டீக்கடை அனுபவம் என்பது தனி அனுபவம். அந்த டீயை இடது கையில் வைத்துக் கொண்டு, அவ்வப்போது மெல்ல சுழற்றி ... ஏதோ உலகமகா பிரச்னையை தீர்ப்பது எப்படி என்று யோசிப்பது போல் யோசித்துக் கொண்டு மெதுவாக வாயில் ஒரு 'சிப்' உறிஞ்சி...
காலி கோப்பையைக் கொடுக்கும்போது மனசே இல்லாமல் மெதுவாய் கொடுப்பார்கள். வீட்டில் கூட இப்படித்தான் டீ குடிப்பார்களா என்று எனக்குத் தோன்றும்.
டீயில் அப்போதெல்லாம் மூன்றே வகைகள்தான். ஸ்ட்ராங் டீ, நார்மல் டீ, கட்டிங் டீ..
கட்டிங் என்பது அரை கிளாஸ்தான். நீர் குறைவாக ஊற்றப்பட்ட, அல்லது சுண்டிய பாலில் ஸ்ட்ராங் டிகாக்ஷன் போட்டு வரும். சுவையும், காசும் கூட.
அப்போதைய டீக்கடைகளில் ஆண்கள் மட்டும்தான் 98.7% டீ குடிப்பார்கள். பெண்கள் அப்படி நின்று குடித்தால் வினோதமாக பார்ப்பார்கள். ஏனோ?!
கடையை அடைந்து, நின்று தினத்தந்தி பேப்பரின் ஒரு பக்கத்தை மேய்ந்தபடியே டீ குடித்துக்கொண்டும், தம்மடித்துக் கொண்டிரும் நிற்பவர்களைத் தாண்டி, மாஸ்டரிடம் சென்று 'மாஸ்டர் ஒரு டீ' என்று ஆர்டர் கொடுத்து விட்டு, ஒதுங்கி நிற்க ஒரு இடம் தேடி நின்று கொள்ள வேண்டும். மாஸ்டர் டீயை நீட்டினால் வாங்கி கொள்ளும் தூரத்தில் நின்றால் உத்தமம். வாங்கி கொண்டு அப்புறம் அங்கிருந்து வேறு இடம் சென்று கொள்ளலாம். கடைக்காரர்கள் செய்தித்தாளை வடை மடித்துக் கொடுக்கத்தான் வாங்குகிறார்கள் என்றாலும் அந்த பேப்பரைப் படிக்க என்று டீ குடிக்க சில பேர் வருவார்கள். செய்தித்தாளின் ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு டீ குடிக்கும் நபரிடம் இருக்கும்!
இப்போதெல்லாம் பேபப்ரின் இடத்தை செல்போன் ஆக்ரமித்துக் கொண்டிருந்தாலும், ஒரு ஆச்சர்யம், சாதாரண தெருவோர கூண்டு டீக்கடைகளில் செல்போன் இல்லாமல், ஏன் பேப்பரும் இல்லாமல் சிந்தனாவாதிகள்தான் டீ குடிக்கிறார்கள்.
மழைக்காலங்களில், குளிர்காலங்களில் இது மாதிரி டீக்கடைகளுக்கு மவுஸு அதிகம். சட்டென மழைத் தூறலுக்கு ஒதுங்கி, சும்மா நிற்காமல் ஒரு பஜ்ஜி, ஒரு டீ அடிப்பவர்கள் உண்டு. பெய்யும் மழையைப் பார்த்தபடியே எங்கோ கவனமாக டீ நிதானமாகக் குடிப்பது ஒரு சுகம்.
சிலர் ஒரு கையில் சிகரெட்டும், மறுகையில் டீ க்ளாஸுமாய் இருப்பார்கள். என் நண்பர் ஒருவர் டீயில் அந்த சிகரெட்டை நசுக்கி குடிப்பார்! சிலர் ரொட்டியோ, பன்னோ, உடன் ஊறுகாய் போல தொட்டுக்கொண்டு டீ குடிப்பார்கள். அல்லது அதை ஒரு கடி, டீயை ஒரு சிப் உறிஞ்சல்...
மதுரைக்கு வந்த பிறகு டீக்கடைகள் சற்று அதிகமாக கண்ணில் பட்டன. அவை கூட பள்ளிகளை ஒட்டியோ, கல்லூரி, அலுவலகங்களை ஒட்டியோ காணப்பட்டன. பள்ளி நண்பர்கள் டீக்கடையில் குழுவாக நின்று டீ உறிஞ்சுவதைப் பார்த்திருக்கிறே ன். என் நண்பன் ஜெரோம் அப்போதே புகை பிடிப்பான்! இவர்கள் வழக்கம் என்ன என்றால், டீ குடிக்க, அப்படியே குச்சி மிட்டாய் சாப்பிட - அதுதாங்க புகை பிடிக்க - கடைக்குப் போகும்போது என்னைப்போல யாராவது பச்சாவை துணைக்கு அழைத்துக் கொண்டுதான் போவார்கள். சிகரெட் புகைத்து பெரிய மனித feel பெற்றவர்கள் இவர்கள்!
கிட்டத்தட்ட என் பள்ளி இறுதி நாட்களில்தான் நான் முதன் முதலில் டீக்கடை அனுபவம் பெற்றேன். முதலில் நண்பர்களுடன் சென்று ஒதுங்கி நின்று அவர்கள் ஆர்டர் செய்து வாங்கி கொடுக்கும் டீயை, கூட நின்று பேசியபடி, குடித்து விட்டு வருவோம். அப்புறம் நானே தனியாக டீக்கடை சென்று டீ குடித்து வரும் தைரியம் ( !! )) வந்தது.
சிகரெட் பழக்கம் போல டீ கடையில் நின்று டீ குடிப்பதும் ஒருவித போதை ஆகிவிடுகிறது. போதாக்குறைக்கு சூடாக வடையும், காலப்போக்கில் அதற்கு சட்னி, கடப்பா என்றெல்லாம் வந்து விட, டீக்கடை தவிர்க்க முடியாத விஷயம் ஆனது. 'கடப்பா எங்கடா குடுக்கறாங்க' என்று நீங்கள் கேட்கலாம். மதுரை தல்லாகுளம் ஹெட் போஸ்ட் ஆபீஸ் எதிரே ஒரு கடை - ஒரு தபால்காரரே வைத்திருந்தார் - அந்தக் கடையில் மொறுமொறு மெதுவடை, பொன்னிற போண்டா எல்லாம் சுடச்சுட கிடைக்கும். துணைப்பொருட்களாக இந்த கடப்பா, சிவப்பு சட்னி, வெள்ளை சட்னி.. அப்பா தினசரி மாலை அலுவலகத்திலிருந்து திரும்பும்போது இந்தக் கடையிலிருந்து சுடச்சுட போண்டா, வடை வாங்கி வருவார்! வீட்டுக்குள் நுழைந்து அவர் ஆபீஸ் bag ஜிப்பை திறந்ததுமே வாசனை கம்மென்று அடிக்கும்! மோத்தி உட்பட எல்லோரும் உஷாராகி தயாராவோம்.
சிலருக்கு வெங்காயம் துருத்திக் கொண்டு நிற்கும் மசால்வடைதான் பிடிக்கும். இந்த மசால்வடைதான் பாதி அரசு ஊழியர்களுக்கு மதிய சாப்பாட்டுக்கு வெஞ்சனம்!
வீட்டில் மட்டும் இரண்டு காபி குடித்தது போக டீக்கடைகளில் அவ்வப்போது நின்று இப்படி டீ குடிப்பது எனக்கும் வழக்கமானது. டீக்கடையில் காஃபி குடிக்க மாட்டேன்! இந்த வழக்கத்தில் பின்னாட்களில் அலுவலக வேலை நடுவே, வெளியே எழுந்து போகாமல், மாதாந்திர கணக்கில், இருக்கும் இடத்துக்கு டீ, வடை கொண்டு வரச்சொல்லி குடிப்பதும், சாப்பிடுவதும் வழக்கமானது. அலுவலக வாசலிலேயே அருமையான டீக்கடை.
