புதன், 16 அக்டோபர், 2024

ரூபாய் நோட்டு என்று பெயர் வரக் காரணம் என்ன?


கே. சக்ரபாணி சென்னை 28: 

காகிதத்தில் அச்சடிக்கும் ரூபாய்களுக்கு  எப்படி   ரூபாய்  நோட்டு என்று  பெயர் வந்தது? 

# "நோட்டு எழுதி வாங்கிக் கொண்டு ரூபாய் கொடு" என்று புரோ நோட்டைச் சொல்வார்கள்.‌ நம் ரூ. நோட்டுகள் ரிசர்வ் வங்கி தரும் நோட்டுகள்தாமே.‌ Note that is always current is currency note.

& வோட்டுக்கு காசு என்று சொன்னால் சரியாக இல்லை. வோட்டுக்கு நோட்டு என்று சொன்னால் ரைமிங் ஆக இருக்கிறது. அதனால் நோட்டு என்று பெயர் வந்திருக்குமோ! 

அரசாங்க  அதிகாரிகள் பச்சை  இங்க்கில் கையெழுத்து போடும் பழக்கம்  எப்படி  வந்தது? 

# பச்சை மையை உயர் பதவி வகிப்பவர்கள் தம் பெருமைச் சின்னமாகக் தேர்ந்தெடுத்த காரணம் நீலம் கருநீலம் மற்றவர்களால் பயன்படுத்தப் படுவதும், சிவப்பு ஆவணங்களில் செல்லாததாகக் கருதப் பட்டதும்தான். 

முன்பெல்லாம் இருவர் சந்தித்து கொண்டால்  இரு கை கூப்பி வணக்கம் ( இந்திய பண்பாடு)  சொல்வது இருந்து. பிறகு  கை குலுக்குவது  ( ஆங்கில பண்பாடு)  வந்து.   தற்போது  கட்டித்தழுவும்  ( முஸ்லிம்கள்  பண்பாடு)  வந்துவிட்டதே  அதுகுறித்து. .. 

# வரவேற்கும் முறைகள் அவரவர் தேர்வு. நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் எல்லாரும் குடிபெயர்வதால் பழக்க வழக்கங்கள் மாறுவது இயல்பு எனினும் தொடாமல் வரவேற்பது உயர்வு என்று தோன்றுகிறது.

உலகின்  ஏழு  அதிசயங்கள்  யார்  எந்த  வருடம்   கண்டு பிடித்து  பட்டியலிட்டு  வெளியிட்டார்கள். அதற்கு  பின்  ஏன்  ஒரு  அதிசயங்களும் இல்லையா? 

# கி மு 225 ல் ஃபிலோ என்பவர் பட்டியலிட்ட   உலக அதிசயங்கள் ஏழில் பிரமிட் ஒன்றுதான் இன்னும்  இருக்கிறது .  நம்ம தாஜ்மகால் எல்லாம் பிற்சேர்க்கைதான்.

& எட்டாவது அதிசயம் ஐஸ்வர்யா ராய் என்று டயமண்டு சொல்லியிருக்கிறாரே! ஃபிஃப்டி கேஜி தாஜ்மகாலும் பிற்சேர்க்கைதானா ! அப்போ டயமண்டு சொன்ன எல்லாவற்றையும் பட்டியலிலிருந்து அகற்றிவிடலாம் ! 

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்
கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் - (பெண்)
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம் - (ஆண்)
ஒரு வாசமில்லாக் கிளையின் மேல் நறுவாசமுள்ள பூவைப்போல் பூவாசம் அதிசயமே - (பெண்)
அலைக்கடல் தந்த மேகத்தில் துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமே
மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல் மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே - (ஆண்)
உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும் உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்
நினைத்தால் நினைத்தால் அதிசயமே
கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே - (பெண்)
உண்டான காதல் அதிசயம் ஓஹோ
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம் ஓஹோ..
பெண்பால் கொண்ட சிறுதீவு கால்கொண்டு நடமாடும் நீதான் என் அதிசயமே - (ஆண்)
உலகில் ஏழல்ல அதிசயங்கள் வாய்பேசும் நீதான் எட்டாவததிசயமே
வான் மிதக்கும் உன் கண்கள் தேன் தெறிக்கும் கன்னங்கள் பால் குடிக்கும் அதரங்கள் அதிசயமே
நங்கைகொண்ட விரல்கள் அதிசயமே நகம் என்ற கிரீடமும் அதிசயமே
அசையும் வளைவுகள் அதிசயமே
கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம், ஓஹோ.. - (பெண்)
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும் - (பெண்)
படர்கின்ற காதல் அதிசயம்

