தீபாவளி வாழ்த்துகள் அனைவருக்கும். சம்பிரதாயமாக கேட்க வேண்டும் என்றால் "கங்கா ஸ்நானம் ஆச்சா?" என்று கேட்க வேண்டும். 'அது கங்காவையல்லவா கேட்கவேண்டும்?' என்பது புராதன ஜோக்.
தீபாவளியின் சுவாரஸ்யங்களும் நடைமுறைகளும் மாறிக்கொண்டே வருகின்றன. குறைந்து கொண்டே வருகின்றன. சிறு பிள்ளையிலிருந்து பெரியவர்கள் ஆனதும் மாறும் மாற்றங்கள் வேறு. இந்தக் காலத்தில் சிறிய குழந்தைகளுக்கே தீபாவளியின் சுவாரஸ்யங்கள் என எதிலும் நாட்டமில்லை.
தீபாவளி அன்று சன், ராஜ், விஜய் போன்ற தொலைக்காட்சிகளில் என்ன சிறப்புத் திரைப்படம் என்ன என்று பார்க்கும் ஆவல் இருந்தது ஒரு காலம். இப்போது யு டியூப், OTT போன்றவை வந்த பிறகு அவைகளும் மதிப்பிழந்து போய்விட்டன.
தீபாவளி பலகாரங்கள் மதிப்பிழந்து விட்டன. எங்கும், எப்போதும் கிடைக்கும், வெளியிடங்களில் வாங்கக்கூடிய, வகைவகையான பலகாரங்களை சாப்பிட்டு அலுத்து விட்டது. முன்பெல்லாம் பலகாரங்கள் சாப்பிட, ஏன், சில வீடுகளில் இட்லி சாப்பிடவே தீபாவளிக்கு காத்திருப்பார்கள்.
புதுத்துணி என்பதும் தீபாவளி, பொங்கல், பிறந்த நாளுக்குதான். வீட்டின் வருமான வசதியைப் பொறுத்து. அதிலும் கட்டுப்பாடு இருக்கும். சில வீடுகளில், ஏன், எங்கள் வீட்டிலேயே தீபாவளிக்கு வீண் செய்யாமல் பள்ளி யூனிஃபார்மை புதுத்துணியாக எடுத்தது உண்டு.
இப்போது, நினைத்தால் கடைக்குப் போய் ரெடிமேடாகவே பல்வகைத்த துணிகள் எடுக்கலாம். டெய்லர்களுக்கு முன்பு இருந்த மதிப்பு, மவுசு இப்போது இல்லை என்றே சொல்லலாம். அட, இந்த டீ ஷர்ட்..... நாங்கள் எங்கள் பள்ளி நாட்களில் இதை 'பனியன் சட்டை' என்று சொல்வோம்! இன்று அந்த டீ ஷர்ட்டில் எத்தனை வகை, என்ன விலை! மகன்கள் எனக்கு வாங்கி இருக்கும் டீ ஷர்ட் விலை கேட்டு எனக்கு தலை சுற்றுகிறது!
இன்றைய காலகட்டத்தில் தீபாவளி அன்று காலை மூன்று மணிக்கும், நான்கு மணிக்கும் யாரும் எழுவதே இல்லை. சென்னை போன்ற பெரு நகரங்களில் நிச்சயம் இல்லை. சிறிய ஊர்களில் இருக்குமோ என்னவோ... அன்றும் காலை பத்து மணிக்குதான் திருப்பள்ளியெழுச்சி! அப்புறம் எங்கே கங்கா ஸ்நானம் செய்வது!
சிறு வயதில் எங்கள் வீடுகளிலும் அதிகாலை எழுந்து குளிக்கும் முன் ஒரு சரம் வைப்பது வழக்கம். அதற்கென்றே சற்று காசு போட்டு பெரிய சரம் ஒன்று வாங்குவோம். 'நாங்கள் எழுந்து விட்டோம்' என்று மற்ற தெருவாசிகளுக்கு அறிவிக்கும் அது. அப்படி எழும் நேரம் எண்ணெய் புகை வாசமும், வெந்நீர் கொதிக்கும் வாசமும், தீபாவளி மருந்தின் வாசமும் கலந்து நம்மை அடையும்! மங்கலான வெளிச்சத்தில் புதுத்துணிகளும், பட்டாசும், பலகாரங்களும் காத்திருக்கும். அம்மா அடுப்படியிலும், அப்பா ஹாலிலும் இருப்பார்கள். பாட்டி இருந்தால் இதற்கெல்லாம் அவர்தான் தலைமைப் பொறுப்பேற்பார்.
