மூன்று நரசிம்மரைப் பார்த்து வந்தது அவருக்கு பிடித்து விட்டது போலும். நான்காவதாக ஒரு இடத்துக்கும் என்னை வரவழைத்தார்.
கோவிலுக்கு போகும் வழியில் மேக ஊர்வலம். கழுகு பறந்து வருவது போல இல்லை? பெரிய திருவடி!
பாஸின் சித்திக்கு எண்பதாவது வயது ஆரம்பத்தை ஒட்டி பழையசீவரம் நரசிம்மர் கோவிலில் திருமஞ்சனம் ஏற்பாடு செய்திருந்தார்கள். அதற்கு என்னையும் அழைத்திருந்தார்கள். சரி என்று ஒரு செவ்வாய்க்கிழமை காலை ஆறேகால் மணிக்கு நானும், பாஸும் கிளம்பினோம். சென்ற முறை அழைத்த குழுவிலிருந்து ஓட்டுனரை அழைக்காமல் புதிய குழுவிலிருந்து ஓட்டுநர் சொல்லி ஏற்பாடு செய்தோம். எல்லாம் ஒரே குட்டை, ஒரே மட்டை!
மண்டபத்தையும் தாண்டி பின்புறம் நின்று ஒரு புகைப்படம்.
கூடுவாஞ்சேரி தாண்டியதும் சாலையில். வலதுபுறம் திரும்பி சென்றோம். ரயில்வே கேட் மூடியிருக்க அதில் 15 நிமிடம் தாமதம். போகும் வழியில் சட்டென வலதுபுறம் ஒரு சிறிய திருப்பத்தில் திரும்பவேண்டும் என்பதை கவனிக்காமல் தாண்டிச் சென்று மீண்டும் வந்து சரியான பாதையில் திரும்பினோம். வளைந்து சென்ற அந்த குறுகிய பாதை சிறிய மேட்டை அடைந்தது.
முதல் கோபுரம் தாண்டியதும் கோவில் தோற்றம். அங்கும் ஒரு மண்டபம். உள்ளே நுழையுமிடத்து இடதுபுறம் திரும்பி, உடனே வலதுபுறம் திரும்பினால் சில படிகள் ஏறினால் லஷ்மிநரசிம்மர் சன்னதி.
எங்கள் வருகைக்காக காத்திருந்தவர்கள், ஏழரைக்குள் நாங்கள் அங்கு செல்ல முடியாததால் திருமஞ்சன வேலைகளைத் தொடங்கி விட்டார்கள். உள்ளே சென்று சட்டையைக் கழற்றி அவர்களுடன் இணைந்து அமர்ந்தேன். மனைவியின் அந்த ஒன்று விட்ட சகோதரர்கள் மந்திரம் சொல்வது, பாசுரங்கள் படிப்பது எப்போதுமே எனக்கு பொறாமையாக இருக்கும். இப்போதும்!
சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் . என்று வரிசையாக ஒவ்வொன்றாக திருமஞ்சனங்கள் முடிந்து, வெளியில் எங்களைக் காத்திருக்கச் சொல்லி, அலங்காரங்கள் செய்து மீண்டும் உள்ளே அழைத்து விஸ்தாரமாய் பூஜை செய்து முடித்து வைத்தார் பட்டாச்சாரியார். அங்கேயே ஆகாரம் மடப்பள்ளியில் ஏற்பாடாகி இருந்தது. சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம், அதனுடன் பஞ்சாமிர்தம் உணவு. தயிர்சாதம் நன்றாய் இருந்தது. ஊறுகாய் இல்லாதது குறை! கோவிலுக்கு சென்றாலும் நாக்கு நாலு முழம்!
அலங்காரத்துக்கு முன் வெளியில் எங்களைக் காத்திருக்கச் சொன்னபோது சித்தி, அவர்தம் சம்பந்தி, சித்தியின் இரண்டு மருமகள்கள், எல்லோரும் உரத்த குரலில் பஜனைப் பாடல்கள் பாடினார்கள்.
நான் கோவிலைச் சுற்றி வந்தேன். எங்கெங்கு என்னென்ன படங்கள் எடுக்கலாம் என்று வெளியேயும், உள்ளேயும் அலைந்தேன். நெல்லை எடுப்பது போல தூண்களில் இருந்த சிற்பங்களை படம் எடுக்க முயன்றேன். ஆனால் அவை அவ்வளவு சிறப்பாக இல்லை.
கோவில் 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்பதைத் தவிர வேறு விவரம் தெரியவில்லை. யாரால் கட்டப்பட்டது என்கிற விவரம் இல்லை. ஹிரண்யகசிபு வதத்தைத் தொடர்ந்து கோவில் உருவானதாக சொல்லப்பட்டாலும் இவர்கள் 17 ஆம் நூற்றாண்டில் இருந்திருக்க வாய்ப்பில்லை. கோவில் பாலாறு, செய்யாறு, வேகவதி (சரஸ்வதி_ மூன்று ஆறுகளின் கூடலில் பாலாறு ஆற்றங்கரையில் எழிலுற அமைந்திருக்கிறது. செங்கல்பட்டு காஞ்சிபுரம் சாலையில் வாலாஜாபாத் அருகே அமைந்திருக்கிறது.
உள்ளிருந்து வெளிகோபுரம்
இதன் அருகே திருமுக்கூடல் என்கிற இன்னொரு ஸ்தலமும் இருக்கிறது. சில காரணங்களால் அன்று அங்கு செல்ல முடியாதது குறை.
