கருப்பன்
துரை செல்வராஜூ
" டிங்டிங் டிடிங்.. டிங்டிங் டிடிங்.. "
சொசைட்டிக்கு பால் கறக்கணும்... மூனே முக்கால் ஆச்சு.. செவலையை அவிழ்த்து அதன் முதுகிலேயே கயிற்றைப் போட்டாள் காவேரி.. அது நின்று கொண்டு திரும்பிப் பார்த்தது - கன்றைக் காணோமே!.. என்று.. அந்த நிலையிலும் சிரிப்பு தான் வந்தது அவளுக்கு..
' உம் புள்ளய ஒன்னும் செஞ்சிட மாட்டோம் தாயி!.. ' - என்றபடி கன்றை அவிழ்த்து விட்டாள்.. துள்ளிக் குதித்த கன்றைப் பார்த்துக் கொண்டே நடந்தது பசு..
கையில் பால் குவளையையும் விளக்கெண்ணெய் சிமிழையும் எடுத்துக் கொண்டு நடந்த காவேரியின் கண்கள் எதிரில் தேடின - எங்காவது கருப்பன் தெரிகின்றானா!.. என்று...
கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் கருப்பனைத் தவிர மற்றெல்லாமும் தென்பட்டன..
எதிரில் வருபவர் யாராவது கருப்பனைப் பற்றி சொல்லுவார்கள் - என்று பார்த்தால் அவரவரும் அவரவர் வேலையோடு போய்க் கொண்டு இருக்கின்றார்கள்..
கருப்பன்.. கருப்பன்!..
யாரவன் கருப்பன்?.. - என்றால் அந்தக் காலத்துஅலமேலு ஆடு ஞாபகத்துக்கு வருதா?.. அந்த ஆட்டைப் போல எழுதப் படிக்கத் தெரியாதே தவிர கருப்பனுக்கு மற்றதெல்லாம் தெரியும்..
விடியற்காலை கட்டுத் தறியில் இருந்து அவிழ்த்து விட்டால் போதும்.. அக்கம் பக்கத்து இளந்தாரிகளிடம் கொஞ்ச நேரம் கொஞ்சிக் குலாவி முத்தமிட்டு விட்டு மெதுவாக நடையைக் கட்டுவான்.. மந்தையில் மத்தியானம் வரைக்கும் நாட்டாமை.. ஒரு யோசனை வந்து விட்டால் வடக்கே ரயில்வே டேசனுக்குப் போவான்.. அங்கே சுற்றித் திரிந்து விட்டு நடுப் பகலில் திரும்புவான்..
" எங்கேடா ஊர் சுற்றப் போனாய்!.. " - என்று காவேரி அதட்டினால் தனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்பதைப் போல் அப்பாவியாக நிற்பான்..
ஒரு வாளி நிறைய கடலைப் புண்ணாக்கை கரைத்து வைத்திருப்பாள் காவேரி - இது மாதிரி ஊர் சுற்றும் பயல் உடம்புக்கு நல்லது என்று... மூச்சு முட்ட அதைக் குடித்து விட்டு திண்ணையில் ஏறிப் படுத்தான் என்றால் அது தான் அவனுக்கு சொர்க்கம்..
இப்படியாகப்பட்டவன் சாயங்காலத்துக்கு மேலும் வீட்டுக்குத் திரும்பவில்லை.. இதுவரைக்கும் இப்படி ஆனதே இல்லை.. - கவலையால் கலங்கிக் கொண்டிருந்தாள் காவேரி..
புளியந்தோப்பில் வைத்து செவலையிடம் ரெண்டு லிட்டர் கறந்து சொசைட்டியில் ஊற்றி விட்டு அட்டையிலும் பதிவு செய்து விட்டு வீட்டுக்கும் திரும்பியாயிற்று.. கருப்பன் வீடு திரும்பவில்லை..
காவேரியின் கண்களில் நீர் கோர்த்தது..