பட்டாசு வகைகள் சத்தம் எனக்கே கர்ணகடூரமாய் இருக்கிறது. சத்தம் இல்லாமல் கண்ணைக் கவரும் மத்தாப்பூ, வாண வகைகள் மனத்தைக் கவர்கின்றன. அரசாங்கம் இதிலும் கட்டுப்படுகள் விதித்து மிச்சம் மீதி இருக்கும் அந்த சுவாரஸ்யத்தையும் கெடுத்து வருகின்றன.
புதுப் படங்களில் இன்னும் சிலருக்கு ஆர்வம் இருக்கிறது. தீபாவளி ரிலீஸில் 'தலைவன்' படம் வருகிறதா என்று பார்த்து முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் ஆவல் இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்கிறது. இதுவும் உதிரும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
இன்று தீபாவளிக்காக இரு பாடல்கள்..
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
நியூஸ் ரூம்
பானுமதி வெங்கடேஸ்வரன்
- சென்னை : சென்னையில் பெண் குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 250 இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் இயக்கப்பட உள்ளன.
- கான்பூர்,உத்தர பிரதேசத்தில் பணி முடித்து சென்ற பெண் கான்ஸ்டபிளுக்கு, 'லிப்ட்' அளிப்பது போல் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
- முஸ்லீம் ஆணின் மூன்றாவது திருமண அங்கீகாரம் குறித்த சர்ச்சை.
- குஜராத்தின் காந்தி நகரில் செயல்பட்டு வந்த போலி நீதிமன்றத்தில் தன்னை நீதிபதி என்று கூறிக்கொண்டு மாவட்ட ஆட்சியருக்கு உட்பட அரசு அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பித்த சாமுவேல் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- புதுடில்லி: திருமணத்துக்கு பின், மனைவியின் சம்மதம் இன்றி அவருடன் பலவந்தமாக கணவன் உறவு கொள்வதை குற்றமாக கருத வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி விலகிக் கொண்டார். விரைவில் அவர் ஓய்வு பெற உள்ளதால், இந்த முடிவை அவர் எடுத்து உள்ளார். 24-10-24
சென்னை: தலைமைச் செயலகத்தில் வேளாண்துறை பிரிவு அலுவலகத்தில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ் கற்கள் காலை 11:30 மணி அளவில் படபடவென்ற சத்தத்துடன் வெடித்துச் சிதறின. இதனால் அங்கிருந்த ஊழியர்கள் பதறி அடித்து வெளியே ஓடி வந்தனர். நிலநடுக்கம் என்று வதந்தி பரவியது. ஆனால் ஆய்விற்குப் பிறகு டைல்ஸ் வெடிப்புக்கு 'ஏர் கிராக்'தான் காரணம் என்று கண்டறியப்பட்டது.
கேரளா, திருச்சூரில் தங்க நகைகள் செய்யும் இடத்தில் மாநில ஜி.எஸ்.டி அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 120 கிலோ தங்கம் பறிமுதல்.
புதுடில்லி: கேம்பிரிட்ஜ் உயர்கல்வியை தொடர விரும்பும் இளைஞர் ஒருவர் அதற்கான பொருளை சம்பாதிக்க நூதன திட்டம் ஒன்றை தீட்டியிருக்கிறார்.
டிஸ்னி ஹாட் ஸ்டார் நிறுவனமும், ஜியோ சினிமா நிறுவனமும் இணைந்து நாட்டின் மிகப்பெரிய ஒ.டி.டி. தளமாக உருவெடுக்க உள்ளது. அப்படி இணையும் பட்சத்தில் அதன் பெயர் ஜியோ ஹாட் ஸ்டார் என்று மாறலாம் என்று யூகித்த பொறியாளராகிய அந்த இளைஞர் அந்த பெயரை முன்கூட்டியே பதிவு செய்து வைத்திருக்கிறார். இப்போது ரிலையன்ஸுக்கு ஜியோ ஹாட் ஸ்டார் என்னும் பெயர் வேண்டுமென்றால் அந்த இளைஞருக்கு அவர் கேம்ப்ரிட்ஜில் கல்வியைத் தொடரத் தேவையான தொகையைக் கொடுத்து அந்தப் பெயரை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தன் வலைப் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ரிலையன்ஸ் என்ன செய்யப் போகிறது என்று பார்க்கலாம்.