அப்போதெல்லாம் நம்மூர்க்காரர்கள்தான் டீ போடுவார்கள். அவரை டீ மாஸ்டர் என்று அன்புடன் அழைப்போம்! அவர் டீ போடும் அழகே தனி. கிளாஸை வெந்நீரில் கழுவி வரிசையாக வைத்து, அதில் சர்க்கரை போட்டு கொஞ்சம் பாலை ஊற்றி, இந்தப் பக்கம் இன்னொரு அடுப்பில் இருக்கும் டீ டிகாக்ஷனை எடுத்து அதில் லாவகமாக வரிசையாக ஊற்றி, ஒவ்வொன்றாக எடுத்து இன்னொரு கிளாஸை இடது கையில் பிடித்து ஒரு தட்டு தட்டி, அதில் நீளமாக, உயரமாக ஒரு ஆற்று ஆற்றி க்ளாஸ் அடிப்பாகத்தை ஒரு தட்டு தட்டி அந்த மேடை நுனியில் வைப்பார். நாம் அதை எடுத்து அதன் விளிம்புகளை மறுபடி அங்கேயே தடவி எடுத்துக் கொள்ள வேண்டும்!
பத்து பைசா, 15 பைசாவுக்கெல்லாம் டீ கிடைத்தது, அப்புறம் அது 50 பைசாவாங்கி ஐந்து ரூபாயாகி ஏழு ரூபாயாகி இப்போது நார்மல் டீ பெரும்பாலும் 10 ரூபாய்.
இப்போதெல்லாம் எல்லா இடங்களிலும் வட மாநிலத்தவர்தான் டீ போடுகிறார்கள்.. மேலும் இஞ்சி டீ, ஏலக்காய் டீ, பேப்பர் டீ, கிரீன் டீ, வெண்டைக்காய் டீ என்று ஏகப்பட்ட வெரைட்டிஸ்...
பள்ளிக்காலங்களில் வீட்டிலேயே காஃபி குடித்து விடுவதால் டீக்கடையில் தேவைகள் எனக்கு இருந்ததில்லை என்பது மட்டுமில்லை, அப்போதெல்லாம் இப்படி டீக்கடைகள் இருந்ததுமில்லை. உதாரணமாக தஞ்சை ஹௌசிங் யூனிட்டிலிருந்தோ, மருத்துவக்கல்லூரி குடியிருப்பிலிருந்தோ பள்ளிக்கு கிளம்புகிறேன் என்றால் பள்ளி வரும்வரை டீக்கடை எதுவும் கண்ணில் பட்டதில்லை. மருத்துவக் கல்லூரி குடியிருப்பி லிருந்தாவது பஸ்ஸில் வருவேன். ஹௌசிங் யூனிட்டிலிருந்து நடைதான்.
பள்ளி தாண்டி ரயில்வே ஸ்டேஷன் இருக்குமிடம் சென்றால் அங்கே 'மேனகா காபி பார்' என்று ஒரு கடை இருக்கும். வெளியில் நின்றும் குடிக்கலாம், உள்ளே அமர்ந்தும் டீ, காபி குடிக்கலாம். அப்போதெல்லாம் ஒரே வகை டீதான். இஞ்சி டீ, ஏலக்காய் டீ எல்லாம் அப்புறம் பத்து வருஷத்துக்கப்புறம் அறிமுகமானது . முதலில் அது தம் டீ என்று சொல்லப்பட்டது!
அந்த 'மேனகா காபி பாரு'க்கும் எனக்கும் இருந்த ஒரு சிறு தொடர்பு பற்றி தற்கொலை என்கிற முந்தைய பதிவொன்றில் எழுதி இருக்கிறேன்!
இப்போதெல்லாம் சென்னையில் எந்த இடத்தில் பத்துப் பதினைந்தடி நடந்தாலும் அந்தக் குறுகிய இடத்துக்குள் குறைந்தது நான்கு காஃபி, டீ ஷாப் நீங்கள் பார்த்து விடக்கூடும். அதுவும் என்னென்ன பெயர்கள் என்கிறீர்கள்? டீ பாய், சாய் கிங்ஸ், காஃபி ஒன்லி, வாங்க டீ சாப்பிடலாம், வாய்க்கு வந்த பெயர்களை எல்லாம் கைக்கு வந்தபடி எழுதி வைத்திருக்கிறார்கள்.
அதிலும் சமீபகாலமாக கருப்பட்டி காஃபி ரொம்ப புகழடைந்து விட்டது. அது நல்லதா, கெட்டதா தெரியாது. வெள்ளைச் சர்க்கரையைவிட நாட்டுச் சர்க்கரை நல்லதென்று வாட்ஸாப்பில் படித்து விட்டோமானால் நச்சென்று வலையில் விழுந்து விடுவோம். அவர்கள் நிஜமாக கருப்பட்டி காஃபிதான் கொடுக்கிறார்களா என் றும் ஆராய்வதில்லை. அப்படி கொடுக்கிறார்கள் என்றே நம்புவோம். அப்படி நம்பிதான் ஒவ்வொரு கடையிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக ஆரோக்ய பானம் அருந்துவதாக அகமகிழ்ந்து போகிறார்கள்!
இபப்டியான கடைகளை பார்த்துப் பார்த்து சாதாரண நம்மூர் பழைய மாடல் டீக்கடையைப் பார்க்க ஒரு ஏக்கமே வந்து விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். தினத்தந்தி பேப்பரில் பஜ்ஜியை நசுக்கி எண்ணெய் பிழிவதற்கு ஈடாகுமா இந்தக் கடைகள்!
ஆலடிப்பட்டியான் கருப்பட்டி காபி என்றொரு கடை சரவணா ஸ்டோர் போல நகரமெங்கும் கிளை விரித்து வியாபித்து வருகிறது. முதலில் ஓரிரு இடங்களில்தான் அதைப் பார்த்தேன். இப்போது திரும்பும் பக்கமெல்லாம் பார்க்கிறேன்.
பல்வேறு பெயர்களில் இன்றைய நாளில் அனைத்து இடங்களிலும் நிறைந்திருக்கும் இந்த புது மாதிரியான டீக்கடைகளில் ஆண், பெண், குழந்தைகள் என்று எல்லோருமே அமர்ந்து பானம் அருந்துகிறார்கள். அவர்கள் ஆரோக்கியத்தைப் பேண கிரீன் டீ லென்னும் டீ என்றெல்லாம் ஆர்டர் செய்து குடிக்கிறார்கள். கிரீன் டீ என்பது ஃபிராட் என்று ஒரு மருத்துவர் சொன்ன காணொளி பார்த்திருக்கிறேன்,.
இங்கேயும் பழைய வாக்கியத்தைதான் - எப்போதும், எதற்கும் சொல்லும் வாக்கியத்தைதான் - சொல்லப் போகிறேன்.
என்ன இருந்தாலும் அந்த கால டீக்கடைகள்தான் சுவாரஸ்யம். அந்தக் கால டீக்கடைகள் போல இல்லை இந்த கால டீக்கடைகள்!
==============================================================================================
நியூஸ்ரூம்
பானுமதி வெங்கடேஸ்வரன்
- கொழும்பு : ஆஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து இலங்கையின் கொழும்புக்கு வந்த 'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' விமானத்தில், தன்னிடம் சொல்லாமல் கழிப்பறைக்கு சென்ற உதவி பைலட்டை காக்பிட்டுக்கு வெளியே நிற்க வைத்து, விமான கேப்டன் பூட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- ஒட்டாவா: நிஜ்ஜார் கொலை வழக்கில், இந்திய உளவாளிகளின் பங்கை நிரூபிக்க வலுவான ஆதாரம் இல்லை என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒப்புக்கொண்டார். ஒட்டாவா: கனடா அரசியல் களத்தில் பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்துவதாகவும், இங்குள்ள காலிஸ்தானியர்களுக்கு ஆதரவாகவே அவர்கள் செயல்படுவதாகவும் கனடாவின் உளவுத்துறை இயக்குனர் வனீசா லாயட் பேசியது, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
- சென்னை : குற்றவாளியைக் கண்டுபிடிக்க, கொதிக்கும் நெய்யில் கையை வைக்கும்படி கொடுமையான தண்டனையை, மராட்டியர்கள் வழங்கிய தகவல், தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டு வாயிலாக தெரிய வந்துள்ளது.
- மகாராஷ்டிரத்தில் ரூபாய் ஒரு கோடி வரதட்சிணை கேட்டு கணவர், மாமியார், மாமனார் கொடுமைப்படுத்தியதால் பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். டாக்டரானாலும் பெண். ஹூம்...
- மழை காரணமாக சென்னையில் ஒரே நாளில் 43 பாம்புகள் பிடிபட்டன.
- உ பி காசியாபாத்தின் சாந்திநகர் பகுதியில் வசித்துவரும் தொழிலதிபர் வீட்டில் பணிபுரியும் பெண்மணி ஒருவர் அங்கு சமைக்கப்படும் உணவில் தனது சிறு நீரை கலந்திருப்பது கண்டுபிடிக்கபப்ட்டுள்ளது... உவ்வே.... பெண்மணி அவள் கண்மணி!