அவ்வப்போது வெளியிலிருந்தும் பக்தர்கள் வந்து கொண்டிருந்தனர் என்றாலும் சொற்ப அளவில்தான். அதில் இரண்டுபேர் பின்னாலேயே சென்று நைசாக படம் எடுத்தேன். தப்புதான். வீட்டுக்கு வந்து பார்த்தால் பட்டர் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்!
பின்குறிப்பு : படங்கள் வரிசையாக இருக்காது. ஆங்காங்கே படங்களை செருகுகிறேன். சில விளக்கங்களைக் கொடுக்கிறேன்.
இடது கோடியில் மடைப்பள்ளி. காயத்ரி கதையில் வரும் அய்யர் கதாபாத்திரம் (ஜெ.. ஓவியம்) போல இருந்தார் மடைப்பள்ளி தளிகையாளர்.
=============================================================================================
மேலும் சில கொலு படங்கள்...
முன்னால் போகிறதே ஒரு டெம்ப்போ... எங்கள் வலதுபுறமாக தாண்டிச் செல்கையில் இடித்து சிராய்த்துக் கொண்டு சென்றான். செம டிரஃ பிக். மகன் கடுப்பாகி துரத்த முயன்றாலும் ஓடிவிட்டான்!
=======================================================================================================
நியூஸ் ரூம்
பானுமதி வெங்கடேஸ்வரன்
- காரை வாடகைக்கு எடுத்து அடகு வைத்த ஓட்டுனரை கடத்திய உரிமையாளர் கைது.
- பெ.நா.பாளையம் : அபார்ட்மென்ட்களில் நடக்கும் திருட்டைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய, அதே நாள் இரவில், நிகழ்ச்சி நடந்த அதே அபார்ட்மென்டில் கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- பெங்களூரு: கர்நாடகாவில் சட்டவிரோதமாக வசித்த, 20க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியரை கைது செய்துள்ள போலீசார், விசாரணயை தீவிரப்படுத்தி உள்ளனர். இதனால், அவர்கள் வட மாநிலங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அடுத்தடுத்து சிக்கும் பாகிஸ்தானியர்களால், கர்நாடக மக்கள் கிலி அடைந்துள்ளனர்.
- திருப்பூர் : காங்கயத்தில், மனைவியை கணவர் கிணற்றுக்குள் தள்ளி விட்டு தப்பி சென்றார்; காயத்துடன் ஒரு வாரமாக கிணற்றுக்குள் இருந்த பெண்ணை மீட்டனர்.
- திருவனந்தபுரம்: துணை கலெக்டர் நவீன் பாபு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரிவு உபசாரநிகழ்ச்சியில் அழைப்பு இல்லாமலேயே வந்து பங்கேற்ற மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர் திவ்யா, துணை கலெக்டர் நவீன் பாபு மீது தாறுமாறான குற்றச்சாட்டுகளை கூறினார். பலர் முன்னிலையில் இப்படி நடந்து கொண்டதால் நவீன் பாபு மனம் உடைந்து போனார். இந்நிலையில், இன்று(அக்.,15) நவீன் பாபு அவரது வீட்டில் இறந்து கிடந்தார்.
- திருநெல்வேலி : பொது குழாயில் குடிநீர் வீணாவதை வீடியோ பதிவிட்ட சமூக ஆர்வலரை மன்னிப்பு கேட்க வைத்து கடுமையாகத் தாக்கிய தி.மு.க. பிரமுகர் மீது ஒரு மாதத்திற்கு பிறகு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
- லண்டன்: பிரிட்டனில் நாகா மனித மண்டை ஓடு ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு நாகலாந்தில் எதிர்ப்பு எழுந்ததால் ஏல நிறுவனம் அந்த முயற்சியை கைவிட்டது.
- பெங்களூர்: பயணிகளிடம் அநாகரீகமாக நடந்து கொண்டது, அழைத்த இடத்திற்கு வர மறுத்தது, அதிக கட்டணம் வசூலித்தது உட்பட பல்வேறு வழக்குகளின் கீழ் 6137 ஆட்டோ ஓட்டுனர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- டேராடூன்: ஆயுத பூஜையை ஒட்டி உத்தரகண்ட் ஹரித்வார் சிறையில் கைதிகள் நடித்த ராமாயண நாடக நிகழ்ச்சியில் சீதையைத் தேடிய வானரங்களாக நடித்த பங்கஜ், ராஜ்குமார் என்னும் இரண்டு கைதிகள் தப்பியோடினர். அவர்கள் இருவரும் கொலை மற்றும் கடத்தல் குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வந்தனர்.
- சென்னை: மாதவரத்தைச் சேர்ந்த மாணவர் ரீல்ஸ் மோகத்தில் ஓடும் ரயிலில் படியில் நின்றபடி சாகஸம் செய்ததால் மின் கம்பத்தில் தலை மோதி தூக்கியெறியப்பட்டு படுகாயமடைந்தார்.
- நேற்று மும்பையிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், ஓமான் மஸ்கட்டிற்கு புறப்பட்ட இண்டிகோ விமானம், சவுதி அரேபியாவின் ஜெட்டாவிற்கு புறப்பட்ட இண்டிகா விமானம் ஆகிய மூன்றிர்க்குமே வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு அவை தனிமை படுத்தப்பட்ட ஓடு பாதையில் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டன. இறுதியில் வெடிகுண்டு மிரட்டல் போலி என்று கண்டுபிடிக்கப்பட்டது.
