நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
வெள்ளி, 30 செப்டம்பர், 2022
வெள்ளி வீடியோ : மனதில் கவிதை வரைந்து வரைந்து என்னை மயங்கச் செய்வதும் கேளிக்கையோ?
பி சுசீலா பாடல்களில் இந்த லிஸ்ட் ரொம்ப பிரபலம். மாணிக்க வீணையேந்தி, கலைவாணி உன் கருணை தேன்மழையே, ஜெயஜெயதேவி ஜெயஜெயதேவி துர்க்கா தேவி சரணம் பாடல்கள்.
இதில் மாணிக்க வீணையேந்தி பாடல் சிறு வயதிலிருந்தே என் தங்கைக்கு உயிர். அடிக்கடி பாடிக்கொண்டே இருப்பாள். ஜெயஜெயதேவி பாடல் என் மகனுக்கு மழலை மாறா பருவத்தில் மிக பிடித்தமான பாடல். "உக்கா தேவி" என்று பாடுவான்!
நவராத்திரி முடிந்து சரஸ்வதி பூஜை அன்று இந்தப் பாடல் கட்டாயம் ஒவ்வொரு வீட்டிலும் ஒலிக்கும். அமைதியான குரல் தெய்வீகம் ததும்பும் பாடல்.
1966ல் வெளியான திரைப்படம் மஹாகவி காளிதாஸ். சிவாஜி கணேசன், சௌகார், முத்துராமன் உள்ளிட்டோர் அடித்தது.. ஆர் ஆர் சந்திரன் இயக்கத்தில் கே வி மதாதேவன் இசையில் உருவான படம். பாடல்களை கு மா பாலசுப்ரமணியமும் கண்ணதாசனும் எழுதி இருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் தேன்... தேன்,,, தித்திக்கும் தேன்.
கண்ணதாசன் பாடல். TMS குரல். அடாணா எனும் கம்பீரமான ராகம்.
அறியாத நெஞ்சிலே ஓம் எனும் எழுத்திலே ப்ரணவம் தந்த காளி
யார் தருவார் இந்த அரியாசனம்
யார் தருவார் இந்த அரியாசனம்
புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
யார் தருவார் இந்த அரியாசனம்
புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
அம்மா யார் தருவார் இந்த அரியாசனம்
பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன்
உயர்ந்த பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்
பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன்
உயர்ந்த பேறு பெரும் இடத்தில் இல்லாதவன்
சேரும் சபையறிந்து செல்லாதவன்
சேரும் சபையறிந்து செல்லாதவன்
அங்கு தேர்ந்த பொருள் எடுத்து சொல்லாதவன் தனக்கு
யார் தருவார் இந்த அரியாசனம்
புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா
உன் காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா
கருத்த நின் கூந்தலுக்குக் கவி வேண்டுமா
உன் காலிட்ட சதங்கைக்கு ஜதி வேண்டுமா
சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா ஆ..
சிறுத்த உன் இடையாட இசை வேண்டுமா
உன் சிங்காரக் கைக்கு அபிநயம் வேண்டுமா
அடுத்த பாடலும் கண்ணதாசன் எழுதிய பாடல்தான். "கலைமகள் எனக்கொரு ஆணையிட்டாள்" பாடலையும், இந்தப் பாடலையும் பூப் போட்டுப் பார்த்து இந்தப் பாடலைப் பகிர்கிறேன்!!
இந்தப் பாடலைக் கேட்கும் முன்னரோ பின்னரோ கவியரசரின் மகன் சொல்லும் இந்த விஷயங்களைக் கேட்டு விடுங்கள். கண்ணதாசன் எந்த சூழ்நிலையில் இந்தப் பாடலை எழுதி இருக்கிறார், குற்றம் குறை இருந்தால் மன்னிக்கச்ச்சொல்லி தொடங்கி, பாடலின் ஆரம்பம் (கலைமகள் எனக்கொரு ஆணையிட்டாள்) ஏன் அப்படி அமைத்திருக்கிறார் என்று புரியும்.
கண்ணதாசன் பாடல்கள் அனைத்துக்கும் விளக்கம் சொல்லும் அவர் மகன் இந்தக் காளிதாசன் படப் பாடலுக்கும் அருமையாக உணர்ந்து அர்த்தம் சொல்லி இருக்கிறார். கவிஞருக்கு வாழ்வில் எத்தனையோ சோகங்கள்.
அத்தனையும் கவிதைகளாக வந்து நம்மை ஆட்கொள்கின்றன. இன்றும் கொடுத்திருக்கும் சரஸ்வதி பாடலும் சுசீலா அம்மாவின் குரலும் எத்தனை வருடங்களாகக் கேட்டு வருகிறோம்!!! மிக நன்றி மா.