கருப்பனுக்கு என்று ஊறவைத்த கடலைப் புண்ணாக்கு நுரைக்க ஆரம்பித்திருந்தது..
தோட்டத்திலிருந்து அப்பாவும் அம்மாவும் திரும்பியாயிற்று.. பள்ளிக்கூடம் விட்டு தம்பியும் வந்து விட்டான்...
விஷயம் தெரிந்ததும் எல்லாரும் ஏகமனதாகச் சொன்னார்கள் - " எங்கே போயிடப் போறான்... வருவான்.. வருவான்!.. "
ஆனால் வரவில்லை..
அதோ - ஏழு தெருக்களையும் தபால் கட்டுடன் சைக்கிளில் சுற்றி வரும் போஸ்ட் ஆபீஸ் மாமா ..
இங்கிருந்தபடியே கத்தினாள்..
" மாமா.. கருப்பனப் பார்த்தீங்களா?.. "
சைக்கிளை நிறுத்தி காலை ஊன்றியவர் - " இல்லையே.. ம்மா!.. " - என்றபடி வீட்டை நோக்கி மெதுவாக நகர்ந்தார்..
கருப்பனைப் பற்றி அந்த ஊரில் எல்லாருக்கும் தெரியும்...
முனீஸ்வர சாமிக்கு நேர்ந்து விடப்பட்டிருந்தான்..
அது பெரிய கதை.. பன்னிரண்டு மைல் சுற்றளவுக்கு விசேசம் இந்த ஊரு குருதி பூசை.. அதுவும் அஞ்சு வருசத்துக்கு ஒரு தரம் தான்.. அந்தக் கெரகம் இந்த வருசம் பார்த்து வருது.. மற்ற படையல் பள்ளயம் எல்லாம் வருசா வருசம் வழக்கம் போல..
தை முதல் செவ்வாய் அன்னைக்கு குருதி பூசை.. இலுப்பைத் தோப்பு முனீஸ்வரன் கோயில்ல பரிவார சாமிகளுக்கு எண்ணெய்க் காப்பு.. புது வேஷ்டி சாத்தி அசைவ படையல்..
இதுல முனீஸ்வரன் ஒதுங்கியே இருப்பார்..
அவருக்கு தை முதல் வெள்ளியன்னிக்கு அமுது படையல்.. சுழியம், அதிரசம், இளநீர், பானகம், பஞ்சாமிர்தம், தயிர் பள்ளயம், பாயாசம்..
கடை வெள்ளிக்கு முனீஸ்வரன் அழைப்பு.. வாண வேடிக்கை.. ஊர் கோலம்..
கடை செவ்வாய் அன்னிக்கு விடையாற்றி.. மஞ்சத் தண்ணி விளையாட்டு..
கிடாக்கள் நேர்ந்து விடுறது முனீஸ்வர சாமிக்கு..ன்னு.. படையல் மட்டும் பரிவார சாமிகளுக்கு!..
ஊர்ல பதினைஞ்சு கிடா குட்டிகள் குருதிப் பூசைக்காகவே சுத்திக்கிட்டு இருக்குதுங்க.. இருந்தாலும் காவேரியோட கருப்பனுக்குத் தான் முதல் மரியாதை.. பூசை..
இந்த நேர்ச்சை கிடாக்களோட அடையாளம் - சிவப்பு நிற கழுத்துக் கயிறும் அதுல சூலாயுத முத்திரையோட ஒரு தகடும் தான்..
முனி ஐயா கிடாக்களைக் கண்டாலே போதும்.. களவாணிப் பயலுகளுக்கு பேதியாயிடும்.. ஒருத்தனும் கிட்ட நெருங்க மாட்டான்...
கிடாக்கள் வெள்ளாமையில இறங்கிட்டா கூட ஜனங்க கோவிச்சுக்க மாட்டாங்க..
" சேதாரம் ஆகிடாம பாத்துக்குங்க ஐயா.. " - ங்கற ஒரே பேச்சு தான்.. அந்த வருசம் மகசூல் அமோகமா இருக்கும்.. கல்லு எதையும் எடுத்து வீசினா - அவ்வளவு தான்..