சிக்மகளூரு: செக்கில் தேங்காய் எண்ணெய் ஆட்டுவதற்காக தன்னுடைய இரண்டு வயது பெண் குழந்தையையும் அழைத்து வந்த தந்தை, குழந்தையை பைக் அருகில் நிற்கச் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். பின்னர் குழந்தையை தனியாக விட்டு விட்டு வந்திருப்பதை மறந்து மது குடிக்க சென்றிருக்கிறார். சிறிது நேரம் கழித்து குழந்தை நினைவு வந்து, பைக் அருகில் சென்று பார்த்தபொழுது குழந்தையைக் காணவில்லை. சுற்றுப்புறங்களில் குழந்தையைத் தேடி விட்டு
போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். இதற்கிடையில் அழுது கொண்டிருந்த குழந்தையை தங்கள் வீட்டிற்கு அழைத்துச்சென்று வைத்துக் கொண்டிருந்த தம்பதியினர், போலீசிடம் ஒப்படைத்தனர்.
தும்கூரு: சிநேகிதியோடு பிக்னிக் சென்ற பத்தொன்பது வயது பொறியியல் மாணவி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு ஒரு பாறையிடுக்கில் மாட்டிக் கொண்டார். அவரை போராடி 22 மணி நேரங்களுக்கு பிறகு தீயணைப்பு படையினர் மீட்டனர் . கும்மிருட்டான குகைக்குள் 22 மணி நேரம் காத்திருந்த அந்தப் பெண்ணின் தைரியத்தையும், திடத்தையும் மீட்புக் குழுவினர் பாராட்டினர். கர்நாடகாவில் ஒரு மஞ்சுமல் பாய்ஸ், இல்லை கேர்ல்ஸ்.
பெங்களூரு: வாகன நெரிசலில் சிக்காமல் சுமுகமாக செல்ல வழி வகுக்கும் வகையில் பெங்களூர் நகர போக்குவரத்து போலீசார் சோதனை முறையில் செயல்படுத்திய இ-பாத் வெற்றி.
சென்னை: சென்னை பிராட்வே ராஜாஜி சாலையில் ரிசர்வ் வங்கியில் ஆயுதப்படை போலீஸ் ரோந்து பணியில் இருந்த பொழுது அதிகாலையில் திடீரென அபாய எச்சரிக்கை அலார்ம் ஒலித்தது. அப்போது பணியில் இருந்த தர்ஷினி என்னும் பெண் போலீஸ் தன் துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்பியுள்ளார். அலாரம் தானாகவே ஒலிக்கத் தொடங்கியது அறிந்து, தோட்டாக்களை அகற்ற முயன்றபொழுது துப்பாக்கி எதிர்பாராத விதமாக பலத்த ஓசையோடு வெடித்தது. அதிர்ஷ்டவசமாக தர்ஷினி காயம்படாமல் தப்பித்தார்.
புதுடில்லி: ஆன்லைன் ஷாப்பிங் தளங்களின் அதீத அதிகரிப்பால் நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் மட்டும் கிட்டத்தட்ட 2 லட்சம் மளிகைக் கடைகள் மூடப்பட்டதாக அகில இந்திய நுகர்வோர் பொருட்கள் நிறுவன கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
புதடில்லி: மெட்ரோ நகரங்களை விட பிற நகரங்களில் வசிக்கும் மக்களே தங்களது மாதாந்திர செலவுகளுக்காக கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவது 'பேங்க் பஜார்' நிறுவனத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
டேராடூன்: டில்லியில் தீபாவளியை ஒட்டிய நாட்களில் காற்றின் மாசுபாடு மிகவும் அதிகமாவதால் அருகில் இருக்கும் மலைவாச ஸ்தலங்களான நைனிடால், முஸெளரி போன்ற இடங்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாம். முன்பு இது ஆஃப் சீஸனாக கருதப்பட்டது.
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!
===================================================================================================
60ஆம் வருட அமுதசுரபி தொகுப்பிலிருந்து....