- உத்தரகண்டில், இஸ்லாமிய கல்வியை போதிக்கும் 416 மதரசாக்கள் உள்ளன. இவை, உத்தரகண்ட் மதரசா கல்வி வாரியத்தின்கீழ் பதிவு பெற்று செயல்படுகின்றன. இங்கு, 70,000 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இந்த மதரசாக்களில் சமஸ்கிருதத்தை கட்டாய பாடமாக்க மதரசா கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, மாநில சமஸ்கிருத துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளது. சமஸ்கிருத துறை அனுமதி அளித்த பின், 416 மதரசாக்களிலும் சமஸ்கிருதம் கட்டாய பாடமாக கற்பிக்கப்பட உள்ளதாக உத்தரகண்ட் மதரசா கல்வி வாரிய தலைவர் முப்தி ஷமூன் குவாஸ்மி தெரிவித்துள்ளார்.
- லக்னோவில் உள்ள ஒருவருக்கு பாஸ்போர்ட் தபாலில் வந்துள்ளது. அந்த பாஸ்போர்ட்டை சம்பந்தப்பட்டவருக்கு தர அங்குள்ள தபால்காரர் ரூ.500 லஞ்சமாக கேட்டார். பணத்தை தர அவர் மறுத்ததால் தபால்காரர் கோபம் கொண்டு பாஸ்போர்ட்டில் உள்ள முக்கிய பக்கம் ஒன்றை கிழித்துள்ளார்.
- லக்னோ: கணவனின் நீண்ட ஆயுளுக்காக கர்வா சவுத் என்ற விரதம் இருந்த மனைவி, தன் கணவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் உ.பி.யில் நடந்துள்ளது.
- சென்னை: சென்னையில், நள்ளிரவில் போலீசாரிடம் ஆபாசமாக பேசி வம்பிழுத்த ஜோடி கைது செய்யப்பட்டனர். 'கொஞ்சம் ஓவரா போயிட்டோம். எல்லோரும் மன்னிச்சுடுங்க' என்று அந்த நபர் மன்னிப்பு கேட்கும் வீடியோவை, போலீசார் வெளியிட்டுள்ளனர். அந்த ஜோடி போலீசிடம் உதார் காட்டும் விடீயோவையும், மன்னிப்பு கேட்கும் வீடியோவையும் கட்டாயம் பாருங்கள்... கொடுமை!
- மூத்த பதிப்பக ஆளுமையும், உமா பதிப்பக நிறுவனருமான திரு ராம லட்சுமணன் உடல்நலக்குறைவால் அக்டோபர் 21 ஆம் தேதி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 74.
- செயற்கைக்கோளிலிருந்து நேரடி சேவை. BSNL - Viachat சோதனை வெற்றி. இதனால் நெட்வொர்க் போன்ற இடைநிலை அமைப்புகள் எதுவுமின்றி செயற்கைக்கோள் வாயிலாக நேரடி இணைப்பு பெறலாம். நெட்ஃபிளிக்ஸ்
போன்றவை ஸ்மார்ட் டி.வி, ஸ்மார்ட் ஃபோன்களில் நேரடியாக திரைப்படங்களை வழங்கலாம். இரு சாதனங்களுக்கிடையே கோப்புகள் பரிமாறலாம். நோட்டிஃபிகேக்ஷன் மற்றும் குறுஞ்செய்திகள் பயணர்களுக்கு நேரிடையாக அனுப்பலாம்.
- ரயில்களில் முன்பதிவு வசதி 120 நாட்களில் இருந்து 60 ஆக குறைப்பு. 120 நாட்களுக்கு முன்னரே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியால் டிக்கெட் ரத்து செய்வது அதிகமாகி வருகிறது. இதைப் பயன்படுத்தி தனியார் ஏஜென்சிகள் முறைகேடுகள் செய்கின்றன. அதை தடுக்கவே முன்பதிவு நாட்களை குறைக்கும் ஏற்பாடு.
- பீஹார்: பாட்னாவில் தன்னைக் கடித்த கண்ணாடி விரியன் பாம்பை தன் கழுத்தில் போட்டுக் கொண்டபடி மருத்துவமனைக்கு வந்தார் பிரகாஷ் மண்டல் என்பவர். இதைப் பார்த்து பயந்து அலறி ஓடினர் அங்கு காத்திருந்த மற்ற நோயாளிகளும், மருத்துவர்களும்.
- உ.பி., பிஜ்னோர்: வயலில் வேலை செய்து கொண்டிருந்த தேர்வர் சிங் என்பவரை திடீரென சிறுத்தை ஒன்று தாக்கி, அவரை புதருக்கு இழுத்துச் செல்ல முயன்றது. அதோடு போராடிய தேர்வர் சிங் அருகிலிருந்த கம்பை எடுத்து, சிறுத்தையின் தலையில் அடித்தார். பலத்த காயமடைந்த சிறுத்தை இறந்தது. தேக்வீர் சிங்கின் நிலை கவலைக்கிடம்.
- புதுடில்லி: உலகளவில் தேவை அதிகரித்துள்ளதால், நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் காபி ஏற்றுமதி 55% உயர்ந்துள்ளதாக இந்திய காபி வாரியம் அறிவித்துள்ளது.
- சென்னை: தங்கம் விலை உயர்வால் ஏற்பட்ட மாற்றம். தங்கம் விலை எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து வருவதால் மொத்த பணம் கொடுத்து நகை வாங்க முடியாது என்ற காரணத்தால் தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேருவார் எண்ணிக்கை 25% அதிகரிப்பு.
- தங்கம் விலை உயர்வால் ஏற்பட்டிருக்கும் மற்றொரு நல்ல மாற்றம் வங்கிகளில் தங்கநகைகள் மீது கடன் வாங்கியவர்கள் இருக்கும் நகையை காப்பாற்றிக் கொள்ளலாம் என்ற நோக்கில் அதற்கு ஒழுங்காக வட்டி கட்டத் தொடங்கியுள்ளனர்.
- பெங்களூரு: இலவசமாக ஆட்டோ ஓட்டும் பயிற்சி அளிக்கும் 'நம்ம யாத்ரி' நிறுவனம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் நோக்கில் 'மஹிளா சக்தி' என்ற திட்டத்தை 2023ல் செயல் படுத்தியது. இதன் மூலம் 108 பெண்கள் ஆட்டோ ஓட்டும் பயிற்சி பெற்று ஆட்டோ ஓட்டத் துவங்கியுள்ளனர்.
- சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே வி.வி.ஆர். நகரில் கருவாடு உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. மழைக்காலம் துவங்கியுள்ளதால் கருவாடு உற்பத்தி பாதிக்கப்பட்டு, கருவாடு கிலோ ரூ.200 வரை உயர்வு.
- பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிகாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்டது. அதற்குப்பிறகு அர்ஜுன் என்னும் 15 வயது மாணவனுக்கு கை வீங்கத் தொடங்கி,புண்ணும் ஏற்பட்டது. அதற்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வீடு திரும்பினார். தடுப்பூசி போட்டுக்கொண்ட மற்ற மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
- 44 வயதான பெட்ரோல் பங்க் ஊழியர் எம்.எல்.ஏ.-விடம் பெண் பார்க்க உதவி கேட்கிறார். "நான் உங்களுக்கு வாக்களித்துள்ளேன், வாக்களித்ததால் உதவி கேட்பதாக அந்த ஊழியர் தெரிவிக்க, நிச்சயமாக என எம்எல்ஏ உறுதியளித்தார்.
- நாட்டில் வயதானவர்களைவிட இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் எல்லோரும் அதிக பிள்ளைகளை பெற்றுக் கொள்ளுங்கள் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வேண்டுகோள்.
- தீபாவளிக்கு 700 புதிய ரக சேலைகள் கோ-ஆப்டெக்ஸ் அறிமுகம்.
அடுத்த வாரம் சந்திக்கலாம். வாசகர்களுக்கு இனிய அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துகள்!
====================================================================================================
இணையத்தில் ரசித்தது...
Crowded Ship
The RMS Queen Elizabeth sails into New York, filled with American service members returning from Europe after WWII. Launched in 1938 from Clydebank, Scotland, this majestic liner boasted luxurious accommodations and was the world’s largest passenger ship at the time. During the war, it was repurposed as a troopship capable of transporting up to 15,000 troops across the Atlantic. Known for its speed and safety, Queen Elizabeth completed numerous missions, playing a crucial role in the Allied war effort. The vessel John Brown & Company built was named after the Queen Mother, the wife of King George VI.