- மஹாராஷ்ட்ரா: மும்பை சுங்கச் சாவடிகளில் மும்பை மாநகருக்கு வருவதற்கான ஐந்து சுங்கச் சாவடிகளில் கார்,வேன் போன்ற இலகுரக வாகனங்களுக்கு கட்டணம் ரத்து.
- புதுடில்லி: இந்தியாவின் உற்பத்தி துறையில் டாடா குழுமத்தின் முதலீடுகள் வாயிலாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஐந்து லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என அக்குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்தார்.
=================================================================================================
பொக்கிஷம்
இவரைப்பற்றி முன்னரே பகிர்ந்து விட்டேனா, தெரியவில்லை, நினைவில்லை. ஆனால் பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன், மேலதிக விவரங்களோடு.
நகைச்சுவைக் கதைகள் என்கிற தலைப்பில் விகடனில்....
இவர்தான் எழுத்தாளர் ஆர்வி.
சரித்திரக் கதை ஆசிரியர்களை பேட்டி கண்டு தொடர் வந்திருக்கிறது. அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக இங்கே பகிர விருப்பம்தான். அலுப்பினாலும், சோம்பேறித்தனத்தினாலும் தள்ளிக்கொண்டே போகிறது!
ஜெசியை படம் எடுக்கும்போது காற்றில் பக்கம் பறக்க, வந்த படம் இபப்டி இருந்தது. பேஸ்புக்கில் பகிர்ந்து யாரென்று தெரிகிறதா என்று கேட்டதும் உடனே பதில் வந்து விட்டது!
படிக்க முடிகிறதோ.... ஸாரி......
-
முருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குஅவர் பாவம் நரசிம்மர் கோயில்களுக்குச் சென்றுவந்து பதிவு போட்டிருக்கிறார். பொசுக்குனு முருகன் திருவருள் காக்கட்டும்னு சொல்லிட்டீங்களே
நீக்குஇது வேறயா?.
நீக்குமுன் நின்று நோக்கி கனகவேல் காக்க... வாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்குமுருகனுக்கு மாமா முறைதானே வேணும் நரசிம்மர்?!!!
நீக்குகோவிலுக்கு போகும் வழியில் மேக ஊர்வலம். கழுகு பறந்து வருவது போல இல்லை? பெரிய திருவடி!//
பதிலளிநீக்குஎனக்கு முகம் மட்டும் பறவை முகம் போல இல்லாமல் வவ்வால் பறந்து வருவது போலத் தெரிகிறது
கீதா
வாங்க கீதா... நீங்க சொன்னப்புறம் எனக்கும் வவ்வால் மாதிரி தெரியுது... அவ்வ்வ்..... நேற்று வரை எனக்கு கருடன் தெரிஞ்சார்!
நீக்குதலைப்பு பார்த்ததும்....ஸ்ரீராமுக்கு இந்த வாட்டியாவது புளியோதரை பிரசாதம் கொடுத்தீங்களா லார்ட் பெருமாள்!!!! என்று கேட்க வைத்தது! ஹாஹாஹாஹா இல்லைனா பஞ்சாயத்தை கூட்டலாம்னு!! எனக்குக் கற்பனை செமையா சிறகடிக்குது! ஏற்கனவே கமலாக்கா உப்புமா பத்தி எழுதியிருந்தாங்களே அப்ப சொல்லியிருந்தேன் இந்த மாதிரி ஒன்னு நான் எழுதி பாதில அப்படியே விட்டு தேட வேண்டிய நிலையில் இருக்குன்னு. அதுல இந்தப் புளியோதரை சமாச்சாரம் தான்...பஞ்சாயத்து மாதிரியான ஒரு கதை.
பதிலளிநீக்குகீதா
நீங்க சொல்றதைப் பார்த்தால் ஒப்பிலியப்பன் கோவிலில் அவருக்கு புளியோதரை கன்ஃபர்ம்ட்
நீக்குசீவரத்தில் புளியோதரை கிடைச்சதுதான் கீதா..... ஆனால்...
நீக்குஒப்பிலியப்பன் கோவிலில் உப்பு இருக்காது! ஆனால் அடுத்து அங்கு செல்லும் வாய்ப்பு நெருங்கி வருகிறது நெல்லை.
நீக்குஓ.. அது தெரிந்துதான் சொல்லி இருக்கிறீர்களோ!
ஹாஹாஹாஹா நெல்லை....கொழுப்பு!!! பாவம் ஸ்ரீராம்...அவருக்கு ஒரு நாளாவது வாய்க்கு ருசியா ஒரு புளியோதரை கொடுக்க மாட்டேன்றாரே இந்த லார்ட் பெருமாள்!!!
நீக்குசீவரத்தில் புளியோதரை கிடைச்சதுதான் கீதா..... ஆனால்...//
பதிவிலேயே புரிந்துவிட்டது ஸ்ரீராம்....பேசாம பாஸ வீட்டில் செய்யச் சொல்லி உங்க பூஜை அறையில் இருக்கற பெருமாள் ஃபோட்டோ கிட்ட வைச்சு பிரசாதம் தானே சாப்பிடுருங்க.
அடுத்த முறை உங்களை சந்திக்கும் போது புளிக்காய்ச்சல்/புளியோதரையோடு வரேன்!!!
