி ஆர் என்கிற நிறுவனம் அவர்களுடையது.  மனைவி வழியில் வசதியானவர் என்று நினைவு.  வெள்ளை வேஷ்டி, வெள்ளை ஜிப்பாதான் எப்போதும் காஸ்டியூம். பளிச்சென்று வாசனையாக இருப்பார்.  எங்களுடனும் அன்பாய்ப் பேசுவார்.  என் திருமணத்துக்கும் வந்திருந்தார்.

அப்பாவிடமிருந்து சிலபலவற்றை எழுதி வாங்கி வேறு பெயர்களில் வெளியிடுவார்.  வேறு சில எழுத்தாளர்களுக்கும் அப்பா கோஸ்ட் ரைட்டராய் இருந்தார் என்று நினைவு.  என் நினைவு சரி என்றால் சுதேசமித்திரனா, இன்னொரு நாளிதழா நினைவில்லை, - இதைப் படிக்கும் என் மூத்த சகோதரர் (படித்தால்) நினைவு வைத்திருக்கக் கூடும் -  ஜவஹரிஸம்  நாளிதழ் அல்லது வார இதழ்.  அதில் அப்பா இவர் சொல்லி 'சஹாப்த நாயகன் சன்னதியில்' என்றொரு தொடர் எழுதினார்.  நாளிதழ் பெயர்தான் சந்தேகம்.  

மா வ, அவர் மனைவி காலமான பிறகு எதையோ இழந்தவர் போல இருந்தார்.  அப்புறம் அதிகம் வருவதில்லை.  அப்புறம் அவர் காலமாகி விட்டார் என்று அறிந்தோம்.​

தேரழுந்தூர் சகோதரிகள் பாடிய பாடல்.  ஏற்கெனவே சொல்லியுள்ளபடி கவிஞர் மா வரதராஜன் பாடல்.  சூலமங்கலம் ராஜலக்ஷ்மி இசை.  ரேவதி ராகத்தில் பாடலை அவர் அமைத்துள்ளதால் பாடல் மனதில் புகுந்து உருக்கி விடும்.  வருடம் 1972 என்றுதான் நினைக்கிறேன்.

வரவேண்டும் வரவேண்டும் தாயே - ஒருவரம்
தரவேண்டும் தரவேண்டும் நீயே (வரவேண்டும்...)
அறம் வளர்க்கும் அம்மா பர்வத வர்த்தனி
ஐயாறு தனில் மேவும் தர்மசம் வர்த்தனி - திரு வையாறு
தனில் மேவும் தர்மசம் வர்த்தனி ( வரவேண்டும்...)
தான் எனும் அகந்தை தலைக்கு ஏறாது
தாழ்ந்த நிலையிலும் தர்மம் மாறாது

வான்புகழ் வள்ளுவன் வகுத்த நல் வழியில்
வையகம் வாழ்ந்திட வரமருள் தாயே (வரவேண்டும்...)



========================================================================================================

1975 ல் வெளியான மயங்குகிறாள் ஒரு மாது படத்தில் முத்துராமன், விஜயகுமார், சுஜாதா, படாபட் நடித்திருக்கிறார்கள்.
எஸ் பி முத்துராமன் இயக்கம்.  கண்ணதாசன் பாடல்களுக்கு இசை விஜயபாஸ்கர்.  இந்தப் படம் பின்னர் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் எடுக்கப்பட்டது.

சம்சாரம் என்பது வீணை என்னும் புகழ்பெற்ற எஸ் பி பி பாடல் இந்தப் படத்தில்தான்.  எனினும் நான் இன்று எஸ் பி பி பாடல் இல்லாமல் யேசுதாஸ் பாடல் ஒன்று பகிர்கிறேன்.  இனிமையான பாடல்.