மலரும் வான் நிலவும் மற்றும் யார் தருவார் இந்த அரியாசனம், அகர முதல் எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி. சென்று வா மகனே எல்லாமே மிக உணர்ச்சி மிகுந்த பாடல்கள்.. கேட்கக் கேட்க தெவிட்டாத பாடல்கள். மிக மிக நன்றி மா ஸ்ரீராம்.
அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
யார் தருவார் இந்த அரியாசனம்... டிஎம்எஸ். ஆஹா ஆஹா... கணீர்குரல்... ஆனால் சிவாஜி தான் பாடுவதுபோலவே நடித்திருப்பார்.. சிம்மக்குரலோன் என்று சும்மாவா சொன்னாங்க.
கவியரசரின் மகன் ரப்பர் தோட்ட முதலாளி போலிருக்கு... ரப்பர் மாதிரி இழுக்கறார். கவியரசரின் வாக்கில் வருவதே சரஸ்வதி அளித்த கொடையல்லவா... இருந்தாலும் சில பாடல்களில் பொருட்குற்றம் வந்துவிடும். வாலி இது பற்றி எழுதியிருக்கிறார்.
' மஹா கவி காளிதாஸ்' பாடல்கள் அனைத்துமே நீங்கள் சொல்வது போல ' தேன்' தான் என்றாலும் ' மலரும் வான் நிலவும்' பாடல் பி.சுசீலாவின் குரலில் மிகவும் இனிமையான ஒன்று!!
இன்றைய பாடல்கள் அனைத்தும் இனிக்கும் தேன்தான். பி. சுசீலா அவர்களில் குரலில் அம்மன் பாட்டுக்கள் அனைத்தும் மனதில் மகிழ்ச்சியை தந்து பக்திப் பிரவாகத்தில் மூழ்கச் செய்து விடும் தன்மையுடையவை . அதுவும் இந்தப் பாடல் எவ்வளவு முறை கேட்டாலும் கேட்கும் போதெல்லாம் புதிதாகவே தோன்றும் மாயம்.... அந்த ஆனந்தத்தை விவரிக்கவே முடியாது. இது எனக்கு ரொம்ப பிடித்தமான பாடல். முக்கால்வாசி அவரின் பாடல்கள் எனக்கு மனப்பாடந்தான். நவராத்திரிகளில் தினமும் கூடவே பாடுவதுதான். அருமையான பாடல்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
இன்றைய வெள்ளியில் மாணிக்க வீணையேந்தும் கலைவாணியின் இருபாடலையும் பொருத்தமாக தேர்ந்தெடுத்து பகிர்ந்ததற்கு மகிழ்ச்சி.
நடிகர் திலகத்தின் பக்திப் பாடல்களே நம்மையும் உணர்ச்சிவசப்பட வைத்து விடும். பாட்டின் வரிகள், இசை, பிண்ணனி பாடுபவரின் அருமையான குரல், எல்லாவற்றிற்கும் மேலாக அதற்கு அவரின் பொருத்தமான வாயசைக்கும் உச்சரிப்பு, உடல், முக பாவங்கள், அனைத்தும் சேர்ந்து அந்தப்பாடலை சிறப்பாக ஆக்கி விடும்.
மூன்றாவது பாடலும் அருமை. இன்றைய மூன்று பாடலுமே அருமை. காணொளி கேட்கிறேன். அதில் பகிர்ந்த பாடலும் நன்றாக இருக்கும். அனைத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பாட்டெல்லாம் இனி வருமோ என்று கேட்பதற்குப் பதில், கதைகளெல்லாம் வருமோ என்று கேட்டிருக்கலாம்.
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் கடைசி பாடல்.... உணர்ச்சி மிகுந்த காவியம். ஒவ்வொரு தடவை நான் படம் பார்க்கும்போதும் இந்தத் தடவையாவது வெற்றிபெறணுமே என்று நினைத்துக்கொள்வேன்.
முதல் பாடல் மிக அருமையான பாடல் அந்த இசை தொகுப்பில் உள்ள அனைத்து பாடலும் நன்றாக இருக்கும் எங்கள் வீட்டில் கொலு சமயம் தினம் ஒலிக்கும். மற்ற நாளில் வெள்ளிக்கிழமை வைப்போம். தங்கை, மகன் பாடும் நினைவுகளை பகிர்ந்து கொண்டது அருமை. சரஸ்வதி பூஜை அன்று எல்லா இடங்களிலும் இந்த பாடல் ஒலிக்கும். மலரும் வான் நிலவும் பாடல் டி.எம்.எஸ் அவர்களும் பாடி இருப்பார். அந்த பாடலும் நன்றாக இருக்கும். அனைவரும் அவர் பாடலை பாடுகிறார்கள் என்பது போல் சினிமாவில் வரும். காட்சி நன்றாக இருக்கும். பேட்டி முன்பு கேட்டு இருக்கிறேன்.