கீதா
உண்மையா சொல்றேன் ஸ்ரீராம் எனக்குத் தெரிஞ்சு, எங்க திருக்குறுங்குடி கோயில்ல கிடைக்கும் புளியோதரை போல எங்கும் சாப்பிட்டதில்லையாக்கும்!!!! ஆனா இப்ப எப்படியோ தெரியாது.
நீக்குகீதா
புதிய குழுவிலிருந்து ஓட்டுறார்//
பதிலளிநீக்குஓட்டுநர்?
கீதா
எண்களை.. இதுமாதிரி பல தட்டச்சுத் தவறுகள். புரிஞ்சிக்கிட்டோமுல்ல. விடுங்க
நீக்குஹிஹிஹி... மாத்திட்டேன் ரெண்டையும்!
நீக்குவிடியற் காலையில் ஸ்ரீவரம் நரசிம்மர் ஆலய தரிசனம்.
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நன்றி
தன்யனானேன் செல்வாண்ணா...
நீக்குஅவரவருக்கு கிடைத்த வாய்ப்புகள் அப்படி...
பதிலளிநீக்குஉங்கள் திறனையும் குறைத்து எடையிட முடியுமா!? ஸ்ரீராம்..
இருக்கலாம் செல்வாண்ணா... இதில் அவரை ஓவர்டேக் செய்ய முடியாது என்பது நிஜம்தானே?
நீக்குஸ்ரீபுரம் தான் இப்ப சீவரம்.
பதிலளிநீக்குமண்டபத்து சிற்பங்கள் அழகா இருக்கு, இது வரை போனதில்லை.
அந்த அன்ன வாகனம் சூப்பரா இருக்கு
//வெளியில் எண்களைக் காத்திருக்கச் சொல்லி,//
எங்களை?
குரல் வழிப் பதிவா, ஸ்ரீராம்?
கீதா
விரல்வழி டைப்பிங் தான் கீதா...
நீக்குமழை வருது, வெள்ளம் வருது கடகடா குடுகுடுன்னு இடி எல்லாம் இடிக்கறதை பார்த்து எங்க பவர்கட் ஆகிடுமோன்னு பயந்துபோய் வியாழனுக்கு பதிவு ரெடி செய்யலையேன்னு அவசரம் அவசரமா செவ்வாய்க்கிழமை ரெடி செய்தால் புதன் கிழமை புயல் வழக்கம் போல நெல்லூர் போயிடுச்சு...
ஹாஹாஹா....நாம் ஜாக்கிரதை முத்தண்ணாவகும் போது அது நம்மளை டபாய்ச்சுடும்!!
நீக்குகீதா
அன்பின் நெல்லை..
பதிலளிநீக்குதங்களுக்குத் தெரியாததல்ல்ல..
இரண்யனின் உட்லைப் பிளந்த நரசிங்கப் பெருமாளின் சோதரியான வாள் வாங்கிய (ஏந்திய) சிவசங்கரியின் மகனே.. -
என்று அருணகிரி நாதர் பாடியிருக்கின்றார்...
ஆஹா... மெல்ல வாதம் ஆரம்பிச்சிடுச்சி டோய்...
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கமும், நன்றியும்.
நீக்குமடைப்பள்ளியா? மடப்பள்ளியா? (புதன் கேள்வியா என்று கேட்காதீர்கள் கே.ஜி.ஜி.)
பதிலளிநீக்குவாங்க ஜீவி ஸார்...
நீக்குஎப்படியும் சொல்லலாம்னுதான் நினைக்கறேன்...
பூவை பூவுன்னும் சொல்லலாம், புய்ப்பம்னும் சொல்லலாம், நீங்க சொல்றா மாதிரியும் சொல்லலாம்!
ஹி..ஹி.. நியூஸ் ரூம் செய்திகளில் இரண்டாவது செய்தி டாப்!
பதிலளிநீக்குஅப்டியா சொல்றீங்க? இருங்க... என்னன்னு ஓடிப்போய் பார்த்துட்டு வந்து சொல்லிடறேன்!
நீக்குஓ... சாமர்த்தியமான, புத்திசாலித்தனமாக நடத்தப்பட்ட திருட்டா... ஸ்மார்ட்!
நீக்குஎன் குருநாதர்களில் ஒருவரான ஆர்வி அவர்களின் இளமைப் பருவ புகைப்படத்தைப் பார்த்ததில் சந்தோஷம். நன்றி.
பதிலளிநீக்குஆஹா... தன்யனானேன் ஜீவி ஸார்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. காலை எழுந்தவுடன் பெருமாளின் தரிசன பகிர்வு மனதிற்கு இதமாக இருக்கிறது
முதல் படம் அந்த இயற்கை அருமை. கழுகார்/ கருடன் சாயல் மேகப்பிண்ணனியில் தெரிகிறது. நரசிம்மரை தரிசிக்க செல்லும் போது இப்படி நல்ல சகுனங்கள் கண்ணில்படுவது மனதையும் உற்சாகப்படுத்தும்.