திருமணமாகி வரும் புதிய மனைவியை கனவுகளோடும் எதிர்பார்ப்புகளோடும் வரவேற்று பாடும் பாடல்.  அழகான வரிகள். ஏற்கெனவே ஒருவனிடம் ஏமாந்திருப்பார் சுஜாதா.  அதை மறித்து முத்துராமனை திருமணம் செய்வதாக குமைவார்.  பிளாக்மெயில் செய்யும், இவர்கள் ரகசியம் தெரிந்த கேடி ஒருபுறம், பழைய காதலனே டிரைவராக மறுபுறம்..  இக்கட்டான நிலையில் சுஜாதா வாணி ஜெயராம் குரலில் பாடும் ஒருபுறம் வேடன் மறுபுறம் நாகம் இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான் எனும் பாடலும் அழகான பாடல்.

இணையத்தில் கிடைக்கும் பாடலில் "வாழையடி வாழையென' வரிகளிலும், கொடுத்து வைத்தேன் அனுபவித்தேன்' வரிகளிலும் சுருதி மாறுவது போல படுத்தும்.

வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம்  
அது தரவேண்டும் வளர் காதல் இன்பம்  
உனக்கென நானும் எனக்கென நீயும் 
இல்லறம் தொடரட்டும் இனிதாக என்றும்  
வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம்  
அது தரவேண்டும் வளர் காதல் இன்பம்  

உந்தன் முகம் பார்த்து  உள்ளம் குளிரும் 
உந்தன் விழி பட்டால் எண்ணம் மலரும்  
உந்தன் முகம் பார்த்து உள்ளம் குளிரும் 
உந்தன் விழி பட்டால் எண்ணம் மலரும்  
காவியம் போல் தொடரட்டுமே  
காவியம் போல் தொடரட்டுமே  
என் காதல் சாம்ராஜ்யம்  நிலையாகவே 

சின்ன கண்ணன் பிறந்தான்  இல்லம் வளர 
நெஞ்சில் வைத்து வளர்த்தேன் ஊர் புகழ  
சின்ன கண்ணன் பிறந்தான் இல்லம் வளர 
நெஞ்சில் வைத்து வளர்த்தேன் ஊர் புகழ  
வாழையடி  வாழையென  வாழையடி வாழையென  
வளரட்டும் எதிர்காலம் இனிதாகவே  

நல்லதொரு மனைவி  நல்ல பிள்ளை 
அமைந்தவர் வாழ்க்கையில் இன்பம் கொள்ளை  
நல்லதொரு மனைவி நல்ல பிள்ளை 
அமைந்தவர் வாழ்க்கையில் இன்பம் கொள்ளை  
கொடுத்து வைத்தேன்  அனுபவித்தேன்  
கொடுத்து வைத்தேன் அனுபவித்தேன்  
அவன் தந்த பரிசுக்கு நன்றி சொல்வேன்


52 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே.

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன்,அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமைய வேண்டுமெனவும், இறைவனை மனமாற பிரார்த்தித்து கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. நீங்களும் உங்கள் புதிய கைபேசியும் நலமா?

      நீக்கு
    2. ஹா ஹாஹா. என் கைப்பேசி நலந்தான். ஏனெனில் அது ஒரு படத்தில் வரும் டயலாக் மாதிரி "புதுசு கண்ணா புதுசு.". ஆனால், நான்தான் எப்போதும் வேலைகள், அதிலும், கொஞ்ச நாட்களாக அதிகபட்ச வேலைகள், அதனால்
      பல(ல்) வலிகளுடன் எப்படியோ ப(ழைய)ழுதாகி இருந்து வருகிறேன். உங்கள் அனனைவரையும் காணும் ஆவலில் இன்று பதிவுலக விஜயம. கைப்பேசி புதிதாகையால் அதனுடனான என் இயக்கமும் சற்று‌ தாமதமாகிறது.