=====================================================================================================================
இந்த தீபாவளிக்கு
வரமாட்டார்கள்
மகனும் பேரனும்..
கலங்கிப் போயிருக்கிறாள்
காப்பகத்தில்
தனியாய் இருக்கும்
தாய்.
உடன் இருந்த கணவன்
காலமாகி விட்டதால்
தீபாவளி கிடையாது
இந்த வருடம்
அடுத்த தீபாவளி வரை
காத்திருக்க வேண்டும்
கண்ணில் நிற்கும்
உறவுகளைக் காண
=========================================================================================
படித்ததைப் பகிர்வது.....
எஸ்.ரா. மனைவி சந்திரபிரபா ஒரு நேர்காணலில் சொன்னது
நீங்கள் தான் அவரது துணையெழுத்தா?
ஆனந்த விகடனில் அவர் எழுத ஆரம்பிச்சது தான், எழுத்துலகில் அவருக்கு கிடைச்ச பெரிய பிரேக். ஆனந்த விகடனில் மாணவ பத்திரிகையாளராக வேலை செய்தார் என்பதால் விகடன் எம்.டி பாலசுப்ரமணியத்திற்கு இவர் மீது தனி ப்ரியம். ஆசிரியர் அசோகன், கண்ணன் எல்லோரும் அவரது நண்பர்கள். ஆகவே துணையெழுத்தை தொடராக எழுத சொன்னார்கள். அவர் முதலில் தயக்கம் காட்டினார். நான் தான் உற்சாகம் கொடுத்தேன். துணையெழுத்தை வாசகர்கள் கொண்டாடினார்கள்.
அதுவே அவருக்கான பரந்த வாசகர்களை உருவாக்கியது. வாரவாரம் துணையெழுத்தை படித்துவிட்டு போனில் பாராட்டுகிறவர்கள் ஏராளம். நிறைய பேர் வீட்டிற்கே தேடி வருவார்கள். அப்போது கே.கே.நகரில் இருந்தோம். துணையெழுத்தை தொடர்ந்து கதாவிலாசம், தேசாந்திரினு அவரது தொடர்கள் பெரிய வரவேற்பை பெற்றன. விகடனில் அதிக தொடர்கள் எழுதியது இவர் ஒருவர் தான். அதுவும் எனது இந்தியா வந்த போது நூறு வாரங்களுக்கும் மேலாக எழுதினார். அந்த புத்தகத்தை ஐ.ஏ.எஸ் படிக்கிற மாணவர்கள் பாடமாக படிக்கிறார்கள் என்பதை கேட்க சந்தோஷமாக இருக்கிறது
அவரின் பயணத்தில் உங்களின் பங்கு...
அவர் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் பிள்ளைங்களையோ என்னையோ விட்டுக் கொடுக்கவே மாட்டார். நாங்களும் அப்படித்தான். குடும்ப பொறுப்பை நான் முழுமையா எடுத்துக்கிட்டேன். அதனால அவரால் சுதந்திரமா எழுத முடிந்தது. அவர் இலக்கியத்தை நேசித்ததை போல நாங்க இவரை நேசித்தோம். எழுத வேண்டியதை முழுமையாக திட்டமிட்டு பெரிய ஷெட்யூல் போட்டு வேலையை செய்து முடிப்பார். எழுத்து எழுத்துனு மட்டுமே நினைப்பு. ஒரு நாள் கூட சும்மா இருக்கமாட்டார். வீட்டை பார்த்துக் கொள்வது எளிதானதில்லை.
ஆனால் அவர் அதை புரிந்து கொண்டிருந்தார். இப்போது அவரது புத்தகங்களை வெளியிட ஒரு பதிப்பகம் ஆரம்பித்துவிட்டேன். டால்ஸ்டாயின் மனைவி இப்படி செய்ததாக ஒருமுறை சொன்னார். அந்த உத்வேகம் எனக்கும் தொற்றிக் கொண்டது. தேசாந்திரி பதிப்பகம் ஆரம்பித்த பிறகு எனக்கு அதை கவனித்துக் கொள்வது கூடுதல் பணியாக ஆனது. ஆனால் சந்தோஷமாக அதை கவனித்துக் கொள்ள துவங்கினேன். இப்போது அது எஸ்.ராவின் நூறு புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது. வரக்கூடிய ஆண்டுகளில் பலரது புத்தகங்களையும் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம்.
இவர் எழுதியதில் பிடிச்சது....
இவர் எழுதியதில் பிடிச்ச புத்தகம் ‘துயில்’ என்ற நாவல். அதில் மனிதர்கள் மீதான அன்பையும் கருணையையும் எப்படி வெளிப்படுத்துவதுன்னு ஒவ்வொரு கதாபாத்திரம் மூலம் அழகா வெளிப்படுத்தி இருப்பார். அன்பை உங்க பெற்றோர், உடன் பிறந்தவர்கள், உறவினர்கள், சுற்றி இருப்பவர்களிடம் பகிரலாம். ஆனால் அதையும் தாண்டி உலகத்தில் இருக்கும் அத்தனை பேரிடமும் இரு கை நீட்டி பகிர்வது எப்படின்னு இதில் விளக்கி இருப்பார். ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒருவித அன்பினை வெளிப்படுத்தும்.
சென்னை வாழ்க்கை எப்படியிருக்கிறது?
திருமணமாகி வந்தபுதிதில் மிரட்சியாக இருந்தது. இப்போது பழகிவிட்டது. நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். நானே புதியவர்களுடன் பழகி நட்பை வளர்த்துக் கொள்வேன். வேலை வேலை என எல்லோரும் ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள். பரபரப்பு. வாகன நெருக்கடி. அதை நினைத்தால் பதற்றமாகத்தான் இருக்கிறது.
கணவராக எஸ்.ரா....
மிகவும் அன்பானவர். வீட்டில் அவ்வளவு கஷ்டம் இருந்த போதிலும் அதை வெளியே காண்பித்துக் கொள்ளமாட்டார். எங்க நாங்க சங்கடப்படுவோமோன்னு தனக்குள் அந்த மனஉளைச்சலை ஏற்றிக் கொண்டார். எழுத ஆரம்பிச்சிட்டா தன்னையே மறந்திடுவார். அந்த சமயத்தில் என்னங்க, எங்களையும் கொஞ்சம் கவனியுங்கன்னு சொன்னா போதும், எல்லாத்தையும் மூட்டைக்கட்டி வச்சிட்டு, குடும்பத்தோடு டூர் கிளம்பிடுவோம். கார் பயணம் என்பதால், எல்லாரும் பேசிக்கொண்டு, விரும்பிய பாடல்களை கேட்டுக்கொண்டு, நினைக்கும் இடத்தில் சாப்பிட்டு செல்லும் போது அந்த சுகமே தனிதான். இரண்டு பையன்கள். மூத்தவன் ஹரி பிரசாத் அண்ணா பல்கலைக்கழகத்தில் மீடியா சயின்ஸ் படித்து முடித்து விட்டான்.
அடுத்து சினிமா இயக்கப் போகிறான். அது தான் அவனது கனவு. போன வருஷம் பெண்கள் கிரிக்கெட் பற்றி க்ளீன் போல்ட் என ஒரு குறும்படம் எடுத்தான். நல்ல வரவேற்பு கிடைச்சது. இப்போது தேசாந்திரி பதிப்பக வேலைகளையும் சேர்த்து பார்த்துக் கொள்கிறான். அடுத்தவன் ஆகாஷ். +1 படிக்கிறான். அவனுக்கு இசையில் ஆர்வம் உண்டு. கீபோர்ட் படித்தான். வீட்டில் உலகின் சிறந்த படங்களை எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து பார்க்கிறோம். அரசியல், சமூகம். இலக்கியம்னு எல்லா விஷயங்களையும் ஒண்ணா உட்கார்ந்து பேசுவோம். அவரோடு ஜப்பானுக்கு போய்வந்தேன். இலங்கைக்கு போய் வந்தேன். ராஜஸ்தான் முழுவதும் சுற்றினோம். அதெல்லாம் மறக்க முடியாத அனுபவம்’’ என்றார் சந்திரபிரபா
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கமும், நன்றியும்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. தங்களின் டீக்கடை பதிவு நன்றாக உள்ளது. டீயை ரசித்து, ருசித்து எழுதியிருக்கிறீர்கள்.