/மனைவியின் அந்த ஒன்று விட்ட சகோதரர்கள் மந்திரம் சொல்வது, பாசுரங்கள் படிப்பது எப்போதுமே எனக்கு பொறாமையாக இருக்கும். இப்போதும்!/
ஹா ஹா ஹா. இந்த பொறாமைகள் எல்லோருக்கும் தோன்றுவது இயற்கை போலும்...! இது எனக்குள்ளும் அடிக்கடி வந்துள்ளது. வந்து கொண்டும் உள்ளது. நமக்கு தெரிந்ததை நாம் சொல்லலாமென நமக்கு தெரிந்த ஸ்லோகங்களை மனதுக்குள் முணுமுணுத்தும் அதன் முரண்பாடுகளை மற்றவர்கள் கவனிப்பார்களோ என்ற தயக்கத்தில், கற்றதும் அந்த பொழுதில் மறந்து என்னை முழுவதுமாக பொறாமை (ஆமையோடு) குளத்தில் தள்ளி விடும். :)) நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆஹா.. உங்களுக்கு கருடன் தெரிந்து விட்டாரா? உங்களுக்கு பெருமாளின் அருள் பரிபூரணமாக கிட்டி இருக்கிறதது கமலா அக்கா!!
நீக்குஆனால் கோவிலுக்குச் செல்லும்போது நான் வடிவம் பார்க்கவில்லை. படம் மட்டும் எடுத்துக் கொண்டேன். நேற்றைக்கு முதல்நாள் பதிவில் படம் இணைக்க வரும்போதுதான் பார்த்தேன், என் கண்களுக்கு அப்படி தெரிந்தது.
எனக்குத் தெரிந்த ஸ்லோகங்கள் ரொம்பக் கம்மி. நீங்கள் சொல்வது போல அவர்கள் 'அதை'ச் சொல்லும்போது நான் 'இதை' மனதுக்குள் முணுமுணுத்து கூடவே சொல்வது போல பிரமையை ஏற்படுத்தி இருக்கலாமோ!!!
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கோவில் பகிர்வில் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. பிறகு ஒவ்வொன்றாய் பெரிதாக்கி பார்க்கிறேன். பிரசாதங்கள் அங்கு உங்கள் உறவினர் பூஜை செய்ததால் நிறைய ஐட்டங்கள் தந்துள்ளனர். எப்படியோ தங்களுக்கு விருப்பமான புளியோதரை கிடைத்தது சந்தோஷந்தான்.
காலை வேளையில் இப்படி கிளம்பி கோவிலுக்குச் சென்றால் மனதுக்கு அன்றெல்லாம் உற்சாகமாக இருக்கும். அதுபோல் உங்கள் பதிவை கண் விழித்தவுடன் படித்ததும் இறைவனை காலையிலேயே தரிசித்து கொண்ட திருப்தி மனதுக்குள் எழுகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா... கோவில் செல்வது என்றால் என்னைப் பொறுத்தவரை அதிகாலை கிளம்பிச் செல்ல வேண்டும். என் மகன்கள் காலை ஒன்பது மணிக்குமேல் ரெடியாவார்கள். நான் மறுத்து விடுவேன்!
நீக்குஎங்களை என்று வரும் இடத்தில் எண்களை ன்னு இருக்கு, ஸ்ரீராம்
பதிலளிநீக்கு//நான் கோவிலைச் சுற்றி வந்தேன். எங்கெங்கு என்னென்ன படங்கள் எடுக்கலாம் என்று வெளியேயும், உள்ளேயும் அலைந்தேன்.//
ஹாஹாஹா நானும் படம் எடுக்கக் கிளம்பிடுவேன்.
கொட்டு முரசே!! அழகா இருக்கு!!
கீதா
மாற்றி விட்டேனே... ரெப்ரெஷ் செய்து பாருங்கள். இன்னுமா மாறவில்லை?
நீக்குஇப்பதான் மீண்டும் வருகிறேன் ஸ்ரீராம்....
நீக்குபார்த்துவிட்டேன்
கீதா
மேகம் படம் எனக்கு சூப்பர்மேன் உருவம் போல் தோன்றியது. "பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே".
பதிலளிநீக்குகோயில் வளாகம் சுத்தமாக இருப்பது மகிழ்ச்சி. ஆனால் அதிலும் ஒருவர் இரு சக்கர வாகனத்தை கோபுரத்திற்குள் நிறுத்தியிருப்பது உறுத்துகிறது.
அடுத்து நின்றாலும் தூர நின்றாலும் தரிசிப்பது ஒரு மூலவரைத் தான். ஆனாலும்
கருவறைக்குள்ளேயே நின்று தரிசனம் செய்ய அனுமதி அதுவும் பெண். காலம் மாறிப் போய்விட்டது. திராவிடர்கள் இனி கோயில் அனுமதி பற்றி குறை சொல்ல மாட்டார்கள்.
ஐ டி கார்டு கூடவா கொலுவில் வைப்பார்கள். படம் வரைந்தவர் படத்தில் ஒப்பிடுவது போல் கொலு வைத்தவர் தன ஐ டி யை வைத்திருக்கிறாரோ?
எழுத்தாளர்களின் அறிமுகம் புது பகுதியாக பொக்கிஷத்தில் இருப்பது நன்று. உண்மையில் சிறுகதை எழுத்தாளர்கள் எத்தனையோ பேர் அறியப்படாமல் இருக்கின்றனர்.
சைக்கிள் ஒரு பொக்கிஷமாக இருந்த காலம் ஒன்று உண்டு. சைக்கிளிலேயே அலுவலகம் சென்று வருபவருக்கு கிடைத்த மதிப்பு, மரியாதை!! கான்ஸ்டபிள்
கவிதையைப் பற்றி கூற ஒன்றுமில்லை. T R வேண்டுமானால் மெச்சுவார்.