      நிறைய பதிவுகளை மிஸ் செய்திருக்கிறேன்.
      உங்கள் அண்ணா பேரனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். அதன் வகையில் நீங்களும் தாத்தாவாகி இருப்பதற்கும் வாழ்த்துகள். உங்கள் மகனின் மூலம் தாத்தாவாகும் வாய்ப்பு விரைவில் ஏற்படவும் இறைவனை மனமாற பிரார்த்தித்து கொள்கிறேன. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    முதல் பாடல் அருமையான பாடல். அடிக்கடி கேட்டு ரசித்து கொலுவுக்கு தினமும் பாடி மகிழ்ந்திருக்கிறேன்.அன்னையை வேண்டி பாடும் போது மனம் இளகி விடும்‌. அந்தப் பாடல் உருவான விபரங்களுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். இந்தப் பாடலை அநேகர் கேட்டிருக்க மாட்டார்கள் என்றே நினைத்தேன்.

      நீக்கு
  3. 'சிலபலவற்றை' -- இதில் 'சிலபல' என்றால் என்ன?
    சில என்றால் பல இல்லை. பல என்றால் சில இல்லை -- அதனால் இது தவறான வார்த்தைப் பிரயோகமோ என்று
    எனக்குத் தோன்றும்.
    நீங்கள் அடிக்கடி இந்த 'சிலபல'வை உபயோகப் படித்துவதால் உங்களிடமே கேட்டு விடலாம் என்று. ஹிஹி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Story என்றாலே cooked up one. இதில் உண்மைக் கதை என்ற வார்த்தைப் பிரயோகம் எனக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும்.

      சில என்பதற்கும் சிற்சில என்பதற்கும் என்ன வித்தியாசம்? பற்பல் உயிர்கட்கும் .. இதிலும் குழப்பம் இருக்கிறதல்லவா?

      நீக்கு
    2. ஜீவி ஸார்..

      சில என்று சொல்லலாம்.  'சில'வை விட அதிகம்.  பல என்று சொல்லலாம்.  ஆனால் 'பல'வை விட குறைவு அதுதான் சிலபல!  ஹிஹிஹி...

      நீக்கு
    3. நெல்லை...  சிற்சில--  சின்னஞ்சிறிய அளவில்;  பற்பல -- மிகப்பெரிய அளவில்.. என்று எடுத்துக் கொள்ளலாமோ..

      பற்பலரும் போற்றும் பதிமயிலாபுரியின்..  சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோவில் கொண்ட 

      நீக்கு
    4. சிலபல என்ற வார்த்தை கறுப்பு சிவப்பு கூட்டத்தாரின் அக்கால மேடைப் பேச்சுகள் மூலம் அறிமுகமானது.

      நீக்கு
  4. 'சஹாப்த நாயகன் சன்னதியில்' -- எந்தப் பத்திரிகை பிரசுரம்? --
    Pas. Pasupathy ஸார் கிட்டே கேட்டால் அச்சுப் பிரதியையே அவர் வலைத்தளத்தில் போட்டு விடுவாரே,?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பத்திரிகை பெயர் நினைவுக்கு வந்து விட்டது.  ஜவஹரிசம்.  கேள்விப்பட்டிருக்கிறீர்களா?!  அப்பா அதை ரொம்ப நாட்கள் பத்திரப்படுத்தி வைத்து இருந்தார்.

      நீக்கு
    2. ஜவஹரிஸமா? ஞாபகம் இல்லை. ஜவஹர் என்றாலே நெல்லையின் நினைவுகள் எங்கெங்கோ பறக்குமே! .. ஆனால் முரளி அப்படியில்லை. சாது.

      நீக்கு
  5. நீங்கள் மா. வரதராஜன் பற்றிக் குறிப்பிட்டதும் பீஷ்மன் என்ற புனைப்பெயரில் விகடனில் எழுதிய நா.சீ. வரதராஜன் நினைவுக்கு வந்தார். அப்புறம் மு.வ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் பெரிய ஆட்கள்.  இவர் கொஞ்சம்...  தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தில் இவர், அன்பு வேதாச்சலம், அப்பா எல்லாம் இடம்பெற்றிருந்தார்கள்.  ஒருமுறை தஞ்சை விழாவில் விக்ரமனை அழைத்து பேசவைத்தது நினைவில் இருக்கிறது.

