கே. சக்ரபாணி சென்னை 28:
1. மகாபாரதத்தில் வரும். கௌரவர்கள் 100 பேர் பெயரும் யாரேனும் கேள்வி பட்டிருக்கிறீர்களா. யாருக்கேனும் தெரியுமா?
# சுமார் 65 அல்லது 70 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு மகாபாரத பிரசங்கத்தில் கிருபானந்த வாரியாரோ அல்லது பாலகிருஷ்ண சாஸ்திரிகளோ சரியாக நினைவில்லை கௌரவர்களின் பெயரை கடகடவென்று சொல்ல கேட்டிருக்கிறேன். 100 பெயர்களும் சொல்லப்பட்டதா என்று சரியாக நினைவில்லை.
& இதோ :
1.துரியோதனன்
2 துச்சாதனன்
3 துசாகன்
4 ஜலகந்தன்
5 சமன்
6 சகன்
7 விந்தன்
8 அனுவிந்தன்
9 துர்தர்சனன்
10 .சுபாகு
11.துஷ்பிரதர்ஷனன்
12 துர்மர்ஷனன்
13 துர்முகன்
14 துஷ்கரன்
15 காஞ்சநத்வாஜா
16 விகர்ணன்
17 சலன்
18 சத்வன்
19 சுலோசனன்
20 சித்ரன்
21 உபசித்ரன்
22 சித்ராட்சதன்
23 சாருசித்ரன்
24 சரசனன்
25 துர்மதன்
26 துர்விகன்
27 விவித்சு
28 விக்தனன்
29 உர்ணநாபன்
30 சுநாபன்
31 நந்தன்
32 உபநந்தன்
33 சித்திரபாணன்
34 அயோபாகன்
35 சித்திரவர்மன்
36 சுவர்மன்
37 துர்விமோசன்
38 மகாபாரு
39 சித்திராங்கன்
40 சித்திரகுண்டாலன்
41 பிம்வேகன்
42 பிமவிக்ர
43 பாலகி
44 பாலவரதன்
45 உக்ரயுதன்
46 சுசேனன்
47 குந்தாதரன்
48 மகோதரன்
49 சித்ரயுதன்
50 நிஷாங்கி
51 பஷி
52 விருதகரன்
53 திரிதவர்மன்
54 திரிதட்சத்ரன்
55 சோமகீர்த்தி
56 அனுதரன்
57 திரிதசந்தன்
58 ஜராசங்கன்
59 சத்தியசந்தன்
60 சதஸ்
61 சுவாகன்
62 உக்ரச்ரவன்
63 உக்ரசேனன்
64 சேனானி
65 துஷ்பரஜை
66 அபராஜிதன்
67 குண்டசை
68 விசாலாட்சன்
69 துராதரன்
70 திரிதஹஸ்தன்
71 சுகஸ்தன்
72 வத்வேகன்
73 சுவர்ச்சன்
74 ஆடியகேது
75 பாவசி
76 நகாதத்தன்
77 அமப்ரமாதி
78 கவசி
79 கிராதன்
80 சுவீர்யவ
81 குண்டபேடி
82 தனுர்தரன்
83 பீமபாலா
84 வீரபாகு
85 அலோலுபன்
86 அபயன்
87 உக்ராசாய்
88 திரிடரதச்ரயன்
89 அனாக்ருஷ்யன்
90 குந்தபேதி
91 விரவி
92 சித்திரகுண்டலகன்
93 தீர்தகாமாவு
94 பிரமாதி
95 வீர்யவான்
96 தீர்கரோமன்
97 தீர்கபூ
98 மகாபாகு
99 குந்தாசி
100 விரஜசன்
101 துர்சலை (ஒரே ஒரு சகோதரி)
(நன்றி 🙏 தெய்வேகம்.காம். கூகுள்.)
2. வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தபடி நன்றாக மழை பெய்து கொண்டிருக்கும். அதன் காரணமாக நாளை பள்ளி. கல்லூரிகளுக்கு. விடுமுறை என்று அறிவித்த பின் அந்நாளில் மழையே வராமல் நன்றாக வெயில் அடிக்கும். இந்த அதிசயத்தை பற்றி தங்கள். கருத்து?