/அப்போதைய டீக்கடைகளில் ஆண்கள் மட்டும்தான் 98.7% டீ குடிப்பார்கள். பெண்கள் அப்படி நின்று குடித்தால் வினோதமாக பார்ப்பார்கள். ஏனோ?!/
ஹா ஹா ஹா. இந்த பெண்கள் இதைக்கூட வீட்டில் போட்டு குடிக்காமல் அல்லது, போட்டுக் குடிக்கத் தெரியாமல் இங்கு வந்து குடிக்கிறார்களே என்பது அந்த பிறரின் எண்ணமாக இருக்கும்.
ஆனால், உண்மை. அப்போதெல்லாம் பெண்கள் உணவகங்களுக்கு வந்து ஆண்களுடன் சரிசமமாக அமர்ந்து உணவு உண்பதற்கோ இந்த மாதிரி பொதுவிடங்களில் காஃபி, டீ அருந்துவதற்கோ தயங்குவார்கள். வீட்டில் கட்டுப்பாடுகள் அதிகம். பிறகு வீட்டில் உள்ளவர்களுக்கென அந்த உணவகங்களின் உள்ளே கூட நுழையாமல் வாசலில் வந்து நின்று பார்சல் கேட்டு வாங்கி செல்வதை நானும் பார்த்துள்ளேன். நாளாக நாளாக காலம் மாறியதோ, இல்லை, வீட்டு பெண்கள் மாறினார்களோ இப்போது எல்லாம் சகஜமாகி விட்டது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உணவகங்களிலாவது அமர்ந்து சாப்பிடலாம், சாப்பிடுவார்கள். ஆனால் தெருவில் நின்று தேநீர் அருந்த மாட்டார்கள்!
நீக்குஎஸ்.ரா.வின் துணைவியாரின் பேட்டி மற்ற குடும்பஸ்தர்களுக்கு ஒரு பாடம். குடும்பப் பொறுப்புகளோடு மட்டுமில்லாமல் கணவரின் விருப்பங்களுக்கு ஏற்பவான ஒரு வாழ்க்கைப் பாதையில் தானும் பங்கு கொள்வது என்பது எல்லாக் குடும்பங்களிலும் இயல்பாய் நடந்து விடுவதில்லை. தேசாந்தரி பதிப்பகம் உருக்கொண்ட பிறகு பதிப்பகமும் அவர்கள் குடும்பத்தின் ஒரு எக்ஸ்டன்ஷன் என்கிற மாதிரியான முழுமையான ஈடுபாடு அவரை ஆட்கொண்டது சாதாரண விஷயமல்ல. + ஹரி பிரசாத்தின் கூட மாட பங்களிப்புகளும். நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் என்ற தெய்வீக உணர்விற்கு எடுத்துக்காட்டு போலவான வாழ்க்கை. இந்த வியாழனுக்கு இது ஒன்றைப் படித்ததே போதுமானது என்பது போன்ற நிறைவு. எஸ்.ரா. குடும்பத்திற்கும் இதைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி ஜீவி ஸார். எழுத்தாளர்கள் பொறுப்பில்லாமல் எழுத்தே ஒன்றே குறி என்று குடும்பத்தை கவனிக்காமல் இருப்பார்கள் என்கிற பழைய கருத்து ஒன்று உண்டு. அதை இம்மாதிரியான நிகழ்வுகள் உடைக்கின்றன.
நீக்குடீக்கடை அனுபவம் பற்றிய கட்டுரை வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதை உறுதி செய்கிறது. எண்ணங்கள் கோர்வையாக எழுத்தில் சீர்மிகு கட்டுரையாக அமைவது கடினம். அத்தகைய கட்டுரை டீக்கடை. ஒன்றோ இரண்டோ நகைச்சுவை சம்பவங்கள் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
பதிலளிநீக்குஎனக்கு டீக்கடை அனுபவம் மிகவும் குறைவு. காரணம் பாக்கெட் மணி என்பது கிடையாது. நண்பர்கள் யாராவது வாங்கி தந்தால் தான் உண்டு. வேலையில் இருக்கும்போது ஆபீஸ் கேன்டீன் தான்.
அப்பாடி இந்தவாரம் செய்திகள் (நியூஸ் ரூம்) அதிகம். தீவாளி ஸ்பெஷல்?
கந்தசாமி வந்துட்டார். பேட்டி நன்றாக உள்ளது.
பொக்கிஷத்தில் பாலையா பற்றிய செய்தி நன்று.
சொந்த வீடு என்பது அந்தக்கால ஒண்டு குடித்தனக்காரர்களின் மிகப் பெரிய கனவு. அதிலும் சிமெண்ட் கண்ட்ரோல் போன்ற அவஸ்தைகளையெல்லாம் தாண்டி வீட்டை கட்டி முடிப்பது பெரிய சாதனை தான்.
துக்ளக் காலம் போல மொரார்ஜியின் ஆட்சி காலமும் விந்தைகள் நிறைந்த காலம்தான். மொரார்ஜி என்றால் நினைவுக்கு வருவது 18 காரட், மற்றும் மூத்திரம்.
மாத பட்ஜெட் வாடகைக்கும் சாப்பாட்டிற்கும் சரியாகும் போது புத்தகங்கள் வாங்க காசு கிடைப்பது அரிது. பாடப்புத்தகங்கள் செகண்ட் ஹாண்ட் வாங்க 5 ரூபாய் கிடைப்பதே அரிதாக இருந்த காலம். ஆக புத்தக சீட்டுக்கு தனியே பட்ஜெட் இல்லை.
Jayakumar
நகைச்சுவை சம்பவம் ஒன்று முன்னரே விஸ்தாரமாக எழுதி விட்டேனே என்று எழுதவில்லை!
நீக்குபாக்கெட் மணி எல்லாம் யார் கொடுக்கிறார்கள்? நாமே எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்! மளிகை, அடுப்பு கரி, விறகு எல்லாம் நான்தானே வாங்குவேன்!!
ஆமாம், செய்திகள் அதிகம் என்றாலும், சில வரிகளில் தனித்தனியாக கடந்து விடலாம் என்பதால் சுருக்கவில்லை. செய்திகளும் சுவாரஸ்யமாகவே அமைந்திருக்கும் என்று நம்புகிறேன்.
கந்தசாமி ஸார் சமயங்களில் அவர் எடுத்த புகைப்பபடங்களாக போட்டுத் தள்ளும்போதும், நமக்கு சுவாரஸ்யமில்லாத விஷயங்கள் பகிரும்போதும் விட்டு விடுவேன்!
மொரார்ஜியோடு ராஜ் நாராயணனையும் நினைவில் கொள்ளலாம்! சொந்த வீடு என்பது அந்தக் காலத்தில் எளிதாக இருந்திருக்கும் என்று நம்பினேன். அந்தப் பக்கத்தை படிக்க முடிந்தது சந்தோஷம்.
புத்தக சீட்டு போடுவதை விட நூலகம் சென்று விடலாம் என்று தோன்றி இருக்கும். அந்தக் கால நூலகங்கள் பெரிய பொழுதுபோக்கு இடம்.
நன்றி JKC ஸார்...
முருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குமுருகன் மூவுலகையும் காக்க பிரார்த்திப்போம்.
நீக்குவாங்க செல்வாண்ணா... வணக்கம்.
டீக்கடை அனுபவத்தை அப்படியே புட்டு புட்டு வைத்திருக்கிறீரே. அருமை
பதிலளிநீக்குகே. சக்ரபாணி
நன்றி சக்ரபாணி ஸார்
நீக்குடீக் கடை பதிவு அருமை..
பதிலளிநீக்குஅக்காலத்தில்
டீக்கடைகளில் பெண்கள் நின்று டீ குடிப்பதில்லை
அப்படிக் குடித்தால் வினோதமாக பார்ப்பார்கள்.
பஜாரி என்பார்கள்..
இப்போது எல்லாம் ஏடாகூடம்..
அநியாயம் இல்லை? டீ குடிப்பதில் என்ன ப**த்தனம் இருக்கிறது?!
நீக்குஒரு டீ ஆறு பைசா என்பதில் இருந்து எனக்கு நினைவு இயுக்கின்றது.. காலை பத்து மணிக்கு மேல் டீ கிடைப்பது அபூர்வம்... வீட்டுக்கு வீடு மாடுகள் இருந்தும் பால் உற்பத்தி குறைவு... இன்றைக்கு கிராமங்களிலேயே பசுக்களும் எருமைகளும் குறைவு... இப்போது டீக்கடைகள் இரவு 11 மணி வரை.. எங்கெங்கும் பாக்கெட் பால்!..
பதிலளிநீக்குபத்து பைசாவுக்கு கிடைத்தது தெரியும்.