நெல்லைத்தமிழன்: 

மழை மற்றும் தண்ணீர் பயம் காரணமாக மக்கள் அந்ந அந்தப் பகுதியைவிட்டு வெளியேறுவது, கார்களை மேம்பாலத்தில் நிறுத்துவது போன்றவைகளைப் பார்த்து வருத்தப்படுவதா இல்லை இப்போ கோபமாக இருப்பதுபோல் இருந்துவிட்டு திருட்டுக் காசை வாங்கிக்கொண்டு ஓட்டு போடறவங்கதானே இவர்கள் என்று கண்டுகொள்ளாமல் செல்வதா?

# யாருக்கு வாக்களித்தாலும் நிர்வாகக் குறைபாடு இருக்கும். அப்படியான ஒரு மனப்பாங்கு தான் அதிகாரத்துக்கு வரும் எவருக்கும் இருக்கிறது.  

"தவறான வழியில் ஈட்டியதை நாம் வாங்கிக் கொள்வது தவறில்லை" என்ற எண்ணம் வாக்காளர்கள் இடையே வலுப்பட்டிருக்கிறது.  இதெல்லாம் என்றாவது சரியாகுமா என்று தெரியவில்லை.

மோர் சாதமோ இல்லை ரசம் சாதமோ கொடுக்கும் திருப்தியை மற்ற உணவுகள் கொடுக்க முடியுமா?

# இட்லி சாம்பார் கொடுக்குமே !

& எனக்குச் சில சமயங்களில் சாம்பார் சாதம் கூட திருப்தி கொடுத்திருக்கிறது. சிறு வயதில், பருப்பு சாதம் மட்டுமே சாப்பிட்டு திருப்திப் பட்டுக்கொண்டது உண்டு!

பெங்களூரில் ஒரிஜனல் மைசூர்பாக் என்று வெட்டி எடுத்ததுபோல் இல்லாமல் கேசரி போன்று கொடுப்பதைச் சாப்பிட்டிருக்கிறீர்களா?

# மைசூர் இந்திரா பவன் மைசூர்பாக் பாறையை வெட்டி எடுத்துப் பொட்டலம் கட்டியது போல் இருக்கும். 1967-68ல் ருசித்த இருக்கிறேன். இப்போதும் இந்திரா பவன் இருக்கிறதா என்று தெரியவில்லை.

& பெங்களூரில் அப்படி கொடுப்பதன் பெயர் 'மைசூர் பா' என்று யாரோ சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்! பாக் என்று அழுத்திச் சொன்னால் கூட அது உடைந்துவிடும் போலிருக்கு! பெங்களூர் வந்த பிறகு அந்த மைசூர் பா அடிக்கடி சுவைத்திருக்கிறேன். 

= = = = = = = = = =

KGG பக்கம் : 

நான் எமரால்டில் இருந்தபோது படித்தது, நஞ்சநாடு போர்ட் ஹை ஸ்கூலில் ஏழாம் வகுப்பு மட்டுமே. அதன் பின் திரும்பவும் நாகை வந்து படிப்பைத் தொடர்ந்தேன். 

அந்தக் கால கட்டத்தில் kgs அண்ணனை விட்டு மிகவும் தொலைவாக வந்துவிட்டதால் முன்பு போல அவர் அருகில் இருந்து பார்த்துப் பழக வாய்ப்பு கிடைக்காமல் போயிற்று. 

ஆனாலும் அவர், தீபாவளி போன்ற பண்டிகை சமயங்களில் விடுமுறை எடுத்துக்கொண்டு நாகைக்கு வருவார். அருவங்காடு கார்டைட் தொழிற்சாலை மனமகிழ் மன்ற (Music club) டெக்னிகல் நிர்வாகம் அவர் பொறுப்பில் இருந்தது. வருடா வருடம் அவர்கள் மன்ற சார்பில், இசைக் கலைஞர்களை அழைத்து கச்சேரி நடத்துவார்கள். பிரபல இசைக் கலைஞர்கள் பலரும் அருவங்காடு இசை மன்றத்தில் கச்சேரி செய்தது உண்டு. 