பிரார்த்தனையின் பலன்
இனி காத்திருப்பது அபாயமாகும் என்று டாக்டர் அன்சாரி முடிவு செய்தார். இதை அவர் மகாத்மாவிடம் கூறினார். உபவாசத்தை உடனே விட்டுவிட வேண்டும் என்றும் எச்சரிக்கை செய்தார். சில மணி நேரத்தில் காந்திஜி நினைவு இழந்து விடக்கூடும் என்று அஞ்சினார்.
காந்திஜி டாக்டர் அன்சாரியைப் பார்த்து "நீங்கள் எல்லாவற்றையும் கணக்கு போட்டு விட்டீர்கள். ஆனால் பிரார்த்தனையின் பலனை கணக்கு போடவில்லையே... இன்று மட்டும் என்னை சும்மா விட்டு விடுங்கள்" என்றார்.
டாக்டர் சாஹேப் ஒப்புக்கொண்டார்.
அடுத்த நாள் சிறுநீரை பரிசோதித்து பார்த்துவிட்டு, 'இனி அசிட்டோன் அபாயம் இல்லை' என்று கூறிவிட்டு, காந்திஜிக்கு உணவு அளிக்க வேண்டும் என்று வற்புறுத்துவதை விட்டுவிட்டார்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உயிர்ப்பு
1) அடுக்கடுக்காய் கிளைகள்
விரிய
அசையாது
நாள் முழுதும்
காத்திருக்கும்
அந்த அடர் ஆலமரத்தின்
ஆழ்மௌனம்
மாலையில் கலைகிறது
கூடு திரும்பும் பறவைகளின்
குக்குக்கூ ஓசைகளால் .
அல்லது
2) சுற்றி பறந்து
சுறுசுறுப்புடன்
மாலையில்
கூடு திரும்பி
சலசல ஓசைகளால்
உயிர்ப்பு தரும் அந்த
பறவைக் குடும்பத்துக்காக
மதிய நேரங்களில் ஒரு
மௌன தவத்தில் இருக்கிறது
அந்த அடர்மரம்.
=================================================================================================
================================================================================================
இணையத்தில் பார்த்தது... இங்கே கொண்டு வந்தது...!
Self Surgery
In 1961, Soviet General Practitioner Leonid Rogozov performed a self-appendectomy at Novolazarevskaya Station. His extraordinary feat brought to light the importance of medical training for isolated personnel, influencing military medicine to emphasize self-reliance and emergency procedures. Post-service, Leonid returned to Leningrad, where he continued his medical career, contributing to the field of surgery and inspiring countless medical professionals. His bravery and skill during that self-surgery remain legendary. The general’s account of self-surgery has been used as a case study in medical training programs.
இப்படிச் சொல்லலாமா என்று அங்கு சிலர் கேட்டிருந்தார்கள்... ஆனால் இதிலும் கொஞ்சம் நியாயம் இருக்கிறது.. இல்லையா ஜீவி ஸார்?
===================================================================================================
படித்ததை பகிர நினைத்தது.... முரண்பாடுகள்
=================================================================================================
பொக்கிஷம்.
இணையத்தில் திரு சௌரிராஜன் கிருஷ்ணன் என்பவர் பகிர்ந்திருந்த இந்த மதன் ஜோக்ஸை JKC ஸார் அனுப்பி இருந்தார். தீபாவளியை ஒட்டியும், மதன் ஜோக்ஸ் பகிர்ந்து நாளானதாலும் இவற்றையே இங்கு பொக்கிஷப்பகுதியில் பகிர்கிறேன் - திரு சௌரிராஜனுக்கும் நன்றியுடன்.
முருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குவாங்க செல்வா அண்ணா... வணக்கம். தீபாவளி வாழ்த்துக்கள்.
நீக்குமகிழ்ச்சி.
நீக்குநன்றி ஸ்ரீராம்..
ஸ்ரீராம் அவர்களது மகனுக்கும் மருமகளுக்கும் தலைத் தீபாவளி..
பதிலளிநீக்குநெல்லைத் தமிழன் அவர்களது அன்பு மகளுக்கும் தலைத் தீபாவளி.. புதுமண தம்பதியருக்கு அன்பின் நல்வாழ்த்துகள்..
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்கவே..
நன்றி செல்வாண்ணா
நீக்குநன்றி துரை செல்வராஜு சார்.
நீக்குகீதா ரங்கன் (க்கா)விற்கும் வாழ்த்துகள். அவருக்கும் என்னைப் போன்ற மனநிலையா இல்லை தாமரை இலைத் தண்ணீரா என்று தெரியவில்லை
நீக்குகீதா ரங்கன் மகனுக்கு இனிய தலை தீபாவளி வாழ்த்துகள்.