நீக்குபாக்கெட் பாலோ, கறந்த பாலோ... பத்து மணி கட்டுப்பாடு எல்லாம் இல்லாமல் தொடர்ந்து கிடைத்து பார்த்திருக்கிறேன்.
எண்ணூர் அசோக் லேலண்டில் நான் சேர்ந்த டிசம்பர் 1971 முதல், விருப்ப ஓய்வு பெற்ற 2006 வரை ஒரு டீ எட்டு பைசா. (தனியாக கூப்பன் புத்தகம் - 78 கூப்பன்கள் கொண்டது) மாத ஆரம்பத்தில் வாங்கி வைத்துக் கொள்வோம். ஒரு நாளைக்கு 3 டீ கணக்கு.
நீக்குபதிவு வழக்கம் போல சிறப்பு..
பதிலளிநீக்குநன்றி செல்வாண்ணா...
நீக்கு//என்ன இருந்தாலும் அந்த கால டீக்கடைகள்தான் சுவாரஸ்யம். அந்தக் கால டீக்கடைகள் போல இல்லை இந்த கால டீக்கடைகள்!// ஹாஹா! ஸ்ரீராமுக்கு வயதாகி விட்டது... அப்படித்தானே?
பதிலளிநீக்குகடவுளே இதில் ஒரு சந்தோஷமா?!
நீக்குவயது என்பது ஒரு எண் தான் என்று பெரியோர் சொல்லி இருக்கிறார்கள்.
டீக்கடைப் பகிர்வு நாமும் டீ குடித்த உணர்வைத் தந்தது.
பதிலளிநீக்குநியூஸ்ரைம் நிறைந்த பல செய்திகளை அறிந்தோம். சில அப்பாடியோவ் இப்படியுமா என்று இருந்தது.
அம்மா காத்திருக்கிறாள் துயரம்.
பொக்கிசம் நன்று.
முடிந்தவரை அனைத்தையும் கவர் செய்ததற்கு நன்றி மாதேவி.
நீக்குடீக்கடையில் டீ குடிக்க வந்தாச்சு!
பதிலளிநீக்குஉங்க அனுபவங்கள் சூப்பர் ஸ்ரீராம் சொன்ன விதமும்.
டீக்கடையில் டீ நன்றாக இருப்பதன் காரணமே, அந்தப் பால் கொதித்துக் கொண்டே இருக்கும். அந்தச் சுவை ப்ளஸ் பாய்லர் டீ!
சில கடைகளில் டீ டிகாக்ஷனை தனியா எல்லாம் எடுத்து வைத்து ஊற்றாமல், அந்த வடிகட்டியை அப்படியே தூக்கிப் பிடிப்பார் குவளையில் பாலை வைத்துக் கொண்டு அதில் தூக்கி ஓரிரு முறை ஆற்றிவிட்டு க்ளாஸில் ஊற்றுவார். அதென்னவே தெரியலை அப்பலாம் இந்த டீ க்ளாஸில் குடிப்பது ரொம்பப் பிடித்திருந்தது. இப்பதான் அப்படி வெளியில் டீ குடிக்கலை குடிச்சாலும் பேப்பர் கப்பில் கொடுங்கன்னு எல்லாம் இந்த தொற்று பயம் தான்!!!
கீதா
வாங்க கீதா... பாய்லர்ங்கிற வார்த்தை மறந்துபோய் ரொம்ப நேரம் காத்திருந்து அப்புறம் அந்த வார்தையைத் தவிர்த்து எழுதினேன்.
நீக்குஆம், நீங்கள் சொன்னவண்ணம்தான் டீயில் டிகாக்ஷன் ஊற்றுவார்கள்.
சிலர் டீயுடன் புரையுடன் சாப்பிடுவாங்க/
பதிலளிநீக்குவழக்கமான கஸ்டமர் என்றால் உரிமையாளர் தெரிந்தவர் என்றால் அவங்களே பாட்டில்ல உள்ள புரை அல்லது பிஸ்கட் அல்லது பெரிய தட்டில் வைச்சிருக்கும் வடைகளை எடுத்துக்குவாங்க. அண்ணே வடைக்கும் சேர்த்துக்கோங்கன்னு வேற சொல்லுவாங்க.
அந்த ரஸ்கை அல்லது பன்னை டீயில் முக்கிச் சாப்பிடுபவர்களும் உண்டு!
கீதா
ஆமாம். ரொம்ப விளக்காமல் ஏற்கெனவே பதிவு பெரிதானதால் இதையெல்லாம் சொல்வதைத் தவிர்த்து விட்டேன்!
நீக்குதெரியுமா, நீண்ட நாட்களாய் இதை எழுத நினைத்திருந்தேன். அதற்குமுன் வித்தியாசமான பெயர்களையுடைய நிறைய டீக்கடையை போட்டோ எடுத்துக்கொண்டு வந்து இணைக்க வேண்டுமென்று காத்திருந்தேன். புகைப்படமும் எடுக்காமல், நாட்களும் இப்படியே போனதால் இதிஓ, எழுதி விட்டேன்! புகைபபடங்கள் இணைக்காதது எனக்கு குறைதான்!
சுவையான கதம்பம்.
பதிலளிநீக்கு//வெண்டைக்காய் டீ // இப்படி கூட ஒரு டீ இருக்கிறதா? :) சமீபத்தில் திருச்சியில் ஒரு டீ கடை பார்த்தேன் - பெயர் என்ன தெரியுமா? - “மச்சி ஒரு டீ சொல்லேன்!”
மற்ற தகவல்களும் துணுக்குகளும் நன்று.
வாங்க வெங்கட்... சும்மா கிண்டலுக்குதான் சொல்லி இருக்கிறேன் என்றாலும், அதையும் எங்காவது விற்றுக் கொண்டிருக்கும் சாத்தியக்கூறுகள் இல்லாமல் இல்லை!
நீக்குமச்சி ஒரு டீ சொல்லு போல நிறைய வித்தியாசமான பெயர்கள் இங்கு பார்த்திருக்கிறேன். சில போட்டோ எடுத்தும் வைத்திருந்தேன்.
டீக்கடைல யோசிச்சிட்டே மெதுவா சாப்பிடறது பத்தி சொல்லியிருக்கீங்.க..அதே தான் இப்ப பந்தாவா காஃபிடே காஃபி, கப்புசினோ காஃபி கடைகளில் இரு வர் எதிர் எதிர் அமர்ந்து கொண்டு ஒரு சிப் சிப்பிட்டு கீழ வைச்சு பேசுவாங்க பேசுவாங்க...பேசிக்கிட்டே ஒரு 10 நிமிஷம் கழித்து அடுத்த சிப்! காபி ஆறிடாதோ? சரி கூல் காஃபினே வைச்சுக்கிட்டாலும் அந்த சில்லிப்பு போய்விடாதோ?
பதிலளிநீக்குஅது தான் ஸ்டைலாம். வேகமா குடிச்சுட்டு கடைய விட்டு போகக் கூடாதாம்!!
ஓரு படத்துல கூட இந்த சீன் வருமே...படம் பெயர் மறந்து போச்சு விமல், அஞ்சலி. அஞ்சலி விமலை கடைக்குக் கூட்டிப் போய் கோல்ட் காஃபின்னு நினைக்கிறேன் வாங்கிக் கொடுப்பாங்க. அதை விமல் சர் புர்னு ஸ்ட்ராவில் வேகமாக உறிஞ்சுவார். அப்ப அஞ்சலி சொல்லுவங்கா...மெதுவா சாப்பிடணும்னு..
கீதா
நீங்க சொல்லும் படம் நானும் பார்த்திருக்கிறேன். அதேபோல கப்புசினோ கடைகளில் பேசிக்கொண்டே குடிப்பது இருக்கட்டும்.. சிங்கிளாய் வந்து எங்கோ வெறித்தபடி சிந்தனையில் ஆழ்ந்து...
நீக்கு//ஓரு படத்துல கூட இந்த சீன் வருமே...படம் பெயர் மறந்து போச்சு விமல், அஞ்சலி.// படம் 'எங்கேயும் எப்போதும்', விமல் அல்ல, ஜெய். இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் படம்தானே? அதில் இரண்டு ஜோடிகள் ஒன்று ஜெய்,அஞ்சலி மற்றது சர்வா,அனன்யா.