      நீக்கு
  6. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன் !

    பதிலளிநீக்கு
  7. முதல் பாடல் எனக்கு(எங்களுக்கு) மிகவும் பிடித்த பாடல்.
    முன்பு நான் என் பதிவில் பகிர்ந்த போது அப்பாவின் நண்பரை பற்றி சொன்னீர்கள்.
    வானொலியில் காலையில் வைப்பதை என் கணவர் பதிவு செய்து வைத்து இருந்தார்கள். அடிக்கடி கேட்டு மகிழ்வோம். என் கணவருக்கும் பிடித்த பாடல். வெள்ளிக்கிழமை அருமையான பாடல் பகிர்வுக்கு நன்றி ஸ்ரீராம்.

    அடுத்த பாடலும் அருமையான பாடல். நிறைய தடவை கேட்டு இருக்கிறேன்.
    இரண்டு பாடல் பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அக்கா.  மா வ அப்ற்றி உங்கள் தளத்தில் சொல்லி இருந்ததை நினைவில் வைத்திருக்கிறீர்கள்.  நன்றி.  சாருக்கும் பிடித்த பாடலா?  நான் கூட கிடைக்காத பாடல்கள் சிலவற்றை ரேடியோவில் இருந்து ரெகார்ட் செய்து வைத்திருந்தேன்.

      நீக்கு
  8. முதல் பாடல் கேட்ட நினைவே இல்லையே என்று நினைத்தால் கருத்துரையில் கமலா ஹரிஹரன் மேடம், கோமதி அரசு மேடம் இதனைப் பலமுறை கேட்டு ரசித்ததாக எழுதியிருப்பதைப் படித்துக் கேட்டைப் பார்த்தேன். நானும் பலமுறை கேட்டிருக்கும் அருமையான பாடல்.

    இரண்டாவது பாடல் பலமுறை கேட்டு ரசித்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா...   ஆகா, நீங்களும் கேட்டிருக்கிறீர்கள் என்பது இப்போது ஒலிக்க விட்டபிறகு தெரிகிறது!

      நீக்கு
    2. பற்பலரும் போற்றும் என்று மட்டும் நீங்கள் எழுதியிருந்தாலே, பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில் என்ற கற்பகவல்லி நின் பாடல் நினைவுக்கு வந்திருக்கும். ஆனால் இந்தப் பக்திப் பாடல் வரிகள், பாடலையோ இல்லை ராகத்தையோ நினைவுபடுத்தவில்லை என்பது ஆச்சர்யம்தான்

      நீக்கு
  9. அறம் வளர்த்த நாயகியே நேரில் வந்து இவை தான் அறங்கள் என்று சொன்னாலும் இன்றைய சூழ்நிலையில் ஒத்துக் கொள்ளாத கூட்டம் ஒன்று இருக்கின்றது..

    அன்பின் வணக்கங்களுடன்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது என்னவோ உண்மைதான்.   வாங்க துரை செல்வராஜூ ஸார்..  வணக்கம்.

      நீக்கு
  10. ஞாயிறன்று புறப்பட்ட நாங்கள் திருச்செந்தூர் உவரி கோயில் தரிசனம் செய்து விட்டு நேற்று தான் தஞ்சைக்குத் திரும்பினோம்..

    இடையில் மழையின் காரணமாக அடிக்கடி மின்தடை..

    எங்கும் தொலை பேசியைப் புதுப்பிக்கவும் வலை தளங்கள் வருவதற்கும் இயலவில்லை..

    ( வாத்தியாரே.. யாரும் உன்னைக் கேட்டார்களா?..

    தெரியலையே!..)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // வாத்தியாரே.. யாரும் உன்னைக் கேட்டார்களா?.. தெரியலையே!..)// ஹா ஹா ஹா. இருந்தாலும் எபில பின்னூட்டம் போடறவங்க எல்லாருமே ஒரு குடும்ப நண்பர்கள் போலத்தான் இருக்கிறோம். அதனால் ஒவ்வொருவரும் அப்டேட் செய்வது நிச்சயம் எதிர்பார்ப்போம்.