நீக்குநெல்லை தமிழன் மகளுக்கும் இனிய தலை தீபாவளி வாழ்த்துகள்.
தலை தீபாவளி கொண்டாடும் மணமக்களுக்கு இனிய நல்வாழ்த்துகள். வாழ்க வளமுடன் நலமுடன்.
நீக்குஅனைவருக்கும் அன்பின் தீபாவளி நல்வாழ்த்துகள்..
பதிலளிநீக்குவாழ்க பல்லாண்டு..
நன்றி.
நீக்குஏழைக்குத் தானமாக..... நம் பணத்தைப் பிறருக்குக் கொடுக்க மனதில் தூண்டுதல் வேண்டும். நம் மனதைப் பாதித்தால் தானாகவே பணம் கொடுக்கத் தோன்றும். பல நேரங்களில் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்று தோன்றுவதால் பணம் பெயருவதில்லை.
பதிலளிநீக்குஆனாலும் மனதின் ஓரத்தில் அந்தப் பையன் சொன்னது உண்மையாக இருந்திருக்குமோ? 50 ரூபாய் கொடுத்திருந்தால் என்ன குறைந்திருப்கோம் என்ற எண்ணமும் பிறகு தோன்றும்.
Murphy laws போல பட்டியல் இட்டிருக்கிறார் இதை எழுதியவர்.
நீக்குஇது சகஜம் தானே நெல்லை? நாம் கிரேஸ் போன்ற சூப்பர் மார்க்கெட்டுகளில் கேள்வி கேட்காமல் காய்கறி அதிக விலைக்கு வாங்குவோம். ரோட்டோர கடைகளில் விற்கும் ஏழைகளிடம் பேரம் பேசுவோம்
ஆலமரம் படம் பார்த்தபோது, ஐந்தறிவில்லாவிட்டாலும் பிறர்க்கு உதவும் தன்மை அதனிடம் இருக்கிறதே என்று தோன்றிற்று.
பதிலளிநீக்குகும்பகோணம் இரயில் நிலெயத்தையொட்டி அமைந்துள்ள மரத்தில் இரவு 6 1/2 மணி இரயிலுக்குக் காத்திருக்கும்போது மரத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான பறவைகளின் ஒலி கொசகொசவென இருக்கும்.
ஆலமரம் மதிய நேரங்களில் மனிதனுக்கு நிழல் தருகிறது என்றும் ஒரு வெர்ஷன் எழுதி வைத்திருந்தேன். மிக நீளமாக இருக்கிறது என்று அதை "வெட்டி" விட்டேன்.
நீக்குகும்பகோணம் ரயில் நிலையத்தில் ஆலமரம் பார்த்ததில்லை. ரயில் வழியாக கும்பகோணம் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் இந்த மரம் பற்றி சொல்லும்போது எனக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஞாபகம் வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு மருத்துவமனை வாயிலில் பெரிய மரம் ஒன்று இருக்கும். ஆயிரக்கணக்கான பறவைகளின் ஒலி மாலை 6 மணிக்கு தொடங்கி மிக இனிமையாக ஒலித்துக் கொண்டே இருக்கும். இப்போதும் இருக்கிறதா என்று தெரியவில்லை.
மன உளைச்சல்...... இது அவரவர் விதி என நினைக்கிறேன். திரையுலகில் விகே ராமசாமி, ..... மதுரையைச் சேர்ந்த பாடகி.... என்று பலப் பல சம்பவங்கள். அவங்க நம் ஊருக்கு வந்தால் பார்க்க முண்டியடிப்போம். ஆனால் இறக்கும் தறுவாயில் வறுமை... என்னத்தைச் சொல்ல?
பதிலளிநீக்குசரியாக முதலீடு செய்ய தெரியாத அறியாமை! இப்போதைய நடிகர்கள் ஹோட்டலிலும், இடம் வாங்குவதிலும் என்று ஏகப்பட்ட முதலீடுகள் செய்து வைத்திருக்கிறார்கள். திரையுலகை விட்டாலும் அவர்களுக்கு வாடகை போன்ற வகைகளில் கோடிகளில் பணம் வந்து கொண்டே இருக்கும். அல்லது லட்சங்களில்..