காத்து வாக்குல சேதி ஊருக்குள்ள போயி - நாலு எட்டா சனங்க வந்து விட்டார்கள்..
" இருவது கிலோவுக்கு மேல தேறுமே!.. "
" இந்தக் கிடாக்களை வச்சி பண்ணையம் பண்றதே பெரிய பாடு.. "
" எனக்கென்னமோ சந்தேகமாத் தான் இருக்கு.. "
" நாளைக்கு முனியன் கடுப்பாகி கெளம்பிட்டா யாரு தாங்குறது?.. "
ஆளுக்கு ஆள் பேசி விட்டுப் போனார்கள்...
" எலே.. தம்பி... வாடகை சைக்கிள எடுத்துக்கிட்டுப் போய் ஒரு சுத்து பார்த்துட்டு வர்றியா?.. " காவேரியின் அப்பாவுக்கு உண்மையிலேயே கவலை..
" ராத்திரியில அந்த அண்ணன் சைக்கிள் தர மாட்டார் அப்பா!.. "
" அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. முனியன் கெடாய ஒருத்தன் தொட முடியுமா.. ன்னேன்.. ஏதாவது கொரால் பின்னால போயிருப்பான்... காலைல வருவான் பாருங்க... ஏ.. பாப்பா.. எதுக்கும் நீ ஒரு ரூவா துட்டை எடுத்து முடிஞ்சு வை!.. " - என்று ஆறுதலாகப் பேசியபடி காவிரியின் தலையை வருடி விட்டாள் தாய்..
ராத்திரி சோறு ஒருவருக்கும் இறங்கவில்லை.. திண்ணை காலியாகக் கிடந்தது.. கையில் அரிக்கேன் விளக்கை எடுத்துக் கொண்டு வேலிப் படல் வரைக்கும் சென்று பார்த்து விட்டு வந்தாள் காவேரி..
ஈசான மூலை பல்லிக்குக் கூட கருப்பன் போன இடம் தெரிய வில்லை.. வாயை மூடிக் கொண்டு சும்மா இருந்தது..
கண்களைத் துடைத்தபடி தூங்கிப் போன காவேரி விடிவதற்கு முன்னால் எழுந்து வாசலுக்கு ஓடினாள்... கருப்பனைக் காணோம்..
நேரம் ஆச்சு.. சொசைட்டியில் பால் கறக்க வேண்டும்...
" ஏ... பாப்பா... பேசாம இரு.. அது கோயில் கெடா... அந்தக் கவலை முனியனுக்குத் தான்!.. " - என்றாள் அம்மா செவலையை அவிழ்த்துக் கொண்டே..
பொழுதும் நன்றாக விடிந்து விட்டது.. கருப்பன் காணாமல் போன விஷயம் இளந்தாரி ஆடுகளுக்குத் தெரிந்திருக்கும் போல.. எல்லாமே ஒரு மாதிரி மசங்கலாக இருந்தன...
அம்மா சொன்ன மாதிரி ஒரு ரூபாயை எடுத்து விளக்கு மாடத்தில் வைத்த காவேரி - வாளியில் கடலைப் புண்ணாக்கைப் போட்டு தண்ணீர் எடுத்து ஊற்றினாள் - கருப்பன் வந்து விடுவான் என்ற நம்பிக்கையுடன்..
யார் யாரோ வாசலுக்கு வந்தார்கள்.. ஏதேதோ பேசி விட்டுப் போனார்கள்..
" கருப்பன் காணாமப் போய்ட்டான்.. முனியனுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்!.. நல்லா மாட்டிக்கிட்டான் நல்ல தம்பி!.. "
உள்ளூர சந்தோஷம் சிலருக்கு..