      நீக்கு
    2. நீங்கள் திருச்செந்தூர் சென்றிருப்பதாய் முதலில் கோமதி அக்கா பதிவில் குறிப்பிட்டதாய் நினைவு.  எனவே நீங்கள் எங்கே என்று அறிவேன் நான்.  எனவே கேட்கவில்லை.

      நீக்கு
    3. ( வாத்தியாரே.. யாரும் உன்னைக் கேட்டார்களா?..

      தெரியலையே!..)//

      ஹாஹாஹா வாத்தியாரே துரை அண்ணா நீங்க திருச்செந்தூர் கடற்கரை ஓரம் போயிருக்கீங்கன்னுத்தான் தெர்யுமே... .கோமதிக்கா பதிவில் பார்த்தேனே.... உவரிப்பக்கம் நீங்கள் வழிபடும் கோயில் பற்றியும் முன்பு உங்கள் தளத்தில் சொன்ன நினைவு இருக்கு துரை அண்ணா...

      கீதா

      நீக்கு
    4. @துரை! ஊரில் இல்லை என்பதாகச் சொல்லி இருந்தீர்கள். அதோடு நானும் எப்போவானும் வருவதால் அவ்வளவாய்க் கவனிக்கவில்லை என்பதே உண்மை.

      நீக்கு
  11. சின்னத் தாத்தா ஸ்ரீராம் அவர்களுக்கு நல்வாழ்த்துகள்..

    சொந்தத் தாத்தாவின் பாக்கெட்டை விட,

    சின்ன தாத்தாவின் பாக்கெட் சீக்கிரம் பேரன் விஷயத்தில் காலியாகும்..

    எனவே பாக்கெட்டை கனமாக வைத்துக் கொள்ளவும்..

    பதிலளிநீக்கு
  12. அருமையான பாடல்கள்...

    வான்புகழ் வள்ளுவன் வகுத்த நல் வழியில் -
    வையகம் வாழ்ந்திட வரமருள் தாயே...

    பதிலளிநீக்கு
  13. முதல் பாடல் கேட்டது போல் நினைவு இருக்கிறது,
    இரண்டாவது பாடல் அடிக்கடி கேட்ட அருமையான பாடல்.

    பதிலளிநீக்கு
  14. ஸ்ரீராம் அருமையான பாடல்கள். முதல் பாடல் நிறைய கேட்டிருக்கிறேன். ரசித்த பாடல் உருக்கும் பாடல் நீங்கள் சொல்லியிருப்பது போல். அது ரேவதி ராகம் நல்ல செலக்ட் பண்ணி இசை அமைச்சுருக்காங்க சகோதரிகள்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு சகோதரி மட்டும்தான் இசை அமைத்திருக்கிறார்!  ராஜலக்ஷ்மி மட்டும்.  ரேவதி ராகம் என்று நானாக சொல்லவில்லை.  அங்கேயே போட்டிருக்கிறது!!!!

      நீக்கு
    2. ஆமாம் பதிவுல சொல்லிருக்கீங்க ஆனா பாருங்க சூலமங்கலம்னு வாசித்ததும் அதுதான் மண்டைல பளிச்சுனு உட்க்கார்கிறது!! ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  15. இரண்டாவது பாடலும் கேட்டு ரசித்த பாடல். அழகான ராகம் மதுவந்தி/தர்மவதி- இந்தப் பாடலைப் பாடும் போது உடனே நினைவுக்கு வருவது பாடும் நிலாவின் அருமையான குரலில் அழகான பாடல் நந்தா என் நிலா....அதுவும் இதே பேஸ்ட் ராகம்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா...   ஆனால் ஏனோ இதை விட பலமடங்கு உயர்ந்தது தக்ஷிணாமூர்த்தி இசையில் நந்தா என் நிலா!  இது விஜயபாஸ்கர்.