நீக்குநகைச்சுவைப் பகுதிகள் மிக அருமை. மதன் கைவண்ணம் சிறப்பு
பதிலளிநீக்குஜோக்ஸ் மற்றும் கார்ட்டூன்களின் ஸூப்பர் ஸ்டார் மதன்.
நீக்குதீபாவளி நாள் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகட்டுரை "ஹூம் அந்தக்காலம்" என்ற வகையை சார்ந்தது. காலம் மாறும் ..... காட்சிகள் மாறும் .....வழக்கங்கள் மாறும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
நியூஸ் ரூம் பல செய்திகளுடன் நிறைந்த பதிவாக உள்ளது. அதற்கு பின் வரும் காந்தியின் உண்ணாவிரதம் பற்றிய செய்தியை நியூஸ் எனக் கொள்ளலாம்.
இரண்டாவது "உயிர்ப்பு" கவிதை அருமை. “மௌனமே பார்வையால் ஒரு பாட்டு” சரியா?
தீபாவளியும் செல்லங்களும் பகுதி எங்கள் வீட்டில் வளர்ந்த வெள்ளை பாமரேனியனை (பெயர் கிட்டு) நினைவூட்டியது.
self operation படம், செய்தியை தவிர்த்திருக்கலாம். வேறு ஒரு வியாழன் அன்று போட்டிருக்கலாம்.
வணக்கம் ஜேகே சி சார். தீபாவளி வாழ்த்துகள்.
நீக்குமுடிந்தவரை புலம்பல் இல்லாமல் இந்த கால நடைமுறையை எழுத முயன்றேன். அப்படியும் பதிவில் புலம்பல் தெரிகிறது போலும்!
நியூஸ் ரூம் செய்திகளை ரசித்தது சந்தோஷம் தருகிறது.
கவிதையை பாராட்டியதற்கு உண்மையிலேயே நன்றி. சமீப காலங்களில் அரிதான பாராட்டு.
நம் வீட்டில் செல்லங்கள் வளர்க்கும் போது அது படும் பாடு நமக்கு நன்றாக தெரிந்திருக்கும்.
செல்ஃப் சர்ஜரி செய்திகள் என்ன இருக்கிறது ஜேகேசி சார்? ஒரு சாதாரண ஒரு பகிர்வு அவ்வளவுதானே?
காஸ்ட்லி டி ஷர்ட்..... என்னவோ நான் எப்போதும் விலையுயர்ந்த உடைகளை வாங்குவதில்லை, மகள் திருமணத்தின்போது வாங்கியதைத் தவிர. உடைகளில் பணம் செலவழிப்பது வீண் என்பது என் எண்ணம். அதனால் ஒரு பிரயோசனமும் இல்லை. திருமணத்திற்குப் பிறகு மாமனால் நல்ல ஒரு பிராண்ட் ஷர்ட் வால்கித் தந்தார். அவரிடம் இந்த மாதிரி காஸ்ட்லி உடை எதுவும் எனக்கு வாங்காதீர்கள். இதில் மூன்றிலொரு பங்கு பணம் செலவழித்து அந்த உடைகளையே நான் அணிகிறேன் என்று சொல்லிவிட்டேன். I don't believe in Brands. அதெல்லாம் பம்மாத்து வேலை என்பது என் அபிப்ராயம்.
பதிலளிநீக்குநானும் அப்படித்தான் நெல்லை. ஆனால் சில சமயங்களில் மகன்களின் பாசத்தை விருப்பத்தை மீற முடிவதில்லை.
நீக்குபாடல்கள் மற்றும் ஆபரேஷன் செய்திகள் பொருத்தமில்லாதவையாக இருக்கின்றன.
பதிலளிநீக்கும்...... பாடல்கள் தீபாவளி சம்பந்தப்பட்டது...
நீக்குஅனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி. அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா .வணக்கம் நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஉங்களுக்கும், நம் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் அன்பான இனிய தீபாவளி வாழ்த்துகள். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.
நீக்குஅனைவருக்கும்
பதிலளிநீக்குதீப ஒளி வாழ்த்துகள்.
வாங்க ஜீவி சார்... வணக்கம். தீபாவளி வாழ்த்துகள்.
நீக்குகவிஞர் விக்கிரமாதித்யன் என்று படிக்கும் பொழுதே ஏகாந்தன் ஸார் நினைவு தான் வருகிறது.