" போலீஸ்ல சொல்லுவமா?.. "
" எதுக்கு!. போற போக்குல பொங்க வைக்கிறதுக்கா?.. "
" ஏ.. நல்லதம்பி.. கருப்பன் காணாப் போனதுக்காக வருத்தப்படாதே.. கைக்கு கிடச்சதும் வர்ற கார்த்திகையில பாய்ச்சல் விட்டு குருதி பூச வச்சிடுவோம்.. இல்லேன்னா வேற கிடாக் குட்டி வாங்கி விட்டுடுவோம்.. அதனால ஒன்னும் தப்பு இல்லை.. காணாப் போன கருப்பன் வரலை.. ன்னா சாமி குத்தம் ஆகிடும்!.. "
வாத்தியார் தாத்தா பேசினார்..
" அதுவும் சரிதான்.." - என்ற பேச்சும் கூடவே எழுந்தது,.
காவேரி எழுந்து முன்னால் வந்தாள்..
" தாத்தா மன்னிக்கணும்... நான் முனிய ஐயாவுக்கு நிறை காணிக்கை நேர்ந்திருக்கேன்!... "
வாசலில் கூடி இருந்தவர்களுக்கு அதிர்ச்சி...
" நெற காணிக்கையா!.. குருதி பூசைக்கு நேர்ந்துகிட்ட கிடா தானே கருப்பன்!.. "
" ஆமா.. ஆனாலும் நான் நேத்து மறு மாப்பு கேட்டு வேண்டிக்கிட்டேன்.. "
எல்லார் முகத்திலும் வருத்தம் - கறி சோறு போச்சே!.. - என்று..
நிறை காணிக்கை என்றால் நேர்ந்து விட்ட கிடாயை அப்படியே விட்டு விடுவது.. வாழும் காலம் வரை வாழ்ந்து ஜீவன் முடிந்ததும் அந்தக் கிடாயை கொட்டு முழக்கு மாலை மரியாதையுடன் அனுப்பி வைப்பது..
" யோசிச்சு தான் சொல்றியா காவேரி?.. "
" ஆமா.. தாத்தா!.. "
" அப்போ நேர்ந்து விட்டுருக்கும் மத்த கிடாக்களை எல்லாம் என்ன பண்றது?... "
" ஹேய்!.. "
திடீரென ஆவேசம் வந்து ஆடினான் கோவிந்தன் மகன்.. பதினைஞ்சு வயசு தான் அவனுக்கு..
" அவுத்து விட்டுடுங்கடா.. "
" குருதி பூச?.. "
" கூஷ்மாண்டத்தை வெட்டிப் போடுங்க!.. "
" கூஸ்மாண்டமா?.. அப்படி.. ன்னா!.. "
" பூசனிக்காய்.. டா.. பூசனிக்காய்!.. "
" அது மட்டும் போதுமா!... "
" போதும்.. பள்ளயத்தை மாத்தக் கூடாது.. புரிஞ்சதா!.. "
" புரிஞ்சதுங்க சாமி!.. "
" ஊர்ல.. நாட்ல.. அநியாயம் அக்கிரமம் பெருகிப் போச்சு.. அயோக்கியன ஆக்கினை பண்ணனும்.. களவாணிய களை எடுக்கணும்.. எம் பரிவாரம் பூராவும் அங்கே பூந்து வெளையாடுவாங்க.. "
" எதுவும் குத்தம் குறை இல்லையே.. கோப தாபம் இல்லையே!.. "
" அதான் சொல்லிட்டேனே.. நல்ல சனங்க நிம்மதியா இருப்பாங்க.. ன்னு!.. "
விபூதி சம்படம் வந்தது.. விபூதியை அள்ளி மேலே வீசிய சாமி பெரிய சத்தத்துடன் மலையேறியது.. சிறுவன் மயங்கி விழுந்தான்..
" அடடே... கருப்பன் எங்கேன்னு கேக்கறதுக்கு மறந்துட்டமே!.. "
கூட்டம் வருத்தப்பட்ட வேளையில் - வேலிப் படலை முட்டித் தள்ளி விட்டு கருப்பன் வந்து கொண்டிருந்தான்..