      நீக்கு
    2. ஆமாம் ஆமாம் அந்தப் பாடலை இப்ப மீண்டும் கேட்டேன் ஸ்ரீராம்...நந்தா என் நிலா....நினைவுக்கு வந்ததும் உடனே சென்று கேட்டுவிட்டேன்...தட்சிணாமூர்த்தி இசைஅமைப்பு...செமையா இருக்கும்

      விஜயபாஸ்கர் ஆமாம் பதிவில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் ஆனால் விஜயபாஸ்கர் யாருன்னே தெரியலையே,,எனக்கு டக்கென்று இப்போதைய ஏதோ ஒரு கட்சியில் இருக்கும் ஏதோ ஒரு அரசியல்வாதியின் பெயர்தான் நினைவுக்கு வந்ததுஅடிக்கடி அவர் பெயர் அடிபட்டதால்....ஹிஹிஹி

      (விஜயபாஸ்கர் கன்னட இசையமைப்பாளராமே..=)

      கீதா

      நீக்கு
    3. ஆ இதுக்குப் போட்ட கமென்ட் ஓடி ஒளிந்து கொண்டு விட்டது ஸ்ரீராம் பாருங்க ...

      கீதா

      நீக்கு
    4. //அழகான ராகம் மதுவந்தி/தர்மவதி// - எனக்கென்னவோ ஒய் ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தியும், கருணாநிதியின் இணைவி தர்மாம்பாளும் மாத்திரம் நினைவுக்கு வருகிறார்கள்

      நீக்கு
    5. தர்மாம்பாள் யாரு புதுசா? எனக்குத் தெரிஞ்சு முதல் மனைவிக்கப்புறமா தயாளு அம்மாளும், அதன் பின்னர் ராஜாத்தி அம்மாளும் தான்! :))))) எனக்கும் மதுவந்தி நினைவில் வந்தார். முகநூலில் அவர் வாங்கும் திட்டுக்களுக்குக் கணக்கே இல்லை! :(

      நீக்கு
  16. இப்ப நெல்லை இதைப் பார்த்ததும் ஓடோடி வருவார் பாருங்க ஸ்ரீராம்.....

    கீதா ரங்கன்(கா) என்ன நீங்க ராகம் கண்டு பிடிக்கறீங்க.... மதுவந்தி/தர்மவதிக்கு இடைல இன்னும் ரெண்டு எட்டிப் பார்க்கிறதே அதை விட்டுட்டீங்க. கலாவந்தி, தர்மலகி.....!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  17. கவிஞர் வரதராஜன் அவர்கள் உங்கள் அப்பாவின் நண்பர் னு முன்னரே சொல்லியிருக்கீங்க நினைவு இருக்கிறது.

    கோஸ்ட் ரைட்டரா இருந்தா பெயர் வெளியே தெரியாமலேயே போய்விடுமே...

    அவர் எழுதியிருந்த நாட்டுப்புறப்பாடல்கள் புத்தகம் எங்கிட்ட இருக்கு. மாமியார்-மாமனார் வீட்டில் இருந்தது. என் ஏதோ ஒரு பதிவில் அவரது பாடலைப் பயன்படுத்தியிருந்து அவரைப்பற்றியும் சொன்ன நினைவு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில விஷயங்களில் கோஸ்ட் ரைட்டர்... மதிப்புரை, விமர்சனம் போல.. அவை சமயங்களில் மா வ பெயரில் வெளியாகும்!

      நீக்கு
  18. முன்னரே இந்த மா.வரதராஜன் பற்றிப் படிச்ச நினைவு. என் சித்தப்பா அசோகமித்திரனும் ஒரு சில எழுத்தாளர்களுக்கு கோஸ்ட் ரைட்டராக இருந்திருக்கார். :)

    பதிலளிநீக்கு
  19. அம்மன் பாடலும் ஏனைய பாடல்களும் அருமை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!