# வருண பகவானுக்கு மாணவர்களை மிகவும் பிடிக்கும் என்பது தெரிகிறது.
& எனக்கும் இது மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுக்கும் விஷயம்! அடிக்கடி கவனித்திருக்கிறேன். பள்ளிகளுக்கு லீவு விடவேண்டும் என்பதற்காகவே கடவுள் விளையாடும் விளையாட்டு!
3. கிருஸ்துவ மற்றும் முஸ்லிம்கள் தொழும்இடங்களில் மற்ற மதத்தினரை அனுமதிக்கிறார்கள். ஆனால் இந்து மத கோவில்களில் மட்டும் அனுமதிப்பதில்லையே- ஏன்?
# இந்தப் பிரச்சனைக்கு ஒரு புதுமையான காரணத்தைப் பல ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சொற்பொழிவில் கேட்டிருக்கிறேன். அதாவது இந்து மதம் என்ற பெயரில் ஒரு மதம் கிடையாது. ஏனென்றால் அது ஆதி மதம். வேறு மதங்கள் இல்லாததால் அதை அடையாளம் காட்ட தனியாக ஒரு பெயர் தேவையாக இருக்கவில்லை. அது அழிவில்லாதது என்பதை இவ்வாறு புரிந்து கொள்ளப்படுவதால்தான் அது சனாதன மதம் என்று அழைக்கப்படுகிறது. சனாதனம் என்றால் தேய்வில்லாதது- அழிவு இல்லாதது என்று பொருள். மற்ற எல்லா மதங்களும் அதன் பின்னே வந்தவை என்பதால் அவை இந்து மத கோட்பாடுகளுக்கு மறுப்பாகவோ எதிர்ப்பாகவோதான் முளைத்திருக்க முடியும். எனவே எல்லோரும் பக்தியுடன் அணுகும் ஒரு சன்னிதானத்தில் அந்த நம்பிக்கை இல்லாதவர்கள் வருவது அதன் புனிதத் தன்மைக்கு ஊறு என்று நினைத்துதான் நம்பிக்கை இல்லாதவர்கள் வர வேண்டாம் என்று விதிக்கப்பட்டிருக்கிறது என்று அவர் சொன்னார்.
= = = = = = = = = = =
இந்த வாரம் வேறு கேள்விகள் இல்லை என்பதால்,
எங்கள் கேள்விகள்:
1) சொட்டையில் இருக்குமட்டையில் இல்லை
கல்லுல இருக்கு
கள்ளுல இல்லை - அது என்ன?
2) கேள்வியில் இருக்கு
பதிலில் இல்லை
மட்டையில் இருக்கு
மந்தையில் இல்லை - அது என்ன?
3) இதில் மூக்கு இருக்கும் ஆனா மூச்சு விடாது
கண் இருக்கும்; ஆனா பார்க்காது அது என்ன?
KGG பக்கம் :
kgs நினைவுகள்
எங்கள் வீட்டில், நாங்கள் முதன் முதலில் அருகில் இருந்து பார்த்த டேப் ரிக்கார்டர் அண்ணன் kgs 1970 ஆம் வருடம், அருவங்காடு மியூசிக் கிளப் சார்பில் அவர் வாங்கிய பெரிய சைஸ் AKAI(?) டேப் ரிக்கார்டர்தான். இரண்டு பெரிய ஸ்பூல்ஸ் சுழலுகின்ற டேப் ரிக்கார்டர். (கேசட் ரிக்கார்டர் அல்ல)
அருவங்காட்டிலிருந்து வந்து, நாகை பக்கத்தில் இருக்கும் நாகூர் கடைத் தெருவில் வாங்கினார். அதை ஊருக்கு எடுத்துச் செல்வதற்கு முன்பு, அந்த டேப் ரிக்கார்டரில் எப்படி ரெகார்ட் செய்வது, எப்படி அதைத் திருப்பி கேட்பது என்றெல்லாம் சொல்லிக்கொடுத்தார்.