அனைத்தும் பலமுறை கேட்டு மகிழ்ந்த பாடல்களே....
பதிலளிநீக்கு//முத்துராமன் உள்ளிட்டோர் அடித்தது// நடித்தது என்று மாற்றவும்.
ஜெய ஜெய தேவி பாடல் சிறு வயதில் எனக்கும் பந்தப்பட்ட சம்பவம் பாம்பன் ஆயிஷா டாக்கீஸில் உண்டு.
இதோ பாடல்களை கேட்கப் போகிறேன் ஜி.
நன்றி ஜி.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குநவராத்திரி வெள்ளிக் கிழமை எல்லா நலங்களையும்
அருளவேண்டும்.
வணக்கம் வல்லிம்மா... வாங்க.. பிரார்த்திப்போம்.
நீக்குகண்ணதாசன் பாடல்கள் அனைத்துக்கும்
பதிலளிநீக்குவிளக்கம் சொல்லும் அவர் மகன் இந்தக் காளிதாசன் படப் பாடலுக்கும்
அருமையாக உணர்ந்து
அர்த்தம் சொல்லி இருக்கிறார்.
கவிஞருக்கு வாழ்வில் எத்தனையோ
சோகங்கள்.
அத்தனையும் கவிதைகளாக வந்து
நம்மை ஆட்கொள்கின்றன.
இன்றும் கொடுத்திருக்கும் சரஸ்வதி பாடலும் சுசீலா அம்மாவின் குரலும் எத்தனை வருடங்களாகக் கேட்டு வருகிறோம்!!! மிக நன்றி மா.
ஆம். அவர் நம் வாழ்வில் வந்த வரம்.
நீக்குமலரும் வான் நிலவும்
பதிலளிநீக்குமற்றும் யார் தருவார் இந்த அரியாசனம், அகர முதல் எழுத்தெல்லாம்
அறிய வைத்தாய் தேவி.
சென்று வா மகனே எல்லாமே மிக உணர்ச்சி மிகுந்த
பாடல்கள்..
கேட்கக் கேட்க தெவிட்டாத பாடல்கள்.
மிக மிக நன்றி மா ஸ்ரீராம்.
பேட்டி அருமை... தொழில் பக்தி சிறப்பு...
பதிலளிநீக்குஅனைத்தும் என்றும் ரசிக்க வைக்கும் பாடல்கள்...
சிவாஜி அவர்களின் உச்சரிப்பு...! யப்பா...!
பதிலளிநீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மாணிக்கவீணை மட்டுமல்ல அந்த கேசட்டில் உள்ள பாடல்கள் அனைத்தும் அற்புதம். மனதில் ஓடும் வரிகள், பி சுசீலாவின் இனிய குரலில்
பதிலளிநீக்குயார் தருவார் இந்த அரியாசனம்... டிஎம்எஸ். ஆஹா ஆஹா... கணீர்குரல்... ஆனால் சிவாஜி தான் பாடுவதுபோலவே நடித்திருப்பார்.. சிம்மக்குரலோன் என்று சும்மாவா சொன்னாங்க.
பதிலளிநீக்குகவியரசரின் மகன் ரப்பர் தோட்ட முதலாளி போலிருக்கு... ரப்பர் மாதிரி இழுக்கறார். கவியரசரின் வாக்கில் வருவதே சரஸ்வதி அளித்த கொடையல்லவா... இருந்தாலும் சில பாடல்களில் பொருட்குற்றம் வந்துவிடும். வாலி இது பற்றி எழுதியிருக்கிறார்.
பதிலளிநீக்குமலரும் வான் முகமும் மிக அருமையான பாடல். சரணம்லாம் மறந்துவிட்டது. இன்று எல்லாப் பாடல்களுமே சூப்பர்.
பதிலளிநீக்குஅற்புதமானப் பாடல்கள். காணொலி சிறப்பு
பதிலளிநீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!
பதிலளிநீக்கு' மஹா கவி காளிதாஸ்' பாடல்கள் அனைத்துமே நீங்கள் சொல்வது போல ' தேன்' தான் என்றாலும் ' மலரும் வான் நிலவும்' பாடல் பி.சுசீலாவின் குரலில் மிகவும் இனிமையான ஒன்று!!
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாடல்கள் அனைத்தும் இனிக்கும் தேன்தான். பி. சுசீலா அவர்களில் குரலில் அம்மன் பாட்டுக்கள் அனைத்தும் மனதில் மகிழ்ச்சியை தந்து பக்திப் பிரவாகத்தில் மூழ்கச் செய்து விடும் தன்மையுடையவை . அதுவும் இந்தப் பாடல் எவ்வளவு முறை கேட்டாலும் கேட்கும் போதெல்லாம் புதிதாகவே தோன்றும் மாயம்.... அந்த ஆனந்தத்தை விவரிக்கவே முடியாது. இது எனக்கு ரொம்ப பிடித்தமான பாடல். முக்கால்வாசி அவரின் பாடல்கள் எனக்கு மனப்பாடந்தான். நவராத்திரிகளில் தினமும் கூடவே பாடுவதுதான். அருமையான பாடல்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வெள்ளியின் நன்பொழுது வாழ்கவே..