பதிலளிநீக்குஅந்த படத்தில் பையனின் பெயர் கூட இல்லை! தந்தை பெயர் சொல்லித்தானே இவரே நமக்கு அறிமுகமாகிறார்?
ஆக, விக்கிரமாதித்யன் அவர்கள் எந்தக் குறைச்சலும் இல்லாமல் தான் வாழ்ந்திருக்கிறார் என்று தெரிகிறது!
அப்படியா தெரிகிறது?
நீக்குதீபாவளி.. தீபாவளிடா..
பதிலளிநீக்குஅந்த காணொளி படத்தைப் பார்த்ததில் வெளிச்சம் பளிச்சிட இருள் தேவை என்று தெரிகிறது.
இப்படி ஒன்றுக்கொன்று எதிர்மறையான எத்தனை இப்படியாக இன்னொன்றுக்கு உதவுகின்றன என்பதை
நினைத்துப் பார்க்கும் அறிவு கிடைத்தால் ஞானியாகி விடலாம்!
'தீபாவளிடா' இல்லை 'தீபாவளிதான்'.
நீக்குமதனின் அந்த சிவகாசி -- காஞ்சீபுரம் ஜோக் டாப் ரகம்.
பதிலளிநீக்குஅந்த மாப்பிள்ளை. ஹோல்டானுடன்
மாமா வீட்டிற்கு வரும் அந்தக் கால படத்தைப் பார்க்கும் பொழுது தான் மாமானார் வீட்டில் ஒரு படுக்கை கூட மாப்பிளைக்கு ஷேர் பண்ண மாட்டாங்களான்னு
இந்தக்காலத்தில் தோன்றுகிறது!
அப்போ பெண்?
ரொம்ப யோசிக்கக் கூடாது என்பது
அனுபவ சித்தாந்தம்!
ரசிக்கவும் வைக்கிறது சிந்திக்கவும் வைக்கிறது என்று தெரிகிறது!
நீக்குவடிவேல் குப்புசாமி ஏன்
பதிலளிநீக்கு'பன்'னை 'பண்' -- ஆக்கி விட்டார்?..
ஆ....
நீக்குதேங்காய் சட்னி அரைப்பாங்களாக்கும்?
பதிலளிநீக்குசட்னிக்கு வேண்டுமானால் தேங்காய்ச்சில் அம்மியில் அரைப்பார்கள், அந்த ஜோக் வந்த காலத்தில்!
செளரி ராஜனுக்கு சரி, நம்ம JKC--ஸாருக்கு நன்றி கிடையாதாக்கும்!
பதிலளிநீக்கும் விகுதியை நீங்கள் கவனிக்கவில்லையா?
நீக்கு/// கும்பகோணம் ரயில் நிலையத்தில் ஆலமரம் பார்த்ததில்லை.///
பதிலளிநீக்குஅரசமரமும் இருந்தது...
எல்லாம் காலத்தின் கோலம்..
சரி, அரசமரம். நான் பார்க்காத அது ஆலமரமாய் இருந்தால் என்ன? அரசமரமாய் இருந்தால் என்ன!!!
நீக்குசும்மா புரூடாலாம் விடக் கூடாது!
பதிலளிநீக்குஅந்தக் காலத்தைப் போலவே இந்தக் காலத்திலும் தீபாவளி அதிகாலை 4 வெடி சப்தம் கேட்க ஆரம்பித்து விடுகிறது!
அப்பார்ட்மெண்ட் வாழ்க்கையில் கேட்கவே வேண்டாம்!
எந்தக் காலத்திலும் அதிகாலை வெடி சத்தம்! போதாக்குறைக்கு அன்று இரவு 7 மணிகெல்லாம் ஆரம்பித்து விடும் வெடி சத்தம்!
மிச்சம் மீதி வைத்து
கார்த்திகைக்கும் வெடி சத்தம்!
தலைமுறை தலைமுறயாகத் தொடர்வது இந்த வெடி சத்தம் ஒன்று தான்!
பல்லுப் போன பாட்டியைக் கூட சாஸ்திரத்திற்காகவாவது ஒரு கம்பி மத்தாப்பு கொளுத்தேன்ன்னு கேட்டுக்கறது இந்த தீபாவளி பண்டிகை ஒன்றில் தான்!
குழ்ந்தைகளை சமாளிக்க முடியாமல் இப்பொழுதெல்லாம் சகல மதத்தினரும் கொண்டாடுவது தீபாவளி பண்டிகை ஒன்று தான்!