இசைக் கலைஞர்களை அவர்களின் அருகிலேயே இருந்து பார்த்துப் பேசியவர் என்பதால், அந்த இசைக் கலைஞர்களைப் பற்றிப் பலப் பல 'கிசு கிசு' சமாச்சாரங்கள் கூட எங்களுடன் பகிர்ந்துகொள்வார். ஆனால் அதைப் பற்றி இங்கே எதுவும் எழுதப்போவதில்லை. 

திரைத் துறையில் நுழையும் முன்பே ஸ்ரீவித்யா - அவர்கள், தன்னுடைய  அம்மா எம் எல் வி அவர்களோடு சேர்ந்து கச்சேரிகளில் மேடையில் இடம் பெற்றது உண்டு. எம் எல் வி அவர்கள் கச்சேரி செய்ய அருவங்காடு வந்த சமயத்தில் kgs ஸ்ரீவித்யாவைப் பார்த்தது பற்றி அந்தக் காலத்திலேயே எங்களுக்குச் சொன்னார். எம் எல் வி யின் பெண் மிகவும் அழகாக இருந்ததாக சொன்னார். 

எம் எல் வி யின் கணவர் விகடம் கிருஷ்ணமூர்த்தி, எங்களுக்கு, எங்கள் அத்தையின் மாப்பிள்ளை (ராமச்சந்திரன்) அவர்கள் ஸ்வீகாரம் போன  குடும்பம் மூலம் உறவு. 

சுருக்கமாக சொல்கிறேன் : 

அ) என் அப்பா : கோபாலன். 

ஆ) அப்பாவின் அக்கா : மதுரம். 

இ) மதுரத்தின் மூத்த பெண் : சீதாலட்சுமி 

ஈ) சீதாலட்சுமியின் கணவர் : ராமச்சந்திரன் 

உ) ராமச்சந்திரன் அவர்களை ஸ்வீகாரம் எடுத்த பெற்றோர் : முத்துகிருஷ்ணன் & ரமாமணி. 

ஊ) முத்துக்கிருஷ்ணன் & ரமாமணி தம்பதியினருக்குப் பிறந்த மகன் : விகடம் கிருஷ்ணமூர்த்தி. 

எ) விகடம் கிருஷ்ணமூர்த்தி & எம் எல் வசந்தகுமாரி தம்பதியினரின் பெண் : நடிகை ஸ்ரீவித்யா. 

கொஞ்சம் தெளிவாக இருக்கிறீர்களா? 

இப்போ உங்களைக் குழப்பிவிடுகிறேன். 

மேலே உள்ள ஈ ) ராமச்சந்திரன் அவர்களின் இரண்டாவது மகன் பெயர் : கிருஷ்ணமூர்த்தி. இவர் என்னுடைய இரண்டாவது அக்காவின் கணவர். 

கொஞ்சம் குழம்பியாச்சா ? 

இதோ இன்னும் கொஞ்சம் குழப்புகிறேன்: 

மேலே உள்ள ஆ) மதுரம் அவர்களின் இரண்டாவது பையன், துரைசாமி என்னுடைய மாமனார். 

முழுவதும் குழம்பிவிட்டீர்களா ? இல்லை என்றால் இப்போ ஒரு சான்ஸ் :

எனக்கு, நடிகை ஸ்ரீவித்யா அவர்கள் என்ன  உறவுமுறை? 

அடுத்த வாரத்துக்குள் பதிலை யோசித்து வையுங்கள்! 

(தொடரும்) 

= = = = = = = = = = = = = =

எம் எல் வி & விகடம் கிருஷ்ணமூர்த்தி சம்பந்தப்பட்ட மேலும் சில படங்கள் : இணையத்திலிருந்து -- 

என் எஸ் கே + மதுரம் திருமணம். 



= = = = = = = = = = = = =

54 கருத்துகள்:

  1. எனக்கு ஸ்ரீவித்யா அவர்கள் என்ன உறவுமுறையோ, எனக்கும் உங்களுக்கும் என்ன உறவுமுறையோ அதைவைத்து நீங்களே சுலபமாகக் கண்டுபிடித்துவிட முடியுமே