நீக்குரயில் டிக்கெட் முன் பதிவு இப்ப குறைச்சிருக்காங்கதான் ஆனா டிக்கெட் தான் கிடைக்கணும். ! அதுகிடைக்கறதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கும் குறிப்பா வடக்கிற்குச் செல்லும் ரயில்களில்
பதிலளிநீக்குபெட்ரோல் பங்க் ஊழியரின் கோரிக்கை புன்சிரிப்பை வரவழைத்தது...அதற்கு எம் எல் ஏவும் பார்க்கிறேன்னு பதில் சொல்லியிருக்கிறாரே. ....ஒரு வேளை அவருக்கு எம் எல் ஏ பார்த்துக் கொடுத்துவிட்டால் மக்கள் வரிசையில் நின்றுவிடாமல் இருக்க வேண்டும் குறிப்பா பெண் கிடைக்கக் கடினமா இருக்கும் ஆண் பிள்ளை யின் பெற்றோர்!!!! எம் எல் ஏவின் தொழிலும் மாறிவிடுமோ!!!!!!
சந்திரபாபு நாயுடு போல ஸ்டாலினும் சொல்லிருக்காராமே? அப்படியா? எனக்குத் தெரிந்து இளைஞர்கள்தான் கூடுதலாக இருப்பதாக வாசித்தேன்
சில மாதங்கள் முன்பு இளைஞர்கள் தான் கூடுதலாக இருக்காங்கன்னும் வேலை வாய்ப்பு தேடும் வயதில் அதிகமாக இருக்காங்கன்னும் அண்ணாமலை பேசியது நினைவுக்கு வருகிறது.
கீதா
இன்னைக்கு நியூஸ் ரூம்ல வேற சில இன்ட்ரஸ்டிங் நியூஸ்களும் இருந்தன .பாத்தீங்களா?!
நீக்குகவிதை நெகிழ்ச்சி, ஸ்ரீராம். நல்லாருக்கு
பதிலளிநீக்குகீதா
நன்றி கீதா.
நீக்குஅப்போதெல்லாம் 98.7 சதம்.... ஸ்ரீராம் பேச்சலரா இருந்தபோது டீக்கடையில் ஒரு நாள் முழுதும் நின்று கணக்கெடுத்திருப்பாரோ?
பதிலளிநீக்குஹா... ஹா... ஹா...
நீக்குஇதைப் பற்றி யாராவது சொல்வாங்கன்னு பார்த்தேன். ஏதோ துல்லியமா கணக்கெடுத்த மாதிரி சும்மா ஒரு எண்ணைப் போட்டு விடுவது....!
கப்பல் - யம்மாடியோவ்!!
பதிலளிநீக்குஎஸ் ரா பற்றி அவர் மனைவி சொல்லியிருக்கும் பகுதி சுவாரஸியம் மகன் படம் இயக்குவதில் ஆர்வம் என்பது புதிய செய்தி. இரண்டுமே மகன்கள் என்பதும் செய்தி.
கீதா
கப்பல் படம் பார்த்த உடனே பிரமிப்பா இருந்தது!
நீக்குஅந்த கும்பலுக்கு நடுவுல நானும் நிக்கிற மாதிரி நினைச்சு பார்த்தா இன்னமும் கசகசா என்று இருந்தது..!!
கலங்கிப் போயிருக்கிறாள் காப்பகத்தில் இருக்கும் தாய்...சட்டெனக் கலங்கடித்துவிட்டது.
பதிலளிநீக்குஉடனே காந்தாரி சொல்லியும் வெட்கப்பட்டுக்கொண்டு வாழை இலையால் மறைத்துக்கொண்டுவந்த துரியோதனன் நினைவும் வந்தது
இதிலிருந்து அதையே நினைவுக்கு வந்தது என்று புரியவில்லை. எனினும் பாராட்டுக்கு நன்றி நெல்லை.
நீக்குஒரு தாய் எப்படிப்பட்ட நிலையிலும் தன் மகன் பக்கமே நிற்பாள். மற்றவர்களைப்போல மகனை எடைபோட மாட்டாள். மகனுக்கு அப்படி தாயிடம் பாசம் இருப்பதில்லையே
நீக்குகாந்தாரி துரியோதனனுக்கு கடைசி முயற்சியா உதவ நினைத்தபோது விதி சதிசெய்துவிட்டது என்பது தொடர்பு
ஓ... புரிகிறது.
நீக்குதாயின் இதயத்தை காதலி கேட்டாள் என்று வெட்டிக்கொண்டு எடுத்துக் போகும் மகனுக்கு கால் தடுக்க, "மகனே பார்த்து" என்றதாம் கையிலிருந்த தாயின் இதயம்... இரு ஒரு பழைய கதை. அது போல....
பொக்கிஷத்தில் கடைசி - நகைச்சீட்டு மாதிரி புத்தகச் சீட்டு!! புத்தகம் வாசிக்க கொடுத்த அந்த டிப்ஸ் சூப்பர் ரொம்ப ரசித்தேன். நல்ல ஐடியா! இப்ப கூட இப்படித் தொடங்கலாமோ யாராவது
பதிலளிநீக்குஜோக்ஸ் புன்னகைக்க வைத்தன,.
பாலையா பற்றிய தகவல் சுவாரசியமான செய்தி.
வீட்டைக் கட்டிப்பார் -----உண்மைதான்... நான் நினைப்பேன் சில வீடுகள்ல உதவியாட்களே நிறைய இருக்காங்களே லட்சக்கணக்குல செலவழிக்கறாங்க எப்படி சமாளிக்கறாங்கன்னு!
திரு மகராஜன் அவர்கள் சொல்லியிருகும் துணுக்குச் செய்தி ரொம்ப ரசித்தேன். சட்டத்திற்கும் இந்த குணங்கள் வேண்டும் என்று சொல்லியிருப்பது அருமையான விஷ்யயம்! அது கிடைப்பதற்கு உதவும் இலக்கியமும் என்று/...
கீதா
நன்றி கீதா.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குடீ அலசல் நன்று. டீ கடையின் பெயர்கள் வித்திசாயமாக உள்ளது.எனக்கென்னவோ டீ அவ்வளவாக பிடிக்காது. தினமும் காஃபியே குடித்து பழக்கப்பட்டதலோ என்னவோ? அம்மா வீட்டில் அம்மா என்றாவது டீ போடுவார்கள். அதுவும் வீட்டில் யாருக்காவது வயிறு சரியில்லாத போது காஃபியை விட டீ நல்லதென்று அன்று அது அரங்கேறும். காஃபி பொடி எப்போதாவது கிடைகவில்லையெனினும், வாங்கி வர நேரமில்லையெனினும் அன்றும் டீ வரும். மற்றபடி டீயின் வருகை கம்மிதான்.
இதற்கு மாறாக எங்கள் திருமணத்திற்கு பின் என் கணவருக்கு டீ யென்றால் மிகவும் பிடிக்கும் எனத் தெரியவே அவருக்கு மட்டும் அடிக்கடி போட்டுத் தருவேன்.
இன்று உங்கள் பதிவில் டீ சாப்பிட்டு விட்டு போனவள்தான்.இப்போதுதான் வருகிறேன். செய்தியறை செயதிகளை மட்டும் உடனேயே படித்தேன்.வித்தியாசமான நிறைய செய்திகள். எல்லாவற்றையும் அறிய தந்தமைக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அப்படிதான் நானும் இருந்தேன். இப்போதெல்லாம் வீட்டில் கூட ஒருவேளையாவது டீ குடித்தால் வழக்கமாகி விட்டது!
நீக்குநன்றி கமலா அக்கா.
இன்று கொஞ்சம் வேலைகள் அதிகமாகி விட்டது. அதனால் காலையிலேயே உடனே வர இயலவில்லை. மன்னிக்கவும்.
நீக்குமாலை காஃபி கூட இன்று ரத்து. இதோ இரவு சாப்பாட்டிற்கு தயாராகி விட்டோம்.
சற்றே தாமதமாக இந்த பின்னூட்டத்துக்கு பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும் கமலா அக்கா!
நீக்கு:))
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குசெய்திகள் அனைத்தும் நன்று.
கவிதை மனதை மிகவும் கஸ்டபடுத்தியது. அந்த படமும் மனதை விட்டு அகலாத கவிதையின் வரிகளும் சோகம். தாயின் பாசத்தை புரிந்து கொள்ளாத மகன்களை காலம் மன்னிக்குமா?
எஸ. ரா அவர்களைப் பற்றி அவர் மனைவி தந்திருக்கும் பேட்டியை ரசித்துப் படித்தேன்.
பொக்கிஷத்தில் நடிகர் பாலையா . பற்றிய செய்தியும் அருமை. அவர் வில்லனாக வரும் படங்களை விட நகைச்சுவையாக வந்து கலக்கும் படங்கள்தாம் எனக்கும் பிடிக்கும்.