நானும் என் தம்பியும் அதில் விதவிதமாக புகுந்து விளையாடினோம். நாங்கள் பாடிய பாடல்களை, பேசிய பேச்சுக்களை slow speed , high speed என்றெல்லாம் ஓடவிட்டு, கேட்டு சிரித்தோம். பெண் பாடகர்கள் பாடிய பாடல்களை ரெகார்ட் செய்து slow ஸ்பீட் ல ஓடவிட்டு ஆண் குரல் போல ஒலிக்கும் பாடலை கேட்பது. அதையே high ஸ்பீட்ல ஓடவிட்டு கிச்சு கிச்சு என்று பாடும் பாடலைக் கேட்டுச் சிரிப்பது என்று பொழுது ஒரு வாரம் சிறப்பாக சென்றது.
அவர் திரும்ப அருவங்காடு செல்வதற்கு முன்பு, ரெகார்ட் செய்தவை எல்லாவற்றையும் அழித்து, காலி செய்து எடுத்துச் சென்றார்.
டயோடு, ரெசிஸ்டர், ட்ரான்சிஸ்டர் (மூன்று கால் கொண்ட சிறிய பாகம்) கெப்பாசிட்டர், tuning condenser பற்றி எல்லாம் எனக்குச் சொல்லித் தந்தவர் kgs. germanium diode, சில ட்ரான்சிஸ்டர் (மூன்று கால் பிராணிகள்) சிறிய ஸ்பீக்கர் soldering iron என்று பல பாகங்களைக் கொடுத்து, சிறிய ட்ரான்சிஸ்டர் ரேடியோ எப்படி செய்வது என்றும் எனக்குச் சொல்லிக்கொடுத்தார். அந்த வகை ரேடியோக்களுக்கு reaction receiver என்று பெயர். அது தற்காலத்தைய சிப்ஸ் எல்லாம் புழக்கத்திற்கு வராத காலம்.
ஆனால் நான் அப்படி செய்த ரேடியோ நாகையிலோ அல்லது தஞ்சாவூர் பக்கத்தில் விடுமுறைக்கு சென்றிருந்த திருக்காட்டுப்பள்ளியிலோ வேலை செய்யவில்லை.
சென்னையில் வேலையில் சேர்ந்தபின் அதே பாகங்களைக்கொண்டு நான் உருவாக்கிய ரேடியோ சென்னை புரசவாக்கத்தில் மற்றும் அதன்பின் குரோம்பேட்டை - இரண்டு ஊர்களிலும் பிரமாதமாக வேலை செய்தது. ஆனால் பாருங்க என்னுடைய குரங்கு புத்தி - இந்த ட்ரான்சிஸ்டர் ரேடியோவில் சில சில மாற்றங்கள் செய்து பார்த்தேன்.
இறுதியாக குறைந்தபட்ச பாகங்களைக் கொண்டு - ஒரு coil, ஒரு tuning condenser , ஒரு டயோடு, ஒரு ஸ்பீக்கர் இவற்றோடு ஒரு பேட்டரி செல் இவற்றை மட்டும் வைத்து ஒரு ரேடியோ உருவாக்கினேன். அதில் பேட்டரி செல் நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக ஒரு எலுமிச்சம்பழத்தில் பழைய செப்பு ஒரு பைசா காசு, & ஒரு துத்தநாகத் தகடு ஆகியவைகளை சொருகி நானே உருவாக்கிய பேட்டரி(!) ஒன்றை இணைத்து ரேடியோவை கொஞ்ச நேரம் பாட வைத்தேன். இந்த செயலால் என்னுடைய ரேடியோவுக்குக் கோபம் வந்துவிட்டது போலிருக்கு - அப்புறம் அது வேலை செய்வதை நிறுத்திக்கொண்டுவிட்டது!
= = = = = = = = = = = =
முருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குகாக்க காக்க கனகவேல் காக்க
நீக்குநோக்க நோக்க நொடியினில் நோக்க.....
நீக்கு__/\__
நீக்குமுஸ்லிம்களின்தொழுகை இடங்களில் மற்ற மதத்தினர் ஒரு எல்லைக்கு மேல் செல்ல அனுமதியில்லை....
பதிலளிநீக்குமேல் விவரங்கள் இருக்கின்றன
தகவலுக்கு நன்றி.