காவேரி பொங்கி எழுந்து ஓடிச் சென்று கட்டிக் கொண்டாள்..
" எங்கே சாமி போயிருந்தே!.. "
" நான் இங்கே தானே இருக்கேன்!.. "
- என்கிற மாதிரி காவேரியின் முகத்தோடு முகம் வைத்துக் கொண்டான் கருப்பன்..
**
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
பதிலளிநீக்குஎன்புதோல் போர்த்த உடம்பு..
வாழ்க தமிழ்..
வாழ்க... வாழ்க
நீக்குஇன்றொரு நாள் திருநாள்..
பதிலளிநீக்குஅன்பின் வணக்கங்களுடன்..
வாழ்க நலம்...
வாழ்க.. வாங்க துரை செல்வராஜூ ஸார்... வணக்கம்.
நீக்கு//இன்றொரு நாள் திருநாள்..//
மனம்நிறை வாழ்த்துகள்.
வாழ்த்துகளும் ஆசிகளும் துரைக்கு!
நீக்குதங்கள் அன்பினுக்கு நன்றியக்கா
நீக்குஇன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அனைவருக்கும் அன்பின் நல்வரவு..
பதிலளிநீக்குஇன்று எனது படைப்பினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும் சித்திரத்தால் செய்த அன்பின் சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..
நன்றி துரை செல்வராஜூ ஸார்.
நீக்குநன்றி.
நீக்குஅழகான சித்திரம்.
பதிலளிநீக்குநன்றி கௌதம் ஜி..
அழகான கதைக்கு நன்றி.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமைய வேண்டுமெனவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குநானும் இறைவனை மனமார பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நீக்குஅட, தம்பி கதையா இன்று? இரவு 8 மணி இங்கே. குளிர வேறே ஆரம்பித்து விட்டது. வாசித்து விட்டு பிறகு வருகிறேன்.
பதிலளிநீக்குவாங்கோ, வாங்கோ - மீண்டும், மீண்டும்!
நீக்குதங்கள் அன்பின் வருகைக்கு காத்திருக்கின்றேன் ஜூவி அண்ணா..
நீக்கு// ஜூவி அண்ணா//
நீக்குஜீவி அண்ணா..
:))
நல்ல கருத்துள்ள கதை. எங்க ஊர்ப் பரவாக்கரை மாரியம்மனுக்கு நாங்கள் நேர்ந்து விட்ட ஆட்டைப் பற்றிக் கவலைப் படுவேன். என்ன செய்தாங்களோ தெரியலையேனு. அது ஆச்சு சுமார் 20/22 வருடங்கள். இப்போல்லாம் யாரும் அப்படிச் செய்வதாகத் தெரியலை.
பதிலளிநீக்குசட்டென்று படிக்கும்போது, .. அது ஆச்சு 2022 வருடங்கள் என்று படித்து திடுக்கிட்டேன்!!
நீக்குஇன்னும் கிராமப் புறங்களில் இது மாதிரி நடக்கின்றது.. சில
நீக்குமாதங்களுக்கு முன்பு திண்டுக்கல்லுக்குப் பக்கத்தில் மாற்று மத வழிபாட்டில் 2000 ஆடுகள் அதற்கு இணையான கோழிகள் பலியிடப்பட்டதாக தினமலரில் செய்தி வந்திருந்தது..
அழகாகப் படம் வரைந்திருக்கும் திரு கௌதமன் அவர்களுக்குப் பாராட்டுகள். வேண்டுதலை மாற்றியதன் மூலம் சுமார் பதினைந்து ஆட்டுக்குட்டிகளைக் காப்பாற்றிய காவேரிக்கு நன்றியும் கூட.
பதிலளிநீக்குபாராட்டுக்கு நன்றி.
நீக்குநன்றி.. நன்றி..