இரவல் டேபிள் ஃபேன், அருமை.பூ, வண்டு ஜோக் (அ) சத்தியமாக ஜோக் என்றே நம்புகிறேன். இன்றைய கதம்பம் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அனைத்தையும் படித்து, ரசித்து, கருத்துகள் வழங்கி இருப்பதற்கு நன்றி கமலா அக்கா. பூ வண்டு ஜோக்குக்கு அந்தக் காலத்தில் யார் விழுந்து விழுந்து சிரித்தார்களோ!
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
நீக்குஉங்கள் டீக்கடை பதிவு காலை வானொலியில் டீகடை செய்திகள் வாசிப்பார் ஒருவர் அவர் குரல் தென்கச்சி சுவாமிநாதன் போலவே இருக்கும்.
பதிலளிநீக்குதினமலரில் டீகடை பெஞ்ச் என்று செய்திகள் இருக்கும்.
முன்பு டீக்கடையில் தான் ஊர்,உலகம் செய்திகள் பேசபடும்.
சினிமாக்களில் நிறைய பார்த்து இருக்கிறோம்.
மதுரையில் மதிய நேரம் உழைப்பவர்கள் ஒரு டீயும் பன்னும், அல்லது வர்க்கியுடன், அல்லது இரண்டு வடை, போண்டாவுடன் காலை உணவை முடித்து விடுவார்கள்.
//சிலர் ஒரு கையில் சிகரெட்டும், மறுகையில் டீ க்ளாஸுமாய் இருப்பார்கள். என் நண்பர் ஒருவர் டீயில் அந்த சிகரெட்டை நசுக்கி குடிப்பார்! //
இப்படி கூடவா? கடவுளே!
//சிலருக்கு வெங்காயம் துருத்திக் கொண்டு நிற்கும் மசால்வடைதான் பிடிக்கும். இந்த மசால்வடைதான் பாதி அரசு ஊழியர்களுக்கு மதிய சாப்பாட்டுக்கு வெஞ்சனம்!//
ஆமாம். சிவகாசியில் பள்ளிக்கு அருகில் மிக சின்னதாக 10 காசுக்கு வடை சுடச் சுட தருவார்கள், வாங்கி மதிய உணவு சமயம் சாப்பிடுவோம். அம்மா தொட்டு கொள்ள காய் கொடுத்து விட்டு இருந்தாலும் வடையின் சுவையால் எல்லோரும் வாங்குவோம்.
//ஆலடிப்பட்டியான் கருப்பட்டி காபி //
இந்த பேரை இப்போதுதான் கேள்வி படுகிறேன்.
ஆலடிப்பட்டியான் கடை புகைப்படம் வைத்திருக்கிறேன். சட்டென எடுக்க வரவில்லை. அடுத்த வாரம் பகிர்கிறேன் அக்கா. டீக்கடை பற்றிய உங்கள் சிந்தனைகளும் அருமை.
நீக்குபானுமதி வெங்கடேஸ்வரன், மற்றும் உங்கள் நியூஸ்ரூம் செய்திகள் பல வியக்கவும், இப்படி எல்லாம் போராட்டமா? என்றும் இருக்கிறது.
பதிலளிநீக்குஉங்கள் கவிதை காப்பகத்தில் இருக்கும் தாய் என்று இல்லை குழந்தைகள், வெளிநாடு, வெளியூர் என்று இருக்கும் பெற்றோர்கள் , மட்டும் தனித்து இருக்கும் தாய்மார்களுக்கும் உண்டு.
நாள் கிழமையில் குழந்தைகள் பக்கத்தில் இல்லையென்றால் வருத்தபடுவார்கள். குழந்தைகள் வரும் நாளே அவர்களுக்கு தீபாவளிதான்.
எஸ்.ரா. மனைவி சந்திரபிரபா ஒரு நேர்காணல் அருமை. குடும்பத்தினர்களுக்கு நேரத்தை ஒதுக்க தெரிந்தால் ஆனந்தம் எப்போதும்.
கவிதை பற்றிய உங்கள் கருத்துக்கு நன்றி. உண்மை. அதுவும் சிரமம்.
நீக்குநான் சொல்ல வந்ததது தாயும் தந்தையும் காப்பகத்தில், வருடத்துக்கொருமுறைதான் நேர்காணல்! இப்போது அதில் ஒருவர் மறைய, அடுத்தவர் தனியராகிறார். சம்பிரதாயப்படி தீபாவளி கிடையாது. எனவே நேர்காணலும் கிடையாது. உண்மையில் இப்போதுதான் சென்று பார்க்க வேண்டும். அதைவிட அங்கு வைத்ததே தவறு என்பது முதல் விஷயம்! இன்றைய வெள்ளி வீடியோவின் இரண்டாவதை பாடல் இடம்பெற்ற திரைபபடத்தின் பெயர்தான்!
பொக்கிஷபகிர்வுகள் அருமை. பாலையா நடிப்பு எனக்கு பிடிக்கும் , அவர் நடித்த காதலிக்கநேரமில்லை, பாமாவிஜயம் எல்லாம் தொலைக்காட்சியில் வைக்கும் போது எல்லாம் பார்த்து விடுவேன்."ஒரு நாள் போதுமா" என்ற பாடலுக்கு அவரின் நடிப்பு, என் அப்பாவுக்கு மிகவும் பிடிக்கும், அந்த பாடலும் பிடிக்கும். என்.எஸ்.கே அவரைபற்றி சொன்னது அருமை.
பதிலளிநீக்குபாலையா எனக்கும் மிகவும் பிடிக்கும். நன்றி கோமதி அக்கா.
நீக்குஎங்கள் குடியிருப்புக்கு எதிரே 'சாய் சுட்ட பார் Chai Sutta Bar(CSB)' என்று செயின் ஆஃப் ரெஸ்ட்டரெண்ட்ஸின் கிளை ஒன்று இருக்கிறது. துபாயிலிருந்து விடுமுறைக்கு பெங்களூர் வந்த என் அக்காவின் பேத்தி அதைப் பார்த்ததும் 'ஆ' என்று துள்ளிக் குதித்தாள். பெங்களூரில் எந்தெந்த உணவகங்களில் சாப்பிட வேண்டும் என்று அவள் தோழிகள் மூலமும், நெட் மூலமும் அவர் குறித்து வைத்திருந்த உணவகங்களில் CSB உம் ஒன்று. அங்கு சாதாரண டீ கிடைக்காது, ஏலக்காய் டீ, இஞ்சி டீ, பிளாக் டீ, லெமன் டீ இப்படித்தான் கிடைக்கும். எல்லாமே நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்குஅடடே... புதிய பெயர். இப்படி ஒரு கடையை நான் சென்னையில் பார்த்ததில்லை.
நீக்குஎன்னுடைய டீ அனுபவம் மஸ்கட் சென்ற பிறகுதான். அங்குதான் டிப் டீ முதல் முதலாக குடித்தேன். அது மிகவும் லைட்டாக இருக்கும் என்பதால் நான் இரண்டு பேக்கட் போட்டுக் கொள்வேன். பெரும்பாலும் அலுவலகத்தில் ஒரு கப் டீயோடு ஒரு பன் அல்லது digestive biscuitதான் ப்ரேக்ஃபாஸ்ட். அங்கு கிடைக்கும் சிலோன் டீ மிக நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்குஆமாம், நானும் இரண்டு டிப் பாக்கெட் போட்டால்தான் நன்றாயிருக்கும் என்று நினைப்பவன். நட்ஸ் அண்ட் ஸ்பைஸஸில் ஏலக்காய், இஞ்சி டீக்கள் இபப்டி டிப் தியாக கிடைக்கின்றன. வெந்நீர் போதும். பால் தேவை இல்லை. தரமாகவே இருக்கின்றன.
நீக்குஇந்த வாரம் டீயும், நியூஸும் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டதால் மற்றவை சோபிக்கவில்லை.
பதிலளிநீக்குநானும் அதை நினைத்துதான் ரொம்ப சேர்க்கவில்லை!
நீக்குடீக்கடைக் குறிப்புகள் சுவாரஸ்யம். பெங்களூர் குளிரினால் பழகிய டீ, தற்போது பாலைத் தவிர்ப்பதற்காக கிரீன், ப்ளாக் டீ என மாறியாயிற்று.
பதிலளிநீக்குந்யூஸ் ரூம் - நன்றி. கவிதை - சோகம். தொகுப்பு நன்று.
நன்றி ராமலக்ஷ்மி.
நீக்கு