உன்னைக் கண்டு நானாட
என்னைக்கண்டு நீயாட உற்சாகம் பொங்கும் இந்த தீபாவளி!
அன்பு நெஞ்சங்கள் அத்தனையிலும் சுடர் விடும் தீபாவளி வாழ்க!
வாழ்கவே!
இதில் சில மாற்றுக் கருத்துக்கள் உண்டு! இருந்தாலும், அதை சொல்ல வேண்டிய தேவையில்லை. பொதுக் கருத்துக்கு உடன்படுகிறேன்.
நீக்குகும்பகோணம் ரயில்வே ஸ்டேஷன் டிக்கெட் கவுண்ட்டருக்கு இன்னொரு பக்கம்
பதிலளிநீக்குIRCTC கேண்டினுக்கு பின்பக்கம் இன்றும் அரசமரம் இருக்கிறது!
மரத்தடியில் பிள்ளையாரும் வீற்றிருக்கிறார்!
பறவைகளின் படபடப்பு சரணாலயம் போல காட்சி தரும்!
அதைத்தான் குறிப்பிட்டிருக்கிறேன் ஜீவி சார்... நான் அடிக்கடி கும்பகோணம் செல்பவன்.
நீக்குசந்தர்ப்பம் கிடைத்தால் பார்க்கிறேன்.
நீக்குஅனைவருக்கும் அன்பார்ந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்குவாங்க மனோ அக்கா ... உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள். உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
நீக்கு' தீபாவளி' பற்றிய சிந்தனைகளை மிக அருமையாக, 200 சதவிகிதம் நிதர்சனமாக எழுதியிருக்கிறீர்கள் ஸ்ரீராம்!!
பதிலளிநீக்குநன்றி மனோ அக்கா.
நீக்குஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குகே. சக்ரபாணி
நன்றி சக்கரபாணி சார். உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
நீக்குஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதீபாவளி ஜோக்ஸ் அன்றைய தீபாவளி மலர்களை நினைவூட்டியது.
ரெட்டை வால் ரங்குடு ரசனை.
நியூஸ்ரைம் செய்திகள் பல அறிந்தோம்.பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் சிவப்பு ஆட்டோக்கள் வரப்பிரசாதம்.இரண்டு வயது குழந்தையை தொழிலுக்கு அழைத்துச் சென்ற பொறுப்பற்ற தகப்பன் என்னத்தைச் சொல்வது.
நன்றி மாதேவி.
நீக்கு
பதிலளிநீக்கு2) சுற்றி பறந்து
சுறுசுறுப்புடன்
மாலையில்
கூடு திரும்பி
சலசல ஓசைகளால்
உயிர்ப்பு தரும் அந்த
பறவைக் குடும்பத்துக்காக
மதிய நேரங்களில் ஒரு
மௌன தவத்தில் இருக்கிறது
அந்த அடர்மரம்.
இதில் கடைசி வரியில் தாய் அல்லது குடுமபத்தலைவி அல்லது பெண் என்று போட்டு பாருங்கள் அது பொருந்தும். அதனால் தான் அருமை என்று சொன்னேன்.
Jayakumar
மறைபொருள் அதுதான் JKC ஸார்... உங்கள் முயற்சியும் நன்று.
நீக்குபதிவின் பகுதிகள் அனைத்தும் நன்று. தீபாவளி மீதான ஆர்வம் பல வருடங்களாகவே இல்லாமல் போனது! இங்கே காலை நேரத்தில் கொண்டாட்டம் கிடையாது. மாலை தொடங்கும் கொண்டாட்டம் நள்ளிரவுக்கும் மேல் தொடர்ந்து இருக்கும். அதுவும் கூட இப்போதெல்லாம் இல்லை.
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.
நன்றி வெங்கட்.
நீக்குதீபாவளி.. அன்றும் இன்றும் குறித்த பார்வை எதார்த்தம். கவிதை இரண்டுமே நன்று. அடர் மரத்துக்குக் கூடு திரும்பும் பறவைகள் சலசலத்தபடி இருந்து சட்டென ஒரு கணத்தில் மெளனமாகி விடுவதும் ஒரு கவிதை. தொகுப்பு நன்று.
பதிலளிநீக்குநன்றி ராமலக்ஷ்மி.
நீக்கு