கவிதையைப் பற்றி கூற ஒன்றுமில்லை.
Jayakumar
வாங்க JKC ஸார்...
நீக்குசூப்பர்மேனா? சூப்பர்! புதிய பார்வை!
வளாகத்துக்குள் இரு சக்கர வாகனம் நிறுத்திய மாதிரி நினைவில்லை. ஒருவேளை அது வெளிப் பிரகாரமாயிருக்கலாம்.
இங்கு கருவறை இன்னும் கொஞ்சம் உள்ளே செல்ல வேண்டும். இவர்கள் நிற்பது கருவறை அல்ல.
ஐடி கார்டு - வேலை செய்பவர்களுக்கு புத்தகங்கள் எதுவும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையில் புத்தகங்கள் வைப்பதற்கு புத்தகம் போல இல்லாததால் இது, லேப்டாப் போன்றவைகள் வைக்கப்பட்டன.
எழுத்தாளர்கள் படம் பாராட்டுக்கு நன்றி. வெறும் ஜோக்ஸால் பொக்கிஷத்தை நிரப்பாமல் இப்படி போடலாம் என்று தீர்மானித்து பகிர்ந்து வருகிறேன். சைக்கிள் கட்டுரை படிக்க முடிந்ததா?
வாலாஜா முரளீதர ஸ்வாமிகள் ஆசிரமம் போனீர்களா? முரளி சாமி தற்போதும் இருக்கிறாரா? (நெல்லை அல்ல)
பதிலளிநீக்குJayakumar
முரளீதர ஸ்வாமி ஆஸ்ரமம் போகவில்லை. மிக அருகில் இருந்த முக்கூடலே அன்று போகமுடியவில்லை.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
நீக்குகோயில் தகவல்கள், படங்கள் சிறப்பு ஜி
பதிலளிநீக்குவாங்க ஜி. நன்றி. உடல்நலம் சீராகி விட்டதா?
நீக்கு
பதிலளிநீக்குபாஸின் சித்திக்கு வணக்கங்கள். அவர்களால் உங்களுக்கு நரசிம்மர் கோவில் தரிசனம் கிடைத்தது எங்களும் கிடைத்தது.
கோவில் படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
மேகத்தில் கருடன் பறந்து வந்து காட்சி கொடுத்து விட்டார்.
கோவிலில் நிறைய கல்வெட்டு நிறைய இருக்கே!
மூலவரை தரிசனம் செய்ய படம் எடுத்து தந்து விட்டீர்கள்.
பட்டர் பார்த்தாலும் ஒன்றும் சொல்லவில்லை அல்லவா?
கோயில் பிரசாதங்கள் கிடைத்தாலும் ஊறுகாயை தேடுகிறதே மனம்.
(நாக்கு)
உங்கள் வீட்டு கொலு படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. குங்குமம் பை நன்றாக இருக்கிறது.
இங்கும் ஒரு வீட்டில் சின்ன கூடை போல செய்து மஞ்சள், குங்குமம் சின்ன டப்பக்கள் வைத்து இருந்தார்கள்.
உங்களுக்கும் அந்த வடிவத்தில் கருடன் கண்ணில் பட்டாரா?!
நீக்குபட்டர் உள்ளே இருந்தார். நான் பாடம் எடுத்துக் கொண்டு சிட்டாகப் பறந்து வந்து விட்டேன். ஏற்கெனவே மற்றவர்கள் கிளம்பி வண்டியில் காத்திருக்க, நான் மட்டும் உள்ளே சென்று சட்டென படம் எடுத்து வந்து விட்டேன்.
திருப்தி இல்லாத நாக்கு!!
கோயில் வாகனங்கள், குடை மற்றும் கொலுபடங்கள் எல்லாம் அருமை.
பதிலளிநீக்குநன்றி கோமதி அக்கா.
நீக்குநியூஸ் படித்தேன்,
பதிலளிநீக்கு//பெ.நா.பாளையம் : அபார்ட்மென்ட்களில் நடக்கும் திருட்டைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய, அதே நாள் இரவில், நிகழ்ச்சி நடந்த அதே அபார்ட்மென்டில் கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.//
எப்படி திருடுவது என்று கற்று கொண்டு விட்டார்கள் போலும்
டேராடூன்: ஆயுத பூஜையை நடித்த வானர கைதிகள் சீதையை தேடி தப்பியது சிரிப்பை வரவழைத்து விட்டது.
'இங்கு ஒத்திகை நடத்தி வந்து சென்று விட்டார்கள். இனி இங்கு வர வாய்ப்பில்லை, சரியான இடம் கொள்ளையடிக்க' என்று தீர்மானித்து நடத்தியுள்ளனர்! Smart!
நீக்குடேராடூன் - அவர்களும் சாமர்த்திய திருடர்கள்!!
சிங்கப்பூர் சிவாஜி கடைசி நிமிடம் வரை நடித்து விட்டு இறந்து விட்டார். பார்த்தேன் அந்த வீடியோ வருத்தமாக இருந்தது. 60 வயதுதான்
பதிலளிநீக்குஆம். சோகம். ஆனால் கொடுத்து வைத்தவர். எந்த வித பெரிய உபாதையுமின்றி நொடியில் அனாயாச மரணம்.