நீக்குஇந்து சனாதன கோவில்களில் மற்ற மதத்தினரை...இந்தக் கேள்வி மதங்களைப் பற்றிய புரிதலின்மையினால் எழுந்திருக்கிறது. சிலைகளை வணங்குவது பாவம், அத்தகைய காஃபிர்களை முஸ்லீம்கள் வெறுக்க வேண்டும் வாள் முனையில் மதம் மாற்றவேண்டும் என்பது இஸ்லாமியக் கொள்கை. அதனால்தான் முகம்மது நபிக்கு உருவம் கொடுத்தாலே பெரும் பிரச்சனையைச் சந்திக்கணும். கிறித்துவர்களுக்கு, அதாவது லாபம் கருதி மதம் மாறிய இந்திய கிறித்துவர்களுக்கு இந்துக்கள் பாவிகள் இந்துத் தெய்வங்கள் சாத்தான்கள். இவர்கள் இருவருக்கும் கோயில்களில் என்ன வேலை? இந்துக் கடவுளின்மீது தீராத பக்தி உண்டு, நான் அந்தத் தெய்வத்தை வணங்கச் செல்லுகிறேன் என்று எழுதிக் கொடுத்துவிட்டு நுழையும் நடைமுறை சில கோவில்களில் உண்டு. கோவிலுக்குள்ள நடைமுறைகளைப் பின்பற்றும் மாற்று மதத்தினர் வரத் தடையேது?
பதிலளிநீக்குநல்ல கருத்து.
நீக்குஅன்பின் நெல்லை அவர்களது தெளிவான கருத்துகளைக் கண்டு மகிழ்ச்சி..
நீக்குதலை வணங்குகின்றேன்..
பொது வெளியில் சில உண்மை களைச் சொல்வதும் குற்றம்..
நீக்குஇப்போவெல்லாம் பொது வெளியில் உலாவுவதற்கே பயம்ம்ம்ம்ம்மாக்கிடக்கூஊஊஊஊ:):)
நீக்குமற்ற மதங்களின்மீது வெறுப்பு இல்லாமல் அதே சமயம் தங்கள் கலாச்சாரம் மற்றும் கோயில் வழிபாடுகளை முடிந்த அளவு புலம் பெயர்ந்த இடங்களிலும் தொடரும் ஈழத் தமிழர்களை நினைவுகூறுகிறேன். அதிரா பின்னூட்டம் கண்டதும் அவர் எழுதிய கனடா கோயில் திருவிழா, பெரிய தண்ணீர்த் தொட்டி செய்து தீர்த்தவாரி கொண்டாட்டம் போன்றவற்றை அவர் தளத்தில் பகிர்ந்தது நினைவுக்கு வருகிறது.
நீக்குமதம் எனும் பெயரில் பிஸ்னசும் நிறைய நடக்கின்றது நெ த.
நீக்குஒரு கோயில், சிவன் கோயில், சூப்பராக இருக்கும், அங்கு லிங்கத்துக்குத் தண்ணி ஊற்றிக் கும்பிடலாம், எனக்கு சிவன் சிவலிங்கம் என்றால் அப்படி ஒரு நெருக்கம் விருப்பம், அக்கோயிலில் சிலபல நேர்த்தி வச்சேன், உண்டியலில் காணிக்கை செலுத்தினேன், 6 மாதம் கழிச்சுப் போனால் கோயிலைக் காணம்... ஏதோ சைனீஸ் சூப்பமார்கட் அங்கிருந்தது... :(
அதிரா.. நீங்க மாத்திரம் உண்டியலில் பணம் போட்டால் போதுமா? உங்களைச் சேர்ந்தவங்க மத்தவங்கள்ளாம் பணம் போட வேண்டாமா?
நீக்குபல புதிய கோவில்கள் உண்டாவதே கல்லா கட்டுவதற்கு தந்தான். கூடவே பக்தியை வளர்ப்பது
புனிதத் தன்மைக்கு ஊறு என்று சொல்வதைவிட அங்கு நிலவும் ஒரு மாஸ் பாசிட்டிவ் எனர்ஜிக்கு நடுவே நெகட்டிவ் எனர்ஜி சேர வேண்டாம் என்று இருந்திருக்கலாம்! அந்த மாஸ் பாசிட்டிவ் எனர்ஜிதானே மனதில் இருக்கும் வேண்டுதல்களை நிறைவேற்ற வழி செய்கிறது!