நீக்குசின்ன குட்டியூண்டு கதை தான். இருந்தாலும் அந்தக் குட்டிக்குள் இறை மகிமையைக் குழைத்துப் பூசி மனித உணர்வுகளை
பதிலளிநீக்குசாங்கோபாங்கமாக விவரித்து நீட்டி அந்தச் சூழ்நிலயில் நம்மையும் கட்டிப் போட்டுக் கச்சிதமாக கதை எழுதி முடிக்கத் தம்பியால் தான் முடியும். விவரமான வாசிப்பு அனுபவப் பகிர்தலுக்குப் பின்னால் வருகிறேன். வாழ்த்துக்கள்
வாழ்த்துவோம்!
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி ஜீவி அண்ணா.
நீக்குஓ.. இங்கே சரியாக இருக்கிறது!
நீக்குஇன்று தாமதமாகத்தான் வருவேன். துரை செல்வராஜு சார் கதையைப் படிக்கணும். நெல்லை
பதிலளிநீக்குமீண்டும் சாவகாசமாக வருக!
நீக்குவருக.. வருக..
நீக்குநிறைவான கதை கருப்பன் முனீஸ்வரனுக்கே...
பதிலளிநீக்குமுனீஸ்வரன் தான் கருப்பனைக் காப்பாற்றி விட்டாரே..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி ஜி.
அருமை...
பதிலளிநீக்குமகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..
நீக்குஅனைவருக்கும் முகம் மலர அன்பான காலை வணக்கங்கள்!
பதிலளிநீக்குகதை மிக அருமை. வள்ளலார் வழியும், குறள் வழியும் இதையே சொல்கிறது! கருத்துள்ள கதை. ஆனால் இன்று மக்கள் நிறைய பேர் அசைவத்தின் பின்னே...
// வள்ளலார் வழியும், குறள் வழியும் இதையே சொல்கிறது!.. //
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
நல்ல சிறுகதை. இது எனக்கு கோவில்களில் உள்ள பலிபீடத்தை நினைவுபடுத்துகிறது. அதிலும் பலிக்குப் பதில், சாதம், ஆரத்தித் தண்ணீர் கலந்து வைக்கும் வழக்கம் இருந்தது. தற்போது சாதம், சிறிது தண்ணீர் என்று மாறியிருக்கிறது.
பதிலளிநீக்குதேவாரத்தில் பலி என்ற வார்த்தை உணவு என்ற அர்த்தத்தில் வருகின்றது..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி நெல்லை ..
கதை எழுதிய விதம், உரையாடல்கள், கிராமத்தைக் கண்ணில் கொண்டுவருகிறது. எப்போதும்போல, ஓவியத்தைப் பற்றிக் குறிப்பிடாமலேயே போகிறேன். தனுசு ராசிக்காரர்களின் முயற்சி பாராட்டத்தக்கது
பதிலளிநீக்கு:)))) நன்றி.
நீக்கு// கதை எழுதிய விதம், உரையாடல்கள், கிராமத்தைக் கண்ணில் கொண்டு வருகிறது... //
நீக்குமகிழ்ச்சி.. நன்றி..
தனுசு ராசிக் காரர்களின் முயற்சி - அது விடாமுயற்சி ஆயிற்றே..
என்னுடைய முயற்சியைப் பற்றி எழுதியிருக்கிறீர்களே, நான் அப்படி என்ன முயற்சி செய்துவிட்டேன்! (என் ராசியும் தனுசுதான்!)
நீக்குகிராமியக் கதை. நன்றாக இருக்கிறது!
கதை அருமை.
பதிலளிநீக்கு//நிறை காணிக்கை என்றால் நேர்ந்து விட்ட கிடாயை அப்படியே விட்டு விடுவது.. வாழும் காலம் வரை வாழ்ந்து ஜீவன் முடிந்ததும் அந்தக் கிடாயை கொட்டு முழக்கு மாலை மரியாதையுடன் அனுப்பி வைப்பது..//
அருமை. முனீஸ்வரன் காப்பாற்றினார் கருப்பனை.
கருப்பன் வீட்டுக்கு வந்தது மகிழ்ச்சி.