நீக்கு///ஆஹா... மெல்ல வாதம் ஆரம்பிச்சிடுச்சி டோய்...///
பதிலளிநீக்குஇது வாதம் அல்ல..
தகவல் பரிமாற்றம்...
சரி.. சரி... அங்கிருந்து பதில் வருமா?!
நீக்குஆலய உலா நன்று. பிரசாதமாக கிடைத்த உணவு… ஆஹா… தயிர் சாதத்திற்கு ஊறுகாய்… அதானே.. 🙂
பதிலளிநீக்குமற்ற பகுதிகளும் நன்று.
விமானங்களுக்கு மிரட்டல் - ஒரு இளைஞரை கைது செய்து விட்டார்கள் - நண்பரை பழி வாங்க இப்படிச் செய்தாராம்… 🙁
நன்றி வெங்கட்.
நீக்குநியூஸ் ஃபாலோ அப் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்!
கவிதையில் கடைசியில் தோற்றதால் நொந்து போனோம் மிகவும் என்று வரலாமோ? காரணம் இருக்கும் வார்த்தைகளை மாற்றிப் போட்டதற்கு என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஅனைத்து பொக்கிஷபகிர்வுகளும் படிக்காத செய்திகள்.
கடைசி செய்தியும் படிக்க முடிகிறது.
நன்றி கோமதி அக்கா... சிந்து பந்து நொந்து என்று ரைமிங்காக வருவதற்காக அப்படி அமைத்தேன்.
நீக்குநெல்லை பாணியில். நாகப்பட்டினம். சபாஷ் சரியான போட்டி
பதிலளிநீக்குகே. சக்ரபாணி
சென்னை 28
நன்றி சக்ரபாணி ஸார்.
நீக்குநாகப்பட்டினம்?
ராம ஆஞ்சு ஆலிங்கனம் சிலை ரூபமாக இங்கும் நான் பார்த்த வரையில் இரு கோயில்களின் வெளிப்புறத்தில் மிக அழகாக இருக்கும்.
பதிலளிநீக்குதூண்களின் சிற்பங்கள் ரொம்பத் தெளிவாக இல்லையே!
//ஹிரண்யகசிபு வாதத்தைத் தொடர்ந்து கோவில் //
வதத்தை?
கீதா
ஆமாம். சிற்பங்கள் ரொம்ப மேலாக லேசாக இருந்தன.
நீக்குவாதம் - வதம் - சரி செய்து விட்டேன்.
கோவில் வளாகம் சூப்பராக இருக்கிறது. சுத்தமாகவும் கூட்டம் இல்லாததால் இருக்குமோ?!!
பதிலளிநீக்குபடிக்கட்டு ஏறிப்பார் என்று சொல்கிறது கவர்கிறது. கூடவே ஒரு சினி டிட்பிட்!!!
கல்வெட்டு படிக்கலாம் ஸ்ரீராம். இப்ப மீக்கு நேரம் இல்லையே பொறுமையா உட்கார்ந்து வாசிக்க!!!!
குதிரை வாகனம், வாங்க வந்து ஏறி உட்கார்ன்துக்கோங்க என்று சொல்வது போல் தோன்றியது, ஆஞ்சு வாகனம் - இந்த எல்லாத்தையும் எடுத்துக்கோங்க என்று கை நிறைய வாரி வழங்குவது போல்!!!!
கீதா
கால்கள் ஒத்துழைத்திருந்தால் படிகளில் ஏறி பார்த்திருப்பேன். சிறிய கோவில்தான். சுத்தமாக வைத்திருக்கிறார்கள்.
நீக்குமடைப்பள்ளி - அந்த வரி வாசித்து சிரித்துவிட்டேன் எப்படி ஒரு ஒப்பீடு நினைவில் வந்திருக்கு உங்களுக்கு என்று!!!
பதிலளிநீக்குஅந்த டெம்போ நம்பர் தெரியுதே. நோட் பண்ணினாலும் என்ன யூஸ்? சிலர் நோட் பண்ணி புகார் அளிப்பது உண்டு ஆனால் பலன் உண்டா என்று தெரியவில்லை.
கிருஷ்ணா நீ பேகனே பாரோ!
கீதா
ஜெயின் அந்தப் படம் நினைவிருக்கோ கீதா? இல்லாவிட்டால் பிறிதொரு வியாழனில் பகிரவேண்டும்!
நீக்குநினைவு இல்லையே ஸ்ரீராம். நினைவில்லையே.
நீக்குகீதா
அச்சச்சோ... இப்போ எனக்கு வேலையா? நான் அந்தப் படத்தைத் தேட வேண்டுமா? கடவுளே... பார்க்கிறேன்.
நீக்குவிழிப்புணர்வு நிகழ்ச்சியின் போதே திருட்டா!!!! கில்லாடிங்கதான்!
பதிலளிநீக்குதிருவனந்தபுரம் செய்தி அறிந்த செய்தி.
அட! பெங்களூர் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்கு சட்டம் ஒழுங்கா வேலை செய்தா எந்தப் பிரச்சனையும் இல்லாம இருக்கும்தான்
கீதா
செய்திகளை படித்து இன்புற்றதற்கு நன்றி!
நீக்குசிங்கப்பூர் சிவாஜி மறைவு கொஞ்சம் ஷாக். நல்லதொரு கலைஞன்....பாவம்,,....இந்த கார்டியாக் அரெஸ்ட் என்பது எப்ப வேணாலும் நிகழலாம் போலும். என்னவோ போங்க.