பதிலளிநீக்குஉண்மை.
நீக்குஉங்கள் விடுகதை கேள்விகளுக்கு விடைகள்.
பதிலளிநீக்கு1. சொட்டையில் இருக்கு
சொல்.
2. கேள்வியில் இருக்கு
விடை.
3. மூக்கு இருக்கும்
மூக்கு கண்ணாடி.
Jayakumar
சூப்பர்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்
நீக்குkgs நினைவுகள் அருமை..
பதிலளிநீக்குநன்றி.
நீக்குசிவகாசியில் ஒரே சமூகத்தினரின் குடும்பக் கோயில்களில் கூட மற்றவர்களுக்கு அனுமதி கிடைக்காது..
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி.
நீக்குஇது ஏதோ சாதீய காரணம் என்று நினைக்கக்கூடாது. Private ஆக இல்லாமல் public ஆனால் கோவிலுக்குச் சொந்தம், நடைமுறை மாற்றம், பிறகு கோர்ட் கேஸ் என்று நோக்கம் சிதையும் அரசு உள்ளே நுழைந்து அரசியல் செய்யும் என்பதுதான் காரணமாக இருக்கும்
நீக்குஎனது மாமனாரது குலதெய்வக்கோயிலுக்குள் நான் செல்ல வேண்டும் என்றால் நான் - என் மனைவியால் நான் அடையாளம் காட்டப்பட வேண்டும்...
பதிலளிநீக்குஆச்சரியமாக இருக்கிறது
நீக்குஇதைக் காரணம் காட்டியே, அதாவது எங்களை எங்க சர்ச்சுக்கு இன் நுழையவிட மாட்டார்கள் என்று சொல்லியே கட்டிய கணவனை மதமாற்றம் செய்வதும் அந்தச் சமூகத்தில் ஜரூராக நடந்துவருகிறது
நீக்குகேள்விகளும், பதில்களும் அருமை.
பதிலளிநீக்குஅண்ணா வாங்கிய டேப் ரிக்கார்டர்தான் எங்கள் வீட்டில் வாங்கினார்கள் அப்பா 1969 ல், வெள்ளை, இளம் நீலத்தில் டிரான்சிஸ்டர் போல இருக்கும் . அப்போது கோவையில் இருந்தோம் நாங்கள். லவகுசா படத்தில் வரும் ஜெகம்புகழும் புண்ணிய கதை ராமனின் கதையே அந்த பாடல்தான் முதலில் பதிவு செய்தார்கள் அப்பா.
வீட்டில் கிராமபோன் கெட்டு போன பின் வாங்கிய டேப்ரிக்கடார்
நீங்களும் உங்கள் தம்பியும் டேப் ரிக்கார்டரில் ஒருவாரம் இஷ்டம் போல் பதிவு செய்ததை படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.
அதை அண்ணா அழித்து விட்டாரே!
நீங்கள் ரேடியோ உருவாக்கிய அனுபவ பகிர்வுகள் அருமை.
அண்ணன் வாங்கியது ஆபிஸ் உபயோகத்திற்கு. அதில் நாங்கள் பதிவு செய்ததெல்லாம் இருக்கவேண்டாம் என்றுதான் அழித்தார்.
நீக்குஹிந்து கோயிலுக்குள்ள மாண்புகளை ஒத்துக் கொள்ளாத மாற்று மதத்தினர் ஹிந்து கோயிலுக்குள் ஏன் வர வேண்டும்?..
பதிலளிநீக்குஇதென்ன கண்காட்சி சாலையா?..
அதானே!
நீக்குசிவலிங்கத்தை ப் பற்றி அவர்களது கருத்து என்ன என்று தெரியுமா?..
பதிலளிநீக்குகேள்வி பட்டிருக்கிறேன்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிரார்த்தனைக்கு நன்றி.
நீக்குகௌரவர்களின் 100 பெயர்களையும் தெறிவித்த
பதிலளிநீக்குதங்களுக்கு நன்றி
டேப் ரிகாடரில் விளையாடிய
தங்கள். முயற்சி க்கு ஒரு
சபாஷ்.