    பதிலளிநீக்கு
  2. சிறு வயதில் பருப்பு சாதமே..... இதுல ஒரு படிப்பினை இருக்கு. நான் இருந்த பெரியப்பா வீட்டில் டிபன் என்பதே கிடையாது. சனிக்கிழமை மற்றும் அதற்குரிய காலங்களில்தான் பலகாரம். அப்போ எனக்கு கோதுமை ரவை உப்புமா என்று சொன்னாலே இன்று பலகாரமா என மகிழ்வேன். சின்னச் சின்ன ஐட்டங்கள் மோர்குழம்பு அப்பக்கொடி மோர்குழம்பு மணத்தக்காளி கீரை பாசிப்பருப்பு கூட்டு போன்றவையே மகிழ்ச்சி தந்தது. இப்போ

    பதிலளிநீக்கு
  3. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  4. முஸ்லீம்கள் கட்டித் தழுவுவது ... இதுல கருத்துப் பிழை இருக்கு. அவங்க தோள் மாத்திரம் படும்படியா இருப்பாங்க. கட்டித் தழுவுவது நம்ம ஊர் ஜொள் பார்ட்டிஇகள் கண்டுபிடித்த டெக்னிக். முஸ்லீம்ல ஆண் பெண் தொடுவதே கிடையாது. கணவன் மனைவியும் பப்ளிக்ல ரொம்ப இடைவெளி மெயின்டெய்ன் பண்ணுவாங்க

    பதிலளிநீக்கு
  5. அதிசயங்களில் பெரிய அதிசயம் அடுத்த தலைமுறை உருவாவதுதான் இதை யோசிக்காமல் வெளியில் பார்த்து உலக அதிசயங்களை வரிசைப்படுத்தியவரைப் பற்றி என்ன சொல்ல?

    பதிலளிநீக்கு
  6. ரூபம் (வடிவம் ) என்ற சமஸ்கிருதச் சொல் பின் வந்த மொழியுடன் மருவி - ரூபா,
    ரூபே ருப்யா ரூபாய் ருப்பீ , ருப்பீஸ் என்று ஆகி விட்டது..

    Note என்ற சொல்லுக்குப் பல அர்த்தங்கள்..

    பதிலளிநீக்கு
  7. ஆணும் பெண்ணும் கட்டித் தழுவிக் கொள்வது நம்ம ஊர் ஜொள் பார்ட்டிகள் கண்டுபிடித்த டெக்னிக்.

    உண்மை தான்..

    அரேபிய கலாச்சாரத்தில்
    நல்லவைகளும் உள்ளன..

    பதிலளிநீக்கு
  8. விருந்தினரை இருகரம் நீட்டி வரவேற்பதும் வணக்கம் கூறி வரவேற்பதும் நமது கலாச்சாரம்..

    வழியனுப்பி வைக்கும் போது ஏழடி தூரம் அவருடன் நடப்பது மரபு..

    பதிலளிநீக்கு
  9. கட்டித் தமுவிக் கொள்வதில் நாகரிகம் உண்டு..

    ஆலிங்கனம் எனப்படும்..

    இதைக் கெடுக்க வந்தவையே தொலைக் காட்சி நிகழ்ச்சிகள்..

    சீச்சி

    பதிலளிநீக்கு
  10. காயாரோகணம் என - சிவபெருமான் மெய்ஞானியரைத் தழுவி வரவேற்ற தலங்கள் உள்ளன..

    திருநாகைக் காரோணம்..

    பதிலளிநீக்கு
  11. அநுமனை ஸ்ரீராமன் கட்டித் தழுவிக் கொண்ட வைபவமும் உண்டு..

    ஸ்ரீ ராமாலிங்கனம்..

    பதிலளிநீக்கு
  12. //அதிசயங்களில் பெரிய அதிசயம் அடுத்த தலைமுறை உருவாவது தான்..//

    இதை மாணிக்க வாசகரும் திருநாவுக்கரசரும் பட்டினத்தாரும் அருணகிரி நாதரும் பாடி வைத்திருக்கின்றனர்..

    இதைத் தான் பாடத் திட்டத்தில் இருந்து அப்புறப்படுத்தியாயிற்றே..

    பதிலளிநீக்கு
  13. கட்டிப்பிடி வைத்தியம் - என்றால் எத்தனை குஷி!..

    பதிலளிநீக்கு
  14. ஜொள்ளாளருக்குக் குஷியோ குஷி தான்!..

    பதிலளிநீக்கு
  15. ///புதிய கோணம். ஆனால் ... காசு கூட உருவம் தானே!.. ///

    மனனர்கள் காலத்தில் முத்திரையுடன் வந்தவை நாணயங்கள்.. நா நயம்..