"சேவல் "படத்தில் இறைவனுக்கு நேர்ந்து விட்ட சேவலை மறைத்து வைக்கும் குழந்தை. அது போல கருப்பனை மறைத்து வைத்து விட்டாளோ காவேரி என்று நினைத்தேன்.
அருமையான கதை.
வாழ்த்துக்கள்.
நான் சேவல் படம் பார்த்ததில்லை..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி
சேவல் என்று சொல்லி விட்டேன் படத்தின் பெயரை கீதா சொன்னவுடன் தான் படத்தின் பேர் நினைவுக்கு வந்தது, படத்தின் பேர் "சைவம்" சேவலை பலி கொடுக்காமல் இருக்கு குழந்தை பாடுபடும்.
நீக்குவணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே.
பதிலளிநீக்குஅருமையான கதை. படிக்கும் போதே கிராமிய மணத்துடன், அதன் நிகழ்வுகளும் கண்களுக்கெதிரில் திரைப்படமமாக விரிகிறது..இப்படி எழுத தங்கள் ஒருவரால்தான் இயலும்.
/ஈசான மூலை பல்லிக்குக் கூட கருப்பன் போன இடம் தெரிய வில்லை.. வாயை மூடிக் கொண்டு சும்மா இருந்தது../
இப்படி அருமையான உரையாடல்களும், எண்ணங்களும் நிறைந்த கதையை மிகவும் ரசித்தேன். இறுதியில் தெய்வமே பலியை நிராகரித்த போது வந்து பத்திரமாக சேர்ந்த கருப்பன். இனி கருப்பனுக்கு கவலையில்லை. அநாவசிய கவலையெல்லாம் இந்த மனிதர்களுக்கே ....!! கதையை முடித்த விதம் அருமையாக உள்ளது. தங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
// இப்படி அருமையான உரையாடல்களும், எண்ணங்களும் நிறைந்த கதையை மிகவும் ரசித்தேன்..//
நீக்கு// அநாவசிய கவலையெல்லாம் இந்த மனிதர்களுக்கே!..//
தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
வணக்கம் கௌதமன் சகோதரரே.
பதிலளிநீக்குஓவியம் அருமையாக உள்ளது. கருப்பனை பார்த்ததும் அந்தப் பெண்ணின் முகத்தில் ஏற்படும் கனிவான பாசம் அப்படியே ஓவியத்தில் துல்லியமாக தெரிகிறது. கதைக்குப் பொருத்தமாக இந்த ஓவியத்தை அற்புதமாக வரைந்த தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் பாராட்டுக்கள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி, நன்றி!
நீக்கு// அந்தப் பெண்ணின் முகத்தில் ஏற்படும் கனிவான பாசம் அப்படியே ஓவியத்தில் துல்லியமாக தெரிகிறது. //
நீக்குஉண்மை.. உண்மை..
ஹப்பா கருப்பன் தப்பினான். திக் திக் என்றது நேர்ந்துவிடப்பட்டவன்ன்னதும் ஹையோ எங்கியாச்சும் வெட்டிடுவாங்களோன்னு. மனம் ஏற்க மறுக்கும் நிகழ்வு. நல்ல காலம் துரை அண்ணா கதை குருதி பூசை இல்லாமல் முடிந்தது.
பதிலளிநீக்குஅருமையான நடை, யதார்த்தம் சொட்டும் உரைநடை, நிகழ்வுகள். ரசித்தே வாசித்தேன் துரை அண்ணா,
கீதா
// அருமையான நடை, யதார்த்தம் சொட்டும் உரைநடை, நிகழ்வுகள்... //
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..
நீக்கு// அருமையான நடை, யதார்த்தம் சொட்டும் உரைநடை, நிகழ்வுகள். //
தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..
கௌ அண்ணா படம் நன்றாக இருக்கு
பதிலளிநீக்குகீதா
நன்றி.. நன்றி..
நீக்குநன்றி.