கே. சக்ரபாணி
நன்றி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை.
கௌரவர்களின் பெயர்களை ஒரு தொலைக்காட்சி நேரலையில் ( நடிகர் விசு அவர்கள் நடத்தியது என நினைவு.) ஒரு சிறு பெண் அப்படியே ஒப்புவித்தாள். எப்போதோ கேட்ட ஞாபகம். நமக்கு முதல் இரு சகோதரர்கள், ஒரு சகோதரி பெயர்தான் சட்டென நினைவில் நிற்பவை.
மழை ஒரு ஆச்சரியம்தான். இதே கேள்வி என் மனதிலும் அடிக்கடி வரும்.
இதோ..! நேற்று முழுவதும் நல்ல மழை என்பதால், இன்று இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை. ஆனால், சூரியனர் பள்ளிகள் பூட்டியிருப்பதை காண அவசரமாக வருகை தந்து விட்டார். :))
தங்கள் பக்கம் சுவாரஸ்யமாக இருக்கிறது. எங்கள் அண்ணாவும் இப்படி ஒரு டேப் ரிக்கார்டு வாங்கியிருந்தார். நாங்களும் அதில் நிறைய பாடல்கள், ஸ்லோகங்கள் என பதிவு செய்து கேட்டு மகிழ்ந்திருக்கிறோம். தங்களின் ரேடியோ பற்றிய நிறைய கண்டுபிடிப்புகள் ஆச்சரியமூட்டுகின்றன. தங்கள் திறமைக்கு வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
விளக்கமான கருத்துரைக்கு நன்றி.
நீக்குகௌரவர்கள் நூறு பேரில் திரௌபதி மானபங்கத்தை எதிர்த்தவனும் மகா பாரதப் போரில் கலந்து கொள்ளாதவனும் ஒருவனே.. அவன் தான் விகர்ணன்..
பதிலளிநீக்குபுலவர் கீரன் அவர்கள் ஒருமுறை நூற்றுவர் பெயரைச் சொன்னதாக நினைவு..
கௌரவர்கள் நூறு பேரில் திரௌபதி மானபங்கத்தை எதிர்த்தவனும் மகா பாரதப் போரில் கலந்து கொள்ளாதவனும் ஒருவனே.. அவன் தான் விகர்ணன்..
பதிலளிநீக்குபுலவர் கீரன் அவர்கள் ஒருமுறை நூற்றுவர் பெயரைச் சொன்னதாக நினைவு..
கருத்துரைக்கு நன்றி.
நீக்குகௌதம் ஜி
பதிலளிநீக்குதங்களுக்கான பதிவு நினைவெல்லாம் காத்திருக்கின்றது..
வருகிறேன்
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குகௌரவர்களின் பெயர்கள் - முன்பும் எதொ ஒரு பக்கத்தில் படித்திருக்கிறேன். நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை. ஒரு சகோதரி உண்டு என்பதும் தெரியும்.
கேள்வி பதில்கள் நன்று. உங்கள் கேள்விகளுக்கான பதிலை சொல்லி விட்டாரே ஜெகுச ஜி.
உங்கள் பக்கம் நன்று. ரேடியோ நினைவுகள் சிறப்பு. எங்கள் வீட்டில் முதல் டேப் ரெகார்டர் - National Panasonic - கேசட் போடுவது தான். அதில் சில பல சில்மிஷங்கள் செய்ததுண்டு. :) துபாய் சரக்கு!
சுவாரஸ்யமான தகவல்களுக்கு நன்றி.
நீக்குஉங்கள் ரேப் ரெக்கோட்டர் அனுபவங்கள் நன்று.
பதிலளிநீக்குஎங்கள் வீட்டில் அப்பா வாங்கிய பனசோனிக் கசெட் ரேடியோ ரெக்கார்ட்டர் 1974 இல் தான். நாங்களும் சில பதிந்ததுண்டு.
நீங்கள் தயாரித்த ரேடியோ முயற்சிக்கு பாராட்டுகள்.
நன்றி.
நீக்குயாராவது ஆண் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கப் பெயர் கேட்டால், இந்த லிங் கைக் கொடுத்துதவுகிறேன் :).