பதிலளிநீக்குகீதா
அதிர்ச்சியா இருந்தது. பாவமா இருந்தது. அவங்க குடும்பத்துக்கு எப்படி இருந்திருக்கும்... ஆனால் புண்ணியாத்மா.
நீக்குஅட! ஸ்ரீராம்! டீ ஆர் பாணியிலா! போன வருடம்! கிட்டத்தட்ட இதே தேதி அருகில்...
பதிலளிநீக்குபரசுராம் - இதுவரை பகிர்ந்த நினைவில்லை எனக்கு.
பால்கணக்கு தலை சுத்துது!!!
கீதா
பரசுராம் பற்றி பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன்.
நீக்குபக்கம் பறந்தாலும் முகம் கிளியராகவெ இருக்கிறதே! ஆனா நான் ஜெ சி இப்பதான் பார்க்கிறேன். ஆர் வியும்
பதிலளிநீக்குசைக்கிள் ஓட்டுவது நல்ல உடற்பயிற்சி. சைக்கிள் ஓட்டுவது டிப்ஸ் சில புன்னகைக்க வைத்தது. கடைசி டிப்ச் நல்ல டிப்ஸ்
கீதா
நன்றி கீதா. சைக்கிள் பக்கம் படிக்க முடிந்ததா?
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகோவில் படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. மூலஸ்தான இறைவனை கண்குளிர. தரிசனம் செய்து கொண்டேன். பட்டரும் குறுநகையுடன் தங்களை பார்க்கிறார். நடிகர் சிவக்குமார் டிவி சீரியலில் நடித்துள்ளாரா? இப்போதுதான் அறிகிறேன்.
இன்றைய செய்திகள் அனைத்தும் அருமை. பலவும் தெரியாத விஷயங்கள். ஒவ்வொன்றும் ஒரு புது கோணத்தில் படித்து அறிந்து கொண்டேன்.
சிறை கைதிகள் வானரங்களாக நடித்து தப்பிய செய்தி.. ஏற்கனவே அவர்கள் பலமுறை நடித்து ஒத்திகை பார்த்திருப்பார்களோ? மேலும் சிறைச்சாலைக்கு அருகிலேயே ஏதாவது பெரிய மரங்கள் நிறைய இருந்ததோ எனவும் யோசிக்க வைத்தது.:))
பல ப்ளைட்டில் வெடி குண்டு, அதை சம்பந்த படுத்தும் விதமாய் பாகிஸ்தானியர் செய்தி என பலவும் கிலியை தருகிறது.
கவிதை நான்கே வரியில் நச்சென்று நன்றாக உள்ளது.
பொக்கிஷ பகிர்வுகள் வித்தியாசமாக உள்ளது. பெரிதாக்கி படித்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஏதோ பட்டர் சும்மா இருந்து விட்டார். அல்லது அவர் நான் படம் எடுக்கிறேன் என்று உணராதிருந்திருக்கலாம்.
நீக்குசிவகுமார் நிறைய சீரியலில் நடித்திருக்கிறார் என்று நினைவிக்கிறேன்.
வித்தியாசமான செய்திகளை பகிரவேண்டும் என்பதே வியாழன் செய்தி அறையின் நோக்கம்!
பாராட்டுகளுக்கு நன்றி கமலா அக்கா.
படங்களும் பகிர்வும் அருமை
பதிலளிநீக்குநன்றி நண்பரே..
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபொக்கிஷ பகிர்வில் பிரபல எழுத்தாளர்களின் புகைப்படங்களை பார்த்துக் கொண்டேன்.
விண்வெளியில் மனித உடல்கள் பற்றிய செய்தி தகிலை தந்தது. 61 லேயே இவ்வளவு ஆராய்ச்சியென்றால, இப்போது எப்படி இருக்கும்.? தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தது.
சைக்கிள் எப்படி ஓட்டலாம் என்ற பயனுள்ள தகவல்களுடன் அந்த கட்டுரை அருமை. படித்தேன். ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
விண்வெளி மனித உடல்கள் கட்டுரை எனக்கும் வியப்புதான். அப்புறம் அந்த ஆராய்ச்சியில் நாம் முன்னேறவில்லை போலும்! அல்லது தேவையற்றது என்று கைகழுவி விட்டோமோ...!
நீக்குஎனவே சைக்கிள் கட்டுரை படிக்க முடிந்திருக்கிறது. நன்றி கமலா அக்கா.
நிறைந்த படங்களுடன் கோவில் தரிசனம்.
பதிலளிநீக்குநவராத்திரி கொலுபடங்களும் கண்டோம்.
நியூஸ்ரைம் பல வித செய்திகளுடன் , பொக்கிசம் பல பழைய கதைகளை தருகின்றது.
நன்றி மாதேவி.
நீக்குஆலய தரிசனப் படங்கள் அனைத்தும் குறிப்புகளுடன் அருமை. “வீட்டுக்கு வந்து பார்த்தால்..” :))). எல்லாம் ஒரு ஆர்வம்தான்.
பதிலளிநீக்குதங்கள் வீட்டு சரஸ்வதி தேவி அழகு.
ந்யூஸ் ரூம்- நன்றி. தொகுப்பு நன்று.
// எல்லாம் ஒரு ஆர்வம்தான். //
நீக்குஹா.. ஹா.. ஹா...
நன்றி ராமலக்ஷ்மி.