    தமிழில் காசு என்றால் குற்றம் என்ற அர்த்தமும் உண்டு..

    பதிலளிநீக்கு
  16. காயாரோகணத் தலங்கள்
    மூன்று..

    நாகைக் காரோணம் குடந்தைக் காரோணம்
    கச்சிக் காரோணம்..

    பதிலளிநீக்கு
  17. கேள்வி பதில்கள் கண்டோம்.

    உலக அதிசயத்தில் ஐஸ்வர்யா ராய் .......ஹா....ஹா......

    பதிலளிநீக்கு
  18. கௌதம் ஜி நினைவெல்லாம் இரண்டாம் பகுதி வாசிக்க வில்லையா..

    இன்னும் சில வாரங்களுக்கு..

    பதிலளிநீக்கு
  19. நெல்லையின் முதல் கேள்வி - நெல்லை ரொம்ப முக்கியம் பாருங்க...ஹாஹாஹா பின்ன நீங்க ஏதாச்சும் ஐடியா கொடுத்தா கேட்டுக்கவா போறாங்க? வருத்தப்பட்டா பிரயோசனம் உண்டா?இல்லை உங்கள அரசுக்கு ஆலோசகர் போஸ்ட் கொடுக்கப் போறாங்களா!!!!!!! நம்மால எதையும் செய்ய முடியாதப்ப என்ன சொல்றது சொல்லுங்க?!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  20. நெல்லையின் ரெண்டாவது கேள்வி - இதுவும் அவரவர் மன சம்பந்தப்பட்டது! எனக்கு சேவை மோர்க்குழம்பு பப்படம் சாப்பிட்டா ஆஹா ஆஹான்னு இருக்கும்!! நிறைய சொல்லிட்டே போகலாம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. by the by மோர்க்குழம்புனா திருனெல்வேலி மோர்க்குழம்பு இல்லைனா கேரளா புளிசேரி!

      கீதா

      நீக்கு
  21. நெல்லை மூன்றாவது கேள்வி - ஹாஹாஹாஹா ஹலோ நீங்க இப்ப டயட்!!! நோ ஸ்வீட்டுங்கோ! ஸ்வீட் பத்தி பேசினாலே டெம்ப்ட் ஆவேன்னு சொல்லும் நீங்க இப்ப ரொம்ப கட்டுப்பாடோடு ஸ்வீட் நஹின்னு இருக்கீங்க.....அந்தப் பக்கம் பாருங்க இங்க பார்க்கக் கூடாது! என் தங்கை, மைசூர்பா வாயில கரையறாப்ல பண்ணுவதை கேட்டிருக்கா!!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  22. கௌ அண்ணா உங்க குரோம்பேட்டை குசும்பன வரவழைச்சிட்டீங்களே!!!! ஹாஹாஹா பின்ன, ஸ்ரீ வித்யா, ரத்தபந்தம் இல்லாம, எனக்கு தூரத்து கஸின் உறவு என்று சொல்வதை விட்டு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  23. கேள்விகளும், பதில்களும் படித்தேன்.

    KGG சார் பக்கத்தில் நிறைய செய்திகள், படங்கள் இடம்பெற்று இருக்கிறது. யார் யாருக்கு உறவு கேள்விக்கு அடுத்த வாரம் யார் சொல்கிறார்கள் என்று பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  24. அது சரி சாமி விகடம் கிருஷ்ணமூர்த்தி முதல் மகனா அல்லது இரண்டாவது மகனா?!😉 சொல்லுங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த விவரம் தெரியவில்லை.! அநேகமாக ஸ்வீகார மகன் ராமச்சந்திரனைத் தவிர்த்துப் பார்த்தால் - விகடம் கிருஷ்ணமூர்த்தி ஒரே மகனாக இருக்கலாம்.

      நீக்கு
  25. கேள்வி பதில்கள், kgg பக்கம் என அனைத்தும் சிறப்பு. நேற்றே படித்து விட்டேன். என்னவொரு குழப்பம்! என்ன உறவு? நான் இந்த விளையாட்டுக்கு வரலை… நேரடியா சொன்னாலே உறவுகள் குழப்பம் எனக்குண்டு! இவ்வளவு நீட்டி முழக்கி சொன்னா, out of syllabus என்று நகர்ந்துவிட வேண்டியதுதான். 🙂

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :)))) ரொம்பத் தெளிவாக சொல்லியிருக்கிறேன் (என்று நினைத்தேன்!)

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!