பதிலளிநீக்குஅதிராவை நம்பி, தன் பையனுக்கு துச்சாதனன் என்று பெயர் வைத்தால் அந்தப் பையனுக்கு அதிரா தகுந்த மணப்பெண்ணைத் தேடித்தருவாரா?
நீக்குதலைமறைவான அதிரா தலை காட்டியிருக்கிறார். பெங்களூரில் நான் இருக்கும் பகுதியில் மழை கொட்டுகிறது.
நீக்குவணக்கம் அதிரா சகோதரி
நீக்குநலமா? எப்படி இருக்கிறீர்கள்? உங்களைப்பார்த்து எவ்வளவு நாட்களாகி விட்டது. உங்கள் வரவு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. தொடர்ந்து வாருங்கள்.
எப்படியோ ஒரு நல்ல புனைப்பெயர் உங்களுக்கென்று அமைந்து விடுகிறது. அதை ரசிக்கிறேன். (உங்கள் பெயரோடு ஒட்டி வரும் வரிகளை குறிப்பிடுகிறேன்.ஹா ஹா ஹா) நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//யாராவது ஆண் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கப் பெயர் கேட்டால், இந்த லிங் கைக் கொடுத்துதவுகிறேன் :).// என்ன கொடுமை சரவணா இது?
நீக்குஹா ஹா ஹா ஐ ஒப்ஜக்சன் யுவர் ஆனர்:)) ஏன் பெயர் அழகாக இருந்தால் வைக்க வேண்டியதுதான், நல்ல அழகிய சுவாமிப் பெயர் கொண்டவர்கள் எல்லாம் நல்லவர்களாகவோ இருக்கினம்??.. :):)... தமிழன் எனப் பெயர் வச்சிருக்கிற எல்லோரும் எப்பவும் யுத்தத்.. சே..சே... டங்கு ஸ்லிப்பாகுதேஏஏ ஹா ஹா ஹா சுத்த டமில்லயோ ஹையோ திரும்படியும் ஸ்லிப்பாகுதே சே சே பானு அக்கா கொமெண்ட் கண்ணில பட்டதால செகண்ட்டூஊஊஊஊ ஸ்லிப்பூஊஊஉ:)))
நீக்குசுத்தத் தமிழ்ழயோ பேசீனம்... சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:)..
கெள அண்ணன், இப்போதான் கொச்சி போய் வந்தேன் அடுத்த ட் ரிப் பெங்களூர் வந்து மலை.. சே..சே மழை பார்த்திட வேண்டியதுதான்:)))
இதுக்கு ஒரு பட்டிமன்றம் வேணும்.. நான் வாதாடப்போகிறேன்ன்ன்.... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நல்லவேளை ஆரையும் காணம் ஓடிடலாம்..
மிக்க நன்றி கமலாக்கா... நானும் வருவேன் கொமெண்ட் போடுவேன், நீங்களும் நம்ம்ம்ம்ம்ம்ம்பி வரவேற்பீங்க, ஆனாலும் பாருங்கோ விதி வலியது, காணாமல் போயிடுவேன் ஹா ஹா ஹா.
நீக்குசுவாமிப் பெயர் கொண்டவர்கள்... இதுல உண்மை இருக்கிறது அதிரா. ஆனால் சுவாமிப் பெயர் வைப்பது பெற்றோர். குணம் அந்த ஆளைச் சேர்ந்ததல்லோ
நீக்குகௌரவர்கள் 100 பேர்களின் பெயர்கள்.. தெரிவிக்கும் உண்மை, நம்மை மற்றவர்கள் நினைவு கூற வேண்டுமென்றால் நாம் நல்லது செய்ய வேண்டும், அல்லது துச்சாசனன் போல அயோக்கியத்தனமாவது செய்ய வேண்டும். கௌரவர்களின் கூட்டத்தில் பிறந்தாலும் நியாயவானாக இருந்த விகர்ணனையும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்கிறோம். இதிலிருந்து என்ன தெரிகிறது? குறிப்பிடத்தக்க வகையில் எதுவும் செய்யாமல் கூட்டதோடு நிற்பவர்களுக்கு எந்த மரியாதையும் கிடையாது.
பதிலளிநீக்கு