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பின் வணக்கங்களுடன்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளியில் மாணிக்க வீணையேந்தும் கலைவாணியின் இருபாடலையும் பொருத்தமாக தேர்ந்தெடுத்து பகிர்ந்ததற்கு மகிழ்ச்சி.
நடிகர் திலகத்தின் பக்திப் பாடல்களே நம்மையும் உணர்ச்சிவசப்பட வைத்து விடும். பாட்டின் வரிகள், இசை, பிண்ணனி பாடுபவரின் அருமையான குரல், எல்லாவற்றிற்கும் மேலாக அதற்கு அவரின் பொருத்தமான வாயசைக்கும் உச்சரிப்பு, உடல், முக பாவங்கள், அனைத்தும் சேர்ந்து அந்தப்பாடலை சிறப்பாக ஆக்கி விடும்.
மூன்றாவது பாடலும் அருமை. இன்றைய மூன்று பாடலுமே அருமை. காணொளி கேட்கிறேன். அதில் பகிர்ந்த பாடலும் நன்றாக இருக்கும். அனைத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஒரே வரியில் சொல்வதென்றால் கவியரசர் நமக்குக் கிடைத்த பொக்கிஷம்..
பதிலளிநீக்குஇன்றைய பாடல்கள் இனிமை.. இனிமை..
பதிலளிநீக்குமாணிக்க வீணையே
பதிலளிநீக்குமரகதப் பதுமையே!..
அருவி போல கவித்துவம்..
காளிதேவி வந்து கருணை செய்யும் போது இப்படித்தான் இருக்கும்..
இது மாதிரி பாட்டெல்லாம் இனி வருமோ..
பாட்டெல்லாம் இனி வருமோ என்று கேட்பதற்குப் பதில், கதைகளெல்லாம் வருமோ என்று கேட்டிருக்கலாம்.
நீக்குவீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் கடைசி பாடல்.... உணர்ச்சி மிகுந்த காவியம். ஒவ்வொரு தடவை நான் படம் பார்க்கும்போதும் இந்தத் தடவையாவது வெற்றிபெறணுமே என்று நினைத்துக்கொள்வேன்.
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபாடல்கள் அனைத்தும் அருமை.
பதிலளிநீக்குமுதல் பாடல் மிக அருமையான பாடல் அந்த இசை தொகுப்பில் உள்ள அனைத்து பாடலும் நன்றாக இருக்கும் எங்கள் வீட்டில் கொலு சமயம் தினம் ஒலிக்கும். மற்ற நாளில் வெள்ளிக்கிழமை வைப்போம்.
தங்கை, மகன் பாடும் நினைவுகளை பகிர்ந்து கொண்டது அருமை.
சரஸ்வதி பூஜை அன்று எல்லா இடங்களிலும் இந்த பாடல் ஒலிக்கும்.
மலரும் வான் நிலவும் பாடல் டி.எம்.எஸ் அவர்களும் பாடி இருப்பார்.
அந்த பாடலும் நன்றாக இருக்கும். அனைவரும் அவர் பாடலை பாடுகிறார்கள் என்பது போல் சினிமாவில் வரும். காட்சி நன்றாக இருக்கும்.
பேட்டி முன்பு கேட்டு இருக்கிறேன்.
இண்டைக்கு எல்லாமே சைவப் பாட்டாவே போட்டிட்டார் ஸ்ரீராம்:)
பதிலளிநீக்குமாணிக்க வீணை ஏந்தும் நானும் சின்னனில் பாடும் பாட்டு.. அதில் வரும் அம்மா.. என்பதை நான் நீட்டி முழக்கி இழுப்பேன்.. அம்மாஆஆஆஆஆஆஆஆஆஆ என ஹா ஹா ஹா..
கடசிப் பாட்டு இதுவரை கேட்டதில்லை...
நான் இங்கின ரொம்ப அமைதியா வந்திட்டுப் போகிறேன், ஆரையும் பார்க்காமல்:))
///சிவாஜி கணேசன், சௌகார், முத்துராமன் உள்ளிட்டோர் அடித்தது.. //
பதிலளிநீக்குஎனக்கும் இதுதான் கண்ணில் பட்டது, பின்பு பார்த்தால் கில்லர்ஜி சொல்லிட்டார்:))..
நவராத்திரி காலத்தில் மூன்று பாடல்களுமே சிறப்பான பாடல்கள்.
பதிலளிநீக்கு