நீக்குகதையை வாசித்ததும், கௌ அண்ணா வரைந்த ஓவியத்தைப் பார்த்ததும் தமிழில் வந்த சைவம் படமும், ஒரு கிடாயின் கருணை மனுவும் என்ற இரு ப்டங்கள் நினைவுக்கு வந்தன. அருமையான படங்கள்.
பதிலளிநீக்குஇப்பவும் உயிர்பலிகள் இருகா?
கீதா
நன்றி.
நீக்கு// தமிழில் வந்த சைவம் படமும், ஒரு கிடாயின் கருணை மனுவும் என்ற இரு படங்கள்..//
பதிலளிநீக்குதாங்கள் சொல்லியிருக்கும் இரு படங்களையுமே பார்த்ததில்லை..
திரையரங்கில் கடைசியாக விருமாண்டி..
இணையத்தில் சிங்கம் 3..
அவ்வளவு தான்..
தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..
துரை அண்ணா பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால், நேரம் இருந்தால் பாருங்கள் அண்ணா உங்களுக்குப் பிடிக்கும். அதுவும் சைவம் படத்தில் அந்தப் பெண்குழந்தையின் தவிப்பும்....இத்தனைக்கும் நான் முழு படம் பார்க்கவில்லை. கொஞ்சம் காட்சிகள் பார்த்ததே பிடித்துப் போனது. கதை தெரிந்துவிட்டதால் பார்க்கவில்லை,. அது போலத்தான் மற்ற படமும்
நீக்குகீதா
பல படங்களின் பெயர்களையும் இப்படி எல்லாமும் படங்கள் வந்திருப்பதும் உங்கள் மூலமும் ஶ்ரீராம் மூலமுமே தெரிந்து கொள்கிறேன் தி/கீதா. :)
நீக்குநேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன்.. நன்றி..
நீக்குபதிவு செய்த கருத்துரைகளைக் காணவில்லையே!..
பதிலளிநீக்குஎல்லாம் கலெக்ட் செய்து கொண்டு வந்து சேர்த்திருக்கிறேன். சரியா இருக்கா பாருங்க...!
நீக்குஆகா!..
நீக்குமகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
கதையும் படமும் மிக்க நன்றாக இருந்தது திரும்ப வாசித்தேன் நன்றி அன்புடன்
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியம்மா..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியம்மா..
பதிலளிநீக்குதுரை செல்வராஜு சாரின் கதை கிராமத்துப் பின்னணியை அப்படியே கண் முன் கொண்டுவந்து விடும். பேச்சு வழக்கு, வசனங்கள், எழுத்து, கதைக்கரு எல்லாம் கலந்து சரிவிகிதத்தில் படையலாய் வந்துவிடும். இக்கதையும் அதே விகிதத்தில்.
பதிலளிநீக்குபாராட்டுகள், வாழ்த்துகள் சார்.
துளசிதரன்
//பேச்சு வழக்கு, வசனங்கள், எழுத்து, கதைக்கரு எல்லாம் கலந்து..//
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் பாராட்டும் வாழ்த்தும் மகிழ்ச்சி..
நன்றி துளசிதரன்..
கெளதமன் சார் கதைக்கு பொருத்தமான படம் வரைந்து இருக்கிறார்.
பதிலளிநீக்குபடம் நன்றாக இருக்கிறது.
நன்றி.
நீக்கு'கறுப்பனின் நிறை காணிக்கை மூலம் ஏனைய உயிர்களும் தப்புவது' நல்லதோர் காருண்ய கருத்தை ஆசிரியர் நன்றாக எடுத்தாண்டுள்ளார் வாழ்த்துகள். கதைக்கு ஏற்ற படமும் அருமை.
பதிலளிநீக்கு// நிறை காணிக்கை மூலம் ஏனைய உயிர்களும் தப்புவது' நல்லதோர் காருண்ய கருத்து..//
நீக்குதங்கள் அன்பின் வருகையும் பாராட்டும் வாழ்த்தும் மகிழ்ச்சி.
நன்றி..